Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழைப்பழம்

Featured Replies

வாழைப்பழம் அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம்இ மதியம் ஒரு வாழைப்பழம்இ இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும்.

இது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். பொட்டாசியம் சார்ந்த கீரைகள்இ பருப்புகள்இ பால்இ மீன்இ ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

முந்தய ஆய்வின் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கைகள் அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகளில் வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் தினமும் 3500 மி.கி அளவுள்ள பொட்டாசியம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.

இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. பிரிட்டனில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மருத்துவ செலவு 230 கோடி பவுண்ட் அளவை எட்டுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்...........

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

banana-zen.jpg

தகவலுக்கு நன்றி தமிழ்மாறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ... எனக்கு கற்பூர வாழைபழம் சாப்பிட பிடிக்கும் ....தித்திப்பாக இருக்கும் ..எங்கள் தோட்டத்தில் நிறைய விளையும்.. :)

  • தொடங்கியவர்

அது என்ன கற்புhர வாழைப்பழம் புதிய பழமாக இருக்கிறது.....................

முடிந்தால் எங்களுக்கும் அனுப்பிவிடுங்கள் சுவைத்துப்பார்ப்பதற்கு!!!!!

நல்ல வேளை வாழைப்பழம் நசியாமல் இருக்கிறது ஆள் பாரம் இல்லை போல.................

அது என்ன கற்புhர வாழைப்பழம் புதிய பழமாக இருக்கிறது.....................

முடிந்தால் எங்களுக்கும் அனுப்பிவிடுங்கள் சுவைத்துப்பார்ப்பதற்கு!!!!!

இலங்கையில் 'சீனிக்கதலி' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.

தோழர் கற்பூர வாழைப் பழத்தின் ஒரு படத்தைப் போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
84.jpg

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம் நல்லது என்று சொல்ல்கிறார்கள், அதே நேரம் பொட்டஷியம் அதிகமானால் இதயத்திற்குக் கூடாது என்றும் சொல்ல்கிறார்களே...

You probably know too much water and too many apple or cherry seeds can kill you, but did you know eating too many bananas may lead to an early demise? It's not their high radiation signature. It's because bananas contain potassium. But wait, you may be saying, isn't potassium good for me? It is, but like everything else, too much potassium is bad for you. Too much potassium can lead to heart damage and cardiac arrest.

http://chemistry.about.com/b/2011/02/20/how-many-bananas-does-it-take-to-poison-you.htm

  • தொடங்கியவர்

குட்டி அவர்களே எதுவும் அளவுக்கு மிஞ்சினால் உவத்திரவம் தான்

அதனால் எதையும் அளவாக வைத்துக் கொண்டால் சுபம்!!!!!

ஆளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்ளே............

அது தான் இது!!!!!

பு. த வாழைப்பழத்திற்கு நன்றிகள்!!!!!

இலங்கையில் சிவப்பு நிறத்திலும் வாழைப்பழம் பார்த்துள்ளேன். மருத்துவ குணம் அதிகம் இருக்கு என்பர். அதன் பெயர் மறந்து போய்ட்டு...யாருக்காவது நினைவு இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிவப்பு நிறத்திலும் வாழைப்பழம் பார்த்துள்ளேன். மருத்துவ குணம் அதிகம் இருக்கு என்பர். அதன் பெயர் மறந்து போய்ட்டு...யாருக்காவது நினைவு இருக்கா?

44accd1b120541735331688.jpgRed-Banana-435kandy.jpgbanana_red.jpg

நிழலி, அதனை செவ்வாழைப்பழம் என்று சொல்வார்கள். உரிச்சுப் பார்த்தால்... மற்ற வாழைப்பழம் மாதிரித்தான் இருக்கும்

ஆனை வாழைப்பழம் என்றும் இலங்கையில் இருக்குது. நல்ல நீளமான, பெரிய வாழைப்பழம். அதனைக் கண்டிருக்கிறீர்களா?

Edited by தமிழ் சிறி

நன்றி தமிழ்,

செவ்வாழையை உரித்து பார்க்கும் போதும் கொஞ்சம் சிவப்பாகத் தான் இருக்கும்..ஆனால் இனிப்புச் சுவை குறைவாக இருப்பதால் இதனை மருத்துவ தேவைக்காக பயன்படுத்துவர் என் நினைகின்றேன். இலேசாக ஒரு வித உவர்ப்பு சுவை இருக்கும். இது அனேகமாக சிங்கள ஊர்களில்தான் வளரும்

ஆனை வாழைப்பழத்தையும் சிங்கள ஊர்களில் தான் அதிகம் கண்டுள்ளேன். சிங்கள ஊர்களில் வளர்ந்தமையால் ஒரு வேளை தமிழ் இடங்களில் இவை இருப்பதை நான் அறியவில்லையோ தெரியாது. ஆனால் ஆனை வாழைப்பழத்தின் அளவை பார்த்த பின் ஏன் சிங்களவருக்கு மட்டும் இப்படி நமக்கு, எம் மண்ணில் ஏன் வளர்க்க முடியாது என்று நினைத்து நான் வளர்க்க நினைத்தது வேறு கதை.

Edited by நிழலி

நிழலி, நீங்கள் சொல்வது போல்.....

செவ்வாழையையும், ஆனை வாழையையும் தமிழ் பகுதிகளில் பயிரிடுவதில்லை.

தமிழர்கள் வியாபார நோக்கில் வாழைத்தோட்டம் செய்வதால், செவ்வாழைக் குலையில் அதிக பழம் கிடைக்காது, அத்துடன் ஆனை வாழை பழுத்தாலும் பச்சையாகத்தான் இருக்கும். தமிழர்கள் பச்சை வாழையை அமங்கலமான காரியங்களுக்கு பயன் படுத்துவதால்.... மக்களிடம் அதற்குரிய வரவேற்பு இல்லாதிருந்திருக்கலாம். அதனால் வாழைக்குலையில் அதிக பழம் தரும் மஞ்சள் நிறமான கப்பல், கதலி, இதரை வாழைப்பழங்களை விவசாயிகள் பயிருடுகின்றார்கள் என நினைக்கின்றேன். :)

செவ்வாழையும் எங்கள் மண்ணில் நன்றாக வளரும். எங்கள் ஊரில் சில வீடுகளில் நிறைய வளர்த்தார்கள். ஏதோ ஒரு 'அபசகுனம்' அல்லது செவ்வாழை வளர்ப்பது வீட்டிற்கு நல்லதல்ல என்ற காரணத்தினால் வளர்ப்பதில்லை. அதன் காரணம் மறந்து விட்டது.

இஞ்ச இன்னும் வாழைப்பழ பிரச்னை முடிய இல்லையா? :rolleyes:

ரஸ்தாளி வாழைப் பழமா? இல்லை பூகம் பழமா நல்லது? :D:lol: :lol:

இஞ்ச இன்னும் வாழைப்பழ பிரச்னை முடிய இல்லையா? :rolleyes:

வாழைப் பழத்தால்தானே வாழ்க்கையிலே பிரச்சனை. :lol:

இரத்த அழுத்தத்திற்கு வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள். அதைக் கேட்டு வாழைப்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என்கிறார்கள். :(

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாழையும் எங்கள் மண்ணில் நன்றாக வளரும். எங்கள் ஊரில் சில வீடுகளில் நிறைய வளர்த்தார்கள். ஏதோ ஒரு 'அபசகுனம்' அல்லது செவ்வாழை வளர்ப்பது வீட்டிற்கு நல்லதல்ல என்ற காரணத்தினால் வளர்ப்பதில்லை. அதன் காரணம் மறந்து விட்டது.

தப்பிலி, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஏனென்றால்... எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஐயர் குடும்பம் ஒன்று.

தஙகள் தோட்டத்தில்... செவ்வாழையை வளர்த்து.... அது, குலை போட்டவுடன்....

நவராத்திரி கடைசி நாளில் வரும், சூரன்போர் என்னும் விஜயதசமி நாளில் அன்று செவ்வாழையை, நீள வாளால் வெட்டுவார்.

அவர் வெட்டிய வெட்டில்... செவ்வாழை மரம் மூன்று துண்டாக பிளந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்ச பழம் :D

எனக்கு வாழைப்பழத்திலயே எங்கள் ஊர் பழம் சின்னப்பழம் பெயர் தெரியாது அதுதான் பிடிக்கும்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சீனிக் கதலி வாழைப்பழம் ரொம்ப பிடிக்கும் :):D

எனக்கு வாழைப்பழத்திலயே எங்கள் ஊர் பழம் சின்னப்பழம் பெயர் தெரியாது அதுதான் பிடிக்கும்.... :D

கதலி வாழைபழம் தானே? புட்டும் சீனியும் கதலி வாழைப்பழமும்....நினைக்கவே வாயூறுது

இங்கு கனடாவில், கப்பல் வாழப்பழம் வாங்கலாம், ஆனால் ஒரு நாளும் கதலியையும், இதற வாழைப்பழத்தையும் காணவே முடியாது

...எல்லாம் சரி...யாருக்கு வாய்ப்பன் பணியாரம் பிடிக்கும்?

ஏன் நிழலி? செய்து பார்சல் பண்ண போறீங்களா? :D^_^

  • கருத்துக்கள உறவுகள்

கதலி வாழைபழம் தானே? புட்டும் சீனியும் கதலி வாழைப்பழமும்....நினைக்கவே வாயூறுது

இங்கு கனடாவில், கப்பல் வாழப்பழம் வாங்கலாம், ஆனால் ஒரு நாளும் கதலியையும், இதற வாழைப்பழத்தையும் காணவே முடியாது

...எல்லாம் சரி...யாருக்கு வாய்ப்பன் பணியாரம் பிடிக்கும்?

வாய்ப்பன் பணியாரத்துக்கு.... சீனி அதிகம் போடாமல்.....

மாவை குழைத்து, மெல்லிய சூட்டில்... தாச்சியை வைத்து பொரித்து எடுத்த.......

வாழைப்பழ பணியாரம் என்பதை... யாழ்ப்பாணத்தில் வாய்ப்பன் பணியாரம் என்று சொல்வார்கள்.

வாய்பனை, ஞாபகமூட்டியற்கு நன்றி நிழலி. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சீனிக் கதலி வாழைப்பழம் ரொம்ப பிடிக்கும் :):D

எனக்கும் சீனிக் கதலி வாழைப்பழம் பிடிக்கும்

எனக்கு வாழைப்பழத்திலயே எங்கள் ஊர் பழம் சின்னப்பழம் பெயர் தெரியாது அதுதான் பிடிக்கும்.... :D

நீங்கள் சொல்வது கதளிப் பழமாக இருக்கலாம். சிறிதாக இருந்தாலும் சுவையாக இருக்கும்.

சீனிக் கதளி நன்றாகப் பழுத்து, தோல் கொஞ்சம் கருமை கட்டியிருந்தால் சொல்லி வேலையில்லை.

இங்கு கனடாவில், கப்பல் வாழப்பழம் வாங்கலாம், ஆனால் ஒரு நாளும் கதலியையும், இதற வாழைப்பழத்தையும் காணவே முடியாது

'இதற' பழம் இலங்கையில் கூட அதிகம் கடைகளில் விற்பதில்லை. வித்தியாசமான சுவை. வீட்டில் நிறைய வைத்திருந்தோம்.

இங்கு Tesco supper market இல் கிட்டத்தட்ட அதே சுவையுடைய வாலைப் பழம் விற்கிறார்கள். Hybrid ஆக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.