Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக எம்பிக்கள் இலங்கை வருகின்றனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது.

ராஜபக்ஸ தமிழர்களின் இரத்ததிலும் மாமிசத்திலும் எலும்பிலும் புரியாணி போடுவார் நீங்கள் எல்லாம் வந்து வயிறார உண்டு வாழ்த்திவிட்டுப்போங்கள்...

வந்து மகிந்தவின் நடன விருந்தில் கலந்துவிட்டு ஆகா ஓகோ என்று ஒரு பாராட்டுபத்திரம் வழங்கி மகிந்தவுக்கு பொன்னாடை போற்றி மகிந்தவை மகிழ்வித்து செல்வார்கள். அப்படியே ஒரு செம்மறி மாநாட்டுக்கான அழைப்பும் வழங்கிச்செல்வார்கள்.

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதா‌ல் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான ஆபத்து காத்திருக்கிறது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசுடன் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சனையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்; கடினமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாத காரணத்தினால், இந்திய அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளினை நான் விடுக்கின்றேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1006/18/1100618024_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

24631453.jpg

சித்தாடை கட்டிகிட்டு

மத்திய அமைச்சர் ராசா தனது BSNL சேவையை விரிவு படுத்த கூடவே வருவரா? :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24631453.jpg

சித்தாடை கட்டிகிட்டு

மத்திய அமைச்சர் ராசா தனது BSNL சேவையை விரிவு படுத்த கூடவே வருவரா? :wub:

சின்னப்பொன்னு சேல செம்பகப்பூ போல பிணந்தின்னியை இழுக்குதைய்யா! - ராஜபக்ஸ வாயெல்லாம் பல்லாக சிரிக்கும்போதெ தெரியுதே!!!!!!

Edited by பரதேசி

mihinlankaairhostess.png

திருமாவளவன் ஆர் யு ரெடி? ... உதிலை ஒண்டை பிக் பண்ணிக்கொண்டு தமிழத்தேசியம் பேசுங்க ... :wub:

ssmylifemypassions1.jpg

இது கனியான மொழிக்கு ... :)

:)

கனியிலை, ... அச்சம், மடம், நாணம், பயிப்பு ... எல்லாம் பொங்கிப்பிரவாகிக்குது! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனின் இரத்தத்திலும் அவலத்திலும் பேரும் புகழும் பொருளும் சம்பாதிக்கும் கருணாநிதியின் சந்ததியே அழிய வேண்டும்.

கடவுளே இப்படி சாபமிட்டதற்கு என்னை மன்னித்துக்கொள். :wub:

ஈழத்தமிழனின் இரத்தத்திலும் அவலத்திலும் பேரும் புகழும் பொருளும் சம்பாதிக்கும் கருணாநிதியின் சந்ததியே அழிய வேண்டும்.

கடவுளே இப்படி சாபமிட்டதற்கு என்னை மன்னித்துக்கொள். :wub:

கனிமொழி கட்டாயம் போவா பார்த்தும் கணநாளாப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
mahindaandkanimozi.jpgகனிமொழி அக்கா அத்தானைப் பாத்து வடிக்கிற ஜொள்ளை எல்லாரும் ஒருக்கப் பாருங்கோவன்.....!!!!!!

வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது.

ராஜபக்ஸ தமிழர்களின் இரத்ததிலும் மாமிசத்திலும் எலும்பிலும் புரியாணி போடுவார் நீங்கள் எல்லாம் வந்து வயிறார உண்டு வாழ்த்திவிட்டுப்போங்கள்...

சிங்கள பயங்கரவாதிகளுக்கு பொன்னாடை போர்த்து - தமது அடிமைப் புத்தியை காட்டாமல் இருந்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.