Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் புலிகள் தொடர்புகளைப் பேணினார்கள் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் புலிகள் தொடர்புகளைப் பேணினார்கள் - குமரன் பத்மநாதன்

24 மே 2011

என்னைக் கொன்ற பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த கால அனுபவங்களில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகள் என இந்த சிறிய தீவில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகவும், நாடுகள் பிளவடைவதனை சர்வதேச சமூகம் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை முன்னெடுக்க முடியாது எனவும், இந்தியா அரசாங்கத்துடன் புலிகள் முறுகலை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் விரக்தி அடைந்ததாகவும், இதனால் மக்களின் ஆதரவு குறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் நிலைப்பாடு, இந்திய எதிர்ப்பு மற்றும் மக்களின் ஆதரவின்மை ஆகிய காரணிகளே யுத்தத்தில் புலிகள் தோல்வியைத் தழுவ ஏதுவாக அமைந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2006ம் ஆண்டில் சுதந்திர போராட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளிடம் பிரபாகரன் கோரிய போதிலும், தனியொரு நாடேனும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமரச தீர்வுகளை நோக்கி நகருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம் எவரும் நன்மை அடையப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் நல்ல யுத்தம் கெட்ட யுத்தம் என்றில்லை எனவும், யுத்தத்தின் போது உயிர்கள் பலியாவது வழமையானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வன்னியில் வாழும் மக்களிடம் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்கள் உணவு, உறையுள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீளவும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது அவ்வாறு யுத்தத்தை மேற்கொள்ள நான் இடமளிக்க மாட்டேன், யுத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் என்னை கொல்ல வேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறினால் புலி உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் தயார் என ஐ.நாவும், வெளிநாட்டு அரசாங்மொன்றும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தெரிவித்திருந்தன.

கப்பல் மூலமாக சிரேஸ்ட விடுதலைப் புலித தலைவர்களை காப்பாற்ற முனைப்பு காட்டப்பட்டது, எனினும் அது காலம் கடந்த முயற்சியாகும்.

இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமாதான பேச்சுவார்த்தைகளை புலிகள் மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி ஆட்சி நடத்திய காலத்தில் இலங்கை அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்பட்டதாகவும், இதனால் இந்தியா இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த ஆர்வம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்யும் திட்டத்தை பிரபாகரனும், பொட்டு அம்மானுமே தீட்டினர் எனவும், புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தவறுக்கு காந்தி குடும்பத்திடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளும், மக்களும் இலங்கை மக்களுக்கு உதவி வழங்க விரும்பினால் ஒரு வாரத்திற்குள் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும், எனினும், தமிழக அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனை பிழையாக வழிநடத்தியதாகவும் இதனால் பிரபாகரன் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய துரித தீர்மானம் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திராவிடக் கொள்கைகளின்அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிராக செயற்பட பிரபாகரன் உந்தப்பட்டதாகவும், இதனால் பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுடன் புலிகள் நெருங்கிய தொடர்பினைப் பேணியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா படித்த புத்திசாலியான ஆட்சியாளர் என குமரன் பத்மநாதன் புகழ்ந்துள்ளார்.

ஜெயலலிதாவினால் வன்னி மக்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வன்னி அநாதரவான சிறுவர் சிறுமியருடன் காலத்தை கழிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

தன்னைக் கொன்றுவிட்ட பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அந்தப் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.அவரது பேட்டியில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:

கே: இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப் படிப் பார்க்கிறீர்கள்?

ப: நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்தெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை. இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை. அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான். இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான். போரின் முதல் அர்த்தமே சாவுதான். போரில் எது முதலில் சாகிறது? உண்மைதான். எல்லா இடத்திலுமே போருக்கு ஒரே பொருள்தான். நல்ல போர் கெட்ட போர் என்று ஒன்றுமில்லை. போர் எப்போதும் எங்கேயும் போர்தான். இங்கே வெற்றி பெறுவதற்காக இரு தரப்புகளும் முடிந்தளவுக்கு முயற்சித்தன. நடக்கிற எல்லாப் போர்கள் தொடர்பிலும் ஐ.நா. அறிக்கை வேண்டும் என்றால் எங்கு போய் முடியும்?போர் முடிந்து விட்டதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் உணர்கிறேன். இதுதான் மிக முக்கியமான புள்ளி. இந்தப் போரில் அரசுதான் வெற்றியாளர்; புலிகள் தோல்வியாளர்கள். ஆனால் தோற்றவர்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் பேர் மிச்சம் இருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் இங்கேதான் வாழ்கிறார்கள், நான் உட்பட. எந்தவொரு போரிலோ தாக்குதலிலோ பங்கெடுக்கவில்லை என்றாலும் நானும்கூட ஒரு விடுதலைப் புலி உறுப்பினன்தான். இந்தப் போரால் யாருக்கு என்ன பயன்? ஒருத்தருக்கும் கிடையாது. மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

கே: ஓ...! அப்படியென்றால்... அடிப்படையில் தமிழர்களுக்கு கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் இவைதான் வேண்டும் என்கிறீர்கள்... இப்போது அவர்கள் வேண்டுவதெல்லாம் இவைதான் என்கிறீர்களா?

ப: அட்சரசுத்தமாக அதுதான். கடந்த 2 வருடங்களாக போர் ஓய்ந்து விட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். சரி! எங்களுக்கு பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் இருக்கின்றனதான். முன்னர் நடந்த பேச்சுக்கள் தோல்விதான். வரலாற்றில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளனதான். ஆனால் எப்போதுமே முடிந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாங்கள் அதனை எதிர்கொண்டுதானாகவேண்டும். இரு தரப்புக்களும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொண்டுதானாக வேண்டும். சேர்ந்து வாழ்வதற்கான (இரு இனங்களும்) வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் என்ன சொன்னீர்களோ அவற்றைத்தான் உண்மையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு வேலை தேவை, அவர்களுக்கு உடுப்புகள் தேவை, அவர்களது குழந்தைகளுக்கு பால் தேவை. அவர்கள் அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள். எனவே இவற்றைத்தான் அனைத்துலக சமூகத்திடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் நானும் கேட்கிறேன். இதன் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றியும் அங்கு யார் எல்லாம் இன்னும் தீவிரத்தனத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விலாவரியாக விளக்குகிறார் கே.பி. தொடர்ந்து...

கே: அப்படியானல், மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றார் அதனை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்கிறீர்கள்... அப்படித்தானே?

ப: நிச்சயமாக! அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.

கே: போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையைக் காப்பாற்றி மீட்கும் நடவடிக்கை ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகள் சில முயன்றன என்பது உண்மை இல்லையா?

ப: உண்மையிலேயே அப்படித்தான். 2009 ஜனவரியில் போரை நிறுத்துவதற்கு நாம் கடுமையாக முயன்றுகொண்டிருந்தோம். போரை நிறுத்த இரவு பகலாக நான் கடும் பாடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக எமது தரப்பிடம் இருந்து கடைசிக் கணம் வரை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் நான் எதிர்பார்ப்புக்களை இழந்து விட்டேன். கடைசித் தருணத்தில், மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம்... அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் ஐரோப்பிய நாடு ஒன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள்.

கே: எந்த நாடுகள்?

ப: சரியாகச் சொன்னால் ஐ.நாவும் மற்றொரு நாடும். அந்த நாட்டின் பெயரைக் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் அது ஒரு ஐரோப்பிய நாடு.

கே: மீட்டுச் செல்ல அவர்கள் முயற்சித்தார்களா?

ப: ஆம்! மீட்டுச் செல்லத்தான் அவர்கள் முயன்றார்கள். ஆனால் எல்லாம் காலம் கடந்திருந்தது. 2009 ஜனவரியில் இருந்து எல்லா விடயங்களிலும் எல்லா வழிகளிலும் நாம் ஒவ்வொரு தருணத்திலும் தாமதித்துக் கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன்.

source:GTN>

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுடன் புலிகள் நெருங்கிய தொடர்பினைப் பேணியதாக அவர் தெரிவித்துள்ளார்.

... ஜெயலலிதாவை குழப்ப, இந்த பச்சோந்தியை களமிறக்கி உள்ளது சிங்களம்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... ஜெயலலிதாவை குழப்ப, இந்த பச்சோந்தியை களமிறக்கி உள்ளது சிங்களம்!!!

சரியாக சொன்னிங்க போங்க, சிங்களவனின் அல்லக்கை இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது மூளைச்சலவை செய்யப் பட்ட கருத்துக்களில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது!

புலிகளில் அழிவில் இவருக்கு, மிகவும் நெருங்கிய முக்கியமான பங்குண்டு!

இவர் என்றைக்குமே போராளியாக இருந்ததில்லை! ஒரு போராளிக்கு இருக்கக் கூடிய மிகச் சிறிய அடிப்படைக் குணங்கள் கூட இவரிடம் இல்லை.

தன்னைத் தானே புலியென்று கூறிக்கொள்ளும் இவர், ஒரு புலித்தோல் போர்த்த நரி!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவரது மூளைச்சலவை செய்யப் பட்ட கருத்துக்களில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது!

புலிகளில் அழிவில் இவருக்கு, மிகவும் நெருங்கிய முக்கியமான பங்குண்டு!

இவர் என்றைக்குமே போராளியாக இருந்ததில்லை! ஒரு போராளிக்கு இருக்கக் கூடிய மிகச் சிறிய அடிப்படைக் குணங்கள் கூட இவரிடம் இல்லை.

தன்னைத் தானே புலியென்று கூறிக்கொள்ளும் இவர், ஒரு புலித்தோல் போர்த்த நரி!!!!

புலம் பெயர் நாடுகளிலிருந்து சிலர், இவரின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற போது....

கோத்தபாயவை சந்திக்க இவர் ஒழுங்கு செய்த கூட்டத்தில், கோத்தபாயா வந்த போது,

கேபி அண்ணர், கோத்தபாயாவை கட்டிப் பிடிச்சு கை கொடுக்க முயன்றதாக, முன்பு செய்திகள் வந்திருந்தது கவனிக்கத் தக்கது.

கை குடுக்குறது, வழமை. கட்டிப் பிட்டிச்சு கை குடுக்குறது எந்த ஊர் பழக்கம் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளிலிருந்து சிலர், இவரின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற போது....

கோத்தபாயவை சந்திக்க இவர் ஒழுங்கு செய்த கூட்டத்தில், கோத்தபாயா வந்த போது,

கேபி அண்ணர், கோத்தபாயாவை கட்டிப் பிடிச்சு கை கொடுக்க முயன்றதாக, முன்பு செய்திகள் வந்திருந்தது கவனிக்கத் தக்கது.

கை குடுக்குறது, வழமை. கட்டிப் பிட்டிச்சு கை குடுக்குறது எந்த ஊர் பழக்கம் என்று தெரியவில்லை.

இவருக்கு வால் இல்லாத படியால் கட்டிப் பிடிச்சு, கையைக் கொடுத்து மரியாதையைத் தெரிவிக்கின்றார்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

:D :D :D

ஒரு பேட்டி பல தலையங்கள் உடன் உலாவினாலும் இதன் நோக்கம் ஒன்றே, சிங்களத்தை போர்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றுவது. தான் செய்த குற்றங்களை மறைக்க சிங்களம் என்னவும் செய்ய தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சார உத்தி என்பது அவரது கையில் தான் தங்கியிருக்கின்றது. சிறிலங்கா அரசு இவரைப் புலிகளின் புதிய தலைவர் எனப் பிரகடனப்படுத்திப் பிரச்சாரம் யெ;கின்றது. இதன் மூலம், புலிகளின் மீது சேறு பூச முயல்கின்றது. நாங்கள் பதிலுக்குக் கொதிக்கின்றோம்... கோபப்படுகின்றோம்... ஆனால் பதிலாக எவ்வித பிரச்சாரத்தையும் மேற்கொள்வதில்லை. அப்படியே விட்டு விடுகின்றோம். முன்னால் புலி என்று யாராவது பத்திரிகைகள் எழுதினால் அவர்களுக்கு அவர் ஒரு சிறிலங்கா அரசின் கைதி, என்பதையும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் நபர் என்பதையும் தெரிவியுங்கள்.

கைதுக்கு பின்னான அவரின் நிலை வேறு.

ஆனால் புலிகளின் வரலாற்றில் கே.பீ யின் பங்கு அளப்பரியது.ஆயுத வியாபாரம் என்பது இலகுவான விடயமல்ல.

எதுவித அடிப்படை புலிகளின் வரலாறே தெரியாமல் புலிகளுக்கு வக்காலத்துவாங்குபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.இனி தலைவராகவும் ரெடிபோல் இருக்கு.

பிரபாகரனின் கலியாணப்படமும்,காட்டிற்குள் பிரபாகரன்,சங்கர்,பாலசிங்கம்,கே.பீ நிற்கும் படங்களே சாட்சி.

தனது மண்ணுகாக ஒரு துளி உதவியும் செய்யாமல் ஓடிவந்தவர்களெல்லாம் இணையத்தில் வாய்க்கு வந்ததை எழுதுவதை பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைதுக்கு பின்னான அவரின் நிலை வேறு.

ஆனால் புலிகளின் வரலாற்றில் கே.பீ யின் பங்கு அளப்பரியது.ஆயுத வியாபாரம் என்பது இலகுவான விடயமல்ல.

எதுவித அடிப்படை புலிகளின் வரலாறே தெரியாமல் புலிகளுக்கு வக்காலத்துவாங்குபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.இனி தலைவராகவும் ரெடிபோல் இருக்கு.

பிரபாகரனின் கலியாணப்படமும்,காட்டிற்குள் பிரபாகரன்,சங்கர்,பாலசிங்கம்,கே.பீ நிற்கும் படங்களே சாட்சி.

தனது மண்ணுகாக ஒரு துளி உதவியும் செய்யாமல் ஓடிவந்தவர்களெல்லாம் இணையத்தில் வாய்க்கு வந்ததை எழுதுவதை பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.

கே.பி யின் கதுத்தியல் புலிகளை தூக்கிக் கொண்டாடுகின்றதா? இல்லைக் குழிபறிக்கின்றதா புலிகளை? குழிபறிக்கப்படுகின்ற நிலையால் சந்தோசம் அடைபவர்கள், கே.பி க்கு புலிவரி போட்டு எம்மை சந்தோசப் படுத்த முடியுமா? நீ என்ன புலிக்குச் செய்தாய் என்பதை கேட்கக்கூட ஒரு தகுதி வேண்டும் என்பதை மறுக்கின்றீர்களா?

கே.பி ஒரு கைதி அவரின் கருத்து எதிரியின் கருத்து. ஆனால், அதை மக்களின் கருத்தாக காட்ட முற்படுபவர்கள் எப்படிப்பட்ட அரசியல் செய்ய நினைக்கின்றார்கள் எமக்குள்? இவர்கள் புலிவேசம் போடுகின்றார்களா? இல்லை நரிவேசம் போடுகின்றார்களா என்பது முக்கியம் இல்லாதது. ஆனால் இவர்களின் நோக்கம் எத்தகையது? அதற்கானதுதான் எமது பதிலகளும்!

புலம் பெயர் நாடுகளிலிருந்து சிலர், இவரின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற போது....

......

... அப்போது சென்றார்கள் மட்டுமல்ல இப்போதும்!!!! ... இங்கு சில மாமாக்கள் ஆசை காட்டி/மிரட்டி/பொய்களைக்கூறி பலரை நாளுக்கு நாள் ... இதன் விபரங்கள் என்னை விட நிர்மலனுக்கு கூடத்தெரியலாம் <_<

இன்று ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்தித்த இடத்தில், கேள்விகளும், பதில்களும் ..

புலிகளின் கொலை திட்டம்:

கேள்வி: ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, உங்களையும் கொலை செய்ய முயன்று நீங்கள் தப்பித்ததாக குமரன் பத்மநாபன் கூறியதாக இன்று செய்தி வெளியாகி இருக்கிறதே?.

பதில்: 1991ம் ஆண்டிலிருந்தே நான் இந்த அபாயத்தி்ல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் தப்பித்து உங்கள் முன் இருக்கிறேன். எனவே இது புதிய செய்தி அல்ல.

கேள்வி: மதுரை மேலூரைச் சேர்ந்த என்ஜினீயர் தீவிரவாத செயலில் கைதானது பற்றி மத்திய அரசு உங்களிடம் ஏதாவது கருத்து பரிமாற்றம் செய்துள்ளதா?.

பதில்: இல்லை.

கேள்வி: திராவிட இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன் கூறியிருக்கிறாரே?.

ராஜீவ் கொலையில் திமுகவுக்கு மறைமுக பங்கு உண்டு:

பதில்: ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு.

... சிங்களத்தின் இம்முயற்சி வெற்றி பெற்று விட்டதா?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KP is just a puppet of the Sri Lankan government’

Firstpost also spoke to MA Sumanthiran, a member of parliament from the Tamil National Alliance (TNA). A prominent Human Rights lawyer, Sumanthiran was appointed to parliament in 2010 on the TNA National list. He is a part of the TNA delegation that is in talks with the government to find a political solution to Lankan Tamil grievances. Firstpost asked him to respond to some of the points made by KP in his interview with Shashikumar. Summarised excerpts:

“In his interview with FirstPost, KP mentioned that the UN Panel report would “disturb reconciliation” and that no one would benefit from it. He also said that in the war both parties tried their maximum to win, and if a UN report was published for every war, there would never be an end. How would you respond to that?

This is not the official position of the government, I would be very interested if the government said this in so many words. As a responsible government they cannot say that both sides fought without any compunction, so they’re getting him to say it. No government can say “Once it’s over that’s it”. They have made some intimations to this effect in the past, where they have said that victors can never be charged. But the way to reconciliation is not by denying what happened. People know what happened to them. You can’t tell a man who lost his leg or his child that he never lost his leg or child. Reconciliation can only by achieved by acknowledging what happened to the people.

“What is your take on KP? Do you think he has a role to play in the reconciliation of Tamil grievances?”

He has absolutely no role to play. He is obviously a puppet in the hands of the government. The UN Panel report held the LTTE and the government equally culpable for what happened to civilians. KP took over the leadership of the LTTE from Prabhakaran. So now we see that the LTTE is with the Sri Lankan government.

“KP had also made an appeal to India and Tamil Nadu in particular to aid the rehabilitation of the Tamil people in the North. Do you think he can influence this to happen since he is still associated with the LTTE internationally?

No. In fact India has come forward to help with rehabilitation but the Sri Lankan government has been repeatedly blocking it.

http://www.firstpost.com/politics/kp-is-just-a-puppet-of-the-sri-lankan-government-14264.html?utm_source=ibnlive.com&utm_medium=RHS-Widget

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச நீதிமனறத்தின் நேரடி கண்காணிப்பில் ஸ்பெட்க்ரம் வழக்கு நடைபெறுகிறது நாங்கள் இதில் ஏதும் செய்யாமுடியாது.

டிஸ்கி:

சிபிஐ வழக்குகளில் இருந்து போபர்பஸ் ஊழல் குற்றவாளி குத்ரோச்சி விடுவிக்கபட்டார்..

கனிமொழி கைது

ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் - இலங்கைக்கு டெல்லி கொடுத்த அட்வைஸ்

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் புலிகள் தொடர்புகளைப் பேணினார்கள் - குமரன் பத்மநாதன்

கேள்வி: திராவிட இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன் கூறியிருக்கிறாரே?.

பதில்: ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு.---ஜெயலலிதா

கணக்கீடு சரியான பாதையில் செல்கிறது :blink::blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.