Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் நடக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

news%5C2011%5C4%5Cimages%5Cnewsart.jpg

Minister of Traditional Industries and Small Enterprise Development Douglas Devananda take a close look at a kolam mask carrying the face of Vellupillai Prabhakaran at the opening ceremony of the Sri Lanka and India handicraft Exhibition at the National Art Gallery today. Indian High Commissioner Ashok K. Kantha and Chairman of the Craft Council Buddhi Keerthisena were also present at the event.

நிஜத்தில் தொடமுடியாததை படத்திலாவது பார்த்து ரசிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

கலையை ரசிக்கிறாராம் நாய்க்கேன் போர்த் தேங்காய் என்பது போல.அது சரி சிவப்பு ரையுடன் நிற்கும் வெருளி யார்?? :D

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தையே.... தாழ்த்தி ரசிக்கும், மானம் கெட்ட ஜென்மங்கள்.

கலை என்றால்.... கிலோ என்ன விலை என்று கேட்கும் இதுகள் எல்லாம் கலாச்சார அமைச்சர். தூ......

இதில் உள்ள சிங்களவனையோ (the bad) இல்லை ஹிந்தியனையோ (the good) விட, 'இணக்க அரசியல்' என்ற பெயரில் 'எப்படியும் வாழலாம்' என வாழும் ஈனப்பிறவியை (the ugly), சகோதர தமிழனை எண்ணித்தான் மனம் வேதனை கொள்ளுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் ஒன்றுக்கு நூறு தடவையாவது யோசித்திருப்பான்

இதை கையிலெடுக்கும்முன்........

மானங்கெட்ட பிறப்பு.

<_<
  • கருத்துக்கள உறவுகள்

முகமூடியே தேவையற்றவர்கள்

கருணா அம்மான் தாவரவியல் ஆராய்ச்சிக்காக லண்டன் போகலாமென்றால் தேவானந்தா கலை கண்காட்சிக்குப் போவதில் என்ன தவறு? :D

  • கருத்துக்கள உறவுகள்

***

சோத்துப்பாசாலுக்கும், போராட வந்த பெண்பிள்ளைகளை தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு பிரித்தெடுப்பதற்கும்(இதை விட உண்மையை எழுதினால் மோசமாக இருக்கும் என்பதற்காக இப்படி எழுதுகிறேன்) இயக்கம் நடத்தின ஆக்களுக்கும், சிங்களத்துக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து அரசியல் செய்யும் குத்தியானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கண்டியளோ??

1980 களில் கழகத்துக்கு அரசியல் பாடம் எடுத்த வன்னியைச் சேர்ந்த "மாஸ்டர்" இங்குதான் இருக்கிறார். ஏதோ நல்லது செய்வாங்கள் எண்டு நினைத்து இந்தியாவுக்கும் போனாராம் "தலைவரை" காண. தலைவர் வரவேயில்லை. ஒருநாள் முகாமில் ஒரே பதற்றம். ஏனென்று யாரும் சொல்லவில்லை. தன்னையும் கொண்டுபோய் ஒரு அறையில் இருத்தினார்கள். யாரோ பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் வந்திருந்தார்காள். அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது யார் தலைவர் என்பதைக் கண்டு கொண்டேன். அவர்கள் பேசியதிலிருந்து அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை அறிந்துகொண்டே. இவர்களை நம்பியா இவ்வளவு இளஞர்களும் யுவதிகளும் குடும்பங்களை விட்டு இங்கு வந்திருக்கிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தேன். தமிழ் சினிமாவுக்கும் இவர்களின் கற்பனைத் திறனுக்கும் அதிக வேறுபாடு இருக்கவில்லை. இந்தப் போராட்டம் வெற்றிபெறாது, முற்றான கோமாளித்தனம் என்று தனக்குள் நினைத்துக்கொண்டு கூட்டம் முடியும்வரை உட்காந்திருந்தார். அந்தத் தலைவர் வேறு யாருமில்லை, சாட்சாத் உமா மகேஸ்வரனே தான்.

கோமாளிகளின் கூட்டம் முடிந்தவுடன் மவுனமாக மீண்டும் வீடு திரும்புவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே தப்பியோ ட முயற்சித்து சுட்டுக் கொல்லப்பட்ட தனது இரு மாணவர்களின் நினைப்பும் வந்து போனது.

கடைத்தெருவுக்குப் போவதாக முகாம் பொறுப்பாளரிடம் கூறிவிட்டு வந்தவர்தான். பின்னர் கழகமும் வேண்டாம் மண்னும் வேண்டாம் என்று மறைவு வாழ்க்கை. இன்றைக்கு சிட்னியில் வாழ்ந்து வருகிறார். அவரின் கதைகளைக் கேட்டால் கழகத்து வண்டவாளங்கள் தெரிகிறது....

Edited by இணையவன்

<_<

Edited by காந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

PLOTE இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் A தொடக்கம் H முகாம் வரை இருந்தது. அங்கு நடந்த உட் கொலைகள் எண்ணிலடங்கா. எங்கட POET ஜெயபாலனை போட்டுத் தள்ள மாணிக்கதாசன் கோடம்பாக்கத்தில் அலைந்து திரிந்தான். அவர் உயிர் தப்பினது பெயரிய விடயம்.

சங்கிலி , போன்றோர் எத்தனை கொலைகளை செய்திருப்பார்கள். ஐரோப்பாவிலும் பல கொலைகாரர்கள் இருக்கினம். அதை பெரிய பெருமையாகவும், தண்ணி அடிச்சுப்போட்டு கதைப்பினம். சிங்களவனைவிட PLOTE , தமது போராளிகளை அழித்ததுதான் அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் இனத்தையே.... தாழ்த்தி ரசிக்கும், மானம் கெட்ட ஜென்மங்கள்.

கலை என்றால்.... கிலோ என்ன விலை என்று கேட்கும் இதுகள் எல்லாம் கலாச்சார அமைச்சர். தூ......

  • கருத்துக்கள உறவுகள்

-----

1980 களில் கழகத்துக்கு அரசியல் பாடம் எடுத்த வன்னியைச் சேர்ந்த "மாஸ்டர்" இங்குதான் இருக்கிறார். ஏதோ நல்லது செய்வாங்கள் எண்டு நினைத்து இந்தியாவுக்கும் போனாராம் "தலைவரை" காண. தலைவர் வரவேயில்லை. ஒருநாள் முகாமில் ஒரே பதற்றம். ஏனென்று யாரும் சொல்லவில்லை. தன்னையும் கொண்டுபோய் ஒரு அறையில் இருத்தினார்கள். யாரோ பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் வந்திருந்தார்காள். அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது யார் தலைவர் என்பதைக் கண்டு கொண்டேன். அவர்கள் பேசியதிலிருந்து அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை அறிந்துகொண்டே. இவர்களை நம்பியா இவ்வளவு இளஞர்களும் யுவதிகளும் குடும்பங்களை விட்டு இங்கு வந்திருக்கிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தேன். தமிழ் சினிமாவுக்கும் இவர்களின் கற்பனைத் திறனுக்கும் அதிக வேறுபாடு இருக்கவில்லை. இந்தப் போராட்டம் வெற்றிபெறாது, முற்றான கோமாளித்தனம் என்று தனக்குள் நினைத்துக்கொண்டு கூட்டம் முடியும்வரை உட்காந்திருந்தார். அந்தத் தலைவர் வேறு யாருமில்லை, சாட்சாத் உமா மகேஸ்வரனே தான்.

கோமாளிகளின் கூட்டம் முடிந்தவுடன் மவுனமாக மீண்டும் வீடு திரும்புவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே தப்பியோ ட முயற்சித்து சுட்டுக் கொல்லப்பட்ட தனது இரு மாணவர்களின் நினைப்பும் வந்து போனது.

கடைத்தெருவுக்குப் போவதாக முகாம் பொறுப்பாளரிடம் கூறிவிட்டு வந்தவர்தான். பின்னர் கழகமும் வேண்டாம் மண்னும் வேண்டாம் என்று மறைவு வாழ்க்கை. இன்றைக்கு சிட்னியில் வாழ்ந்து வருகிறார். அவரின் கதைகளைக் கேட்டால் கழகத்து வண்டவாளங்கள் தெரிகிறது....

ரகுநாதன், எழுதியதைப் போல்.... அனுபவப் பட்டவர் இங்கும் இருக்கிறார்.

1981ல் எவ்வளவோ குடும்ப சுமைகளை தாண்டி... இங்கு வந்தவர், புளொட் போராட்டத்துக்கு உடனடியாக ஆட்கள் சேர்க்கிறார்கள் என்றவுடன்... தனது படிப்பையும் நிறுத்தி..விட்டு, இந்தியா சென்றால்... அங்கு ரகு கூறியதைப் போன்ற நிலைமை. எப்படியோ... தப்பி வந்து இருக்கின்றார்.

அவருடன் போனவர்கள் 20 பேர். மிச்ச ஆட்கள் எங்கு என்று அவருக்கே... தெரியாது. இப்படி எத்தனை பேரை நாசமாக்கினார்களோ....... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இன்னும் இதுகள் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது தான்... வேதனை.

வேறொரு திரியில் வேண்டுமெனில் இது பற்றி எழுதலாம்.ஆரம்ப காலங்களில் கழகத்தில் நடந்தது உட்கட்சி போராட்டமே தவிர வேறெதுவுமில்லை.முடிந்தவரை திருத்த நினைத்து முடியாமல் போக, பிழையான ஒரு இயக்கத்தையும் அதன் தலைமையும் அழித்துவிடவேண்டுமென நினைத்துஅதனால் தமது உயிரைஇழந்தவர்கள் பலர்.ஆனால் அதில் அவர்கள் வெற்றிதான் பெற்றார்கள்.எதிரியுடன் மோதுவதை விட உட்கட்சிப்போராட்டம் நடாத்துவது சிக்கலானது.யாரை நம்புவது என தெரியாது.

கழகத்தில் நடந்த 75% ஆன விடயங்கள் வெளிவந்துவிட்டன.புதியதோர் உலகம் தொடங்கி தீப்பொறி,தேசம் நெற் பதிவுகளால்.இனி எழுத எதுவுமில்லை.

கழகம் தோற்றதல்ல எனது ஆதங்கம் எமது போராட்டம் தோற்றதே.எனது பங்கை நான் மிக சிறப்பாகசெய்துவிட்டுத்தான் இங்கு வந்து எழுதுகின்றேன்.எண்ணத்தில்,செய்கையில் நேர்மை இல்லாவிட்டால் நியாயம் கதைக்க முடியாது.வெளியில் வந்து இப்போ நியாயம் கதைக்கும் பலர் அங்கு தமக்கு எதுவும் தெரியாததுபோல் மௌனமாகவே இருந்தார்கள்,சிலர் அவர்களை நியாயப்படுத்திக்கொண்டும் இருந்தார்கள்.

முன்பும் ஒருமுறை குறிப்பிட்டேன்.சிங்கத்தின் குகைக்குள்ளேயே கர்சித்ததாக.உட்கட்சிப்போராட்டம் நடாத்தியது மாத்திரமல்லாமல் இயக்கம் பெரிதாக உடைந்த கடைசிநாள் அவ்வளவு போராளிகளுக்கும் தலைமைக்கும் மத்தியில் உமாவை பேசிவிட்டுத்தான் வெளியேறினேன்.இது தான் நான் பேசியது

"நான் ஒரு கனவுடன் தான் லண்டனில் இருந்து இயக்கத்திற்கு வந்தேன்.இங்கு வந்து பார்த்தால் நிலமை முற்றிலும் எதிர்மாறு.திருத்தலாம் என்றுதான் முடிந்தவரை போராடினொம் முடியாது என்றாகிவிட்டது.குடும்பம்,நண்பர்கள்,காதலிகள்,படிப்பு,சுகபோக வாழ்வு அத்தனயையும் துறந்துவிட்டு நாட்டுக்காக உங்களை நம்பி வந்தவர்களை நீங்கள் போராளிகளாக ஆக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு மனிதர்களாக ஆவது வைத்திருந்திருக்கலாம்.அநியாயத்திற்கு சிலரை கள்வர்,காடையர்களாக்கி பலரை நடைப்பிணமாக்கிவிட்டீர்கள்.இவ்வளவு தோழர்களின் குடும்பத்திற்கும் ஏதோ ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.பாருங்கள் இவர்களை போராளிகள் ஆக மாதிரியா இருக்கின்றார்கள் ஏதோ கல்லுக்கிரேசரில் வேலைக்குவைத்திருப்பவர்கள்போல் இருக்கின்றார்கள்.".இபோது ஒருவர் எழும்பி ஜயா விட்டால் பேசிகொண்டுபோவார்கள் முந்திய மாதிரி அலுவல் பார்த்தால் தான் சரி என்றார்.நான் உடனே சொன்னேன் இவர்கள் தரவளிகளல் தான் அழிந்தோம் இனியும் அது வேண்டாம்.அவர் ச்ன்னதை மீளப்பெறுமாறு.அதற்கு உமா சொன்னார் உமது கருத்தை நீர் சொல்லுகின்றீர் அவர் தனது கருத்தை சொல்லுகின்றார் என்று .அன்ற்தான் அவர் முகம் முழுதாக தெரிந்தது.அதுதான் எனது கடைசி நாள் தப்பி வந்தது பற்றி ஒரு தொடர்கதையே எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"நான் ஒரு கனவுடன் தான் லண்டனில் இருந்து இயக்கத்திற்கு வந்தேன்.இங்கு வந்து பார்த்தால் நிலமை முற்றிலும் எதிர்மாறு.திருத்தலாம் என்றுதான் முடிந்தவரை போராடினொம் முடியாது என்றாகிவிட்டது.குடும்பம்,நண்பர்கள்,காதலிகள்,படிப்பு,சுகபோக வாழ்வு அத்தனயையும் துறந்துவிட்டு நாட்டுக்காக உங்களை நம்பி வந்தவர்களை [color="#FF0000"]நீங்கள் போராளிகளாக ஆக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு மனிதர்களாக ஆவது வைத்திருந்திருக்கலாம்.அநியாயத்திற்கு சிலரை கள்வர்,காடையர்களாக்கி பலரை நடைப்பிணமாக்கிவிட்டீர்கள் .

அன்ற்தான் அவர் முகம் முழுதாக தெரிந்தது

அன்றிலிருந்து அந்த மக்களையும் நட்டாற்றில் விட்டுவிட்டீர்கள்

ஆனால் ஒரேநாளில்ஈழம் என்ற பதத்தைமட்டும் சிங்களவனிடம் விதைத்தபடி இருந்தீர்கள். இதற்கு பலியானவர் எமது மக்கள்.

இந்தநிலையில் நீங்கள் புலிக்கு பாடம் எடுப்பது.....???

நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் ஒரு பையனைத்தானும் ஏன் ஒரு புல்லைத்தானும் வழி நடாத்தமுடியாத தாங்கள் 30 வருடங்கள் ஊழலற்ற லஞ்சமற்ற களவு கொலைகளலற்ற பதுக்கலற்ற ஆண் பெண் பேதமற்ற சாதிமத பேதமற்ற எமது மண்ணில் எமது ஆட்சியை நடாத்திய பிரபாகரனுக்கு பாடம் சொல்லலாமா....???

புலம் பெயர்ந்து கனவுலகில் இருக்கும் பலருக்கு பதில் எழுதாமல் விடுவதற்கு இதுதான் காரணம்.என்ன நடந்தது,நடக்கின்றது என தெரியாது தேவாரம் பாடிக்கொண்டே இருப்பீர்கள்.

புளொட் பிழை என்றால் புலி சரி என்று அர்த்தமில்லை.நீர் சிவப்பு எழுத்தில் எழுதியிருப்பதெல்லாம் உமது கனவுலகம் யதார்த்தம் அதுவல்ல.

சிறுவர் சிறுமிகளை பலாத்காரமாக பிடிதுக்கொண்டுபோய் 2,3 மாத பயிற்சியுடன் முன்னரங்குகளில் பலிகொடுத்ததை விட கேவலாமனது வேறெதுவுமில்லை.

போராட வந்த எதுவுமறியாத மாற்றுஇயக்கத்தவர்களை வேட்டைநாய்களைப்போல் தேடித்தேடி அழிததைப்போல் இழிவு வேறொன்றுமில்லை.

படித்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் தனக்கு சலாம் போடாவிட்டால் அழித்தும் நாட்டைவிட்டுத்துரத்தியதைபோலவும் இழப்பு தமிழனுக்கு வேறு ஏதுமில்லை

கடைசியில் வரலாற்று இடம் பெயர்வுஎன்று தமது பாதுகாப்பிற்கு அவ்வளவு பொதுமக்களையும் வன்னிக்கு துரத்தி அங்கு கொண்டுவந்து படுத்தாதபாடு படுத்தி கடைசியில் அவ்வளவு பேரையும் பலி கொடுத்ததைப்போல் அநியாயம் உலகெதிலும் நடக்கவில்லை.

உலகெங்கும் பயங்கரவாதிகளாகி இனத்தையும் கேவலமான அடிமையாக்கி தாமும் கடைசியில் அழிந்துபோனார்கள்

இனியாது கனவில் இருந்து நிஜத்திற்கு வாருங்கள் அல்லது தனது பிள்ளைக்கு பிறந்தநாள் பாட்டியை வைத்துவிட்டு அடுத்தவன் பிள்ளையை கரும்புலி ஆக்காதீர்கள்.அவர்களும் வாழ ஆசைப்பட்ட ஜன்மங்கள்தான்.

30 வருடமாக இருந்ததென ஆண்டுக்கணக்கு காட்டதையுங்கோ,கருணாநிதி அதைவிட கூட வருடம்.

எதை எமது இனத்திற்கு தேடிவைத்தீர்கள் என்ற கணக்கை பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையென்றால் என்ன என்று தெரியாததுகளிடம் மனச்சாட்சியை எதிர்பார்த்து என் தப்புத்தான்.

நீங்கள் அண்ணாந்து மேலே பார்த்துக்கொண்டு படுங்கள்.

சோத்துப்பாசலுடன் எவனோ கொண்டுவந்து கொடுப்பான் விடுதலையை.............? :(:(:(

Edited by விசுகு

நான் எழுதியதற்கு பதில் இல்லை அதனால் பலருக்கு நானே பதில் எழுதுவதில்லை.சுய இன்பம் பெறுவதில் தான் பலருக்கு இன்பம்.

உண்மைகளை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு தமிழன் இன்னமும் நாகரீகம் அடையவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதற்கு பதில் இல்லை

உண்மைகளை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு தமிழன் இன்னமும் நாகரீகம் அடையவில்லை

நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் கேள்விக்கு பதில் எழுதிக்கொண்ருப்பது

தற்போது தங்களது நிலைக்கு நாங்களும் வந்துவிட்டோம்.

கேட்பது மட்டும்தான்

ரொம்ப சுலபமாக இருக்கு.

இது தொடரும்.

அடுத்தது

தமிழனது நாகரீகம் பற்றியது.

இதை உங்களைப்போன்றவர்களிடமிருந்து இது போன்ற எதிர்பார்ப்புக்கள் வரலாமா?

அதுவும் 21 ஆம் நூற்றாண்டில், நவீன ஊடக உலகம் 24 மணிநேரமும் விழிமூடாது பார்த்திருக்கும் காலத்தில், உலகின் 600 கோடி மக்களின் கண்களின் முன்னால், இந்திய உபகண்டத்தில் தமிழகத்துக்கு அருகாமையில் இப் பெரும் இனப்படுகொலையில் இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அண்டையில், ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட 120 கோடி மக்களின் முன்னால் இக் கோரதாண்டவத்தை ஆட சிங்களத்தால் முடிந்திருக்கிறது.

இது இராணுவ உத்தியின் வெற்றி அல்ல. சிங்கள வீரத்தின் வெற்றியுமல்ல. இனப்படுகொலையின் வெற்றி. மக்களைத் தங்குதடையின்றி, மிகப் பெரும் தொகையில் கொன்று குவிக்க முடிந்தமையின் வெற்றி. எந்த அரசு இந்த மக்களைத் தமது சொந்த மக்கள் என்று உரிமை கொண்டாடியதோ அந்த அரசே அந்த நிராயுதபாணியான மக்களை எறிகணைகளாலும், போர் விமானங்களாலும், யுத்த டாங்கிகளாலும் கொன்று குவித்துப் பெற்ற வெற்றி. இப்படியான அபகீர்த்தி உடைய ஒரு வெற்றியைத்தான் தமது வரலாற்றுப் பெரும் வெற்றியென மீசை முறுக்குகிறது சிங்களம்.

இராணுவ அர்த்தத்தில் இது ஒரு கோழைத்தனம் என்றாலும் கூட அரசியல் இராஜதந்திர அர்த்தத்தில் சிங்களம் வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையில் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்தது சிங்களமும் சீனாவும்தான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83779

Edited by விசுகு

நான் எழுதியதற்கு பதில் இல்லை அதனால் பலருக்கு நானே பதில் எழுதுவதில்லை.சுய இன்பம் பெறுவதில் தான் பலருக்கு இன்பம்.

உண்மைகளை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு தமிழன் இன்னமும் நாகரீகம் அடையவில்லை

இதோடா!!!?

  • கருத்துக்கள உறவுகள்

கம் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுதியதற்கு பதில் இல்லை அதனால் பலருக்கு நானே பதில் எழுதுவதில்லை.சுய இன்பம் பெறுவதில் தான் பலருக்கு இன்பம்.

உண்மைகளை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு தமிழன் இன்னமும் நாகரீகம் அடையவில்லை

மற்றைய இயக்க உறுப்பினர்கள் சிங்களவுடன் சேர்ந்து நின்று தமிழர்களை அழிக்காமல் இருந்திருந்தால் மக்களே புலிகளுக்கு எதிராக எழும்பி இருப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவுடன் சேர்ந்து நின்று இயங்கிய மற்றைய இயக்க உறுப்பினர்களை புலிகள் அழிக்க யாழ் மக்கள் எப்படி உதவி இருந்தார்கள் வரலாறு சொல்லி இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

வேறொரு திரியில் வேண்டுமெனில் இது பற்றி எழுதலாம்.ஆரம்ப காலங்களில் கழகத்தில் நடந்தது உட்கட்சி போராட்டமே தவிர வேறெதுவுமில்லை.முடிந்தவரை திருத்த நினைத்து முடியாமல் போக, பிழையான ஒரு இயக்கத்தையும் அதன் தலைமையும் அழித்துவிடவேண்டுமென நினைத்துஅதனால் தமது உயிரைஇழந்தவர்கள் பலர்.ஆனால் அதில் அவர்கள் வெற்றிதான் பெற்றார்கள்.எதிரியுடன் மோதுவதை விட உட்கட்சிப்போராட்டம் நடாத்துவது சிக்கலானது.யாரை நம்புவது என தெரியாது.

கழகத்தில் நடந்த 75% ஆன விடயங்கள் வெளிவந்துவிட்டன.புதியதோர் உலகம் தொடங்கி தீப்பொறி,தேசம் நெற் பதிவுகளால்.இனி எழுத எதுவுமில்லை.

கழகம் தோற்றதல்ல எனது ஆதங்கம் எமது போராட்டம் தோற்றதே.எனது பங்கை நான் மிக சிறப்பாகசெய்துவிட்டுத்தான் இங்கு வந்து எழுதுகின்றேன்.எண்ணத்தில்,செய்கையில் நேர்மை இல்லாவிட்டால் நியாயம் கதைக்க முடியாது.வெளியில் வந்து இப்போ நியாயம் கதைக்கும் பலர் அங்கு தமக்கு எதுவும் தெரியாததுபோல் மௌனமாகவே இருந்தார்கள்,சிலர் அவர்களை நியாயப்படுத்திக்கொண்டும் இருந்தார்கள்.

முன்பும் ஒருமுறை குறிப்பிட்டேன்.சிங்கத்தின் குகைக்குள்ளேயே கர்சித்ததாக.உட்கட்சிப்போராட்டம் நடாத்தியது மாத்திரமல்லாமல் இயக்கம் பெரிதாக உடைந்த கடைசிநாள் அவ்வளவு போராளிகளுக்கும் தலைமைக்கும் மத்தியில் உமாவை பேசிவிட்டுத்தான் வெளியேறினேன்.இது தான் நான் பேசியது

"நான் ஒரு கனவுடன் தான் லண்டனில் இருந்து இயக்கத்திற்கு வந்தேன்.இங்கு வந்து பார்த்தால் நிலமை முற்றிலும் எதிர்மாறு.திருத்தலாம் என்றுதான் முடிந்தவரை போராடினொம் முடியாது என்றாகிவிட்டது.குடும்பம்,நண்பர்கள்,காதலிகள்,படிப்பு,சுகபோக வாழ்வு அத்தனயையும் துறந்துவிட்டு நாட்டுக்காக உங்களை நம்பி வந்தவர்களை நீங்கள் போராளிகளாக ஆக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு மனிதர்களாக ஆவது வைத்திருந்திருக்கலாம்.அநியாயத்திற்கு சிலரை கள்வர்,காடையர்களாக்கி பலரை நடைப்பிணமாக்கிவிட்டீர்கள்.இவ்வளவு தோழர்களின் குடும்பத்திற்கும் ஏதோ ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.பாருங்கள் இவர்களை போராளிகள் ஆக மாதிரியா இருக்கின்றார்கள் ஏதோ கல்லுக்கிரேசரில் வேலைக்குவைத்திருப்பவர்கள்போல் இருக்கின்றார்கள்.".இபோது ஒருவர் எழும்பி ஜயா விட்டால் பேசிகொண்டுபோவார்கள் முந்திய மாதிரி அலுவல் பார்த்தால் தான் சரி என்றார்.நான் உடனே சொன்னேன் இவர்கள் தரவளிகளல் தான் அழிந்தோம் இனியும் அது வேண்டாம்.அவர் ச்ன்னதை மீளப்பெறுமாறு.அதற்கு உமா சொன்னார் உமது கருத்தை நீர் சொல்லுகின்றீர் அவர் தனது கருத்தை சொல்லுகின்றார் என்று .அன்ற்தான் அவர் முகம் முழுதாக தெரிந்தது.அதுதான் எனது கடைசி நாள் தப்பி வந்தது பற்றி ஒரு தொடர்கதையே எழுதலாம்.

ஒருவரின் செயல் அவரை காட்டிக்கொடுத்து விடும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்.அது போல சாமனிய மனிதனுக்கே உமா மகேஸ்வரன் பற்றி தெரிந்தது நீஙக்ள் பல வருடங்கள் அவரோடு இருந்து அறிந்துள்ளீர்கள்.ஆயுதம் வாங்கவென இங்குள்ள ஒரு டாக்டரிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை வாங்கிய உமா மகேஸ்வரன் அதனை சுவிஸ் வங்கியில் போட்டதும் அது கடலில் போட்ட காசாக மாறியதும் உங்களுக்கு தெரியாததா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.