Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? - சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன்

Featured Replies

... இங்கு கிணறு வெட்ட ... பூதம் கிளம்புகிறது ...

.... ம்ம்ம்ம் ... நெல்லை, அமைதி பிளீஸ் ...

... இல்லை, ஏறியிருந்து மொட்டை அடித்து சந்தணம் தடவ ஒரு கூட்டம் ...

... பிளீஸ் நெல்லை, பிளீஸ்! ....

... இல்லை, பூசனிக்காயை, ஒரு பிடி சோத்துக்குள் மறைக்க ஒரு கூட்டம் ...

... ஐயோ, வேண்டாம் நெல்லை!!! நீ எந்தப்பக்கத்திலும் பிரட்சனைகாரந்தான்!!! நிறுத்து ...

.... இல்லை, பல புள்ளிகளை தொடுத்து கோடு கீற, தலை கிறு கிறுக்குது!!! ....

... நெல்லை, இதுக்கு மேல் வேண்டாம்!! நான் இங்கு நிற்கத்தான், உமக்கு உந்தக்கதையெல்லாம் தொடர்ந்து வருகிறது?? நான் போய் வருகிறேன், மீண்டும் சந்திப்போம்!!!! ... :o

நெல்லியடியான் கிணற்றை வெட்டினால் பூதமும் கிளம்பாது பூதத்ததை வெட்டினாலும் கிணறும் கிளம்பாது. எனது நண்பன் ஒருவன் சொன்னான் அது அப்படி நடந்தென்று இன்னொருவரை சந்திருந்தேன் அவர் சொன்னார் இது இப்படி நடந்ததென்று. இதோ வெகு விரைவில் அனைவரது முகமூடியும் கிழியும். இதோ விரைவில் அனைத்து விடங்களையும் சொல்வேன். இதோ விரைவில் ;.நெல்லியடியான் உங்களிற்கே அலுத்துபோகவில்லையா அதே பழைய பூசணிக்காய் அதே பழைய சோறு. எதையாவது சொல்லுங்கள்.முழுதாய்;. அதற்காக இங்கும் பாண்டரை இழுக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு உணர்வு பூர்வமான கவிஜன்,,

அவர் கடைசியாக முள்ளி வாய்க்காலில் இருந்த கொடுத்த பேட்டி இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது! இன்று வரை மனத்தில் உறுத்திக் கொண்டும் இருக்கின்றது!!!

'புலம் பெயர் உறவுகளுக்கு, இது தான் எமது கடைசி வேண்டுகோள்! சில வேளைகளில் இதுவே எமது கடைசிப் பேச்சாகவும் இருக்கலாம்!!!"

கடைசி வரை, அவரது நம்பிக்கையை அவர் கை விடவே இல்லை!!!

இணைப்புக்கு நன்றிகள் நிழலி!!!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம்வரை இலங்கையின் சிறைச்சாலைகள மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக டி யு குணசேகரா இருந்தார் அவருடனான எமது தனிப்பட்ட தொடர்புகளை வைத்து நாம் எமதுமக்களிற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம் அவை செய்திகளாகவும் வெளிவந்திருந்தது. அதுபற்றிய ஒரு செய்தி யாழிலும் இணைத்திருந்தேன்.இணைப்பு இங்கே .அப்படியாக காலகட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த கைது செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் ஒன்றினை குணசேகரா அவர்களிடம் கொடுத்து அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்களா??அப்படி தடுத்து வைக்கப்பட்டிருந்தால் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என விபரம் தரும்படி கேட்டிருந்தோம். அந்தப் பெயர் பட்டியலில் புதுவை இரத்தின துரையின் பெயரும் இருந்தது. எமக்கு அவர்தந்த பதில் உயிருடன் இருப்பவர்கள் பட்டியல்களின் புதுவையின் பெயர் இல்லை அவர்இறந்து விட்டார் அவரது உறவினர்கள் தொடர்புகொண்டால் அவரின் மரணச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.அதே நேரம் அவர் எப்படி இறந்தார் எங்கு இறந்தார் என்கிற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சு சம்பத்தப்பட்டது அதற்கு தன்னால் எதனையும் சொல்லமுடியாது என்று விட்டார். அந்தச் செய்தியை புதுவையின் குடும்பத்தினரிற்கும் தெரிவித்திருந்தோம். ஆனாலும் அவர்கள் மீண்டும்ஒரு முயற்சியாக டக்லஸ் தேவானந்தா ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் விசரித்திருந்தார்கள். அவர்களிற்கும் மரணச்சான்றிதழ் தரலாம் என்கிற பதிலே கிடைத்தது. அத்துடன் அவர்களும் தேடும் முயற்சிகளை கைவிட்டுவிட்டனர். எனவே புதுவை உயிருடன் இல்லையன்பது உறுதியாகிவிட்டது. அதுக்காக புதுவை இறந்துவிட்டார் என்று நீ எப்படி சொல்லலாம அவர் இறக்கவில்லை எங்கள் மனங்களில் வாழ்கிறார்; என என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம். அமைச்சர் சொன்ன தகவலை இங்கு எழுதினேன். அடுத்ததாய் சகாராநீங்கள் கேள்விப்பட்ட சூட்சுமத்தையும் இங்கு சொன்னால் நாங்களும் அங்காந்து அண்ணாந்து வாய்திறந்து கேட்போமில்லை...மற்றும் என்னை விளக்கு அளவிற்கு உயர்த்தி எழுதியதற்கு நன்றிகள்.விளக்குமாறு என்று எழுதியிருந்தாலகூட பரவாயில்லை. முடிந்தால் ஒரு அஞ்சலிக்கவிதை எழுதிப் போடுங்கள்.

என்ன சாத்திரியண்ணை உங்களுக்கெல்லாம் அஞ்சலிக்கவிதை எழுதும் தகுதி எனக்கில்லை அதை அங்கீகாரம் பெற்ற கவிஞர்கள் எழுதுவார்கள். நீங்கள் அண்ணாந்து பார்க்கவேண்டும் என்றால் உங்களுடைய சிற்றிவேசனைப்பார்க்கும் போது கனக்க எழுதலாம் போல் இருக்கிறது. ஆனால் எழுதமாட்டேன். எனக்குள்ளே நிறைய உண்மைகள் இருக்கின்றன. அவை ஊமையாக இருக்கின்றனவே அன்றி உறங்கி விடவில்லை. இப்போதைக்கு நான் மௌனமாய் இருப்பது தீமைக்கு உரியதாக இருந்தாலும் அதற்குள்ளும் நன்மைகள் அடங்கி இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை பலர் இவ்விடயத்தில் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்திருந்தார்கள். நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டபோது உங்களுக்கு அவ்விடயம் தெரிந்திருந்தது. உங்களால் அதை மறுக்க முடியாது. அப்படி இருந்தும் நீங்கள் அம்முயற்சி எடுக்கும் உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினீர்களா என்று நானறியேன். தற்சமயம் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுடன் தொடர்பு கொண்டு மிகுதிப்பதிவை இங்கு பதிவிடுகிறேன். நான் என்னுடைய ஆரம்பப்பதிவில் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை ஆனால் நீங்கள் இங்குள்ள பலரை ஏளனப்படுத்தினீர்கள். நீங்கள் ஏளனிக்குமுன் உங்களால் வலிந்து மறைக்கப்பட்டிருக்கும் விடயங்கள் உங்களை ஏளனப்படுத்த வெளிவரும் என்பதையும் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும்.

:) :)

சுமங்களா, .... எங்கேயோ நொக் பண்ண, எங்கெல்லாம் வலிக்கிறது!! ... இதற்குள் ஏன் புலனாய்வுத்துறையினரை(முன்னால் புலிப்புலனாய்வுத்துறை, இன்னால் சிறிலங்கா புலனாய்வுத்துறை) இழுக்கிறீர்கள்???? ... இல்லை, அவர் தான் இங்கு உங்களெல்லோரையும் இயக்குகிறார் என்பதை சொல்ல வருகிறீர்களா???? ... எத்தனை நாளைக்கு முதலைக்கண்ணீர் விடப் போகிறீர்கள் தெரியவில்லை???? ...

****** .......... **************...

... தயவுசெய்து உந்த முதலைக்கண்ணீர் விடுவதை நிறுத்துங்கள் ... இல்லை உங்களை யாரென்று கூறிச் செயற்படுங்கள்!! ... பூனை பாலைக் குடிக்கும் போது, பூலோகம் இருண்டு விட்டது என நினைக்குமாம், அது கண்களை மூடிக்குடிப்பதனால் ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரியண்ணை உங்களுக்கெல்லாம் அஞ்சலிக்கவிதை எழுதும் தகுதி எனக்கில்லை அதை அங்கீகாரம் பெற்ற கவிஞர்கள் எழுதுவார்கள். நீங்கள் அண்ணாந்து பார்க்கவேண்டும் என்றால் உங்களுடைய சிற்றிவேசனைப்பார்க்கும் போது கனக்க எழுதலாம் போல் இருக்கிறது. ஆனால் எழுதமாட்டேன். எனக்குள்ளே நிறைய உண்மைகள் இருக்கின்றன. அவை ஊமையாக இருக்கின்றனவே அன்றி உறங்கி விடவில்லை. இப்போதைக்கு நான் மௌனமாய் இருப்பது தீமைக்கு உரியதாக இருந்தாலும் அதற்குள்ளும் நன்மைகள் அடங்கி இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை பலர் இவ்விடயத்தில் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்திருந்தார்கள். நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டபோது உங்களுக்கு அவ்விடயம் தெரிந்திருந்தது. உங்களால் அதை மறுக்க முடியாது. அப்படி இருந்தும் நீங்கள் அம்முயற்சி எடுக்கும் உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினீர்களா என்று நானறியேன். தற்சமயம் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுடன் தொடர்பு கொண்டு மிகுதிப்பதிவை இங்கு பதிவிடுகிறேன். நான் என்னுடைய ஆரம்பப்பதிவில் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை ஆனால் நீங்கள் இங்குள்ள பலரை ஏளனப்படுத்தினீர்கள். நீங்கள் ஏளனிக்குமுன் உங்களால் வலிந்து மறைக்கப்பட்டிருக்கும் விடயங்கள் உங்களை ஏளனப்படுத்த வெளிவரும் என்பதையும் கவனத்தில் எடுத்திருக்கவேண்டும்.

சகாரா அக்கா நீங்கள் சாஸ்திரி அண்ணா எழுதியதை தப்பாக விளங்கி விட்டீர்கள் என நினைக்கிறேன்...அவர் கவிதை எழுதச் சொன்னது புதுவை இரத்தினதுரைக்கு தனக்கு அல்ல என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா நீங்கள் சாஸ்திரி அண்ணா எழுதியதை தப்பாக விளங்கி விட்டீர்கள் என நினைக்கிறேன்...அவர் கவிதை எழுதச் சொன்னது புதுவை இரத்தினதுரைக்கு தனக்கு அல்ல என்று நினைக்கிறேன்

நானும்சரியாகத்தான் எழுதியிருக்கிறென் சகாராவும் சரியாகத்தான் எழுதியிருக்கிறார். நான் புதுவைக்கு அஞ்சலிக்கவிதை எழுதச்சொல்லி எழுதியிருந்தேன் ஆனால் சகாரா எனக்கு அஞசலிக்கவிதை எழுத விரும்புகிறார் என்பதை எழுதியிருக்கிறார்.சரிதானே சகாரா?? உங்கள் ஆசை ஒருநாள் நிறைவேறும்தானே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம்வரை இலங்கையின் சிறைச்சாலைகள மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக டி யு குணசேகரா இருந்தார் அவருடனான எமது தனிப்பட்ட தொடர்புகளை வைத்து நாம் எமதுமக்களிற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம் அவை செய்திகளாகவும் வெளிவந்திருந்தது. அதுபற்றிய ஒரு செய்தி யாழிலும் இணைத்திருந்தேன்.இணைப்பு இங்கே .அப்படியாக காலகட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த கைது செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் ஒன்றினை குணசேகரா அவர்களிடம் கொடுத்து அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்களா??அப்படி தடுத்து வைக்கப்பட்டிருந்தால் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என விபரம் தரும்படி கேட்டிருந்தோம். அந்தப் பெயர் பட்டியலில் புதுவை இரத்தின துரையின் பெயரும் இருந்தது. எமக்கு அவர்தந்த பதில் உயிருடன் இருப்பவர்கள் பட்டியல்களின் புதுவையின் பெயர் இல்லை அவர்இறந்து விட்டார் அவரது உறவினர்கள் தொடர்புகொண்டால் அவரின் மரணச்சான்றிதழை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.அதே நேரம் அவர் எப்படி இறந்தார் எங்கு இறந்தார் என்கிற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சு சம்பத்தப்பட்டது அதற்கு தன்னால் எதனையும் சொல்லமுடியாது என்று விட்டார். அந்தச் செய்தியை புதுவையின் குடும்பத்தினரிற்கும் தெரிவித்திருந்தோம். ஆனாலும் அவர்கள் மீண்டும்ஒரு முயற்சியாக டக்லஸ் தேவானந்தா ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் விசரித்திருந்தார்கள். அவர்களிற்கும் மரணச்சான்றிதழ் தரலாம் என்கிற பதிலே கிடைத்தது. அத்துடன் அவர்களும் தேடும் முயற்சிகளை கைவிட்டுவிட்டனர். எனவே புதுவை உயிருடன் இல்லையன்பது உறுதியாகிவிட்டது. அதுக்காக புதுவை இறந்துவிட்டார் என்று நீ எப்படி சொல்லலாம அவர் இறக்கவில்லை எங்கள் மனங்களில் வாழ்கிறார்; என என்னுடன் சண்டைக்கு வரவேண்டாம். அமைச்சர் சொன்ன தகவலை இங்கு எழுதினேன். அடுத்ததாய் சகாராநீங்கள் கேள்விப்பட்ட சூட்சுமத்தையும் இங்கு சொன்னால் நாங்களும் அங்காந்து அண்ணாந்து வாய்திறந்து கேட்போமில்லை...மற்றும் என்னை விளக்கு அளவிற்கு உயர்த்தி எழுதியதற்கு நன்றிகள்.விளக்குமாறு என்று எழுதியிருந்தாலகூட பரவாயில்லை. முடிந்தால் ஒரு அஞ்சலிக்கவிதை எழுதிப் போடுங்கள்.

நான் புதுவைக்கு அஞ்சலிக்கவிதை எழுதச்சொல்லி எழுதியிருந்தேன்

ஓ.... சாத்திரி அண்ணை அப்ப புதுவைக் கவிஞர் இப்போது உயிருடன் இல்லை என்பதை அஞ்சலிக்கவிதை எழுதச் சொல்வதன் மூலம் உறுதிப்படுத்துகிறீர்கள்.!

Edited by valvaizagara

<_<

... முன்னால் போராளிகள் என்று சொல்லும் சிலருக்கு ... கேபி அன்ட் கும்பல், பிள்ளையான்/கருணா அன்ட் கும்பல் ... என்ன நடந்தது? எப்படி நடந்தது? யார் இருக்கிறார்கள்? யார் இல்லை? யார் யார் இருந்தும் இல்லை என்பது? ... எல்லாம் அறிவர்!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

நானும்சரியாகத்தான் எழுதியிருக்கிறென் சகாராவும் சரியாகத்தான் எழுதியிருக்கிறார். நான் புதுவைக்கு அஞ்சலிக்கவிதை எழுதச்சொல்லி எழுதியிருந்தேன் ஆனால் சகாரா எனக்கு அஞசலிக்கவிதை எழுத விரும்புகிறார் என்பதை எழுதியிருக்கிறார்.சரிதானே சகாரா?? உங்கள் ஆசை ஒருநாள் நிறைவேறும்தானே :lol:

அடடா நான் தான் இடையில் புகுந்து விட்டேனா மன்னித்துக் கொள்ளுங்கோ <_<

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

’காலனே!

கயிறு என்மேலெறிய

கணக்கெடுக்கின்றாயா நாட்களை?

விரைவில் முடியாதென் கணக்கு.

சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென

உணர்த்துவேன் உனக்கு.

மரண பயமில்லை எனக்கு.

இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட

முகம் மலர்த்தி வரவேற்பேன்.

மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்

பாயருகே அமர்த்தி

பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்

பலமெனக்குண்டு.

என் ‘அப்பு’ எனக்களித்த வரமிது.

சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்

என் ஒப்புதலுடன்

போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்

நானாக உன்னைக் கூவியழைத்து

கூட்டிப்போ என்பேன்

அதுவரை உனக்கு

என் முகவரி எதற்கு?

காலா!

சென்று வேறெவனும்

இழிச்ச வாயன் இருப்பான்

எடுத்துச் செல்.

என்னைத் தான் வேண்டுமெனில்

நானாக உன்னை அழைப்பேன்

அப்போது வா தோழா.’

புதுவை இரத்தினதுரை

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28933

இந்த திரிவேலை செய்யவில்லை.யாரிடமாவது இந்த கவிதை உள்ளதா?புதுவையின் தலைமையில்

எனக்கு மிகவும் பிடித்த வீராவின் அழகான கவிதை வரிகள் ஏனைய கவியர்களும் அழகான கவிதை வடித்திரந்தார்கள்

தலைப்பு இது தான்

சுட்டு விரல் தொட்டுவிடும் தூரத்தை எட்டிவிடும் எங்கள் ஒலி

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை அண்ணாவின் கவிதை வரிகளில் எனக்குப் பிடித்த வரி...

"வேரில் உரம் பாய்ந்த, வீர மரம் சாயாது"

அவரின் இந்த வசனம், குறிப்பிட்ட முழுக் கவிதையும் யாராவது இணைத்து விடுவீர்களா.....

கற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது

தைமகளே! வந்தெம் தலைவாசல் மீதமர்க.

கையோடு உந்தன் கணவன்

ஒளித்தேவன்

சூரியனைக் கூட்டிவந்தெம் சுற்றத்துக்கறிமுகம் செய்.

ஊரிருந்து வேரை உதறி

வெறும் கூடாய்

மூச்சிழுத்துக் கொண்டு முடங்கியுள்ளோம்

எம் தாயே!

பாய்ச்சு உன்விழிப்பார்வை பாவமெலாம் கரையட்டும்.

தஞ்சமென வந்தெம்மைத் தாங்கு

திசையெங்கும்

அஞ்சற்க என்றோர் அசரீரி கேட்கட்டும்.

எந்தத் தடைவரினும் இருப்போம்.

சூழ்ந்திருக்கும்

கங்குல் விடியுமட்டும் களத்தினிலே போரிடுவோம்.

போரில் குதித்த இனம் போர்வையுள்ளே கிடவாது

வேரில் உரம் பாய்ந்த வீரமரம் சாயாது.

சுற்றிவர மூண்டு சுடர்கிறது விடுதலைத் தீ

வேற்றி வருவுக்கு விடிசேவல் கூவுறது.

வந்த பகை சுருண்டு வாலிழக்கும்

‘மகிந்தரது’

கொற்றம் சரிந்து குலையும்

தமிழரது

முற்றம் பூமலர்த்தி முறுவலிக்கும்

புலம் பெயர்ந்து

போன பறவையெல்லாம் புலரியிலே கூடுவரும்.

காண விழிகோடி காணாத பேரழகாய்

மீனகமும்

கோணமலையோடு மன்னாரும்

யாழகமும்

வன்னி நாடதுவும் விலங்கறுக்கும்.

மின்மினியா சூரியனின் முகத்தில் நெருப்பெரிக்கும்?

சின்ன எலிக்குஞ்சா சிறுத்தையினை மண்விழுத்தும்?

வன்னியினை வந்து வளைத்து

அட அந்தப்

'பொன்சேகா' என்ற பொடிப்பயலா வெற்றிகொள்வான்?

வற்றாப்பளையாச்சி வடிவிருக்கும்

அரியாத்தை

முற்றமிது இங்கே முலைசுரத்தல் பாலல்ல

வேழம் படுத்த வீராங்கனை எரிந்து

ஆழம் கிடைக்கின்ற அடங்காமண் பெருவீரம்,

எப்போது வந்து எவன் போருக்கழைத்தாலும்

கற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது.

ஆடிச்சரிந்து எங்கள் ஆலமரம் சரியாது.

கோடி படைவரினும் ‘கோத்தபாய’ கனவொன்றும் வெல்லாது

இங்கே விடுதலைத் தீ அணையாது

உள்ளோடி ஓடி உரம் பெற்ற வேர்களிலே

வெள்ளெலிகள் கடித்து விழுத்திட முடியாது.

நம்பும்

தமிழீழ நடைபயணம் இடையினிலே

தங்கிவிட அல்ல தன்னிடத்தைச் சேர்ந்தவர்க்கே

சூரியன் சூட்டில் சூல்கொண்ட மலையினிலே

காரிருட்டு மேகம் கவியாது

விடுதலையின்

வேரினிலே எந்த வீச எறும்பும் கடியாது.

மீன்பாடும் வாவி மிளிரும்

இரணைமடு வான்பாயும்

கோண வரை மீது முகிலிரங்கும்

பாலாவி நீர்கொண்டு பாடும்

கீரிமலை

ஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.