Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணுக்கதிர்வீச்சு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும். தெரிந்தவர்களுக்கும் உடனடியாக அறியத்தரவும்.

'புகுஷிமா' அணு உலையின் வெடிப்பை ஜப்பானிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. ஆசிய நாடுகளில் வாழ்வோர் தேவையான பாதுகாப்புகளை உடனடுயாக எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

மழை பெய்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வீட்டுக்கு உள்ளே இருக்கவும்.வீடுக் கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி வைக்கவும்,

கழுத்துப் பகுதியில் 'பெதடின்" ஆல் பாதுகாக்கவும். அணுக்கதிர்கள் 'தயிரோயிட்' பகுதியைத் தான் அதிகமாகத் தாக்கும்.

கதிர்வீச்சுக்கள் பிலிப்பின் நாட்டை இன்று நான்கு மணியளவில் அடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. அதிகமான கவனம் எடுக்கவும்.

கதிர் வீசினால் வரும் அணுத்துகள்கள் எரிவு, தோல்வருத்தம். புற்றுநோய் ஆகியவற்றைக் கொண்டு வரக் கூடியவை.

BBC FLASHNEWS:

Japan govt confirms radiation leak at Fukushima nuclear plants. Asian

countries should take necessary precautions.

If rain comes, remain indoors first 24hrs. Close doors & windows.

Swab neck skin with betadine where thyroid area is, radiation hits

thyroid first.

Take extra precautions. Radiation may hit Phillipine at starting 4pm

today.

If it rains today or in the next few days in HK, DO NOT GO UNDER THE

RAIN. If you get caughtout, use an umbrella or raincoat, even if it's

only a drizzle.

Radioactive particles, which may cause burns, alopecia or even cancer,

may be in the rain. Pls send to your loved ones.

  • கருத்துக்கள உறவுகள்

:o :o :o

ஜப்பானிய பயங்கரவாதத்துக்கு அளவே இல்லையா? :o தங்களது முதலாளித்துவ நலன்களுக்காக அப்பாவி மக்களது உயிர்களைக் கொல்லும் வல்லாதிக்க நாடுகளின் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்..! :mellow:

கனடாவில் ஏழு அணு உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதிலும் ஐந்து தமிழர்களும் அதிகம் வாழும் ஒன்ரரோயோ மாநிலத்தில்.

அமெரிக்காவில் நூற்றுக்கணக்கில். மேற்கு ஐரோப்பாவிலும் நிறையவே உள்ளன.

அதைவிட தமிழகத்திலும் கூட ஒன்று உள்ளதாக எண்ணுகிறேன்.

நாம் விரும்பாவிடாலும் நாமும் இந்த அணு உலகத்தின் ஒரு அங்கமே.

754462-japan-earthquake.jpg

561680-japan-earthquake.jpg

இறுதியாக கிடைத்த தகவலின்படி அமரிக்காவின் சிலபகுதிகளை கதிர்தாக்கங்கள் வந்தடைந்துள்ளதாக புளோரிடாவில் உள்ள நண்பர்மூலம் தெரிந்துகொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா?: மத்திய அரசு விளக்க வைகோ கோரிக்கை

சென்னை, செவ்வாய், 15 மார்ச் 2011( 16:07 IST )

இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு விஷயத்தில் உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்திடும் ஸ்பீனிக்ஸ் பறவையைப் போல, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து உயிர்த்து எழுந்த ஜப்பான், உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுகின்ற வகையில், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்த ஜப்பானிய மக்களின் வாழ்வில், கடந்த 11.3.2011 கருப்பு தினமாக மாறி விட்டது.

தொடர் பூகம்பம், எரிமலைச் சீற்றம், ஆழிப் பேரலை என இயற்கை சீற்றமும், அதனைத் தொடர்ந்து அணுஉலை வெடித்துச் சிதறி செயற்கைப் பேராபத்தும் ஜப்பானை முற்றுகை இட்டன. பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர், உயிர்களையும், உடமைகளையும் இழந்து, வெட்ட வெளியில் கடும் குளிரில் வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

நவீன விஞ்ஞான உலகில் எட்டிப் பிடிக்க முடியாத சிகரத்தில் இருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால், இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு என்ன? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில், இந்தியாவும் சுனாமித் தாக்குதலுக்கு உள்ளாகி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து இருக்கிறது. எதிர்காலத்திலும், அத்தகைய ஆபத்து நிலவுகிறது.

எனவே, இந்தியாவில் உள்ள 20 அணு உலைகள் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைககளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான அணு உலைகள் என்றால், அவ்வப்போது அணு உலை நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், அபாயச்சங்கு ஒலிக்கச் செய்து மக்கள் பொதுமக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடித் தப்பிக்க பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிப்பதன் மர்மம் என்ன?

எனவே, பாதுகாப்பு விஷயத்தில் உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அணு உலைகளுக்கு மாற்று சக்திகளைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும் என்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/15/1110315028_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாப்பானிலை இருந்து அடிக்கிற காத்துவளம் கனடாப்பக்கமாய் இருக்குதெண்டு கேள்விப்பட்டன். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஏழு அணு உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதிலும் ஐந்து தமிழர்களும் அதிகம் வாழும் ஒன்ரரோயோ மாநிலத்தில்.

அமெரிக்காவில் நூற்றுக்கணக்கில். மேற்கு ஐரோப்பாவிலும் நிறையவே உள்ளன.

அதைவிட தமிழகத்திலும் கூட ஒன்று உள்ளதாக எண்ணுகிறேன்.

நாம் விரும்பாவிடாலும் நாமும் இந்த அணு உலகத்தின் ஒரு அங்கமே.

பயங்கரவாதம் என்கிற பதத்தை எப்படியெல்லாம் தேவைக்கேற்ற மாதிரி உபயோகிக்கலாம் என்று சிந்திச்சுப் பார்த்தன்.. :rolleyes: அதன் பலனாக இட்டதுதான் என் முதல் கருத்து..! :D

என்ன தான் ஆபத்துக்கள் இருந்தாலும் அணுசக்தி இல்லாத எதிர்காலம் சாத்தியமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.