Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபி துரோகி என்பது நீரூபணமாகிறது? ‘சண்டே ஒப்சேர்வர்’க்கு கே. பி. வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

Featured Replies

புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்துகொண்டு ள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டிய தாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள் ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்பட வுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

பாண்டு அண்ணை சண்டே லீடர் சொன்னால் தான் நம்புவார் போல...??

இது காலத்தின் கட்டாயம்....உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்....ஆழமாக யோசிக்கும் எந்தவொரு புலம்பெயெர் உறவும் இதைத்தான் விரும்பும்....

  • கருத்துக்கள உறவுகள்

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்பட வுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முதலில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் நிதி சேகரித்து அரசாங்கத்தின் அபிவிருத்திக்கு உதவுவதே முறை.

அதை விட்டுட்டு.... என்னத்துக்கோ சேர்த்த‌ காசை, என்னத்துக்கோ பாவிக்க கே.பி.க்கு யார் உரிமை குடுத்தது. . :(

.

Edited by தமிழ் சிறி

எழும் கோள்விகள் சில...

KP கைது செய்யப்பட்டவரோ இல்லை சரண் அடைஞ்சவரோ...??

நடேசன் அண்ணை போண்ற பிரிவுகளின் தலைவர்கள் கொல்லப்பட்டபோது அதை வெளிப்படையாக ஏன் KP சொல்ல வில்லை... அதில் KP க்கு சப்பந்தம் இருக்கா...??

பிறகும் கைது செய்யபட்ட மற்ற தளபதிகளின் நிலை என்ன...??? KP க்கு போட்டியாக அமையக்கூடிய அவர்களின் நிலைப்பாடு என்ன...?? KP யை தலைவராக்க அவர்களையும் போட்டாச்சோ...???

இன்னும் வரும்...

Edited by தயா

:( பாண்டு அண்ணை நீங்கள் இந்த குழுவில இப்ப இல்லையா?
  • கருத்துக்கள உறவுகள்

:( பாண்டு அண்ணை நீங்கள் இந்த குழுவில இப்ப இல்லையா?

jamesbond.gif:lol::lol:jamesbond.gif

  • கருத்துக்கள உறவுகள்

எழும் கோள்விகள் சில...

KP கைது செய்யப்பட்டவரோ இல்லை சரண் அடைஞ்சவரோ...??

நடேசன் அண்ணை போண்ற பிரிவுகளின் தலைவர்கள் கொல்லப்பட்டபோது அதை வெளிப்படையாக ஏன் KP சொல்ல வில்லை... அதில் KP க்கு சப்பந்தம் இருக்கா...??

பிறகும் கைது செய்யபட்ட மற்ற தளபதிகளின் நிலை என்ன...??? KP க்கு போட்டியாக அமையக்கூடிய அவர்களின் நிலைப்பாடு என்ன...?? KP யை தலைவராக்க அவர்களையும் போட்டாச்சோ...???

இன்னும் வரும்...

கே.பி. கைது செய்யப்பட்டிருந்தால் நாலாம் மாடியில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டியிருப்பார்கள்.

அவரின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சரணடைந்ததாகவே தெரிகின்றது.

இதற்குள் "ஸ்ரீலங்கா, மலேசிய, இந்திய புலனாய்வுத்துறையின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என கைது செய்யப்பட்ட போது வந்த அறிக்கைகளை பார்க்கும் போது, தமிழனை எவ்வளவு முட்டாளாக்கி இருக்கிறார் கே.பி.

.

Edited by தமிழ் சிறி

... இச்சருங்கோ! இச்சருங்கோ!!..... ரகுமானை கூப்பிட்டு ஒரு பாட்டை யாராவது விடுங்கோவன் ... உந்தச் செய்தித்தலைப்போடு!

ஆஆஆஆ..... உந்த மே18 இற்குப்பின்னம் இங்கு ஒரு கும்பல், அதை பாண்டருக்கும் தெரியும் ... ஓடி ஓடி உழைக்கனும் ... நாடு கடந்த அரசாங்கம்/கேபி என்று ... சொன்னார்கள் .... தோல்வியில் இருந்து மீள வேண்டுமாம்/அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமாம்/... என்று ....ஓடி ஓடி ... ஆஆஆஆஆ.......!!!!!!!!!!

சொல்ல மறந்து விட்டேன் ... முன்னின்று ஓடியவரில் பாண்டரும் ஒருவர்!! ... மிச்சமாக ஓடியவர்கள் ... இங்கு லண்டனில் இருந்து தம்மை நடுநிலைமை ஊடகவியலாளர்கள் என்று சொல்லி அன்ரிப்புலி என்ற பெயரில் ... அப்பெயருக்கு கொடுப்பவர்கள் கொடுப்பதை கொடுக்க வாங்கி வயித்தை நிரப்பும் கூட்டமும்! ... இந்த நடுநிலைமை ஊடகவியலாளர்களை பற்றி இதையும் சொல்ல வேண்டும் ... உரிய உரிய அடி வாங்கியும் ... சொரனை கெட்ட கூட்டம், பப்ளிசிட்டிக்காக உரிந்து விட்டுட்டும் ஓடும் கூட்டம்!! கூட்டமென்ன விரல்விட்டு எண்ணக்கூடிய தேசம்நெற்/லண்டன் குரல்/லிட்டிலெயிட்டுக்கள்!!!! .. அதில் ஒன்று ... முன்பு ஊடகவியலாளர் எண்டது, பின் தன்னை லிட்டிலெயிட் கொடுக்கும் சமூகசேவையாளன் எண்டது, இப்போ அவர் பசிலின் யாழ் உல்லாசபயணத்துறை அட்வைசராம்!!!! .... காலமடாப்பா!!!!!!!!!

... உந்த ஓடி ஓடி உழைத்த ... பாண்டர் அன்ட் கோவினர், இங்கு நாடு கடந்த அரசுக்கான பொதுக்கூட்டங்களும் கூட்டினார்களாம்! ... யார் யார் முன்பு தேசியத்துக்கு எண்டு வேலை செய்தவர்களோ, அவர்களை துரத்திப் பிடித்து கேபியை ஆதரியுங்கோ, அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும், இல்லையேல் சிங்களவன் எம்மை அழித்து விடுவான் ... போன்ற புலம்பல்களுடன் காலில் கூட விழுந்தார்களாம்!!! ... உந்த ஓட்டங்கள் நடந்து கொண்டிருக்க, என் மனுசி என்னிடம் கேட்டாள் ..."சோழியன் குடுமி, சும்ம ஆடுமா?" ... என்று ... நானோ ... "சும்மா இரும் எல்லாத்துக்கும் சந்தேகம் தான் உமக்கு, **(பாண்டர்) அடுத்த கட்டத்துக்கு ஓடுகிறான்" .. என்றேன்! ...

... இங்கு என்னை மாதிரி ஒரு நாலு அறளைகள், இவர்களின் வலையிலும் வீழ்ந்தோம்!!!!!!

.... இப்ப என்னடா என்றால், இந்த பாண்டர் அன்ட் கோவினர் ... நாடு கடந்த அரசாங்கம் ------ நிலம் தொடாத மரமாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

உந்தக்கும்பல் ... இங்கு புலத்தில் யார் முன்னால் புலிகளோ/முன்னால் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரோ/தேசியம் என்ற பெயரில் இணையங்கள் நடத்துகிறவர்களோ/ ... அகப்பட்டால் உடனே இலவச காலிடே லங்காவிற்கு ஏற்பாடு செய்வினமாம்! ... அவர்களும் போய் வந்து நாமோ நமோ மாதா பாட வேண்டுமாம்! ... நான் நினைக்கிறேன் பாண்டரும் நமோ நமோ பாடுவதன் பின்னணி????? ... இருக்கலாம்!!!

இப்ப லங்காவிற்கு காலிடே போனதாக சொல்லப்பட்டவர்கள் என்ன?

* அங்கு நடைபெறும் இனப்படுகொலைகளை இல்லை என்று ..

* அங்கு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை இல்லை என்று ...

* அங்கு இன்றும் நடைபெறும் கைதுகளும்/காணாமல் போதல்களும்/கொலைகளையும்/.. இல்லை என்று ...

* அங்கு நடத்தப்பட்ட படுகொலைகளை இல்லை என்று ..

*....

... கூறப் போகிறார்களா?????

பாண்டர், ... உமக்கு சொல்லக்கூடிய ...உமது உடலே மலத்தினால் தோய்ந்துள்ளது ... கழுவும்!!!!! ... நாறுகிறது!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி :(

  • தொடங்கியவர்

நற்சிந்தனை கூறவருவோரே

நாம் யார்–என்ற கேள்வி?

நம் உள்ளத்தில் பிறக்கட்டும்

நயவஞ்சகம் தேவையில்லை –நமக்குள்

நம்பிக்கை ஒன்றே போதும்

பித்து பிடித்து நாம் செய்த–

பிழைகள் நம் பின்னே ஆயிரம்

பின்னோக்கி நாம் எண்ணிப் பார்ப்போம்

பிழைகள் என்னவென்று –மக்களிடம்

பிராயச்சித்தம் கேட்போம்..

புரட்சி எனும் நாம் தந்து

புரியாத மொழிகளில் பல பொய்களும்

புரட்டுகள் அதிகமானதால்–

புண்பட்டது உண்மையான

புத்திமான்களின் மனம் புரிகிறதா?…

எழும் கோள்விகள் சில...

KP கைது செய்யப்பட்டவரோ இல்லை சரண் அடைஞ்சவரோ...??

நடேசன் அண்ணை போண்ற பிரிவுகளின் தலைவர்கள் கொல்லப்பட்டபோது அதை வெளிப்படையாக ஏன் KP சொல்ல வில்லை... அதில் KP க்கு சப்பந்தம் இருக்கா...??

பிறகும் கைது செய்யபட்ட மற்ற தளபதிகளின் நிலை என்ன...??? KP க்கு போட்டியாக அமையக்கூடிய அவர்களின் நிலைப்பாடு என்ன...?? KP யை தலைவராக்க அவர்களையும் போட்டாச்சோ...???

இன்னும் வரும்...

கே.பி ஐ கைது செய்தார்களா? அல்லது அவரா சரணடைந்தாரா? என்ற கேள்வியை எல்லாம் தாண்டி எனக்கு ஒரு சந்தேகம் தயா... கே.பி இலங்கை அரசின் பிடியில் இருப்பது உண்மையானால், ஏன் இன்னும் அவரின் படங்கள் எதுவும் பத்திரிகைகளிலோ, இணையத் தளங்களிலோ வரவில்லை? தலைவர் இறந்ததாக பரப்பப் பட்ட பொய்ப் பிரச்சாரத்தில் (வீடியோக்களை, படங்களை வைத்து) இலங்கை அரசு மண்ணைக் கவ்வினது போல ஆகிவிடக் கூடாது என்றா?? கே.பி சம்பந்தப் பட்ட செய்திகளில் எல்லாம் அவரின் பழைய படங்கள் தானே இன்னும் வந்தபடி இருக்கு... பிடிபட்டவர், அல்லது சரணடைந்தவர் கே.பி தானா என்ற சந்தேம்??

பாண்டு கொஞ்ச நாளா தலைமறைவில இருந்தது இதுக்குத் தானா? :(:lol:

Edited by குட்டி

quote name='Bond007' date='20 June 2010 - 11:46 AM' timestamp='1277030803' post='593460']

நற்சிந்தனை கூறவருவோரே

நாம் யார்–என்ற கேள்வி?

நம் உள்ளத்தில் பிறக்கட்டும்

நயவஞ்சகம் தேவையில்லை –நமக்குள்

நம்பிக்கை ஒன்றே போதும்

பித்து பிடித்து நாம் செய்த–

பிழைகள் நம் பின்னே ஆயிரம்

பின்னோக்கி நாம் எண்ணிப் பார்ப்போம்

பிழைகள் என்னவென்று –மக்களிடம்

பிராயச்சித்தம் கேட்போம்..

புரட்சி எனும் நாம் தந்து

புரியாத மொழிகளில் பல பொய்களும்

புரட்டுகள் அதிகமானதால்–

புண்பட்டது உண்மையான

புத்திமான்களின் மனம் புரிகிறதா?…

  • கருத்துக்கள உறவுகள்

கேபி சரணடையவுமில்லை,கைது செய்யப்படவுமில்லை அவரும் அரசுடன் சேர்ந்து தான் திட்டம் தீட்டினார்...ஆனால் குட்டி சொன்னதையும் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி

எம்மை அழிக்கதுணைபோனார் என்றால்

தற்போது

தமிழ் மக்களுக்கு உதவவருகின்றார் என்றால்

முதலில் அவர் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார் என்பது கண்டறியப்படவேண்டும்

அவர் செய்தது சரியா என்பதும் எமது மக்களால் புரிந்து கொள்ளப்படவேண்டும்

அதன்பின்பே.....

எந்தவித அடுத்த அவரது நடவடிக்கையும் அமைய வேண்டும்

அதற்கு அவர் முதலில் முகம் காடடவேண்டும்

:(:lol:

-- வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக

-- ஒன்பது புலம்பெயர் "தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு" அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது

-- மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டிய தாகவும்

குமரன் பத்மநாதன் ஒரு முடிந்த கதை:

இஸ்ரேலிய யூதர்கள் பாணியில் தமிழர்கள் இனத்துக்கும் தேசத்துக்கும் உயிரினும் மேலால் நம்பிக்கையோடு பணியாற்ற முன் வர வேண்டும். அதற்கு சுயவிளம்பரம்.. சுயநலன்.. சுய புகழீட்டல் போன்ற விடயங்களை இயன்ற வரை இல்லாது ஒழிக்க வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கேபிக்கு,

கேழ்விப்படுவதெல்லாம் உண்மையா? பல்கலைக் களக காலத்தில் துணிச்சல்மிக்க நண்பனாக உன்னைத் தெரியும். என்ன இது?

இன்று ஏகப் பிரதிநிதித்துவம் ஒரு மட்ட செயல்பாடு என்பதெல்லாம் அடிபட்டுப் போய்விட்டது உண்ம. கூட்டமைப்பின் பாராளுமன்ற நடவடிக்கையில் இருந்து நாடு கடந்த அரசியல்வரைக்கும் பல மட்டங்களில் நமது நடவடிக்கைகள் வளற்ச்சி பெற்றால்தான் இந்தச் சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் நாங்கள் தலை நிமிர முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்காக இராஜதந்திரமும் சரணாகதியும் ஒன்றாகிவிடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்..

செய்தி உண்மையாக இருந்து உனது நகர்வுகள் கள நிலமையைக் கருத்தில் கொண்டு தமிழர் நலன் கருதிய நகர்வென்றால் அது பல நிபந்தனைகலை நிறைவு செய்தல் வேண்டும். உன்னை கூட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்த நீ அனுமதிக்கக்கூடாது. உனது அணியினர் கூட்டமைப்புக்கு வெளியில் தேர்தல்களில் பங்குபற்றவும் கூடாது. மேலும் உனது அணி 1. போராளிகளும் தலைவர்களும் விடுதலை, 2.வடக்கு கிழக்கு இணைப்பு 3.உயர்பாதுகாப்பு வலயங்கள் வாபஸ்பெறப்பட்டு சிங்கள குடியேற்றம் இல்லாத மீழ்குடியமர்வும் புனர் வாழ்வும் என்கிற குறைந்த பட்ச்ச கோரிக்கைகலையாவது ல் வென்றெடுக்க வேண்டும். அல்லது உனது நிலைபாடு தமிழ் மக்களது நலன்களுக்கு எதிரான சரணாகதிதான்.

இவை உன்னல் முடியுமா? இவை உன்னால் முடியுமெனில் உன்நகர்வை விடுதலைப் பாதைக்கு எதிரானதல்ல என்று வரலாறு வரையறை செய்யும். ஆனால் இதற்க்கெல்லாம் சிங்கள பேரினவாதிகளின் அரசாட்ச்சியில் இடம் உள்ளதா? என்ன நடக்கிறது என்கிற உண்மை நீ யார் என்கிற உண்மை எப்படியும் மிக விரைவில் தெரிந்துவிடும். இல்லையா?.

Edited by poet

2008 மே 19 இன் பின்பு கே.பி அணியாக ஒருங்கிணைந்து செயற்பட்ட, முன் நாள், இன்நாள் செயற்பாட்டாளர்களின் இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பார்களா?.

அன்புடன் கேபிக்கு,

கேழ்விப்படுவதெல்லாம் உண்மையா? பல்கலைக் களக காலத்தில் துணிச்சல்மிக்க நண்பனாக உன்னைத் தெரியும். என்ன இது?

இன்று ஏகப் பிரதிநிதித்துவம் ஒரு மட்ட செயல்பாடு என்பதெல்லாம் அடிபட்டுப் போய்விட்டது உண்ம. கூட்டமைப்பின் பாராளுமன்ற நடவடிக்கையில் இருந்து நாடு கடந்த அரசியல்வரைக்கும் பல மட்டங்களில் நமது நடவடிக்கைகள் வளற்ச்சி பெற்றால்தான் இந்தச் சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் நாங்கள் தலை நிமிர முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்காக இராஜதந்திரமும் சரணாகதியும் ஒன்றாகிவிடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்..

செய்தி உண்மையாக இருந்து உனது நகர்வுகள் கள நிலமையைக் கருத்தில் கொண்டு தமிழர் நலன் கருதிய நகர்வென்றால் அது பல நிபந்தனைகலை நிறைவு செய்தல் வேண்டும். உன்னை கூட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்த நீ அனுமதிக்கக்கூடாது. உனது அணியினர் கூட்டமைப்புக்கு வெளியில் தேர்தல்களில் பங்குபற்றவும் கூடாது. மேலும் உனது அணி 1. போராளிகளும் தலைவர்களும் விடுதலை, 2.வடக்கு கிழக்கு இணைப்பு 3.உயர்பாதுகாப்பு வலயங்கள் வாபஸ்பெறப்பட்டு சிங்கள குடியேற்றம் இல்லாத மீழ்குடியமர்வும் புனர் வாழ்வும் என்கிற குறைந்த பட்ச்ச கோரிக்கைகலையாவது ல் வென்றெடுக்க வேண்டும். அல்லது உனது நிலைபாடு தமிழ் மக்களது நலன்களுக்கு எதிரான சரணாகதிதான்.

இவை உன்னல் முடியுமா? இவை உன்னால் முடியுமெனில் உன்நகர்வை விடுதலைப் பாதைக்கு எதிரானதல்ல என்று வரலாறு வரையறை செய்யும். ஆனால் இதற்க்கெல்லாம் சிங்கள பேரினவாதிகளின் அரசாட்ச்சியில் இடம் உள்ளதா? என்ன நடக்கிறது என்கிற உண்மை நீ யார் என்கிற உண்மை எப்படியும் மிக விரைவில் தெரிந்துவிடும். இல்லையா?.

நிதானமான கருத்தும் பார்வையும்... கொஞ்சம் வேறு கோணத்தில் பார்க்கப்பட்டுள்ளதால் ஜெயபாலன் அண்ணாவின் இந்தக் கருத்து சிந்திக்க தூண்டுவதாக இருக்கு..

உன்னை கூட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்த நீ அனுமதிக்கக்கூடாது. உனது அணியினர் கூட்டமைப்புக்கு வெளியில் தேர்தல்களில் பங்குபற்றவும் கூடாது.

தலைவர் பிரபாகரன் இல்லாத தமிழர் தலைமையை உருவாக்குவதற்கான நன்கு திட்டமிடப்பட்ட கூட்டு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், கூட்டமைப்பு, கே.பி, நாடுகடந்த அரசு என இந்த தலைமைச் சக்திகளுக்கிடையில் ஒரு இணைப்புச் சக்தி இருந்தது, செயற்படுகின்றது. கூடித்திருடியவர்களுக்கிடையில் பங்கு பிரிக்கும் போது பிணக்கு ஏற்பட்டுவதுபோல் பிணக்கு ஏற்பட்டு சில, பல மாற்றங்கள் நிகழ்கின்றது.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இடம் பெறும் கருத்துக்களே போதுமானது

நாம் எமது போராட்டத்திலிருந்து தடுமாறவில்லை

கே.பி கூட தனது நிலையை முன்வைக்கட்டும் என்றநிலையெடுத்து நிற்கின்றோம் என்றால்......

இதற்கு மேல் எவரை நாம் கருத்திலெடுக்கவேண்டும்

இந்த நிலையில் உள்ள நாம் ஏன் இங்கு சிலரது நடவடிக்கைகளுக்காக பயப்படுகின்றோம்.

அன்புடன் கேபிக்கு,

கேழ்விப்படுவதெல்லாம் உண்மையா? பல்கலைக் களக காலத்தில் துணிச்சல்மிக்க நண்பனாக உன்னைத் தெரியும். என்ன இது?

இன்று ஏகப் பிரதிநிதித்துவம் ஒரு மட்ட செயல்பாடு என்பதெல்லாம் அடிபட்டுப் போய்விட்டது உண்ம. கூட்டமைப்பின் பாராளுமன்ற நடவடிக்கையில் இருந்து நாடு கடந்த அரசியல்வரைக்கும் பல மட்டங்களில் நமது நடவடிக்கைகள் வளற்ச்சி பெற்றால்தான் இந்தச் சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் நாங்கள் தலை நிமிர முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்காக இராஜதந்திரமும் சரணாகதியும் ஒன்றாகிவிடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்..

செய்தி உண்மையாக இருந்து உனது நகர்வுகள் கள நிலமையைக் கருத்தில் கொண்டு தமிழர் நலன் கருதிய நகர்வென்றால் அது பல நிபந்தனைகலை நிறைவு செய்தல் வேண்டும். உன்னை கூட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்த நீ அனுமதிக்கக்கூடாது. உனது அணியினர் கூட்டமைப்புக்கு வெளியில் தேர்தல்களில் பங்குபற்றவும் கூடாது. மேலும் உனது அணி 1. போராளிகளும் தலைவர்களும் விடுதலை, 2.வடக்கு கிழக்கு இணைப்பு 3.உயர்பாதுகாப்பு வலயங்கள் வாபஸ்பெறப்பட்டு சிங்கள குடியேற்றம் இல்லாத மீழ்குடியமர்வும் புனர் வாழ்வும் என்கிற குறைந்த பட்ச்ச கோரிக்கைகலையாவது ல் வென்றெடுக்க வேண்டும். அல்லது உனது நிலைபாடு தமிழ் மக்களது நலன்களுக்கு எதிரான சரணாகதிதான்.

இவை உன்னல் முடியுமா? இவை உன்னால் முடியுமெனில் உன்நகர்வை விடுதலைப் பாதைக்கு எதிரானதல்ல என்று வரலாறு வரையறை செய்யும். ஆனால் இதற்க்கெல்லாம் சிங்கள பேரினவாதிகளின் அரசாட்ச்சியில் இடம் உள்ளதா? என்ன நடக்கிறது என்கிற உண்மை நீ யார் என்கிற உண்மை எப்படியும் மிக விரைவில் தெரிந்துவிடும். இல்லையா?.

ஆமேன் ஜெய.....ன்

நற்சிந்தனை கூறவருவோரே

நாம் யார்–என்ற கேள்வி?

நம் உள்ளத்தில் பிறக்கட்டும்

நயவஞ்சகம் தேவையில்லை –நமக்குள்

நம்பிக்கை ஒன்றே போதும்

பித்து பிடித்து நாம் செய்த–

பிழைகள் நம் பின்னே ஆயிரம்

பின்னோக்கி நாம் எண்ணிப் பார்ப்போம்

பிழைகள் என்னவென்று –மக்களிடம்

பிராயச்சித்தம் கேட்போம்..

புரட்சி எனும் நாம் தந்து

புரியாத மொழிகளில் பல பொய்களும்

புரட்டுகள் அதிகமானதால்–

புண்பட்டது உண்மையான

புத்திமான்களின் மனம் புரிகிறதா?…

... கவிதையே தெரியுமா? உன் ..?.. வேண்டாம் அண்ணை! உங்கை மேலை நான் கொஞ்சம் ஏதோ கொட்டியிருக்கிறன், அதற்கு உங்களிடம் பதில் உள்ளது! ... நீங்கள், குணாளன், ... என்று ஓடி, ஓடி உழைத்தவர்களுக்கு பல உண்மைகள் தெரியும்! ... ஏன்? எதற்கு? எவரின் ஏவலில்? ... ஓடினீர்கள்????? ... உங்களிடம் பதில் உள்ளது! ... உங்களை ஓடச்சொன்னவர்கள் இன்றும் எம்மத்தியில், முகமூடிகளுடன் ...? அவர்கள் அம்பலப்படுத்தும்வரை ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி முடிந்து போன ஒருகதை பட்ட மரம் பூ பூக்குமோ? பாலைவனம் நீர் வார்க்குமோ?

"தமிழா நம்ப நட, நம்பி நடவாதே"

இப்ப KP குறூப் என்ன சொல்லப்போகுது...?? அனைத்துலக தொடர்பக காறர் காட்டி குடுத்ததாலைதான் KP முள்ளிவாய்க்காலில் 50 000 மக்களை கொண்ற ஸ்ரீலங்கா அரசாங்கதோடை சேர்ந்து நிக்கிறார் எண்டோ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.