Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரியாத பாதை தெளிவானபோது

Featured Replies

அதொண்டும் இல்லை வாங்கிக் குடுதவங்கள் 8ம் வகுப்பு அண்ணாக்கு பழசா வாங்கிக் குடுதுட்டாங்கள். அதான் புசத்துறார்.

சாத்திரியார் உங்கட கதையில சீரியலில வாறமாதிரி ஒரு வில்லி இல்லையே ஏன்.?

சஸ்பண்ஸ் வைக்காமல் எழுதுங்கோ சாத்திரியார் கதை சூடுபிடிகேக்க கவுத்து விட்டீங்கள். :evil:

  • Replies 189
  • Views 26k
  • Created
  • Last Reply

சாத்திரி கதை விறுவிறுப்பாக போகின்றது. அந்த கடிதத்தை படித்தவுடன் சாந்தி அடுத்த பிளைட்டில் திரும்பி வருவாவ :roll: ? அடுத்த தொடரை எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே.. நல்லாய் இருக்கு சிவா எடுத்தமுடிவு நல்லாய் இருக்கு. . சாந்தி இலங்கை போய் சேர்வாவா இல்லை.. விமானம் பறகக முதல் இறங்கீடுவாவா ஆவலுடன். :P

ஊமை நீங்கள் மாறி இங்கே பதில் அளித்து விட்டீர்கள். உண்மையில் நீங்கள் அவுஸ்திரேலியாச் செய்திகளில் பதில் அளிக்கவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன்: சாந்திக்கு

கடிதத்தை தொடருமுன் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். காரணம் இக்கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விடயத்தில் உங்களிற்கு உடன்பாடு இல்லாமலிருந்தால் நீங்கள் தயவுசெய்து என்னை தப்பாய் நினைத்துகொள்ளகூடாது. அல்லது என்னை போலவே சில நேரம் உங்கள் சிந்தனையும் இருந்திருந்தால் அது இருவருக்குமே மகிழ்ச்சிதான் என்ன குழப்புகிறேன் என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

சாந்தி நான் உங்களை விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவும் எனது மற்றும் உங்கள் வீட்டாரினதும் முக்கியமாக உங்களின் புூரண சம்மதத்துடன்.இது நான் திடீரென ஏதோ உங்கள் மீது ஏற்பட்ட அனுதாபத்திலேயோ அல்லதுஇதுவரை நாள் உங்களுடன் பழகியதால் ஏற்பட்ட வெறும் இன மன கவர்ச்சியிலேயோ எடுத்தமுடிவல்ல.

பலநாட்கள் பலதடைவை நன்றாக யோசித்து எடுத்தமுடிவுதான். ஆனால். ஆறுதலாய் யோசித்து எடுத்த முடிவை அவசரப்பட்டு தெரிவித்துவிடாமல் ஆறுதலாய் அதுவும் இப்போது தெரிவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.என்னைப்பொறுத்தவரை நீங்கள் ரவியை திருமணம் செய்ததென்பது உங்களையேயறியபமல் அது உங்கள் வாழ்க்கைப்பாதையில் நடந்ததொரு விபத்தே .

அந்த கணங்கள் ஒவ்வொன்றின் ரணங்களும் இன்னும் முழுதாய் மாறவில்லையென்பதும் எனக்கு தெரியும்.மனதின் காயங்களிற்கு காலமே சிறந்தமருந்து.இந்த உங்கள்ஊர் நோக்கிய பயணம் உங்கள் குடும்பத்தினருடனான சந்திப்பு என்பன உங்களை அந்த நினைவுகளிலிருந்து நிச்சயம் மீட்டெடுக்கும்.

அப்போது நீங்கள் உங்கள்குடும்பத்தாருடனும் கதைத்து நீங்களும் யோசித்து ஒரு நல்ல பதிலை தாருங்கள்.அதற்காக நானும் வழைமையாக காதலில் சொல்லப்படும் பொய்களைப்போல காலமெல்லாம் காத்திருப்பேன் என்று சொல்லவில்லை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையையும் யோசித்து உங்களிற்காக ஒரு வருட அவகாசம் தருகிறேன்.

இந்த ஒருவருட அவகாசம் உங்களிற்கு நன்றாக யோசித்து முடிவெடுக்க போதுமானது என்று நினைக்கிறேன்.நீங்கள் சம்மதித்தால் உண்மையில் நான் அதிஸ்ர சாலி ஏனெனில் உங்களைப்போல ஒரு வேறு பெண் எனக்கு மனைவியாக கிடைப்பார்களா என்பது சந்தேகமே.

இனி இதைப்பற்றிய முடிவு உங்களின் கைகளில்தான். நீங்கள் சம்மதித்தால் நாங்கள் புதியவாழ்வை ஆரம்பித்து ஒரு புதிய பாதையில் இணைந்து செல்லலாம். இல்லை சம்மதம் இல்லையென்றால் என்ன செய்வது கொஞ்சம் கவலைதான். ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.

முக்கிய விடயம் எனக்காக நான் செய்த உதவிகளிற்காகவோ மற்றும் நான் தவறாய் நினைத்து மனமுடைந்து விடுவேன் என்கிற எந்தவித வற்புறுத்தலுமின்றி நீங்களாக சுயமாக எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்று கொள்வேன். அதுவரை வழைமை போல நாங்கள் தொடர்புகளை பேணலாம். ஊர் போய் சேர்ந்ததும் கடிதம் போடவும்.

மற்றபடி உங்களிற்கு என்னை திருமணம் செய்து கொள்ள பிடிக்காவிட்டாலும் கூட இப்படியொரு கடிதம் உங்களிற்கு எழுதியது தவறாயின் இறுதியாகவும் மன்னிப்பு கேட்டு கொண்டு முடிக்கிறேன்

அன்புடன்

சிவா

கடிதத்தை படித்து முடித்த சாந்தி அப்படியெ சிறிது நேரம் கண்களை மூடியவாறு யோசித்தாள். இதுவரை நாளும் ஊருக்கு போக வேண்டும் என்று பிவாதமாய் இருந்தவளிற்கு இறுதியாக விமான நிலையத்தில் போகலாமா? விடலாமா? என்கிற தடுமாற்றம் வந்தது ஏன்???சிவா எழுதியது போல எனக்கு அவனில் காதல் இருந்ததா?

தனது வகுப்புகளிற்கு கூட போகாமல் ஓடியோடி எனக்காக உதவியபோது நான் ரவியையும் சிவாவையும் எனது மனதராசில் எத்தனை தடைவை நிறுத்து பாத்:திருப்பேன். அப்போதே நான் சிவாவை மனதில் நிறுத்தி பார்க்க தொடங்கி விட்டேனா??

இப்படியே சாந்திக்குள்ளும் பல விடை தெரியாத கேள்விகள். எதற்கும் ஊருக்கு போய் ஆறுதலாய் பாக்கலாம் எண்று எண்ணியவள் அவன் கடிதத்தை மீண்டுமொரு முறை படிக்கதொடங்கிய போது விமானம் பிரான்ஸ் நாட்டின் தரையை விட்டு மேலெழும்பி கொண்டிருந்தது. :arrow: :arrow:

உறவுகளே சாந்தி சிவாவுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? இல்லையா என்பதற்கு அடுத்த தொடரில் விடை கிடைத்து விடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியண்ணா கதையின் முடிவு வரமுன்னம் இங்கை கனபேரின் மூச்சு நின்றுவிடும்போலிருக்கு. விரைவில் முடிவைத் தாங்கோ.

கதையோட்டம் எழுத்து எல்லாம் நன்றாகவும் யதார்த்தத்துடன் ஒட்டியதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் முடிவை எதிர்பார்த்தபடியிருக்கும் கள உறவுகளுடன் நானும்.

அடுத்த பாகத்தை மிகககக ,,,,,, விரைவில் எதிர்பார்க்கின்றேன்

ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.

அழகான வரிகள் சாத்திரி அண்ணா..

ரொம்ப விறுவிறுப்பா இருக்கு..அடுத்த தொடர் எப்போ போடுவீர்கள்..அதை சொல்ல வில்லையே...சரி.. விரைவில் எதிர் பார்க்கிறேன்.. :roll:

சாத்திரியார், பல பகுதிகளை படிக்காமல் விட்டுவிட்டேன். இன்று தான் படித்தேன். நன்றாக உள்ளது. விரைவில் அடுத்த பகுதியை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... கதை முடியிதா சாத்திரியாரே.. நான் நினைச்சன் பிளேன்ல இருந்து ஓடி வருவாங்க என்று.. சரி பாப்பமே. :) :wink: :P

சாத்திரியண்ணா கதையின் முடிவு வரமுன்னம் இங்கை கனபேரின் மூச்சு நின்றுவிடும்போலிருக்கு. விரைவில் முடிவைத் தாங்கோ.

கதையோட்டம் எழுத்து எல்லாம் நன்றாகவும் யதார்த்தத்துடன் ஒட்டியதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் முடிவை எதிர்பார்த்தபடியிருக்கும் கள உறவுகளுடன் நானும்.

ஹாய் அஸ்வினி அக்கா நலமா என்ன கனநாளாய் காணலை.. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ஊருக்கு போனதன் பின்னர் சில கடிதங்கள் சிவாவற்கு வந்தன சிவாவும் வழைமைபோல பதில் அனுப்பியிருந்தான்; அந்த காலகட்டத்தில்தான் மாபெரும் அவலமான யாழ்ப்பாண் இடப்பெயர்வு நடந்தது...

அந்த இடப்பெயர்வின்போது சிவாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து வன்னிவந்து பின்னர் கொழும்பிற்கு வந்து விட்டனர். அந்த இடப்யெர்வின் பின்னர் சாந்தியிடமிருந்து சிவாவிற்கு எந்த விதமான தொடர்புகளும் கிடைக்கவில்லை

சிவாவும் ஒவ்வொரு நாளும் கடிதப்பெட்டியை திறக்கும்போதெல்லாம் சாந்தியின் கடிதம் வந்திருக்காதா என்கிற ஒரு எதிர் பார்ப்புடன் திறந்து ஏமாந்து கொண்டிருந்ததே வாடிக்கையாகி விட்டது.

சில நேரங்களில் சிவாவின் கற்பனைகளும் வேறு விதமாக ஓடியது சாந்திக்கு ஏதாவது நடந்திருக்குமா??என்று ஒருவித தவிப்பு அவனுக்குள் அதனால் ஒவ்வொரு நாளும் தமிழ் செய்திகள் மற்றும் பத்திரிகை என்பனவற்றையெல்லாம் தவறாமல் பார்த்து வந்தான்அனாலும் சிவாவிற்கு ஒரு நம்பிக்கை சாந்தி எங்கிருந்தாவது தான்னிடம் தொடர்பு கொள்வாள் என்கிற நம்பிக்கை மட்டும் அவனிடமிருந்தது.

அவனது நம்பிக்கை வீண்போகவில்லை சுமார்பத்து மாதங்கள்கழித்து அன்று சாந்தியிடமிருந்து ஒரு கடிதம் அவனுக்கு வந்திருந்தது. நடுங்கும்கைகளுடன் அக்கடிதத்தை பிரித்தான்

அன்புள்ள சிவாவிற்கு

நீண்ட நாட்களின் பின்னர் நான் எழுதும் நீண்டகடிதமிது. எனக்குத்தெரியும் நீங்கள் எனது கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்திருப்பீர்கள் ஆனால் என்ன செய்வது எங்கள் ஊர்பிரச்சனைகள் அறிந்திருப்பீர்கள் தானே. அந்த இடப்பெயர்வினை பற்றி நான் இங்கு எழுத்திலோ ஏன் வார்த்தைகளால் கூட விபரிக்க முடியாது சிவா. அப்படியொரு அவலம்.பிணஊர்வலங்கள் பார்த்திருப்பீர்கள் அன்று நாங்களே பிணங்களாய் ஊர்வலமாய் போனோம்.

எனக்கு இதுவரை நடந்த பிரச்சனைகளின்போதெல்லாம் நான் கடவுள் இருக்கிறார் பார்த்து கொள்வார் என்று அமைதியாய் இருந்திருக்கிறேன் ஆனால் அன்று அந்த அவலத்தை பாத்து கொண்டிருந்தவரின் பெயர் கடவுள் என்றால் அப்படியொரு கடவுள் தேவையில்லை. எல்லாருமே கையில் அகப்பட்டதை எடுத்து கொண்டு மாற்று துணிகூட எடுத்து கொள்ளாமல் நாங்களும் மற்றவர்களை போலவே அவசர அவசரமாய் எல்லாவற்றையும் விட்டு விட்டு வன்னி போவதற்காய் கிளாலி கரைக்கு வந்தோம்.

ஆனால் நான் அந்த அவசரத்திரலும் நான் நீங்கள் கடைசியாய் விமான நிலையத்தில் தந்த கடிதத்தையும் மீண்டும் உங்களிடம் வரும் நோக்குடன் எனது கடவு சீட்டையும் மறக்காமல் பத்திரமாய் எடுத்து கொண்டே வந் தேன். அங்கே கிளாளி கரையில்தான் இன்னொரு பயங்கரம் நடந்தேறியது அதை நினைத்தால் இன்னமும் எனது இதயம் நடுங்குகிறது. ஏதுமின்றி அகதிகளாய் அபலைகளாய் ஓடிய மக்களைநேக்கி இரக்கமேயில்லாத இராணுவத்தினர் செல்லடித்தும் ஆகாயத்திலிருந்து கெலிகள் மூலமும் சுடதொடங்கி விட்டனர்.

எங்கும் ஒரே மரண ஓலம் மனித அவலம் நீலமாய் இருந்த கடல் எம்மக்களின் இரத்தத்தால் சிவப்புகடலாகி விட்டது.நாங்கள் எப்படியோ உயிர்தப்பிவிட்டோம். அன்று மாலை வரை ஒரு பற்றை பகுதியில் மறைந்திருந்து விட்டு மாலையானதும் அங்கு வந்த போராளிகளின் உதவியுடன் ஒரு வள்ளத்தில் ஏறி வன்னிக்கு வந்து விட்டோம்.அன்று அந்த நிகழ்ச்சி என்னை சரியாகவே பாதித்து விட்டது அன்று எம்மக்கள் பட்ட துன்பத்தை பார்த்போது அதற்கு முன்னால் நான் பட்ட துன்பங்கள் எல்லாம் வெறும் தூசிக்கு சமானம்.

அதனால் நானும் உங்களிடம் வருவதற்காய் பத்திரமாய் எடுத்து வந்த எனது கடவுசீட்டை அன்று அந்த கிளாலி கடலிலேயே கிழித்து கரைத்து விட்டேன்.ஆம் எனது இனம் பட்ட இப்படியொரு துன்பத்தை பார்த்தபின்னும் நான் வெளிநாடு வந்து உங்களுடன் உல்லாசமாய் எனது காலத்தை கழிக்க எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

வன்னி வந்த பின்னர் ஏற்கனவே நேய்வாய் பட்டிருந்த எனது தாயாரும் இறந்து விட்டார். தங்கை கனடா போன விடயம் உங்களிற்கு எற்கனவே தெரியும்தானே.அம்மாவின் மரணத்தின் பின்னர் அப்பாவும் ஏதோ இறுதிகாலத்தை கடத்தினால் போதும் என்கிற நிலைமையில் வழ்ந்து கொண்டிருக்கிறார்.இந்த பிரச்சனைகளாலேயே உங்களிற்கும் கடிதம் போட முடியவில்லை. நீங்கள் எனக்கு எனது விருப்பத்தை தெரிவிக்க எனக்கு தந்த ஒரு வருட கால கெடு முடைவடைகிற காலம் நெருங்கி விட்டதால் வன்னியின் ஒரு காட்டுபகுதியில் போராளிகளின் பயிற்சி பாசறையில் இருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.

ஆம் சிவா இப்போ நான் எனது மக்களிற்காய் போராட பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் ஒரு போராளி. எனது பயிற்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து நான் இப்பபோது தொடர்ச்சியாய் நடந்து கொண்டிருக்கும் ஜெயசுக்குறு களத்திற்கு போய்விடுவேன் பின்னர் உங்களுடன் தொர்பு கொள்ளமுடியாமல்போய்விடலாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே கதை இறுதி கட்டத்தையடைந்து விட்டது அடுத்த பாகத்தில் கதை முடிவடைந்து விடும் இதுவரை எனக்கு உற்சாகம் தந்து இக்கதையை தொடர்ந்து எழுத தூண்டிய அனைத்து உள்ளங்களிறகும் நன்றி கூறிக் கொள்வதுடன் சாந்தி இப்போ எங்கே சிவா என்ன செய்கிறார் என்று அறிய உங்களிற்கு விருப்பமா?? அடுத்த பாகத்தில் அவர்கள்பற்றி சிறிய விழக்கங்களுடன் கதையை முடிக்கிறேன்

கதை என்ன உண்மைச் சம்பவமா சாத்திரியார்,..?? பலபேருடைய சுவாசம் ஊருகாய் திரும்பிய கருப்பொருள் தெறிக்கிறதே.....????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கரு உண்மை சம்பவம் அதை எனது கற்பனைகளுடன் கலந்து எழுதினேன் தலை எனது எல்லா கதைகளும் அப்படியானவையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையில் தீடீர் திருப்பம்.. அருமையாக இருக்கிறது சாத்திரியாரே கடைசிப்பாகத்தையும் எதிர்பார்த்தபடி.. :P

சாத்திரி கதையை குடும்பத்துக்கை கொண்டு போய் கடைசிலை அப்பிடியே மடக்கிய தேசியத்துக்கை கொண்டு வந்து மாதிரி கிடக்குது .................. ஆனா சென்டிமெண்டுகள் நிறைய இருக்கிறது

ம்ம் கதை நன்றாக பாச உணர்வுகளுடன் கூடி பிண்ணிப் பிணைந்திருகிறது

அடுத்த பாகத்தை எதிர்பார்க்கின்றோம்

10 ÅÐ Àì¸òÐìÌ Åó¾¡Â¢üÚ. ¿¡ý¾¡ý þýÛõ Å¡º¢ì¸Å¢ø¨Ä. §¿Ãõ ÅÕõ§À¡Ð Å¡º¢ô§Àý.

§ÁÖõ ¦¾¡¼÷óÐ ±Ø¾ Å¡úòÐì¸û...

தெரியாத பாதை தெளிவான போது மிக அருமையாக சாத்திரிக்கே உரிய பாணியில் கதை நகர்த்திச் செல்வது நன்றாக உள்ளது. வீட்டுக்குள் இருந்து நாட்டுக்கு வந்தாச்சு இந்த திருப்பம் நன்றாகவுள்ளது. முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் கதையின் இரசிகை

முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.... சாத்திரி அவர்களே...

ஆகா சாத்திரி கதை திருப்பம் நல்லாயிருக்கு.முடிவை விரைவாக எழுதுங்கோ.

சாத்திரி அண்ணா..கதையை அருமையாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்..இன்னும் ஒரு பாகம்..அத்ன் முடிவை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க

சாத்திரி கதையை சிறப்பாகக் கொண்டு நகர்த்தியுள்ளீர்கள். அடுத்த இறுதிப்பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கதையை உங்கள் எழுத்தினுடாக அழகாக தந்தீர்கள். இறுதி கட்டமும் வந்தாச்சு. இப்போ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.