Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்

Featured Replies

பெங்காஸியில் விழுந்த விமானம் யாருக்கு சொந்தம்

போராளிகளின் விமானமே போராளிகளால் தவறுதலாக சுடப்பட்டது - போராளிகளின் பேச்சாளர்

A warplane was shot down on Saturday over the Libyan city of Benghazi and an opposition activist said it was a rebel fighter jet hit by accident.

http://classic.cnbc.com/id/42163990

நேற்று சனி அதிகாலை பெங்காஸி நகரில் போர் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானம் கடாபியினுடையதா இல்லை போராளிகளுடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போராளிகளுடைய விமானம் என்றால், யுத்தவிமானம் வைத்து போரிடும் அளவுக்கு அவர்களுடைய படை பலம் உள்ளதா என்ற முதலாவது கேள்வி எழுகிறது. இல்லை சுடப்பட்டது கடாபியின் விமானம் என்றால் அதைச் சுட்டு வீழ்த்தியது யார், இந்த விமானத்தை வீழ்த்தியது போராளிகள் என்றால் அதை சுடுமளவிற்கு வலிய ஏவுகணை போராளிகளிடம் எப்படி வந்தது என்பது அடுத்த கேள்வி.

அதேவேளை தமது படைகள் ஒரு பிரான்சிய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக லிபிய தொலைக்காட்சி தெரிவித்தது ஆனால் பிரான்ஸ் இதை மறுத்துள்ளது. அமெரிக்கத் தாக்குதல் லிபிய தலைநகர் திரிப்போலியை சுற்றியுள்ள 20 லிபிய இராணுவ இலக்குகளை நோக்கி நடாத்தப்பட்டுள்ளன. கிழக்கு லிபியாவில் இருந்து சுமார் 175 கி.மீ தொலைவில் உள்ள மிஸ்ஸாரா நகரமும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானது.

கடாபியின் தரப்பு போராளிகளே தமது விமானத்தை மாறிச்சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கிறது. இதுவரை இந்த விமானம் யாருக்கு சொந்தமானது எப்படி விழுந்தது என்ற விவகாரம் மர்மமாகவே உள்ளது. ஆனால் விமானம் விழுந்ததும் பெங்காஸியில் மக்கள் கைகளை உயர்த்தி பாரிய ஆரவாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=61691

  • Replies 207
  • Views 13.4k
  • Created
  • Last Reply

At Qaddafi Compound, a Human Shield - NY Times

கடாபியின் மாளிகையில் மனித கேடயங்கள்

- தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பெண்களையும் பிள்ளைகளையும் மனித கேடயங்களாக கடாபி வைத்துள்ளார்

- பலரினதும் குடும்பங்கள் கடாபியின் படைகளில் உள்ளவர்கள்

- திரிப்போலிக்கு அருகிலுள்ள விமானத்தளங்களில் இருந்து அரச விமானங்கள் பறந்தன என மக்களை ஆதாரம் காட்டி கூறப்பட்டுள்ளது

- உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது

The crowd included many women and children, and some said they had family in Colonel Qaddafi’s forces. They said they had come to protect Colonel Qaddafi’s compound from bombing by volunteering to be shields. “If they want to hit Muammar Qaddafi, they must hit us because we are all Muammar Qaddafi,” said Ghazad Muftah, a 52-year-old widow of a soldier from the Warfalla tribe, who said she was there with her six grown children. At least one person attending the rally spoke out against Colonel Qaddafi in a recent interview — a double-agent phenomenon that appears common among Libyan demonstrators for and against the government.

In Tajoura — a neighborhood near the capital that has been a hotbed of anti-Qaddafi unrest — one resident had complained earlier in the day that despite the announced no-fly zone, Libyan Air Force jets could be heard taking off from the nearby bases, presumably headed toward the eastern front with the rebels.

“Our suffering is greater than anyone can imagine,” he said. “Anyone who dares go outside is either arrested or shot dead.

“Food is decreasing, there is no tap water, and electricity comes and goes,” he added. “The hospitals cannot really offer much treatment anymore because there are no medicines. There is no milk for the children.”

It was unclear Saturday night whether the missile strikes had hit the air base, but in the city of Misurata — the last major rebel holdout in the west — one person said residents were cheering the sound of airstrikes. The Qaddafi forces had continued their siege Saturday, including the cutoff of water and electricity, he said, and Qaddafi gunmen continued to fire into the city.

Speaking on the condition of anonymity to protect his family, he said: “The airstrikes sound good to the Libyan people.”

http://www.nytimes.com/2011/03/20/world/africa/20tripoli.html?_r=1&hp

George Galloway on Wests Libya intervention (19Mar11)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிபியா மீதான தாக்குதலை தொடங்கிது பிரான்ஸ்!

Posted by admin On March 20th, 2011 at 4:40 am

லிபிய வான்பரப்பில் பறந்து இராணுவ வாகனமொன்றின்மீது பிரெஞ்சு போர் விமானமொன்று கடந்த இரவு (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தியரி புர்கார்ட் தெரிவித்தார்.

ஜி.எம்.ரி.நேரப்படி 16.45 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10.15 மணி) இத்தாக்குதல் இடம்பெற்றதாக அவர்கூறினார்.லிபியாவில் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கிணங்க விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்தும் சர்வதேச நாடுகளின் நடவடிக்கையில் முதலாவதாக இடம்பெற்ற தாக்குதல் இதுவாகும்.இராணுவ வாகனமொன்றே இலக்கு வைக்கப்பட்டதாக புர்கார்ட் கூறினார். எனினும் எந்த வகையான வாகனம் என அவர் கூறவில்லை.

விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதில் லிபிய வான் பரப்பில் சுமார் 20 யுத்த விமானங்கள் பறந்துவருவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

saritham.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகள் மிருகங்கள் ! போரில் வெல்வேன்..! கடாபி

தற்போது லிபியாவிற்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தும் மேலை நாடுகள் மனிதர்கள் அல்ல அவர்கள் மிருகங்கள் என்று நேற்று மாலை லிபிய தொலைக்காட்சியில் கடாபி பேசினார். தனது படைகள் தரைவழி தாக்குதலை நடாத்தி முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது களத்தில் நிற்கும் கூட்டுப்படையணி மிருகங்கள், பயங்கரவாதிகள், மோசமானவர்கள் என்று திட்டித் தீர்த்தார்.

மேலை நாட்டு படையணிகள் அன்று சர்வாதிகாரி ஹிட்லரும், முசோலினியும் செய்த தவறையே இன்று செய்கிறார்கள். இந்த நாடும், இங்குள்ள எண்ணெய் வளமும் எமக்கு ஆண்டவன் தந்த நன்கொடை இதை அன்னியர் கைப்பற்ற விட முடியாது. ஒவ்வொரு மக்களும் ஆயுதங்களுடன் களமிறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நாம் ஒருபோதும் நாட்டைவிட்டு ஓடப்போவதில்லை இந்தப் போரில் நாம் வென்றேயாவோம் என்றும் சூழுரைத்தார். லிபியாவில் உள்ள ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் ஆயுதங்களை எடுத்து களமிறங்குங்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி அவருடைய முகத்தைக் காண்பிக்கவில்லை.

தங்க நிறத்திலான ஒரு கை அமெரிக்க ஏவுகணையை உடைத்து நொருக்குவதைப் போன்ற ஒரு படத்தின் பின்னால் அவருடைய குரல் வெளி வந்தது.

http://www.alaikal.com/news/?p=61750

Gaddafi: Western air raids on Libyan forces 'terrorism'

"This is a crusader war against the Muslim people, especially against the Libyan people. They believe they will terrify the Libyan people. These are only terrorist means, and only the forces on the ground will be victorious," he said. "They will be inevitably defeated. They will not be able to make the people give in. Alll the people are now carrying weapons. We will fight you if you continue your aggression against us," Gaddafi said in a speech broadcast on Libyan television.

The television station carried only the sound of Gaddafi's voice, without pictures. "You are terrorists. You are fighting a people that hasn't invited you. Libya has become a hell in the face of enemies. This is an unjustified aggression. We will not leave our land and we will liberate it," Gaddafi said.

http://www.jpost.com/MiddleEast/Article.aspx?id=212967

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி கட்டுப்பாட்டில் வைத்திருந்த நகரங்களில் மறுபடியும் மக்கள் அவருக்கு எதிராக வீதிக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். பல இடங்களில் கடாபியின் படத்தை தீயிட்டு கொழுத்தி மக்கள் நடனமாடுவதை சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.

இந்த நிலை தாயகத்திலும் வடக்கு கிழக்கில் வரணும்.

வருமா...?

தற்போது எம்மிடம் ஆயுதம் இல்லாததால் இது மக்கள் போராட்டமாக கணிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

The television station carried only the sound of Gaddafi's voice, without pictures. "You are terrorists. You are fighting a people that hasn't invited you. Libya has become a hell in the face of enemies. This is an unjustified aggression. We will not leave our land and we will liberate it," Gaddafi said.

அப்பிடியே எங்கட மகிந்தர் சொன்னதுபோல இருக்கு..! :D நம்மாளுதான் எழுதிக் குடுத்தானோ தெரியாது.. :lol:

மேலை நாடுகள் மிருகங்கள் ! போரில் வெல்வேன்..! கடாபி

தமிழன் கொள்ளப்படும் போது வேடிக்கை பார்த்தவனும், தமிழின படுகொலைகளை அரங்கேற்றியவர்களுடன் உறவுகளை வைத்துக் கொண்டவனும் மிருகங்கள் தான். இந்த இரண்டு கும்பலும் அடிபட்டு அழியட்டும்.

- மீண்டும் ஒரு யுத்த நிறுத்தத்திற்கு அறிவித்துள்ளது. தனது சகல படையணிகளுக்கும் உடனடி யுத்த நிறுத்தத்தை அமுலாக்க வேண்டியுள்ளது லிபியாவின் இராணுவ தலைமை.

- அரபு லீக் இந்த "வான் பறப்பு தடை" அமுலாக்கல், ஐ.நா.வின் இணக்கத்திற்கு அப்பால் சென்றுள்ளதாயும் பொதுமக்களை கொன்றுள்ளதாயும் குறை கூறியுள்ளது.

- கடாபியின் வதிவிட மாளிகையில் புகை எழும்புவதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடாபி தமது இலக்கல்ல என அமெரிக்க கூறுகின்றது

- லிபியாவின் விமான எதிர்ப்பு வலிமை முற்று முழுதாக இல்லாவிட்டலும் அதன் பெரும் பகுதி செயலிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 124 தொமாஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

- இப்பொழுது அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இத்தாலி, பெல்ஜ்யம், கனடா,டென்மார்க், நோர்வே மற்றும் கட்டார் ஆகிய நாடுகளே போரில் ஈடுபடுகின்றன. இந்த நாடுகளுடன் மேலதிக நாடுகளும் விரைவில் சேரும் என கூறப்படுகின்றது .

Edited by akootha

கடாபி எங்குள்ளார் என தெரியவில்லை

  1. கடாபியின் பெரியை வளாகத்துள் உள்ள ஒரு பகுதி முற்றாக அழிக்கபட்டுள்ளது
  2. இதில் கடாபி அன்றாட நிர்வாக அலுவல்களை நிர்வாகித்து வந்ததாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
  3. இந்த நான்கு மாடிக்கட்டிடத்தின் மீது இரண்டு ஏவுகணைகளை வீழ்ந்து வெடித்துள்ளன.
  4. உலக நாட்டு ஊடகவியலாளர்களை அழைத்து ஏற்பட்ட அழிவுகளை காட்டியுள்ளார் கடாபி.

Building in Gadhafi compound possibly struck by cruise missiles

A four-story building in Libyan leader Moammar Gadhafi's Tripoli compound has been heavily damaged, possibly by cruise missiles, CNN's Nic Robertson reported. Robertson, invited by government officials to see the damage, said early Monday local time that two circular holes in the building may be telltale signs of cruise missiles, although that could not be immediately confirmed.

The leader's whereabouts were not known.

http://edition.cnn.com/2011/WORLD/africa/03/20/libya.civil.war/

லிபியா மீது விமானத் தாக்குதல்: இந்தியா வருத்தம்

லிபியா மீது அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் நடத்தும் விமானத் தாக்குதல் வருத்தமளிப்பதாக உள்ளது என இந்தியா கருத்து தெரிவித்திருக்கிறது.

வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் இது குறித்து தனது டுவிட்டர் செய்தி மூலம் ( https://twitter.com/ForeignSecNRao ) தெரிவித்திருப்பதாவது:

லிபியாவில் கலகமும் வன்முறையும் தொடர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனிடையே அந்நாட்டின் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதல் வருந்தத் தக்கது.

அங்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பிரச்னைகளைக் குறைக்கும்படியாக இருக்க வேண்டுமே தவிர, அங்கு வாழ்ந்து வரும் அனைவருக்கும் இப்போது உள்ளதைவிட இன்னும் மோசமான நிலையை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. லிபியா மீது நடத்தும் விமானத் தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டிலிருந்து பணியாற்ற அங்கு வந்து வசிப்பவர்கள், தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படக் கூடாது. அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது.

அனைத்து தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும். கருத்து வேறுபாடுகளை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஐ.நா., மற்றும் பிராந்திய சர்வதேச அமைப்புகள் இதற்கு உதவ வேண்டும் என அவர் கூறினார்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=393275&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

லிபியா மீது விமானத் தாக்குதல்: இந்தியா வருத்தம்

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா அம்மையார் போல அரபுலீக்கும் கவலை

கூட்டுப்படைகள் லிபியா மீது நடாத்தும் தாக்குதல்களுக்கு அரபுலீக் செயலர் அமீர் மூஸா அச்சம் தெரிவித்துள்ளார். இத் தாக்குதல்கள் பொது மக்களுக்கு பெரும் சேதம் விளைவித்துவிடும் என்ற கவலையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஐ.நாவில் லிபியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதாகக் கூறிய அவர் தாக்குதலினால் ஏற்படும் மக்கள் இழப்புக்காக அச்சம் தெரிவிப்பதாகவும் கூறினார். அரபுலீக் செயலர் இப்படி தெரிவிக்க முக்கிய காரணம் எகிப்திய அதிபராக வர விரும்பும் அவருடைய கனவுகளை தக்க வைப்பதற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படி சொல்லாவிட்டால் அரபுலீக்கில் உள்ள அங்கத்துவ நாடுகளை திருப்திப்படுத்த முடியாத நிலையும் இருக்கிறது.

அரபுலீக்கில் தற்போது கட்டார் நாடு மட்டுமே தனது விமானங்களை தாக்குதலில் இறக்க முன் வந்துள்ளது.

அதேவேளை ஆபிரிக்க யூனியனோ இந்த விடயத்தில் தலையிடாது மௌனம் காப்பதால் அரபு லீக்கிற்கு இவ்வாறு கருத்துரைக்க வேண்டிய நிலை வந்துள்ளது. மேலும் மறைமுகமாக போருக்கு ஆதரவு வழங்கிய அரபு லீக் இப்போது இதைத்தான் கூற முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். போரில் வெற்றி என்று கொக்கரிக்கவா முடியும்.

இதுபோல நேற்று முன்தினம் இங்கிலாந்து வந்த சோனியா அம்மையார் வன்னியில் நடந்த அவலங்களை காணொளியில் பார்த்து கவலைப்பட்டதாக தெரிவித்திருந்தார். அப்படிச் சொல்லாமல் மகிழ்ந்து கூத்தாடியதாகவா அவர் சொல்ல முடியும் ?

சோனியாவின் கவலையும் அரபுலீக் தலைவரின் கவலையும் உண்மையில் கவலைப்படுகிறோம் என்று சொல்வதைத்தவிர மாற்று வழியற்ற கருத்துக்களாகும்.

http://www.alaikal.com/news/?p=61886

இது பழையகால சிலுவைப் போர் போன்ற போர் ! புற்றின் ஆவேசம்

ஐ.நாவில் லிபியாவுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம் மத்திய காலத்தில் நடைபெற்ற சிலுவைப்போர் போன்ற நிகழ்வு என்று வர்ணித்தார் ரஸ்யப்பிரதமர் விளாடிமிர் புற்றின்.

ஐ.நாவின் தீர்மானம் தகவல் குறைவு கொண்டது, சரியான விடயங்களை உள்ளடக்கி இயற்றப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

கடாபியின் படைகள் ஜனநாயகத்தை பின்பற்றவில்லை என்பதற்காக விமானத் தாக்குதல்களை அமுல் செய்ய முடியாது. மேலும் மற்றைய நாடுகளின் அரசியல் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலை வைப்பது தமக்கு பலத்த கவலையை அளிப்பதாகவும் கூறினார்.

மேலை நாடுகள் தரைப்படையை இறக்க தயாராகி வரும் நிலையில் புற்றினின் இக்கருத்து வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது. தற்போது கடாபிக்கு எதிராக போராடும் போராளிகளின் கூட்டமைப்பின் தலைவர் அகமட் அல் காஸி மேலை நாட்டு படைகள் லிபிய தரையில் இறங்க வேண்டியதில்லை என்றும், தாமே தரைப் போரை வெல்வோம் என்றும் கடந்த 17ம் திகதி கூறினாலும் அதை மேலை நாடுகள் பெரிதாக செவிமடுக்கவில்லை.

அதேவேளை இந்தப் போரின் நோக்கமென்ன?

தாக்குதல் முடிந்து கடாபியை அப்புறப்படுத்தினால் அடுத்தது என்ன?

இன்றைய பொருளாதார சிக்கலில் விலையேற்றம் மேலும் அதிகரிக்கப் போகிறது.. இப்படி ஒரு போர் தேவையா ?

என்ற வழமையான வாதங்களும் எழுந்துள்ளன. இப்படி பல வாதங்கள் வந்தாலும் மேலை நாடுகளின் அவசரத்திற்குள் புதைந்திருக்கும் மர்மம் வெளிவர மேலும் சில நாட்கள் ஆகலாம்.

http://www.alaikal.com/news/?p=61899

Putin joins fierce opposition to Libya ‘crusade’

Russian Prime Minister Vladimir Putin on Monday likened the UN Security Council resolution supporting military action in Libya to medieval calls for crusades.

Mr. Putin, in the first major remarks from a Russian leader since a coalition of Western countries began air strikes in Libya, said that Moammar Gadhafi’s government fell short of democracy but added that did not justify military intervention.

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/putin-joins-fierce-opposition-to-libya-crusade/article1949529/

வாய்ப்புக் கிடைத்தாலும் கடாபியை கொல்லமாட்டோம் !

லிபியாவுக்கு எதிரான தாக்குதலின் போது கேணல் கடாபியை இலக்கு வைப்பது தமது நோக்கம் அல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை லிபியாவின் மீது அமல்படுத்த விளையும் மேற்கத்தைய நாடுகள் கூறுகின்றன. அத்தகைய நகர்வு ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் றொபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.

கேணல் கடாபியின் சரியான தங்குமிடம் தெரியவந்தாலும் கூட அவர் மீது சுடப்படமாட்டாது என்று பிரான்ஸ் சார்பாக பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் தீர்மனத்தின் கீழ் லிபியத் தலைவரை தாக்குவது அனுமதிக்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் படைகளின் தலைமை அதிகாரியான சர் டேவிட் றிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

ஆனால், டேவிட் றிச்சர்ட்ஸின் கருத்து தவறானது என்று அரசாங்க அமைச்சர்கள் கருதுவதாக பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரம் ஒன்று பிபிசிக்கு கூறியுள்ளதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக கடாபி காணப்பட்டால் அவர் மீது தாக்குதல் நடத்தப்படுவது நியாயமானதுதான் என்றும் அது கூறியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=62018

Rebels want Gadhafi ousted, not dead: http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/rebels-want-gadhafi-ousted-not-dead/article1949418/

Libya's rebels want to drive Moammar Gadhafi from power and see him tried — not have him killed, a European representative for the leading opposition group said in an interview Monday

கடாபிக்கு அனுகூலமாக இருந்த கள நிலைமைகள் மாற்றப்பட்டுள்ளன - அமெரிக்கா

U.S. official: Gadhafi's momentum stopped: Libyan leader Moammar Gadhafi's momentum has stopped and rebels have been able to hold onto areas that government forces had been poised to capture just a few days ago, a U.S. official said Monday.

http://www.cnn.com/2011/WORLD/africa/03/21/libya.civil.war/index.html?hpt=T1

மேற்குலக நாடுகளில் இந்த "மனிதாபிமான" யுத்தத்தின் இறுதி இலக்கு என்ன என்ற கேள்வி பல தரப்பாலும் எழுப்பப்படுகின்றது.

- இது ஒரு உள்நாட்டு யுத்தம் என்றும், இதில் மேற்குலகம் ஒரு தரப்பை ஆதரிப்பதையும் கூறுகின்றனர்

- இப்பொழுது போராளிகள் தரப்பின் கை ஓங்கிய நிலையில், அவர்கள் கடாபி படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தால், மேற்குலகம் விமானப்படை ஆதரவு தருமா? என கேட்கப்படுகின்றது

- இன்னும் சில வாரங்களுக்குள் கடாபியை அகற்றாவிட்டால், லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

- இதுவரை நிலத்தில் தமது படைகள் கால் வைக்க மாட்டா என மேற்குலகம் கூறுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியம்? கால் வைத்தால் இஸ்லாமிய உலகம் என்ன செய்யும்?

மேலும் அமெரிக்கா ஏற்கனவே இரு இஸ்லாமியா நாடுகளில் தனது துருப்புக்களை வைத்திருப்பதால், தான் முன்னணி பாத்திரத்தை வகிக்க மறுக்கின்றது. அதேவேளை, அதிபர் ஒபாமாவை பதவியில் இருந்து கலைக்க வேண்டும் என குயரசுக்கட்சி செனட்டர் ஒருவர் கூறியுள்ளார்.

1. Libyan bombing 'unconstitutional', Republicans warn Obama: http://www.guardian.co.uk/world/2011/mar/22/libyan-conflict-unconstitutional-obama-warned

2. Concern about mission creep grows as more bombs fall on Libya: http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/concern-about-mission-creep-grows-as-more-bombs-fall-on-libya/article1950913/

அமெரிக்க விமானம் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. விமான ஓட்டி தப்பித்துள்ளார். மேலும், அவர் போராளிகள் உள்ள பகுதியில் இறங்கியதால் அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகின்றது. உதவியாளரை தேடும் பணி நடக்கின்றது.

US warplane crashes in Libya, pilot safe

A US warplane has crashed in a Libyan field after an apparent mechanical failure and its pilot has been rescued by rebels, Britain's Daily Telegraph newspaper reported on its website on Tuesday.

The plane is an F-15E Eagle, the Telegraph added in a report from a correspondent on the ground in Libya. US officials were not immediately available for comment. (Reuters)

http://www.ynetnews.com/articles/0,7340,L-4046009,00.html

Edited by akootha

லிபியாவுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட துருக்கி எதிர்ப்பு

லிபியாவுக்கு எதிரான போரில் நேட்டோ ஈடுபடுத்துவதில் தொடர் சிக்கல்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன. லிபியாவுக்கு எதிராக தமது துப்பாக்கியை நீட்ட முடியாதென்று துருக்கிப் பிரதமர் ஏர்டோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது ஐ.நா ஒரு நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கலாம் ஆனால் ஆயுதப்போரை ஊக்குவிக்கக் கூடாது என்று ஐ.நாவையும் கடுமையாக தூற்றியுள்ளார்.

ஏற்கெனவே லிபியா மீதான தாக்குதலுக்கான நிகழ்ச்சி நிரல் நேட்டோவால் தயாரிக்கப்படடாலும்; துருக்கி – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளின் பிரச்சனையால் நேட்டோவிற்குள் கடும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தப் போரில் தன்னை மரியாதை செய்யாதது, பாரீசில் நடைபெற்ற கூட்டத்திற்கு தன்னை அழைக்காது உதாசீனம் செய்தது போன்ற காரணங்களால் துருக்கி கோபமடைந்துள்ளது.

மேலும் முஸ்லீம் நாடுகளின் அதிருப்தியை தேட விரும்பாமையும் துருக்கியின் தயக்கத்திற்குக் காரணமாக உள்ளது. பிரான்சைப் பொறுத்தமட்டில் இந்தப் போரில் இருந்து அது உலகத் தலைமையை ஏற்க விரும்புகிறது. ஆகவே நேட்டோவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறுகிறது. இந்த இருபெரும் தலைவலிகளை தீர்க்க இரவு பகலாக பாடுபட்டு வருகிறார் நேட்டோ செயலர் ஆனஸ் போ ராஸ்முசன். சற்று முன் கருத்துரைத்த அவர் நேட்டோ இந்தப் போரில் முக்கியமான பங்கேற்கும் என்றும், ஐ.நாவின் தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கப் போவதாகவும் தெரிவித்தார். இந்தச் சிக்கல் தீர இரண்டொரு தினங்கள் ஆகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=62152

Turkey blocks no-fly zone role for NATO

France calls for non-NATO body to lead mission as Erdogan says Turkey will "never point a gun at the Libyan people".

France has proposed that a new political steering committee outside of NATO be responsible for overseeing military operations over Libya to enforce a UN-backed no-fly zone. The announcement came after Turkey, a NATO member, warned on Tuesday that it could not agree to the military alliance taking over the enforcement of the no-fly zone if their mission went "outside the framework" of the UN decision.

Alain Juppe, the French foreign minister, said the new body would bring together foreign ministers from participating states, including Britain, France and the US, as well as the Arab League. It is expected to meet in the coming days, either in Brussels, London or Paris.

http://english.aljazeera.net/news/europe/2011/03/2011322181336891487.html

"சரித்திரத்தின் குப்பைத்தொட்டியினுள் அந்நிய படைகள்" - லிபிய அதிபர் கடாபி

வெளிநாட்டு படைகள் லிபியாவில் குண்டுகளை போடத்தொடங்கிய பின்னர் முதல் முறையாக கடாபி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அந்நிய படைகளை "சரித்திரத்தின் குப்பைத்தொட்டியினுள்" லிபிய மக்கள் தள்ளுவார்கள் எனக்கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் :

- நாங்கள் சரணடைய மாட்டோம்.

- அவர்களை எந்த வழியாலும் தோற்கடிப்போம்

- சண்டை நீண்டதோ இல்லை குறுகியதோ, நாங்கள் தயாராக உள்ளோம்

- இறுதியில் நாம் வெல்வோம்

Foreign forces to end in history's dustbin-Gaddafi

TRIPOLI, March 22 (Reuters) - Foreign forces leading an assault against his government will lose and end up in the dustbin of history, Libyan leader Muammar Gaddafi said on Tuesday as he vowed to continue fighting.

"We will not surrender ... We will defeat them by any means," Gaddafi said in brief remarks in the capital Tripoli broadcast live on television. "We are ready for the fight, whether it will be a short or a long one."

"We will be victorious in the end."

Foreign reporters in Tripoli were told the Libyan leader spoke at his Tripoli compound and was addressing supporters forming a human shield to protect him.

"I am staying here, my home is here, I am staying in my tent," he told his supporters who waved green flags. "I am here, I am here, I am here."

The speech was followed by fireworks in the Libyan capital. Crowds could be heard cheering and shooting into the air in the city centre.

"There are demonstrations everywhere against this unjustified assault, which breaches the United Nations' charter," Gaddafi said of the international attacks. "This assault ... is by a bunch of fascists who will end up in the dustbin of history." (Reporting by Maria Golovnina in Tripoli .

http://af.reuters.com/article/libyaNews/idAFLDE72L2KI20110322

.

சில வேளைகளில் சீன ரஷ்ஷிய நாடுகளின் திட்டம், லிபியாவையும் இன்னுமொரு ஈராக் ஆக்கி ஏற்கனவே நொந்து போன மேற்கு பொருளாதாரத்தை இன்னும் நோகடிப்பதாகவும் இருக்கலாம்.

கடாபி போகவேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்பினாலும், மேற்கின் தாக்குதல் ஒரு விதமான எதிர்ப்பு மனப்பான்மையை அவர்களில் ஏற்படுத்தியிருக்கின்றது.

மேற்கு அகலக் கால் வைக்.... (ஆ.. எங்கேயோ கேள்விப்பட்ட வசனம் ....) :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 23, மார்ச் 2011 (12:7 IST)

கடாபி வீடு மீது மீண்டும் குண்டுவீச்சு

லிபியா மீது அமெரிக்க கூட்டு படைகள் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணைகளும் வீசப்படுகின்றன. தலைநகரம் திரிபோலியில் உள்ள கடாபி மாளிகை மீது நேற்று முன்தினம் அமெரிக்க படைகள் குண்டு வீசின. அதில் மாளிகையின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கடாபி மாளிகை தாக்கப்பட்டது. ஏவுகணையை வீசி மாளிகை மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் மாளிகையின் இன்னொரு பக்க மதில் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. தன்னை குறி வைத்து அமெரிக்க படைகள் தாக்குவதை அடுத்து கடாபி பாதாள அறைக்குள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் நேற்று தனது மாளிகை மீது தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் மாளிகையில் இருந்து வெளியே வந்த கடாபி குண்டு வீசப்பட்ட இடத்தை சுற்றி பார்த்தார்.

அப்போது அவர், இஸ்லாமிய நாடுகள் மீது மேற்கத்திய நாடுகள் சிலுவை போரை தொடங்கியுள்ளன. இதை அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த போரில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும். இறுதியில் நாம் வெற்றி பெறுவோம். ஒரு போதும் நாம் அவர்களிடம் சரண் அடைய மாட்டோம். எங்கள் நாட்டின் மீது பறந்து செல்லும் ஏவுகணைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இதை வாண வேடிக்கையாக கருதி மகிழ்ச்சி அடைகிறோம்.

குறுகிய காலம் ஆனாலும் சரி, நீண்ட காலம் ஆனாலும் சரி, போரில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். அமெரிக்க விமானங்கள் என் வீட்டை குண்டு வீசி அழிக்கலாம். ஆனால் வெறும் கூடாரம் தான் எனது சொந்த வீடு. இந்த கூடாரத்தை அழித்தால் நானாவே வேறு கூடாரத்தை அமைத்து கொள்வேன். நான் எப்போதும் இங்கு தான் இருக்கிறேன்’’ என்றூ கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடாபியின் 150 தொன் தங்க கட்டிகள் லிபிய மத்திய வங்கியில் வைப்பு : ச.நா.நி. தகவல் _

வீரகேசரி இணையம் 3/23/2011 2:49:44 PM

லிபிய மத்திய வங்கியில் கடாபி சுமார் 4 பில்லியன் பவுண்கள் பெறுமதி வாய்ந்த 150 தொன் தங்க கட்டிகளை வைத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இத்தங்கக் கையிருப்பானது கடாபியின் நேரடிக் கட்டுப்பாட்டின் பேரிலேயே உள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய 25 தங்கக் கையிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு சுமார் ஒரு வருடத்திற்குப் பணம் வழங்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

மற்றைய நாடுகளின் மத்திய வங்கிகளைப்போல் அல்லாது கடாபி லிபியாவின் தங்க கையிருப்பினை திரிபோலியிலேயே வைத்திருக்க விரும்பியதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் லிபியாவின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கியுள்ளன.

எனினும் தற்போது கடாபி தனது தங்க இருப்புக்களை நைஜர் மற்றும் சாட் நாட்டு எல்லைகளுக்குப் பணமாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டு சென்றிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.