Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாழ்க்கைத்துணை அமைய பின்வரும் வரிசையில் நீங்கள் பாடங்களைக் கற்கவேண்டும். :(

1) இரசாயனவியல் (Chemistry) :wub:

2) பௌதிகவியல் (Physics) :(

3) உயிரியல் (Biology) :(

4) கணக்கியல் (Mathematics) :D

தலைகீழாய்ப் படித்தால் உருப்பட்ட மாதிரிதான். உங்கட கேள்வியும் அப்பிடித்தான் இருக்கு..! :lol:

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாழ்க்கைத்துணை அமைய பின்வரும் வரிசையில் நீங்கள் பாடங்களைக் கற்கவேண்டும். :(

1) இரசாயனவியல் (Chemistry) :wub:

2) பௌதிகவியல் (Physics) :(

3) உயிரியல் (Biology) :(

4) கணக்கியல் (Mathematics) :D

தலைகீழாய்ப் படித்தால் உருப்பட்ட மாதிரிதான். உங்கட கேள்வியும் அப்பிடித்தான் இருக்கு..! :lol:

நான் இதையெல்லாம் நீங்கள் சொன்ன வரிசைக் கிரமத்தில் பள்ளியில் இருந்து பல்கலை வரை சென்று.. படிச்சு ஒரு தடவையும் பெயிலாகாமல் பாசாகிட்டன். ஆனால்.. அன்பு விடயத்தில் என்னால பரீட்சை எழுதக் கூட தகமை பெற முடியவில்லை..!

Bio-chemistry படிச்சா பாஸ் (pass) ஆகலாம். ஆனால் body chemistry அமையல்லைன்னா வாழ்க்கையே பாழாகிடும். :D :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாழ்க்கைத்துணை அமைய பின்வரும் வரிசையில் நீங்கள் பாடங்களைக் கற்கவேண்டும். :(

1) இரசாயனவியல் (Chemistry) :wub:

2) பௌதிகவியல் (Physics) :(

3) உயிரியல் (Biology) :(

4) கணக்கியல் (Mathematics) :D

தலைகீழாய்ப் படித்தால் உருப்பட்ட மாதிரிதான். உங்கட கேள்வியும் அப்பிடித்தான் இருக்கு..! :lol:

ஏன் இ.கலைஞன் நான் கேட்டதில என்ன பிழை...உண்மையாக நடக்கிறதை வைத்து தானே கேட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் நினைக்கிறேன் உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லை என...நீங்கள் அன்பு செலுத்தி அன்புக்கு அடிமையான பிறகு அப் பெண் விட்டு விட்டு ஓடி விட்டால் நீங்கள் செலுத்திய அன்பு வீணாக போய் விடும் என்ற நிலையிலேயே நீங்கள் இருக்குறீர்கள் என நான் நினைக்கிறேன் :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் நினைக்கிறேன் உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லை என...நீங்கள் அன்பு செலுத்தி அன்புக்கு அடிமையான பிறகு அப் பெண் விட்டு விட்டு ஓடி விட்டால் நீங்கள் செலுத்திய அன்பு வீணாக போய் விடும் என்ற நிலையிலேயே நீங்கள் இருக்குறீர்கள் என நான் நினைக்கிறேன் :(

அக்கா இப்ப ஊர் உலகத்தில இதுதானே அநேகமா நடந்துகிட்டு இருக்குது.

எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.. ஆனா நான் நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அடுத்தவங்கள நான் காணேல்ல..! :( :(

மனித மனம் ஒரு குரங்கு

திருமணத்துக்கு முன் அழகைத் தேடும்

திருமணத்தின் பின் அன்பைத் தேடும்

அதன்பின் பணத்தை தேடும்

மறுபடி மீண்டும் அன்பையே தேடும்

அன்பே இன்ப ஊற்று

அன்பான கணவன் மனைவியை தேடுங்கள் மணம் செய்யுங்கள்

வாழ்க்கை இனிக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இப்ப ஊர் உலகத்தில இதுதானே அநேகமா நடந்துகிட்டு இருக்குது.

எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.. ஆனா நான் நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அடுத்தவங்கள நான் காணேல்ல..! :( :(

தம்பி இப்பவாவது உண்மையை ஒத்துக் கொண்டீர்களே பிழை உங்கள மேல் என...இனி மேல் எழுதாதீர்கள் அன்பு கிடைக்கவில்லை என...நீங்கள் கொடுத்தால் தான் அது உங்களூக்கு திருப்பிக் கிடைக்கும் :(

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இப்பவாவது உண்மையை ஒத்துக் கொண்டீர்களே பிழை உங்கள மேல் என...இனி மேல் எழுதாதீர்கள் அன்பு கிடைக்கவில்லை என...நீங்கள் கொடுத்தால் தான் அது உங்களூக்கு திருப்பிக் கிடைக்கும் :(

அக்கா.. என்னில எந்தப் பிழையும் இல்லை என்று சொல்ல நான் என்ன மகானா..??! ஆனால் நான் அன்பு காட்டக் கூடிய அளவுக்கு பக்குவமான மனிதர்களைக் காணவில்லை என்பது எனது தவறும் அல்ல..! :(

Edited by nedukkalapoovan

இயக்கத்தில் இருக்கும் போது நான் வெளிவேலைகள்தான் செய்துகொண்டிருந்தேன்.சென்னையில் இருந்த சில மாதங்களில் என்னுடன் தங்கியிருந்த ஒருவர் திரும்ப முகாமுக்கு போக வேண்டிய நாள், உங்களோட கொஞ்சம் தனிய கதைக்க வேண்டும் மொட்டி மாடிக்கு வரமுடியுமா எனக் கேட்டார்..என்னவெண்ரு மொட்டை மாடியில் வைத்து கேட்டேன் தனது அக்காவை மணம் முடிக்க முடியுமா எனக் கேட்டார்.அவர் தாயாரும் அக்காவும் சென்னையில் இருப்பது எங்களுக்கு தெரியும்.அவர்களை சந்திக்க்த்தான் இடைகிடை அனுமதி பெற்றுக் கொண்டு சென்னை வருபவர்.

நான் கேட்டேன் எமது நிலையே கேள்விக்குறியாக இருக்கும் போது நான் எப்படி கலியாணம் கட்டுவது என்று.அவாவுக்கும் இயக்கத்தில் சேர விருப்பம் அலுவலகத்தில் ஒரு வேலை போட்டுக் கொடுங்கோ எனச் சொன்னார்.நான் அங்கு இருந்த இன்னொரு நபரை அவருக்கு சிபாரிசு செய்தேன்.அவரும் லண்டனில் இருந்துதான் வந்தவர்.எஞினியர்.நல்ல ஸ்டைலாக வேறு வெளிக்கிட்டு திரிபவர்.நான் உங்களைத்தான் கேட்டனான் முடியுமோ முடியாதோ எனச் யோசிச்சு சொல்லுங்கோ என்று விட்டு முகாமிற்கு போய்விட்டார்.ஒரு மாதம் கழித்து முகாமில் இருந்து கடிதம் வந்தது அடுத்த மாதம் சென்னை வருவதாகவும் முடிவைச் சொன்னால் தான் அக்காவிடம் இது பற்றி கதைகலாம் என்று.

நான் ஒரு மிக நீண்ட கடிதம் ஒன்று அவருக்கு எழுதினேன்.அப்படி நான் கலியாணம் கட்டுவதானால் எனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என என் மனதில் இருப்பதை.(பாலகுமாரன் கதைகள் வாசித்ததின் தாக்கம் அக்க் கடிதத்தில் நிறைய இருந்தது என நினைகின்றேன்) எழுதினேன்.இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்றும் எழுதினேன்.

பின்னர் ஒரு முறை அவர் சென்னை வரும் போது தனது அம்மாவும் அக்காவும் இன்று இலங்கை திரும்புவதாகவும் தான் அவர்களை அனுப்ப சென்ரல் ஸ்ரேசனுக்கு போவதாகவும் என்னையும் வர முடியுமா எனக் கேட்டார்

சரி என்று நானும் மாலை ஸ்டேசனுக்கு போனேன்.ஒரு பாலகுமாரரனின் கதைப் புத்தகமும் கையில் கொண்டுபோனதாக ஞாபகம்.பெரிதாக ஒன்றும் கதைக்கவில்லை.தாயாருக்கு மாத்திரம் கவனமாகப் போங்கோ என்று நல்ல பிள்ளையாட்டம் சொல்லி வைத்தேன்.ரெயின் வெளிக்கிடும்போது அந்த கதைபுத்தகத்தை அவாவிடம் கொடுத்து விட்டேன்.பின்னர் இயக்கம் எல்லாம் விட்டு லண்டன் வந்து பட்ட கடன் அடைக்க தும்படித்துக்கொண்டிருந்த போது அவனின் கடிதம். தானும் இயக்கம் விட்டு இலங்கை போய் சேர்ந்து யாழ் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவும் விரும்பினால் அக்காவை இனி கட்டலாம் தானே என்று.

மனதில் சென்னை ரெயின் காட்சி ஓடியது. ஓமென எழுதிவிட்டேன்.புத்தகம் போலெழுதிய கொண்டிசனெல்லாம் எங்கே போனது என தெரியவில்லை. இயக்கத்தை விட்டு வந்து அவ்வளவு குழப்பத்தில் நானிருந்தேன்.பின்ன்ர் அவாவை லண்டன் கூப்பிட்டு ஆச்வே கோவிலில் திருமணமும் நடந்தது.

எதிர்பார்ப்புகள் எல்லாம் திருப்தி.பிடிவாதம் என்று ஒன்று அது என்னிடம் அறவே இல்லாதது அவாவிடம் 100% .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :(

உண்மை தான் நெடுக்ஸ். நானும் உங்களை மாதிரியே இருக்கிறதெண்டு முடிவெடுத்துள்ளேன். :(

உண்மை தான் நெடுக்ஸ். நானும் உங்களை மாதிரியே இருக்கிறதெண்டு முடிவெடுத்துள்ளேன். :(

:( :(

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவங்கள் சிலவேளை தங்களுக்கு உதவக்கூடும்

சிறு வயதிலிருந்தே

நடக்கக்கூடியவையையே நினைப்பது எனது பழக்கம்

போட்டியான எந்த பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்

போட்டியில் அது எனக்கு கிடைப்பது கூட எனக்கு ஒவ்வாதது

ஏனெனில் அதுவும்யார் யாரிடமிருந்து எல்லாம்தப்பி வந்திருக்கிறது

இனியும் இது போன்ற போட்டி வரும்

அதிலிருந்தும் நான் ஜெயிக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும்

உண்மையில் இதை நாம்உணரவேண்டும்

அத்துடன் எமது பெருமைகளையும் திறமைகளையும்அறிந்திருப்பதற்கு அப்பால்

எமது இயலாமைகளையும் குறைகளையும் நாம் அறிந்திருக்கவேண்டும்

சிலர் என்னிடம் சொல்வார்கள்

சுண்டினால் சிவக்கும் பெண் வேண்டும் என்று

நான் அவர்களுக்கு சொல்வேன்

உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இதைச்சொல் என்று.

உனக்கிருக்கும் ஆசைகளைப்போல்தான் எமக்கு வருபவருக்கும்இருக்கும் என்பதை மறப்பவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழமுடியாது. அவர்கள் அந்தக்காலத்தில் போல

தமக்கு வருபவர்களை வீட்டில் பூட்டி வைக்கும்மனப்பக்குவத்துடனேயே வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல்களில் மூழ்கி இரண்டும் கெட்டானாகி எல்லாவற்றையும் தொலைத்துவிடுகின்றனர்.

எனது பருவ வயதில் நான் சில விடயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

யாரைக்கட்டவேண்டும்

அதனால் எனக்கு ஏற்படும் சாதக பாதக பலன்களை துல்லியமாகவும் ஆற அமரவும் எடைபோடும் நேரமும் காலமும் என்னிடமிருந்தது

அதேநேரம்

எனது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணம் என்பது

எனது வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டாக இருக்கவேண்டுமே தவிர

இறங்குமுகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

அழகான பெண்களை நான் ரசித்தேன் அவர்களுடன் நட்பாக பழகினேன்

காதல் என்று அவர்கள் சொல்லுமுன் விலகிவிடுவேன்

அதனால் அவர்களில் பலர் இன்றும் எனக்கு மிகவும்கண்ணியமாக பழகும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பாடசாலையில் முதலாவதாக இருந்ததனாலும்

இருக்கும் இடத்தை சந்தோசமாக வைத்திருந்ததனாலும்

கொழும்பில் படித்துக்கொண்டு விடுமுறைக்கு ஊருக்கு வருவதனாலும் எல்லோருக்கும் என்னைப்பிடித்திருந்தது

ஆனால் இது சிறு வயதில்வரும் ஒரு ஈர்ப்பு

இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

இவ்வளவையும் தாண்டி

தூர இருந்து என்னை விரும்பிய பெண்ணை நான் கட்டிக்கொண்டுள்ளேன்

அதனால் தான் ராஜா போல் இருக்கின்றேன் வீட்டில்.

ஏனெனில் எனது அபிலாசைகளே முக்கியம் அவளுக்கு.

அதுவும்அவளைப்பார்த்தல்ல

அவளது அம்மாவின் வளர்ப்பை பார்த்து.

இன்று எனது மாமியாரும் இங்குதான் இருக்கின்றா

அவாவுக்கு நேரவே நான் சொல்வேன்

தாயைப்பார்த்துத்தான் நான் பெண் எடுத்தேன் என.

அதுதானே உண்மை.

அவாவும் சொல்வார்

தன்னையும் எனது மாமனார்(முன்னைநாள்அதிபர்) வேலியால் எட்டிப்பார்த்து

தான்(பருத்தித்துறையில்);வீட்டில் மாவிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தபின்தான் கட்ட சம்மதித்தாராம் என்று.

எனவே நீங்கள் எப்படி இருக்கின்றீர்களே

அதற்கு ஏற்ப ஆளைத்தேடுங்கள்

அதையே மற்றவரும்தேடினால் இருவருக்கும் பொருத்தம் ஏற்படும்

இதில் இருவரில் எவரது தராதரத்துக்கான தேடல் பிழைக்குமாயின்...

இருவரது வாழ்க்கையும் அழிவைச்சந்திக்கும்.

உங்கட லாஜிக் ரொம்ப நீளமா இருக்கு... அனலிசிஸ் பண்ணி கட்ட எவ்வளவு காலம் எடுக்கும்? :(

கலைஞன் நீங்கள் விரும்பினவர் கிடைக்காவிட்டால் அப் பெண்ணுக்கு உங்களோடு வாழ கொடுப்பினை இல்லை என நினைத்து விட்டு உங்களை விரும்பின பெண்ணாய் பார்த்து மணம் முடியுங்கள்...இப்போது உங்களால் தனிய வாழ இயலும் காலம் போகப்,போக தனிய வாழ்வது கஸ்டம் என நினைக்கிறேன்...இது என் கருத்து.

தனிய வழுறதில அப்பிடி என்ன கஷ்டம் ரதி அக்கா? :(

  • கருத்துக்கள உறவுகள்

:( :(

நாங்கள் அப்பிடி இருக்கிறதில உங்களுக்கு என்ன சந்தோசமோ..... :(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நெடுக்ஸ். நானும் உங்களை மாதிரியே இருக்கிறதெண்டு முடிவெடுத்துள்ளேன். :(

கலியாணம் கட்டினவையை.. பெட்டையளுக்கு பின்னால சுத்தினவையை.. இன்னும் இன்னும் இஸ்தியாதிகள்.. எல்லாம் எங்க அமைப்பில சேர முடியாது. பிறப்பில இருந்து நல்ல பிள்ளைகளாக ஒழுக்கத்தோட தனியா இருக்கனும். அப்படின்னா தான் எங்கட அமைப்பில சேப்பமாக்கும்..! :(:lol:

நாங்கள் அப்பிடி இருக்கிறதில உங்களுக்கு என்ன சந்தோசமோ..... :(

ஆகா ஒரு தொல்லை விட்டுத் தொலைஞ்சுது என்று நிம்மதியா இருப்பாங்கில்ல..! :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இ.கலைஞன் நான் கேட்டதில என்ன பிழை...உண்மையாக நடக்கிறதை வைத்து தானே கேட்டேன்.

கணக்குப் போட்டு கல்யாணம் கட்டினால் சரிவராது எண்டு சொல்லவந்தன்..! நீங்கள் கணவனோ மனைவியோ எப்பிடி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்ததா என்று கேட்டிருந்தீர்கள். எதிர்பார்ப்பு எண்டாலே கணக்குப் போடுதல்தானே..! :(

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டினவையை.. பெட்டையளுக்கு பின்னால சுத்தினவையை.. இன்னும் இன்னும் இஸ்தியாதிகள்.. எல்லாம் எங்க அமைப்பில சேர முடியாது. பிறப்பில இருந்து நல்ல பிள்ளைகளாக ஒழுக்கத்தோட தனியா இருக்கனும். அப்படின்னா தான் எங்கட அமைப்பில சேப்பமாக்கும்..! :( :(

ஆமோதிக்கிறேன் நெடுக்ஸ். இ. க. க்கு இப்ப புரிஞ்சு இருக்கும் எண்டு நினைக்கிறேன். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ட கடவுளே ஏதோ மகிழ்ச்சியா சிரிச்சிட்டுப்போவமெண்டு இந்த பக்கம் வந்தா இந்த கிழடுகள்ள அறுவை தாங்க முடியல்ல.

நானெண்டா 1000 பெட்டைகளுக்கு கடலை போட்டு அதில ஒரு 100 ஐ காதலிச்சு 10ஐ கலியாணம் கட்டி கடைசி மட்டும் எது ஓடாம இருக்குதோ அதோட வாழுவன். :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நெடுக்ஸ். நானும் உங்களை மாதிரியே இருக்கிறதெண்டு முடிவெடுத்துள்ளேன். :(

சபேஸை பாக்க அப்பிடி தெரியவில்லையே..... :(

பழம் திண்டு.... கொட்டை போட்ட ஆள் போலை இருக்குது. :wub:

நெடுக்ஸ்சின் கூடாரத்துக்குள்.... புலனாய்வுக்கு ஆள் வந்திருக்குது. :(

.

நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் மன வலிமை பெற்றுள்ளீர்களா? அப்படியான மன நிலையை உடையவர்களானால், உங்கள் எதிர் பார்ப்புக்களை மனதில் கோட்டையாகக் கட்டிக் கொண்டு போங்கள்... :(

ஒன்று இருப்பதை வைத்து சந்தோஷப் பட பழகிக் கொள்ளவேண்டும்... கையில இருக்கிற வடையை நசிச்சு எறிஞ்சு போட்டு, 'வடை போச்சே' என்று வடிவேலு மாதிரி பீல் பண்ணுறதில் அர்த்தமில்லை.

இரண்டாவது தனித்து வாழும் மனநிலை இல்லாதவர்கள் அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

(இது சுலபமானது இல்லை, ஆனால் பழகிக் கொண்டால் பல ஏமாற்றங்களைத் தவிர்த்துக் கொள்ளமுடியும். அதே நேரம் அவர்கள் யாரையும் சார்ந்து இல்லாததாலும், தனித்து இருந்தது பல இன்னல்களை தனியே முகம் கொடுப்பதாலும், அவர்களுக்கு என்று ஒரு கர்வம் இருக்கத்தான் செய்யும்.)

உண்மை தான் நெடுக்ஸ். நானும் உங்களை மாதிரியே இருக்கிறதெண்டு முடிவெடுத்துள்ளேன். :(

உங்கள் வீட்டு தொல்லைபேசி இலக்கம் இன்னும் என்னிடம் இருக்குங்கோ சபேசு..

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸை பாக்க அப்பிடி தெரியவில்லையே..... :(

பழம் திண்டு.... கொட்டை போட்ட ஆள் போலை இருக்குது. :lol:

நெடுக்ஸ்சின் கூடாரத்துக்குள்.... புலனாய்வுக்கு ஆள் வந்திருக்குது. :(

ஒன்றில் புலனாய்வு.. அல்லது வடிவேலின்.. இவர்.. அவனோ.. கேஸ் போல. அதுகளுக்கு எங்கட அமைப்பில நெத்தியில பொட்டும்.. காதுக்கால விண்ணும் கூவும். ஒரேயடியா கைலாயத்தை தான் காட்டுவம். போயிட்டு மறுபிறப்பில ஒழுங்கா பிறக்கச் சொல்லுவம்..! :(

எங்கள் அமைப்பு வாழ்க்கையில சோலி சுரட்டில்லாம நிம்மதியா வாழ விரும்பிறவங்களுக்கான புனிதர்களுக்கான அமைப்பு. அங்க குரங்குச் சேட்டைகளுக்கு இடமில்லை..! அதே குரங்குச் சேட்டையை செய்யுறதெண்டா பிறகேன் அமைப்பு..! :wub::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் புலனாய்வு.. அல்லது வடிவேலின்.. இவர்.. அவனோ.. கேஸ் போல. அதுகளுக்கு எங்கட அமைப்பில நெத்தியில பொட்டும்.. காதுக்கால விண்ணும் கூவும். ஒரேயடியா கைலாயத்தை தான் காட்டுவம். போயிட்டு மறுபிறப்பில ஒழுங்கா பிறக்கச் சொல்லுவம்..! :(

எங்கள் அமைப்பு வாழ்க்கையில சோலி சுரட்டில்லாம நிம்மதியா வாழ விரும்பிறவங்களுக்கான புனிதர்களுக்கான அமைப்பு. அங்க குரங்குச் சேட்டைகளுக்கு இடமில்லை..! அதே குரங்குச் சேட்டையை செய்யுறதெண்டா பிறகேன் அமைப்பு..! :(:wub:

கைய்லாயம் பாக்கிறது எண்டால் என்ன நெடுக்ஸ்? நீங்கள் பாத்தனீங்களோ.... :lol::(

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கைய்லாயம் பாக்கிறது எண்டால் என்ன நெடுக்ஸ்? நீங்கள் பாத்தனீங்களோ.... :(:( .

அது எங்க இருக்கென்று யாருக்கு தெரியும். யாரும் எங்க போறதென்று தெரிஞ்சு மரணிப்பதில்லைத் தானே. அது தான் கைலாயாம் என்றேன்..!! :(:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி எதிப்பார்ப்போட போனால் வாழ முடியாது என சொல்கிறீர்கள் ஆனால் நான் எதிர் பார்க்கா விட்டாலும் இந்த உலகம் எதிர் பார்க்குதே. :)

இளைஞர்கள்,யுவதிகளாய் இருக்கும் போது தனித்து வாழ்வது இலகுவாக இருக்கும் ஆனால் வயது போய் வயோதிபர்களாய் ஆன பிறகு தமக்கு ஒரு கணவனோ அல்லது மனைவியோ இல்லை என ஏங்குவதை விட தமக்கு பிள்ளை இல்லை என ஏங்குவது அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்...தற்போதைய தமிழ் பேப்பர்களை எடுத்துப் பார்த்தால் இளம் பிராயத்தினரையும் பார்க்க 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கு துணை தேடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.