Jump to content

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Recommended Posts

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணப;படுத்துவது.

3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது...

12. எப்ப பார்த்தாலும் நான் அழகாயில்லையா என கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

இது 2 யும் தவிர மற்றதெல்லாம் எனக்கும் பொருந்துது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

நம்ம பிரச்சனையே இது தானே தமிழ்மாறன்!

என்ன மாதிரிக் கண்டு பிடிக்கிறீங்களோ தெரியாது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சொல்லுறது.. சமோசிதமா வாழனும் என்று. கலியாணம் என்று கால்கட்டுப் போடேக்க.. கற்பனையில மிதக்கிறது.. பிறகு இப்படி மாறி மாறி ஆணும் பெண்ணும் எழுதித் தள்ளி.. ஆதங்கங்களைக் கொட்டிக்கிறது. தேவையா இது..??! :lol::D

நம்ம பிரச்சனையே இது தானே தமிழ்மாறன்!

என்ன மாதிரிக் கண்டு பிடிக்கிறீங்களோ தெரியாது!!!

அந்தக் காலத்து பாட்டியில் இருந்து இந்தக் காலத்துக்கு குமரி வரை குணம் ஒன்று தான். தோற்றம் மட்டுமே வித்தியாசம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது .

இதுவெல்லாம் நடக்கிற காரியமா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)திருமணம் செய்து பெண்களை கூட்டிக் கொண்டு வந்து வேலைக்கும் விடாமல் வீட்டிலேயே வைத்திருந்தால் இப்படித் தான் எதற்கு எடுத்தாலும் துணைக்கு போக வேண்டும்.

2)அதைத் தானே பல வீடுகளில் பல ஆண்களும் செய்கிறார்கள் :D :D :D

3) போன் கால் பண்ணி நச்சரிக்கா விட்டால் ஒரு ஆண் என்ன சுத்துமாத்து,குளப்படி செய்வார் என்று ஒரு பெண்ணுக்குத் தான் தெரியும் :lol:

4)பெண்களது மிகப் பெரிய ஆயுதம் கண்ணீர்

5)பெண்கள் மட்டுமா சமூகத்திற்குப் பயப்படுகிறார்கள் ஆண்களும் தான்

6)வேலையால் வந்தவுடன் ஆண்கள் தொலைக்காட்சி,கணணிக்கு முன்னால் குந்தினால் பெண்கள் எப்பத் தான் அவர்களோடு கதைப்பது அது மட்டும் இல்லாமல் சாப்பாட்டு நேரத்தில் கதைத்தால் தான் சாப்பாடு ஒழுங்காக போட மாட்டாள் என்ர பயத்தில் எல்லாத்திற்கும் தலையாட்டுவார்கள்.

7)ஆண்களும் வீட்டை சுத்தம் செய்யலாம் அது தப்பில்லை.

8)எல்லாப் பெண்களும் தங்களது கணவன் கெட்டுப் போவது அவரது நண்பர்களால் தான் என நினைப்பது[அப் பெண்ணிணது கணவன் தான் உண்மையான கேடியாக இருப்பார் அது வேற விசயம்.]...நண்பர்களை இல்லாமல் ஆக்கினால் கணவர் வீட்டு வேலைகளில் தனக்கு கூட உதவுவார் என நினைப்பார்கள்

9)பின்ன பெண்கள் மட்டும் வேலைக்கு போய் வந்து வீட்டு வேலை,குழந்தை பராமரிப்பு முதலியவற்றைப் பார்க்க வேண்டும்.ஆண்கள் கால் மேல்,கால் போட்டுக் கொண்டு இருக்க வேண்டுமோ

10)கணக்கு கேட்கா விட்டால் நண்பர்களுக்கும்,அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் முக்கியமாய் அவரது குடும்பத்திற்கும் களவாய் காசு அனுப்பிட்டார் என்டால் இங்கே குடும்பம் கிடந்து கஸ்டப்படும்.

11)வேலை இத்தனை மணிக்குள் முடிந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டுக்குப் போகா விட்டால் இப்படித் தான்...ஒரு நாள் பாவம் என விட்டால் அதைத் தானே தொடர்ந்து செய்வார்கள் :rolleyes:

12)கல்யாணம் முடித்து ஒரு பிள்ளை பிறந்த உடனேயே பெண்கள் தங்களை கவனிப்பதில்லை இந்த லட்சணத்தில் எந்தப் பெண் தன் கணவரிடம் தான் அழகாய் இருக்கிறேனா? என கேட்கப் போகிறார்

Link to comment
Share on other sites

நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது.

இது ஒன்றுதான் எனக்கு பிடிக்காத விடயம்.

8)எல்லாப் பெண்களும் தங்களது கணவன் கெட்டுப் போவது அவரது நண்பர்களால் தான் என நினைப்பது[அப் பெண்ணிணது கணவன் தான் உண்மையான கேடியாக இருப்பார் அது வேற விசயம்.]...நண்பர்களை இல்லாமல் ஆக்கினால் கணவர் வீட்டு வேலைகளில் தனக்கு கூட உதவுவார் என நினைப்பார்கள்

:D:D:D

Link to comment
Share on other sites

நம்ம பிரச்சனையே இது தானே தமிழ்மாறன்!

என்ன மாதிரிக் கண்டு பிடிக்கிறீங்களோ தெரியாது!!

எல்லாம் அனுபவம் தான் புங்கை ஊரான்!!

என்ன நெடுக்கால போனவரே குணம் ஒன்று தோற்றம் வித்தியாசம்

எண்டு புதிசாய் எழுதியிருக்கிறியள்..............

என்ன நீங்கள் சந்திக்கும் பெண்களின் தோற்றம் ஏதாவது இடம் மாறி

அமைந்திருக்கோ................

எங்களுக்கும் சொல்லுங்கோ நாங்களும் அறிய ஆவலாக இருக்கிறம் கண்டியளோ..................

Link to comment
Share on other sites

10)கணக்கு கேட்கா விட்டால் நண்பர்களுக்கும்,அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் முக்கியமாய் அவரது குடும்பத்திற்கும் களவாய் காசு அனுப்பிட்டார் என்டால் இங்கே குடும்பம் கிடந்து கஸ்டப்படும்.

11)வேலை இத்தனை மணிக்குள் முடிந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டுக்குப் போகா விட்டால் இப்படித் தான்...ஒரு நாள் பாவம் என விட்டால் அதைத் தானே தொடர்ந்து செய்வார்கள் :rolleyes:

ரதி - திருமணம் முடித்து எவ்வளவு காலத்துக்கு பின் அவர் குடும்பமும் தன குடும்பம் என்று உணர்வீர்கள் - அல்லது உணரவே மாட்டிர்களா?

ஒரு மனிதன் தனக்கு விருப்பமானதை செய்ய ஏன் விடமாட்டீர்கள்? தனி மனித சுதந்திரத்தில தலையிடப்படாது கண்டியளோ! :lol:

இதுதான் சொல்லுறது.. சமோசிதமா வாழனும் என்று. கலியாணம் என்று கால்கட்டுப் போடேக்க.. கற்பனையில மிதக்கிறது.. பிறகு இப்படி மாறி மாறி ஆணும் பெண்ணும் எழுதித் தள்ளி.. ஆதங்கங்களைக் கொட்டிக்கிறது. தேவையா இது..??! :lol::D

நீங்கள் உண்மையாகவே கல்யாணம் கட்டவில்லையா அல்லது மறைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.