Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றத்திற்கு பதிலாக அதிகார பகிர்வு பேரம்பேசலில் புலம்பெயர் அமைப்புக்களுமா?

Featured Replies

மஹிந்த அரசுடன் கூட்டமைப்பு பேசிவருகின்றது. இது இந்தியாவினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடந்து வருகின்றது. என்ன தீர்வு என்றும் திட்டமிட்டே அதன் அடிப்படையில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஏதோ புதிதாக நடப்பது போன்று மஹிந்த கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. காரணம் சிங்கள - தமிழ் மக்களை இரு பகுதியினரும் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே இல்லையேல் தேர்தலில் வாக்குகளை வசூலிக்க முடியாது போய்விடுமே.

+

இந்த பேச்சுவார்த்தைக்கான பேரம்பேசல் என்னவென்றால் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டம்தான். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத்தினை நிறுத்தி, மஹிந்த அரசிற்கு எதிரான போராட்டத்தை தமிழர்கள் கைவிடுவார்கள் ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலாக தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கவேண்டும்.

உண்மையில் இந்தியா, அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோர் இந்த பேரம்பேசலில் ஒன்று பட்டு செயற்படுகின்றனர். கூடுதலாக அமெரிகாவின் பங்கு இதில் முக்கியமானது. அடுத்ததாக நோர்வே நாடும் இதில் அரசல் புரசலாக ஓடுகின்றது. அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் புலம்பெயர் மக்களை தாம் வழி நடத்த முடியும் என்பதும், இந்தியா கூட்டமைப்பை வைத்து உள்ளூரில் தமிழர்களை வழி நடத்த முடியும் என்பதுமே இவர்களின் கணிப்பு. உண்மையும் அதுதான்.

+

இதற்கு ஏதுவாகவே தமிழீழ தீவிர ஆதரவாளர் கடும்போக்காளர், புலிகளின் உறுப்பினர்கள் ஆகியோரை புலம்பெயர் நாடுகளில் அரசுகள் கட்டுப்படுத்தி வைத்துள்ளதுடன் சில அமைப்புக்களை பக்கபலமாக இருந்து தூக்கி நிறுத்தி செயற்படவும் வைத்துள்ளமை தெட்டத்தெழிவு.

வெளிப்படையாக இன்னும் கூறுவதானால் நாடு கடந்த அரசாங்கம், உலக தமிழர் பேரவை இந்த விடயத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றன. இவையே புலம்பெயர் தமிழர்களை அரவணைக்கும் அமைப்புக்களாக வெளினாடுகளால் பார்க்கப்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடந்தேறியுள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகள் நாசூக்காக வெளிப்படுத்தியும் உள்ளன.

+

அமெரிக்கா நாடுகடந்த அரசினையும், நோர்வே உலக தமிழர் பேரவையினையும் சந்தித்து பேசியுள்ளது.

இதனை அவர்கள் பேச்சினூடாக பூடகமாக சில இடங்களில் வெளிப்படுத்தபப்ட்டும் உள்ளது.

இது இராஜதந்திரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. சில விடயங்களை இப்போ கூறமுடியாது, பேசியது உண்மைதான் என்றெல்லாம் கதைக்கப்படுகின்றது. ஆனால் என்ன கதைக்கப்பட்டது. என்ன செய்யபோகின்றார்கள்? கூட்டமைப்பு - மஹிந்த பேரம்பேசலிற்கு புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவு உண்டா? ஒத்துபோகின்றார்களா? அல்லது ஒத்துபோகுமாறு மிரட்டப்பட்டார்களா என்பது பொது மக்களுக்கு தெரியாது.

+

உண்மையில் கூட்டமைப்பு உள் நாட்டிலும், புலம்பெயர் அமைப்புக்கள் வெளி நாட்டிலும் தமிழ் பொது மக்களுக்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டும். தெளிவு படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நடபப்து தமிழர்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தை.

+

இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய உ|றுப்பினராக இருந்துவரும் பாராளுமன்ர உறுப்பினர் சுமந்திரன் என்பவர் கொழும்பில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“We will not be concentrating on the 13th Amendment or the current constitution, but hope to discuss something beyond the existing structure,”

கூட்டமைப்பு இதுவரை என்ன நடக்கின்றது என மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை. ஆனால் புலம்பெயர் அமைப்புக்கள் தமக்கு எதுவும் தொடர்பில்லை போன்று தப்ப பார்க்கின்றனர். ஆனால் மேற்குலகம் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு இருக்கின்றது. அல்லது அதனை தாம் பார்த்து கொள்வதாக இந்தியாவிற்கும் மஹிந்தவிற்கும் கூறியுள்ளமையின் அடிப்படை என்ன?

விளக்கம் கொடுக்கவேண்டியது உரிய அமைப்புக்களே

My link

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருந்தால் ஒரு ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைதான்..! :rolleyes:

ஒ இராசதந்திரம் என்பது இது தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு வகையில் தமிழரின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக சர்வதேசத்தின் ஆதரவைத்திரட்டி அதனடிப்படையில் தமிழரின் ஆட்சி அமைப்பொன்றை தாயகத்தில்ஏற்படுத்தவேண்டும். அதையும் அவசரமாக செய்தாகவேண்டும். எனவே இது போன்ற நகர்வுகள் பரீசிலிக்கப் படவேண்டியவையே.

யாரும் இதை இங்கு எழுதியதற்காக இசையைப்போல் என்னையும் கேள்வி கேட்கவேண்டாம். நன்றி

கேள்வி கேட்பதும் நல்லதுதானே..! :D

போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைக்கு முழு உரிமையாளர்கள் புலம்பெயர் தமிழர்கள் அல்லர். :rolleyes: எம்மையெல்லாம் தாண்டி அது சர்வதேச அளவில் நிற்கின்றது. இதில் புலம்பெயர் தமிழர்கள் விசாரணை வேண்டாம் என்று சொல்லிவிட்டாற்போல் மீதி எல்லோரும் வாயை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. :D

ஆகையால், எமது இருப்பை உறுதிசெய்யும் ஒரு தீர்ப்பை முதலில் வாங்கிக்கொள்ள முயல்வது புத்திசாலித்தனம். ஆனால் இது தெரியாதவன் அல்ல சிங்களவன். ஏதாவது கணக்கு வச்சிருப்பான்..! :huh:

எமது இன்றைய தேவை ஒரு அரசியல் தீர்வை, சுயாட்சியை, எனது தாயக மக்கள் கௌரவத்துடன் சுதந்திரமாக தமது மண்ணில் அடக்குமுறையின்றி வாழக்கூடிய இயல்பு நிலையை பெற்றெடுத்தல். அதை வென்றெடுக்க, இன்றைய உலக சூழ்நிலை, எமது போர்க்குற்ற ஆதாரங்களை பயன்படுத்தவேண்டும்.

இதற்கு புலம்பெயர் சமூகம் மேற்ரும் தாயக அரசியல் கட்சிகள் இணைந்து சோரம்போகாமல் பணியாற்ற வேண்டும்.

  • நேற்று ஐ.நா. பாதுகாப்பு குழு ஏகமனதாக, 15-00, லிபியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. ஒரு ஐ.நா. அங்கத்துவ நாட்டை, இலங்கை போன்ற, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திகு பரிந்துரை செய்துள்ளது.
  • இதுவரை லிபியாவில் 1000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது ஐ.நா. இதே ஐ.நா. இலங்கையில் 7000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது.
  • லிபியா இலங்கை போல ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அங்கத்துவ நாடு அல்ல.
  • இந்த மாதம் ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமைகள் கூட்டத்தில் சிங்களத்திற்கு எதிராக பல ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட இருக்கின்றன: http://www.sundaytimes.lk/110227/Columns/political.html

புலம்பெயர் தமிழர் சமூகம் என கூறும்பொழுது சிங்களம் நாடுகடந்த அரசுடன் மட்டுமே பேசவேண்டும். அவர்கள் மட்டுமே மக்களால் சனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டவர்கள், சிங்கள பிரதிநிகள் போன்று.

இதன் மூலம் வேறு தமிழ் அமைப்புக்கள், ( உலகத்தமிழர் பேரவை, படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு, ...) போன்றன நாடுகடந்த அரசுடன் தொடர்புகளை பேணலாம். அதேவளை அவை சிங்களம் மீதான போர்குற்றங்களை தேவையேற்படும் பொழுது முன்னெடுக்கலாம். இது சிங்களத்தின் மீது தொடர் அழுத்தத்தை பேண, எமது இலக்கை (அரசியல் தீர்வு) அடைய உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்பதும் நல்லதுதானே..! :D

எதையும் கேள்வியாக எடுத்து பங்குபோட்டுக்கொள்ளும் தங்களது நிலையெடுப்புக்கு வாழ்த்துக்கள். என்னிடமில்லாத ஒன்று இது. :(

போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைக்கு முழு உரிமையாளர்கள் புலம்பெயர் தமிழர்கள் அல்லர். :rolleyes:எம்மையெல்லாம் தாண்டி அது சர்வதேச அளவில் நிற்கின்றது. இதில் புலம்பெயர் தமிழர்கள் விசாரணை வேண்டாம் என்று சொல்லிவிட்டாற்போல் மீதி எல்லோரும் வாயை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. :Dஆகையால், எமது இருப்பை உறுதிசெய்யும் ஒரு தீர்ப்பை முதலில் வாங்கிக்கொள்ள முயல்வது புத்திசாலித்தனம். ஆனால் இது தெரியாதவன் அல்ல சிங்களவன். ஏதாவது கணக்கு வச்சிருப்பான்..! :huh:

தலைவரின் தீர்க்கதரிசனமான அதேநேரம் பல ஆண்டுகளுக்கு பின்பும் பொருந்தக்கூடிய முடிவுகளில் முள்ளிவாய்க்கால் முடிவும் தவறிவிடவில்லை என்பதற்கு தங்களது இந்த கூற்று சான்றாகும். நன்றி

Edited by விசுகு

மறைமுகமாக, அரசுடன், அரசு தொடர்பில்தான் இருக்கின்றது.

கே. பி யுடன் தொடர்பில் இருப்பவர்கள் நாடுகடந்த அரசில் அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள்.

தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது, புலம் பெயர்தலைமையைக் கைப்பற்றுவதற்காக 100 மீற்றர் ஓடப் புறப்பட்டவர்கள், இலக்கை அடையாது மரதன் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தலைவரின் தீர்க்கதரிசனமான அதேநேரம் பல ஆண்டுகளுக்கு பின்பும் பொருந்தக்கூடிய முடிவுகளில் முள்ளிவாய்க்கால் முடிவும் தவறிவிடவில்லை என்பதற்கு தங்களது இந்த கூற்று சான்றாகும். நன்றி

தலைவர் எப்போதும் 10 வருடங்களின் பின்னர் நடக்கப் போவதை உணர்ந்து செய்லபடுபவர்,சில முடிவுகள் தற்காலத்திர்கு வேண்டுமானால் தவறாக புலப்படலாம், ஆனால் நீண்ட கால நோக்கில் அவை வெற்றியையே கொடுக்கும்,

1998ம் ஆண்டு ஒரு முன்னால் புலிகள் உறுப்பினர் ஒருவர் அமெரிக்காவின் TIME சஞ்சிகைக்கு ஒரு பேட்டியின் போது கூறினார், 1970 களில் பிரபாகரன் கூறுவாராம் எமக்கு என கடற்படை,விமானப் படையெல்லம் வேன்டு என்று, உட்னே தாம் நினைத்தது என்னவென்றால் இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று, ஏன் என்றால் தம்மிடம் இருந்த ஓட்டை ப்ஸ்ட்டலுக்குக் கூட தம்மால் தோட்ட வாங்க முடியாத காலத்தில் பிரபாகரன் கட்ற்படை,விமானப் படை என்றெல்லம் உளர்கிரார் என்று யோசிப்பது உண்டாம்,

ஆனால் தற்போது தான் அவர்து தீர்க்கதரிசனம் என்ன்வென்று எனக்குப் புரிகிரது என்ரு கூறிய்ருந்தார்,

அதே போல் அந்தக் கட்டுரையில் இப்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது, யாழ்பாணத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகள் மக்களிடம் இருந்து அப்புரப்படுத்தப்பட்டு காடுகளிற்குள் பின்வாங்கி விட்டார்கள், இன்னும் சில நாட்களில் இவர்களது கதை முடிந்து விடும் என்றெல்லம் எழுதிவிட்டு, பின்னர் 2002ம் ஆண்டு பிரபாகரனின் ஊடகவியலாலர் சந்திப்புக்குச் சென்று வந்து இவர்கள் புலிகளின் பாதுகப்பு ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு விழிபிதுங்கிப் போய் எழுதியதைப் பார்த்த போது சிரிப்புதான் வந்தது, அதை விட 1970 Hளில் பிரபாகரன் கனவு கண்ட கட்ற்படை எப்படியெல்லம் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியது என்பது நவீன வரலாறு

Edited by Dash

  • தொடங்கியவர்

விழிப்பாக இருக்க வேண்டியது மக்களே

அதிலும் புலம்பெயர் மக்களே.. காரணமும் இருக்கின்றது. சில கிழமைகளுக்கு முன்பு உலகதமிழர் பேரவையினை சேர்ந்த முக்கியஸ்தரை எரிக் சொல்கைம் சந்தித்துள்ளார். இதுபற்றி அவுஸ்ரேலியாவில் ஒருவர் அந்த உலக தமிழர் பேரவை முக்கியஸ்தரிடம் கேட்டபோது. அவர் கூரியது இதுதான். எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் கூறவேண்டாம். நாங்கள் சொல்கைமை சந்தித்தோம் என்றாவது பொதுமக்களுக்கு கூறி இருக்கலாம் அல்லவா?

அதே போல நாடுகடந்த அரசு பிரதமரும் சிலருடன் பேசிவருவதாக எல்லாமட்டத்தினரும் கூறிவருகின்றனர். ஆகவே எல்லோரும் யாரிற்காக பேசுகின்றனர். மக்களுக்காக என்றால் ஏன் மூடுமந்திரம்.

இராஜதந்திரம் என்றாலும் மக்களுக்கும் அந்த வழியில் சொல்லலாம் அல்லவா?

இவர்கள் என்னத்தைப் பேசி விற்றாலும், கடைசியில் எல்லாம் மக்கள் முன் வர வேண்டும் தானே.விலை போன அமைப்புக்களை நபர்களை மக்கள் புறக்கணிப்பார்கள், விலை போகாத அமைப்புக்கள் நபர்கள் பின் செல்வார்கள். நாடுகடந்த அரசு ஒரு புறம்,தமிழர் பேரவை ஒரு புறம் இப்போது தலைமைச் செயலகம் என்று சிலர், நாங்கள் யாரை நம்புறது.யாருக்கேனும் இவர்கள் யார் யார் எண்டு தெரிந்தாற் சொல்லவும்?

அத்தோடு சுஜித்தின் இந்த குறும் படம் அதனோடு தொடர்பான உரையாடல் பற்றி என்ன நினைகீறீர்கள்? சிறிலங்காப் புலனாய்வுச் சேவையின் ஊழியர்கள் கருத்துக் கூற வேண்டாம்.

Paavam Short Film by SujeethG

தாயக மக்கள் விழிப்பாக இருந்தாலும் அவர்களால் தமது உணர்வுகளை சுதந்திரமாக வெளியில் கூற முடியாது. அவர்களுக்காக புலம்பெயர் மக்களே குரல் கொடுக்க முடியும். நிச்சயம் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

அதன் தேவையை உணர்ந்து நாம் முடிந்தளவு தனிப்பட்ட ரீதியில் இல்லை ஒரு குழுவாக எமது நாடு கடந்த அரசின் / உலகத்தமிழர் பேரவை பிரதிநிதிகளை சந்தித்து / தொடர்பு கொண்டு ஆரோக்கியமான விடயங்களை வினவவேண்டும், கலந்தாலோசிக்க வேண்டும். இது இரு தரப்புக்கும் பலம் சேர்க்கும்.

மக்கள் விழிப்பாக இருந்தால் அவர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு டூநிசியா நல்ல உதாரணம். சில காலத்திற்கு முன்பு வெடித்த புரட்சியில் சனாதிபதி ஓடினார். பிரதம மந்திரி பல அரசியல் மாற்றங்களுக்கு உறுதியளித்து இருந்தார். மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருந்ததால் இன்று பிரதம மந்திரி பதவி துறந்தார்.

விழிப்பாக இருக்க வேண்டியது மக்களே

அதிலும் புலம்பெயர் மக்களே.. காரணமும் இருக்கின்றது. சில கிழமைகளுக்கு முன்பு உலகதமிழர் பேரவையினை சேர்ந்த முக்கியஸ்தரை எரிக் சொல்கைம் சந்தித்துள்ளார். இதுபற்றி அவுஸ்ரேலியாவில் ஒருவர் அந்த உலக தமிழர் பேரவை முக்கியஸ்தரிடம் கேட்டபோது. அவர் கூரியது இதுதான். எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் கூறவேண்டாம். நாங்கள் சொல்கைமை சந்தித்தோம் என்றாவது பொதுமக்களுக்கு கூறி இருக்கலாம் அல்லவா?

அதே போல நாடுகடந்த அரசு பிரதமரும் சிலருடன் பேசிவருவதாக எல்லாமட்டத்தினரும் கூறிவருகின்றனர். ஆகவே எல்லோரும் யாரிற்காக பேசுகின்றனர். மக்களுக்காக என்றால் ஏன் மூடுமந்திரம்.

இராஜதந்திரம் என்றாலும் மக்களுக்கும் அந்த வழியில் சொல்லலாம் அல்லவா?

(நான் இன்னும் ஒரு தலைப்பில் எழுதியது இங்கும் பொருந்தும் என்பதான் மீண்டும் தட்டச்சு செய்ய பஞ்சியால் மீண்டும் இணைக்கிறன்... )

  • விரும்புகிறீங்களோ இல்லையோ நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர வேணும் எண்டால் நாடுகடந்த அரசோ இல்லை அதன் உப அமைப்போ இலங்கையில் அதாவது ஈழத்தில் செயற்பட வேண்டும்... ! (இண்டைக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்ட வளியும் அப்பதான் கிட்டும்...! ) அப்படி செயற்படும் நாளில் தான் நாங்கள் எங்களின் வெற்றியின் படியில் முதலாவது அடியை வைத்து இருப்போம்...

    சுருக்கமாக சொல்வது கொஞ்சம் கஸ்ரமான விசயம் எண்டாலும் முடிஞ்சளவு சொல்ல முயற்சி செய்கிறன்.. !

    இண்டைக்கு நாடுகடந்த அரசோ இல்லை உலக தமிழர் பேரவையோ செய்வது இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் ஒண்டை கொடுப்பது மட்டுமாக தான் நகர்கின்றது... இதன் விளைவு தான் இலங்கையில் ஏற்ப்பட வெள்ளப்பெருக்கை கூட கண்டு கொள்ளாது உலகம் சிங்கள அரசை தவிக்க விட்டு இருக்கிறது... ( ஆனால் எங்கட மக்களை நாங்கள் கண்டு கொள்ளாது இருக்க முடியாது அல்லவா..?? )

    இது போதுமானது இல்லை எண்டாலும் இந்த அழுத்தங்களில் இருந்து தப்ப தமிழர் தரப்போடை சமரசத்துக்கு வருவதுக்கான அடித்தளம் தான் இந்த கோரிக்கைகள்... ! அண்மையில் இலங்கை பிரதமர் "எரிக்சொல்கைமை" நடுநிலைக்கு ஏற்க்க முடியாது எண்டு வேறை கருத்து சொன்னவர்... அப்ப யாருடன் சமரசம் எண்டு கேள்வி வருவது தவிர்க்க முடியாது அல்லவா...??

    நாங்கள் இன்னும் ஒரு தென்சூடானக வேண்டும் எண்றால் நாங்கள் இலங்கையில் இருந்து எங்களுக்கான அரசியலை செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்... அங்கு நடுநிலையாக ஐநா வரவேண்டும் எண்றாலும் அங்கு நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளின் பிரசன்னம் அவசியமாகின்றது, அவர்களின் அரசியல் நடவடிக்கைகளும் அவசியமாகிறது ... அதுவும் பலமான நிலையில் பேரம் பேசும் நிலையில் இருந்து... ! இதுக்கும் மேலை என்ன செய்ய வேண்டும் எண்று தலைமையில் இருப்பவர்கள் தான் முடிவெடுத்து செயற்பட வேண்டும்... !

நாடுகடந்த அரசையோ இல்லை தமிழர் பேரவையையோ செயல் இழக்க வைத்து மக்களின் ஆதரவை குலைக்க நடவடிக்கைகள் இலங்கை அரசு எடுக்க ஆரம்பித்து விட்டது பல உளவியல் நடவடிக்கைகளும் அறிக்கைகள் ஊடாக பறந்து கொண்டு இருக்கின்றது...

எங்களது நடவடிக்கைகள் வெல்லுமா இல்லையா என்பதை எவ்வளவு திசை திருப்ப படுகின்றோம் என்பதை பொறுத்தது... இதில் ஊடகர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டிய காலம் எண்று வேண்டுமானால் இதை சொல்ல முடியும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசின் தலைவர் உருத்திரகுமார் அவர்கள் உட்பட பல முக்கிய பொறுப்புகள்ளும் அதன் தலமையும் அமெரிக்காவிலேயே இருக்கிறது. இலங்கை ஒருவேளை சீனாவோடு கைகோர்த்து அமெரிக்காவிற்கு கைகாட்ட நினைத்தால் இந்த நாடுகடந்த அரசை தனது ஜனநாய நாடகத்திற்கு மேடையேற்றலாம் என்பதே அமெரிக்காவின் எண்ணமாக உள்ளது. தவிர அமெரிக்கா எந்த நியாத்தையோ மக்கள் நீதியையோ செய்யததுமில்லை செய்யபோவதுமில்லை. ஆனால் இலங்கையரசிற்கு அமெரிக்காவை எதிர்ப்பது தவறென்பது தெரியாவிட்டாலும் இலங்கையோடு கைகோர்த்திருக்கும் சீனாவிற்கு நன்கு தெரியும்.......... தற்போதைய மியன்மார் (பர்மா) அரசியல் நாடகங்களுக்கு சீனாவே பின்புறத்தில் நிற்கின்றது. தனக்கு சார்பாக ஒரு நாடு இருப்பதிலும் அந்த நாடு வருவாயை பெற்றுதர கூடியதாக இருக்க வேண்டும் என்றே சீனா தனது அரசியலை திறம்பட செய்கின்றது. அமெரிக்கா தனது யுத்த இயந்திரத்தை பயன்படுத்தி அடிமைகொள்வதன் மூலம் ஒரு பொருளாதார மேம்பாட்டை நாட்ட முயற்சிசெய்கிறது இது பல ஆயிரம் ஆண்டுகாலம் பழமைவாய்ந்த தந்திரம் ஆனாலும் இதைதான் அமெரிக்கா தொடர்கின்றது. ஆனால் தற்போதைய உல அரங்கு அதற்கு பொருத்தமாக இல்லாததை சீனா நன்கு உணாந்துள்ளது. புத்திசாலிகள் தோற்பதில்லை அவர்கள் தோல்வியுற்றவர்களின் தோல்விகளில் பாடங்கள் படித்துகொள்கிறார்கள் என்தே சீனாவின் மந்திரம். தற்போதைய ஈராக் ஆப்கானிஸ்தான் போர்கள் தனிபட்ட சில அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வாரி எதையாவது வழங்கியிருக்கலாம் ஆனால் அமெரிக்க நாடு என்று பார்க்கும்போது வெறும் நட்டத்தையே கொடுத்திருக்கிறது. போர் செலவு றில்லியோன் டாலர்களை தொட்டுகொண்டிருக்கின்றது......... இதை நன்கு பயன்படுத்திய சீனா தென்னிந்திய திரைபடங்களில் காப்பிலே வண்டி ஓட்டுவது என்று சொல்லுவதுபோல் தனது வண்டியை இந்த காப்பை பயன்படுத்தி அமெரிக்காவை முந்திநிற்கிறது. நேருக்கு நேரான ஒரு யுத்தம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வந்தால் தவிர மற்றையபடி தனக்கு சார்பான எந்த நாட்டையும் யுத்தம் நோக்கி நகர்த்த சீனா விரும்பவில்லை......... பதிலக திறந்த சந்தையை உருவாக்கி அதன் சந்தைகளின் முதலாளிகளாக சீன கொம்பனிகளை களமிறக்குவதே சீனாவின் தற்போதைய நோக்கு.

இந்தியா போர்குற்றத்தில் வலதுகரம்போல் செயற்பட்டுள்ளது ஆக போர்குற்ற விசாரணை என்பது இந்தியாவிற்கும் கசப்பானது. அதே நேரம் தமிழர்கள் இனியொரு போரையோ தமது சொந்தகாலில் நிற்பதையோ இந்தியா விரும்பாது காரணம் ஈழதமிழன் அடிவாங்கிய பாம்பு என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும். இப்போது சிங்களவன் இந்தியா நீ வேண்டாம் போய் உன்னுடைய வேலையைபார் என்று ஸ்ரீலங்கா அனுப்பினாலும் நடந்த பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன பல உறுதிமொழிகளை இலங்கை எமக்கு வழங்கியுள்ளது என்றுதான் இந்தியாவால் கூறமுடியும். உள்ளதை உள்ளபடி கூறியோ ஏதாவது இராஜதந்திர வழிகளில் காயைநகர்த்தவோ இந்தியாவால் முடியாது. எத்தனையோ இரஜாதந்திர அரசியல் சுழிகளை வெட்டி ஒடிய அமெரிக்கா இப்போது வெறும் சிறுபிள்ளைதனமான வேலைகளிலேயே ஈடுபடுகின்றது. காரணம் பணஆசை என்பது அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு அடங்காததாக போய்விட்டது. இந்திய அரசியல்வாதிகள் தற்போதைய இந்திய பணக்காரர்களின் கைபொம்மைகள் அவர்களின் பணத்தில்தான் இவர்கள் வேசம்போடுகிறார்கள். நிருபிக்கபட்ட பல கொலைகளை செய்த மோடி என்பவனை எந்த நீதிமன்றமும் ஏதும் செய்யமுடியாது உள்ளது காரணம் அவனது பின்னால் உள்ள பணக்காரர்கள். இந்த பழையபுராணத்தை இந்தியா பாடிகொண்டீருக்க முடியமே தவிர..... அல்லது புலிகளை அழித்துவிட்டதாக கைதட்ட முடியுமே தவிர இந்தியாவிற்கு லபகரமான எந்த அரசியல் நகர்வும் இப்போது இல்லை. அமெரிக்காவின் சந்தை கைப்பற்றுதலை இவர்கள் ஏதோ நாடு முன்னேறுவதாக படம் காட்டிகொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் அறிவாளிகளை அமெரிக்க கொம்பனிகள் காசுகொடுத்து வாங்கி அவர்களின் அறிவினால் உருவானவைகளை இந்தியாவிற்கே விற்கிறார்கள்.

போர்குற்ற ஆதாரங்கள்தான் தற்போதைய எமது அணுஅயுதம் அதை நாம் எந்த தளத்திலும் கைவிடுதலாகாது அதை தொடர்ந்து நாம் கையிலேடுத்துகொண்டே வரவேண்டும். இந்த பான்கி மூன் அவர்களுடைய பதவிகெல்லாம் சிலகாலங்களில் முடிவடைந்துவிடும்.... யாரவது ஒருவனாவது இதை காதுகொடுத்து கேட்டக வருவான் வரவைக்க வேண்டும். இனியொரு நாளில் என்றாலும் இப்படியான சேட்டைக்கு சிங்களவனோ இந்தியனோ துணிhயத வண்ணம் நாம் தடுப்பதென்றால் அதற்கு அதுதான் ஓரே வழி!

மறைமுகமாக, அரசுடன், அரசு தொடர்பில்தான் இருக்கின்றது.

கே. பி யுடன் தொடர்பில் இருப்பவர்கள் நாடுகடந்த அரசில் அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள்.

தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது, புலம் பெயர்தலைமையைக் கைப்பற்றுவதற்காக 100 மீற்றர் ஓடப் புறப்பட்டவர்கள், இலக்கை அடையாது மரதன் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஆதிரை

நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு இருக்கட்டும்

உங்களின் நிலைப்பாடு என்ன??

அத்தோடு சுஜித்தின் இந்த குறும் படம் அதனோடு தொடர்பான உரையாடல் பற்றி என்ன நினைகீறீர்கள்? சிறிலங்காப் புலனாய்வுச் சேவையின் ஊழியர்கள் கருத்துக் கூற வேண்டாம்.

Paavam Short Film by SujeethG

மிகச்சிறந்ததொரு படைப்பு. தனது படைப்புக்கான விளக்கத்தையும் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சுஜித்தின் இந்தப் படைப்பிற்காக தேசத்துரோகிப் பட்டம் தேசபக்தர்களால்! வழங்கப்படலாம்.

மக்களைத் தெளிவடைய வைக்க வேண்டுமென்ற நல்ல நோக்கில் படைப்பை வழங்கிய சுஜித்திற்கு நன்றிகள்.

எம்மவர்களாலும் செயற்கைத் தனமில்லாது இயல்பாக (யதார்த்தமாக) நடிக்க முடியுமென இந்தப் படைப்பின் மூலம் கலைஞர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

உண்மையில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள சிங்கள அரசுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருவது யாராலும் மறுக்க முடியாது அதே வேளை இந்த நெருக்கடிகளை சர்வதேசம் இலங்கையினை அடிபணிய வைக்க பாவிப்பதனையும் யாராலும் மறுக்க முடியாது. நெருக்கடிகளின் பின்னர் அடுத்தது என்ன?

நெருக்கடிகளை வைத்து நாம் எதைப்பெற போகின்றோம். சர்வதேசம் எதனை பெறப்போகின்றது. சர்வதேசத்தின் நலனிற்கும் எம் நலனிற்கும் உள்ள இடைவெளிகள் என்ன இதிலேயே புலம்பெயர் அமைப்புக்களின் இராஜதந்திரம் வேலை செய்யவேண்டும்.

அதற்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடுவதோ.. அல்லது புலம்பெயர் அமைப்புக்களை தூற்றி அவர்களின் செயற்பாடுகளை செயலிலக்க செய்வதோ என்று அர்த்தம் இல்லை அதனை செய்யவும் கூடாது.

ஆனால் புலம்பெயர் மக்களின் போராட்டம் என்பது பல அமைப்புக்களால் செய்யபப்ட்டு வருகின்றது. பலரின் தியாகங்கள் அதற்குள் உள்ளன. அதைவிட தாயகத்தில் விட்ட உயிர்களின், பட்ட துன்பங்களை மூலதனமாக வைத்தே நகர்த்தபப்ட்டு வருகின்றது என்பதனையும் மறுக்க முடியாது. எது செய்வதாக இருந்தாலும் ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் விடயங்களாக இருக்க தேவை இல்லை என்பதே இப்போது பொருத்தம். ஏனென்றால் நாளைக்கு சர்வதேசமும் ஏமாற்றலாம்.

புலம்பெயர் மக்கள் அமைப்பிர்கும் புலம்பெயர் மக்கள்தான் பலம் என்பதனை யாரும் மறுக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலத்துடன் இருந்த காலத்தில் கூட சிறிலங்கா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.சிறிலங்கா அரசும் சர்வதேச நாடுகளும் வைத்த ஒரே விடாப்பிடியான கோரிக்கை ஆயுதப் போராட்டததைக் கை விடுங்கள்.பேச்சு வார்த்தையில் புலிகள் பங்கு கொண்டதன் மூலம் அவர்கள் பலவீனமாக்கப் பட்டார்கள்.நா.க.அரசு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதால் எந்த இழப்பும் இல்லை.சிறிலங்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உலகுக்கு பறை சாற்ற ஒரு சந்தர்ப்பம்.தென் சூடானின் பிரதிநிதிகளும் வட சூடானொடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.நா.க.அரசின் பிரதிநிதிகள் பேச்ச வார்த்தையில் பங்கெடுப்பது அவர்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதும் களத்திலுள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பாட்டுக்கு (இந்தியாவின் தாளத்திற்கு)அரசியல்; முடிவுகளை எடுக்க முடியாமலும் தடை செய்யும்.கிடைக்கும் அங்கீகாரத்தினைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

உண்மையில் பேசுவதில் தவறில்லை, அதுதான் நல்ல வழி ஆனால் என்ன பேசப்போகின்றோம். அதனை குழப்ப கூடாது. ஆனால் என்ன நடக்கின்றது என்பதனை மக்களிற்கு சொல்லவேண்டும் என்பதே பொருள்

உண்மையில் பேசுவதில் தவறில்லை, அதுதான் நல்ல வழி ஆனால் என்ன பேசப்போகின்றோம். அதனை குழப்ப கூடாது. ஆனால் என்ன நடக்கின்றது என்பதனை மக்களிற்கு சொல்லவேண்டும் என்பதே பொருள்

உண்மை என்ன எண்டு எனக்கு தெரியாது.... ஆனால் இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்...

2006ம் ஆண்டு இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் பாலசிங்கம் அண்ணாவை சந்தித்து பேசினார்கள் எண்டு பாலா அண்ணாவால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது... அதை உடனடியாக மறுத்தது இந்திய வெளியுறவு துறை... அதன் பின் இந்தியாவின் மீதான அவனம்பிக்கைகள் எல்லாம் சிங்களத்தால் வெளியிட்டப்பட்டன...

பிறகு இலங்கைக்கு தூதுவர்கள் எல்லாம் பறந்து நம்பிக்கை அளித்து அதிகமான இலங்கைக்கான உதவிகளை செய்து இந்தியா இலங்கையை கையுக்குள் வைத்திருக்க படாத பாடு எல்லாம் பட்டது...

இங்கை அமைப்புக்களின் வெளிப்படையான அறிவிப்புக்கள் தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் சிங்கள மக்களுக்கும் போய் சேரும்... அதனால் சிங்களவரையும் சம்பந்த பட்டோர் திருப்திப்படுத்த வேண்டி ஏற்படலாம்... ஆகவே எதுக்கும் காலம் இழுத்தடிக்க மட்டும்தான் படும்...

[/quote

இதனை ஒரு எடுத்துக்காட்டாக கொள்லலாம் ஆனால் கடந்த காலத்தில் இரகசியம் என சில வேலைகள் செய்யப்பட்டதால் ( அரசியல் தொடர்புகள்) நாம் நாசமாக்கபட்டதும், ஏன் இயக்கம் முற்று முழுதாக அழிக்கப்பட்டதற்கும் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக.. இறுதி நேரத்தில் ஐக்கிய நாடுகள், இந்தியா, அமெரிக்கா, நோர்வே ஆகியவற்றுடனான தொடர்புகள், பேசியவைகள், பேசி பெற்ற வாக்குறுதிகள், தொடர்புகள் எல்லாமெ இராயதந்திரம், இரகசியம் எனப்பாதுகாக்கபப்ட்டதால் எல்லோரும் சேர்ந்து நசுக்கிவிட்டு இப்போ தமிழர்களுக்கு புலிகளை கூடாதென்றும் தாம் நல்லது செய்ய முற்பட்டதாகவும் சொல்கின்ரார்களே.

இறுதி நேரத்தில் கூட இலண்டனில் இருந்து முக்கியமானவர்கள் ராகுல் காந்தியை சென்று சந்தித்து வந்தார்கள். தென்னாபிரிக்கா சென்று வந்து எல்லாம் ஓகே என்றார்கள். ஆனால் இறுதி நேரத்தில் கையை விரித்துவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.