Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயஸ்போரா தமிழர்கள் மாலையில் பப்புக்கு போய் செலவழிக்கின்ற காசை இங்கு அனுப்பவேணும் - கரு முரளிதரவின் ஆலோசனை

Featured Replies

டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், கரு நா முரளிதர இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளும் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினைகளை உண்டுபண்ண எத்தணிக்கிறார்கள்.

நாம் அனைவரும் இலங்கையர் என்ற முறையில் ஒன்று பட்டு இத்தகைய வெளிநாட்டு சக்திகளுக்கு எமது ஏகோபித்த எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று மீள்குடியேற்ற சிங்கள இனவாத அரசின் பிரதியமைச்சர் கரு முரளிதர கண்டனம் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி இந்து மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டபோதே பிரதி அமைச்சர் கரு முரளிதர இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதிகளாக அம்பாந்தோட்டை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ, மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், நிர்மாணத்துறை பொறியியல் சேவை வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.

கரு முரளிதர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் இன்று 30 ஆண்டு கால யுத்தம் முடிவுற்றமை குறித்து சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில உயர் அதிகாரிகளும், மன வேதனையில் இருப்பதனால் தான் இலங்கைக்கு எதிரான பலதரப்பட்ட தீய செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டி ருப்பதையே பெரிதும் விரும்புவதாகவும் நாட்டை பிளவுபடுத்துவதே இத்தகைய தீய சக்திகளின் குறிக்கோளாக இருக்கிறது.

நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பிரதேசத்திற்கு ஆடம்பரமாக போலி வேடமணிந்து வந்த அரசியல் வாதிகளைப் பார்த்து ஏமாந்து போனேன். அதனால் தான் கல்வியை இடை நடுவில் நிறுத்திக் கொண்டு காடுகளில் தஞ்சமடைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டேன்.

என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுத்த இந்த அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டம் பெறவைத்தனர். நாங்கள் படிப்பையும், கல்வியையும் சீர்குலைத்துக் கொண்டோம். இன்று நாம் உண்மை எது, போலி எது என்பதை புரிந்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் நல்வழியில் ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்து விட்டோம்” கூறியுள்ளது முரளிதர.

சில அரசியல்வாதிகள் இன்றும் கூட சிங்கப்பூருக்கு சென்று இனப்பிரச்சினை குறித்து மாநாடுகளை நடத்துகிறார்கள். அவர்கள் அதற்கு பதில் ஏன் கிளிநொச்சிக்கோ, மட்டக்களப்பிற்கோ வந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தும், ஏனைய உதவிகளையும் செய்து கொடுக்க தயங்குகிறார்கள் .

டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் .

இவ்வாறு கூறிவிட்டு சென்றுள்ளது முரளிதர என்ற சிங்கள இனவாத அரசின் பிரதி அமைச்சர்

டயஸ்போரா தமிழர்கள் மாலையில் பப்புக்கு போய் செலவழிக்கின்ற காசை இங்கு அனுப்பவேணும் - கரு முரளிதரவின் ஆலோசனை

27176109800605699437100.jpg

ஓம் மாண்!! ... நாங்கள் மப்புக்கு போகாமல் உங்களுக்கு அனுப்புகிறோம் ... நீங்கள் உந்தக் கண்டை மாட்டோடு அவிட்டனீங்களாம் ... அனுப்புவதில் இன்னும் நாலை கண்டும் மாடாக இல்லாமல், பண்டியும் குட்டிகளுமாக அவுளுங்கோ!!! <_< <_< <_<

Edited by Nellaiyan

KP1220.JPG

  • தொடங்கியவர்

KP1220.JPG

முறிகண்டி இந்து மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக தென் இலங்கையில் இருந்து ஒரு பெரும் பரிவாரங்களே வந்துள்ளது. ஒரு சிறிய பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு மூன்று அமைச்சர்கள் இரண்டு துணை அமைச்சர்கள் மற்றும் ஊடகவியலாலர் உட்பட 50 இற்கு மேற்பட்டோர் ஏன் வரவேண்டும்.

அதுதான் கருணாகர என்கின்ர சிங்கள இனவாத அரசின் பிரதி அமைச்சர் ஐ. நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக போராடப்போகின்றாராம் அதற்கான முன்னேற்பாட்டிற்காகவே அடிக்கல் விழா என்ற விழா பெயரில் ஓர் முஸ்தீபு.

இபடி அடுத்தடுத்து பல விழாக்களுக்கு திட்டம் போட்டுவிட்டு மக்களை வரவளைத்து போராட்டம் நடத்துவதே ஒட்டுகுழு மன்னன் முரளிதர வின் திட்டம். இன்று முருகண்டிக்கு பிரதம அதிதிகளாக மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்க்ஷ, மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், நிர்மாணத்துறை பொறியியல் சேவை வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட 50 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

27176109800605699437100.jpg

ஓம் மாண்!! ... நாங்கள் மப்புக்கு போகாமல் உங்களுக்கு அனுப்புகிறோம் ... நீங்கள் உந்தக் கண்டை மாட்டோடு அவிட்டனீங்களாம் ... அனுப்புவதில் இன்னும் நாலை கண்டும் மாடாக இல்லாமல், பண்டியும் குட்டிகளுமாக அவுளுங்கோ!!! <_< <_< <_<

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்!

புலியாக வாழ ஒன்று,

பூனையாக வாழ ஒன்று!

குடி மகனே, பெரும் குடிமகனே!!

:D:D:D

இணைப்புக்கு நன்றிகள் நெல்லையன்!!!

  • தொடங்கியவர்

27176109800605699437100.jpg

ஓம் மாண்!! ... நாங்கள் மப்புக்கு போகாமல் உங்களுக்கு அனுப்புகிறோம் ... நீங்கள் உந்தக் கண்டை மாட்டோடு அவிட்டனீங்களாம் ... அனுப்புவதில் இன்னும் நாலை கண்டும் மாடாக இல்லாமல், பண்டியும் குட்டிகளுமாக அவுளுங்கோ!!! <_< <_< <_<

இந்த கேற்ப மாட்டை 2002 இல் இருந்தே கரு நாய் கவ்வி விட்டுது. தாய்லாந்து பேச்சுவார்த்தையின் போது அரச அதிகாரிகளை பராமரிப்பு என்ற போர்வையில் இந்த கேற்ப மாடு அனுப்பபப்ட்டதாம். அங்கேயே கருணாவுடன் நட்பு பாராட்டி அரச அதிகாரிகளுடன் சந்திப்பு அதன் பின்னரான இராணுவ அதிகாரிகளின் சந்திப்புக்கு இந்த மாடுதான் ஏற்பாடு. இத்தனைக்கும் இந்த மாட்டிர்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் சரியாக கூட வராதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் இந்த மாட்டிர்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் சரியாக கூட வராதாம்.

கட்டிலுக்கு பாசை தேவையில்லை

கை பாசை போதும் :D:D

உமை, ... முன்பும் யாழில் பதிந்தது ... இங்கிருந்து பிபிசி ர்தமிழோசையின் ஓர் நிருபர் சில வருடங்களுக்கு முன் கொழும்பு சென்றிருந்தாராம், அங்கு உந்த அமைச்சர் மாணை சந்திப்பதற்காக, ஓர் மாலை நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்றபோது ... அங்கு/அப்போது மாணுக்கு புசல் வெறியாம், அவர் சொன்ன தகவல்தான் .. உந்த கண்டும் மாடும்!!! ... மேலும் சொல்லும்போது, மாணுக்கு அங்கு செய்ய ஒன்றுமில்லை, அவர் செய்ய வேண்டியதற்கு உதை கொடுத்திருக்கிறார்கள் .. உதற்கு மேல் ஒன்றும் இயலாது!!!

இவர் இப்பொழுதும் தனது முன்னாள் தலைவரையும், இயக்கத்தையும் பற்றி சிலாகித்துக் கூறுவாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

:( இவனைப்பற்றிய செய்திகளை வாசிக்கும்போது எனக்குள் ஒரு கேள்வி அடிக்கடி எழும். அதாவது இவன் எப்போதாவது தான் நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்திருப்பானா?? சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தான் வளர்ந்த ஒரு இயக்கத்தை எப்படி மிக இலகுவாகத் தூக்கியெறிந்து தனது பரம வைரியுடன் குலாவ முடிகிறது இவனால்?? எப்படித் தனது தோழர்களையே காட்டிக்கொடுக்கவும், தாம் போராடிய மக்கள் கூட்டத்தையே கடத்திச் சென்று கொல்லவும் முடிகிறது ?? எவ்வாறு நடந்து இனக்கொலையை நடக்கவேயில்லை என்றும், செய்ததெல்லாம் புலிகளென்றும் கூற முடிகிறது??

மற்றைய இயக்கத்துக்காரர் செயற்படுவதை விளங்கிக்கொள்ள முடிகிறது. அவர்கள் புலிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் காட்டிக்கொடுக்கிறார்கள், அல்லது புலிகளைக் காரணம் காட்டி தங்கள் அரசியலை நடத்துகிறார்கள். ஆனால், இவனுக்கு புலிகள் செய்தது என்ன?? இவன்மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கூட தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும், தொடர்ந்தும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இவனைத் தலைவர் நினைத்துக்கொண்டதும்தானே இறுதிவரை நடந்தது?? அப்புறம் ஏன் இவன் மாறினான்?:

  • தொடங்கியவர்

தாயைக் கூட்டிக் கொடுப்பவனும்

தலைவனைக் காட்டிக் கொடுப்பவனும்

ஒன்று தான்

தென் தமிழீழத்தின் முன்னாள் அரசியல் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் அண்ணரை இந்த பிசாசுதான் சுட்டுக்கொலை செய்தது என்றும் சொல்லுகினம் அத்தோட டொக்டர் அன்ரி ஆட்கள் இந்த பிசாசின்ர கட்டுப்பாட்டிலதான் எங்கோ அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களாம்.

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.