Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்

நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு

எழுதறேன். நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. 'நல்லாயிருக்கீங்களா... எப்படி

இருக்கீங்க'ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள்

கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக்

கிடக்கிறோமண்ணா.

உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா...நான், என் அம்மா, என்

தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான்

அடைக்கப்பட்டோம். இங்கு வந்த மூன்றாவது நாள் என் அண்ணாவை இயக்கத்தை சேர்ந்தவர்ன்னு சொல்லி இழுத்துக்கிட்டு

போய்விட்டது சிங்கள ஆர்மி. என் அண்ணாவுக்கு 23 வயசு இருக்கும். என் அண்ணா இயக்கத்தை சேர்ந்தவனில்லை.

முல்லைத்தீவு மருத்துவமனையில் பணியாளனாக இருந்தான்.

இறுதி கட்டத்தில் நடந்த போர், அதன் பிறகு சித்தரவதைக் கூடங்களாக மாறிவிட்ட நலன்புரி முகாம்கள், அதில்

அடைத்து வைக்கப்பட்ட எங்கட சனங்களுக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் இந்த உலகத்துக்கு தெரிந்த மாதிரி

உங்களுக்கும் தெரிந்திருக்கும் அண்ணா. அன்னைக்கு நடந்ததையெல்லாம் இன்னைக்கு நினைவு படுத்தி உங்களையெல்லாம்

சோகப்படுத்த விரும்பலை.

ஆனா, முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட எங்க சனத்தோட நிலைமைகள் என்னன்னு இந்த உலகத்துக்கு தெரியுமா அண்ணா?

எந்த கொடுமைகள் தமிழ் பொண்ணுங்களுக்கு நடக்கக்கூடாதுன்னு தேசிய தலைவர் இயக்கம் கட்டினாரோ... அந்த

கொடுமைகள் இன்னைக்கு தடையில்லாம நடக்குது. செத்து செத்து பிழைக்கிறோம் அண்ணா. அதைச் சொல்லத்தான் இந்த

கடிதத்தை எழுதறேன். இந்த கடிதம் உங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ... தெரியாது. ஆனா, ஏதோ ஒரு

நம்பிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறன். நம்பிக்கைங்கிற ஒத்த வார்த்தை இன்னும் எங்கட சனங்க மனசுல

இருக்கிறதாலதான் இன்னமும் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கினம்.

6 மாதங்களுக்கு முன்பு முகாமிலிருந்து முல்லைத்தீவுக்கு 1500 பேர்களை கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போனார்கள்.

அவர்களோடு நாங்களும். முல்லைத் தீவு, ஒரு பசுமையான பிரதேசம். இன்னைக்கு பொட்டல் காடாக கிடக்கிறது.

வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள், மோட்டார் செட்டுகள், மருத்துவமனைகள் எல்லாம் இடிந்துபோய் சுடுகாடு மாதிரி

கிடக்கிறது. என்னையும் தாத்தாவையும் இழுத்துக்கிட்டு எங்க வீட்டைத் தேடி ஓடினாள் அம்மா. வீடு இருந்த

அடையாளமே தெரியலை. எல்லாம் சிதிலமடைந்து போயிருந்தது. எல்லா சனங்களும் இப்படித்தான் ஓடிஓடி

அலைஞ்சாங்க. யாருக்கும் எதுவும் கிடைக்கலை. ஆனா எங்கு பார்த்தாலும் ஆமிகாரன் நின்னுக்கிட்டு இருந்தான்.

மீள் குடியேற்றம் செய்து மக்களை குடியமர்த்தியிருக்கோம்னு சிங்கள அரசு சொல்லுது. ஆனா முல்லைத்தீவில் அப்படி

எதுவும் செய்யப்படலை அண்ணா. ஒரே ஒரு தகர சீட் கொடுத்தார்கள். அதை வைத்து எங்களையே வீடுகட்டிக்க

சொன்னது ஆமி. ஆமிக்காரனே....'நீ போய் அந்த இடத்துல கட்டிக்க... நீ இந்த இடத்த எடுத்துக்கோ'ன்னு பாகம்

பிரிச்சு கொடுத்தான். யாரோட இடத்தை எவன் பாகம் பிரிச்சு கொடுக்கிறதுன்னு கோபம் கோபமாக வந்தது அண்ணா.

ஆனா கோபத்தை காட்டமுடியுமா?

உங்க ஊரில் ஆடு மாடுகள் அடைச்சி வைக்க ஒரு பட்டி செய்திருப்பாங்க இல்லையா அண்ணா... அது மாதிரி பன

ஓலைகளால் வேயப்பட்ட மட்டைகளை வைத்து ஒரு பட்டியை அமைச்சிகிடுச்சி எங்கட சனம். அந்த பட்டிக்குள்லே...

சதுரமா மண் சுவரை நாலா புறமும் எழுப்பி அதன் மேல தகர சீட்டை கிடத்தி சின்னதா ஒரு குடிலை

கட்டிக்கிட்டாங்க. நாங்களும் அப்படியே ஒரு பட்டியும் அதுக்குள்ளே ஒரு குடிலையும் உருவாக்கிட்டோம். இந்த பட்டியும் குடிலும்

சில இடங்களில் பக்கத்தில் பக்கத்திலும் பல இடங்களில் தூரம் தூரமாகவும் இருக்கும்.

ஒரு டீக்கடை பெட்டிக்கடை கூட இங்கு இல்லை. எங்கட சனத்துக்கிட்ட யாரிடமும் காசும் கிடையாது. 10 நாளைக்கு

ஒரு முறை ஆர்மி வண்டியில் அரிசி, பருப்பு, காய்கறிகள் வரும். ஒரு குடிலுக்கு 1 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு

தருவாங்க. காய்கறிகல் கொஞ்சமே கொஞ்சம் தருவாங்க. உப்பு மட்டும் வரவே வராது. இன்னைக்கு வரைக்கும்

முல்லைத்தீவில் எங்கட சனம் உப்பு போடாமத்தான் சாப்பிடுது அண்ணா. ஒரு கிலோ அரிசியும் அரை கிலோ பருப்பும்

எத்தனை நாளைக்கு வந்து விடும்? பட்டினியும் பசியுமாகத்தான் எங்க நாட்கள் நகர்ந்துக்கிட்டு இருக்கு.

இப்போ முல்லைத்தீவில் 2000-த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆமிகாரன் நின்னுக்கிட்டு இருக்காங்க. அதே மாதிரி

முல்லைத்தீவில் தமிழ் இளைஞர்கள் ஒருத்தரும் இல்லையண்ணா. முல்லைத்தீவு முழுக்க பொண்ணுங்களும் அவங்களோட

அம்மாக்களும் வயதான தாத்தா பாட்டிகளும் மட்டும்தான் இருக்காங்க. இளைஞர்களையெல்லாம் வெவ்வேறு முகாம்களுக்கு

கடத்திட்டாங்க.

ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு

படுத்துக்கிடந்தேன். என் தாத்தா வெளியே படுத்திருந்தார். அப்போ 3 ஆமிக்காரன் பன ஓலையை பிரிச்சி எரிஞ்சிட்டு

உள்ளே வந்தான்கள். ஒவ்வொருத்தன் கையிலயும் பெரிய அளவிலான் துப்பாக்கி இருந்தது. அதை பார்த்த என் தாத்தா

எழுந்து, எதுக்கு உள்ளே வர்றீங்கன்னு பயத்துடன் கேட்டார். அப்போ ஒருத்தன், 'இன்னைக்கி அந்த பொண்ணை (என்னை)

பார்த்தேன். அவளை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இன்னைக்கு ராத்திரி அவ எங்களுக்கு வேணும். அதான் வந்தோம்' என்று

சொல்ல, அந்த சத்தத்தை கேட்டு நானும் என் அம்மாவும் வெளியே வந்தோம். 3 ஆமிக்காரன்களை பார்த்து அம்மா மிரண்டாள்.

எதுக்கு இங்க வந்தீங்கன்னு சத்தம் போட்டாள் அம்மா. அப்போ ஆமிக்காரன்களின் காலைப் பிடிச்சிக்கிட்டு...'வேணாம்...

வேணாம்...அவ சின்ன பொண்ணு... விட்டுடுங்க...'ன்னு கெஞ்சினார் என் தாத்தா. நானோ பயந்துபோய் என் அம்மா சேலைக்குள்ளே

புகுந்துகிட்டேன். தாத்தாவை எட்டி உதைச்சி தன் காலை உருவிக்கிட்ட ஆமிக்காரன்....'நாங்க வந்துட்டோம் ரொம்ப

பசியா இருக்கு... சாப்பிட்டுட்டுத்தான் போவோம்ங்கிறதின் அர்த்தம் அப்போதைக்கு எனக்கு விளங்கலையண்ணா.

மூணு பேரில் ஒருத்தன் என்னையும் ரெண்டு பேர் என் அம்மாவையையும் பிடித்து இழுத்தனர். என் தாத்தா, ஒரு கட்டையை

எடுத்து வந்து அவன்களை அடிக்க பார்த்தார். ஆனால் ஒருத்தன் அதனை தடுத்து என் தாத்தாவின் காலில்

துப்பாக்கியால் அடிக்க, அவர் அப்படியே விழுந்துவிட்டார். அதற்குள் இன்னும் 3 பேர் வந்து விட்டனர். எங்களை தூரமாக ஒரு

இடத்துக்கு இழுத்துப் போனார்கள். எவ்வளவோ திமிறியும் போராடியும் பார்த்தோம். முடியவில்லை. சுட்டு கொன்னுடுவோம்னு

மிரட்டினார்கள். நிலவு வெளிச்சம் படர்ந்த இடத்துக்கு இழுத்துப்போய்......?

இன்னைக்கு நான் 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அண்ணா. என் அம்மா சித்தபிரமை பிடித்த மாதிரி இருக்கிறாள்.

தாத்தா செத்துப்போயிட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறேன். என்னை மாதிரி இங்கு 13,

14 வயசு பொண்ணுங்க நிறைய பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள் அண்ணா. சிங்கள ஆமி காடைகள் பெண்களை

நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எங்க குடிலுக்கு அருகில் இருக்கும் குடிலில் ரெண்டு பொண்ணுகளோடு ஒரு தாய் இருக்கிறார். ஒரு வாரமா எதுவும்

சாப்பிடவில்லை அவர்கள். காரணம் ஆமி கொண்டு வந்த பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. குறைவாக பொருட்கள்

வந்ததால் பத்தவில்லை. அதனால் அவர்களுக்கு அரிசியும் பருப்பும் கிடைக்கவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு,

அரிசி தருவதாக கூறி அந்த பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய்... தங்களின் இச்சையை

தீர்த்துக்கொண்டனர். அதே சமயம் அம்மாக்கள் பலர், தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அரிசிக்காகவு,

ரொட்டிக்காகவும் சிங்கள ஆமிக்காரனின் இச்சைக்கு விருப்பப்ட்டே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். பகல் என்றோ இரவு என்றோ

பாராமல் தங்களுக்கு இச்சை வரும்போதெல்லாம் தமிழ் பொண்ணுங்களை - அதுவும் சின்ன சின்ன பொண்ணுங்களை

கற்பழித்துகொண்டிருக்கிறார்கள். ஆமிகாரனின் இந்த கொடுமைகளால் தாயும் மகளும் கர்ப்பமாக இருக்கும் அவலமும் இங்கு

இருக்கு அண்ணா. சின்ன வயசுலயே வயித்துல பிள்ளையை சுமக்கும் கொடுமையை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கீங்களா?

கர்ப்பத்தை கலைக்க முடியாமலும் கருவை சுமந்துகொண்டும் நான் படுற அவஸ்தையை வார்த்தையால் எப்படி

விவரிக்கிறதுனு புரியல் அண்ணா.

இங்கு ஒரு மருத்துவமனை மட்டும் இருக்கு. அதில் ஒரே ஒரு மருத்துவச்சி. ஆனா போதுமான மருத்துவ

உபகரணங்கள் எதுவும் இல்லை. என் வயித்துல வளரும் சிங்களவனின் கருவை கலைச்சிடலாமுன்னு மருத்துவமனைக்கு

போனேன். ஆனா மருத்துவச்சி கலைக்க மறுத்துட்டாள். காரணம்.... இலங்கையில் கருவை அழிப்பது

சட்டவிரோதமாம். அதனால் கருவை கலைக்க முடியாதுன்னு கூறிவிட்டாள் மருத்துவச்சி. கரு வளரும்... அதை

முறையா பராமரிக்கலைன்னா உயிருக்கு ஆபத்துன்னும் சொல்லி பயமுறுத்துறா மருத்துவச்சி. இந்த கொடுமைகளை

அனுபவிக்கிறதுக்கு போரிலேயே நாங்க செத்துப்போயிருக்கலாம் அண்ணா.

வெளியிலயும் நடமாட முடியவில்லை. 20 அடிக்கு ஒரு ஆமிக்காரன் நிக்கிறான். நடந்து போனா... கூப்பிட்டு வச்சு

கிண்டலும் கேலியும் பேசறான். 10 நாளைக்கு முன்னால தண்ணி எடுத்து வர... வெளியே வந்தேன். நடந்து போய்க்கிட்டு

இருந்தேன். ஒரு இடத்தில் ஒரு அக்காவை வழி மறிச்சி கேலி பேசின ஆமிக்காரன், அந்த அக்காவின் உறுப்புகளை தொட்டு

தொட்டு ஆபாசமாக நடந்துக்கிட்டான். அவன் கையை தட்டிவிட்டு அழுதுகொண்டே இருந்தது அந்த அக்கா. தட்டிவிட்ட

அந்த கையை ஒரு ஆமிக்காரன் துப்பாக்கியால் அடித்தான். அந்த நேரம் என்கிட்ட ஒரு துப்பாக்கி இருந்திருக்க வேண்டும்.

இல்லையே. ரொம்ப நேரம் ஆபாசமா நடந்துகிட்ட ஆமிக்காரன்... இன்னைக்கு ராத்திரிக்கு வீட்டுக்கு வருவேன்... என்று சொல்லி

அனுப்பி வைத்தான். பயந்துகொண்டே அந்த அக்காள் ஓடினாள்.

இப்படி அவனுங்க கொடுமைகளை செய்யும்போதுகூட அவன்களிடம் ஒரு பயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒருமுறை

ரெண்டு பேர் பேசிக்கிட்டிருந்ததை கேட்டேன். அந்த பேச்சில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பாதாகவும் நம்

அரசாங்கம் நம்மளை ஏமாத்திக்கிட்டு இருப்பதாகவும் பேசிக்கொண்டனர். தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக

அவர்கள் நம்புவதால் வந்த பயமாகக்கூட இருக்கலாம். சாலைகளை செப்பனிட்டு தருவதற்காக

சைனாகாரன்களையும் நிறைய இங்கு இறக்கி விட்டிருக்காங்க. அவன்களும் ஆமிக்காரன்களோடு சேர்ந்து எங்களை

நாசப்படுத்திக்கிட்டு இருக்காங்க அண்ணா. மீள் குடியேற்றம்ங்கிற பேரில் முகாமிலிருந்து முல்லைத்தீவுக்கு கொண்டு

வந்து விட்டாங்க. ஆனா முல்லைத்தீவே ஒரு முகாமாகத்தான் இப்போ இருக்கு. இங்குள்ள எங்கட சனங்கள்

ஊமைகளாகவு, மனநோயாளிகளாகவும் இருக்கிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் பேசியே பல நாட்கள் ஆகின்றன். சிரிப்பை

தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது அண்ணா. தமிழர்கள் எல்லாம் அவரவர்கள் சொந்த இடங்களில்

குடியமர்த்தப்பட்டிருப்பதாக சிங்கள அரசு சொல்வதை நம்பாதீர்கள். வதைமுகாமில் அனுபவித்த அத்தனை

இடர்களையும் முல்லைத்தீவுக்குள அனுபவித்துக் கொண்டி இருக்கிறோமண்ணா.

முல்லைத்தீவுக்குள் ஒரு தொண்டு நிறுவனமோ, செஞ்சிலுவை சங்கமோ, ஊடகமோ எதுவும் இங்கே வரமுடியாது. வரவும்

இல்லை. வருவதற்கு அனுமதி கொடுக்கவும் மறுக்கிறது சிங்கள அரசாங்கம். என்ன பாவம் அண்ணா நாங்கள் செய்தோம்.

தமிழராய் பிறந்ததை தவிர நாங்கள் செய்த பாவம்தான் என்ன?

ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். முல்லைத் தீவிலிருந்து இந்தக் கடிதம் வெளியே வந்து

உங்கள் கைகளுக்கு கிடைக்குமானால் முல்லைத்தீவில் நடக்கும் அவலத்தை வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா."

இப்படிக்கு

சிங்களவன் கருவைச் சுமக்கும் அபலை

அதீதி

http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=7389

Muthamizh

Chennai

மனத்தை பிழியும் ஒரு கடிதம்.

இது பொய்யாக இருக்காதா என மனம்/இதயம் வேண்டுகின்றது. ஆனால் உண்மையாகத்தான் இருக்கும் என என் தலை சொல்லுகின்றது.

இவர்களை காப்பற்ற, இவர்களுக்கு உதவ யாராலும் முடியாமல், விரும்பாமல் உள்ளார்கள் என எண்ணும்போது உலகத்தமிழரின் (எழுபது கோடி!) மீது (என்மீது முதல்கொண்டு ) கோபம் எழத்தான் செய்கிறது

Edited by akootha

.

தமிழ் நாட்டில் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக இருந்த நண்பர்கள் கூறுவார்கள்.எமது பிரச்சனையை எப்படி விளங்கப் படுத்தினாலும் தமிழ்நாட்டு தமிழனுக்கு விளங்கமாட்டுதாம்.தரப்படுத்தல்,தனிச்சிங்களச் சட்டம்,அரசியல் அமைப்பு மாற்றங்கள் இப்படி எதை பேசினாலும் என்னடா இது பிரசனை என்றமாதிரி இருப்பார்களாம்.அடிகிறான் வெட்டுகின்றான் என்றால் கொஞ்சம் காதை கொடுப்பார்களாம்.பெண்களிலும் கையை வைக்கின்றான் என்றால் துடிச்சுபோய் விடுவாங்களாம்.அதற்காக தாங்கள் நேரத்தை சும்மா பிரச்சனைகளி சொல்லி வீணாக்காமல் உடனேயே 12,14 வயது சிறுமிகளை 4,5 ஆமிக்காரன் சேர்ந்து கொடுமைப்படுத்தினான் என்றும் அத்துடன் சில வர்ணிப்புக்களையும் கொடுத்தாத்தான் தமிழ்நாட்டுக்காரன் பொங்கியெழுவான்.

தமிழ் நாட்டுக்காரர்களுக்காக தமிழ்நாட்டுகாராரால் எழுதப்பட்ட கடிதம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் கடிதத்தை தமிழ்நாட்டுக்காரர் தமிழ்நாட்டுத் தமிழரக்கு விளங்கக்கூடிய பாணியில் எழுதி இருக்கலாம் ஆனா அங்கு நாளாந்தம் நடக்கும் உண்மைகள் அதற்குள் அடங்கியிருக்கின்றன என்பதை நானும் நீங்களும் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் நாட்டில் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக இருந்த நண்பர்கள் கூறுவார்கள்.எமது பிரச்சனையை எப்படி விளங்கப் படுத்தினாலும் தமிழ்நாட்டு தமிழனுக்கு விளங்கமாட்டுதாம்.தரப்படுத்தல்,தனிச்சிங்களச் சட்டம்,அரசியல் அமைப்பு மாற்றங்கள் இப்படி எதை பேசினாலும் என்னடா இது பிரசனை என்றமாதிரி இருப்பார்களாம்.

இது ஒக்கே...

.

அடிகிறான் வெட்டுகின்றான் என்றால் கொஞ்சம் காதை கொடுப்பார்களாம்.பெண்களிலும் கையை வைக்கின்றான் என்றால் துடிச்சுபோய் விடுவாங்களாம்.அதற்காக தாங்கள் நேரத்தை சும்மா பிரச்சனைகளி சொல்லி வீணாக்காமல் உடனேயே 12,14 வயது சிறுமிகளை 4,5 ஆமிக்காரன் சேர்ந்து கொடுமைப்படுத்தினான் என்றும் அத்துடன் சில வர்ணிப்புக்களையும் கொடுத்தாத்தான் தமிழ்நாட்டுக்காரன் பொங்கியெழுவான்.

தமிழ் நாட்டுக்காரர்களுக்காக தமிழ்நாட்டுகாராரால் எழுதப்பட்ட கடிதம்.

அப்போ இதெல்லாம் இப்ப நடக்கலியா? ரைட்டு நீங்க சொன்னா ஒக்கெ :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம் தலை தூக்கியதால்...

மக்களைக்காக்க யேசு வந்தார்

மனிதன் அவரின் அருமை புரியாது கொன்றான்

அவர் செத்தபின்தான் அவர் தன்னைக்காக்க வந்த கடவுள் என்றறிந்தான்.

அவரைத்தொழும் கூட்டம் இன்று அநியாயத்தை அரவணைத்தபடி

எம் கடவுளை அழித்தார்கள்.

அதை நாமும் பார்த்துக்கொண்டிருந்தோம்

நாம் போராடாவிட்டால்

என்ன வெல்லாம் நடக்கும் என்று கடவுள் சொன்னாரோ அதெல்லாம் இனி நடக்கும்

அதில் எமக்கும் பங்குண்டு

இனி அழுது அழுது அழிவதைத்தவிர...

இன்னொரு கடவுள் வரமாட்டார்

ஏனெனில்தந்ததை நாம்; பாதுகாக்க தவறிவிட்டோம்

அர்ஜீன் கடிதத்தை தமிழ்நாட்டுக்காரர் தமிழ்நாட்டுத் தமிழரக்கு விளங்கக்கூடிய பாணியில் எழுதி இருக்கலாம்

ஆனா அங்கு நாளாந்தம் நடக்கும் உண்மைகள் அதற்குள் அடங்கியிருக்கின்றன என்பதை நானும் நீங்களும் மறுக்க முடியாது.

அதற்காக தாங்கள் நேரத்தை சும்மா பிரச்சனைகளி சொல்லி வீணாக்காமல் உடனேயே 12,14 வயது சிறுமிகளை 4,5 ஆமிக்காரன் சேர்ந்து கொடுமைப்படுத்தினான் என்றும் அத்துடன் சில வர்ணிப்புக்களையும் கொடுத்தாத்தான் தமிழ்நாட்டுக்காரன் பொங்கியெழுவான்.

தமிழ் நாட்டுக்காரர்களுக்காக தமிழ்நாட்டுகாராரால் எழுதப்பட்ட கடிதம்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

இதுதான் மாற்றுக்கருத்து

அல்லது

புலிக்காய்ச்சல்

Edited by விசுகு

தெளிவாக ஒருவிடயத்தை சொல்லுகின்றேன்.சிங்கள அரசு எம்மை அழிக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.தமிழனுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதிலும் மாற்று கருத்திற்கு இடமில்லை.கேட்டுக் கேட்டு பார்த்து ஒன்றும் கிடைக்காதபடியால் தான் ஆயுதம் தூக்கினோம்.அதும் நியாயமானதுதான்.(நானும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு போனனான் தான்).

அதற்காக நாங்கள் செய்தது,செய்வது சொன்னது,சொல்வது எல்லாம் சரியென்றும் இல்லை.உண்மையென்றும் இல்லை

உலகம் எங்களை திரும்பி பார்க்காமல் விட்டது ஏன் என ஒருமுறை சிந்தித்து பாருங்கள்.மகிந்தாவை அவர்கள் தூக்கி கொண்டாடவில்லை ஆனால் மகிந்தாவை விட எங்களில் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.ஏன்? நாங்கள் உண்மையானவர்களில்லை என அவர்கள் புரிந்துவிட்டார்கள்.நாங்கள் மாத்திரம் எங்களை கெட்டிக்காரர்களென நினைக்கின்றோம்.(யூதனை வேறு அதற்குள் இழுக்கின்றோம்).

பல விடயங்க்ள் எங்களுக்கு இன்னமும் தெரியாது.அறியும் அக்கறையும் இல்லை.இனத்துவேசத்தை பரப்பி எமது மக்களின் மனதில் மட்டும் குடிகொள்ள நினைக்கின்றோம்.மேற்கத்தைய நாடுகள் உலகம் முழுக்க என்ன நடக்கின்றது என அறிய எம்பசிகளுக்கூடாக அன்றாடம் றிப்போட்டுகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.(நாங்கள் ஏதோ விஸா கொடுக்கத்தான் எம்பசி என்ற நினைப்பில் இருக்கின்றோம்).டெல்கியில் இருக்கும் போது அறிந்து கொண்டது ஒவ்வொரு எம்பசியிலும் ஆயிரெத்தெட்டு பிரிவு.இதற்கென்று சகல பிரசனைகளையும் படித்து அறிந்து ஆராய அந்தத்த துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள்.நாங்கள் அவங்களுக்கு ஒண்டும் தெரியாது என்றநினைப்பில் விரும்பின விரும்பின மாதிரி அறிக்கைகள்.பீகாரில் கிட்னியை எடுத்த படத்தை போட்டு அகதி முகாமில் நடக்கின்றதென்று பிரச்சாரம்.இதைதான் 83 மூண்ரில் இருந்து செய்துகொண்டிருக்கின்றோம்.ஒன்றை பத்தாக்கி ஒன்றுமில்லாத மாதிரி பண்ணுகின்றோம்.சொன்னால் எழுதினால் துரோகி மாற்றுக் கருத்து.

உண்மையாக வாழுவோம் உண்மையை சொல்லுவோம் உலகம் எங்களை நம்பும்.நாட்டில் தேர்தலுக்கும்,இங்கு காசு சேர்ப்பதற்குமே எமது பிரச்சாரம் பயன்படுமே ஒழிய எமது விடிவிற்கு அல்ல.

உண்மையாக வாழுவோம் உண்மையை சொல்லுவோம் உலகம் எங்களை நம்பும்

நாட்டில் தேர்தலுக்கும்,இங்கு காசு சேர்ப்பதற்குமே எமது பிரச்சாரம் பயன்படுமே ஒழிய எமது விடிவிற்கு அல்ல.

நாம் அனைவருமே கீழ் உள்ள எல்லாவற்றையும் இல்லை எதாவது ஒன்றை செய்யலாம்:

-இல்லை எம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை ஒற்றுமை ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை மொழி ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

valluvar1.jpg

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று. :wub:

இந்த காலத்தில் காசிருப்பவன் ... வலிமையிருப்பவன் சொன்னால் பொய் கூட உண்மையாகிவிடுகிறதாமே ...உண்மையா?

saddam_hussein_hanging_video.jpg

0002014F.gif

டிஸ்கி:

உண்மை பொய் என்பதற்காப்பால் மற்றவன் காது கொடுத்து கேட்பதற்கும் இந்த காலத்தில் காசு வேணும்....நீங்க வலிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக எழுதபட்டது... :lol: ரைட்டு :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவாக ஒருவிடயத்தை சொல்லுகின்றேன். சிங்கள அரசு எம்மை அழிக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.தமிழனுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதிலும் மாற்று கருத்திற்கு இடமில்லை.கேட்டுக் கேட்டு பார்த்து ஒன்றும் கிடைக்காதபடியால் தான் ஆயுதம் தூக்கினோம்.அதும் நியாயமானதுதான். (நானும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு போனனான் தான்).

அதற்காக நாங்கள் செய்தது,செய்வது சொன்னது,சொல்வது எல்லாம் சரியென்றும் இல்லை.உண்மையென்றும் இல்லை

உலகம் எங்களை திரும்பி பார்க்காமல் விட்டது ஏன் என ஒருமுறை சிந்தித்து பாருங்கள்.மகிந்தாவை அவர்கள் தூக்கி கொண்டாடவில்லை ஆனால் மகிந்தாவை விட எங்களில் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.ஏன்? நாங்கள் உண்மையானவர்களில்லை என அவர்கள் புரிந்துவிட்டார்கள்.நாங்கள் மாத்திரம் எங்களை கெட்டிக்காரர்களென நினைக்கின்றோம்.(யூதனை வேறு அதற்குள் இழுக்கின்றோம்).

பல விடயங்க்ள் எங்களுக்கு இன்னமும் தெரியாது.அறியும் அக்கறையும் இல்லை.இனத்துவேசத்தை பரப்பி எமது மக்களின் மனதில் மட்டும் குடிகொள்ள நினைக்கின்றோம்.மேற்கத்தைய நாடுகள் உலகம் முழுக்க என்ன நடக்கின்றது என அறிய எம்பசிகளுக்கூடாக அன்றாடம் றிப்போட்டுகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.(நாங்கள் ஏதோ விஸா கொடுக்கத்தான் எம்பசி என்ற நினைப்பில் இருக்கின்றோம்).டெல்கியில் இருக்கும் போது அறிந்து கொண்டது ஒவ்வொரு எம்பசியிலும் ஆயிரெத்தெட்டு பிரிவு.இதற்கென்று சகல பிரசனைகளையும் படித்து அறிந்து ஆராய அந்தத்த துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள்.நாங்கள் அவங்களுக்கு ஒண்டும் தெரியாது என்றநினைப்பில் விரும்பின விரும்பின மாதிரி அறிக்கைகள்.பீகாரில் கிட்னியை எடுத்த படத்தை போட்டு அகதி முகாமில் நடக்கின்றதென்று பிரச்சாரம்.இதைதான் 83 மூண்ரில் இருந்து செய்துகொண்டிருக்கின்றோம்.ஒன்றை பத்தாக்கி ஒன்றுமில்லாத மாதிரி பண்ணுகின்றோம்.சொன்னால் எழுதினால் துரோகி மாற்றுக் கருத்து.

உண்மையாக வாழுவோம் உண்மையை சொல்லுவோம் உலகம் எங்களை நம்பும்.நாட்டில் தேர்தலுக்கும்,இங்கு காசு சேர்ப்பதற்குமே எமது பிரச்சாரம் பயன்படுமே ஒழிய எமது விடிவிற்கு அல்ல.

முதல் சொன்னவை நிஐம் என்பதாலும்

அதற்கு கீழ் குறிப்பிட்டவற்றை ஏற்காவிட்டாலும் தோற்றுப்போனோம் என்பதாலும்

எதுவாக இருந்தாலும் மக்களின் விடிவே லட்சியம் என்பதாலும்

தற்போது தங்களுடன் பேசவும் ஒன்று சேர்ந்து அதற்காக உழைக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்

Edited by விசுகு

புலம்பெயர் எம்மக்கள் இன்னமும் தெளிவடைய விரும்பவில்லை. தெளிவு வரும்போது நாம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவாக ஒருவிடயத்தை சொல்லுகின்றேன்.சிங்கள அரசு எம்மை அழிக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.தமிழனுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதிலும் மாற்று கருத்திற்கு இடமில்லை.கேட்டுக் கேட்டு பார்த்து ஒன்றும் கிடைக்காதபடியால் தான் ஆயுதம் தூக்கினோம்.அதும் நியாயமானதுதான்.(நானும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு போனனான் தான்).

அதற்காக நாங்கள் செய்தது,செய்வது சொன்னது,சொல்வது எல்லாம் சரியென்றும் இல்லை.உண்மையென்றும் இல்லை

உலகம் எங்களை திரும்பி பார்க்காமல் விட்டது ஏன் என ஒருமுறை சிந்தித்து பாருங்கள்.மகிந்தாவை அவர்கள் தூக்கி கொண்டாடவில்லை ஆனால் மகிந்தாவை விட எங்களில் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.ஏன்? நாங்கள் உண்மையானவர்களில்லை என அவர்கள் புரிந்துவிட்டார்கள்.நாங்கள் மாத்திரம் எங்களை கெட்டிக்காரர்களென நினைக்கின்றோம்.(யூதனை வேறு அதற்குள் இழுக்கின்றோம்).

பல விடயங்க்ள் எங்களுக்கு இன்னமும் தெரியாது.அறியும் அக்கறையும் இல்லை.இனத்துவேசத்தை பரப்பி எமது மக்களின் மனதில் மட்டும் குடிகொள்ள நினைக்கின்றோம்.மேற்கத்தைய நாடுகள் உலகம் முழுக்க என்ன நடக்கின்றது என அறிய எம்பசிகளுக்கூடாக அன்றாடம் றிப்போட்டுகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.(நாங்கள் ஏதோ விஸா கொடுக்கத்தான் எம்பசி என்ற நினைப்பில் இருக்கின்றோம்).டெல்கியில் இருக்கும் போது அறிந்து கொண்டது ஒவ்வொரு எம்பசியிலும் ஆயிரெத்தெட்டு பிரிவு.இதற்கென்று சகல பிரசனைகளையும் படித்து அறிந்து ஆராய அந்தத்த துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள்.நாங்கள் அவங்களுக்கு ஒண்டும் தெரியாது என்றநினைப்பில் விரும்பின விரும்பின மாதிரி அறிக்கைகள்.பீகாரில் கிட்னியை எடுத்த படத்தை போட்டு அகதி முகாமில் நடக்கின்றதென்று பிரச்சாரம்.இதைதான் 83 மூண்ரில் இருந்து செய்துகொண்டிருக்கின்றோம்.ஒன்றை பத்தாக்கி ஒன்றுமில்லாத மாதிரி பண்ணுகின்றோம்.சொன்னால் எழுதினால் துரோகி மாற்றுக் கருத்து.

உண்மையாக வாழுவோம் உண்மையை சொல்லுவோம் உலகம் எங்களை நம்பும்.நாட்டில் தேர்தலுக்கும்,இங்கு காசு சேர்ப்பதற்குமே எமது பிரச்சாரம் பயன்படுமே ஒழிய எமது விடிவிற்கு அல்ல.

அர்ஜீன் இந்தக்கடிதத்தில் உங்களுக்கு இனத்துவேசத்தை உண்டுபண்ணும் விதமாக ஏதேனும் இருக்கிறதா? சிங்கள அரசு சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய இனத்துவேசத்தைப் பரப்பி தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தமிழராய் இருந்துகொண்டு இப்படி பேசுவதற்கு இத்திரியில் அப்படியான தாக்கம் உள்ள பகுதியைப் பிரித்துக்காட்டுங்கள். நீங்கள் எங்கெங்கு வாழ்கிறீர்களோ அங்கங்கெல்லாம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் தாயகத்தின் இன்னல்களை எடுத்துச் சொல்லுங்கள் என்பதே விடுதலைப்புலிகளின் தலைமைத்துவ வேண்டுகோளாக இன்றுவரை இருக்கிறது. உலகம் எங்களைத்திரும்பிப் பார்க்காமல் விட்டது நீங்கள் உருவகிக்கும் இந்தச் சில்லறைக் காரணங்களால் அல்ல. பொதுவாக இலங்கை என்ற ஒரு வனப்பான தீவை ஒவ்வொரு வல்லரசுகளும் தமக்கு ஏதோ வகையில் பங்குடையதாக ஆக்கிக் கொள்வதற்காகவே அன்றி நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டிற்காக அல்ல... உலகத்தின் பங்கு பிரிக்கும் முயற்சிக்கு பாரிய தடையாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமே ஆதலால்தான் ஒட்டுமொத்தமாக இணைந்து பாரிய இனவழிப்பு ஒன்றை சிங்கள அரசு செய்தபோது அத்தனை நாடுகளும் மௌனித்துக்கிடந்தன.

அடுத்து இத்தகைய ஒரு கடிதத்தின் மூலம் எவ்வளவு பணத்தை யார் திரட்ட முடியும்?

நன்றி தாயே தங்கள் நேரத்துக்கு...

குடும்பத்துக்குள் ஒருவன் தவறான வழியில் சென்றால்....

குடும்பத்துக்கு கெட்டபெயர் வந்துவிடுகிறது

ஆனால் அவனையும் அரவணைத்துச்செல்லவேண்டும் என்கின்ற பொறுப்பை அந்த குடும்பம் இழந்தால்....

அதற்கும் பதில் சொல்லியாக வேண்டும்

அர்ஜுன் வாங்கிய சுளைக்கு ஊளையுடுகிறது அவ்வளவுதான்.

தற்போது தமிழர் விடுதலையை எதிர்க்கும் எந்த தமிழனும் துரோகிதான், அர்ஜுன் என்ன விசுகு என்ன, இசை என்ன யாராக இருந்தாலும்.

உங்களால் சிங்களவனிடம் உங்கள் மனைவி பிள்ளைகளை காப்பாற்ற முடியுமோ? முடியாது இங்க வந்து காட்டு கத்து கத்துறியள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளா ஒரு கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா நாராயணா!!!!!

நான் திம்புவுக்கு போனன், டில்லில நிண்டு அத புடுங்கினன், இத புடுங்கினன், சப்பப்பப்பா..... தாங்கமுடியலடா சாமி.

நலன் சார்ந்து இயங்கும் இந்த உலகில் வல்லரசுகளின் நலன்களுக்கு குறுக்காக நின்றால் 100% தர்மம் இருந்தால் கூட வெட்டி சரித்துவிடும் அடிப்படை உண்மையை கூட விளங்காத அறிவிலிகளுக்கு .... திம்புவென்ன டில்லியென்ன எந்த மண்ணாங்கட்டி இடத்திலும் புத்தி வராது.

இப்ப புரியுதோ

திம்பு பேச்சுவார்த்தை ஏன்? யாரால் சறுக்கியது என்று....?

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சொன்னவை நிஐம் என்பதாலும்

அதற்கு கீழ் குறிப்பிட்டவற்றை ஏற்காவிட்டாலும் தோற்றுப்போனோம் என்பதாலும்

எதுவாக இருந்தாலும் மக்களின் விடிவே லட்சியம் என்பதாலும்

தற்போது தங்களுடன் பேசவும் ஒன்று சேர்ந்து அதற்காக உழைக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்

ஆமென்.

இப்ப தேவை தனிய உணர்ச்சி அரசியல் மட்டும் இல்லை.உதவி அரசியலும். :wub:

30 வருடமாக உண்மைகளைவிட உண்மைகள் மாதிரியானவை காதிற்குள் திரும்ப திரும்ப ஊத்தப்பட்டு பல பேருக்கு அதுவே உண்மைகள் என்றாகிவிட்டது.

சகாரா அக்கா உங்களை எனக்கு இளையபாரதி வானொலி காலம் தொட்டே தெரியும்(நேரில் கண்டதில்லை).வெட்ட வெளியில் கொட்டிக்கிடக்கின்றதுவும்,விமர்சகர் விருப்பமும் விடாமல் கேட்ட நாட்கள்.பின்னர் கலாதரன் வானொலியிலும் தொடர்ந்தீர்கள்.

இந்தக் கடிதம் முழுக்க முழுக்க பொய்யானதென்று நக்கீரனின் நம்பகத்தன்மையும்,அதை எழுதியவிதமுமே சொல்லி நிற்கின்றது.அநியாயங்கள் அங்கு நடக்கக்கின்றதென அனைத்து தமிழருக்கும் தெரியும்.அதை எப்படி நிற்பாட்டுவது என்பது தான் கேள்வி.

வெறும் உணர்சியில் மூன்றாம் தர அரசியல் செய்து எதுவும் சாதிக்கமுடியாது.வல்லரசு இலங்கையை பங்கு போட புலிகள் தடையாஇருக்கின்றார்கள் என்பது இது கூட எமது ஆய்வாளர்களால் தோல்விக்கு பின் உருவாக்கப்பட்ட ஒரு மாயை.விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என தங்களே தம்மை திருப்திப் பட்டு கொள்ளுதல்.

விடுதலைபுலிகளுக்கு முதல் இலங்கை என்ன பாலைவனமாகவா இருந்தது?.

வல்லரசுகளுக்கு தேவையெனில் ஒரு நிமிட வேலை இலங்கையை தம் வசப்படுத்துவது.

சிங்கள அரசுக்கள் இந்தியாவை வெறுப்பது போல் நாம் வெறுக்கவில்லை.ஆனால் ஜே.அர் ஆகட்டும்,சந்திரிகா ஆகட்டும்,ரனில் ஆகட்டும் இப்போ மகிந்தா ஆகட்டும் உள்ளுக்குள் எவ்வளவு வெறுப்பை வைத்திருந்தாலும் போலியான சிரிப்புடன் கையை குலிக்கி முடிந்ததை சாதிக்கின்றார்கள்.கொஞ்சம் எகிறினாலும் ஏதாவது ஒரு வழியில் இந்தியா தங்கள கவிழ்த்துவிடும் என்று அவர்களுக்கு தெரியும்.உலக அரசியலின் அரிச்சுவடியே இதுதான்.

ராஜீவின் கொலையுடன் தலைவரை இந்தியா எப்படியும் ஒரு நாள் தூக்கும் என்பது பலருக்கும் தெரியும்.வேளை வரமட்டும் சோனியா காத்திருந்தார்.கொமன் வெல்த் இறுதி நிகழ்ச்சிக்கு ராஜபக்சாவை கூப்பிட்டதே அந்த நன்றிக் கடனுக்குத்தான்.(பிரியங்கா நளினியை சந்திக்க போகும் போதே என்னவோ நடக்கப் போகின்றதென்று புரிந்துவிட்டது).

எமது பிரச்சனை ஒரு மாபெரும் அரசியல்போராட்டம்.சும்மா நாலு பேர் நடாத்தும் நாடகமல்ல.சம்பந்தருக்கு தெரியாமலா உந்த அரசியல் நடாத்துகின்றார்.வேளைவரும் போது தேவையானதை பெற்றுவிடவேண்டும்.நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எதுவும் சாத்தியம்.

இங்கு பலரின் கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானதும்,உணர்சிமயமானதும் அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் எழுதுகின்றார்கள்.கருத்து சுதந்திரம் கட்டாயம் தேவை .எனக்கு தெரிந்ததை சரியெனப் பட்டதை நான் எழுதுகின்றேன்.சும்மா வீண்விலாசத்திற்கல்ல.

அமெரிக்காவில் ராஜபக்சாவின் வரவேற்புகூட்டத்தில் உரையற்றிய அந்த தமிழனின் உரையை கேளுங்கள்.அவன் தமிழன்.எங்களுக்க விலாசம் விடாமல் ராஜபக்சாவிற்கு முன் யதார்த்தத்தை உண்மையை ஆணித்தரமாக சொல்லுகின்றார்.

பேச்சு முடிய "ஸ்டான்டிங் ஒவேர்சன்".அங்கு இருந்தது பெரும்பாலானோர் சிங்களவர்.உண்மை எவராலும் தம்மை அறியாமல் உணரப்படும்.

அர்ஜுன், ... இங்கு எந்தத்திரியில் நீர் எழுதினாலும் ... புலி பிழை, புலி பிழை ... அதே பாட்டுத்தான்! சரி புலியும் பிழை விட்டதுதான்! இன்று அழிந்து விட்டது! இந்த 60வருடங்களுக்கு மேலான இனப் பிரட்சனைகளுக்கு தீர்வு என்ன????? அங்கு இன்றும் எம்மக்கள் படும் அவலங்களுக்கு முடிபு எப்போ???? சிங்களம் இந்த பிரட்சனைக்கு தமிழ்மக்கள் சமாதானத்துடனும்/உயிர்பயமற்றும் தம் நிலங்களில் சுதந்திரமாக வாழ ஒரு தீர்வை தருமா????? ... இப்படி பலர் பல கேள்விகளை உங்களை நோக்கி பல திரிகளில் தொடுத்தாச்சு, நீங்களோ அவற்றிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறீர்கள்!!!

அமெரிக்காவில் ராஜபக்சாவின் வரவேற்புகூட்டத்தில் உரையற்றிய அந்த தமிழனின் உரையை கேளுங்கள்.அவன் தமிழன்.எங்களுக்க விலாசம் விடாமல் ராஜபக்சாவிற்கு முன் யதார்த்தத்தை உண்மையை ஆணித்தரமாக சொல்லுகின்றார்.

பேச்சு முடிய "ஸ்டான்டிங் ஒவேர்சன்".அங்கு இருந்தது பெரும்பாலானோர் சிங்களவர்.உண்மை எவராலும் தம்மை அறியாமல் உணரப்படும்.

திரு ஜோர்ஜ் ஆர் விலி அவர்கள் ஒரு அமெரிக்கராக தான் பேசியவர். அதையும் மகிந்தர் ஏற்கவில்லை என அவர் உடல் அசைவுகளும் மற்றும் அதற்கு பின் அவர் பேசிய பேச்சும் தெளிவாக சொல்லுகின்றன. இதையே அவர் கொழும்பில் ஒரு தமிழராகவோ இல்லை அமெரிக்கராகவோ மக்கள் முன்னிலையில் சொல்ல விட மாட்டார்கள்.

மேலும் எத்தனையோ தமிழர்கள் புலி செய்தது பிழை, சம்பந்தர் செய்வது பிழை என சொல்ல முடிகின்றது. ஆனால் எத்தனை சிங்களவர்கள் சொல்கிறார்கள் தமிழருக்கு செய்வது அநியாயம் என்று? (விக்ரமபாகு ?)

இல்லை அவர்களுக்கு அரசியல் உரிமை தேவை என சொல்லுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மனதைப் பிழியும் கொடுமைகளை நக்கீரனில் தமிழ்நாட்டு மக்களுக்காக மொழிமாற்றப்பட்ட கடிதத்தைப் படித்துத்தான் புலம்பெயர் தமிழரும் அறியும் நிலை. உண்மையில் எழுதப்பட்டதா அல்லது நக்கீரனின் கற்பனையா என்று விவாதிப்பதை விட்டுவிட்டு நாம் ஏன் இந்த இழிநிலைக்கு வந்தோம், இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டும். அதற்காக மீண்டும் ஆயுதம் எடுப்போம் என்று சபதம் எடுத்தால் சிறிலங்கா இராணுவம் ஐந்து வயதுப் பிள்ளைகளையும் விட்டுவைக்காது..

கிருபன் உங்களுக்கு ஒரு பச்சை. அதிகம் அலட்டாமல் அவ்வப்போது முத்துப்போல உதிரும் உங்கள் கருத்துகள் நெற்றிப்பொட்டில் சுட்டமாதிரி வரும். இக்கருத்தும் அப்படித்தான். நக்கீர வியாபாரிகள் பற்றி விவாதித்தே செத்துப்போகப்போகிறோம். இக்கடிதத்தை இன்னும் நான் வாசிக்கேல்ல. தொடக்கத்தை பார்த்ததோடு கருத்தாளர்களின் கருத்தை கவனித்ததில் தேறியது உங்கள் கருத்துத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.