Jump to content

கணவாய்ப் பொரியல்


Recommended Posts

ஒவ்வொருவரும், கணவாய் பொரியல் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் என்று நினைக்கிறன். இது நான் கண்டு பிடிச்சு செய்த முறை. உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)கிறேன் :( செய்து பார்த்து சொல்லுங்கோ...

கணவாய்ப் பொரியல்

squid.jpg

தேவையான பொருட்கள்:

கணவாய் சுத்தம் செய்யதப் பட்டது- 1பக்கெட் (அல்லது 10 கணவாய்)

கீரை-15- 20 இலை

இஞ்சி- அரைத்தது 2 மேசைகரண்டி

உள்ளி- அரைத்தது 2 மேசைகரண்டி

சிவப்பு வெங்காயம்-1

கருவேப்பிலை- 15

தக்காளிப் பழம்- 1

பழப்புளி- 1 மேசைகரண்டி

ஒலிவ் எண்ணெய்- 2 மேசைகரண்டி

கொத்தமல்லி இலை- தேவையான அளவு

சின்னச் சீரகம்- தேவையான அளவு

கடுகு- தேவையான அளவு

மிளகாய்த் தூள்- தேவையான அளவு

மஞ்சள் தூள்- தேவையான அளவு

கரும்மசாலா தூள்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine)- 150 ml

பால் (தேங்காய் பால்- கொழுப்பு குறைந்தவர்களுக்கு, ஆடை நீக்கப் பட்ட பசுப் பால்- கொழுப்பு கூடியவர்களுக்கு)

செய்முறை:

வெங்காயம், தக்களிப்பழம், கீரை, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

உள்ளி, இஞ்சி இவற்றை பசையாக அரைத்து எடுக்கவும்.

ஏற்கனவே சுத்தம் செய்யப் பட்ட கணவாயை நடுத்தர துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரும்மசாலத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, உள்ளி (அரைத்தது), சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine) இவற்றை சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

சிவப்பு வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி இன்னொரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு பொரிக்கவும்.

வெங்காயம் பொரிந்து வரும் போது, கடுகு, சீரகம், கருவேப்பிலை, தக்காளிப் பழம் இவற்றையும் சேர்க்கவும்.

பழப்புளியை (அரைக் கோப்பை இளஞ்சூட்டு நீரில் கரைத்து) பொரிந்து வரும் கலவையுடன் கலக்கவும், அதனுடனையே பசுப்பால் அல்லது தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும். (பாலையும், புளியயும் சேர்த்தால் திரைஞ்சது போல் வரும், ஆனால் சில நிமிடங்களில் கலவையில் திரைவுத்தன்மை போய்விடும்.)

இப்போது ஊறவைத்து இருந்த கணவாய் கலவையை அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

15-20 நிமிடங்களில் கணவாய் அவிந்து விடும். ஒன்று எடுத்து ருசி பாருங்கள், உங்களுக்கு ஏற்ற நிலையில் அவியவில்லை என்றால், தொடர்ந்து 5-10 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.

சட்டியில் உள்ள நீர்த் தன்மை வற்றிய பின்பு, சிறிது நேரம் அதில் உள்ள எண்ணெயில் பொரிய விடுங்கள். பொரிந்து வரும் போது சிறிதாக வெட்டி வைத்த கீரையையும், கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

பின் குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கணவாய் சாபிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம். வேலைக்கு வில்லங்கம் வராமல் இருக்கத் தான் இந்த குறிப்பு.

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி குட்டி....

ஒரு கேள்வி,,..கரும்மசாலாத் தூள் என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

தேவையான பொருட்கள்:

------

உப்பு- தேவையான அளவு

சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine)- 150 ml

பால் (தேங்காய் பால்- கொழுப்பு குறைந்தவர்களுக்கு, ஆடை நீக்கப் பட்ட பசுப் பால்- கொழுப்பு கூடியவர்களுக்கு)

--------

நீங்கள் கண்டு பிடித்த கணவாய்ப் பொரியலுக்கு நன்றி குட்டி. :(

படத்தை பார்க்கவே வாயூறுது. அடுத்த முறை கணவாய் வாங்கும் போது உங்கள் முறையில் செய்ய உத்தேசம்.

சின்ன ஒரு பிரச்சினை; சிவப்பு திராட்சை ரசம் விட்டால்red+wine+smiley.gif , வீட்டில் என்னைத் தவிர வேறு ஒருவரும் சாப்பிடமாட்டார்கள்.

எங்களுக்கு கொழுப்பு குறைவு. ஆன படியால் தேங்காய்ப்பால் விட்டுச் செய்யலாமா? food_coconutmilk.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே மிக அழகாய் இருக்கு! கணவாயை அகலக் காப்பு போல் வட்டம் வட்டமாக வெட்டி செய்யவும் நன்றாக இருக்கும். :(

நன்றி குட்டி!

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி குட்டி....

ஒரு கேள்வி,,..கரும்மசாலாத் தூள் என்றால் என்ன?

கரும்(கரம்) மசாலாதூள் இந்திய முறைப் படி தயாரிக்கப் படும் வாசனை கறித்தூள். சில இணைப்புகள் உங்களுக்காக தேடி எடுத்து இணைத்துள்ளேன்...

GaramMasala.jpg

நீங்கள் கண்டு பிடித்த கணவாய்ப் பொரியலுக்கு நன்றி குட்டி. :(

படத்தை பார்க்கவே வாயூறுது. அடுத்த முறை கணவாய் வாங்கும் போது உங்கள் முறையில் செய்ய உத்தேசம்.

சின்ன ஒரு பிரச்சினை; சிவப்பு திராட்சை ரசம் விட்டால்red+wine+smiley.gif ,

வீட்டில் என்னைத் தவிர வேறு ஒருவரும் சாப்பிடமாட்டார்கள்.

எங்களுக்கு கொழுப்பு குறைவு. ஆன படியால் தேங்காய்ப்பால் விட்டுச் செய்யலாமா? food_coconutmilk.gif

.

:lol: தாராளமா சிறி அண்ண..

திராட்சை பழரசம் விட்டாலும் பெருசா ஒரு பாதிப்பும் வராது, ஏனெனில் அதை அடுப்பில் வைத்து சூடாக்கும் போதே அதற்குரிய மணம், குணம் எல்லாம் மிகவும் குறைந்து விடுகிறது. இருந்தாலும், நான் திராட்சை பழரசத்தை சேர்த்தமைக்குக் காரணம், கணவாயை மெதுமையாக்குவத்தற்கும் அதே நேரம், அதிக நேரம் மெதுமையாகி இளகி உருந்து போகாமல் இறுக்கமாக இருப்பதற்குமே... அதனால் நீங்கள், சோய் சோஸ் 2-3 மேசைகரண்டி சேர்த்து செய்து பாருங்கள்...

Amoy%20Light%20Soy%20Sauce.jpg

பார்க்கவே மிக அழகாய் இருக்கு! கணவாயை அகலக் காப்பு போல் வட்டம் வட்டமாக வெட்டி செய்யவும் நன்றாக இருக்கும். :wub:

நன்றி குட்டி!

உங்கள் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சுவி/ சுவை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்..சா தண்ணியடிச்ச வாய்க்கு அந்தமாதிரியிருக்கும்..... உண்ணாணை வாயெல்லாம் இப்பவே ஒரு மாதிரிக்கிடக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாதிதிரி இருக்குது குட்டி.ஆனால் இதன் பெயரை கணவாய் வதக்கல் என்று மாத்துங்கோ.கணவாய் பொரியலுக்கு வெங்காயம் பச்சை மிளகாய் முழுதாய் அவியாமல் கடிபட வேனும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்..சா தண்ணியடிச்ச வாய்க்கு அந்தமாதிரியிருக்கும்..... உண்ணாணை வாயெல்லாம் இப்பவே ஒரு மாதிரிக்கிடக்கு :lol:

ஒரு முட்டி கள்ளும் உந்த கணவாயும் இருக்கனும் அந்த மாரி இருக்கும் என்ன தாத்தா :)

Link to comment
Share on other sites

பதிவிற்கு நன்றி. நல்ல குளிரான பியர் போத்தலும் உடைத்தால் சொல்லி வேலையில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி குட்டி!

பார்க்க நல்லாத் தான் இருக்கு.

வாத்தியார்

...........................

Link to comment
Share on other sites

ச்..சா தண்ணியடிச்ச வாய்க்கு அந்தமாதிரியிருக்கும்..... உண்ணாணை வாயெல்லாம் இப்பவே ஒரு மாதிரிக்கிடக்கு :lol:

கருத்துப் பதிவுக்கு நன்றி கு.சா. அண்ண.

ஒரு முட்டி கள்ளும் உந்த கணவாயும் இருக்கனும் அந்த மாரி இருக்கும் என்ன தாத்தா :lol:

2105615636_167223ed53_m.jpg

அந்த மாதிதிரி இருக்குது குட்டி.ஆனால் இதன் பெயரை கணவாய் வதக்கல் என்று மாத்துங்கோ.கணவாய் பொரியலுக்கு வெங்காயம் பச்சை மிளகாய் முழுதாய் அவியாமல் கடிபட வேனும். :lol:

நீங்கள் சொல்லுறதும் ஒரு விதத்தில சரிதான், நான் பொரியல் என்று போட்டதுக்கு காரணம், குழம்பு மாதிரி வைத்து கடைசியில் பொரிய விட்டுத் தானே இறக்கி இருக்கிறேன். நீங்கள் சொல்லுற மாதிரியும் நான் சொல்லுற மாதிரியும் சேர்த்து 'வதக்கல் பொரியல்' என்று போடலாமா?? :o

பதிவிற்கு நன்றி. நல்ல குளிரான பியர் போத்தலும் உடைத்தால் சொல்லி வேலையில்லை. :)

bfed7_2009-08-05-ColdBeer.jpg

இணைப்பிற்கு நன்றி குட்டி!

பார்க்க நல்லாத் தான் இருக்கு.

வாத்தியார்

...........................

வாத்தியார் சொன்னால் சரியாத் தான் இருக்கும்... :o 'ஆத்தா நான் பாஸ் ஆகிடன்..... ' :D:lol:

கருத்துப் பதிந்த அனைவருக்கும் நன்றிகள்! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.