Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததற்காய்...

வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது

அடிமைகளின் வாழ்வு.

refugeesedbreeding.jpg

முடிக்க முடியாத கவிதையாக

இன்னும் மன அடுக்குகளில்

இறைத்துக் கிடக்கிறது மானுடத்தேடல்.

பிறந்ததற்காய்...

வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது

அடிமைகளின் வாழ்வு.

முடிவுகள் அற்ற தேடல்

தீராக்கடனாளி ஆக்குவதில்

தீர்க்கமாய் இருக்கிறது.

வகைப்படுத்த முடியா வலிகளை

எடுத்தெழுதுவதில் எவ்விதப் பயனுமில்லை

நித்திய நோயாளியாக விரும்பின் கூறுக

கொத்தணிக் குண்டுகள்போல்

தமிழினத்தின் வாழ்வு

சிதறிச்சிதறி சின்னாபின்னமான

கதைகள் கோடியுண்டு

முற்காலம், பிற்காலம்

இடைப்பட்ட இக்காலம்

தெளிவற்ற கலங்கலுக்கு உரித்துடையதாக

காட்சியாகவும், சாட்சியாகவும்....

மாயமானாகப் புலப்படுகின்றது

வறண்ட சதுப்பு நிலங்கள்

கானலைத் தாளாமல்

பாளம் பாளமாய் பிளவுண்டதுபோல்

பித்தமெய்யின் பாதங்களாக

வெடிப்புண்டு கிடக்கிறது இனம்

அதீத அழிவுகளைத் திணித்து

அடிமையாக்கப்பட்ட இனத்தில்

ஆதிக்கப் பற்புணர்வால்

பெரும் பாவத் திருஸ்டிப்புகள்

ஆயுத முனையில்

அரங்கேற்றப்படுகின்றன.

அறிந்தும்

குருட்டு உலகமும் வறட்டு மானிடமும்

தத்தம் இருப்பிற்காய் விபச்சாரம் செய்கின்றன.

இப்போதெல்லாம் கடுமை தாங்க முடியாமல்

என் கவிதைகள் தற்கொலை செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேசத்தைக்

கட்டி எழுப்பியதே

ஆபிரிக்க தேசத்தின்

அடிமைகள் தான்!

சீனப் பெரும் சுவரின்

சிற்பிகளும் அவர்கள் தான்!

அடிமைகள் என்றுமே

அடிமைகளாய் வாழ்வதில்லை!

உங்கள் கவிதையில்

தெரிவது மாயமான் அல்ல!

உணர்வுகளின் வெடிப்பில்

விடியும் ஒளியில்,

அதன் மாயத்திரை

நிச்சயம் விலகும்!

கொதிக்கும் உணர்வுகளுக்கும், ஏக்கங்களுக்கும் கவிதையால் வடிகால் அமைக்கின்றீர்கள் சகோதரி!!!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களுக்கு அடிமைகளே அத்திவாரங்களாக இருப்பது மறுக்க முடியாதது. தலை முறைகள் தாண்டி பாரிய சிதைவுகள் தாண்டி ஒரு நீண்ட பாய்ச்சலுக்கான நிலையைத் தொலைத்திருக்கிறது இனம். இப்போதெல்லாம் போர்க்குற்றவாளியாக சிங்களத்தைக் குற்றக்கூண்டிலேற்றுவதோடு சரி என்பதுபோல் இலக்குகளைத் தொலைத்துவிட்டவர்களைப் பார்க்கும்போது இழப்பின் வலி தொண்டைக்குழியை அடைக்கிறது.

உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி புங்கையூரான்.

சகாரா ... உங்கள் எதிர்பார்ப்பு/ஏமாற்றம்/கோபம்/விரக்தியாக கவிதையில் ...

குருட்டு உலகமும் வறட்டு மானிடமும்

தத்தம் இருப்பிற்காய் விபச்சாரம் செய்கின்றன.

ஆனால் ... நாம் ... இதுதான் உலகம்!!! இதுதான் உலகின் அரசியல்!!! ... என்பதை அறியாமல்/உணராமல்/புரியாமல் கனவுலகில் இருந்து விட்டோம்!! ... யாரை நோவது?????????

Edited by Nellaiyan

வினை விதைத்த வயலில் தினையை அறுவடை செய்வது சாத்தியமில்லை என்ற உண்மைகளுக்கு அப்பால் வாழ்வை கட்டியெழுப்பியிருக்கின்றோம். அவைகள் இடிந்து விழுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் வல்வை, சிறிய தீப்பொறி பெருநெருப்பின் பிரளயத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது அதையே பாரதிசொன்னான். தங்கள் கவிதையின்தளம் நியாயமானது, ஆனால் அது வாசிப்பவர்களை முடக்கிப்போடக்கூடாது. வார்த்தைகள் துணிவைத்தரல்வேண்டும் சோம்பலைத்தரலாகாது, சொற்கட்டுக்கள் எமதினத்துக்குப் பேராற்றலைத்தரல்வேண்டும.; அடுத்தகவிதையில்...... அது உங்களால்முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா ... உங்கள் எதிர்பார்ப்பு/ஏமாற்றம்/கோபம்/விரக்தியாக கவிதையில் ...

ஆனால் ... நாம் ... இதுதான் உலகம்!!! இதுதான் உலகின் அரசியல்!!! ... என்பதை அறியாமல்/உணராமல்/புரியாமல் கனவுலகில் இருந்து விட்டோம்!! ... யாரை நோவது?????????

நம்மை நாமே நோவதைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியாது நெல்லையன். உங்கள் புரிதலுக்கு நன்றி நெல்லையன் :)

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையை பொழுதின்

வலிகளைத் தடவியபடி

நாளைய பொழுதின் விடியலுக்காக

நகரும் பொழுதுகளில்

வேதனைத் தீக்குழம்பாய்

பிறந்திடும் பிரசவமாய்

கவிதைகள் எம்மைக்

கடந்து போகிறது!

அரசியல் விபச்சாரிகளும்

ஆளும் விபச்சார விடுதிகளுமான

அரசுகளின் முன்னே

மனிதம் புதைக்கப்படுவதை

தடுக்க முடியாத அடிமைகளாய்

உலக மக்கள்.......... !

ஆனால் ஒரு புரட்சிப் பிரளயம் உருவாகும் போது உலகம் அதற்குள் அமிழ்வது உறுதி. அதுவரை துணிவோடு துயரங்களைக் கடப்போம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்த வயலில் தினையை அறுவடை செய்வது சாத்தியமில்லை என்ற உண்மைகளுக்கு அப்பால் வாழ்வை கட்டியெழுப்பியிருக்கின்றோம். அவைகள் இடிந்து விழுகின்றது.

சுகன் வினையை விதைத்தவர்கள் தினையை அறுவடை செய்வதுதானே இன்றைய நடப்பியலாக இருக்கிறது. தினையை விதைத்தவர்களை அறுவடை செய்ய விடாமல் செய்தது அந்நிய சக்திகளின் சூழ்ச்சிகளும் துரோகங்களும் அதற்குத் துணைபோன நம்மவர்களுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் வல்வை, சிறிய தீப்பொறி பெருநெருப்பின் பிரளயத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது அதையே பாரதிசொன்னான். தங்கள் கவிதையின்தளம் நியாயமானது, ஆனால் அது வாசிப்பவர்களை முடக்கிப்போடக்கூடாது. வார்த்தைகள் துணிவைத்தரல்வேண்டும் சோம்பலைத்தரலாகாது, சொற்கட்டுக்கள் எமதினத்துக்குப் பேராற்றலைத்தரல்வேண்டும.; அடுத்தகவிதையில்...... அது உங்களால்முடியும்.

உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி எழுஞாயிறு.

இக்கவிதை எவரையும் முடக்கிப் போடுதற்காகப்படைக்கப்பட்டதல்ல ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாக கொப்பளித்துவரும் கோபங்களை அடக்கிக் கொண்டு எழுதப்பட்டது. ஒரு சிறு பொறிக்கு பெரும் தீப்பிரளயத்தை ஒருவாக்கும் சக்தி இருக்கிறது என்பதில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது. எழுஞாயிறு நம்மைச்சுற்றி பலத்த மாயவட்டம் சிருட்டிக்கப்பட்டுள்ளது.சிருட்டித்தவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் அதனைக்காவிக் கொண்டு திரிபவர்கள் நம்மவர்களாகவே இருக்கிறார்கள். இந்தக்காலகட்டத்தில் உணர்வுகளைத் தீயாது வைத்திருத்தலே அவசியமானது. இக்கவிதை சோர்வைத் தேக்குகிறது என்ற உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்கிறேன். கனநாட்களாக கவிதை எழுதவில்லை அல்லவா அதுதான் கொஞ்சம் மக்கர் பண்ணுகிறது. :rolleyes:

நேற்றையை பொழுதின்

வலிகளைத் தடவியபடி

நாளைய பொழுதின் விடியலுக்காக

நகரும் பொழுதுகளில்

வேதனைத் தீக்குழம்பாய்

பிறந்திடும் பிரசவமாய்

கவிதைகள் எம்மைக்

கடந்து போகிறது!

அரசியல் விபச்சாரிகளும்

ஆளும் விபச்சார விடுதிகளுமான

அரசுகளின் முன்னே

மனிதம் புதைக்கப்படுவதை

தடுக்க முடியாத அடிமைகளாய்

உலக மக்கள்.......... !

ஆனால் ஒரு புரட்சிப் பிரளயம் உருவாகும் போது உலகம் அதற்குள் அமிழ்வது உறுதி. அதுவரை துணிவோடு துயரங்களைக் கடப்போம்!

நொச்சி நன்றி உங்கள் ஊக்கப்படுத்தலுக்கு.

வல்லைசஹாரா,

இப்போது தான் இதைப் பார்த்தேன், உள்ளுணர்வுகளை படம்பிடித்தது போல வாத்த்தையாக்கும் வல்லமை பெற்றுள்ளீர்கள்.

“ஏன் நான் ஒரு பொதுவுடமை வாதியில்லை” என்ற ஒரு கட்டுரையில் பேர்ட்டன் றசல் (Bertrand Russell), கார்ல் மாக்ஸ் மீது முன்வைக்கும் ஒரு குற்றச் சாட்டு, மாக்சின் சிந்தனை முழுக்க முழுக்க வெறுப்புணர்வில் இருந்து எழுந்தது என்பது. படித்த மாத்திரத்தில் எனக்கு இக்குற்றச்சாட்டு “பாணில்லாட்டி கேக் சாப்பிடடடும்” என்று சொன்ன ராணியின் எகத்தாளம் போன்றே தோன்றியது. அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எரிந்து கொண்டிருப்பவனிடம் வெறுப்புணர்வு கூடாது என்று சொல்வதற்கு எந்தக் கொம்பனிற்கும் உரிமை இல்லை என்றே தோன்றியது. அதுகும் அடக்கும் வர்க்கத்தவன் சொல்ல முடியாது என்றே பட்டது. எனினும் சற்றுச் சிந்திக்கையில், வெறுப்புணர்வு இருக்கக் கூடாதென்பதில்லை, ஆனால் முழுக்க முளுக்க வெறுப்புணர்வில் மட்டும் இருந்து எழும் தீர்வு நோக்கிய முனைதல்கள் எதிரிகள் நோகவேண்டும் என்ற குறியில், வழியில் நண்பர்களும் நோவதைக் கவனிக்கும் திராணியற்றுப்போகும்; என்ற பேர்ட்டன் றசலின் வாதத்தை முற்றாக ஒதுக்கிவிடமுடியவில்லை.

ஒரு கேள்வி, எனக்கு ஏனோ இக்கவிதையினை நீங்கள் ஒரு விடயஙம் பற்றிப் பேசத் தொடங்கி விட்டு, பின் ஏதோ காரணத்திற்காய் இன்னுமொன்றை உள்ளிளுத்துப் பேசி முடித்துள்ளதாகப் படுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினை என்ற முனையைக் காட்டிலும், பிறப்பால் ஈழத்தமிழரரான, ஈழத்தமழிழர் மற்றும் இதர பொது அடையாளங்களைப் (அம்மா, மனைவி, உழைப்பாளி, இன்னபிற)பங்குபோடும் ஒரு தனிநபரின் வாழ்வியல் கதறலாகவே கவிதை ஆரம்பித்ததாகப் படுகிறது. பின்னூடடங்களும் இக்கவிதையினை பழக்கமான ஈழத்தமிழ் என்ற பொதுமையின கதறலாகவே நகர்த்திச் செல்லுகின்றன. எனது புரிதல் தவறாக இருக்கலாம். அதனால் இந்தக் கேள்வி, இந்தக் கவிதையினை ஈழத்தமிழனினத்தின் அரசியல் கதறலாக எழுதினீர்களா அல்லது பல அடையாளங்களசை; சுமப்பினும் அடிப்படையில் பிரத்தியேகமான தனிமனிதனின் கதறலாக எழுதினீர்களா?

ஆனால் ஒரு புரட்சிப் பிரளயம் உருவாகும் போது உலகம் அதற்குள் அமிழ்வது உறுதி. அதுவரை துணிவோடு துயரங்களைக் கடப்போம்!

மன்னிக்கவும் நொச்சி, ... எழுத்துக்கு இவ்வாய்க்கியம் நன்றாக இருக்கும், ஆனால் நிஜத்தில்????? ......

முற்றிலும் இதுவரை எழுதிய எனது ஆக்கங்களிலிருந்து மாறுபாடுடையதாகவே இப்பதிவு. தேடல்கள் அதிகரிக்கும்போது அதற்கான பிடிபொருள் எங்கிருக்கிறது என்று அனைத்திலும் ஆழ ஊடுருவி செல்கின்றன சிந்தனை வேர்கள். நீங்கள் குறிப்பிட்ட தனிமனித ஓலம் ஓர் இனத்தின் ஓலமாக விரிந்து மீண்டும் ஒடுங்கிக் கொள்கிறது. இதற்குள் பல அடையாளங்கள் புதையுண்டு கிடப்பது உண்மைதான். இலகுவான புரிதலை ஏற்படுத்த முடியாத கவிதையாக பலருக்கு இருக்கும். மிகக் கொடிய ஒரு துன்பியலை ஊதுபத்தி ஒளியில் பார்ப்பதைப்போன்றே இந்தக் கவிதை புலப்படும்.

இன்னுமொருவன் நீங்கள் குறிப்பிட்ட பேர்ட்டன் றசலின் வாதத்தையும் கருத்தில் கொண்ட காரணத்தாலேயே எழுதும் தார்மீகத்திலிருந்து பல நாட்களாய் விலகியிருந்தேன். இது ஒரு வகையான கோழைத்தனமும் கூட. மனச்சாட்சி கொல்கிறது. ஒரு முறை தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்களுடன் பேசும்போது அவர் கேட்ட வாசகம்('ஆயுதம் செய்வோம் அமைதிக்காக' படத்தில் வாழ்க வளமுடன் என்ற வார்த்தைக்கு ஒப்பானது) "ஒருவேளை நாங்கள் இங்கு பாரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் புலம்பெயர்ந்தவர்களான நீங்கள் எவ்வாறு இதை ஒப்பேற்றுவீர்கள்?" இன்று இந்த வாசகம் மட்டும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது. எங்களின் அற்புதமான காலக்கவிஞனை மீட்க முடியாத ஏதோ ஒன்றிடம் பறிகொடுத்துவிட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு இனத்தை அடையாளமாகக் கொண்ட பல தனிமனித ஓலங்கள் எழும்போது அது இனத்தின் ஓலமாகும். என்னிலிருந்தே எமதாய் விரிகிறேன் தனி மனித ஓலத்தை முடக்கலாம், ஒரு இனத்தின் ஓலத்தை அடக்கிவிட முடியாது.

சுயத்தினூடே பொதுமைக்குள் பயணிக்கிறது சிந்தனை.

இனத்தின் ஒரு பிரதிநிதியான என்னைவிட்டுவிட்டு எப்படி இரண்டாம் மூன்றாம் நிலையிலிருந்து உயிர்கரைந்து எழுத முடியும்?

என்னினத்திற்குத் திணிக்கப்பட்ட வலிக்கு நானும் ஒரு சாட்சியம்., நீங்களும் ஒரு சாட்சியம்., ஒவ்வொரு ஈழத்தமிழரும் சாட்சியம்

இன்னுமொருவன் உங்கள் கேள்விக்கு நன்றி உரைக்கிறேன். மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வழி சமைத்ததற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நொச்சி, ... எழுத்துக்கு இவ்வாய்க்கியம் நன்றாக இருக்கும், ஆனால் நிஜத்தில்????? ......

ஒரு புரட்சிப் பிரளயம் அசைக்கமுடியாத இரும்பக் கோட்டைகளையே ஆட்டங்காண வைத்திருக்கிறது. நணபர்களாக இருந்தவர்களாலேயே மக்கள் எழுச்சியின்முன் எதுவும் செய்ய முடியாமல் போயுள்ளது. இதுதான் உலகின் நியதி.

ஆனால் எமதினத்தின் சாபக் கேடாக எம்மிடையே ஒற்றுமையோ, ஒன்றித்துச் செயற்படும் தொலை நோக்கோ இல்லையே. ஆனால் அனைத்தையும் கடந்து ஓரே கோட்டில் ஒருநாள் இணைய வேண்டிய சூழலை நாம் சந்திக்கும்போது சாத்தியமாகலாம் என்பதே எதிர்பார்ப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிதறுண்டு இருக்கும் வரை குருட்டு உலகமும் வறட்டு மானிடமும் தொடர்ந்தும் தமிழர்களைப் பாகுபடுத்தியே வைத்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.