Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் பகுதி வன்னி மக்கள்,பிரபாகரன் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்- ஆவணப்பட இயக்குனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மக்களை பொறுத்தவரை தமிழ் மற்றும் சிங்கள பெருந்தேசியத்துக்கிடையிலான மோதலுக்குள் அகப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றார்கள். அவர்களின் வெறுப்பு அதிருப்தி எல்லாம் தங்கள் அறியாமை மேல்தான். விசுவமடு வரை இடம்பெயருமட்டும் தமிழ்த்தேசியத்தின் கோரமுகம் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மக்கள் கொலைக்களம் நோக்கி நகர்த்தப்பட்டார்கள். இது ஒரு பயங்கரவாதம் எனும் சின்னக் கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோட்டை போடும் காரியமே.

போராட்டத்தின் பெரும் சுமையை சுமந்த வன்னிப் பெருநிலமும் மக்களும் இறுதியில் அதனாலேயே வஞ்சிக்கப்பட்டார்கள். தமிழ்த்தேசியத்தின் சிந்தனைமுறைக்கேற்ப மக்கள் கொலைக்களம் நோக்கி நிர்பந்திக்கப்பட்டார்கள். கொலைகளும் அவலங்களும் புகைப்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுக்கப்பட்டு புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை நாங்கள் படுகொலைகளை நிறுத்து என பிரசுரித்து பிரச்சாரம் செய்துகொண்டிந்தோம்.

வன்னிமக்களிடம் இருப்பது வருத்தம் இல்லை மாறாக வார்த்தையாயல் வர்ணிக்கமுடியாத உணர்வு. இயல்புநிலை முற்றாக அழிக்கப்பட்டு ஒரு இளைய தலைமுறையே அழிந்து தம் விரல்களால் தம் கண்ணைக் குத்திக்கொண்டதன் வலி. தமிழ்த்தேசியத்தை புரிந்துகொள்ள முடியாத வக்கற்ற நிலை.

சிங்களப் பெரும் தேசியமும் தமிழர்களை கொல்லும் தமிழ்த்தேசியமம் கொல்லும். புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும்.

-சுகனின் சில பகுதிகளை தவிர்த்துள்ளேன்..முழுவதுமாய் ஈ அடிச்சான் கொப்பிமாதிரி இருக்காமல் இருக்க :lol: -

காத்திரமான கருத்துக்கள்...

இப்பவும் வன்னி மக்களை அல்லது அங்குள்ள தமிழர் எல்லாம் நாடு வேண்டும், இன்னும் 2 வருடத்தில் போராட தொடங்குவார்கள், 10 வருடத்தில் தொடங்குவார்கள் என்பது போன்ற கருத்துகள், என்னைப்பொறுத்தவரையில் குளம் வத்தி மீன் பிடிக்க நினைக்கும் கொக்கின் மனநிலையை ஒத்தது. நானும் அங்குள்ளவர்களுடன் பேசுகிறேன், நீங்களும் பேசுகிறீர்கள், இப்படி பத்திரிகைக்காரர்களும் பேட்டி எடுத்து போடுகிறார்கள் / போடும் போதே தங்கள் மனநினையையும் சேர்த்து போடுகிறார்கள். அதை நாங்கள் எங்களுக்கு தெரிந்த படி, விரும்பினபடி விளங்கி, வியாக்கியானம் செய்கிறோம். 83 கலவரத்துக்கு பிறகு எங்களை ஒழுங்கு படுத்த, அல்லது எங்கள் பாதையை தொடர சில காலமே எடுத்தது. ஆனால் இன்று, அதை விட பெரியவில் எல்லா ஆயத்தங்களும் இருந்தும், யாரும்/யாராலும் ஒழுங்கு பட முடியாமல், பாதையை தீர்மானிக்க முடியாமல் உள்ளோம். ( 83 ஐ விட தாக்கம் பல மடங்கு பெரியது, எனினும் எங்களது வலைப்பின்னல்கள் இன்று மிகவும் பெரியவை). அது ஏன் என யோசித்தால் விடை கிடைக்கலாம்.

இங்கே நான் அபிராம் எழுதுகிற கதைகளை வாசிப்பது உண்டு, ஆனால் கருத்து எழுதுவதில்லை. முதல் ஒருக்கா வணக்காமுடிக்கு எழுத போய் வீண் தர்கங்களில் முடிவடைந்தது. அவரது கதைகளில் வரும் மாந்தர்களும் சம்பவங்களும் உண்மையானதாக இருக்கும். ஆனால் அதை ஒரு பொதுமைப்பாடு என்கிற வகையில் சிலர்/ அல்லது அவருமே யோசித்தால் என்னிடம் பதில் இருப்பதில்லை. நான் இங்கே மேலே எடுத்த, மேற்கோள்காட்டிய விடயம் அதுதான். பலரும்/சிலர் நினைக்கிறார்கள் வன்னிமக்கள்/ முழுத்தமிழர்களும் போராடத்தான் பிறந்தவர்கள், போராடி முடிந்த பின்புதான் அடுத்த வேலை என்கிறமாதிரி. (என்னோடு ஒன்றாக படித்தவன் 2 -3 வருடத்தில் கரும்புலியான சம்பவம் எனக்கு தெரியும், முதல் கரும்புலியின் ..........வடிவாக தெரியும், அதற்காக நானும்/ என்னை சார்ந்தவர்களும் அந்த உணர்வில் இருந்தானான் என்கிறவையில் ஒரு செய்தியை சொல்ல விரும்பவில்லை. இது ஒரு குழப்பனான இடம், தனித்த சம்பவங்கள் உண்மை, ஆனால் அதுதான் வன்னி மக்கள்/ தமிழ் மக்கள் என்று சொல்லுவது/ சொல்ல முனைவது தவறு.

ஏனெனில், வன்னியில் நானும் நீங்களும் 2 பேரோடு கதைத்து போட்டு, இதுதான் அங்குவர்களின் உணர்வு என்று சொல்வது ஆபத்தானது. இங்கே சில காலத்திர்ற்கு முன்பு, USA இல் ஒருவரோடு கதைத்தேன், சொன்னார், தான் யாரோ ஒரு பாடசாலை அதிபருடன் கதைத்தவராம், சனம் சரியான வெறுப்பில்/ கோபத்தில் இருக்குதாம், அவர்கள் சுதந்திர போரை மீள தொடங்குவார்களாம். ஆனால் அவர் சொன்னார், அதற்காக நாங்கள் அவர்களை தொடங்க சொல்ல முடியாது, அல்லது இங்குள்ளவர்களின் செயபாடுகளை அவர்கள் தொடங்கும் மட்டும் காத்திருக்க முடியாது என்று. அதற்கு நான் ஓம் என்று சொன்னேன். என்னை வந்து உந்த குருப்புகளில் வந்து சேரச்சொன்னவர், இப்ப ஏலாது என்றுவிட்டு வந்தேன்- பயமாக இருக்கு இதுவும் சுய சரிதத்தை போல போகுதோ தெரியாது..:)

எங்கே நிற்கிறேன் என்றே தெரியவில்லை, :D:lol:

பிறகு வந்து எழுதுகிறேன் ...

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும் என்பது தாயகத்தில் உள்ள மக்களை மையமாகவைத்தே அன்றி புலத்தை நான் குறிப்பிடவில்லை. தாயகத்தில் தமது சொந்த நிலங்களில் இருக்கும் மக்கள் குறிப்பாக சொந்த நிலத்தில் தமது பொருளாதராத்தை கொண்டிருக்கும் மக்களிடம் இருந்தே புதிய பாதையும் விடுதலைக்கான முயற்சியும் துளிர்விடமுடியும். அதற்கு புலத்தில் உள்ளவர்கள் ஆதரவாக நிற்கமுடியும். இதுவே சாதகமான பாதை. இங்கே நடப்பதோ தலைகீழானது. தாயக மக்கள் ஓரு பாதையில் பயணிக்க முடியாதளவுக்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சியுடனும் அனைத்தையும் இழந்த நிலையில் நிற்கின்றார்கள். அவர்கள் பொருளாதாரம் கல்வி பாதுகாப்பு போன்றவற்றிற்கு புலத்தில் உள்ளவர்கள் உதவிசெய்து அவர்களுக்கு புத்துயிர் அழிக்கவேண்டும். அதன்பிறகு அவர்கள் விடுதலைநோக்கி பயணிக்கும் பாதைக்கு புலத்தில் உள்ளவர்கள் ஆதரவளிக்கவேண்டும். இவ்வாறான காரியங்கள் எல்லாம் சிங்கள அரசினூடாகத்தான் தற்போதய காலகட்டத்தில் சாத்தியப்படும். (தேசியப்பாணியில் இதற்கும் துரோகம் என்றுதான் பெயர்)

எவன் ஒருவனுக்கு எவ்வளவு தேவை இருக்கின்றதோ அதற்கேற்பவே தேவை உள்ளவனின் முயற்சி இருக்கும். தேவையே இங்கு பிரதானமானது. தாயகத்தில் சொந்தநிலத்தில் தமது பொருளாதராத்தையும் வாழ்வாதாரத்தையும் கொண்டிருக்கும் மக்களே தேசியத்தின் பால் முதன்மை பற்றுக்கொண்டவர்களாக இருக்கமுடியும். ஏனெனில் அது தேவை சார்ந்தது. புலத்தின் உள்ளவனுக்கான தாயக நிலம் சார்ந்த பொருளாதார வாழ்வாதார தேவை என்ன? அதன் பெறுமதி என்ன? நாம் இங்கிருந்து தேசியம் தேசியம் என்று உணர்ச்சி பொங்க கத்துவதுக்குரிய காரணம் உணர்வு சார்ந்தது அன்றி தேவை சார்ந்தது அல்ல. தாயகத்தில் ஒருவன் தனது வாழ்வாதரத்துக்காக தனது நிலத்தில் விவசாயம் செய்வதோ அல்லது கடற்தொழில்செய்வதோ இதர தொழில்கள் செய்வதோ தேவைகள் சார்ந்து மத பிரதேசவாத வேற்றுமைகளை கடந்து இனத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் உறவுகளை வளர்த்துக்கொள்வதோ தான் பெறுமதியான தேசியம். உண்மையான தேசிய உணர்வும் இந்த அடிப்படைக்குள்ளாகத்தான் தோற்றம் பெற முடியும். தாயகத்தில் வாழ்வாதராத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்டை. இந்த அடிப்படையை விருத்தி செய்ய எம்மால் எவ்வளவு தூரம் உதவமுடியுமோ அதுதான் எமக்கான பணி.

தாயக மக்கள் தமக்குள் பொருளாதார வாழ்வாதரா தேவைகள் சார்ந்து பிரதேச மற்றும் மதவேற்றுமைகளை கடந்து ஒன்றுபடவேண்டும். தேவைகள் நிமிர்த்தமான இந்த உறவுதான் எம்மிடம் இருக்கும் மத பிரதேசவாரியான வேற்றுமைகளை களையும். சிதைவுபட்ட தமிழினம் ஒன்றுபட ஏதுவான காலமாகவே இந்த காலத்தை நாம் அணுகவேண்டும். இதுவரையான தமிழ்த்தேசியம் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கான காரணம் இந்த தேசியம் ஒரு மேட்டுக்குடி மேலாண்மைவாத மையவாத அடிப்படையை கொண்டிருந்தது. இதனால் இஸ்லாமியத்தமிழர்கள் பிளவுபட்டார்கள். பிரதேசவாதமாக பிளவுபட்டார்கள். வர்க்கரீதியாக பிளவுபட்டார்கள். போராட்டம் படிப்படியாக மக்களிடம் இருந்து விலத்தி பயங்கரவாதமாக முடிந்துபோனது. இந்த தோல்வி இந்த அனுபவத்தில் இருந்து மாற்றம் எமக்கு அவசியமாகின்றது. இதே பதையை மீள தேர்ந்தெடுக்கமுடியாது.

புலத்தில் நடக்கும் தற்போதைய முயற்சிகள் அனைத்தும் மாற்றம் பெறாத பழைய பாணிதான். என்னும் சொல்லப்போனால் பழைய பாணியை விட சற்று மோசமான பாணிதான். ஏனெனில் நிலத்தில் போராட்டம் நடந்த காலத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் இணைந்திருந்தனர். ஆனால் தலமையும் சிந்தனை முறையும் மையவாதம் சார்ந்து குறுகிஇருந்தது. புலத்தில் நாடுகடந்த அரசு போன்றவை வர்க்கரீதியில் பொருளாதாரம் கல்வி பாதுகாப்பு அனைத்திலும் மேம்பட்ட நிலையில் உள்ளவர்களை கொண்ட கட்டமைப்பாக இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்புகள் தேர்வுகள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் எல்லோருக்கும் தாயகத்தில் உள்ளவர்களுக்கும் பொருளாதராரீதியில் பிணைப்பு இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டு தொடர்புகள் உதவிகள் இன்றி தமது பொருளாதர தேவைகளை தாமே சொந்த நிலத்ததில் பூர்த்திசெய்யும் மக்களுக்கும் இந்த கட்டமைப்புகளுக்குமான அடிப்படை உறவு என்ன? வர்க்க ரீதியான ஏற்றதாள்வு எவ்வளவு? வர்க்க ரீதியில் இது இரண்டு பிரிவுகளாகின்றது. இந்தப் பிரிவுதான் தேசியவாதத்தை மீள சிதைக்கின்றது.

தாயகத்தில் புலிகள் இருந்த காலத்தில் புலத்தில் உள்ளவர்கள் புலிகளை பிரதானமாக்கி அவர்களது போராட்டத்திற்கு உதவிசெய்தார்கள். இப்போது தாயகத்தில் உள்ள மக்களை பிரதானமாக்கி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். ஏனெனில் போராட்டம் என்பது தற்போது தமது சொந்த நிலத்தில் வாழ்வை தக்கவைப்பதாக மாற்றம் கண்டிருக்கின்றது. எமது மக்களையும் அவர்கள் வாழ்வையும் சிங்களத்திற்குள்ளாக எமது தாயகத்தில் தக்கவைப்பதுதான் தற்போதைய போராட்டம். ஆனால் புலிகள் முடிந்தபின் அதன் பாத்திர்தை நாடுகடந்த அரசு என்று இங்கே எடுத்துக்கொள்வது உடன்படக்கூடிய ஒன்றல்ல. தவிர எமக்குள் இருக்கும் முரண்பாடுகள் அடயாளப்போட்டிகளை் பிரதேசவாத ஆழுமைகளை கடந்து ஒரு நிறுவனத்தை கொண்டு நடத்துவது யதார்த்தத்துக்கு ஒத்துவராது

மிக மிக சிறந்த சம கால பார்வை

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எந்தவொரு அரசியல் நடவ்டிக்கையும் தாயகத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேன்டும். புலத்தில் நடப்பவை அவற்றுக்குச் சமானதரமாகவும் , அவற்றிற்குப் பக்க பலமாகவும் மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் தாயகத்தின் யதார்த்தங்களை உள்வாங்கிக்கொள்ளுமளவிற்கு புலத்திலுள்ளவர்களால் இயங்கமுடியுமா என்பது கேள்விக்குறிதான். வேண்டுமென்றால் தாயக மக்களின் செயற்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதில் புலத்து அரசியல் நடவடிக்கைகள் உதவி செய்ய முடியும்.

அரசியல் போராட்டமாகட்டும் அல்லது இன்னொரு ஆயுதம் தாங்கிய போராட்டமாகட்டும் அதை தாயகத்து உறவுகளே தீர்மானிக்க வேண்டும். எம்மால் அதைத் திணிக்கவும் முடியாது அதற்கான தார்மீக உரிமையும் கிடையாது. ஏனென்றால் எந்தப் போராட்டத்தினதும் விளைவுகளைச் சுமக்கப்போகிறவர்களும் அவர்களே.

வாழ்வு முற்றாகப் பறிபோன நிலையில் அவர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் நாம் கட்டுப்பாட்டேயாக வேண்டும். வழியை அவர்கள் தீர்மானிக்கட்டும், அதற்கான உதவியையும் ஒத்தாசையையும் நாம் செய்வோம்.

சுகன் சொன்ன பல விடயங்களில் என்னால் ஒத்துப் போக முடியும்.சில விடயங்களை நாங்கள் இன்னும் ஆளமாகப் பார்க்க வேண்டும்.தாயகத்தில் மக்கள் பலம் பெற வேண்டும் என்பதிலும் போராட்டப் பாதையை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதிலும் அதற்க்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவ வேண்டும் என்பதிலும் இருவேறு கருதுக்கள் இல்லை.ஆனால் இதனை எவ்வாறு செய்வது என்பதில் தான் கருத்து வேற்றுமைகள் இருகின்றன.இதனை எவ்வாறு செய்வது என்பதை ஆளமாகப்பார்க்க வேண்டும்.சிங்களத் தேசியவாதம் தமிழரின் இன்றைய நிலையை தமக்குச் சாதகமாகப்பாவித்து தன்னைப் ப்லப்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கப் போகிறோமா அல்லது அதன் திட்டங்களுக்கு இரையாகாமல் நாம் மக்களைப் பலப்படுத்தப்போகிறோம என்பதைப் பாவ்ர்க்க வேண்டும்.சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இயஙினால் நிச்சயமாக நாம் அதன் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் செல்ல வேண்டும்.கூட்டமைப்பு இன்று இந்தியாவை நம்பி அர்சியல் மலடர்களாகிய நிலமையும் கேபி சிங்கள அரசின் திட்டங்களின் அடியாளாக மாறிய நிலமையும் எமக்கு முன்னால் இருக்கின்றன.

மக்கள் இலங்கை அரசின் பிடிக்குள் இருக்கும் வரை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஊடாகத்தான் அவர்களை பலப்படுத்தமுடியும். சிங்கள பெருந்தேசியம் என்னும் வேலிக்கு ஊடாகத்தான் எமது மக்களை நெருங்க முடியும். இதை நாம் சிங்கள தேசியத்தை பலப்படுத்துவதாகவோ அல்லது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுவதாகவோ கருதி நிரகாரிப்போமாக இருந்தால் புலம்பெயர் கட்டமைப்புகளுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான அடிப்படைத்தொடர்பு இல்லாமல் போய்விடும். உதாரணமாக நாடுகடந்த அரசு என்ற முத்திரையுடன் தாயகத்தில் உள்ள மக்களுடன் எவ்வகையான உறவை பேணுவதற்கு இலங்கை அரசு அனுமதிக்கும்? இலங்கை அரசின் அனுமதி இன்றி தாயகத்தில் உள்ள மக்களை எவ்வகையில் நெருங்க முடியும்? புலத்துக் கட்டமைப்பும் தாயக மக்களும் தனித்தனியாக இயங்க முற்படுவதே பெரும் பின்னடைவாக அமையும். இலங்கை அரசை பொறுத்தவரை நாடுகடந்த தமிழீழ அரசு என்பது முற்றுமுழுதான பிரிவினைவாதமாகவே அமைகின்றது. இந்த அடிப்படையில் நா க அரசு கட்டமைப்பையும் அதன் செயற்பாடுகளையும் முற்றுமுழுதாக தாயகத்தில் தடைசெய்ய முடியும். தடையை மீறி தாயக மக்கள் எந்த உறவையும் நா க அரசுடன் ஏற்படுத்த முடியாது. நா க அரசு என்ற முத்திரையுடன் எந்த புனர்வாழ்வையும் தாயக மக்களுக்கு செய்யவும் முடியாது. பிரிவினைவாதம்மானது தாயக மக்களுக்கும் புலத்து மக்களுக்கும் இடையில் புதியதொரு விரிசலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இதுவே சிங்களத்துக்கு சாதகமாக அமையும். கடந்த வருடம் உங்களுடன் விவாதித்த கருத்துக்களையே திரும்ப முன்வைக்கவேண்டியிருக்கின்றது. அந்த வகையில் ஆகக் குறைந்தது ஒரு ஐந்து வருடங்கள் நாடுகடந்த அரசு என்பதற்குப் பதிலாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு புனர்வாழ்வு நிறுவனமாக மனிதஉரிமைகளுக்கான அமைப்பாக ஏன் இயங்கக் கூடாது?

இன்று பல சுயாதீனமான நிறுவங்கள் சமயம்,பழைய பாடசாலை மன்றங்கள் ஊர் முன்னேற்ற்ச் சங்கம் என்று இருகின்றன,தனி நபர்களாகவும் பலர் இயங்குகின்றனர்.இவற்றின் மூலமே நாங்கள் மக்களைப் பலப்படுத்த முடியும்.

தற்போது புலம்பெயர் மக்களின் பெரும்பான்மைத் பொருளாதரா உதவிகள் குறிப்பாக தனிநபர் சார்ந்த உதவிகள் தமது உறவுகளை போய்ச்சேருகின்றது. இது இலங்கை அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பாற்பட்டதோ அல்லது எமது தேசியவாதத்துக்கு உட்பட்டதோ கிடையாது. இவ்வாறான பணங்களும் அதன் பயன்பாடுகளும் நூறு வீதம் சிங்கள பெரும்தேசியவாதத்தை அனுசரித்தே நடக்கின்றது. இதன் மீது எந்தவித கேள்வியும் எம்மிடம் இல்லை. இவற்றில் ஆகக் குறைந்தது பத்துவீதமேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவியாக சிங்கள அரசுக்கு ஊடாக பகிரங்கமாக தாயக மக்களை சென்றடைந்தால் செற்பமேனும் தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கு தேசிய அடிப்படையில் தொடர்பிருக்கும்.

நீங்கள் சுட்டிக்காட்டும் சுயாதீன அமைப்புகளூடாக மக்களை பலப்படுத்துவதற்கு பதிலாக உலகளாவிய புலம்பெயர் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு புனர்வாழ்வு மனித உரிமை போன்ற அமைப்பு தாயக மக்களுக்கு உதவவேண்டும். என்னும் சொல்லப்போனால் தனிநபர் உதவிகள் குறைக்கப்பட்டு இவ்வாறான ஒரு நிறுவனம் ஊடாக நடக்கவேண்டும். அந்த நிறுவனமே பின்னாளில் நாடுகடந்த அரசுக்கு ஒப்பான பலத்தை கொண்டிருக்க முடியும். தனி நபர் மற்றும் சிறு சிறு அளவிலான சுயாதீன அமைப்புகள் ஊடாக மக்களை பலப்படுத்த முடியும் ஆனால் மக்களை தேசிய உணர்வுடன் பலப்படுத்தமுடியாது. அதனால்தான் இந்த நா க அரசை புனர்வாழ்வு நிறுவனமாக இலங்கை அரசினூடகாவேனும் தாயகமக்களுடன் பிணையும் படியான கருத்தை வலியுறுத்தி எழுதுகின்றேன்.

ஒரு மாபெரும் புனர்வாழ்வு நிறுவனமாக நாம் புலத்தில் இருந்து செயற்படும்போதே தாய பிரதேசத்தை வலுப்படுத்த முடியும். நிறுவனத்தின் உதவிகள் தமிழர்களின் பூர்வீக தாயக பிரதேசத்தை மையங்கொண்டிருத்தலும் பிரதேசத்தை விட்டு வெளியேறிய மக்களை உதவிகள் ஊடாக மீள இருத்துதலும் என பல்வேறு திட்டங்கள் விரிந்து செல்லும். பெரும் நிதி வழமும் தந்திரமும் அவசியமாகின்றது. நா க அரசுவாகவே எண்ணிக்கொள்ளுங்கள் ஆனால் புனர்வாழ்வு என்று இலங்கை அரசு ஊடகாக தாயக மக்களை நெருங்கி தாயகத்தை வலுப்படுத்துங்கள் என்பதுதான் எனது கருத்து.

யாழ்மையவாதத் தலமை என்று நீங்கள் சொல்வதற்கான ஆதாரங்களை உங்களால் முன் வைக்க முடியுமா?

//தலமையும் சிந்தனை முறையும் மையவாதம் சார்ந்து குறுகிஇருந்தது

இதுவரையான தமிழ்த்தேசியம் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கான காரணம் இந்த தேசியம் ஒரு மேட்டுக்குடி மேலாண்மைவாத மையவாத அடிப்படையை கொண்டிருந்தது//

மேற்கண்ட கருத்துக்கள் எனது பதிவில் இருந்தது

மையவாதம் என்பதுதான் இதுவரையான தேசியம் மட்டுமில்லை மாற்று சிந்தனைகளும் அவ்வாறே இருந்துவருகின்றது. புலிகளின் தலமை மட்டுமில்லை பல்வேறு தலமைகளும் இவ்வாறான ஒரு தேசியத்துக்குதான் தலமை தாங்க முடிந்திருந்தது. இப்போதும் இந்த நிலையில் மாற்றம் பெறவில்லை.

எமது தேசியவாதத்தின் அடிப்படை என்ன எமது தேசியத்தின் தோற்றம் என்ன என்று பார்த்தால் தமிழும் சமயமும் என்ற அடிப்படையிலான ஒரு கூறு அது சார்ந்த கலாச்சாரம் பண்பாடு இவைகளோடு பிரிக்கமுடியாமல் சாதியம் சேர்ந்துவிடுகின்றது. புத்திஜீவிதம் உத்தியோகம் பொருளாதராம் சேர்ந்துவிடுகின்றது.பொருளாதராம் புத்திஜீவிதம் உத்தியோகம் என்று வரும்போது ஆழும் தரப்புகளை அண்டிப்பிழைக்கும் அடிமைக்குணமும் சேர்ந்துவிடுகின்றது. இவைகளே சமூகத்தின் மேற்தட்டு. இங்கிருந்துதான் எமது தேசிய சிந்தனை இனத்துக்கான பிரதிநிதித்துவம் உருவாகின்றது. பெரும்பாலான மாற்றுச் சிந்தனைகள் இங்கிருந்துதான் தோற்றம் பெறுகின்றது. இவ்வாறான அம்சங்கள் தான் அடிப்படையிலான தேசியத் தளம். இந்தத் தளத்திலிருந்துதான் தேசியவாதத்திற்கோ இனவிடுதலைக்கோ அல்லது சமூக விடுதலைக்கோ ஒருவன் தலமை தாங்கமுடியும் என்ற நிலை இருந்து வருகின்றது. அடிப்படையில் இந்தத் தளம் பிரதேசவாதமாக மதவாரியாக வர்க்க ஏற்றதாள்வாக முரண்படுகின்றது. இதற்குள் மிகப்பெரும் உட் கூறாக சாதியம் தனிமனித ஆழுமையை சிதைத்துவிட்டிருக்கின்றது. இதன் விழைவாக ஒருவனை ஒருவன் ஏற்று அனுசரிக்கமுடியாத பெதுக்குணம் ஒவ்வொருவரிடத்திலும் உளவியல் பிரச்சனையாக வளர்ந்துள்ளது. இவ்வாறன அடிப்படையில் தேசியவாதத்தின் தோற்றப்பாட்டை நாம் தோண்டிக்கொண்டுபோனால் எமக்குள் நாம் இரைதேடுவதே தேசியவாதமாக முடியும். இது ஒரு சகதி. சேற்றுக்குள் இருந்து தூய்மையாக எழுதல் என்பது சாத்தியமில்லை அந்தவகையில் தான் புலிகள் தலமையை புறநிலையில் சிங்களத்தின் நெருக்குவாரம் சார்ந்து மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அளப்பெரிய தியாகங்கள் வீர தீரச் செயல்கள் சிங்களத்தின் புறநிலை நெருக்குவாரத்தை சமாளித்தபோதும் அகநிலையில் எமது அடிப்படைத் தேசியத்தளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புலிகளின் காலத்தில் புத்திஜீவிகள் முரண்பட்டார்கள், மதம் சார்ந்து இஸ்லாமிய மக்கள் பிளவுபட்டார்கள், படிப்படியாக போராட்டத்தின் சுமை வர்க்க ரீதியில் வறியமக்களின் தோள்களில் விழுந்தது. பிரதேசவாதம் மீண்டும் புதியவடிவில் எழுந்தது. ஒருவனை ஒருவன் ஏற்க முடியாத உளவியல் மனோபாவம் எமக்குள் மோதல்களையும் உயிர் குடித்தலையும் புறநிலையில் சிங்களத்தின் நெருக்குவாரம் எல்லை மீறியபோதும் கருத்தளவில் ஒன்றுபடாத நிலையையும் தோற்றுவித்தது. இறுதியில் நாம் அழிந்தோம் முன்னை விட அடிமை நிலைக்கு தள்ளப்பட்டோம்.

ஆயுதப்போராட்டம் எமது தேசியவாதத்தின் அடித்தளத்தை மாற்றவில்லை. சிந்தனை முறையை அடிப்படையில் மாற்றவில்லை. இதனால்தான் பின்வருமாறு எழுதினேன்.

//இதே பாணியிலான தேசிய எழுச்சியும் அதற்கு வழிநடத்துனராக என்னுமொரு பிரபாகரனுக்குமான தோற்றப்பாட்டின் அவசியம் வன்னிக்குள்ளோ அல்லது கிழக்கு தமிழீழத்திலோ இல்லை. புதிய பாதைகள் காலப்போக்கில் உருவாகும். //

இந்தக் கருத்து பிரபாகரன் மீது பழிபோடுவதாக நான் எழுதவில்லை. எமது தேசியவாதம் சிந்தனை முறைமீது கேள்விகள் எழவேண்டும் என்னும் நோக்கிலேயே எழுதப்பட்டது.

தாயக மக்கள் தங்கள் புதிய பாதைக்கு பிள்ளையார் சுழிபோட்டுவிட்டார்கள்.

... எங்கு/எப்போ/என்ன பிள்ளையார் சுழி, தாயக மக்கள் போட்டதென்பதை சொல்லுங்கோ???? ... அங்கை பிள்ளையார் சுழியோ??? ஒரு கோவணச்சுழி போடக்கூட விடுவானோ சிங்களவன் உங்களை????

இங்கு எங்கடை கொஞ்சம் கற்பனை உலகிலும், இன்னொரு கொஞ்சம் சரணாகதி சிந்தனையிலும் இருக்கிறார்கள்!! ... சரி ஆயுதப்போராட்டம் தான் பிழைத்து விட்டது, அதற்காக அகிம்சை/ஜனநாயக ரீதியில் புலத்தில் எம்மால் செய்யக்கூடியவற்றையே குழப்பி அடிப்பதில் அவ்வளவு ...????

//மக்கள் இலங்கை அரசின் பிடிக்குள் இருக்கும் வரை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஊடாகத்தான் அவர்களை பலப்படுத்தமுடியும். //

இன்று நடைமுறையில் சிறிலங்கா அரசின் ஊடாக அல்லாமல் பல வழிகளில் உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

//சிங்கள பெருந்தேசியம் என்னும் வேலிக்கு ஊடாகத்தான் எமது மக்களை நெருங்க முடியும். இதை நாம் சிங்கள தேசியத்தை பலப்படுத்துவதாகவோ அல்லது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுவதாகவோ கருதி நிரகாரிப்போமாக இருந்தால் புலம்பெயர் கட்டமைப்புகளுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான அடிப்படைத்தொடர்பு இல்லாமல் போய்விடும். //

புலம் பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் எபோதுமே உறவு இருந்து கொண்டு தானே இருக்கிறது.இங்கே கட்டமைப்பு என்பது ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? சர்வதேச ரீதியான விடய்ங்களைக் கைய்யாள ஒரு அமைப்பு,புனர் வாழ்வைச் செய்ய இன்னொரு அமைப்பு என பல கட்டமைப்புக்கள் வெவ்வேறு தேவை கருதி இயங்க முடியும்.

//அந்த நிறுவனமே பின்னாளில் நாடுகடந்த அரசுக்கு ஒப்பான பலத்தை கொண்டிருக்க முடியும். தனி நபர் மற்றும் சிறு சிறு அளவிலான சுயாதீன அமைப்புகள் ஊடாக மக்களை பலப்படுத்த முடியும் ஆனால் மக்களை தேசிய உணர்வுடன் பலப்படுத்தமுடியாது. அதனால்தான் இந்த நா க அரசை புனர்வாழ்வு நிறுவனமாக இலங்கை அரசினூடகாவேனும் தாயகமக்களுடன் பிணையும் படியான கருத்தை வலியுறுத்தி எழுதுகின்றேன்.

//

மக்களின் தேசிய உணர்வு என்பதும் அதற்கான போரட்டத்திற்கான தேவை என்பதும் களத்தில் இருந்து தான் வரமுடியும் என்னும் போது, தேசிய உணர்வு என்பதை புலத்தில் இருந்து ஊட்டுவது என்பது முரணான வாதமாகப் படவில்லையா? நாடு கடந்த அரசு என்பது அதன் அடிப்படியிலையே சிறிலங்கா அரசிற்கு முரணான ஒரு அரசியல் அமைப்பு அது எங்கனம் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இயங்க முடியும்? சர்வதேச நலன் சார் அரசியலைப் பயன் படுதுவதும் அதற்குத் தேவையான பிரச்சாரங்களை செய்வது, தொண்டு நிறுவனக்களை ஒருங்கமைத்து புனர் வாழ்வு நடவடிக்கைக்ளை மேற்கொள்வது என்பனவற்றைத் தான் அதனால் செய்ய முடியும். நேரடியாக இயங்க அனுமதிக்க சிறிலங்கா அரசு ஒண்டும் தெரியாத மோட்டுச் சிங்களவன் அல்ல.

மைய வாதாம் என்றால் என்ன? ஒரு மைய்யத்தில் இருந்து வரும் கருத்துக்களா? கருத்துக்கள் ஒரு மையத்தில் இருந்து வராமல் பல மையங்களில் இருந்து வரட்டும்.இங்கே தமீழீழம் என்னும் கோரிக்கை யாழ் மையவாதக் கருத்து எனில், ஏன் இது எல்லா மையங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது? புற வயத்தில் சிங்களத் தேசியவாதம் வர்க்க சாதிய முரண்பாடுகளைக் கடந்து எல்லோரையும் ஒடுக்கியதால் எல்லோராலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டு அது ஒரு தேசிய மையவாதமாக உருப்பெற்றது.அதனையே புலிகள் தலமை ஏற்று போராட்டத்தை நடாத்தினர்.யாழ் மைய வாதக் கருத்தாக மட்டுமெ இது இருந்து இருந்தால், அவர்கள் மட்டும அதற்காகப் போராடி இருக்க வேண்டும்.ஏன் அவ்வாறு நடக்கவில்லை? ஏன் எனில் தமிழ்த் தேசியம் என்பது, சிங்களப் பேரினவாததால் உருவாக்கப்பட்ட ஒன்று.இன்று அது எந்த மக்களை அதிகம் ஒடுக்குகிறது? யாழ் மையவாத்தையா? இல்லையே.யாழ் மையவாதச் சக்திகள் புலம் பெயர்ந்து விட்டன அல்லது புலம் பெயர்ந்தவரின் பொருளாதார பலத்தில் தமக்கான பாதுகாப்பைத் தேடி விட்டன.தமிழீழம் என்பது அவர்களுக்கு அவசியம் அற்ற ஒரு தேசிய வாதம்.புலம் பெயர் தேசத்திலும்,யாழிலும் கொழும்பிலும், தமிழீழம் என்பது வழக்கற்று தேவையற்ற ஒரு விடயம் ஆகி இருப்பது அதனாலையே.இன்று அபிவிருத்தி பற்றிப் பேசுபவர்கள் வன்னி மக்கள் அல்ல, புலம் பெயர்ந்தவரும் யாழ் மையவாத தமிழருமே.காணிகளை அரசின் தயவில் வாங்கிக் குவிப்பவர்கள் புலம் பெயர்ந்த யாழ் மையவாத அடுக்கினரே.அவர்களே இன்று அரசுடனா சமரச அரசியலில் ஈடுபடுகின்றனர்.ஆகவே போராட்டத்திற்கான தேவை வன்னி மக்களிடமே இருக்கிறது.தமிழீழம் என்பது யாழ் மைய வாதமாக உருப்பெற்றாலும் ,ஆயுட்

அயூதப் போராட்டம்

ஆயுதப் போராட்டமும் புலம் பெயர்வும் ,போராட்டத்தின் மையச் சக்தியாக வன்னி மக்களையும், அவர்களின் அபிவிருத்தி பாதுகாப்பிற்க்குமான ஒரு அரசியற் கோட்பாடாக தமீழம் என்பதை மாற்றி விட்டிருந்தது.இன்று அது இல்லாத நிலமை அந்த மக்களையே அதிகம் பாதித்து இருக்கிறது.

எங்கே அதிகம் பாதிப்பும் தேவையும் இருக்கிறதோ அங்கிருந்து தான் போராட்டம் ஆரம்பமாகும்.அவர்களுக்குப் பக்க பலமாக நாம் இருப்பதைத் தான் எம்மால் செய்ய முடியும்.புலம் பெயர்ந்தவரின் பொருளாதார பலத்தால் புனர்வாழ் வழித்து அதன் மூலம் அவர்கள் ஒரு தேசியமாக உருப்பெற வேண்டும் முடியும் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்பாடானதோ அன்றி போராட்ட வரலாறோ அல்ல.என்றும் ஒருவனுக்காக இன்னொருவன் போராடப் போவதில்லை.ஒவ்வொருவனும் தனக்காகவே போராடுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

மைய வாதாம் என்றால் என்ன? ஒரு மைய்யத்தில் இருந்து வரும் கருத்துக்களா? கருத்துக்கள் ஒரு மையத்தில் இருந்து வராமல் பல மையங்களில் இருந்து வரட்டும்.இங்கே தமீழீழம் என்னும் கோரிக்கை யாழ் மையவாதக் கருத்து எனில், ஏன் இது எல்லா மையங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது?

சுகன் யாழ் மையவாதம் என்ற பதத்தைத் பாவித்த மாதிரித் தெரியவில்லையே.

எம்மைப்பொறுத்தவரை தேசியம் மையவாதக்கோவணத்துள் இருந்து புறப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டம்வரை கோலோச்சியது.
  • கருத்துக்கள உறவுகள்

... எங்கு/எப்போ/என்ன பிள்ளையார் சுழி, தாயக மக்கள் போட்டதென்பதை சொல்லுங்கோ???? ... அங்கை பிள்ளையார் சுழியோ??? ஒரு கோவணச்சுழி போடக்கூட விடுவானோ சிங்களவன் உங்களை????

மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தாயக மக்கள் பிள்ளையார் சுழிபோடவில்லை. தமது வாழ்விடங்கள், விவசாய நிலங்கள், மீன்பிடி உரிமைகள் என்று எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்கள், இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ளப் பிள்ளையார் சுழிபோட்டுவிட்டார்கள். பேரழிவுகளையும், அவலங்களையும் சந்தித்த வன்னி மக்கள் ஒருபுறம் அந்தரிக்கும் வேளையில், இன்னுமொரு புறத்தில் வெகு விமரிசையாகக் கோவில் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. தமிழ்த் தேசியத்தையும் முழுக்குப் போடக் காலம் அதிகமில்லை.

மக்களின் தேசிய உணர்வு என்பதும் அதற்கான போரட்டத்திற்கான தேவை என்பதும் களத்தில் இருந்து தான் வரமுடியும் என்னும் போது, தேசிய உணர்வு என்பதை புலத்தில் இருந்து ஊட்டுவது என்பது முரணான வாதமாகப் படவில்லையா? நாடு கடந்த அரசு என்பது அதன் அடிப்படியிலையே சிறிலங்கா அரசிற்கு முரணான ஒரு அரசியல் அமைப்பு அது எங்கனம் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இயங்க முடியும்? சர்வதேச நலன் சார் அரசியலைப் பயன் படுதுவதும் அதற்குத் தேவையான பிரச்சாரங்களை செய்வது, தொண்டு நிறுவனக்களை ஒருங்கமைத்து புனர் வாழ்வு நடவடிக்கைக்ளை மேற்கொள்வது என்பனவற்றைத் தான் அதனால் செய்ய முடியும். நேரடியாக இயங்க அனுமதிக்க சிறிலங்கா அரசு ஒண்டும் தெரியாத மோட்டுச் சிங்களவன் அல்ல.

உங்கள் புரிதல் வேறுவிதமாக உள்ளது. தேசிய உணர்வை புலத்தில் இருந்து ஊட்டுவதாக நான் குறிப்பிடவில்லை. ஊர் ஒன்றியங்கள் சமய அமைப்புக்கள் தனிநபர்கள் மூலம் தாயக மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் புலத்து மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையில் எவ்வகையான தேசிய உறவை தோற்றுவிக்கும்? இதுவே புலம்பெயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு தாயக மக்களுக்கு உதவும் போது அவர்கள் புனர்வாழ்வுக்கு உதவும் போது அந்த அமைப்பு தாயக மக்களின் பொருளாதராம் வாழ்வாதரத்துடன் சம்மந்தப்படுகின்றது. கருத்து புலம்பெயர் கட்டமைப்பிற்கு பலம்சேர்க்கும் என்றே என்னால் எழுதப்பட்டது.

தாயக மக்களுடன் எவ்வகையிலும் சம்மந்தப்படாமல் புலத்தில் ஒரு தமிழீழ அரசும் அதற்கு பிரதமர்கள் பாராளு மன்றம் என்று நடந்துகொள்வது சர்வதேச நலன்களை பயன்படுத்துவது என்பதெல்லாம் நடைமுறைக்கு எவ்வகையிலும் சாத்தியம் இல்லை. அடிப்படையில் தாயக மக்களுக்கும் புலத்துக் கட்டமைப்புகளுக்கும் தேசிய உணர்வுடனான ஒரு உறவு தொடர்பு வேண்டும். சர்வதேசம் தமது நலன்களுக்காக எம்மை பயன்படுத்துமளவுக்கு எமக்கு தகுதிவேண்டும். புலத்துக்கட்டமைப்புகளுக்கும் தாயக மக்களுக்குமிடையில் மிக இறுக்கமான உறவுவேண்டும்.

சர்வதேச நலன்களை தமிழ்த்தேசியம் சார்பாக எம்மால் பயன்படுத்தமுடியாது. அதற்கான அடிப்படை எம்மிடம் இல்லை. இது சார்வதேசத்திற்கும் நன்கு தெரிந்த ஒருவிடயம். முரண்பட்ட பொருளாதார பாதுகாப்பு போட்டி நிலைகளை கொண்ட அரசுகள் அனைத்தும் சிங்கள அரசின் விருப்பத்திற்கு ஏதுவாக நடந்துகொள்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. ஒரு நாடு தமது நலன்களுக்காகவேனும் எம்மை இனரீதியாக சிங்களத்திடம் இருந்து பிரித்து அணுக முடியும் என்னும் நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. எமது இனக்கட்டுமானம் மிகப் பலவீனமாக இருக்கும் வரை தனியரசு குறித்து சிந்திப்பதும் செயற்படுத்துவதும் அதற்காக சர்வதேச நலன்களை பயன்படுத்த முடியும் என்று கனவு காண்பதும் எம்மை நாமே அழிப்பதற்கு ஒப்பாகவே இருக்கும்.

இவற்றைப் பற்றி ஒரு துளியும் சிந்திக்காமல் எவ்வித கவலையும் இன்றி நாடுகடந்த தமிழீழ அரசு. நீங்கள் என்னத்தை தான் மல்லுக்கட்டினாலும் தனியரசு தமிழீழ அரசு நாடுகடந்த அரசு எல்லாம் யதார்த்ததுக்கு ஒத்துவரதாது. இவை எம்மை நாமே ஏமாற்றுவதற்கும் எம்மை நாமே அழிப்பதற்கும் நாமே வெட்டும் குழிகளாகவே இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் புலத்தில் இருந்துகொண்டு பிரிவினைவாதம் குறித்த கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. சிங்கள அரசுடன் முரண்படுவதில் உடன்பாடு இல்லை. ஒருவேளை தாயகமக்கள் மதவாரியான பிளவுகளை களைந்து பிரதேசவாரியான பிளவுகளை களைந்து தமது பூர்வீக நிலங்களில் பலம்பெற்ற நிலையில் பிரிவினைவாதம் குறித்து செயற்பட முற்பட்டால் அவ்வாறான செயற்பாடும் சிந்தனை முறையும் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் இருந்தும் வர்க்கரீதியில் கீழ்மட்டத்தில் இருந்தும் உருவாகுமாக இருந்தால் அவற்றின் பின்னால் செல்வதும் அவற்றை ஆதரிப்பதும் எனது கடமையாக கருதுகின்றேன். அதுவரை பிரிவினை வாதம் குறித்த சிந்தனைகளை புறந்தள்ளி தாயக மக்கள் பலம்பெறுவதற்கு அவர்களுக்கு உறுதுணையாய் நிற்பதே நேர்மையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.