Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் கார்த்தி திருமணம்

Featured Replies

தமன்னா பற்றிய கவலையை விடுங்கோ...அவரை...அவுஸ்திரிலியாவில் வசிக்கும் தமீழிழத்தை சேர்ந்த பிரபல கோடிஸ்வரர் ஒருவர் மணக்க இருப்பாதாக வதந்தி...

இது என்ன இந்தியாவில் காத்தலித்து கைவிட்ட கேஸுக்கு எல்லாம் ஈழத்து கேடிஸ்வரர்கள் கனவர்களாக கிடைக்கிறார்களே?

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் நடிகர் கார்த்திக் திருமண ஏற்பாடுகள் தயார்

First Published : 23 Jun 2011 04:23:51 PM IST

சென்னை, ஜூன். 23- நடிகர் கார்த்திக் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. மணமகள் ஈரோட்டைச் சேர்ந்த் சின்னசாமி- ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனி. அவர் ஆங்கில இலக்கியத்தில் எம்ஏ படித்துள்ளார்.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் நடந்தது. தற்போது திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மணப்பெண்ணுக்கான புடவைகள், நகைகள் தேர்வு செய்யும் பணியில் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவருடன் கார்த்தியின் தாய் லட்சுமி, சகோதரி பிருந்தா ஆகியோரும் பிரபல ஜவுளி கடைகளுக்கு சென்று புடவைகளை தேர்வு செய்து வருகின்றனர்.காஞ்சிபுரத்திலும் பட்டுப் புடவைகளை வாங்க உள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் ஜூலை 7-ந்தேதி மாலை நடக்கிறது.

http://www.dinamani.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 3, ஜூலை 2011 (18:59 IST)

கார்த்தி திருமணம் : வாழ்த்திய பிரபலங்கள்

நடிகர் கார்த்தியின் திருமணம் இன்று கோவையில் நடைபெற்றது.

நடிகர்கள் பிரபு, ராஜேஷ், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சித்தார்த், சரவணன், நடிகைகள் ராதிகா,நக்மா, பூர்ணிமா பாக்கியராஜ், டைரக்டர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி . உதயகுமார், ஹரி, சங்கர் தயாள், மனோபாலா, பாலா, சுசீந்தர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, பாரதி வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், டாக்டர். தங்கவேலு, கோவை மணி, திருப்பூர் பாலு ஆகியோர் வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பலத்துடன் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது. வாகை, செண்பகம், துளசி ஆகிய மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

திருமணத்துக்கு வந்தவர்களை நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, மற்றும் மணமகள் ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி - ஜோதி மீனாட்சி ஆகியோர் வரவேற்றனர்.

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமக்களை நடிகர் சத்யராஜ், அவரது மகன் நடிகர் சிபி, நடிகை நக்மாவின் தங்கை ரோஷினி, டைரக்டர் சுராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளர் ஈஸ்வரன், சூலூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ., பனப்பட்டி தினகரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, உள்ளிட்டோர் வாழ்த்தினார்கள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57159

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம்!

karthik-sivakumar-ranjani-wedding-stills_13_.jpg

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Pali+Addu.jpg

பலியாட்டையும் நல்லா அலங்கரிச்சுத்தான் மேடைக்கு கொண்டு போவினமாம். அது போல இவருக்கு ஆகாமல் இருக்க கடவுளை வேண்டுகிறேன். நீடூழி வாழவும் வாழ்த்துகின்றேன். :D:)

Edited by nedukkalapoovan

Pali+Addu.jpg

பலியாட்டையும் நல்லா அலங்கரிச்சுத்தான் மேடைக்கு கொண்டு போவினமாம். அது போல இவருக்கு ஆகாமல் இருக்க கடவுளை வேண்டுகிறேன். நீடூழி வாழவும் வாழ்த்துகின்றேன். :D:)

நடிகர் சிறீக்காந்தும் உதாலதான் கொஞ்சா நாள் அலறிக்கொண்டு திரிஞ்சவர்..

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்தி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சிறீக்காந்தும் உதாலதான் கொஞ்சா நாள் அலறிக்கொண்டு திரிஞ்சவர்..

அவர் மட்டுமல்ல.. பிரசாந்தின் நடிப்பே அவரின் திருமணத்திற்கு பிறகு ஏறக்குறைய அஸ்தமனமாகி விட்டது. பிரபுதேவா அப்படி. மீண்டும்.. அவர் மீள சில ஆண்டுகளானது. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

சார்க்கிரட்டிஸ் காலத்தில் இருந்து இது தொடர் கதை. :D:)

Edited by nedukkalapoovan

அவர் மட்டுமல்ல.. பிரசாந்தின் நடிப்பே அவரின் திருமணத்திற்கு பிறகு ஏறக்குறைய அஸ்தமனமாகி விட்டது. பிரபுதேவா அப்படி. மீண்டும்.. அவர் மீள சில ஆண்டுகளானது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். :D:)

நெடுக்கர் பட்டாலும் திருந்தாத சமூகமப்பா இது... :(

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் பட்டாலும் திருந்தாத சமூகமப்பா இது... :(

திருமணம் என்பது ஒரு மீள முடியாத போதை. அதற்கு அடிமையாக பலர் இயற்கையாகவே துடித்துக் கொண்டிருப்பதால்.. திருந்தவோ திருத்தவோ வாய்ப்பில்லை. அனுபவப்பட்டு திருந்தினாலே தவிர..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது ஒரு மீள முடியாத போதை. அதற்கு அடிமையாக பலர் இயற்கையாகவே துடித்துக் கொண்டிருப்பதால்.. திருந்தவோ திருத்தவோ வாய்ப்பில்லை. அனுபவப்பட்டு திருந்தினாலே தவிர..! :D:)

திருமணம் என்பது மனிதன் கடந்து செல்ல வேண்டிய பாதை.

அதைத் தாண்டமுடியாமல் தவிப்பவர்கள் எப்போதுமே தவிப்புடன் இருப்பார்கள்.

தாண்டியவர்கள் மனிதத்தின் உச்ச நிலையை அடைந்து விடுகின்றார்கள். :rolleyes:

நடிகர் சிவகுமார் அரசியலையும் மீறி ஈழத்தவர்கள் மீது கரிசனை கொண்டவர்.

அவர் பிள்ளைகளும் அப்படியே. அவர்கள் பணி தொடரட்டும்.

வாழ்த்துகள்

திருமணம் என்பது ஒரு மீள முடியாத போதை. அதற்கு அடிமையாக பலர் இயற்கையாகவே துடித்துக் கொண்டிருப்பதால்.. திருந்தவோ திருத்தவோ வாய்ப்பில்லை. அனுபவப்பட்டு திருந்தினாலே தவிர..! :D:)

நானும் கொஞ்ச நாள் கலியாண ஆசையில அலைஞ்சிருக்குறன்..இப்ப அநுபவப்பட்டு திருந்தி மனுசனாகிட்டான்..நெடுக்ச் சொன்னமாதிரி உது ஒரு போதை கண்டியலோ..உது பட்டுத்திருந்த வேண்டியது..

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது மனிதன் கடந்து செல்ல வேண்டிய பாதை.

அதைத் தாண்டமுடியாமல் தவிப்பவர்கள் எப்போதுமே தவிப்புடன் இருப்பார்கள்.

தாண்டியவர்கள் மனிதத்தின் உச்ச நிலையை அடைந்து விடுகின்றார்கள். :rolleyes:

நடிகர் சிவகுமார் அரசியலையும் மீறி ஈழத்தவர்கள் மீது கரிசனை கொண்டவர்.

அவர் பிள்ளைகளும் அப்படியே. அவர்கள் பணி தொடரட்டும்.

வாழ்த்துகள்

சாறி... திருமணம் என்பது ஒரு ஆணுக்கு பெண்ணையோ அல்லது பெண்ணுக்கு ஆணையோ கூட்டிக் கொடுக்கும் ஒரு நிகழ்வு என்று பச்சையாகச் சொல்லலாம். இதனை எல்லா உயிரினங்களும் சடங்கு சம்பிரதாயத்திற்கு அப்பால் செய்து முடிக்கின்றன. மனிதன் சடங்கு வைத்து செய்து முடிக்கிறான். அவ்வளவும் தான் வேறுபாடு. அதனால் மனிதம் எப்படி உச்சம் பெறுகிறது என்பது எனக்குப் புரியல்ல. அப்படி உச்சம் பெறுவதாக இருந்தால் திருமணமானவர்கள் உள்ள இந்த உலகில் மனிதம் உச்சம் பெற்றிருக்க வேண்டும். திருமணமாகாதவர்களைக் காட்டிலும் திருமணமானவர்களே மிகக் கொடிய தலைவர்களாகவும்.. மனிதத்தை சிதைத்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதம் வளர்த்ததில் அதிகம் பேசப்படுவர்கள்.. ஜேசு.. விவேகானந்தர்.. அன்னை தெராசாவா.. மகிந்த ராஜபக்ச.. ஹிட்லரா.. ஜோர்ஸ் புஷ்சா...???! :lol::D

புத்தர் கூட சம்சாரியாக இருக்கும் போது பெறாத ஞானத்தை.. அதைத் துறந்த பின் தான் அடைந்தார். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப லிவிங் 2 கெதர் நல்லம் எண்டு சொல்லுறிங்களா நெடுக்ஸ் அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப லிவிங் 2 கெதர் நல்லம் எண்டு சொல்லுறிங்களா நெடுக்ஸ் அண்ணா?

திருமணத்தைக் காட்டிலும்.. இதில் கூடிய புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே இணைய முடியும். ஏனெனில்.. அங்கு சட்டமோ.. சடங்கோ சமூகமோ.. முடிவுகளை தீர்மானிக்காது. இரண்டு மனங்கள் மட்டுமே தீர்மானிக்கும். சட்ட சிக்கல்களும் இல்லை. மிகவும் இயற்கையானது.. கூடிய சுதந்திரத்தைக் கொண்டது என்று நினைக்கிறேன்.

நானும் சிறுவயதில்.. எமது சமூகத் திருமணங்களை நினைச்சு பெருமைப்பட்டிருக்கிறன். கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் இப்போ பார்த்தால்.. திருமணங்கள்.. காதல் என்று எல்லாமே.. படிப்பு.. காசு.. விசா.. வீடு.. கிரடிட் காட்.. ஏவல் வேலை செய்யும் அடிமை... இப்படி என்று தான் தீர்மானம் ஆகுது.

இப்படி ஒரு நிலையில் திருமணம் என்பதைக் காட்டிலும் லிவிங் ருகெதர் எவ்வளவோ மேல். ஒட்டாட்டி வேண்டிய போது விட்டிட்டும் போகலாம்... ஒட்டினா ஆயுள் பூராவும் வாழவும் முடியும். கோட்.. டிவேரஸ் என்றெல்லாம் அலையத் தேவையும் இல்லை. :D:)

Edited by nedukkalapoovan

திருமணத்தைக் காட்டிலும்.. இதில் கூடிய புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே இணைய முடியும். ஏனெனில்.. அங்கு சட்டமோ.. சடங்கோ சமூகமோ.. முடிவுகளை தீர்மானிக்காது. இரண்டு மனங்கள் மட்டுமே தீர்மானிக்கும். சட்ட சிக்கல்களும் இல்லை. மிகவும் இயற்கையானது என்று நினைக்கிறேன்.

நானும் ஒரு காலத்தில் எமது சமூகத் திருமணங்களை நினைச்சு பெருமைப்பட்டிருக்கிறன். ஆனால் இப்போ பார்த்தால்.. திருமணங்கள்.. காதல் என்று எல்லாமே.. படிப்பு.. காசு.. விசா.. வீடு.. கிரடிட் காட்.. ஏவல் வேலை செய்யும் அடிமை... இப்படி என்று தான் தீர்மானம் ஆகுது.

இப்படி ஒரு நிலையில் திருமணம் என்பதைக் காட்டிலும் லிவிங் ருகெதர் எவ்வளவோ மேல். ஒட்டாட்டி வேண்டிய போது விட்டிட்டும் போகலாம்... ஒட்டினா ஆயுள் பூராவும் வாழவும் முடியும். :D:)

எங்கட திருமணங்களெல்லாம் சுயலத்துக்கு நடக்கிறது..வசதியான மாப்பிள்ளை வீடுவாசலோட நல்ல ஜொப்புடன் இல்லாட்டி வெளி நாட்டு மாப்பிள்ளை எண்டு தாங்கள் வசதியா வாழுறதுக்கு பாத்துப் பாத்து நடக்கிறதுதான் எங்கட கலியாணம்கள்...இதில எங்கயாம் புரிந்துணர்வு இருக்கு..? முழுச்சுயநலம்தான் இருக்கு...எழுத்துக்கொப்பியை காட்டி ஆயுசு பூரா குடும்பம் எண்டு சொல்லி அடைச்சு வச்சிருக்கிற குறுக்குவழிதான் உது கண்டியளோ... பிறகு புள்ளைகுட்டி புறந்தவுடன ஜெயில ஆயுசுக்கும் திறக்கேலாது... :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் படி வெள்ளை கார திருமணங்கள் எல்லாம சரா சரியாக 4 ஆண்டுகள் தான் நீடித்து நிற்கிறதாம்.....

பிறகு வார மனைவி மார் புருஷன'ட சொத்துகள ஆட்டைய போட்டிட்டு போகவேண்டியது தான்...வெளிநாடுகளிலே இருக்கின்ற சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு சாதகமா இருக்கிறதால சொத்தும் அவர்கள் பக்கம் போய்டுது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.