Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார்

Featured Replies

அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்ற ஒரு வசனத்தை வைத்தே நடந்த சம்பவங்களை கிடப்பில் போட பண்ணிவிடுவார்கள்.அல்-கைடா என்ற அமைப்பு விருட்சமாக வளர இவர் முக்கிய காரணம்,ஆனால் கடந்த 5,6 வருடங்கள் இவர் செயலற்றே இருந்தார்.

  • Replies 91
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்ற ஒரு வசனத்தை வைத்தே நடந்த சம்பவங்களை கிடப்பில் போட பண்ணிவிடுவார்கள்.அல்-கைடா என்ற அமைப்பு விருட்சமாக வளர இவர் முக்கிய காரணம்,ஆனால் கடந்த 5,6 வருடங்கள் இவர் செயலற்றே இருந்தார்.

மூன்று மனைவி உள்ளவர், வடிவாக செயலாற்றுவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது தானே........ :lol:

  • தொடங்கியவர்

"இஸ்லாமிய மக்கள் மத்தியில் அல்-கைடவுக்கு அதிகம் ஆதரவு இல்லை" என கனடாவின் அரசியல் ஆய்வாளர் கூறினார். காரணம் அதிகளவில் மக்கள் இன்று தொழுகை மிடுந்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்ற கூற்றை அதற்கு ஆதாரமாக வைத்தார். மேலும், துனிசியா தொடக்கம் எகிப்து வரை மக்கள் வேறு வழிகள் மூலம் சர்வாதிகாரிகளை தூக்கி எறிந்துள்ளனர் என்பதையும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கூறினார்.

அதேவேளை அமேரிக்கா பாதுகாப்பு செயலாளர் இன்று பின்லேடனை அழித்தது ஒரு 'முக்கிய நிகழ்வு' (Game changer) என வர்ணித்தார். ஜோர்ஜ் டபிள்யூ புஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட இவர் இந்த வருடம் அடுத்த மாதம் இந்த பதவியை விட்டு விலகுகிறார். இவர் இடத்திற்கு சி.ஐ.ஏ. அதிகாரி லியோன் பெனரரா நியமிக்கப்படுகின்றார்.

அப்கானிஸ்தான் உட்பட பலநாடுகளில் நடக்கும் சண்டைகள் முடிவுக்கு வரலாம் என சிலர் எத்ர்வு கூறுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்லேடனின் ஐந்தாவது மனைவியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாக். மறுப்பு _

வீரகேசரி நாளேடு 5/7/2011 9:46:14 AM Share

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கமாண்டோ படையினரின் எதிபாராத திடீர் தாக்குதலில் பின்லேடன், அவர் மகன் காலித், ஒரு பெண், மற்றும் இரு உதவியாளர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பின்லேடனின் ஐந்தாவது மனைவி அமய் உயிருடன் பிடிபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமய் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்லேடனின் மனைவி அமய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

ராவல் பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அமய் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராவல்பிண்டி மருத்துவமனையில் இருக்கும் அவரிடம், பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் பற்றிய தகவல்களை பெறுவதற்காக, விசாரணை நடத்த அமெரிக்கா விரும்புகிறது. அதனால், அமெரிக்காவிடம் அமய்யை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளது. அந்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது. __

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கோதாரியாய் கிடக்குது.....

ஒவ்வொரு நாளும், சேவ் எடுக்கிற எனக்கே ஒண்டுதான்... அம்பிட்டது

சேவ் எடுக்காத தாடிக்கு, அஞ்சு மாட்டுப் பட்டுட்டுதா......

இனிமேல்... நானும், தாடி வளக்கப் போறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன கோதாரியாய் கிடக்குது.....

ஒவ்வொரு நாளும், சேவ் எடுக்கிற எனக்கே ஒண்டுதான்... அம்பிட்டது

சேவ் எடுக்காத தாடிக்கு, அஞ்சு மாட்டுப் பட்டுட்டுதா......

இனிமேல்... நானும், தாடி வளக்கப் போறன்.

கவனம் ராசா! சிவனேயெண்டு இருக்கிற ஒண்டும் வெளிக்கிட்டு ஓடப்போகுது.

இப்படிக்கு நலன்விரும்பி

குமாரசாமி

  • தொடங்கியவர்

பின் லேடன் வீடில் இருந்து எடுத்த ஒளிப்பதிவில் ஒரு பகுதி வெளியிடப்பட்டது

Edited by akootha

  • தொடங்கியவர்

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ‘பெல்ஜியன் ஷெப்பர்டு’ நாய்!

ஒசாமாவுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ‘பெல்ஜியன் ஷெப்பர்டு’ நாய்!

ஒசாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்தச் சென்ற அமெரிக்க கடற்படையின் ‘சீல்’ படையினருடன் சிறப்பு பயிற்சி பெற்ற ராணுவ நாயும் உடன் கொண்டு செல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோடாபாத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகே வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடனை, அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப்படையினர் கடந்த ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றனர்.

79 பேர் கொண்ட இந்தப் படையினர் 4 ஹெலிகாப்டர்களி்ல் அங்கு சென்றபோது ராணுவ பயிற்சி பெற்ற German Sheppard ரக நாயையும் உடன் கொண்டு சென்றுள்ளனர்.

பின்லேடன் அருகே இருந்த மலைப் பகுதிக்குள் தப்பியோடினால் அவர் மீது தாக்குதல் நடத்த இந்த நாய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனிதர்களை விட பல மடங்கு வேகமாக ஓடக்கூடியவை இந்த வகை நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீட்டில் வெடிகுண்டுகள் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கவும் இந்த நாய் பயன்பட்டிருக்கும்.

ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் சீல்அதிரடிப்படையினர் இறங்கிய போது, அவர்களுடன் இந்த நாயும் இறக்கப்பட்டது.

இந் நிலையில் ஒசாமைவை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரை அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து விருது வழங்கியுள்ளார். ஆனால், அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அதே போல இந்த நாயின் விவரமும் வெளியிடப்படவில்லை.

இந்த நாய் பெல்ஜியன் மாலினோய்ஸ் அல்லது ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக சீல் படையினரின் செயல்பாடுகளை அமெரிக்கா வெளியுலகுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம் ஊரில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. அதை வழங்குவதற்காக பல கோடி செலவில், நடிகைகளின் நாட்டிய நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐ தலைவர் திடீர் அமெரிக்கா பயணம்:

இந் நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அஹமத் சுஜா பாஷா திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்குள் வந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற விவகாரத்தில் பாஷா பதவி விலகுவார் என்று கூறப்படும் நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் பெறுகிறது

http://www.alaikal.com/news/?p=68568

தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அந்த அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. நிச்சயம் இது நல்ல செய்திதான், அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல... உலகுக்கே!

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்டு, ஒசாமாவை அழித்தே விட்டது அமெரிக்கா. ஆனால், ஒசாமா எப்படி உருவானார்?

'ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடன்’- இதுதான் ஒசாமாவின் முழுப் பெயர். பிறந்த இடம் ரியாத், சவுதி அரேபியா. பிறந்த நாள் மார்ச் 10, 1957. ஒசாமாவின் தந்தை முஹம்மது பின் அவாத் பின்லேடன் பெரும் பணக்காரர். சவுதி அரச குடும்பத் தோடு மிக நெருக்கமான உறவுவைத்து இருந்த முஹம்மது பின் அவாத் பின்லேடனுக்கு, ஏராளமான மனைவிகள். அவர்களில் 10-வது மனைவியான ஹமிதாவுக்கு ஒசாமா பிறந்தார். தந்தையின் 54 பிள்ளைகளில் 17-வது பிள்ளை ஒசாமா!

செல்வச் செழிப்பான சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ஒசாமாவின் இளம் பருவம், உறவுகள் சார்ந்து சந்தோஷமாக இல்லை. காரணம், ஒசாமா பிறந்த சில காலத்திலேயே அவருடைய பெற்றோர் பிரிந்தனர். பிறகு, அல் அத்தாஸ் என்பவரை மணந்தார் ஹமீதா. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளோடு, மாற்றாந் தகப்பன் சூழலிலேயே வளர்ந்தார் ஒசாமா. சின்ன வயதிலேயே மதத்தின் மீது அவருக்குப் பெரிய ஈடுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.

கல்லூரி நாட்களில் ஒசாமாவுக்குப் பொருளாதாரம் மீது பெரிய நாட்டம் இருந்தது. பொருளாதாரமும் மேலாண்மைக் கல்வியும் அவர் கற்றதாகச் சொல்லப் படுவது உண்டு. பின்னாட்களில், ஒசாமா சிவில் இன்ஜினீயரிங்கும், மக்கள் நிர்வாகமும் படித்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு. ஒசாமாவின் 17-வது வயதில் அவருக்கு முதல் திருமணம் நடந்தது. முதல் மனைவியின் பெயர் நஜ்வா. பிறகு, ஒசாமா மேலும் நால்வரை மணந்தார். மொத்தம் அவருக்கு 25 பிள்ளைகள் இருப்பதாகச் சொல் கிறார்கள்!

ஒசாமாவை ஆயுத அரசியலை நோக்கியும் மத அடிப்படைவாத அமைப்பியலை நோக்கியும் தள்ளியது, ஆஃப்கன் மீதான சோவியத் ஒன்றியத்தின் தாக்குதல். அப்துல்லா அஸாமுடன் சேர்ந்து 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் செயல்படத் தொடங்கினார் ஒசாமா. தொடக்கத்தில், பெஷாவரில் இருந்தவாறு ஆஃப்கன் போருக்கான நிதியைக் குவித்துத் தருவதிலும் ஆயுதங்களை வாங்கித் தருவதிலும் ஒசாமா ஈடுபட்டு இருந்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக இதே அமெரிக்கா அந்த நாட்களில் ஒசாமாவுக்குப் பணம் கொடுத்தது. ஒரு கட்டத்தில் 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் இருந்து பிரிந்தார். இன்னும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது அவர் உருவாக் கியதுதான் 'அல்-கொய்தா’!

தொடக்கத்தில் அல்-கொய்தாவின்நோக்கம், சுதந்திர ஆஃப்கனை உருவாக்குவதாகவே இருந்தது. 1989-ல் சோவியத் படைகள் ஆஃப்கனில் இருந்து வெளியேறியதும், ஒசாமா அரேபியா திரும்பினார். சிறிது காலம் அல் -கொய்தா அடங்கி இருந்தது. குவைத் படை எடுப்பைக் காரணம் காட்டி, இராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், அரபு உலகம் அமெரிக்கா வசமாகிவிடும் என்பதை ஒசாமாவுக்கு உணர்த்தியது. 'எதுவாக இருந்தாலும், நமக்குள் பேசிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் அல்லாதோருக்கு உதவ வேண்டாம்!’ என்று அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஒசாமா. இதற்காக சவுதி மன்னரையும் சந்தித்தார். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாக இறங்கியது அல்-கொய்தா.

1990-களிலேயே அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான 'எஃப்.பி.ஐ.’ அல்-கொய்தாவைக் கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டது. சதித் திட்டங்கள் பின்னணியில் பலர் பிடிபட்டனர். 1993-ல் உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின் அமெரிக்கா அல்-கொய்தாவைப் பின்தொடர ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் சவுதிக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கினார் ஒசாமா. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக 1992-ல் ஏமனுக்குச் சென்றார். அங்கே இருந்து அரபு நாடுகளில் செயல்படும் எல்லாத் தீவிரவாத அமைப்புகளுடனும் அவர் கை கோக்க, தொடர்ந்து சூடான், எகிப்து, லிபியா எனப் பல்வேறு நாடுகளாலும் தேடப்படும் நபராக 1996-ல் ஆஃப்கனின் ஜலாலாபாத்துக்கு வந்தார் ஒசாமா. முல்லா உமருடன் கை கோத்தார்.

தாலிபன்கள் ஆண்ட-முல்லா உமர் காலத்திய ஆஃப்கன்தான், ஒசாமாவின் கனவு தேசம். மக்களைக் கற்காலத்துக்குத் திரும்ப அழைத்துச் சென்ற அந்த ஆஃப்கன்தான், 'உலகின் ஒரே இஸ்லாமிய நாடாகச் செயல்படு கிறது!’ என்று ஒசாமா சொன்னார்.

அமெரிக்காவில் 2001 அல்- கொய்தா நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் தேடப்படும் நபர் ஆனார் ஒசாமா. உலகெங்கும் 'ஜிஹாதி’ என்ற சொல் பிரபலமானது. கடவு ளின் பெயரால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்; எவ்வளவு பயங்கரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றலாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு எல்லாம் முன்னோடி ஒசாமாதான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்தது அமெரிக்கா. 2007-ல் இந்தத் தொகை 50 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஒசாமாவைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தேடல் வேட்டை, பாகிஸ்தானின் அப்போடாபாத்தில் நடந்த இறுதித் தாக்குதலில் வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது!

ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதுதான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’! ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன, ஈழப் போராட்டம் உட்பட!

''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''

- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.

''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''

- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.

அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?

Vikatan.com

  • தொடங்கியவர்

மூவாயிரம் மக்களை கொன்ற பின்லாடனுக்கு உலகம் நீதி கேட்டது.

நாற்பதினாயிரம் மக்களுக்கு மேலாக மக்களை கொன்ற மகிந்தருக்கும் உலகம் நீதி தரவேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமாவின் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் ஒவ்வொரு ஒசாமாக்கள் உருவாகுவர்: ஜமாட்- ஈ- இஸ்லாமி _

வீரகேசரி இணையம் 5/9/2011 4:48:31 PM

பாகிஸ்தானின் அனுமதியின்றி அந்நாட்டில் இராணுவ நடவடிக்கையொன்றை நடத்தியன் மூலம அமெரிக்க படைகள் அந்நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டதாக ஜமாட்- ஈ- இஸ்லாமி அமைப்பின் தலைவர் முனாவர் ஹஷன் தெரிவித்துள்ளார்.

முன்னறிவிப்பின்றி அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியமையையும் ஒசாமா மற்றும் அவரது சகாக்களை சுட்டுக்கொன்றமைக்கும் அவர் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஒசாமாவின் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் ஒவ்வொரு ஒசாமாக்கள் உருவாகுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள் தங்களது பாரபட்சமான நடவடிக்கைகளை நிறுத்தாவிடின் இத்தகைய நிலைமை தொடரும் என அவர் சூளுரைத்துள்ளார்.

"செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் தாக்குதலை நடத்திவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தியை ஆப்கானிஸ்த்தானில் அல்கைடா ஆதரவாளர்கள் கொண்டாடினராம். அதற்க்கும் பின்லாடன் கொல்லப்பட்ட போது அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடியதற்க்கும் என்ன வித்தியாசம்?" இப்படிக் கேட்கிறார் றிச்சார்ட் இவன்ஸ் (Richard Evans).

உண்மைதான், 1995 இல் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த அவலத்தையும், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் கொழும்பில் வெடி கொழுத்திக் கொண்டாடிய சிங்களவர்கள் இதில் எந்த வகையில் அடங்கும்?

For every action, there is a reaction

By Richard Evans | Editor's Corner – Mon, May 9, 2011

It has been one week since Britain awoke to the news that Osama bin Laden had been shot and killed by US military forces in Pakistan.

At around 6am last Bank Holiday Monday I was called by our Australian news desk who informed me of the news. Stumbling from my bed to the lounge, still half asleep and with the remnants of an enjoyable Sunday evening taking revenge on my skull, I was struggling to process the notion of putting one foot in front of the other let alone news that the world's most notorious terrorist had been killed.

The first thing I did was fire up my laptop to begin what would be a very long day. The second thing, as I slowly became a functioning human being again, was to switch on BBC News. I was greeted by live footage from outside the White House of what was effectively a street party. People up and down America had come out of their homes to celebrate Osama bin Laden's death.

As a nation rejoiced I looked on with mixed emotions; satisfied as the news of bin Laden's death began to sink in but I also felt surprised and somewhat uncomfortable at the reaction of the American people. I was in London when the 7/7 bombs struck and saw first-hand the terror and destruction al-Qaeda not only inflicted, but revelled in. So it is fair to say that I hated bin Laden to the core and was glad the world was rid of him… but all the same, I didn't feel the need to don my party hat. My mood was one of relief and that justice had finally been done, not jubilance, but perhaps that's just me.

Shortly after the 9/11 terrorist attacks we were shown footage in Afghanistan of al-Qaeda supporters celebrating the news of thousands of American civilians being killed. Watching this I felt sick. How could anyone in the modern world find joy in such barbarism? The one thing that did do though was to galvanise every person and every government around the world with a sense of morality into hating al-Qaeda.

As I watched the American crowds holding posters which read 'Obama 1, Osama 0' and chanting 'USA, USA, USA' I was disappointed that they had sunk down to their enemies' level in celebrating death — even if it was the world's most despicable human. We know we are better than al-Qaeda but that doesn't mean we should stop showing it. As Paddy Ashdown said last week, it is exactly for the reason that we continuously do show it that makes us better than them in the first place.

In Barack Obama's speech he declared the world is now a safer place. It isn't. Just as we were galvanised following 9/11 and 7/7 al-Qaeda will be galvanised in its hatred for us more than ever now that westerners have revelled in its leader's death. Two days later security officials both here and in the US stated that they expect more terrorist attacks in the wake of bin Laden's death.

For every action there is a reaction; bin Laden got his reaction but we shouldn't be so naive to think that there won't be one for us. This was a small victory in a war that will never be won.

Article link

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் தவறி விழுந்த ஒசாமாவின் பிரேதம்:

செவ்வாய், 10 மே 2011 09:18

ஓசாமாவை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க ராணுவம் அவரின் உடலை கடலில் வீசியமை யாவரும் அறிந்த விடயமே. தற்போது அதன் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. இதில் இரு இராணுவவீரர்களுடன் ஒசாமாவை ஏற்றிச்சென்ற வானூர்தி கடலின் மேற்பரப்பில் வேகமாக பறந்துகொண்டிருக்கையில் சீற் பெல்ட் அணியாமல் இரத்தக்கறை படிந்த வெள்ளைத்துணியால் சுற்றிக்கட்டப்பட்ட ஒசாமா பிரேதம் வீசி எறிய முதலே கடலில் தவறி விழுந்துள்ளமை பதிவாகியுள்ளது.

http://tamilenn.com/index.php?option=com_content&view=article&id=20977:2011-05-10-03-50-29&catid=81:2009-12-16-11-20-08&Itemid=458

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா புரளியை கிளப்பாதீங்கப்பா.....

ஒரு செத்த உடலை.... திறந்த உலங்குவார்தி பறக்கும் போது........ சீற் பெல்ட் போடாமல் விளிம்பிலையா வைத்துக் கொண்டு பறப்பார்கள்.

வெள்ளைச்சீலையால் கட்டி வைக்கப் பட்டிருக்கும், உடலின் கையும், காலும் வெளியே தெரிகின்றது.

அந்த நிறம் வெள்ளைக்காரனின் நிறமாக உள்ளது. ஓசாமாவின் நிறம் வேறை. இது ஜில்மால் பண்ணி எடுத்த வீடியோ காட்சியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமா கொல்லப்பட்டவேளை மகன் தப்பிச்சென்றதாக தகவல் _

வீரகேசரி இணையம் 5/11/2011 3:43:55 PM Share

அல் - கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவரான ஒருவரான ஒசாமா பின்லேடனின் இளைய மகனான ஹம்சா பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டில் தனது தந்தை அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவேளை தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஒசாமாவின் மூன்று மனைவிகளே இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இவர் அபோடாபாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

எனினும் கொல்லப்பட்டது ஹம்சா இல்லையெனவும் அது அவரின் சகோதரரான (22) காலிட் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹம்சா பின்லேடன் (19) அல் கொய்தா இயக்கத்தின் இளவரசராக வர்ணிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. __

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் தவறி விழுந்த ஒசாமாவின் பிரேதம்:

செவ்வாய், 10 மே 2011 09:18

ஓசாமாவை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க ராணுவம் அவரின் உடலை கடலில் வீசியமை யாவரும் அறிந்த விடயமே. தற்போது அதன் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. இதில் இரு இராணுவவீரர்களுடன் ஒசாமாவை ஏற்றிச்சென்ற வானூர்தி கடலின் மேற்பரப்பில் வேகமாக பறந்துகொண்டிருக்கையில் சீற் பெல்ட் அணியாமல் இரத்தக்கறை படிந்த வெள்ளைத்துணியால் சுற்றிக்கட்டப்பட்ட ஒசாமா பிரேதம் வீசி எறிய முதலே கடலில் தவறி விழுந்துள்ளமை பதிவாகியுள்ளது.

http://tamilenn.com/index.php?option=com_content&view=article&id=20977:2011-05-10-03-50-29&catid=81:2009-12-16-11-20-08&Itemid=458

அடக் கண்றாவியே.. :D

இருக்கைப் பட்டியை அணியுங்கள் எண்டு சொல்லுறாங்கள் விளம்பரத்தில.. இதை சீரியசா எடுத்திட்டீங்களே..! :lol:

.

தமிழ் ஊடகங்களின் நிலமை.. :lol: :lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.