Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Z - War. ( தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் போர்.)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கற்பனைக் கதை நன்றாகப் போகிறது...ஆனால் எனது ஆதங்கம் என்னவென்டால் நாம் முதலில் கடந்த காலத்தில் தோற்றதுக்கு என்ன காரணம் என்ன என்பதை உண்மையான,நடுநிலையான விமர்சனத்தோடு ஆராயலாமோ எனத் தோன்றுகிறது...ஏன் 100% மக்கள் போராட முன் வரவில்லை... ஆயுதப் போராட்டம் ஏன் வெற்றியளிக்கவில்லை...தலைவர் ஏன் கேபியை நம்பினார்...கேபி ஏன் ஏமாற்றினார்...போன்றனவற்றை வைத்து ஆராயலாமோ என தோன்றுகிறது இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அக்கா தலைவர் கேபியை நம்பினார் என்று நாங்கள் தான் சொல்லிக்கிறமே தவிர தலைவர் சொல்லேல்ல. தலைவர் ஒரு தடவை சொன்னது நான் என்னைச் சுற்றி இருக்கிறவங்களை நம்பிறதில்ல. அப்படி இருந்தும் எனது வாய்க்குள்ளையே சூத்தை வந்தது என்று.. மாத்தையா பற்றி கேட்ட போது சொன்னவர். அப்படிப்பட்ட தலைவர் கேபியை மட்டும் நம்பி தொலைஞ்சிருப்பார் என்பது எங்கட கற்பனை.

நீங்கள் எல்லாரும் பழைய வரலாறுகளை வசதிக்கேற்ற வகையில மறந்து போட்டு உங்கள் உங்கள் செயற்கருமங்களை தவறவிட்டிட்டு தலைவர் நம்பிக் கெட்டிட்டார் என்று அவர் மீதே பழியைப் போட்டுக் கொண்டிருக்கிறதை நான் ஒரு போதும் செய்யமாட்டன். தலைவர் பிழை விட்டிருந்தாலும் கூட அவர் சரியா கொள்கைக்காக செயற்பட்டது பல தடவைகளில். அவற்றிற்கு தான் நான் முன்னுரிமை அளிப்பன்.

இந்தக் கதை எமது தேசத்தையும் அதனை நேசிக்கும் போராளியும் பற்றியது. தலைவரைப் பற்றியோ போராட்டம் பற்றியோ விமர்சிக்கவோ.. எழுதவோ எனக்கு எந்த அருகதையும் இல்லை. தலைவர் நடத்திய போராட்டம் பற்றி எமக்கு தெரிந்ததை விட தெரியாததுதான் பல. அதை முதலில் ஒவ்வொரு தமிழரும்.. ஏன் போராளிகள் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும். தலைவருக்குள் இருந்து வெளிவராத எண்ணங்கள் பல. அவற்றை பற்றி அவர்தான் சொல்ல வேண்டுமே தவிர பிறருக்கு அவற்றை அனுமானிக்கும் தகுதி இல்லை என்றே நான் பலமாகக் கருதுகின்றேன்.

எதுஎப்படியோ.. தலைவரைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு.. அவரை சம்பந்தப்படுத்தும் அளவிற்கு.. இந்தக் கதை அமையாது. இது தேசமும்.. அதனை நேசிக்கும் ஒரு போராளியும்.. தன் தேசத்தை உறவுகளை அழித்தொழித்த உலகை பழிவாங்க முனைவது பற்றியது. அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் எமது துயரங்களை இட்டு இந்த உலகம் உணரத்தவறியதும் இன்றி அதற்கு காரணமாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் தான் நான் இதனை கற்பனை கலந்து எழுத ஆரம்பித்துள்ளேன் அக்கா. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். :)

Edited by nedukkalapoovan

  • Replies 71
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எம்மை திருத்தவே முடியாது...விட்ட பிழைகளை திரும்பி பார்க்கா விட்டால் எப்படி அதில் இருந்து மீள்வது...ஆனால் நெடுக்ஸ் உங்களின் ஆக்கத்தில் பிழை சொல்லவில்லை அது வரவேற்கதக்க முயற்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மை திருத்தவே முடியாது...விட்ட பிழைகளை திரும்பி பார்க்கா விட்டால் எப்படி அதில் இருந்து மீள்வது...ஆனால் நெடுக்ஸ் உங்களின் ஆக்கத்தில் பிழை சொல்லவில்லை அது வரவேற்கதக்க முயற்சி.

தவறுகளை திரும்பிப் பார்ப்பது மட்டும் திருந்த வழியைத் தராது. பெறப்பட்ட நல்ல அனுபவங்களையும் திரும்பிப் பார்க்க வேண்டும். வெறும் தவறுகளையே ஆராய்ந்து கொண்டிருந்தால்.. முன்னேற முடியாது. நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி ஏற்படும்.. தவறுகளா திருத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

நாங்கள் தவறுகளை ஆராய்ஞ்சு கொண்டிருப்பதைக் காட்டிலும்.. அனுபவங்களை வைச்சு புதிய பாதையை அமைக்கலாமோ என்று தான் பார்க்கிறம்.

நன்றி அக்கா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளைத் திரும்பிப் பார்க்கிறதைப் பற்றிக் கதைக்கிறபோது அண்மையில பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஞாபத்துக்கு வருது. :lol:

ஈரான் ஈராக் போர் நடந்த முடிந்த சமயத்தில் நிகழ்ந்தது இது. வளைகுடாப் பகுதியில் எண்ணைக்கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க வழக்கம் போல உலகப் பொலிஸ்காரன் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களுடன் அங்கே நிக்கிறார். ஒரு நாள் அங்கே நின்ற ஈரான் பாதுகாப்புப் படகுகளுடன் கடற்சமரில் ஈடுபடுகினம் அமெரிக்கக் காரர்.

அப்ப அங்கே வளைகுடாவுக்கு மேலால் பறந்த ஒரு பயணிகள் விமானத்தை ஈரானின் F-14 போர் விமானம் என்று நினைச்சு சுட்டு விழுத்தி விடுகினம். பயணிகளும் விமான ஊழியருமாக 290 பேர் இறந்துவிடுகிறார்கள்.

இது சம்பந்தமாக விசாரணை நடத்திய அமெரிக்க அரசு, அந்தச் சூழ்நிலையில் விமானத்தைச் சுட்ட போர்க்கப்பலின் தலைவர் தன்னாலான சரியான நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருந்தார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. :lol:

கடைசியில் பார்த்தால் அவர்கள் விமானத்தைச் சுட்டபோது கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் நிற்கவில்லை. கடற்சமரின் மும்முரத்தில் ஈரானின் எல்லைக்குள் நின்றபடி ஈரான் விமானத்தைச் சுட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட விசாரணை ஒன்றில் இது உறுதிப்படுத்தப் பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா திரும்பிய கடற்படையினருக்கு மக்கள் அமோக வரவேற்பை வழங்கினார்கள். அமெரிக்க அரசு மிக உயரிய விருதுகளை வழங்கி சுட ஆணையிட்ட கப்பல் அதிகாரி முதலான முக்கிய புள்ளிகளை கௌரவித்தது. :D

இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததும் தவறை தலைமைமேல் உடனடியாகப் போட்டுவிடும் நாம் என்ன உண்மையிலேயே நடந்தது என்பதை இன்னும் அறியாதவர்களாகவே இருக்கிறோம். உண்மை அறியாமலே நாம் பழிபோடுவதற்குப் பின் நிற்பதில்லை. ஆனானப்பட்ட அமெரிக்கக் காரனோ உண்மைகளையே போட்டு மறைக்கிறான். இதுதான் எங்களது "தூய்மை மனப்பான்மை." :)

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டீர்கள் எல்லோரும் சேர்ந்து பிழை விட்டபடியால் தான் அத்தனை ஆயிரம் சனம் உயிர் துறந்தது...எதற்காக இப்படி ஒரு பின்னடைவு எமக்கு ஏற்பட்டது என நாம் ஆராய வேண்டாமா...அமெரிக்காகாரனுக்கு நாடு இருக்கு...எமக்கு நாடு இல்லை அதற்காக போராட்டம் அரசியல் ரீதியில் ஆவது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்...அதற்கு தான் நாம் விட்ட பிழையினை ஆராய வேண்டும்...மீண்டும் ஒரு பிழை விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டீர்கள் எல்லோரும் சேர்ந்து பிழை விட்டபடியால் தான் அத்தனை ஆயிரம் சனம் உயிர் துறந்தது...எதற்காக இப்படி ஒரு பின்னடைவு எமக்கு ஏற்பட்டது என நாம் ஆராய வேண்டாமா...அமெரிக்காகாரனுக்கு நாடு இருக்கு...எமக்கு நாடு இல்லை அதற்காக போராட்டம் அரசியல் ரீதியில் ஆவது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்...அதற்கு தான் நாம் விட்ட பிழையினை ஆராய வேண்டும்...மீண்டும் ஒரு பிழை விடக் கூடாது.

உண்மை எதுவென அறியாமல் பிழை சரி பார்க்க முடியாது. உண்மைகள் வெளிவரும்வரை காத்திருப்போம். அதுவரை ஆராய்ச்சிகளை ஒத்திவைப்போம்..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது இப்படியாவது கற்பனைகளை ஓடவிட்டு எமது மன ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.

ஆங்கிலத்தின் கடைசியெழுத்தை அந்தப் போராளிக்குக் கொடுத்து எதையோ கதைமூலம் சொல்ல விரும்புவதுபோல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை எதுவென அறியாமல் பிழை சரி பார்க்க முடியாது. உண்மைகள் வெளிவரும்வரை காத்திருப்போம். அதுவரை ஆராய்ச்சிகளை ஒத்திவைப்போம்..! :lol: :lol:

ஆமென்

  • 2 weeks later...

...

உண்மையில் அமெரிக்க கப்பலுக்கு நடந்தது என்ன.. Z தான் இறுதிக் கட்டத்தில் தன் படகை மோதி வெடிக்க வைத்திருந்தாரா.. அல்லது வேறேதேனும்.. விபத்து நடந்ததா..அப்படியாயின் Z க்கும் அவரின் படகுக்கும் நடந்தது என்ன...??! இவற்றிற்கான விடை தேடல்களுடன் மீண்டும் அடுத்த வாரம் இதே நாள் சந்திப்போம்...!

நெடுக்ஸ் என்ன கதை போட்டது போட்ட படியே இருக்கு? தொடரும் நோக்கம் இல்லையோ?? :lol:

பிழையை பிழை என்று தெரியாமல் செய்பவர்களை திருத்தலாம், தெரிந்து செய்பவர்களை திருத்துவது மிகவும் கஷ்டம். :lol: பேசாமல் இஞ்ச வந்து கதையைத் தொடருங்கோ... :lol: :lol:

தற்போதைய நிலையில் உண்மை கலந்த கற்பனை ஆக உள்ளது.

அமெரிக்காவின் வீர தீரம் எல்லாம் ஆங்கில மொழி மூல படைப்புகளாக கொலிவூட் சினிமா தொடங்கி சிறுவர்கள் விளையாடும் கேம்ஸ் வரை வியாபித்து நிற்கிறது. அதையே எமது சந்ததிகளும் விளையாடி மகிழ்வது மட்டுமன்றி அமெரிக்க சித்தாந்தங்களை உள்வாங்கச் செய்யப்படுகின்றனர்.

நாமும் இப்படியான படைப்புக்களூடு எமக்கான வரலாற்றை பதிவு செய்ய முற்படுவதோடு.. சிறுவர்களின் விளையாடும்... பார்க்கும்.. கேம்ஸை கூட இந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தமிழீழத்தின் சித்தாந்தமும்.. உலகில் உணரப்படும். ஒட்டுமொத்த உலகால் இல்லை என்றாலும் எம்மவர்களாவது உணரச் செய்யப்படுவர்.

இது ஒரு ஆரம்ப முயற்சி. பல தவறுகள்.. திருத்தங்களுக்கு இடமிருக்கும். எனவே அவற்றையும் சுட்டிக்காட்டுங்கள். :lol:

அமேரிக்கா அப்படி செய்வது உண்மையே.......

அதே சமயம் இந்தியா எம்வரிடையே பல ஆத்மிக கருத்துக்கள் மூலம் எம் இளைய சமுதாயத்தினர் எண்ணங்களை திசை திருப்பியுள்ளனர்கள் என்பதை நீங்கள் சுட்டி காட்ட தவறு வது ஏன்?முக்கியமாக் புலம் பெயர் இளையயோர்கள் மத்தியில்......... :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா அப்படி செய்வது உண்மையே.......

அதே சமயம் இந்தியா எம்வரிடையே பல ஆத்மிக கருத்துக்கள் மூலம் எம் இளைய சமுதாயத்தினர் எண்ணங்களை திசை திருப்பியுள்ளனர்கள் என்பதை நீங்கள் சுட்டி காட்ட தவறு வது ஏன்?முக்கியமாக் புலம் பெயர் இளையயோர்கள் மத்தியில்......... :lol::lol:

பெரியண்ணன் கூட சேர்ந்து தான் சின்னண்ணனும்.. நமக்கு விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கார். எல்லாரும் வருவினம். வரிசையாத்தானே கொண்டு வரனும்..!

இப்ப இரண்டு வாரமா இதனை தொடர முடியல்ல. ஒரு "மூட்" வந்தா தான் எழுத வரும். உங்கள் எண்ணம் எனக்குள்ளும் உதித்தது. அதுதான் கதையின் ஆரம்பத்தில்.. சின்னண்ணன் ஆட்டி வைக்க பெரியண்ணன் ஆடுவதை கொஞ்சம் அறிமுகம் செய்து வைச்சிருக்கிறேன். தொடர்ந்து எழுதும் போது உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்ளுறேன்.

நன்றி. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன கதை போட்டது போட்ட படியே இருக்கு? தொடரும் நோக்கம் இல்லையோ?? :lol:

பிழையை பிழை என்று தெரியாமல் செய்பவர்களை திருத்தலாம், தெரிந்து செய்பவர்களை திருத்துவது மிகவும் கஷ்டம். :lol: பேசாமல் இஞ்ச வந்து கதையைத் தொடருங்கோ... :D:lol:

தொடருவேன்.. படிப்பு சம்பந்தமாக research project எழுத வேண்டி இருக்குது. தலையை பிச்சுக்கிட்டு இருக்கன். படிச்சு படிச்சு முடிதான் கொட்டினது மிச்சம்..!

கதை நிச்சயம் வரும். படிப்பு வந்து.. கண்ணுக்கு மூளைக்கு.. stress தந்தா.. கதை சுயாதீனமா.. வரும்.. வராது..!

மன்னிக்கனும்.. இந்தா வருகுது என்று சொல்லி ஏமாத்தினதுக்கு. கதை அடியில போயிட்டு கண்டுக்கமாட்டாங்க என்று நினைச்சன்... வைச்சிட்டாய்யா ஒருத்தன் ஆப்பு. ஆப்புக் கொண்டே திரியுறாங்கப்பா கொஞ்சப் பேர். :D:lol::D:D

தொடருவேன்.. படிப்பு சம்பந்தமாக research project எழுத வேண்டி இருக்குது. தலையை பிச்சுக்கிட்டு இருக்கன்.

படிச்சு படிச்சு முடிதான் கொட்டினது மிச்சம்..!

கதை நிச்சயம் வரும். படிப்பு வந்து.. கண்ணுக்கு மூளைக்கு.. stress தந்தா.. கதை சுயாதீனமா.. வரும்.. வராது..!

மன்னிக்கனும்.. இந்தா வருகுது என்று சொல்லி ஏமாத்தினதுக்கு. கதை அடியில போயிட்டு கண்டுக்கமாட்டாங்க என்று நினைச்சன்... வைச்சிட்டாய்யா ஒருத்தன் ஆப்பு. ஆப்புக் கொண்டே திரியுறாங்கப்பா கொஞ்சப் பேர். :D:lol::D:D

சரி, சரி படிப்பு விஷயம் எண்டுறீயல் அதை முதல பாருங்கோ... பிறகு சொட்டை மண்டையைத் தடவி கொண்டு கதை எழுதுங்கோ... :lol:

(மன்னிப்பு??? கிறாதகா!!!!) :lol::D இதுக்கு மன்னிப்பு அவசியமில்லை :D

ஹிஹிஹி... ஆப்பு அடுத்தவன் எங்களுக்கு வைக்கிறதில்லை நெடுக்ஸ்... ஆப்பு அங்கங்க அதுவா செருகி இருக்கும், நாங்களா தான் கவனிக்காமல் போய் அதில உக்காருறது... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி படிப்பு விஷயம் எண்டுறீயல் அதை முதல பாருங்கோ... பிறகு சொட்டை மண்டையைத் தடவி கொண்டு கதை எழுதுங்கோ... :lol:

(மன்னிப்பு??? கிறாதகா!!!!) :lol::lol: இதுக்கு மன்னிப்பு அவசியமில்லை :D

ஹிஹிஹி... ஆப்பு அடுத்தவன் எங்களுக்கு வைக்கிறதில்லை நெடுக்ஸ்... ஆப்பு அங்கங்க அதுவா செருகி இருக்கும், நாங்களா தான் கவனிக்காமல் போய் அதில உக்காருறது... :D:lol:

அங்கை, திண்ணையில முக்கிய விவாதம்.... அதைப் பாத்து கவலையாய் இருக்கும் போது.....

குட்டியின், கருத்தைப் பாத்து சிரிக்காமல் இருக்க முடியல.....

. ஆப்புக் கொண்டே திரியுறாங்கப்பா கொஞ்சப் பேர். :lol: :lol: :lol::lol:

தட்ஸ் டமிழன்யா....த கிரேட் டமிழன் :D

  • கருத்துக்கள உறவுகள்

தட்ஸ் டமிழன்யா....த கிரேட் டமிழன் :lol:

ஜில்.... அண்ணே.....

ஆப்பு... எங்கை வரும்? எப்பிடி வரும்? ஏன் வரும்? எண்டு கேள்வி கேக்காமல்.

பயத்திலை கக்கூசுக்கு போகேக்கையும்..... கீழை வடிவாய் பாத்துப் போட்டுத்தான் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 3

அமெரிக்கப் போர் கப்பல் மர்ம வெடி விபத்துக்கு உள்ளானதில் இருந்த உண்மைக் காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாமையால் குழம்பிப் போயிருந்த பென்ரகன்.. ஈராக்கில் திடீர் என்று மனித வெடி குண்டுகள் சரமாரியாக வெடிக்கத் தொடங்கியதால்.. அங்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால்.. பென்ரகன்.. அவசரகால நிலைக்கு ஏற்ப தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

Army-Operations-Iraq.jpg

இறுதியில்.. ஈராக்கில் தீவிரவாதிகள் மீது தற்காலிக துரத்தியடிப்பு இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிட வேண்டியும் வந்தது. அதற்கு தனது தரைப்படைகளுக்கு உதவியாக கடற் கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கோடு.. இந்து சமுத்திரத்தில் Z இன் படகைத் தேடிக் கொண்டிருந்த கடற்படையை மீள ஈராக் நோக்கி செங்கடல் பகுதிக்கு அழைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தது பென்ரகன். அதற்கமைய வெடி விபத்துக்குள்ளான கப்பலையும் கட்டி இழுத்துக் கொண்டு அமெரிக்க கடற்படை இந்து சமுத்திரத்தை விட்டு விலகிக் கொண்டிருந்தது.

அவ்வேளையில்....

071106_recruitwaivers_800.JPG

கிர் கிர்.. என்று போன் சத்தம் வந்ததும்.. பென்ரகன் அதிகாரி அந்த போனின் ரிசீவரைத் தூக்கிப் பேசினார்..

கலோ.. ஜோன்சன் கியர்... இன் பென்ரகன்..

கலோ.. ஐ ஆம் ஐயர்.. இண்டியன்.. இன்ரலிஜன் பெரு..சீவ் பேசுறேன்..

சொல்லுங்க ஐயர்.. என்ன விசயம்...

அந்த இந்து சமுத்திர படகு பற்றி கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறன்..

ஆமாம் ஐயர்.. இப்ப கொஞ்சம் முதல் கூட அது பற்றி அதிகாரிகளோட பேசிக்கிட்டுத்தான் இருந்தேன்.

அது விசயமா.. ஏதேனும் புதிய தகவல் கிடைச்சிச்சா... ஜோன்சன்

படகு பற்றி நேரடித் தகவல் கிடைக்கல்ல ஐயர்.. ஆனா..

என்ன ஆனா... அதைக் கண்டு பிடிச்சீங்களா இல்லையா.. அல்லது அதை நீங்களும் தப்ப விட்டிட்டிங்களா... என்ன என்றாலும் சொல்லுங்க ஜோன்சன். நாங்க உங்களைத் தான் பெரிசா நம்பி இருந்தம்..

ஐயர்.. லிசின்.. நீங்க தப்ப விட்டிட்டு தான் எங்களுக்கு அறிவிச்சிங்க.. நீங்க அறிவிக்கிறப்போ.. எங்களால அந்தப் படகின்ர லொக்கேசனையே இனங்காண முடியல்ல.....

நோ... ஜோன்சன்.. நாங்க எங்கட இஸ்ரோ வின் உதவியோட லொக்கேசன் பற்றி குறிப்புக்கள் தந்திருந்தம் தானே...

r377055_1754027.jpg

தந்திருந்தீங்க ஐயர்.. பட்.. அது ஒரு பருமாட்டான.. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ள தான் இருந்திச்சு. அது மாத்திரமில்லாம.. Z தப்பிப் போன படகு stealth படகு.. எங்க ரடார் சிஸ்ரத்தில அதை உடனடியா கண்காணிப்புக்குள்ள எடுக்க முடியல்ல... நாங்க நாசா வின் உதவியையும் கேட்டுப் பார்த்தம்.. ஆனா நாசாவின் Polar Spy Satellites வடகொரியாவின் மிசைல்ஸ் லோஞ்சிங்கில கவனம் செலுத்திக் கொண்டிருந்திச்சு. அதோட சீனாவும்.. விண்வெளிக்கு ஒரு உளவு செய்மதி அனுப்புற நேரமா அது இருந்திச்சு. அதனால நாசா அதுகளில தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தாச்சு.. ஐயர்.. ஐ அம் வெரி சாரி ஐயர்.

நோ ஜோன்சன்.. நோ..! நீங்க இப்ப எங்கள சிக்கலில மாட்டி விட்டிருக்கீங்க.. உங்கள நம்பி நாங்க அந்தப் படகைத் தொடர்ந்து தேடாம விட்டிருந்தம்.. அது மட்டுமில்லாம... சிலோனில வன்னில இருந்த பிரபாகரனை வேர்ச் பண்ணிக்கிட்டு வேற இருந்தம். இஸ்ரோவும் அதில தான் அதிகம் தன் வளத்தை ஈடுபடுத்திச்சு.

polanim.gif

ஐயர்.. என்னால உங்க நிலைமையை புரிஞ்சுக்க முடியுது. பட்.. நான் நினைக்கிறன்.. நீங்க அந்தப் படகு விசயத்தை ரெம்ப பெரிசு படுத்துறீங்கன்னு...

ஏன் ஜோன்சன் அப்படிச் சொல்லுறீங்க..

ஐயர்.. அந்தப் படகை நாங்க இப்ப கிட்டத்தட்ட ஒரு வாரமா தேடிக்கிட்டு இருக்கம். ஆனா அந்தப் படகில இருந்த எரிபொருள் எப்பவோ தீர்ந்திருக்கும். அதனால அது ஒன்றில் ஆழ்கடலில அலைகளுக்க மாட்டி அழிஞ்சிருக்கும்.. அல்லது வெடிச்சு சிதறி இருக்கலாம்.

யு ஆர் கரக்ட் ஜோன்சன். பட்.. உங்களுக்குத் தான் அப்படி எந்த தடயமும் கிடைக்கல்லையே. அப்படி இருக்கிறப்போ எப்படி அதை உறுதிப்படுத்திறது ஜோன்சன்.

நோ ஐயர். எங்கட வோர் சிப் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கு. அது நீங்க தந்த லொக்கேசனுக்க தான் நடந்திருக்கு. ஒருவேளை Z தான் எனி தப்பிக்க முடியாது என்ற நிலைல தன்ர படகை வெடிக்க வைச்சிருக்கலாம். அது அவன்ர இறுதி முடிவா அமைச்சிருக்கும்.

சோ.. சாட் ஜோன்சன். எனக்கு உங்க கப்பல் தாக்கப்பட்ட விடயம் தெரியாது. ஐ அம் சொறி.

ஐயர் நாங்க அதை வெளில விடல்ல. உங்க கூட மட்டும் தான் பகிர்ந்து கொண்டிருக்கிறன். நீங்களும் வெளில விடாமல் பார்த்துக் கொள்ளுங்க. இப்ப நாங்க அதைப் பற்றி தீவிரமா ஆராய்ஞ்சுகிட்டு இருக்கிறம். அந்த ரிப்போட் வந்த உடன Z இன் படகு பற்றி இறுதி முடிவுக்கு வந்திடலாம்.

தங்கியு ஜோன்சன். நாங்களுக்கும் அந்த படகுக்கு... Z படகு என்று தான் குறியீடு வழங்கி இருக்கம். நீங்களும் அதையே தான் தொடர்ந்து கிட்டு வாரீங்க போல.

யு வெல்கம் ஐயர். குழப்பங்களை தவிர்க்க நாங்க உங்க கோட் வேட்டையே கொடுத்திருக்கம். அப்புறம்.. எங்க இன்வெஸ்ரிகேசன் முடிஞ்ச உடன நானே உங்களோட தொடர்பு கொள்ளுறன் ஐயர். டோண்ட் வொறி.

மீண்டும் நன்றி ஜோன்சன். பிறகு சந்திப்பம். பெஸ்ட் ஒவ் லக்.

தாங்கியு ஐயர். சி யு சூன்.. என்று சொல்லி ஐயருடனான தொடர்பை துண்டிந்த ஜோன்சன்..

தனது மேசையில் இருந்த போனில் அவசர அழைப்புக்குரிய இலக்கத்துக்கான பொத்தான்களை அழுத்தி.. வளைகுடாவில் நிலை கொண்டிருந்த தனது கடற்படை அதிகாரியோடு தொடர்பை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தார் தனது மூளைக்கு ஓய்வு வழங்காமலே.

உண்மையில் ஜோன்சனின் அவசரம்.. எதில் Z இன் படகு பற்றி அறிதலிலா..அல்லது வளைகுடாவில் புதிதாக எழுந்துள்ள நிலையை கையாள்வதிலா.. அது மட்டுமன்றி ஜோன்சன் சொன்னது போல.. Z இன் படகு வெடித்துத் தான் அமெரிக்க கப்பல் சேதமானதா.. அல்லது அது தப்பிச் சென்றிருக்குமா.. இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிய.. அடுத்தடுத்த வாரங்களில்.. Z- WAR தொடரோடு இணைந்திருங்கள்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 3

------

அவ்வேளையில்....

071106_recruitwaivers_800.JPG

கிர் கிர்.. என்று போன் சத்தம் வந்ததும்.. பென்ரகன் அதிகாரி அந்த போனின் ரிசீவரைத் தூக்கிப் பேசினார்..

கலோ.. ........

அண்ணே..... அதிகாரி ஆண்பாலா, பெண்பாலா......

.

அண்ணே..... அதிகாரி ஆண்பாலா, பெண்பாலா......

.

தமிழ் சிறி இந்த கேள்வியை கேட்கலாமா? நீங்கள் தெலுங்கு சிறி எனில் இந்த கேள்வியை கேட்பதில் நியாயம் இருக்கிறது.

அதிகாரி என்பது பொது பால். ஆண்பால் பெண்பால் இரண்டுக்கும் உபயோகிக்கக்கூடிய பொதுப்பால். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரியில் கடைசி "ரி" யில் ஒற்றைப் பின்னல் இருப்பதால் அது பெண்பால்தான். :)

பாகம் - 3

...

கலோ.. ஜோன்சன் கியர்... இன் பென்ரகன்..

கலோ.. ஐ ஆம் ஐயர்.. இண்டியன்.. இன்ரலிஜன் பெரு..சீவ் பேசுறேன்..

சொல்லுங்க ஐயர்.. என்ன விசயம்...

....

ஐயர்???? :D:) ஐயர் ஏன் உதுக்குள்ள வந்தவர் :D ஒரு வேளை லைன் cross ஆச்சுதோ :) என்று ஒரு வினாடி யோசிச்சன்... தொடர்ந்து வசிக்கும் பொது தான் விளங்கிச்சுது அது கோயில் ஐயர் இல்லை என்று... :D:lol: மற்றப் படி கதை நன்றாக உள்ளது நெடுக்ஸ், படிப்பிற்கு மத்தியிலும் தொடர்ந்தமைக்கு நன்றி! :)

எனது சார்பாக plus.gif

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயர்???? ஐயர் ஏன் உதுக்குள்ள வந்தவர் :) ஒரு வேலை லைன் cross ஆச்சுதோ :) என்று ஒரு வினாடி யோசிச்சன்... தொடர்ந்து வசிக்கும் பொது தான் விளங்கிச்சுது அது கோயில் ஐயர் இல்லை என்று... :D :D மற்றப் படி கதை நன்றாக உள்ளது நெடுக்ஸ், படிப்பிற்கு மத்தியிலும் தொடர்ந்தமைக்கு நன்றி! :lol:

இந்திய கொள்கை வகுப்போரில்.. பெரும்பாலான பிராமிணர்கள் எப்போதுமே தமிழீழ விடுதலையை எதிர்த்து வந்துள்ளனர். அதன் ஒரு குறியீடாகவும்.. இந்திய ஆளும் மையத்திலும் சரி... பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையிலும் சரி அவர்களின் செல்வாக்கும் அதிகம்.. அந்த வகையில் ஐயர் என்ற குறியீட்டை வழங்கினேன்.

நன்றி குட்டி. நீங்கள் ஒருவர் மட்டுமே எழுதியதை வாசிச்சு கருத்துச் சொல்லி இருந்தீங்க. குறையோ நிறையோ சொன்னால் தான் திருத்தலாம்.. மேம்படுத்தலாம். இன்றேல் எழுதும் எமது பார்வைக்கு எல்லாம் (எழுத்துப் பிழைகள் உட்பட ) சூப்பராகவே தெரியும்..! :D :D

இதை எழுதி படங்களோடு இணைக்க எனக்கு.... 45 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. நித்திரையில் 45 நிமிடத்தை பிடித்துக் கொண்டேன். கணக்கு தீர்ந்துவிட்டது. நேரம் பிரச்சனை அல்ல. கணணியில் நேரடியாகவே எழுதுவேன்.. அதனால்.. கண்ணுக்கு stress.. அதை ஓய்வுக்கு கொண்டு வர 2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டி வரும். அதுதான் பிரச்சனையே. :D:)

Edited by nedukkalapoovan

இந்திய கொள்கை வகுப்போரில்.. பெரும்பாலான பிராமிணர்கள் எப்போதுமே தமிழீழ விடுதலையை எதிர்த்து வந்துள்ளனர். அதன் ஒரு குறியீடாகவும்.. இந்திய ஆளும் மையத்திலும் சரி... பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையிலும் சரி அவர்களின் செல்வாக்கும் அதிகம்.. அந்த வகையில் ஐயர் என்ற குறியீட்டை வழங்கினேன்.

நன்றி குட்டி. நீங்கள் ஒருவர் மட்டுமே எழுதியதை வாசிச்சு கருத்துச் சொல்லி இருந்தீங்க. குறையோ நிறையோ சொன்னால் தான் திருத்தலாம்.. மேம்படுத்தலாம். இன்றேல் எழுதும் எமது பார்வைக்கு எல்லாம் (எழுத்துப் பிழைகள் உட்பட ) சூப்பராகவே தெரியும்..! :):D

இதை எழுதி படங்களோடு இணைக்க எனக்கு.... 45 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. நித்திரையில் 45 நிமிடத்தை பிடித்துக் கொண்டேன். கணக்கு தீர்ந்துவிட்டது. நேரம் பிரச்சனை அல்ல. கணணியில் நேரடியாகவே எழுதுவேன்.. அதனால்.. கண்ணுக்கு stress.. அதை ஓய்வுக்கு கொண்டு வர 2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டி வரும். அதுதான் பிரச்சனையே. :lol::D

பிராமணர்களுக்குத் தான் அங்கே செல்வாக்கு அதிகம் என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை தான் நெடுக்ஸ், கதையை தொடர்ந்தது வாசிக்கும் போது உங்கள் கருத்து விளங்குகிறது... நேரம் இருக்கும் போது மிகுதியைத் தொடரவும்- நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

நாசாவின் Polar Spy Satellites வடகொரியாவின் மிசைல்ஸ் லோஞ்சிங்கில கவனம் செலுத்திக் கொண்டிருந்திச்சு. அதோட சீனாவும்.. விண்வெளிக்கு ஒரு உளவு செய்மதி அனுப்புற நேரமா அது இருந்திச்சு. அதனால நாசா அதுகளில தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தாச்சு

சிலோனில வன்னில இருந்த பிரபாகரனை வேர்ச் பண்ணிக்கிட்டு வேற இருந்தம். இஸ்ரோவும் அதில தான் அதிகம் தன் வளத்தை ஈடுபடுத்திச்சு.

எல்லாவற்றையும் நுணுக்கமாக அவதானித்தவர்கள் Z இன் தப்பும் படகை மட்டும் கவனிக்கவில்லை என்றால் அதனால் அவர்களுக்கு எதோ ஒரு நன்மை இருந்திருக்கின்றது.

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நுணுக்கமாக அவதானித்தவர்கள் Z இன் தப்பும் படகை மட்டும் கவனிக்கவில்லை என்றால் அதனால் அவர்களுக்கு எதோ ஒரு நன்மை இருந்திருக்கின்றது.

வாத்தியார்

**********

வாசகர்கள் உங்கள் அனுமானமே இந்தக் கதைக்கான உயிரூட்டம். நன்றி வாத்தியார். கதையோட சங்கமிக்கிறீங்கன்னு புரியுது. :D:)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.