Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் ஐ. நா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இலங்கைக்கு ஐ. நா கடும் ஆட்சேபம்

Featured Replies

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் நாளை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன. இன்று ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் பிரகாரம் ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேஸ்4 எனும் சட்டத்தினை பயன்படுத்துமா என் தெரியவரவில்லை.

சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐ.நா. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தடுத்தனர். இதையடுத்து மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறெனினும் எவ்வளவு காலத்திற்கு ஐ.நா. ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவர் என்பது தெரியவில்லை.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலக அதிகாரிகள் கொழும்பின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இவ்விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ.நா. இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹகின்று மாலை நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.நா. தனது கடுமையான ஆட்சேபனையை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஈழநாதம்

ஆர்ப்பாட்டங்களுக்கு ஐ.நா. கண்டனம்

ஆர்ப்பாட்டம்

கொழும்பில் ஐ.நா மன்ற அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு தனது கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்திருப்பதாக ஐ.நா மன்றத் தலைமைச் செயலருக்காகப் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை பின்னதாக பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஹக், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கும் ஜனநாயக உரிமையை மதிக்கும் அதே நேரத்தில், ஐ.நா மன்றப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது, இலங்கையில் ஐ.நா மன்றம் அன்றாடம் செய்து வரும் மக்களுக்கு தேவையான முக்கியமான பணிகளுக்கு இடைஞ்சல் தரும் செயலாகும் என்றார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதால், இது குறித்து அரசுக்கு ஆட்சேபங்களை தாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுயிருந்தனர்.

சென்ற வருடம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரச படைகள், புலிகள் என்று இரு தரப்பினரும் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் கொலைகள் பற்றிய தனது விசாரணைகளை ஐ.நா. நிறுத்திவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

இலங்கை தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் சென்ற மாதம் அறிவித்திருந்தார். ஆனால் இந்த விசாரணைகளை 'விரும்பத்தகாத தலையீடு' என்று கூறி, அவற்றுக்கு ஒத்துழைக்க இலங்கை மறுத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்தனர். ஐ.நா. ஊழியர்கள் அலுவலகக் கட்டிடங்களிலிருந்து வெளியேறுவதை அவர்கள் தடுத்திருந்தனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100706_colombodemo.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில யுத்தம் முடிந்து அமைதி நடக்குதாம் .............. இனி அகதி அந்தஸ்த்து இல்லையாம் என்று போட்டிருக்கு இன்னொரு செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

.

இலங்கையில யுத்தம் முடிந்து அமைதி நடக்குதாம் .............. இனி அகதி அந்தஸ்த்து இல்லையாம் என்று போட்டிருக்கு இன்னொரு செய்தி.

இப்ப.... ஸ்ரீலங்காவில் உள்ள ஐநா ஊழியர்களுக்குத்தான், அவசரமாக அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

பான்கி மூனும் வீட்டில் இருந்து பணியாற்றினால் நல்லது.ஐ.நா பயங்கரவாதிகளுக்கு சிறிலங்காவில் என்ன அலுவல்.3 இலட்சம் மக்களை முற்றுகையிட்டு தாக்கப்பட்ட பொழுது சும்மா பார்த்துக் கொண்டிருந்த ஐநா இப்பொழுது முற்றுகையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.மகிந்த அரசியலில் நல்லா தேறியிட்டான்.விமல் வீரவன்சவை வைத்து எல்லாருக்கும் தண்ணி காட்டிறான்.

ஐ.நா.பணியாளரைப் பாதுகாப்பதில் தோல்வி கண்டிருக்கிறார் பான் கீ மூன் இன்னர் சிற்றி பிரஸ் விமர்சிப்பு ஐ.நா.:

தினக்குரல்

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் குழுவொன்று ஐ.நா. பணியாளர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கிறது. ஊழியர்கள் வெளியேற வேண்டுமென அவர்கள் விரும்பினால் நிபுணர் குழுவை ஐ.நா. வாபஸ் பெற வேண்டுமென நாங்கள் எச்சரிக்கின்றோம் என்று வீரவன்ச கூறியுள்ளார்.

இந்த முற்றுகையானது ஐ.நா. ஊழியர்களை பணயக் கைதியாக வைக்குமாறு வீரவன்ச வலியுறுத்திய ஆறு நாட்களின் பின் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் இது தொடர்பாக பான் கீ மூனின் பதில் என்ன என்று ஜூன் 30 இலும் ஜூலை 02 இலும் ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. வீரவன்சவின் அச்சுறுத்தல் தவறாக மேற்கோள்காட்டப்பட்டிருக்கக்கூடும் என்று ஜூன் 30 இல் ஹக் கூறியிருந்தார். அவ்வாறு இடம்பெற்றிருந்தாலும் அது வெறும் தனிப்பட்ட ரீதியானதென அவர் கூறியிருந்தார்.

இந்த அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. வின் சிரேஷ்ட அதிகாரியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.இது காந்தீய வழியிலான அச்சுறுத்தல் என அவர் கூறியிருந்தார்.

ஜூலை 02 இல் ஐ.நா. ஊழியர்களுக்கு எதிரான அரசாங்க அமைச்சரின் அச்சுறுத்தலை தனிப்பட்ட ரீதியானது என ஐ.நா. குறைவானளவுக்கு மதிப்பீடு செய்வது ஏன் என இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. அரசாங்கத்திடமிருந்து மன்னிப்பு தெரிவிக்கக்கூடும் என ஹக் கூறியிருந்தார். அந்த மாதிரி ஏதாவது இடம்பெற்றால் நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று இன்னர்சிற்றி பிரஸுக்கு ஹக் கூறியிருந்தார்.

தான் தவறாக மேற்கோள்காட்டப்படவில்லை என்பதை ஜூலை 03 இல் வீரவன்ச தெளிவுபடுத்தியிருந்தார். இந்த அச்சுறுத்தல் தனிப்பட்ட ரீதியானதல்ல. இது தொடர்பான செய்திகளை ஜூலை 03,04 இல் இன்னர்சிற்றி பிரஸ் பிரசுரித்திருந்தது. பான் கீ மூன் ஜமேக்காவில் இருந்தார். எதுவும் கூறப்படவில்லை. ஹக்கும் அவருடைய அலுவலகமும் எதனையும் அனுப்பியிருக்கவில்லை.

ஜூலை 06 இல் ஐ.நா. பணியாளர்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளனர். அதனை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதனையும் செய்திருக்கவில்லை. ஐ.நா. பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர்குழுவை நியமித்ததற்காக அதன் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவர வேண்டுமென வீரவன்சவும் சிலரும் அழைப்பு விடுக்கின்றனர். ஐ.நா. அலுவலகம் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட ஏனையோர் வேறு காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வேலையின் அடிப்படை அம்சமாக விளங்கும் நடவடிக்கையில் இது தோல்வியாக அமைந்துள்ளது. களத்திலுள்ள ஐ.நா. பணியாளர்களைப் பாதுகாப்பது அல்லது குறைந்தது அவர்களுக்காகப் பேசுவது என்ற ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பணியின் மிகவும் அடிப்படை அம்சமான விடயம் இங்கு தோல்வி கண்டிருக்கிறது. இவ்வாறு இன்னர்சிற்றி பிரஸ் நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா. நிபுணர்குழு ஒருபோதும் கலைக்கப்பட மாட்டாது இலங்கை அமைச்சரின் கோரிக்கையையும் ஏற்கோம்!!

தலைமைச் செயலகப் பேச்சாளர் ஆவேசம்!!

இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான பாரன்ஹக் நேற்றிரவு பி.பி. ஸிக் குத் தெரிவித்தார்.

கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்.

அத்துடன் இது குறித்து அவதானித்து வருகின்றோம். இதேவேளை இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேசிவருகின்றோம்.

எனினும் எமது பணியாளர்கள் குறித்து எமக்கு முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கு தெரிந்தவகையில் இன்றைய (அதாவது நேற்றைய) சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை.

ஆனால் அவர்கள் தற்பொது அலுவலகத்துக்கு உள்ளே இருக்கின்றனரா அல்லது வெளியே உள்ளனரா என்பது குறித்து எம்மிடம் முழுமையான தகவல் இல்லை இப்படி அவர் பி.பி.ஸிக்குச் சொன்னார்.

இலங்கை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா நிபுணர் குழு கலைக்கப்படுமா? என்று பி.பி.ஸி செய்தியாளர் அவரிடம் கேட்டபோது இல்லை. அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்துத் தொடர்பாக ஐ.நாவிற்கு இலங்கை அரசின் மன்னிப்புக்கோரும் அறிக்கை ஏதாவது கிடைத்ததா? என்று பி.பி.ஸி செய்தியாளர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டபோது ஆம் நாங்கள் இலங்கை அரசிடம் தெளிவான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் இதுகுறித்து என்ன நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இலங்கைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து எமக்கு அறிக்கை ஒன்று கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் இன்று (அதாவது நேற்று) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3516&Uthayan1278495293

இவ்வளவு தைரியமாக இலங்கை உலகை எதிர்த்துப் போராடுகின்றது. நியுயோர்க்கிலிருந்து உன்னிப்பாக அவதானிக்கிறார்களாம். இவர்கள் நியமித்த நிபுணர் குழுவைக் கூட மீளப் பெற்றுக் கொள்வார்களோ தெரியாது.

.

இப்ப.... ஸ்ரீலங்காவில் உள்ள ஐநா ஊழியர்களுக்குத்தான், அவசரமாக அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும்.

.

:lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தைரியமாக இலங்கை உலகை எதிர்த்துப் போராடுகின்றது. நியுயோர்க்கிலிருந்து உன்னிப்பாக அவதானிக்கிறார்களாம். இவர்கள் நியமித்த நிபுணர் குழுவைக் கூட மீளப் பெற்றுக் கொள்வார்களோ தெரியாது.

அவங்கள்தான் காதிலே பூசுத்துறாங்கள் என்றால் நீங்களுமா?

எல்லாம் வெறும் நாடகம் அண்ணே. மக்களையும் சேர்த்து கொல்ல சொன்னதே ஐநாவும் அதன் அதிகாரிகளும்தான்.. அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள்தான் பலபேரை பதம் பார்த்தது.

இதில் படுகொலையா? எமக்கு எதுவுமே தெரியாதே... என்று பாம்மாத்து காட்டுவதற்குதான் இந்த நாடகம்.

ஒரு வேளை நல்லகாலமாக மகிந்த மந்தி சீனாவோடு உறவை வலுபடுத்தினால். மகிந்தவை தூக்க இந்த நாடக காட்சிகளை பயன்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் எத்தணிக்கும் அவ்வளவே.

புலிகள் மக்களை மறிப்பதை சற்றலைற்றில் வீடியோ எடுத்து எல்லா செய்திகளிலும் காட்டினவர்கள்........... மக்களை சிங்கள நாய்கள் குதறியதை பார்க்கவில்லையா? எல்லாம் வீடியோவிலேயே இருக்கு... பிறகு எதற்கு நிபுணர் குழுவும் கோத்திரமும்?

2008ம் ஆண்டு வன்னியிலிருந்து மக்கள் மன்றாடிக் கேட்டும் வெளியேறினவ, அதுக்கு பின்பு தான் மனிதப் படுகொலை உத்தியோகபூர்வமாக் தொடங்கியது, ஒர் வேளை சிங்களவனுக்கும் வன்னி மக்களின் கதி தான் ஏற்படப் போகிறதோ :D:(

அவங்கள்தான் காதிலே பூசுத்துறாங்கள் என்றால் நீங்களுமா?

எல்லாம் வெறும் நாடகம் அண்ணே. மக்களையும் சேர்த்து கொல்ல சொன்னதே ஐநாவும் அதன் அதிகாரிகளும்தான்.. அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள்தான் பலபேரை பதம் பார்த்தது.

இதில் படுகொலையா? எமக்கு எதுவுமே தெரியாதே... என்று பாம்மாத்து காட்டுவதற்குதான் இந்த நாடகம்.

ஒரு வேளை நல்லகாலமாக மகிந்த மந்தி சீனாவோடு உறவை வலுபடுத்தினால். மகிந்தவை தூக்க இந்த நாடக காட்சிகளை பயன்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் எத்தணிக்கும் அவ்வளவே.

புலிகள் மக்களை மறிப்பதை சற்றலைற்றில் வீடியோ எடுத்து எல்லா செய்திகளிலும் காட்டினவர்கள்........... மக்களை சிங்கள நாய்கள் குதறியதை பார்க்கவில்லையா? எல்லாம் வீடியோவிலேயே இருக்கு... பிறகு எதற்கு நிபுணர் குழுவும் கோத்திரமும்?

"எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங்கையும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குல மாக நகர்த்திக்கொண்டு போய் கடலம்மாவின் காலடியில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டாளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!" - சீமான்.

சரியாகச் சொன்னீர்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இலங்கையில் மகிந்தவின் ஆதிக்கம் ஒரு பொருட்டான விடயமல்ல. சீன ஆதிக்கமே தலையிடி. முழுதாகச் சீனன் நுழைந்துவிட்டால் பிறகு எதுவுமே செய்ய முடியாது என்பதை இப்போதுதான் புரிந்துள்ளார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால், பான்கீ மூன் சீனாவிற்கான ஆதரவாளர் என்பதை காலந் தாழ்த்தி உணர்ந்துள்ளார்கள்.

கஸ்ரமான விடயம் என்னவென்றால் இதிலும் தமிழர்கள்தான் பகடைக் காய்களாகின்றனர். நிபுணர் குழு மீளப் பெறப்பட்டவுடன் எல்லாம் "சப்" என்று போகும்.

ஐ.நா. நிபுணர் குழு மீளப் பெறப்பட்டால்......

அது ஐ.நாய். வரலாற்றில் கழுவ முடியாத அவமானமாகப் போகும்.

ஏற்கெனவே 50,000 தமிழ் உயிர்கள் ஐ.நா. வேடிக்கை பார்த்தற்கு கொடுத்துள்ளோம்.

.

ஐ.நா. நிபுணர் குழு மீளப் பெறப்பட்டால்......

அது ஐ.நாய். வரலாற்றில் கழுவ முடியாத அவமானமாகப் போகும்.

ஏற்கெனவே 50,000 தமிழ் உயிர்கள் ஐ.நா. வேடிக்கை பார்த்தற்கு கொடுத்துள்ளோம்.

.

இலங்கைக்கு எதிராக ஐ நா செயற்படும் என்பது எதிர்பார்க்க முடியாதது. ஐ நா விடம் கறைகள் ஏராளமாக உண்டு. அவற்றிலொன்றாக இதுவும் இருந்துவிட்டுப் போகும். சிங்கள ஆட்சியாளர்களிடமிருக்கும் கருத்தொருமிப்பு ராஜபக்ஷ குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குத்தான் என்பது சிங்கள மக்களுக்கு விளங்கினாலன்றி வேறு எந்த விளக்கத்தினாலும் ஐ நா விற்கு எதிராக எழுந்திருக்கும் அலையைத் தடுப்பது கடினம். அதற்கான மாற்றுவழிதான் நிபுணர் குழுவை ஐ நா மீளப் பெறுவதானது.

ஐ.நாய். தலவர் நாய் இறைச்சி சாப்பிடும் நாட்டிலிருந்து வந்தவர்.....

அவருக்கு ....................

.

.

ஐ.நாய். தலவர் நாய் இறைச்சி சாப்பிடும் நாட்டிலிருந்து வந்தவர்.....

அவருக்கு ....................

.

:):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.