Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு குழந்தையை எத்தனை வயதில் தத்தெடுக்கலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Adopt-a-baby-photography.jpg

திருமணம் ஆகாத ஒரு இளம் ஆண்.. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா..??! (சட்டப் பிரச்சனை தவிர்ந்த சமூகப் பிரச்சனை பற்றி கேட்கிறேன்.)

ஆண் குழந்தையையா பெண் குழந்தையையா தத்தெடுப்பது நல்லது..?!

எத்தனை வயதில் தத்தெடுப்பது நல்லது. வளர்க்க.. வளர்ப்பவரை புரிந்து கொள்ள.. ??!

குறித்த குழந்தையை தத்துக் கொடுப்பவர் (அதன் உண்மைத் தாய் தந்தை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்) பற்றி அறிந்திருப்பது அவசியமா..??! அல்லது வளர்ந்து தெரிந்து கொள்வது நன்றா..??! அல்லது தெரியாமல் வளர்வதே நன்றா..??!

குழந்தைக்கு அறிவு வந்து சூழலை மதித்து அம்மா எங்கே என்று கேட்கும்..??! அந்த நிலை வராமல் அப்பா மட்டும் தான் என்று எப்படி ஊட்டி வளர்ப்பது.. குழந்தையின் உளத்தை எதிர்காலத்தை பாதிக்காத வகையில்..??!

ஒன்றுக்கு மேலாக இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க வேண்டின்.. ஒரே சமயத்தில் தத்தெடுப்பது நல்லதா.. அல்லது சிறிய கால இடைவெளியில் எடுப்பதா நன்று...??!

குழந்தை வளர்ந்து அது தானாக ஒரு முடிவெடுக்கக் கூடிய நிலையில் அதனை அதன் வழியில் கண்காணிப்பின் கீழ் விடலாம். அது பிரச்சனை அல்ல. அது வரைக்கும் எப்படி தத்தெடுத்து வளர்ப்பது என்று அனுபவம்.. மற்றும் பிற வழிகளில் அறிந்திருந்தால் சொல்லுங்கோ...!

எனக்கு அழகான பெண் குழந்தை ஒன்றையும் ஆண் குழந்தை ஒன்றையும் தத்தெடுப்பமோ என்ற ஒரு எண்ணம் இருக்கிறது..! அதுவும் வேறு வேறு இனங்களைச் சேர்ந்ததாக. இது நல்லதா.. இல்லது சிக்கலை தோற்றுவிக்குமா...??!

இதில் பகிரப்படும் விடயங்கள் எனக்கு மட்டுமல்ல.. பலருக்கும் உதவும் என்று நினைக்கிறேன்..! :rolleyes:

------------------

அண்மையில் இருந்து ஒரு புலிக்குட்டியை தத்தெடுத்து வளர்க்கிறேன். அதை நான் வளர்க்கல்ல.. யாரோ வளர்க்கினம்.. நான் செலவை கொடுக்கிறேன். அப்படி அல்லாமல்.. இது நாமே வளர்ப்பது.

புலிக்குட்டியை தத்தெடுக்க விரும்பிறவை இங்க போய் தத்தெடுங்கோ..! புலிகள் இந்த உலகில் இருந்து விரைந்து அழிந்து வரும் உயிரினங்களில் அடங்குகின்றன.

http://www.wwf.org.uk/adoption/tigerquick/index.cfm?gclid=CJLz56D6uaMCFUqX2AodYW0-dg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒருவர் ஒரு குழந்தையை தத்தெடுப்பதால்...

அவரின் வருமானங்கள், தகுதியானவரா போன்றவை பரிசீலக்கப் படும்.

அது, ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று நீங்கள் தீர்மானிக்கப் படாது. (உங்கள் வளர்ப்பில் தங்கியுள்ளது)

நீங்கள் தத்து எடுத்த குழந்தை, ஆகக் குறைந்தது 20 வயது மட்டும் தனது பெற்றோரை பற்றியோ, உறவினர்களைப் பற்றியோ தகவல் இருக்கப் படாது. இது மிக சிக்கலான விடயம். ஆனால் துணிந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.

இதனை வெகு அவதானமாக கையாளவேண்டும். இதில் தங்கியிருப்பது குழந்தையின் சந்தோசமும், உங்கள் சந்தோசமும் என்பதை மறக்கவே... கூடாது.நீங்க நினைக்கிற மாதிரி, நினச்சவுடன் கடையில் வாங்கும் பொருள் இல்லை.

........

அதுக்கேல்லாம் கையிலை ராசி ரேகை ஓட வேணும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் தத்தெடுக்கிறதா இருந்தால் என்னை தத்தெடுங்கோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு பதிவில் நிழலி சொல்லி இருந்தார் திருமணம் ஆகாதவர்கள் தத்து எடுக்க முடியாது என விசாரித்துப் பாருங்கள்...அப்படி தத்து எடுக்கிறது எங்கள் இனத்தை சேர்ந்த பிள்ளைகளை தத்து எடுக்கலாமே...தத்து எடுக்கும் முன் யோசித்து தத்தெடுங்கள் தத்தெடுத்த பின் திருமணம் முடித்தீர்கள் என்டால் உங்களை திருமணம் செய்யும் பெண்ணும் அப் பிள்ளைகளை கவனமாக பார்க்க கூடியவாராக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பெரிய பிரச்சனை இல்ல என்றுதான் நினைக்கிறான். பின்புதான் யோசிக்க வேண்டும். குழந்தையும் வளர அதன் மனமும் வித்தியாசமாக வளரும். அதை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.புலிக்குட்டிக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அதன் மனதை பற்றி யார் கவலைப் படப் போகினம்.

ஏற்கனவே தத்து எடுத்து இருக்கிறவர்களிடம் கொஞ்சம் விசாரிப்பது நல்லது. :lol:

எனக்குத் தெரிந்தவரை செல்வி. ஜெயா ஒரு இளைஞனை தத்து எடுத்து சில மாதத்திலேயே திருமணமும் செய்து வைத்தவ. :rolleyes:

வரதட்சனை எதுவுமின்றி திருமணம் செய்வதுகூட கிட்டத்தட்ட தத்தெடுக்கிற மாதிரித்தான்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தத்தெடுக்கிறதா இருந்தால் என்னை தத்தெடுங்கோ :(

அய்யோ ஜீவா ஏன் உமக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை.....? உம்மை ஏற்கனவே தத்து எடுத்து இருப்பவர் நெடுக் அண்ணா மீது வளக்கு எல்லா போடுவார்...அப்புறம் இரட்டிப்பு செலவு ஆகிடும் நெடுக் அண்ணா கவனம்.... :lol::D

ரதி அக்கா ஏற்கனவே நான் நினைத்தது போலவே குறிப்பிட்டு இருக்கிறார்...நன்றி ரதி அக்காவுக்கு..நெடுக் அண்ணா எங்கள் கருத்தை எல்லாம் உள் வாங்கிக் கொள்கிறாரோ தெரியாது..இருந்தாலும் எழுத வேண்டும் போல் இருந்திச்சு எழுதிறன்.ஏன் எங்கள் நாட்டுப் பிள்ளைகளை விடுத்து வேறு நாட்டுப் பிள்ளைகளை விரும்பிறிங்களோ எனக்குப் புரியவில்லை.எங்கள் நாட்டில் எத்தனை ஆயிரம் பிள்ளைகள் அனாதைகள் ஆக்கப் பட்டுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயம்.

கடந்த கிழமை கூட ஒரு மாணவி தனிமையை தாங்கிக் கொள்ள முடியாததால் மரணத்தை தளுவி இருக்கிறார். இந்த செய்தியும் உங்கள் காதுகள் வரை வந்து இருக்கும் எண்டு நினைக்கிறன்.ஓரளவுக்கு இப்போ இந்தப் பிள்ளைகள் தங்களின் நிலையை புரிந்து கொண்டு இருப்பார்கள். ஆவே பெரிதாக அவர்களினால் பொறுப்பு எடுப்பவர்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது எண்ணம்.தங்களின் பெற்றோருக்கு ஈடாக ஒருவர் தங்களை காத்துக் கொள்ள வருகிறார் எண்டால் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள்.மிகுதி வளர்ப்பவர்களின் கையில் தான் தங்கி இருக்கிறது..உங்கள் முயற்சி வெற்றியாக முடிய வேண்டும் எண்டு வாழ்த்திச் செல்கிறேன்.எங்கள் பிள்ளைகளை பொறுப்பு எடுத்தால் எனக்கு ரொம்ப சந்தோசம் நெடுக் அண்ணா.நன்றி..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தத்தெடுக்கும் முயற்சி வெற்றியாக அமைந்தால்... ஒரு தமிழ் குழந்தையையும் மற்றும் வேற்றினக் குழந்தை ஒன்றையும் தத்தெடுப்பேன்..!

தத்தெடுக்கும் குழந்தைகள் மீது அன்பு காட்ட வேண்டியது தத்தெடுப்பவரின் பொறுப்பே தவிர அவரை சார்ந்தவர்களை அதற்காக வற்புறுத்த முடியாது. ஆனால் இயற்கையாகவே மனிதர்கள் குழந்தைகளிடத்தில் அன்பாக நடந்து கொள்வர்.. இது எதிர்பார்ப்பு..!

இத்தத்தெடுப்பு ஒரு ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. புலிக்குட்டியை தத்தெடுத்து போல் இது ஒன்றும் இலகு அல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளேன்.

உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி. மேலும் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம். இது விடயத்தில் மிகுந்த அவதானமும் நிதானமும் அர்ப்பணிப்பும் தேவை என்றே நானும் கருதுகிறேன். :(

ஒரு குழந்தையை தத்தெடுப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

நீங்கள் தத்தெடுப்பது என்ற ஒரு முழு மனதான முடிவோடு இருப்பீர்கள் ஆனால் அதற்குரிய தகுதிகள் கால நேரத்தின் அடிப்படையிலோ மனநிலையின் அடிப்படையிலோ நடை முறைக்கு சாத்தியப் படுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு குழந்தைக்கு தாயும், தந்தையும் செய்யும் அத்தனை கடமைகளையும் செய்யத் தயாரான மன நிலை உங்களிடம் இருக்கின்றதா? ('சொந்த ரத்தம்' இல்லைத் தானே என்ற ஒரு எண்ணம் வருமாக இருப்பின் நீங்கள் இந்த எண்ணத்தைக் கைவிடுவது உங்களுக்கும், தத்து எடுக்க இருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம்.)

இந்தக் கடமைகளை நீங்கள் செய்வதற்கு உங்கள் வேலை, படிப்பு, நீங்கள் கொண்டுள்ள சமூக வாழ்க்கை முறை நடுவில் உங்களால் நேரத்தை ஒதுக்கி அந்தக் குழந்தைக்கும் முன்னுரிமை கொடுத்து வாழ உங்கள் மனநிலை தயாரா உள்ளதா?

குழந்தையின் முழு வளர்ச்சியில் உங்களால் தேவையான கவனம் கொடுத்து அக்குழந்தையைப் பராமரிக்க இயலுமா?

குழந்தையில் அன்பு காட்ட உங்களைத்தவிர உங்கள் உறவினரோ, நண்பர்களோ முன்வருவார்களா என்று யோசித்துப் பாருங்கள். குழந்தைகளை நாலு சுவருக்குள் வைத்து வளர்ப்பது சுலபமானதில்லை, அது அவர்களுக்குரிய வாழ்க்கை முறையும் இல்லை.

இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் நீங்கள் அவசரத்திற்கு ஒரு நேரம் அவர்களின் உதவியை நாடிய பின்பு நீங்கள் சொல்லாமல் வைத்திருந்த குழந்தை பற்றிய ரகசியங்களை அவர்கள் குழந்தையின் மனநிலை அறியாமல் சொன்னால் அதன் பின்விளைவுகளை நீங்கள் தான் தனியாக முகம் கொடுக்கவேண்டி வரும். அதன் பிறகு அக்குழந்தையின் நிலையை யோசித்துப் பாருங்கள்...

நீங்கள் குழந்தை தத்தெடுத்த பின்பு அக்குழந்தையின் மனநிலையை நன்கு அறிந்தே அக்குழந்தையிடம் உண்மைகளை சொல்ல வேண்டும். இல்லையேல் குழந்தையின் மனநிலை பாதிக்கப் படும் அதே நேரம் உங்கள் மனநிலையும், நேரமும் எடுத்த முயற்சியும் பாத்திக்கப் பட்டு விடும்.

சரி உங்கள் வயது ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு ஏற்ற வயதா என அறிந்து கொள்ளுங்கள்.

http://www.adoption.org.uk/information/how_old_to_adopt.html

பிரித்தானியாவில் வாழும் ஒருவர் குழந்தையைத் தத்தெடுப்பதற்கு கண்டிப்பாக திருமணம் முடித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி உங்களுக்கு 'திருமணமாகாத தனியாள்' என்ற ஒரு காரணத்திற்காக மறுக்கப் படுமானால் discrimination என்ற அடிப்படையில் நீங்கள் சட்டப் படி நடவடிக்கைகள் எடுக்கலாம். இது அந்த நிர்வாகத்திற்கும் நன்கு தெரிந்திருக்கும்.

http://www.adoption.org.uk/information/could_I_adopt.html

தத்தெடுப்பதற்கு பணச் செலவுகள் பற்றிய விபரங்களை நீங்கள் இருக்கும் கவுன்சிலில் விசாரித்துப் பார்க்கவும்.

இலங்கையில் இருந்து தத்தெடுப்பதாயின் அங்கிருந்து பல சட்ட முறைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று நினைக்கிறன். ஆனால் அங்கிருக்கும் உங்கள் உறவினரின் குழந்தை என்று ஆதாரங்கள் காட்டும் பட்சத்தில் ஒரு வேளை சட்டம் இடமளிக்கலாம் என்று நினைக்கிறன்.

http://forums.adoption.com/immigration-naturalization/112849-need-help-adoption-sri-lanka.html

வேறு நாடுகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு சில விபரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது...

http://www.newcastle.gov.uk/core.nsf/a/adoptingintercountry

பிரித்தானியாவில் வதிவுரிமை பெற்று, வேலை செய்பவராக இருக்கும் ஒருவர், பெற்றோர் என்ற அந்தஸ்தை எடுக்காமல், பாதுகாவலர் என்ற அந்தஸ்தின் படி உறவினரின் குழந்தைகள் (பதினாறு வயதிற்கு உடப்பட்டவர்களுக்கு) இங்கே வந்து வாழ்வதற்கு வீட்டில் இடமும் இருப்பின் அவர்களுக்கு சுலபமாக அனுமதி வழங்கப் படும் என்று நினைக்கிறன். கடந்த வருடம் இதைப் பற்றி கவுன்சிலில் விசாரித்தேன். அனுமதி அளிக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரில் உள்ளவர்களிடம் இருந்து தான் நிரந்தரம் இல்லாத பதில்களாக இருப்பதால் தொடர்ந்து முழு மூச்சாக இதில் இறங்க முடியாமல் இருக்கிறது. காரணம் இரு சிறுவர்கள் (பத்து வயதுக்குட்ட்பட்டவர்கள்). அவர்களின் மன நிலையையும் நான் யோசித்தேன். பெற்றோரைப் பிரிந்து (இறக்கவில்லை) உறவினர்களுடன் வாழ்கிறார்கள். படங்களில் தொலைபேசியில் வெப்காமில் பார்த்து, கதைத்து இருக்கிறேன், நல்ல பிரியமானவர்கள். ஆனால் நேரில் இன்னும் காணவில்லை. உறவினர்கள் இணங்கி வரும் பட்சத்தில் சட்டப்படி அவர்களுக்கு பாதுகாவலராக ஆகும் முயற்சியைத் தொடர்வேன்!

உங்கள் நோக்கமும் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள் நெடுக்ஸ்!!

வரிப் புலிகுட்டியையா, சிறுத்தைப் புலிக்குட்டியையா தத்தெடுதீர்கள்? தத்தெடுத்து எவ்வளவு காலம்? தத்தேடுப்பவர்கள் போய்ப் பார்க்க அனுமதிப்பார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நோக்கமும் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள் நெடுக்ஸ்!!

வரிப் புலிகுட்டியையா, சிறுத்தைப் புலிக்குட்டியையா தத்தெடுதீர்கள்? தத்தெடுத்து எவ்வளவு காலம்? தத்தேடுப்பவர்கள் போய்ப் பார்க்க அனுமதிப்பார்களா?

விரிவான தகவலுக்கு நன்றி குட்டி. :(

தத்தெடுப்பது குறித்து யோசித்திருக்கிறேன். இறுதி முடிவு செய்யவில்லை. இன்னும் என்னைக் கொஞ்சம் பலப்படுத்திய பின் செய்யலாமோ என்றே யோசிக்கிறேன்.

புலிக்குட்டி தத்தெடுத்தது என்பது அதன் பராமரிப்புச் செலவை கவனிப்பது என்பதுதான். அவங்க எங்க புலிக்குட்டியை காட்டினாங்க. ஒரு பொம்மையை தான் காட்டினாங்க. நம்புவோமாக எமது பணத்தில் புலிக் குட்டி பராமரிக்கப்படுகிறது என்று. :lol:

விரிவான தகவலுக்கு நன்றி குட்டி. :lol:

தத்தெடுப்பது குறித்து யோசித்திருக்கிறேன். இறுதி முடிவு செய்யவில்லை. இன்னும் என்னைக் கொஞ்சம் பலப்படுத்திய பின் செய்யலாமோ என்றே யோசிக்கிறேன்.

புலிக்குட்டி தத்தெடுத்தது என்பது அதன் பராமரிப்புச் செலவை கவனிப்பது என்பதுதான். அவங்க எங்க புலிக்குட்டியை காட்டினாங்க. ஒரு பொம்மையை தான் காட்டினாங்க. நம்புவோமாக எமது பணத்தில் புலிக் குட்டி பராமரிக்கப்படுகிறது என்று. :D

:(

மிருகங்களை பராமரிப்பதற்கு பணச்செலவு அதிகம் தானே... அதனால் உங்கள் பணம் வீணாகப் போகாது... :(

----------------------------------------------------------------

http://www.youtube.com/watch?v=-BZ1Wa7ZbdQ&feature=related

Edited by குட்டி

ஒரு குழந்தையை தத்தெடுப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

நீங்கள் தத்தெடுப்பது என்ற ஒரு முழு மனதான முடிவோடு இருப்பீர்கள் ஆனால் அதற்குரிய தகுதிகள் கால நேரத்தின் அடிப்படையிலோ மனநிலையின் அடிப்படையிலோ நடை முறைக்கு சாத்தியப் படுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு குழந்தைக்கு தாயும், தந்தையும் செய்யும் அத்தனை கடமைகளையும் செய்யத் தயாரான மன நிலை உங்களிடம் இருக்கின்றதா? ('சொந்த ரத்தம்' இல்லைத் தானே என்ற ஒரு எண்ணம் வருமாக இருப்பின் நீங்கள் இந்த எண்ணத்தைக் கைவிடுவது உங்களுக்கும், தத்து எடுக்க இருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம்.)

இந்தக் கடமைகளை நீங்கள் செய்வதற்கு உங்கள் வேலை, படிப்பு, நீங்கள் கொண்டுள்ள சமூக வாழ்க்கை முறை நடுவில் உங்களால் நேரத்தை ஒதுக்கி அந்தக் குழந்தைக்கும் முன்னுரிமை கொடுத்து வாழ உங்கள் மனநிலை தயாரா உள்ளதா?

குழந்தையின் முழு வளர்ச்சியில் உங்களால் தேவையான கவனம் கொடுத்து அக்குழந்தையைப் பராமரிக்க இயலுமா?

குழந்தையில் அன்பு காட்ட உங்களைத்தவிர உங்கள் உறவினரோ, நண்பர்களோ முன்வருவார்களா என்று யோசித்துப் பாருங்கள். குழந்தைகளை நாலு சுவருக்குள் வைத்து வளர்ப்பது சுலபமானதில்லை, அது அவர்களுக்குரிய வாழ்க்கை முறையும் இல்லை.

இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் நீங்கள் அவசரத்திற்கு ஒரு நேரம் அவர்களின் உதவியை நாடிய பின்பு நீங்கள் சொல்லாமல் வைத்திருந்த குழந்தை பற்றிய ரகசியங்களை அவர்கள் குழந்தையின் மனநிலை அறியாமல் சொன்னால் அதன் பின்விளைவுகளை நீங்கள் தான் தனியாக முகம் கொடுக்கவேண்டி வரும். அதன் பிறகு அக்குழந்தையின் நிலையை யோசித்துப் பாருங்கள்...

நீங்கள் குழந்தை தத்தெடுத்த பின்பு அக்குழந்தையின் மனநிலையை நன்கு அறிந்தே அக்குழந்தையிடம் உண்மைகளை சொல்ல வேண்டும். இல்லையேல் குழந்தையின் மனநிலை பாதிக்கப் படும் அதே நேரம் உங்கள் மனநிலையும், நேரமும் எடுத்த முயற்சியும் பாத்திக்கப் பட்டு விடும்.

குட்டியின் கருத்துக்கள் அனுபவத்தில் வந்தவை. கருத்தில் எடுங்கள் .

குழந்தையை உங்களுடன் வைத்து வளர்க்கப் போகிறீர்களா? அல்லது மற்றவர்கள் வளர்க்கப் போகிறார்களா?

நீங்கள் வளர்ப்பதாயின் நிறைய நேரம் அக் குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளுக்கு தாய், தந்தையின் அரவணைப்பு தேவை.

அவர்களின் வளர்ச்சிக்கேற்ற மாதிரி நாங்களும் மாற வேண்டும்.

சிந்தித்து செயல்பட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தையள்ளை ஆசையெண்டால் பிள்ளையை பெத்தெடுக்க வேண்டியதுதானே? :(

நோமலாய் ஏலாவாளியள் தான் பிள்ளையை தத்தெடுக்கிறவை

இப்ப ஒரினசேர்க்கையாக்களும்(ஊரிலை கம்பி இல்லாட்டி சாப்பை எண்டு சொல்லுறவை) தத்தெடுக்கினம்

அதோடை தத்தெடுக்கிறதெல்லாம் இப்ப ஒரு ஸ்ரைல் அதாவது பந்தா

அதுதான் கலர்கலராய் சட்டை போடுறமாதிரி...

ஆபிரிக்காவிலை ஒண்டு

சப்பைமூஞ்சியிலை ஒண்டு

இரண்டும் கெட்டான் ஏசியன்கலரிலை ஒண்டு

அப்பிடியே எல்லாத்திலையும் ஒவ்வொண்டாய் தத்தெடுத்துப்போட்டு.....எங்கையும் பெரிய பங்ஷன் வரேக்கை அந்தமாதிரி கலர் காட்டுறதுதான் இப்ப ஸ்ரைல்.

குழந்தையள்ளை ஆசையெண்டால் பிள்ளையை பெத்தெடுக்க வேண்டியதுதானே? :lol:

கு. சா. அண்ணை நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்குது... நீங்கள் சொல்வது பலருக்கு சார்பாக இருந்தாலும், இதை நான் தன்மையாகக் கண்டிக்கிறேன். சிலர் தாம் பெத்த பிள்ளைகளை வளர்த்துக் கொண்டும், அநாதை இல்லங்களில் பிள்ளைகளைத் தத்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இப்படி ஒரு statement விடுறது நியாயமானதாகப் பட இல்லை . :(

காரணம் இன்னொரு பக்கம் பார்த்தல், அந்தக் குழந்தைகளுக்கு உணவு, அன்பு, கல்வி அறிவு என்று ஓரளவுக்கு சாதாரண வாழ்க்கையாவது தத்தெடுப்பதன் மூலம் கிடைப்பது நல்ல விஷயம் தானே?

குட்டி!

உங்கள் கருத்து முற்றிலும் நியாயமானது. :D:(

இதை பெண்வாசனை பிடிக்காத நெடுக்கர் கேட்டததுதான் கொஞ்சம் சிக்கல் :lol:

வாரிசு ஒன்று தேவையென்றால் அதற்கு தத்து எடுப்பது சிறந்த முறை அல்ல. அன்பு காட்டவேண்டும், எங்கள் ஆளுமை, அனுபவங்களை எதிர்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் வழமையில் எங்களைச் சூழ்ந்துள்ள எங்களுடன் நன்கு பழகுகின்ற நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் இவர்கள் குழந்தைகளே போதுமானவை.

எனக்கு சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட மருமக்கள், பெறாமக்கள் என்று கூறக்கூடிய குழந்தைகள் இருக்கின்றார்கள். எனக்கு என்று ஓர் வாரிசு அவசியமானது என்று நான் கருதவில்லை.

பரந்த உள்ளம் உள்ளவர்கள் ஓர், இரண்டு குழந்தைகளுடன் மட்டுப்படுத்தி தங்கள் வாழ்வை சுருக்கிக்கொள்ளாமல் அன்பு, ஆதரவு தேவைப்படுகின்ற அனைத்து குழந்தைகளுக்கும் தங்களால் முடியுமான உதவிகளை செய்வதே, அன்பை, ஆதரவை காட்டுவதே சிறப்பானது.

குழந்தைகள் இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் எமக்கு உதவியாக அமைவார்கள் என்பது சரியான அபிப்பிராயமாக தெரியவில்லை. மகிழ்ச்சி, சுதந்திரம் இவைதான் உங்கள் நோக்கம் என்றால் தனி ஆளாக வாழ்வதே நல்லது. இல்லாவிட்டால்.. ஒரு நிலையில் உங்கள் குழந்தைகளையே நீங்கள் குட்டிச்சாத்தான்கள் என்று கூறி சலித்துக்கொள்ள வேண்டி வரலாம்.

குட்டி!

உங்கள் கருத்து முற்றிலும் நியாயமானது. :D:(

இதை பெண்வாசனை பிடிக்காத நெடுக்கர் கேட்டததுதான் கொஞ்சம் சிக்கல் :lol:

நான் நினைச்சன் நீங்கள் வெள்ளைக் கார இனத்தைப் பற்றி சொல்லுகிறீர்கள் என்று... :(

பெண்வாசம் பிடிக்க இல்லை அல்லது ஆண்வாசம் பிடிக்க இல்லை என்பது இங்கே பிரச்சனை இல்லை கு.சா அண்ணா. அதையும் தாண்டி ஒரு ஆதரவு அற்ற, அல்லது ஒரு சாதாரண வாழ்கையை/ அன்பை அடைய முடியாத ஒரு குழந்தைக்கு அவற்றை கொடுக்க ஒருவரால் முடியும் என்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும். அவ்வளவு ஏன்? சாக்கடைத் தண்ணீரை கையால் எடுத்துக் குடிக்கும் ஒரு குழந்தைக்கு ஒரு கோப்பையில் சுத்தமான தண்ணீர் கொடுப்பது மேல். அப்போது இன்னொரு கோப்பை தண்ணீர் கிடைக்காத என்று ஏங்கும் அந்தக் குழந்தையின் கண்களில் இருக்கும் ஏக்கத்தை நீங்கள் பார்த்து இருகிறீர்களா? நான் பார்த்து இருக்கிறேன்! அப்படி ஒரு குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அந்த செயலை நான் வரவேற்பேன்.

உதவி செய்யும் மனப்பான்மையிருந்தால் குழந்தையை தத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை குட்டி.அந்த குடும்பத்தையே வாழவைக்கலாம்.

நீங்கள் தத்தெடுக்க நினைக்கும் அந்த குழந்தையும் பாசங்கள் மாறுபடாமலும்

அல்லது பிற்கால வாழ்க்கையில் தன் தாய்தந்தையரை நினைத்து கவலைப்படாமல் வாழ வழிவகுக்கும்.

தற்போதைக்கு சகலதும் சுலபம்.

தத்தெடுத்த குழந்தையின் பிற்கால ஏக்கங்கள் எவ்வாறு இருக்கும்?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையள்ளை ஆசையெண்டால் பிள்ளையை பெத்தெடுக்க வேண்டியதுதானே? :(

நோமலாய் ஏலாவாளியள் தான் பிள்ளையை தத்தெடுக்கிறவை

இப்ப ஒரினசேர்க்கையாக்களும்(ஊரிலை கம்பி இல்லாட்டி சாப்பை எண்டு சொல்லுறவை) தத்தெடுக்கினம்

அதோடை தத்தெடுக்கிறதெல்லாம் இப்ப ஒரு ஸ்ரைல் அதாவது பந்தா

அதுதான் கலர்கலராய் சட்டை போடுறமாதிரி...

ஆபிரிக்காவிலை ஒண்டு

சப்பைமூஞ்சியிலை ஒண்டு

இரண்டும் கெட்டான் ஏசியன்கலரிலை ஒண்டு

அப்பிடியே எல்லாத்திலையும் ஒவ்வொண்டாய் தத்தெடுத்துப்போட்டு.....எங்கையும் பெரிய பங்ஷன் வரேக்கை அந்தமாதிரி கலர் காட்டுறதுதான் இப்ப ஸ்ரைல்.

கு.சாண்ணா உங்க வாதம் சரியாப் படல்ல.

கேய் லெஸ்பியன் எல்லாம் தத்தெடுக்கினமோ இல்லையோ என்றது நமக்குத் தெரியல்ல. அதைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் நமக்கு கிடையாது. அவங்க ஒரு இயற்கைக்கு மாறானவர்கள் என்றே கருதப்படுறாங்க. அவங்க மனித உரிமை மட்டும் பாதுகாக்கப்படனும் என்றது தான் சாதாரண மக்களின் விருப்பம். இங்கு அவர்களைப் பற்றி பேசுவது அவசியமான ஒன்றல்ல என்றே நினைக்கிறேன்.

ஒருத்தன் பெண்களின் மோசமான செயல்களால் அவர்களை வெறுக்கிறது.. அல்லது பெண்களால் பாதிக்கப்பட்டு வெறுக்கிறது.. அல்லது பெண்களின் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பால் தான் தன் சுயத்தை பாதுகாத்து வாழ விரும்புறது... தான் எதிர்பார்க்கும் அளவுக்கு அன்பு காட்ட பெண்கள் இல்லை எனும் போது வருகிற வெறுப்பு.. விவாகரத்து.. காதலித்து ஏமாற்றப்படவங்க.. துறவு.. வேறு கல்வி தொழில் இப்படி பல காரணங்களால் பெண்களோடு ஆண்கள் நெருங்க முடியாத சூழ்நிலைகளும் உள்ளன.

வெறுமனவே கம்பியும்.. ஒன்பதும்.. உடற்பிரச்சனை உள்ளதும் தான் இப்படி என்பது பழைய காலத்துக்கு குறுகிய பார்வை. இங்கு பிரச்சனை அதுவல்ல.

நான் வெவ்வேறு சமூகத்தை தேர்த்தெடுக்கக் காரணம்.. கலர் கலரா இருக்க வேண்டும் என்றல்ல. கலர் கலரா இருக்கனும் என்றால் முட்டை வங்கியில் முட்டை வாங்கி என் சொந்த அணுவில் இருந்து பரிசோதனைக் குழாய் மூலம் வெறும் 5000 - 10000 பவுண்டுகளுக்குள் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ளலாம்.

இல்ல ஒரு வெள்ளைக்காரிய செற்றப் செய்து அவளோடு living together செய்தும் பெத்துக்கலாம்...! இதெல்லாம் முடியாது என்றில்ல. ஆனால் அங்கு ஒழுக்கம்.. எமக்கான பண்பாடு விழுமியம்.. எல்லாத்தையும் நாங்க இலகுவாக கடக்க நேரிடும். அப்பவும் திட்டுவியள்..!

நான் வேற்று இனத்தவர்களைத் தத்தெடுக்கக் காரணம்.. ஒன்று.. சமூகப் பாதிப்பு என்பது தமிழர்களுக்குள் மட்டுமல்ல அதனையும் தாண்டியது என்பது எனது எண்ணம். இரண்டு.. ஏலவே எனது குடும்பத்தில் சிலர் தமிழ் பிள்ளைகளை தத்தெடுத்து பட்ட பாட்டை அறிந்து தான். அதுகள் வளர பெற்றோர் பிள்ளையைக் கேட்டு வர.. இப்படிப் பல பிரச்சனைகள் உருவாகின. பின்னர் ஒன்றும் வேணாம் என்று அவர்கள் அந்தப் பிள்ளையை பெற்றோரிடமே கொடுக்க வேண்டி வந்தது. அதுவும் சட்ட ரீதியா தத்தெடுத்தவை.

எம்மவர்கள் ஒரு வகையான மனிதர்கள். சட்டத்தையும் மதிக்கமாட்டார்கள்.. கொள்கையையும் மதிக்கமாட்டார்கள். எப்ப மாறுவார்கள் என்றும் தெரியாது. பணம் இல்லாட்டி ஒரு கோலம். பணம் வந்தால் இன்னொரு கோலம். இப்படிப்பட்டவர்களுடன் இவ்வாறான சென்சிற்றிவ் விடயங்களை வைச்சுக் கொள்வது நல்லதல்ல என்பது எனது அபிப்பிராயம். எம்மவர்கள் பலருக்கு அடுத்தவனின் வலியை உணரும்.. தெரிந்து கொள்ளும் பக்குவமில்லை.

உதாரணத்துக்கு உங்களையே பாருங்க.. தத்தென்றதும்.. கம்பி.. லெஸ்பியன் அல்லது நோஞ்சான்... என்று தான் கருத்துச் சொல்லுறீங்க. இந்தத் தத்தெடுப்பு விடயத்தை சமூகக் கண்ணோட்டத்தில பார்க்கல்ல. இப்படியான எமது சமூகத்தையே நான் வெறுக்கிறேன். இதனால் தான் தமிழ் பெட்டையளையும் வெறுக்க வேண்டி வருகுது..! தமிழ் பெட்டைகளின் சிந்தனை மிகவும் குறுகியது.. அது புகலிடச் சமூகமோ.. ஊர் சமூகமோ... அவர்கள் இன்னும்.. நகை.. உடுப்பு.. வீடு.. கார்.. காசு.. உழைப்பு.. படிப்பு.. குழந்தை குட்டி.. இதற்குள் தான் வாழ்க்கை என்றிருக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கை என்பது இவை அனைத்தையும் கடந்து இருக்கிறது. ஒரு தனி மனிதனாக நாம் இந்த உலகிற்கு செய்ய எவ்வளவோ இருக்கிறது. ஒரு தம்பதியாக அதனை விடப் பல மடங்கு செய்யலாம்..! ஆனால் எங்கு செய்கிறார்கள்.. தான் தன் குடும்பம்.. ஏதேனும் விசேசம் என்றால் மட்டும் கூடுதல்.. மற்றும் படி திட்டுதல்..! இப்படியான ஒரு சமூகத்தோடு என் வாழ்க்கையை முடிவுறுத்த நான் விரும்பவில்லை..!

புலிக்குட்டியை தத்தெடுத்த போது.. ஏன் மனிதக் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் பிறந்தது, மற்றும்படி.. எனக்கு ஒன்றும் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தத்தெடுக்காமலே.. பராமரிப்புக்கு பணம் கட்டிவிட்டு காயா இருக்கலாம். அதை எவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

தத்தெடுப்பதை நான் இங்கு பகிர்ந்து கொள்ளாமலே செய்திருக்கவும் முடியும். நான் கருத்துக் கேட்டதற்குக் காரணம்.. இது விடயத்தில் எனக்குள்ளும் இருந்த தயக்கத்தால் தான். பிரச்சனைகள் வருமோ என்ற பயம் என்றே சொல்லலாம்.

குட்டி போன்ற ஒரு சிலரைத் தவிர இது விடயத்தில் முழுமையாக positive வா கருத்துச் சொன்னவர்கள் குறைவு. negative வா கருத்துச் சொன்னவர்கள் அதிகம். நான் இரண்டையும் பட்டியலிட்டு எனது நிலைப்பாட்டையும் பட்டியலிட்டு அதன் படியே அடுத்த நிலை தீர்மானம் எடுப்பேன். இறுதித் தீர்மானம்.. என்பது இன்னும் பல காரணிகளை கொண்டிருக்கும்.

காரணம் இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது மட்டுமன்றி.. தத்தெடுக்கப்படும் பிள்ளைகளின்.. அவர்கள் சார்ந்தோரின்.. வாழும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம்.. அப்படி என்று பல விடயங்கள் இருக்கின்றன.

நான் ஒரு உண்மைக் கதை சொல்கிறேன் கேளுங்கள்... ஒரு ஜேர்மனிய தம்பதி.. 16 வயதான தமிழ் பிள்ளையை தத்தெடுத்து வளர்த்தனர். ஜேர்மனி அகதி முகாமில் இருந்து. அவர்களுக்கு ஏலவே சொந்தப் பிள்ளைகள் இருந்தன. அதையும் மீறி ஒரு சமூக அக்கறையில் பிள்ளையை தத்தெடுத்து வளர்த்தனர். சொந்தப் பிள்ளைகளுக்கு அளித்த அத்தனை வசதிகளையும் பாகுபாடின்றி அளித்தனர். இறுதியில் அந்த தமிழ் பிள்ளை அவர்கள் வாங்கிக் கொடுத்த வீட்டையும் விற்றுப் போட்டு சொல்லாமல் கொள்ளாமல் வேற்று நாட்டில் வந்து குடியேறிவிட்டது. தனது உறவுக்காரர் ஒருவரை ஊரில் இருந்து எடுத்து திருமணம் செய்தும் கொண்டது. அந்தப் பிள்ளையின் இலக்கு.. ஜேர்மனிய விசாவும் குடியுரிமையும். அது கிடைத்ததும் அது ரா ரா காட்டி விட்டது. :lol:

அந்த தமிழ் பிள்ளையின் தாயின் இலக்கு தன் பிள்ளை வெளிநாட்டிற்கு போய் அங்கு விசா எடுக்கனும் என்பது. அதற்காக அந்தப் பிள்ளையை 14 வயதிலேயே ஊரில் இருந்து துரத்திவிட்டிட்டுது. பின்னர் அந்தப் பிள்ளை வளர்ந்து.. அது தன் சுயபுத்தியை காட்ட வெளிக்கிட்டு விட்டது. எண்ணிப் பாருங்கள்.. எம்மவரின் சுயநலத்தையும் அந்த ஜேர்மனிய தம்பதிகளின் மனிதாபிமானத்தையும்.

இவ்விடயத்தில் நாம் எங்கேயோ நிற்கிறோம்... இன்னொன்று அண்மையில் வன்னி தடுப்பு முகாமில் தவறான முறையில் கர்ப்பம் தரித்த ஒரு தமிழ் பெண் அப்படி உருவான அந்தக் குழந்தையை கர்ப்பத்தை மறைக்க.. வேறொரு மாவட்டத்தில் போய் குழந்தையை பெற்றுப் போட்டுவிட்டு.. தலைமறைவாகி விட்டார். அந்தக் குழந்தையை இப்போ சிங்களத் தம்பதி ஒன்று ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்து தத்தெடுத்து வளர்க்கின்றனர். அதுவும் ஒரு வாரக் குழந்தையாக. எண்ணிப் பாருங்கள்.. நாங்கள் எங்கே அவர்கள் எங்கே...??!

இதையேன் சொல்கிறேன் என்றால்.. நாம் சமூக மனிதாபிமானச் சிந்தனைகளுக்கு அப்பால் ஒரு செயலை.. தவறான நோக்கில் விளங்கிக் கொள்வதிலும் வியாக்கியானப்படுத்துவதிலும் அதிகம் நேரம் செலவு செய்கின்றோம்.

அதேவேளை சிறுவர்களை தத்தெடுத்து வீட்டு வேலை.. வேலைக்காரர்களாக வைத்திருக்கும் எம்மவர்கள் பலர். இன்னும் கொஞ்சப் பேர் அவர்களை துஸ்பிரயோகமும் செய்கின்றனர். இவற்றைப் பற்றி சொல்லமாட்டார்கள்.

எதுஎப்படியோ இப்போ ஒரு குழந்தையை தத்தெடுப்பது என்றால் தத்தெடுப்பவர் பற்றிய கடந்த கால குற்றவியல் பதிவுகள் நோக்கப்படும். அவரின் உள உடல் தகுதிகள் நோக்கப்படும். இவை எல்லாம் பார்த்துத்தான் வெளிநாடுகளில் குழந்தைகளை தத்தெடுக்க முடியும். ஆனால் ஊரில் இவை பார்க்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தத்தெடுப்பது என்றால் சட்ட ரீதியாக.. எல்லா நடைமுறைகளுக்கும் உட்பட்டு எனக்குள்ளும் சரியான தத்தெடுக்கும் மனநிலை இருந்தால் தான் அதைச் செய்வேன்.

குட்டி சொன்னது போல்.. இது அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய முடிவு. தத்தெடுக்கவில்லை என்றாலும்.. பிற வழிகளில் குழந்தைகளை பராமரிக்க வழிகள் இருக்கின்றன. அவை மிக இலகுவான வழிகள்.. என்றே நினைக்கிறேன். வங்கிக் கணக்கு இலக்கத்தை கொடுத்தால் போதும்.. மிகுதி வேலையை குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் செய்யும். ஆனால் அதில் எமக்கு ஒரு பூரண மன நிறைவு இருக்காது... என்பது எனது அபிப்பிராயம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கூறும் அனைத்து குறைபாடுகளும் சர்வதேசமயமாக இருக்கின்றது.

அப்படியிருக்கும் போது ஏதோ தமிழினத்தில் மட்டும்தான் இந்த பழக்கவழக்கங்கள் இருப்பதுபோல் எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.

உதவி செய்யும் மனப்பான்மையிருந்தால் குழந்தையை தத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை குட்டி.அந்த குடும்பத்தையே வாழவைக்கலாம்.

நீங்கள் தத்தெடுக்க நினைக்கும் அந்த குழந்தையும் பாசங்கள் மாறுபடாமலும்

அல்லது பிற்கால வாழ்க்கையில் தன் தாய்தந்தையரை நினைத்து கவலைப்படாமல் வாழ வழிவகுக்கும்.

தற்போதைக்கு சகலதும் சுலபம்.

தத்தெடுத்த குழந்தையின் பிற்கால ஏக்கங்கள் எவ்வாறு இருக்கும்?????

குழந்தைகளை அவர்களது பெற்றோகளோடு வாழ விடுவதே சிறந்தது. அப்படி பாசமாக இருக்கும் குடும்பத்தில் இருந்து ஒரு குழந்தையை பிரித்து எடுத்து வர யாரும் முன்வர மாட்டார்கள் கு.சா அண்ண. (அங்கேயே பெற்றோருடன் இருக்கும் குழந்தைகளுக்கு பணச் செலவை மட்டும் பொறுப்பு எடுத்து செய்வது வேறு.) பல குழந்தைகளுக்கு அந்த கொடுப்பினைகள் இல்லாமல் போகும் பட்சத்தில் தான் தத்தேடுப்பதோ, அல்லது பாதுகாவலராக ஆவதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

நான் குழந்தைகளுக்குப் பாதுகாவலர் என்ற அனுமதியை மட்டுமே பெற நினைத்தேன், காரணம் அந்தக் குழந்தைகள் அவர்கள் பெற்றோருடன் வாழ்ந்துள்ளார்கள். அவர்களை இங்கு கூடிக் கொண்டு வந்து நான் தான் இனி உங்களுக்கு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் என்று வசனம் பேசி நம்ப வைக்கவோ, இல்லை அவர்களின் உணர்வுகளை மாற்றி அமைக்கவோ எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் பாதுகாவலர் என்ற அந்தஸ்தை மட்டும் பெற்று அவர்களுக்கு ஒரு அளவுக்கு சாதாரண வாழ்க்கையையும், கல்வி வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று நினைத்தேனே தவிர அவர்களை அவர்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எப்போது தமது பெற்றோரை பார்க்க வேணும் என்று எண்ணுகிறார்களோ ( அவர்கள் இங்கே வந்து வாழும் காலம் வந்தால் அவர்களை அந்த அளவுக்கு நான் நிச்சயம் புரிந்து கொள்ளவேன்) அப்போது அவர்களுக்கு அந்த அனுமதியை மனதார வழங்குவேன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறும் அனைத்து குறைபாடுகளும் சர்வதேசமயமாக இருக்கின்றது.

அப்படியிருக்கும் போது ஏதோ தமிழினத்தில் மட்டும்தான் இந்த பழக்கவழக்கங்கள் இருப்பதுபோல் எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.

உலகம் பூராவும் இருந்தாலும் சனத்தொகையில் சிறிய எம்மவர் மத்தியில் அது அதிகம். அதன் விளைவு பிரமாண்டமானது. :rolleyes:

குழந்தையள்ளை ஆசையெண்டால் பிள்ளையை பெத்தெடுக்க வேண்டியதுதானே? :lol:

நோமலாய் ஏலாவாளியள் தான் பிள்ளையை தத்தெடுக்கிறவை

இப்ப ஒரினசேர்க்கையாக்களும்(ஊரிலை கம்பி இல்லாட்டி சாப்பை எண்டு சொல்லுறவை) தத்தெடுக்கினம்

அதோடை தத்தெடுக்கிறதெல்லாம் இப்ப ஒரு ஸ்ரைல் அதாவது பந்தா

அதுதான் கலர்கலராய் சட்டை போடுறமாதிரி...

ஆபிரிக்காவிலை ஒண்டு

சப்பைமூஞ்சியிலை ஒண்டு

இரண்டும் கெட்டான் ஏசியன்கலரிலை ஒண்டு

அப்பிடியே எல்லாத்திலையும் ஒவ்வொண்டாய் தத்தெடுத்துப்போட்டு.....எங்கையும் பெரிய பங்ஷன் வரேக்கை அந்தமாதிரி கலர் காட்டுறதுதான் இப்ப ஸ்ரைல்.

முதலில் மதுபோதையில் வந்து கருத்து எழுதுவதை உளறுவதை நிறுத்தவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் மதுபோதையில் வந்து கருத்து எழுதுவதை உளறுவதை நிறுத்தவும்

ஊத்தி தந்தவ புத்திமதி சொல்லுறா :wub:

  • 2 weeks later...

ஒரு ஆண், ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது தான் குழந்தைக்கு நல்லது.

நெடுக் அண்ணை போல பெண்கள் மீது காழ்ப்புணர்ச்சி வைத்திருப்பவர்கள், பெண் குழந்தைகள் பக்கம் திரும்பிப் பாராமல் இருப்பதுதான் நல்லது.

ஆண் குழந்தை என்றாலும், அன்பு காட்டத் தெரியாதவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுப்பது - குழந்தை செய்த பாவமாகப் போய்விடும்.

"ஒருத்தன் பெண்களின் மோசமான செயல்களால் அவர்களை வெறுக்கிறது.. அல்லது பெண்களால் பாதிக்கப்பட்டு வெறுக்கிறது.. அல்லது பெண்களின் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பால் தான் தன் சுயத்தை பாதுகாத்து வாழ விரும்புறது... தான் எதிர்பார்க்கும் அளவுக்கு அன்பு காட்ட பெண்கள் இல்லை எனும் போது வருகிற வெறுப்பு.. விவாகரத்து.. காதலித்து ஏமாற்றப்படவங்க.. துறவு.. வேறு கல்வி தொழில் இப்படி பல காரணங்களால் பெண்களோடு ஆண்கள் நெருங்க முடியாத சூழ்நிலைகளும் உள்ளன." என்று கூறுகிறீர்கள்.

மறுபுறம் பெண்களும் ஆண்கள் மீது இதே மாதிரியான குற்றச்சாட்டை முன்வைக்க முடியும். சகலரிடமும், ஏதோ சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை மறந்துவிட்டு பிறரிடம் மட்டும் குறைகள் வாழ்வது எங்கும் ஒற்றுமையைக் கொண்டுவராது.

தத்துவங்கள் வழிகாட்டலாம். ஆனால் தத்துவங்களை வைத்துக் கொண்டு வாழமுடியாது. காலத்துக்குக் காலம், நேரத்துக்கு நேரம், சூழ்நிலைக்கு ஏற்ப புரிந்துணர்வே வாழ்க்கைக்கு அவசியம் என்று அப்பா சொல்வதுண்டு. எதிர்பார்ப்புக்கள் அற்ற அன்பு இருந்தால் எந்த பிரச்சினைகளும் வராது. யாரும் விட்டுவிட்டும் ஓடிவிடமாட்டார்கள்.

என் மனதில் தோன்றியவை இவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.