Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலி வீரர்களை நினைவுகூர்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

black_tiger_swiss01.jpg

  • Replies 60
  • Views 5.4k
  • Created
  • Last Reply

உண்மைக்கதை ஒண்று...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைக்கதை ஒண்று...

காட்டிக்கொடுத்து அழிஞ்ச இனம் நாங்கதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உதையெல்லாம் ஏன் இன்கே இணைகிறியள், இவர்களைப் போல் முட்டாள்கள் உலகதில் எவருமே இல்லை, 39 வருடங்களாக இவர்கள் ஏன் தமது உயிரைக் கொடுத்து போராடினார்கள், எல்லோரும் ஜாலியாக யாழ்பாணம் கொலிடய் அடிக்கத்தானே, அதானே எல்லாரும் போயினம், நாடு இப்ப நல்லாய் இருக்காம், இவர்கள் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ தமிழனாய் பிறக்க, வேறு இனத்தில் பிறந்து இருந்தால் அவர்களுடைய குறிகோள் அடையும் வரை அவர்களுடைய இனம் அவர்களது குறிக்கோள் அடையும் வரை போராடி இருப்பார்கள் ஆனால் எமது இனம் ????????????????? :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

உதையெல்லாம் ஏன் இன்கே இணைகிறியள், இவர்களைப் போல் முட்டாள்கள் உலகதில் எவருமே இல்லை, 39 வருடங்களாக இவர்கள் ஏன் தமது உயிரைக் கொடுத்து போராடினார்கள், எல்லோரும் ஜாலியாக யாழ்பாணம் கொலிடய் அடிக்கத்தானே, அதானே எல்லாரும் போயினம், நாடு இப்ப நல்லாய் இருக்காம், இவர்கள் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ தமிழனாய் பிறக்க, வேறு இனத்தில் பிறந்து இருந்தால் அவர்களுடைய குறிகோள் அடையும் வரை அவர்களுடைய இனம் அவர்களது குறிக்கோள் அடையும் வரை போராடி இருப்பார்கள் ஆனால் எமது இனம் ????????????????? :rolleyes::o

இப்படித் தான் அன்டைக்கு என்ர நண்பன் ஒருதன் எனக்கு தொலைபேசி பன்னினான், பன்னிட்டு கேட்டான் மச்சி எப்படி இருக்கிறாய் என்று ,அப்ப நான் சொன்னேன் நான் நல்ல சுகம்டா நீ எப்படி என்று ..பிறக்கு சொன்னான் என்னடா மச்சி பாட்டு சத்தம் கேக்குது என்று, அப்ப நான் சொன்னேன் கணனியில இருந்து இயக்க பாட்டு கேக்கிறன்டா என்று , அப்ப அவன் சொன்னான் இப்ப தானே இயக்கம் இல்லை ஏன் அந்த பாட்டுவள் கேக்கிறாய் என்று..எனக்கு வந்திச்சு கோவம்,.. ஏன் அவன் கூட தேவை இல்லாமல் சண்டைக்கு போவான் என்று நான் சொன்னேன் இப்ப நான் கொஞ்சம் விசியா இருக்கிறன் வேர ஒரு நாளைக்கு தொலைபேசி பன்னு வடிவா கதைப்போம் என்று சொல்லி போட்டு நான் போனை வைச்சிட்டன்..காலம் மாறி போச்சு :lol::D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

photo2.jpg

800px-LTTE_Black_Tiger_Commemoration_Nelliady_2004.jpg

கரும்புலி மாவீரர்களின் விபரங்கள்

http://www.aruchuna.net/categories.php?cat_id=18

Edited by விடலை

"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்" - வான் கரும்புலி கேணல் ரூபன்

ஜூலை மாதம் பிறந்ததும் உடன் நினைவில் வரும் தியாகச் செம்மல்களுக்கு அஞ்சலிகள்.

ஓயாத அலைகள் நடவடிக்கை ஒண்றின் போது நடத்தப்பட்ட கரும்புலித்தாக்குதல்கள்...

எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எண்றால் அது மேலை இருக்கும் காணொளியில் பேசிய மேஜர் மிதுபாலனும் , கப்ரன் சயந்தனும் நடத்திய தாக்குதலுக்கு முன்னர் நடந்தது தான்...

இந்த தாக்குதலுக்கு முதல் நாள் முதல் அளம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட இராணுவத்துக்கு எதிராக பணியிலை இருந்த எங்களுக்கு சிறிய ஓய்வு தந்து போய் சாப்பிட்டு போட்டு வந்து நில்லுங்கோ எண்டு தாக்குதல் நடந்த அண்று எங்கட அணியை மாத்தி விட்டார்கள் .. அரை மைல் தூரத்தில் இருந்த மண் பிட்டியில் ஏறி இருந்து கொண்டு கடல் சண்டையை நாங்கள் பாத்து கொண்டு இருந்தோம்... கடலுக்கு மிக அருகில் இருந்த மண்பிட்டிக்கு கீழை ஒரு படகும் அதில் இருவரும் தணீருக்கை நங்கூடம் போட்ட படகு ஒண்டில் இருந்தால்கள்... நாங்கள் அதுக்கும் முன்னம் வெடி குண்டு படகை பார்த்தது கிடையாது... நாங்கள் யாருமே எண்டு சொல்லுறதுதான் உண்மையாக இருக்கும்...

எங்களுக்குள் பேசிக்கொண்டோம் காயம் பட்ட பெடியளை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வரும் படகாக இருக்கும்... அழைப்பு வரும் வரைக்கும் காத்திருக்கிறார்களாக்கு.... நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது படகில் இருந்த போராளிகள் நாங்கள் சாப்பிடுவதை பாத்து அண்ணை எங்களுக்கும் சாப்பாடு இருந்தால் தாறியளோ என்கிறார்கள்... நாங்கள் பாணும் பருப்பு கறியும் தான் சாப்பிட்டு கொண்டு இருந்தனாங்கள்.. ஓடி விழுந்து பாணை பங்கு போட்டு பருப்புகறியை பொலுத்தீன் பையுக்காலை பிரிச்சு எடுத்து மிஞ்சினதை கொண்டு கடல் கரைக்கு ஒருவன் கொண்டு போனான்...

கடலில் படகு நிண்டதால் கடலிலை குதிச்சு நீந்தி வந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டு போனார் ஒரு போராளி...

அவர்கள் சாப்பிட தொடங்கிங்கி சில நிமிடங்களில் சாப்பாட்டை நிப்பாட்டி போட்டு படகின் இயந்திரத்தை இயக்கி ஆயுத்தமானார்கள்... படகை ஒரு சுத்து சுத்தி எங்களை பாத்து கை அசைச்சு போட்டு போனார்கள்... நாங்களும் ஏன் எண்டு தெரியாமல் கையசைச்சு அனுப்பி வைச்சோம்...

பல டோறாக்கள் சூழ ஒரு தரையிறங்கு கலம் கடற் கரையை நோக்கு வந்து கொண்டு இருந்தது... எங்களின் பல படகுகள் நெருங்கி நிண்டு தாக்குதல் நடத்தி கொண்டு இருந்தன.... எங்களுக்கு அருகில் நிண்ட இவர்களின் படகு போனதும் விலகி அவர்களுக்கு வளி விட்டார்கள் கடற் தாக்குதல் படகு அணியினர் .... இந்த படகு நெருங்கி தரயிறங்கு கலத்துக்கு அருகில் பொகும் போதே வெடித்து சிதறி விட்டது...

சிலவினாடிகள் முன் வரைக்கும் எங்களின் கண் எட்டும் தூரத்தில் இருந்த இரண்டு போராளிகள் இப்ப இல்லை... நினைவுகள் மட்டும் தான் இருக்கிறது...

அந்த ஒரு கணத்தில் ஏற்ப்பட்ட உணர்வு சொல்லி மாளாதது... எங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிட்ட அந்த பாண் கூட சரியாக உள்ளை போய் இருக்காது... அருமையான இரண்டு போராளிகளை இழந்து இருந்தோம்... எனக்கு எல்லாம் வெறுமையாக இருந்தது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் எழுதவருகுது இல்லை

மன்னியுங்கள் தோழரே

தங்களை எழுத எனக்கு அருகதையில்லை

அதேநேரம் எழுதாமல் விடவும்கூடாது

ஏனெனில் தங்கள் நினைவுகள் என்னுடன் அழிந்து போகக்கூடாது

உலகம் வாழும்வரை

தங்கள் ஆட்சி இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

animatedcandledisplayca.gif

மறந்தால்தானே

நினைப்பதற்கு

மறத்தமிழ் வீரரே!

உளத்தே எம்முள்

வாழ்பவரே

உயிர்க்கொடையால்

உயர்ந்த நல் உத்தமரே

உங்களின் ஈகத்தை

உளமேற்றி

எங்களின் தேசத்தை

மீட்பதற்காய்

எம்தமிழ் இனமது

எழுந்து வரும்

உங்களின் ஈத்தின் பெயராலே!

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது மாவீரரின் குருதியால் விளையும் பயிர்

அதைக் காப்பது உலகத் தமிழரின் கடமை

வாத்தியார்

**********

கரும்புலி அடிமுடி

அறிய முடியாத அற்புதம்.

கரும்புலி

சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்.

கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம்.

வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம்.

உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்.

அடிமுடியை அறியமுடியாத அற்புதம்

தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை.

இவர்களை எழுதத் தொடங்கினால்...

எந்தமொழியும் தோற்றுப்போகும்.

வார்த்தைகள் வறுமை அடையும்

உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும்

வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்.

கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால்

அற்புதம் என்பார்கள்

அடுத்தவார்த்தை வராது.

சித்திரக்காரர்களும்

தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்.

பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட

குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும்.

ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது.

சமுத்திர நீரை

அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா?

ஓடும் முகிலை

ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா?

எதிரியின் எந்தவலுவும்

இறுதியில் இவர்களிடம் சரணடையும்.

கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.

மறுநாள்

வெடித்த செய்தி வெளிவரும்போது

ஜாதகமும் சோதிடமும்

தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும்

காலால் நடந்து

வாயால் மொழிந்து

கையால் தலைவாரிக் கொண்டு

எல்லோரையும் போலவேதான் இவர்களும்.

உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்

வேறுபட்டது.

உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து

விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள்.

கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட

தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர்.

முதுகில் வேர்க்குரு போட்டாலே..

முந்நூறு மருந்துகள் தேடும் உலகில்

சாவைத் தம் தோள்களில் சுமந்து

நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள்

காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது

காற்றுக்கு வேர்க்கும்.

நீர் நெருப்பாகிவிடும்.

இவர்களுக்கு;

சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.

பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்.

கரும்புலிகள்;

தலைவன் தலைவாரிவிடும் புயல்கள்.

தாயை நேசிக்கும் அளவுக்கு

தலைவனையும் நேசிப்பவர்கள்.

தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள்.

ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம்

இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை.

யுலை 5.1987

கருமைக்கும் பெருமை வந்த நாள்.

புலியொன்று முதல் கரும்புலியான தினம்

நெல்லியடியில்

"மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள்.

"எல்லாம் சரி

வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்"

கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின்

வாய் மூட முன்னர்

செவிப்பறைகள் கிழிந்தன.

சாவு நேரே ஓடிவந்து

முகத்தில் சந்திக்குமென்று

எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.

"உயிராயுதம்" வலுவானது.

கரும்புலிகள்

தேவை அறிந்து செல்பவர்களே அன்றி

சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல..

இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ

முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல.

இதயம் இரும்பாலானவர்களும் அல்ல.

பனியாய் உருகும் நெஞ்சுக்கும்

பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும்

உரிமையாளர்கள்.

வெடித்த பின்னரும்

இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை.

சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான்.

"நடுகல் நாயகர்கள் " ஆகும் வாய்ப்பும்

எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை.

கல்லறை கூட இல்லாத காவியமாய்

வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல்

சிலருக்கு வெளியே தெரியாத

வேரின் வாழ்வு.

பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு

கரும்புலிகளின் ஜனனம் மட்டும்

மரணத்தில்தான் ஆரம்பம்

கால நதியில்

இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள்.

மற்றவர்களுக்கு

இனி என்ன செய்வதுதென்று

தலைவெடிக்கும் போதுதான்

இந்த சுகந்த ஊதுபத்திகள்

உடல்வெடித்துப் போகிறார்கள்.

"ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்

ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்

வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்

வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்"

பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல

வந்தவரிகளில் வென்றவரிகள் இவை.

கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?

கண்ணீரா?

கல்லறையா?

இல்லை.

எதுவுமே இல்லை

நெஞ்சின் நினைவே

நெடிய கோபுரம்.

கரும்புலி அடிமுடி

அறிய முடியாத அற்புதம்!

புதுவை இரத்தினதுரை

களவாடிய கவிதை....

- தற்கொலை படை 'கரும்புலி'யின் கதை.....

(பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காதலி காதலனுக்கு சொல்லும் கண்ணீர் பதில்)

உன்னவள் நான் இல்லை

உன்னை பார்க்கவும்

எனக்கு தகுதியில்லை

தன்னிலை மாறியவள்

வழியில்லைதலைவன் உன்

கண் காண துணிவில்லை

தயவால் நான் சாக

விஷமில்லை

உனக்காய் நான்

பாதுகாத்த பெண்மை பறிபோனது...

பரிசாய் கொடுத்த முத்தங்கள் பலியானது..

கண்ணின் மணி என உன் உருவத்தை

தேக்கிவைத்தேன்

அழுகையின் பயனாய் அதை

கரைத்துவைத்தேன்

நாட்டை காக்க நீ சென்றாய்

நரிகள் நாய்கட்கு உணவானேன்

உரிமை ஆடையை நீ நெய்தாய் - என்

உண்மை ஆடையை அவன் கொய்தான்

முத்தங்கள் பரிமாறிய - உன்

மீசையின் வாசத்தை

மிருகங்கள் மொய்த்தன...

ஊணாய் கலந்திட்ட - உன்

உறவின் உடம்பை

ஓ நாய்கள் மேய்ந்தன...

அம்மா பார்த்த என் உடம்பை

அம்மனமாய் பார்த்தார்கள்

அக்கிரமக்காரர்கள்

அக்கினியாய் வெடிக்க

ஆயத்தமாணேன்,

ஆயுதமுமாணேன்....

'தீ'யே 'குழம்பா'னது கண்ணகியின் சிலம்பொலி...

'கொழும்பே' 'தீ'யானது நான் ஈழத்து கரும்புலி..

  • கருத்துக்கள உறவுகள்

elalan-2.jpg

Edited by பையன்26

தம் இனத்துக்காக தன் உயிர்களை ஈர்ந்த்தளித்த வீரப்புதல்வர்களின் நினைவு தினம்...

மறப்போமா நாம் ......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-829-000328700 1278279196_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.