Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்

Featured Replies

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன.

இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார்.

கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருசோத்தம குருக்கள் ராஜாராம் 3 ஏ சித்திபெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மூன்றாம் இடத்தை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி லக்ஸ்ரெலா மரியதாஸம் பெற்றுக்கொண்டனர்.

பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து. 3ஏ - 12 வேம்படி மகளிர் கல்லூரி 3ஏ - 11 ஹாட்லிக் கல்லூரி 3ஏ - 8 சாவகச்சேரி இந்து 3ஏ - 5 கொக்குவில் இந்து 3ஏ - 4 பெற்றுள்ளனர்.

தகவல் மூலம்: யாழ் மாவட்ட க.பொ.த. உயர்தர பெறுபேறுகளில் யாழ்.இந்துக் கல்லூரி முன்னணி

+++

கொக்குவில் இந்துக்கல்லூரி க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்

கணிதத்துறை

1. சின்னக்கோன் சிந்துஜன் 3A மாவட்ட நிலை 3

2. பரமசோதி விஸ்ணுகாந்தன் 2A, B மாவட்ட நிலை 37

3. குமாரசாமி அபிராம் 2A, B மாவட்ட நிலை 53

4. சிவகுமாரன் வசந் A, 2B மாவட்ட நிலை 65

5. கோபாலகிருஸ்ணன் சுகந்தன் A, 2B மாவட்ட நிலை 98

6. பாலகிருஸ்ணன் கஜானன் A, 2B

7. விந்துயா குலசிங்கம் A, B, C

8. தர்மகுலசிங்கம் உதயபவன் A, B, C

9. வைகுந்தவாசன் கோகுலன் B, 2C

10. தர்மகுலசிங்கம் தர்சன் B, 2C

11. கணேசன் சரவணபவன் B, 2C

12. விதுசா சண்முகராஜா B, C, S

13. குமாரசாமி ராகவன் B, C, S

விஞ்ஞானத்துறை

1. சிவகுருநாதன் கஜானன் 2A, B மாவட்ட நிலை 37

2. வைத்திலிங்கம் ஜீவேந்திரன் 2B, C

3. லோகேஸ்வரன் ஸ்ரீநிகேதன் B, 2C

4. தவராஜா பார்த்தீபன் B, 2C

5. நிவேதிகா ஜீவானந்தம் B, C, S

6. சாந்திலேகா லோகேஸ்வரன் B, C, S

7. ரவீந்திரன் குயின்ரன் B, C, S

வர்த்தகத்துறை

1. சண்முகராஜா கிரிதரன் 3A மாவட்ட நிலை 02

2. சுஜாதா குணபாலசிங்கம் 3A மாவட்ட நிலை 05

3. மகேந்திரலிங்கம் சுஜீபன் 3A மாவட்ட நிலை 16

4. நிலக்சி நித்தியானந்தன் 2A, B மாவட்ட நிலை 14

5. சிவஞானசுந்தரம் நிமலதீபன் 2A, B மாவட்ட நிலை 41

6. தாரணி பாலசுப்பிரமணியம் 2A, C மாவட்ட நிலை 30

7. கௌரிகா அழகரட்ணம் 2A, C மாவட்ட நிலை 71

8. டொறீற்றா சர்மி மரியதாஸ் 2A, C மாவட்ட நிலை 88

9. தர்மகுலசிங்கம் கலீசன் A, 2B மாவட்ட நிலை 64

10. நடராஜா கபிலானந் A, 2B மாவட்ட நிலை 76

11. கிருசிகா சிவலிங்கம் 3B

12. சிவரூபா புலேந்திரன் 2B,C

13. சிறிகாந்தன் சிறீநாத் A, B, C

14. தளையசிங்கம் சசிரூபன் A, B, C

15. தபேந்திரன் அகில் A, B, C

16. சுகந்தினி நாகராஜா A, B, C

கலைத்துறை

1. பிரபாஜினி இராஜசிங்கம் 2A, B

2. பாலசிங்கம் ரெனீசன் 2A, B

3. விசாந்தினி தவக்குமார் A, 2B

4. வர்சிகா கைலைநாதன் A, 2B

5. விந்துஜா நவரட்ணம் A, 2B

6. பிரசாந்தினி கிருபானந்தம் A, 2B

7. தினுபா நவரட்ணம் A, 2C

8. தக்சனா தயாளநேசன் A, 2C

9. பரமேஸ்வரன் சேயோன் A, B, C

10. கோபினி தேவசீலன் A, B, C

11. ஜிந்துசா குகநேசன் A, B, C

12. யானுகா கதிர்காமசுந்தரம் A, B, C

13. லதீபா உருத்திரகுமார் A, B, C

14. நிரோஜா கதிர்காமநாதன் A, B, C

15. நிவேஜா சோதிலிங்கம் A, B, C

16. சுகன்யா சுந்தரமூர்த்தி A, B, C

17. வோசிகா வரதராஜா A, B, C

18. ரேணுகா சுப்பிரமணியம் A, B, C

19. ரமேசினி இராஜவரோதயம் 2B, C

20. துளசிகா தவயோகராஜா 2B, C

தகவல் மூலம்: க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல மாணவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் வேண்டி வாழ்த்துக்கள். குறிப்பாக மீண்டும் ஒரு தடவை அதிக விசேட சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் கல்லூரியை முன்னணியில் நிறுத்தி இருக்கும் யாழ் இந்துக்கல்லூரி தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

-------------------------------

ஏய்யா கரும்பு.. தகவல் மூலத்துக்கு ஈபிடிபி இணையத்தளம் தானா கிடைச்சுது.

உவன் டக்கிளஸ் தேவானந்தா வடக்கு கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது.. மாணவர்கள் பலர் வெட்டுப்புள்ளியால் பாதிக்கப்பட்டு ஊர்வலம் நடத்தி சந்திரிக்காவோடு பேசக் கேட்ட போது... புலிகளை விஞ்சுகிறேன் பார் என்று.. தான் உதவிறன் என்று சொல்லிட்டு இடைநடுவில விட்டிட்டு ஓடினவன். தன்ர அரசியலை காட்டிட்டு அவன் ஓடிட்டான். அதுமட்டுமன்றி தென்னிலங்கைக்குப் போன பல மாணவர்களை வவுனியாவில் வைத்து சிங்கள இராணுவத்தோடு இணைந்து பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை கொண்டே பிற மாணவர்களை அடையாளம் காட்ட காட்டிக் கொடுக்க உதவினவன்.. இன்று.. ஏதோ தன் முயற்சியால் தான் யாழ் மாவட்டப் பெறுபேறுகள் முன்னேறி உள்ளது என்பது போல கதை அளக்க விளைகிறான்.

இன்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான இடங்களில் சுமார் 40% இடங்கள் சிங்கள மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு தமிழ் மாணவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். குறிப்பாக புதிய துறைகளில் வடக்கு மாணவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர்.

தென்னிலங்கையில் மொத்தம் 13 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்க.. வடக்கு கிழக்கில் வெறும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தான் உண்டு. இங்கு தானா சிங்கள மாணவர்களை அனுமதிக்க வேண்டும். போரால் வெட்டுப்புள்ளியால் பாதிக்கப்பட்டிருந்த போது.. எமது மாணவச் சமூகம் மீது அக்கறை காட்டாத இந்தக் காட்டேரிகள்.. இன்று போலி அக்கறை காட்டுவதை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம் தான் என்ன..???!

யாழ் இந்துக் கல்லூரி ஆகட்டும்.. ஹாட்லி ஆகட்டும்.. வேம்படி.. பரியோவான்.. மத்திய கல்லூரி என்று.. பல சாதனைகளை அகில இலங்கை அளவில் ஏற்படுத்திய காலமாக புலிகளின் கட்டுப்பாட்டுக் காலம் இருந்தது. இக்காலத்தில் தான் அகில இலங்கை ரீதியில் கணிதத்தில் அதி உயர் புள்ளியை ஒரு மாணவன் பெற்றிருந்தார் .

எதுஎப்படியோ.. யாழ்ப்பாணத்திலோ அல்லது தமிழீழத்திலோ.. கல்வியை அரசியலாக்க மக்கள் இடமளிக்கக் கூடாது. விடுதலைப்புலிகள் ஒருபோதும் மாணவர்களின் இப்படியான விடயங்களை தங்களுக்கான பிரச்சார வெற்றிக்காக பயன்படுத்தியதில்லை. பல பொருளாதாரத் தடைகள் மத்தியிலும் அவர்கள் மாணவர்களுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் ஒளியேற்றி படிக்க வைத்தவர்கள். அவர்களே அப்போதைய வெற்றிகளை தங்களின் வெற்றியாக காட்டிக்கொள்ளவில்லை.

யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் 1994 இல் வெட்டுப்புள்ளி விவகாரம் தொடர்பாக நடந்த ஒரு கலந்துரையாடலில்.. அப்போதைய கல்வித்துறைப் பொறுப்பாளர் இளங்குமரன் கலந்து கொண்டு சொன்ன விடயம்.. நாங்கள் உங்களின் முயற்சிகளை ஊக்குவிக்கிறம். ஆனால் நாங்கள் நேரடியாக தலையிடமாட்டோம். காரணம் நாங்கள் தலையிட்டால் புலிகள் தூண்டிவிட்டு தான் இவை நடத்தப்படுகின்றன என்ற செய்தியை வழங்க பலர் இங்கிருக்கிறார்கள் என்றார். அப்படியான காரியங்களில் அன்று ஈடுபட்டதில் ஈபிடிபி நாய்க்கும்பலும் அடங்கும்.

அன்றைய பொழுதுகளில் எங்கள் அண்ணாமாருக்காக நாங்கள் ஓடி ஓடி ஊர்வலங்கள் நடத்தியவை இன்றும் கண்முன் நிற்கின்றன. ஆனால் இங்கு சிலர் இப்போது அந்த ஈபிடிபி கொடியவர்களை முன்னிலைப்படுத்தும் செயலை செய்வது ஏனோ தெரியவில்லை. உண்மையில் யாழ் மாவட்ட கல்வி முன்னேற்றதிற்கும் ஈபிடிபிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உயர் தர பரீட்சை வேளையில் சிங்களத்திகளை கூட்டி வந்து குத்தாட்டம் போட்டவன் இவன்.. டக்கிளஸ். இவன் எல்லாம்...??!

பாடசாலைகள்..பெற்றோர்.. ஆசிரியர்கள்.. தனியார் கல்வி நிறுவனங்களே யாழ் மாவட்ட பெறுபேறுகளுக்கு முழு உரித்துடையவை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

A/L result -2010 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.

Tuesday, 07 December 2010

A/L result -2010

G.C.E. (A/L) - 2010 Results

Maths

3A

No Name District Rank

01 L.Gobinath 08

02 A.Sasithan 19

03 R.Srishiyamalan 22

04 M.Brunthavan 16

05 J.Thirojan 17

06 S.Gowthaman 21

07 P.Iroshan 26

08 P.Thirivarankan 13

09 V.Vipulan 18

2AB

No Name District Rank

01 N.Satheeswaran 60

02 N.Thiruthanikan 32

03 A.Vajeeran 27

04 S.Kajarathan 56

05 L.Lavan 48

06 S.Sivatharshan 54

07 S.Thushanthan 58

08 J.Varalakshan 31

A2B

No Name District Rank

01 B.Banujan 75

02 S.Nirishan 62

03 A.Thananjayan 77

04 B.Sarangan 96

05 P.Thirukumaran 70

Bio Science

3A

No Name District Rank

01 S.Dineshshanth 04

02 K.Nirijan 02

03 S.Yathukulan 13

2AB

No Name District Rank

01 N.Kiriukan 25

02 T.Renushanth 45

03 S.Sancheevan 11

04 S.Aathirayan 08

05 R.Kabilnishanth 30

06 P.Kugananth 56

A2B

No Name District Rank

01 N.Nirisan 49

02 S.Seyon 35

03 S.Kajeeban 88

04 S.Pirathapan 30

Designed & updated By.Kumaran - Teacher of JHC

http://www.jhc.lk/jhcnew/index.php?option=com_content&task=view&id=249

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

A/L Achievements  2010-12-08  

(றோயல் கல்லூரி கொழும்பு)

Maths Stream

VidurangaBandara Wijekoon Island 1st Colombo 1st

Sumudu Taranga Herath Island 2nd Colombo 2nd

Kasun Samawth Mallawarachchi Island 4th Colombo 3rd

Sasika Iddamalgoda Island 12th Colombo 7th

Bio Stream

Pramod Kanishka Amarasinghe Island 16th Colombo 5th

Commerce Stream

Shamen Sameera Karagala Arachchilage Island 11th Colombo 6th

http://www.inforoyal.com/principalsdesk.php

  • தொடங்கியவர்

ஏய்யா கரும்பு.. தகவல் மூலத்துக்கு ஈபிடிபி இணையத்தளம் தானா கிடைச்சுது.

ஏன்யா நெடுக்கு.. தகவல் மூலத்திற்கு ஈபீடீபி இணையத்தளத்தை காட்டியதில் தவறு ஏது? தற்போது so called த.தே.ஊ என்று கூறப்படுபவை ஈபீடீபீ தளத்தின் செய்தியை paraphraseசெய்து தமது செய்தியாக இணைத்து கணக்கு காட்டுகின்றார்கள். நாம் நேரடியாகவே தகவல் மூலமாக காட்டுவதில் தவறு ஏது? மேலும், இங்கு பரீட்சைமுடிவுகள் தவிர ஈபீடீபியின் வேறு பிரச்சாரம் ஒன்றும் இங்கு செய்தியில் காணப்படவில்லையே. யாழ்ப்பாணம் சம்பந்தப்பட்ட படங்களை, காணொளிகளை காண்பதற்காக நான் பல வருடங்களாக ஈபீடீபி வலைத்தளத்திலும் சென்று விடயங்களை அறிவது வழமை. நீங்கள் இங்கிருந்து புடுங்குபவர்கள் வேண்டுமானால் இப்படியான செய்திகளை உடனடியாக விரைவாக வலையில் பதிவேற்றுங்கள், அப்போது உங்கள் ஆசைப்படி ஈபீடீபி தளத்தில் இருந்து தகவல் மூலத்தை காண்பிப்பது தவிர்க்கக்கூடியதாக அமையும். நீங்கள் வேறு பிரச்சனைகளில் பெரிய கோட்டைகளை பிடிப்பதற்காக நாளும், பொழுதும் செய்திகளை அடித்து, பிடித்து போடுவதில் ஆராய்வதில் மினக்கடுகின்றீர்கள். அங்கு யாழ்ப்பாணத்தில் யதார்த்தத்தில் நடைபெறும் விடயங்களை ஈபீடீபி தளத்தில் அறியக்கூடியதாக உள்ளது. இந்த அடிப்படை விடயமே புரியாமால்... அதற்கு கண், மூக்கு, வாய் வைத்து உங்களது ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை வேறு.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்யா நெடுக்கு.. தகவல் மூலத்திற்கு ஈபீடீபி இணையத்தளத்தை காட்டியதில் தவறு ஏது? தற்போது so called த.தே.ஊ என்று கூறப்படுபவை ஈபீடீபீ தளத்தின் செய்தியை paraphraseசெய்து தமது செய்தியாக இணைத்து கணக்கு காட்டுகின்றார்கள். நாம் நேரடியாகவே தகவல் மூலமாக காட்டுவதில் தவறு ஏது? மேலும், இங்கு பரீட்சைமுடிவுகள் தவிர ஈபீடீபியின் வேறு பிரச்சாரம் ஒன்றும் இங்கு செய்தியில் காணப்படவில்லையே. யாழ்ப்பாணம் சம்பந்தப்பட்ட படங்களை, காணொளிகளை காண்பதற்காக நான் பல வருடங்களாக ஈபீடீபி வலைத்தளத்திலும் சென்று விடயங்களை அறிவது வழமை. நீங்கள் இங்கிருந்து புடுங்குபவர்கள் வேண்டுமானால் இப்படியான செய்திகளை உடனடியாக விரைவாக வலையில் பதிவேற்றுங்கள், அப்போது உங்கள் ஆசைப்படி ஈபீடீபி தளத்தில் இருந்து தகவல் மூலத்தை காண்பிப்பது தவிர்க்கக்கூடியதாக அமையும். நீங்கள் வேறு பிரச்சனைகளில் பெரிய கோட்டைகளை பிடிப்பதற்காக நாளும், பொழுதும் செய்திகளை அடித்து, பிடித்து போடுவதில் ஆராய்வதில் மினக்கடுகின்றீர்கள். அங்கு யாழ்ப்பாணத்தில் யதார்த்தத்தில் நடைபெறும் விடயங்களை ஈபீடீபி தளத்தில் அறியக்கூடியதாக உள்ளது. இந்த அடிப்படை விடயமே புரியாமால்... அதற்கு கண், மூக்கு, வாய் வைத்து உங்களது ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை வேறு.

நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு தாடி மாமாவுக்காக வரிந்து கட்டுவீர்கள் என்று நினைத்தேன்.

குறிப்பிட்ட பாடசாலை இணையத்தளங்கள் செய்திகளை இணைத்துள்ளன. பாடசாலை சம்பந்தப்பட்ட பெறுபேறுகளை நீங்கள் அங்கிருந்து பெறுவதே திருத்தமானதும் நம்பகத்தகுந்ததும் ஆகும்.

ஈபிடிபி இணையத்தளம் என்பது சொந்த இனத்தை அழித்து உயிர் வாழும் ஒரு ஆயுதக் கும்பலின் இணையத்தளம். அதில் வரும் செய்திகள் எந்தளவுக்கு உண்மையானவை நம்பகரமானவை என்பது கேள்விக்குரிய விடயம். அது ஒரு ஊடக இணையம் அல்ல. இந்த அடிப்படையை விளங்கிக் கொள்வது உங்களிற்கும் இணைய செய்தி ஆர்வளர்களுக்கும் நல்லது.

ஈபிடிபி நாசகார சக்திகளின் இணையத்தளத்தில் இருந்து செய்தி ஒட்டப்பட்டதால் தான் ஈபிடிபி நாசகார சக்திகள் மாணவ சமூகத்திற்கு எதிராக மேற்கொண்ட சம்பவங்களை எழுத வேண்டி நேரிட்டது. அவை அனைத்தும் எமது கண் முன்னால் நடந்த சம்பவங்கள். உங்களால் அவற்றை பொய் என்று வரையறுக்க வாய்ப்பில்லை. அங்கு நானே செய்தியாளன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஈபிடிபி இணையத்தள செய்திகளை நீங்கள் நம்பலாம். மற்றவர்களும் அதனை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாழில் அதிர்வு.. தமிழ் வின் போன்ற இணையத்தள செய்திகளே போடத்தடை இருக்கிறது. பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வாழும் ஈபிடிபியும் அதன் இணையத்தளமும் உங்களுக்கு வசதியாக இருந்தால் நீங்கள் அதைக் கொண்டாடலாம். ஆனால் அதன் மீது நம்பிக்கை வைக்கச் சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை என்று நினைக்கிறேன். :rolleyes:

உங்களுக்கு யாழ்ப்பாணம் பற்றிய செய்திகள் அறிய ஆசை என்றால் இவற்றை நாடலாம். இவை ஓரளவுக்கு நியாயமாக எழுதுகின்றன.

http://www.yarlmann.lk

http://uthayan.com/

http://www.thinakkural.com/beta/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்யா நெடுக்கு.. தகவல் மூலத்திற்கு ஈபீடீபி இணையத்தளத்தை காட்டியதில் தவறு ஏது? தற்போது so called த.தே.ஊ என்று கூறப்படுபவை ஈபீடீபீ தளத்தின் செய்தியை paraphraseசெய்து தமது செய்தியாக இணைத்து கணக்கு காட்டுகின்றார்கள். நாம் நேரடியாகவே தகவல் மூலமாக காட்டுவதில் தவறு ஏது? மேலும், இங்கு பரீட்சைமுடிவுகள் தவிர ஈபீடீபியின் வேறு பிரச்சாரம் ஒன்றும் இங்கு செய்தியில் காணப்படவில்லையே. யாழ்ப்பாணம் சம்பந்தப்பட்ட படங்களை, காணொளிகளை காண்பதற்காக நான் பல வருடங்களாக ஈபீடீபி வலைத்தளத்திலும் சென்று விடயங்களை அறிவது வழமை. நீங்கள் இங்கிருந்து புடுங்குபவர்கள் வேண்டுமானால் இப்படியான செய்திகளை உடனடியாக விரைவாக வலையில் பதிவேற்றுங்கள், அப்போது உங்கள் ஆசைப்படி ஈபீடீபி தளத்தில் இருந்து தகவல் மூலத்தை காண்பிப்பது தவிர்க்கக்கூடியதாக அமையும். நீங்கள் வேறு பிரச்சனைகளில் பெரிய கோட்டைகளை பிடிப்பதற்காக நாளும், பொழுதும் செய்திகளை அடித்து, பிடித்து போடுவதில் ஆராய்வதில் மினக்கடுகின்றீர்கள். அங்கு யாழ்ப்பாணத்தில் யதார்த்தத்தில் நடைபெறும் விடயங்களை ஈபீடீபி தளத்தில் அறியக்கூடியதாக உள்ளது. இந்த அடிப்படை விடயமே புரியாமால்... அதற்கு கண், மூக்கு, வாய் வைத்து உங்களது ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை வேறு.

பதிவில் தவறொன்றும் இல்லை. உங்களுக்கு பழக்கமான தளங்களை மூலமாக்குகின்றீர்களே என்பதுதான், தவிர தளத்தின் விளமரத்திற்கான தகவல்கள் என்று சொல்ல வரவிலை!

  • தொடங்கியவர்

நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு தாடி மாமாவுக்காக வரிந்து கட்டுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதன் மீது நம்பிக்கை வைக்கச் சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை என்று நினைக்கிறேன். :icon_idea:http://uthayan.com/

இங்கு உணர்ச்சிவசப்பட்டது நீங்கள் ஒழிய நான் அல்ல. இங்கு செய்தியில் ஒருவரையும் நம்பிக்கை வைக்குமாறு கூறவில்லையே. அடுத்ததாக நம்பிக்கை வைக்கக்கூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? நம்பிக்கை வைப்பதும், வைக்காததும் அவரவர் சுதந்திரம். சில செய்திகளை தேவைகருதி இணைக்கும்போது அதை கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு ஒரு உரிமையும் கிடையாது.

உதயன் தளத்திற்கு சென்று ஏற்கனவே தேடல் செய்தேன். பரீட்சை முடிவுகள் வெளியாகின்றன என்று செய்தி காணப்பட்டதே ஒழிய முடிவுகள் கூறப்படவில்லை.

  • தொடங்கியவர்

பதிவில் தவறொன்றும் இல்லை. உங்களுக்கு பழக்கமான தளங்களை மூலமாக்குகின்றீர்களே என்பதுதான், தவிர தளத்தின் விளம்பரத்திற்கான தகவல்கள் என்று சொல்ல வரவிலை!

நெடுக்ஸ் ஏதோ புலம்புகின்றார். அதன் தேவன் versionஐ நீங்கள் கூறுகின்றீர்கள். செய்தியில் தகவல் மூலமாக காண்பிக்கப்படும் ஓர் தளம் எனக்கு பழக்கமாக அமைந்தால் அது யாழில் இணைக்கப்படக்கூடாது? புரியவில்லை என்று கூறுவதைவிட நகைப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உணர்ச்சிவசப்பட்டது நீங்கள் ஒழிய நான் அல்ல. இங்கு செய்தியில் ஒருவரையும் நம்பிக்கை வைக்குமாறு கூறவில்லையே. அடுத்ததாக நம்பிக்கை வைக்கக்கூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? நம்பிக்கை வைப்பதும், வைக்காததும் அவரவர் சுதந்திரம். சில செய்திகளை தேவைகருதி இணைக்கும்போது அதை கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு ஒரு உரிமையும் கிடையாது.

உதயன் தளத்திற்கு சென்று ஏற்கனவே தேடல் செய்தேன். பரீட்சை முடிவுகள் வெளியாகின்றன என்று செய்தி காணப்பட்டதே ஒழிய முடிவுகள் கூறப்படவில்லை.

எங்கள் பாடசாலை பற்றிய செய்தியை எங்கள் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட ஒரு ஆயுதக் குழுவின் இணையத்தில் இருந்து பிரசுரிக்கவும் அதை நம்பவும் நாங்கள் உங்களில் தங்கி இருக்க வேண்டியதில்லை.

பாடசாலைகள் பற்றிய செய்திகளை பாடசாலை இணையங்களில் இருந்து எடுத்துப் பிரசுரியுங்கோ.. மூன்றாம் தர அரசியல் ஆயுதக் குழுக்களின் தளங்களினுடாக அவை எம்மை வந்தடைய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்வின்.. அதிர்வு போன்ற இணையத்தளங்களை விரும்புபவர்களும் இங்கு இருக்கின்றனர். இருந்தும் யாழ் நிர்வாகம் அதற்கு தடை விதித்துள்ளது. உங்கள் ஒருவருக்கு அல்லது இருவருக்கு பிடிக்கும் என்பதற்காக நாசகார ஆயுதக் குழுக்களின் தளங்களை இங்கு விளம்பரப்படுத்தவோ.. அவற்றின் மூலம் முக்கிய செய்திகளை கொண்டு வரவோ அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்தச் செய்திகளை இன்னும் நம்பந்தகுந்த அந்தந்த பாடசாலைகளில் இருந்து பெற முடியும். அந்த வகையில்.. உங்களின் செயலை எதிர்க்கும் அருகதை எமக்கு உண்டு. புரிந்து கொள்ளுங்கள். :rolleyes::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஏதோ புலம்புகின்றார். அதன் தேவன் versionஐ நீங்கள் கூறுகின்றீர்கள். செய்தியில் தகவல் மூலமாக காண்பிக்கப்படும் ஓர் தளம் எனக்கு பழக்கமாக அமைந்தால் அது யாழில் இணைக்கப்படக்கூடாது? புரியவில்லை என்று கூறுவதைவிட நகைப்பாக உள்ளது.

பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டு சில தினங்களின் பின் தான் பாடசாலையை அடையும். பாடசாலைகள் பரீட்சைப் பெறுபேறுகளை உறுதி செய்த பின் பாடசாலை இணையங்களில் செய்தி வெளிவரும். ஊடகங்களுக்கு செய்தி தரப்படும். இதுதான் நடைமுறை.

ஆனால் ஈபிடிபி நாசகார ஆயுதக் கும்பல் எந்த நோக்கத்தோடு.. இந்த நடைமுறைகளுக்கு வெளியில் இருந்து செய்தியை எடுத்துப் பிரசுரித்தது..???! உண்மையில் அது ஒரு அடாத்தான செயல் மட்டுமன்றி.. பரீட்சை முடிவுகளை உறுதி செய்யவே மற்றைய ஊடகங்களுக்கு போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில் இந்தச் செய்திகள் போடப்பட்டதன் பின்னணி முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்று.

இது ஈபிடிபி நாசகார ஆயுதக் கும்பல் தனது இருப்பின் கீழ் யாழ் மாணவர்களின் நிலை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்க செய்யப்படும் செயலாகவே நோக்க வேண்டி இருக்கிறது. பாடசாலை மாணவனையே கடத்திக் கொலை செய்த கும்பல் இதுவாகும். இந்த நிலையில் அந்த அவப் பெயர்களில் இருந்து தம்மை போலியாக விடுவிக்க இந்தக் கும்பல் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு நீங்கள் துணை புரிவதாகவே இதனைக் கொள்ள வேண்டி உள்ளது. :rolleyes:

  • தொடங்கியவர்

எங்கள் பாடசாலை பற்றிய செய்தியை எங்கள் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட ஒரு ஆயுதக் குழுவின் இணையத்தில் இருந்து பிரசுரிக்கவும் அதை நம்பவும் நாங்கள் உங்களில் தங்கி இருக்க வேண்டியதில்லை. உங்களின் செயலை எதிர்க்கும் அருகதை எமக்கு உண்டு. புரிந்து கொள்ளுங்கள். :rolleyes::)

உங்களை நம்புமாறு ஒருவரும் கூறவில்லையே. ஆர்வம் காணப்பட்டால் எனக்கு முன்னதாகவே நீங்கள் ஊர்ப்புதினத்தில் இதுபற்றிய செய்தியை இணைத்து இருக்கலாம். வேறு ஏதோ புலம்பலில் கவனம் செலுத்திவிட்டு.. இப்போது நான் ஊர்ப்புதினத்தில் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான செய்தியை இணைத்ததும்… வியாக்கினானங்கள் கூறுகின்றீர்கள்.

ஓர் தளம் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக அங்கிருந்து செய்திகள் இணைக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட ஓர் செய்தியின் அம்சத்தை பொருத்தே செய்திகள் இணைக்கப்படுகின்றன. சிறீ லங்கா அரச இணையத்தளங்களின் தொடுப்புக்கள்கூட இங்கு இணைக்கப்படுவது வழமை. அவ்வாறான சமயங்களில் செய்தியை பற்றி அலசுவதற்காக அவை இணைக்கப்படுகின்றனவே ஒழிய விளம்பரத்திற்காக அல்ல.

யாழ் நிருவாகம் சம்பந்தமான விடயங்களை Reportஐ அழுத்தி முறைப்பாடு செய்வதன் மூலம் யாழ் நிருவாகத்திற்கு அறிவிக்கமுடியும். இதை தகவல் மூலமாக இணைக்காதே என்று எனக்கு சட்டம் போடுவதற்கு உங்களிற்கு ஒரு உரிமையும் கிடையாது.

  • தொடங்கியவர்

பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டு சில தினங்களின் பின் தான் பாடசாலையை அடையும். பாடசாலைகள் பரீட்சைப் பெறுபேறுகளை உறுதி செய்த பின் பாடசாலை இணையங்களில் செய்தி வெளிவரும். ஊடகங்களுக்கு செய்தி தரப்படும். இதுதான் நடைமுறை. ஆனால் ஈபிடிபி நாசகார ஆயுதக் கும்பல் எந்த நோக்கத்தோடு.. இந்த நடைமுறைகளுக்கு வெளியில் இருந்து செய்தியை எடுத்துப் பிரசுரித்தது..???! உண்மையில் அது ஒரு அடாத்தான செயல் மட்டுமன்றி.. பரீட்சை முடிவுகளை உறுதி செய்யவே மற்றைய ஊடகங்களுக்கு போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில் இந்தச் செய்திகள் போடப்பட்டதன் பின்னணி முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈபிடிபி நாசகார ஆயுதக் கும்பல் தனது இருப்பின் கீழ் யாழ் மாணவர்களின் நிலை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்க செய்யப்படும் செயலாகவே நோக்க வேண்டி இருக்கிறது. பாடசாலை மாணவனையே கடத்திக் கொலை செய்த கும்பல் இதுவாகும். இந்த நிலையில் அந்த அவப் பெயர்களில் இருந்து தம்மை போலியாக விடுவிக்க இந்தக் கும்பல் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு நீங்கள் துணை புரிவதாகவே இதனைக் கொள்ள வேண்டி உள்ளது. :rolleyes:

நீங்கள் எவ்வாறும் நினைத்துக்கொள்ளுங்கள், நமக்கு கவலை இல்லை. இங்குவிடயம் "க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்" பற்றியது. இதுபற்றி வேண்டுமானால் ஏதாவது கூறுங்கள், கருத்தாடல் செய்வோம். மற்றும்படியாக, உங்கள் வியாக்கியானங்களிற்கு பதில் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

பரீட்சையில் சித்தி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

இம்முறை ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

பரீட்சைப் பெறுபேறுகளை இன்று நண்பகலின் பின்னர் திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்று கூறியதுடன், நாளைய தினமே பாடசாலைகளுக்கு அனப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்கள இணையத்தளம்: http://www.doenets.lk

http://www.tamilthai.com/?p=6278

யாழ் மாவட்ட க.பொ.த. உயர்தர பெறுபேறுகளில் யாழ்.இந்துக் கல்லூரி முன்னணி!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன.

இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார்.

கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருசோத்தம குருக்கள் ராஜாராம் 3 ஏ சித்திபெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மூன்றாம் இடத்தை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி லக்ஸ்ரெலா மரியதாஸம் பெற்றுக்கொண்டனர்.

பெறுபேறுகளின் அடிப்படையில்:

யாழ். இந்து. 3ஏ – 12

வேம்படி மகளிர் கல்லூரி 3ஏ – 11

ஹாட்லிக் கல்லூரி 3ஏ – 8

சாவகச்சேரி இந்து 3ஏ – 5

கொக்குவில் இந்து 3ஏ – 4

பெற்றுள்ளனர்.

http://www.nerudal.com/nerudal.23484.html

-- உயர்தரப் பரீட்சையில் 4,384 மாணவர்களுக்கு 3 ஏ

-- 1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

-- பாடசாலை ரீதியாக 3908 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளளனர்

-- தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 476 பேர் 3 ஏ பெற்றுள்ளனர்

-- உயிரியல் விஞ்ஞான பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 367 பேர் 3 ஏ

-- இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 286 பேரும்

-- தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 81 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்

-- கணித பாடத்தில் நாடளாவிய ரீதியில் 404 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்

-- அவர்களில் 385 பேர் பாடசாலை மட்டத்திலும்

-- 19 பேர் தனிப்பட்ட ரீதியிலும் 3 ஏ ஐப் பெற்றுள்ளனர்

-- வர்த்தக பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 1576 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன்

-- 1496 பேர் பாடசாலை ரீதியாக 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

-- 80பேர் தனிப்பட்ட ரீதியாகவும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்

-- கலைப்பாடத்தில் நாடளாவிய ரீதியில் 2037 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

-- இவர்களில் 1741 பேர் பாடசாலை ரீதியாகவும்

-- 296 பேர் தனிப்பட்ட ரீதியாகவும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2911:-4384-3-&catid=34:hotn-news&Itemid=99

கொக்குவில் இந்துக்கல்லூரி:

Kokuvil Hindu students had another outstanding academic excellence in General Certificate Examination (Advanced Level) -2010:

http://www.kokuvilhindu.net/detailkhc.php?MyNewsID=206

யாழ் இந்து கல்லூரி:

http://www.jhc.lk/jhcnew/index.php?option=com_content&task=view&id=249&Itemid=1

ஹாட்லி கல்லூரி

http://www.hartleycollege.com/hweb/academic/al/

Edited by akootha

இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி இருந்த யாழ்ப்பாண மாணவிகளில் இருவர் திருப்திகரமான பெறுபேறுகளை பெற்று இராத நிலையில் இன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

காலையில் பரீட்சை முடிவுகள் வெளியாகின. இவர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் பெறுபேறுகளை பார்வை இட்டு இருந்தனர். அப்பெறுபேறுகள் திருப்தி கொடுத்து இருக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த இவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஒருவர் பனடோல்களை அளவுக்கு அதிகமாக குடித்தும், மற்றவர் அலரி விதைகளை விழுங்கியும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

ஆயினும் இருவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருவருக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

http://panipulam.net/?p=5518

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.எனது பாடசாலை முதலாவதாக மீண்டும் ஒருமுறை வந்ததற்கு விசேட வாழ்த்துக்கள்.

வரும் சனி எமது பழைய மாணவர் பொதுக்கூட்டம்.பழைய மாணவர்கள் யாரும் இருந்தால் சமூகம் அழிக்கவும்.

சிங்களத்தின் அதன் தலைவர்களின் இயலாமை, திறன் இருந்தும்

ஒரு தோல்வியுற்ற நாடாக இருப்பதற்கு இதுவும் தான் ஒரு மூல காரணம்.

-- உயர்தரப் பரீட்சையில் 4,384 மாணவர்களுக்கு 3 ஏ

-- 1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு !

இதில் எத்தனை தமிழ் மாணவர்கள் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்?

22,000 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு, அதில் 4,384 மாணவர்களுக்கு 3 ஏ !!

இந்த பேரில் அவர்கள் பட்டதாரியாகும் பொழுது அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடையாது !!!

மேல்வரும் இலக்கங்கள் ஒரு பிழையான திட்டமிடலை காட்டி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எவ்வாறும் நினைத்துக்கொள்ளுங்கள், நமக்கு கவலை இல்லை. இங்குவிடயம் "க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்" பற்றியது. இதுபற்றி வேண்டுமானால் ஏதாவது கூறுங்கள், கருத்தாடல் செய்வோம். மற்றும்படியாக, உங்கள் வியாக்கியானங்களிற்கு பதில் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

நிச்சயம் நீங்கள் இதே கும்பலால் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை வரும் போது.. அப்போது பதில் எழுதுகிறேன்.

மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.. ஈபிடிபி இணையத்தளம் உங்களுக்கு யாழில் நிர்வாகத்தில் உள்ள சிலருக்கும் ஓர் அதிசய ஊடக இணையமாகத் தெரியலாம். ஆனால் அது ஒரு நாசகார ஆயுதக் கும்பலின் பிரச்சார இணையத்தளம் மட்டுமே. அங்கு வரும் செய்திகளுக்கு உண்மைக்கு உத்தரவாதம் கிடையாது. அது அந்தக் கும்பலின் செயல்களை நியாயப்படுத்த வருவது.

கரும்பால் ஈபிடிபி இணையத்தள செய்திகளை பிரசுரிக்க முடியும் என்றால் ஏன் அதிர்வு.. தமிழ்வின் செய்திகளை பிரசுரிக்க முடியாது. யாழ் நிர்வாகம் அதற்கு ஏன் தடைபோட்டுள்ளது என்பது மர்மமானது..! அவையும் உறுதிப்படுத்தபடாத செய்திகளை ஆர்வக்கோளாறினால்.. மக்களை குழப்பும் நோக்கில் போடுகின்றன அல்லது வெட்டி ஒட்டுகின்றன என்று தானே.

எதுஎப்படியோ இவ்விடயத்தில் உங்களின் ( யாழ் நிர்வாகிகள் சிலரின்) நிலைப்பாடு ஈபிடிபியை ஒட்டியது. நிச்சயம் இதற்காக நீங்கள் வருந்தும் நாள் வரும். அப்போது கருத்தால் சந்திப்போம். :rolleyes:

சிங்களத்தின் அதன் தலைவர்களின் இயலாமை, திறன் இருந்தும்

ஒரு தோல்வியுற்ற நாடாக இருப்பதற்கு இதுவும் தான் ஒரு மூல காரணம்.

-- உயர்தரப் பரீட்சையில் 4,384 மாணவர்களுக்கு 3 ஏ

-- 1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு !

இதில் எத்தனை தமிழ் மாணவர்கள் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்?

22,000 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு, அதில் 4,384 மாணவர்களுக்கு 3 ஏ !!

இந்த பேரில் அவர்கள் பட்டதாரியாகும் பொழுது அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடையாது !!!

மேல்வரும் இலக்கங்கள் ஒரு பிழையான திட்டமிடலை காட்டி நிற்கின்றது.

'மூளைசாலிகளின் வெளியேற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் தெற்காசிய நாடு இலங்கை

மூளைசாலிகளின் வெளியேற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இலங்கை உள்ளதென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயர் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயர்கல்வி கற்றோரில் வருடாந்தம் 27.5 சதவீதமானோர் நாட்டைவிட்டுச் செல்வதாக அகில விராஜ் காரியவசம் எம்.பி. கூறினார்.

இச்சதவீதம் இந்தியாவில் 4.2 சதவீதமாகவும் பாகிஸ்தானில் 9.2. சதவீதமாகவும் பங்களாதேஷில் 4.7 சதவீதமாகவும் நேபாளத்தில் 2.7 சதவீதமாகவும் மாலைதீவில் 2.2 சதவீதமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மருத்துவர்களில் 17.4 சதவீதமான மருத்துவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டுச் செல்கின்றனர்.  இதுவும் தெற்காசியாவில் அதிக சதவீதமாகும். இச்சதவீதம் இந்தியாவில் 3.33 ஆகவும் பாகிஸ்தானில் 5.0 ஆகவும் உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12765-2010-12-09-10-17-13.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நிச்சயம் நீங்கள் இதே கும்பலால் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை வரும் போது.. அப்போது பதில் எழுதுகிறேன். மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.. ஈபிடிபி இணையத்தளம் உங்களுக்கு யாழில் நிர்வாகத்தில் உள்ள சிலருக்கும் ஓர் அதிசய ஊடக இணையமாகத் தெரியலாம். ஆனால் அது ஒரு நாசகார ஆயுதக் கும்பலின் பிரச்சார இணையத்தளம் மட்டுமே. அங்கு வரும் செய்திகளுக்கு உண்மைக்கு உத்தரவாதம் கிடையாது. அது அந்தக் கும்பலின் செயல்களை நியாயப்படுத்த வருவது. கரும்பால் ஈபிடிபி இணையத்தள செய்திகளை பிரசுரிக்க முடியும் என்றால் ஏன் அதிர்வு.. தமிழ்வின் செய்திகளை பிரசுரிக்க முடியாது. யாழ் நிர்வாகம் அதற்கு ஏன் தடைபோட்டுள்ளது என்பது மர்மமானது..! அவையும் உறுதிப்படுத்தபடாத செய்திகளை ஆர்வக்கோளாறினால்.. மக்களை குழப்பும் நோக்கில் போடுகின்றன அல்லது வெட்டி ஒட்டுகின்றன என்று தானே. எதுஎப்படியோ இவ்விடயத்தில் உங்களின் ( யாழ் நிர்வாகிகள் சிலரின்) நிலைப்பாடு ஈபிடிபியை ஒட்டியது. நிச்சயம் இதற்காக நீங்கள் வருந்தும் நாள் வரும். அப்போது கருத்தால் சந்திப்போம். :lol:

உங்கள் மற்றும் இங்குள்ள பலரின் முட்டாள்தனமான சிந்தனையினை மீண்டும் பொழிப்புரையாக வழங்கியுள்ளீர்கள். ஈபீடீபீ வலைத்தளத்தின் ஓர் செய்தியை தகவல்மூலமாக அல்லது செய்தியாக இணைக்கும்போது குறிப்பிட்ட செய்தியை இணைப்பவர் ஈபீடீபியுக்கு ஆதரவானவர் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. கருத்துக்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் நீங்கள் ஆக்களிற்கு விரைவாக பட்டம் கட்டுவதன் அவசரத்தையே இவ்வாறான சந்தர்ப்பங்களில் காணமுடிகின்றது. வெளிநாட்டில் வாழும் நீங்களே சிறீ லங்கா அரசை குறைகூறியவாறு அதேசமயம் மறுபுறத்தில் சுதந்திரமாக கருத்து கூறமுடியாதவாறு உங்கள் தனிப்பட்ட சட்டசரத்துக்களை தூக்குவது நகைப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மற்றும் இங்குள்ள பலரின் முட்டாள்தனமான சிந்தனையினை மீண்டும் பொழிப்புரையாக வழங்கியுள்ளீர்கள். ஈபீடீபீ வலைத்தளத்தின் ஓர் செய்தியை தகவல்மூலமாக அல்லது செய்தியாக இணைக்கும்போது குறிப்பிட்ட செய்தியை இணைப்பவர் ஈபீடீபியுக்கு ஆதரவானவர் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. கருத்துக்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் நீங்கள் ஆக்களிற்கு விரைவாக பட்டம் கட்டுவதன் அவசரத்தையே இவ்வாறான சந்தர்ப்பங்களில் காணமுடிகின்றது. வெளிநாட்டில் வாழும் நீங்களே சிறீ லங்கா அரசை குறைகூறியவாறு அதேசமயம் மறுபுறத்தில் சுதந்திரமாக கருத்து கூறமுடியாதவாறு உங்கள் தனிப்பட்ட சட்டசரத்துக்களை தூக்குவது நகைப்பாக உள்ளது.

ஈபிடிபி ஆயுதக் கும்பலுக்கு வக்காளத்து வாங்கும் உங்களின் நோக்கத்திற்காக.. இதை மீள எழுதத் தூண்டுகிறீர்கள். உங்களின் ஊடக கருத்தியல் சுதந்திரத்தை நாம் நன்கு அறிவோம். ஏலவே சில தளங்களில் வந்த செய்திகளை இங்கு போட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்.. அரசியல் இலக்கற்ற ஆயுதக் கும்பல் ஒன்றின் இணையத்தளத்தில் தான் கல்வி சார்ந்த செய்தி அச்சொட்டாக பதியப்பட்டுள்ளதாக நீங்கள் நம்ப வைக்க எடுக்கும் முயற்சி வீணானது. இதனையே நாம் இங்கு வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயக கருத்தியலைப் பேணும் அமெரிக்காவே விக்கிலீக்சை தடுக்கிறது. அந்த வகையில்.. உங்களுக்கு ஈபிடிபி சன நாய் அகம் கூட.. தித்திக்கும். ஆனால் எமக்கோ அந்தக் கொலைவெறி ஆயுதக் கட்சிகளின் பிரச்சார இணையங்களைப் படித்துத்தான் செய்தி பெற வேண்டும் என்ற அவசியமில்லை.

வெளிநாட்டில் வாழுவதால்.. சிறீலங்கா அரசின் பயங்கரவாதச் செயல்களை கண்டிக்கக் கூடாது என்றோ அல்லது ஈபிடிபி கொலைக்காரக் கும்பலின் கொலைகளை அச்சுறுத்தல்களை ஜனநாயக விரோத செயற்பாடுகளை வெளியில் சொல்லக் கூடாது என்றோ அல்லது அதன் போலி பரப்புரைகளை மாணவர்களுக்கு எதிராக அது கொண்டிருந்த இருக்கின்ற நிலைப்பாடுகளை சொல்லாமல் விட வேண்டும் என்ற நீங்கள் கருதினால்.. அதற்கு சரியான இடம் சிறீதர் தியேட்டர் தான். போய் அங்கிருந்து கொண்டு வேதம் ஓதுங்கோ.. கேட்கிறவை கேட்பினம்.

நமக்கு தெரியும்.. எந்தத் தளத்தில் என்ன வருகிறது என்பது. நீங்கள் இதுதான் சிறந்தது என்று சொல்லத்தக்க அளவிற்கு நீங்கள் குறிப்பிடும் தளம் எமக்கு ஒரு செய்தித்தளமாகத் தெரியவில்லை. கொலைக்களமாகவே தெரிகிறது. அது உணர்ச்சி மேலீட்டால் இருக்கலாம்.. அல்லது உண்மையின் பாலானதாக இருக்கலாம். எமது அறிவுக்கு எட்டியவரை அது நியாயம். உங்களுக்கு அது அநியாயமாக இருந்தால் அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. கொலைகாரர்களை ஆயுத சன நாய் அக வாதிகளை தலையில் வைச்சுக் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் எமக்குக் கிடையாது. ஈபிடிபி ஆயுதக் கும்பலின் தளத்தில் படித்துத் தான் மாணவர்களின் பெறுபேறை அறிய வேண்டிய தேவையும் எமக்கில்லை..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.