Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்த மூன்றரை மாதங்களில் மட்டும் வடக்கில் 35 வன்புணர்வுக் குற்றங்கள்: பெரும்பாலானோர் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர். 10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.

யாழ். மாவட்டத்தில் நகரப் பகுதி, கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை, அல்வாய் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரப்பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம், வவுனியா நகரப்பகுதி ஆகிய இடங்களிலும் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றதாகப் புள்ளி விவரம் கூறுகின்றது.

பதிவு செய்யப்பட்ட சம்பவங்களே இவை என்றும் இவற்றைவிட பதிவு செய்யப்படாமல் இன்னும் அதிகமானவை இடம்பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் பெண் உரிமை விடயத்தில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. "இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு, நவீன தொடர்பாடல் தொழில்நுட்பம் வரைமுறையற்று பயன்பாட்டில் இருப்பதே காரணம்'' என்று தெரிவித்தார் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவர் எஸ்.சிவரூபன். டிப்டொப் ஆசாமிகளின் வெளிக்கவர்ச்சியில் மாணவிகள் இலகுவில் மயங்கிப் போய் விடுவதாலும் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் விரும்பிப் பாலியல் உறவு வைத்துக் கொண்டாலும்கூட அது வன்புணர்வாகவே கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவதே இத்தகைய குற்றங்களைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

60 வயது முதியவர் கைது!

தென்மராட்சிப் பிரதேசத்தில் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 21ஆம் திகதி சிறுமிக்கு இரத்தக் கசிவு இருந்ததை அவதானித்த பெற்றோர், தனியார் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற முயன்றுள்ளனர். அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்து பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சிறுமி மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி தெரியவந்தது. இது தொடர்பில், சிறுமியை தனியார் வகுப்புக்கு அழைத்துச் செல்லும் முதியவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இந்த நபரே சிறுமியைத் தனியார் வகுப்புக்குக் கூட்டிச் சென்று வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினம் அன்று சிறுமியை தனியார் வகுப்புக்கு அழைத்துச் செல்லும் வழியில் பற்றை ஒன்றுக்குள் கொண்டு சென்று வன்புணர்வுக்கு முயன்றுள்ளார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=1913

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய குற்றச் செயல்கள் புதியவையல்ல. போர்க்காலத்தில் தமிழீழ நீதிமன்ற வளக்குகளில் கணிசமானவை இத்தகைய குற்றச் செயல்கள் சம்பந்தப் பட்டவையே. நான் இத்பற்றி விசாரித்தபோது incest முறைதவறிய உள்ளுறவு சார்ந்த வன்புணற்ச்சிச் சம்பவங்கள் அதிகரிப்பு அதிற்ச்சி தந்தது, இவைபற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வைத்தியர்களும் உளவியலாளர்களும் உளவியல் மாணவர்களும் சமூக விஞானிகளும் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் ஆதரவு உள்ளூரில் இயங்கும் உளவியலாளர்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிச்சியம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி சம்பவங்களில் இராணுவம் சம்பந்தப்படவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது அல்லது மறைக்கப்பட்டுள்ளதா???

  • கருத்துக்கள உறவுகள்

:( நுணாவிலான்,

ராணுவத்தினால் நடக்கும் பாலியல் வன்புணர்வுகள் முறையிடப்படுவதில்லை. அப்படி முறையிடப்படும் ஒன்று இரண்டு சம்பவங்களும் இறுதியில் வாபஸ் பெறப்படுகின்றன அல்லது பெற வைக்கப்படுகின்றன.

இங்கு கூறப்பட்டவை முழுக்க முழுக்க அரசியல் தெளிவில்லாத திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளும் அதனூடு வலிந்து திணிக்கப்பட்டுள்ள கலாச்சாரச் சீரழிவிற்குள்ளும் வளர்ந்துவரும் இளம் தமிழ்ச் சமூகம் அடைந்திருக்கும் ஒரு நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

கட்டுப்பாடற்ற போதை வஸ்த்துப் பாவனையும், கொழும்பை ஒத்த மதுபானக் கொட்டகைகள், உல்லாச விடுதிகள் என்கிற பெயரில் நடக்கும் விபச்சார விடுதிகள் போன்றவையும் திட்டமிட்டே யாழ்ப்பாண இளைய சமூகத்தை குட்டிச்சுவராக்கி வருகின்றன. அரச ஆசீருடனும், ஒட்டுக்குழுக்களின் ஆதரவோடும் நடைபெறும் இந்த சீரழிவுகள் நிச்சயம் எமக்கு ஆரோக்கியமானதல்ல என்பது மட்டும் திண்ணம்.

:( நுணாவிலான்,

ராணுவத்தினால் நடக்கும் பாலியல் வன்புணர்வுகள் முறையிடப்படுவதில்லை. அப்படி முறையிடப்படும் ஒன்று இரண்டு சம்பவங்களும் இறுதியில் வாபஸ் பெறப்படுகின்றன அல்லது பெற வைக்கப்படுகின்றன.

இங்கு கூறப்பட்டவை முழுக்க முழுக்க அரசியல் தெளிவில்லாத திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளும் அதனூடு வலிந்து திணிக்கப்பட்டுள்ள கலாச்சாரச் சீரழிவிற்குள்ளும் வளர்ந்துவரும் இளம் தமிழ்ச் சமூகம் அடைந்திருக்கும் ஒரு நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

கட்டுப்பாடற்ற போதை வஸ்த்துப் பாவனையும், கொழும்பை ஒத்த மதுபானக் கொட்டகைகள், உல்லாச விடுதிகள் என்கிற பெயரில் நடக்கும் விபச்சார விடுதிகள் போன்றவையும் திட்டமிட்டே யாழ்ப்பாண இளைய சமூகத்தை குட்டிச்சுவராக்கி வருகின்றன. அரச ஆசீருடனும், ஒட்டுக்குழுக்களின் ஆதரவோடும் நடைபெறும் இந்த சீரழிவுகள் நிச்சயம் எமக்கு ஆரோக்கியமானதல்ல என்பது மட்டும் திண்ணம்.

...அத்துடன் கொடூர சாவுகளை, சித்திரவதைகளை பார்த்த அனுபவித்த மனங்கள், போரின் அனைத்து பேரழிவுகளுக்கும் சாட்சியாக இருந்த மனசுகள் ஆற்றும் எதிர்வினைகள் எப்பவும் இவற்றை அனுபவிக்காத ஒருவரின் மனசை போன்று இருக்காது. சாவே வாழ்வாய், கொலைகளே சாதாரண நிகழ்வாய் எதிர் கொண்ட மக்களுக்கு நிச்சயம் மனோவியல் சிகிச்சை மிகத் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த சொந்தங்களிடையே தான் அதிகம் பாலியல் வன்புனர்வுகள் நட‌க்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை வந்து எங்கடை சனத்தை பாத்து ....... நவநாகரிகமாய்மாறுங்கோ......பட்டிக்காடாய் இருக்காதேங்கோ....வெள்ளைக்காரன் மாதிரி வாழப்பழகுங்கோ....எண்டு சொல்லுறவைக்கு இந்த செய்தி சமர்ப்பணம்.

பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தோனீசியா இப்படியான நாடுகள் மாதிரி இலங்கையும் வரப்போகின்றது.மேற்கத்திய நாடுகள் தமது படைகளுக்காக பேஸ் அமைத்த நாடுகள் எல்லாம் அவர்களது விபச்சாரகூடங்கள் ஆகவே மாறிவிட்டன.பல வருடங்கள் போர் நடந்த நாடுகளில் எதற்குமே வழியில்லாத நிலையில் இதுவெல்லாம் சாதாரணம் என்றொரு நிலை வந்துவிடும்.

சிங்களவன் கலாச்சாரம் வேறு இப்படியான விடயங்களை பொருட்படுத்துவதில்லை (கோல்பேஸில் போய்பார்த்தால் குடைகளே சாட்சி சொல்லும்)

எமது கலாச்சாரம் வேறு பட்டது.மிகவும் ஒழுக்கபூர்வமானது.இதனால் தான் எமது போராட்டம் ஏதோ விரைவில்முடியவேண்டியதொன்று என நினைத்தோம்.கடைசி 10 வருடங்கள் தான் நீளலாம் அதற்குள் ஒரு தீர்விற்கு நினைத்தோம்.இப்படியான ஒரு நிலமைக்கு எமது மக்கள் ஒருபோதும் வந்துவிடக்கூடாது என எண்ணினோம்.

புலம்பெயர்ந்த..............தமது சுகபோக வாழ்விற்கு தமிழனின் அனைத்து அடையாளத்தையும் விலைகூறிவிட்டான்.

.

பொஸ்னியாவில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம் பெண்கள் சேர்பியர்களினால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டார்கள். இது ஒரு புறம். மறு புறம் பெருந்தொகையான முஸ்லீம் சிறுமிகளும் இளம் பெண்களும் இரவில் வெளிச்சமற்ற‌ அகதி முகாம்களில் முஸ்லீம் ஆண்களினாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளானார்கள்.

குடும்பக் கட்டமைப்பு பலவீனப் படும் போது ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களிற்குள்ளேயே இத்தகைய பாலியல் துர்நடத்தைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். குடும்பக் கட்டமைப்பு பலவீனப்படுத்தும் முக்கிய நிகழ்வு, இயற்கை ஒரு தாய்க்கு ஒதுக்கியிருக்கும் குடும்பத்தைப் பராமரிக்கும் கடமையை அவள் சரிவரச் செய்யத் தவறுதல். மேலை நாடுகளில் தாய் வேலைக்குச் செல்வதும் இதற்கு ஒரு காரணம்.

யாழ்ப்பாணத்தில் தாய்மார் என்னென்ன சந்தர்ப்பங்களில் தவறுகள் நேரலாம் என்பதையும் அப்படியான சந்தர்ப்பங்களில் இருந்து பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம் என்பது பற்றியும் விழிப்போடு இருப்பதாகத் தெரியவில்லை. போதிய கல்வியறிவின்மை ஒரு காரணம். பல தாய்மாருக்கு நீலத்திரைப் படங்கள் பற்றியோ, பாலியல் இணையத்தளங்கள் பற்றியோ, பாலியல் புத்தகங்கள் பற்றியோ எந்த‌வித விளக்கங்களும் தெரியாது. ஆனால் இளம் ஆண்கள் இதில் கரை கண்டவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் தாய்மார்கள் தம்முடைய இளம் பெண்பிள்ளைகளின் பாதுகாப்புப் பற்றி முன்னெச்செரிக்கை குறைவாகவே இருப்பார்கள்.

பல குடும்பங்களில் இளம் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் பழகுவதைக் கண்டுகொள்வதாகவே இல்லை. தன் பெண்பிள்ளை விட‌யத்தில் ஒரு ஆண் எப்போதுமே ஒரு அபாயகரமான மிருகம் என்னும் நினைப்பு ஒரு தாய்க்கு அப்பிள்ளை வளர்ந்து சரி பிழை அறியும் வயது வரும்மட்டும் இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.