Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ட மீன் தொட்டி..... பாகம் 2.. புதிய முயற்சி.. பக்கம் 6 இல் இருந்து.....

Featured Replies

பயனுள்ள தகவல்கள், நன்றி. மீன் தொட்டி வீடியோவை எந்த வகை காமெராவில் பிடித்தீர்கள்? மீன்தொட்டியை நிலம் (கனதியான நீர் கொள்கலனை) நீண்ட காலத்துக்கு தாங்ககூடியதாய் இருக்கவேண்டும் இல்லையா? பேஸ்மென்டிலா உங்கள் மீன்தொட்டி கட்டப்படுகிறது? கற்களை நிலை நாட்டும்போது நில மட்டங்களை எல்லாம் சரியாய் கணித்தீர்களா?

  • Replies 159
  • Views 19.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பயனுள்ள தகவல்கள், நன்றி. மீன் தொட்டி வீடியோவை எந்த வகை காமெராவில் பிடித்தீர்கள்? மீன்தொட்டியை நிலம் (கனதியான நீர் கொள்கலனை) நீண்ட காலத்துக்கு தாங்ககூடியதாய் இருக்கவேண்டும் இல்லையா? பேஸ்மென்டிலா உங்கள் மீன்தொட்டி கட்டப்படுகிறது? கற்களை நிலை நாட்டும்போது நில மட்டங்களை எல்லாம் சரியாய் கணித்தீர்களா?

சாதரண ஐபோன் வீடியோ..

ஆம், கிட்டத்தட்ட 2 அடிக்கு அத்திவாரம் போடப்பட்டுள்ளது.. தொட்டி சாப்பாட்டு அறையில் கட்டப்படுகிறது

பட இணைப்புகளுக்கு நன்றி பனங்காய்.

எவ்வளவுதான் சிலிக்கன் போட்டாலும் நீர் கசிந்து போகாதா என்பது சின்ன சந்தேகம்?

  • தொடங்கியவர்

பட இணைப்புகளுக்கு நன்றி பனங்காய்.

எவ்வளவுதான் சிலிக்கன் போட்டாலும் நீர் கசிந்து போகாதா என்பது சின்ன சந்தேகம்?

போகாது.. மற்றும் சிலிக்கானில் பல வகை உண்டு..

Edited by Panangkai

மீன் தொட்டியின் ஆழத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் அழகாக இருக்குமோ பன‌ங்காய் ?

(அகலமான கண்ணாடி வாங்குவதில் பிரச்சனையா ?)

3 அடிக்கு மேற்பட்ட ஆழமான நீரில் தாவரங்களிற்கிடையே மீன்கள் நீந்தித்திரியும் அழகே தனி.

.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

மீன் தொட்டியின்... ஆழமோ, உயரமோ கூடினால்...

மீன்கள் நீந்துவதை, குனிந்து பார்க்க... நாரிப்பிடிப்பும், நிமிர்ந்து பார்க்க கழுத்துப் பிடிப்பும் வந்து விடும் ஈசன்.

கதிரையில் இருந்து பார்க்கக் கூடியவாறு... கண்களின் மட்டத்துக்கு நேரே... மூன்றடி உயரத்தில்... மூன்றடி அகலமான கண்ணாடியுடன் மீன் தொட்டி இருப்பதே, அழகு. :rolleyes:aquarium1-smiley.gif?129286754914.gif

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பனங்காய்.

மழை காலங்களில் ஐம் போத்தலில் மீன் வளர்த்த ஞாபகம், எல்லாம் இறக்க அம்மாவின் பூசை வேற கதை :D

  • தொடங்கியவர்

மீன் தொட்டியின் ஆழத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் அழகாக இருக்குமோ பன‌ங்காய் ?

(அகலமான கண்ணாடி வாங்குவதில் பிரச்சனையா ?)

3 அடிக்கு மேற்பட்ட ஆழமான நீரில் தாவரங்களிற்கிடையே மீன்கள் நீந்தித்திரியும் அழகே தனி.

.

ஆம்..

உயரம் அதிகமாக.. தண்ணீரின் கீழமுக்க சக்தியும் அதிகமாகும்..

நான் 18மில்லிமீட்டர் தூய கண்ணாடி உபயோகிக்க திட்டமிட்டிருக்கிறேன்.. 8'x3' = £450

தொட்டி உயரம் 3 அடி எண்டாலும் தண்ணீர் உயரம் 33 இஞ்சிதான். 36 இஞ்சிக்கு தண்ணி உயரம் வேண்டுமெண்டா 25 மில்லிமீட்டர் கண்ணாடி வேண்டும்.. விலை இரட்டைய்யாகும் பாதுகாப்பு அரைவாசியாகும்..

பாதுகாப்பு கருதி 30மில்லிமீட்டர் கண்ணாடிக்கு போனால் விலை ஐந்து மடங்காகும்..

அநியாய சிலவு...

  • கருத்துக்கள உறவுகள்

மீன் தொட்டிக்கு மீன்களை எப்போ போடுவீர்கள் என்ற ஆவலில் இருக்கிறேன். என்ன என்ன மீன் என்று பெயரை போட்டாலும் நல்லா இருக்கும்.

  • தொடங்கியவர்

கண்ணாடி இழை...

8x1 மீடர் கண்ணாடி துணி.. 10 நனைக்கும் திரவம் மூலம் மீன் தொட்டி உள்பக்கம் முழுக்க 5mm தொக்கைக்கு பூச்சு பூசினேன்..

ஒவ்வொரு பூச்சும் 15 நிமிடத்தில் காய்ந்து விடும், காய்ந்தவுடன் இன்னொரு கண்ணாடி துணியை அதுக்குமேல்வைத்து இன்னொரு பூச்சு..

394240_3894089504964_1429867997_n.jpg

223613_4193997122467_1221625335_n.jpg

குறிப்பு.. செல்லப்பிரானி, செடிகள் போன்றவற்றை அருகில் விடவேண்டாம்.. கார்பன் முகமூடி அணியவும்.. நனைக்கும் திரவத்தின் ஆவி மிகுந்த நச்சுத்தன்மை உடையது..

  • கருத்துக்கள உறவுகள்

சோ சாட்..ஒரே வெறும் தொட்டி படம் தான் கொண்டு வாறீங்க...

  • கருத்துக்கள உறவுகள்

சோ சாட்..ஒரே வெறும் தொட்டி படம் தான் கொண்டு வாறீங்க...

பொம்பிளைப் பிள்ளையளுக்கு,

மேசன், தச்சு வேலையும்... தெரிய வேணும். யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

சோ சாட்..ஒரே வெறும் தொட்டி படம் தான் கொண்டு வாறீங்க...

எடுத்த உடனே பதினாலாவது ரீல் காட்ட வேணுங்கிறீங்க.. :D

  • தொடங்கியவர்

சோ சாட்..ஒரே வெறும் தொட்டி படம் தான் கொண்டு வாறீங்க...

ஒவ்வொரு கட்டத்துக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் கட்டாயம்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தொட்டி செய்து முடியவில்லையா

  • தொடங்கியவர்

இந்த கிழமை பிசியாய் போச்சு.. பைபெர் கிளாஸ் காய்ஞ்சவுடன் மூண்டு கோட் ரபர் பூச்சு பூசினேன்.. அதன் மேல்.. உயிரினங்களுக்கு பாதுகாப்பான தன்னீர் தொட்டிகளுக்கு உபயோகிக்கப்படும் பேயின்ட் பூசினேன்.. (5 கோட்)

கண்ணாடி வந்து விட்டது.. 112 கிலொ பாரம்..

409172_4194000202544_2115738657_n.jpg

404611_4194003922637_1835761347_n.jpg

59632_4194007082716_271659142_n.jpg

531105_4194013882886_1589384342_n.jpg

ஆர்வத்துக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நானும் தோட்டத்தில் மீன்கள் வளர்க்கின்றேன்.சிறிய குளத்தில் நான்கு குட்டி ஆமைகளோடு வலை எல்லாம் மேலே போட்டிருந்தேன். மூட ஆமைகள் வெளியே வந்துவிட்டன. பக்கத்துவீட்டுப் பூனைகளுக்கோ நரிக்கோ இரையாகிவிட்டன. அதன்பின் ஆமை வாங்கவில்லை. ஆனால் இரு வினோதமான ஒரு உயிரினம் இருக்கிறது. எப்படி வந்தது என்று தெரியவில்லை. மீன் வாங்கும்போது முட்டையாக வந்து பொரித்திருக்கலாம். முகம் முதலை போன்றும் வாழ் மீகளின் போன்றும் இருக்கிறது. அல்லிகள் இரண்டும் வாரம் இரண்டு மூன்று பூக்கள் என்று பூத்துப் பார்க்க அழகாகக் காட்சி அளித்தன. நீலோற்ப்பலம் தேடுகிறேன். இதுவரை கிடைக்கவில்லை.[/size]

  • தொடங்கியவர்

பி கு..

வீட்டு இன்சுரன்ஸ் காறரிடன் மீன் தொட்டி உடைந்தால் எவ்வளவு நட்டஈடு பெறலாம் எனக்கேட்ட போது.. £75 ஆயிரம் வரை எடுக்கலாம் எனச்சொன்னர்கள் ( புது மீந்தொட்டி உட்பட.. :icon_idea: )

  • தொடங்கியவர்

[size=5]நானும் தோட்டத்தில் மீன்கள் வளர்க்கின்றேன்.சிறிய குளத்தில் நான்கு குட்டி ஆமைகளோடு வலை எல்லாம் மேலே போட்டிருந்தேன். மூட ஆமைகள் வெளியே வந்துவிட்டன. பக்கத்துவீட்டுப் பூனைகளுக்கோ நரிக்கோ இரையாகிவிட்டன. அதன்பின் ஆமை வாங்கவில்லை. ஆனால் இரு வினோதமான ஒரு உயிரினம் இருக்கிறது. எப்படி வந்தது என்று தெரியவில்லை. மீன் வாங்கும்போது முட்டையாக வந்து பொரித்திருக்கலாம். முகம் முதலை போன்றும் வாழ் மீகளின் போன்றும் இருக்கிறது. அல்லிகள் இரண்டும் வாரம் இரண்டு மூன்று பூக்கள் என்று பூத்துப் பார்க்க அழகாகக் காட்சி அளித்தன. நீலோற்ப்பலம் தேடுகிறேன். இதுவரை கிடைக்கவில்லை.[/size]

அந்த தண்ணி ஓனான் படத்தை போடுங்களேன். ஐடென்டி பண்ணுவோம்.. ( நீங்க குறிப்பிடும் உயிரினம் சூடான நாடுகளுக்கு உடையது எனநினைக்கிறேன்.. ஷுஅர் இல்லை!)

[size=5]ஆனால் இரு வினோதமான ஒரு உயிரினம் இருக்கிறது. எப்படி வந்தது என்று தெரியவில்லை. மீன் வாங்கும்போது முட்டையாக வந்து பொரித்திருக்கலாம். முகம் முதலை போன்றும் வாழ் மீகளின் போன்றும் இருக்கிறது. [/size]

இவை Newts (தமிழ் தெரியவில்லை) என அழைக்கப்படும். எனது வீட்டுத் தோட்டத்து மீன்தொட்டிக்குள்ளும் இது வந்துள்ளது. நீர்நிலைகளைத் தேடி வரும். சிலதின் முகம் பல்லி போலவும் சிலதின் முகம் முதலை போலவும் இருக்கும்.

http://www.google.co.uk/search?hl=en&safe=active&q=newts&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bpcl=38625945&biw=1248&bih=562&wrapid=tlif135298431672010&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=A-ekUNTqCpOr0AXFmIDIBQ

  • தொடங்கியவர்

கண்ணாடி பொருத்தினேன்.. ஒன்டரை கிலோ அதிக ஒட்டுத்திறன் கூடிய சிலிகன் பயன்படுத்தினேன்..

3712_4194048243745_295215993_n.jpg

416791_4194054923912_1945839999_n.jpg

318881_4194062964113_684825502_n.jpg

387624_4194068964263_1153047332_n.jpg

552237_4194084604654_87826576_n.jpg

400365_4194087164718_1514421680_n.jpg

காய ரெண்டு கிழமையாகும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு முடிஞ்சுது பவுன்சில

  • தொடங்கியவர்

எவ்வளவு முடிஞ்சுது பவுன்சில

இருநூத்திசொச்சம் எண்டு மனுசிக்கு சொல்லியிருக்கிறேன்.. :icon_mrgreen:

30 சதவீத வேலைதான் முடிந்திருக்கிறது.. இன்னும் 70 சதவீதம் இனித்தான்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இருநூத்திசொச்சம் எண்டு மனுசிக்கு சொல்லியிருக்கிறேன்.. :icon_mrgreen:

30 சதவீத வேலைதான் முடிந்திருக்கிறது.. இன்னும் 70 சதவீதம் இனித்தான்.. :unsure:

வெளி உலகம் தெரியாம வழக்கிறீங்க போல

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த மீன தானே சொல்லுரிங்க? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.