Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்

Featured Replies

எப்பிடித்தான் நீங்கள் நெருப்பு நீலம் காட்டினாலும் இதையும் விட கனக்க வீரமான எழுத்துகளெல்லாம் இருக்கு. அப்ப விசிலடிச்சம் இப்பதான் யதார்த்தத்தை புரிந்து கொண்டோம். :lol:

இன்னொரு விடயம் நீலமேகம் நான் ஊருக்குப்போற ஐடியா இல்லை. இங்கையிருந்துதான் உங்களைமாதிரி வீரம் கதைப்பேன்.

ஓணாண்கள் பலவகைப்படும் அதில் பச்சோந்தி என்று ஒரு வகை ஓணாண் உள்ளது அது வெய்யில்,மழை,குளிர்,கோடை,மாரி என்று பருவகாலங்களுக்கும் புல்,பூண்டு,செடி,கொடி என்று தாவரங்களுக்கும் ஏற்ப தன் கலரை மாத்துமாம்....சயன்ஸு வாத்தி சொன்னது.. உண்மையா...??? நேரில் நான் பார்க்கவில்லை...

Edited by நெருப்பு நீலமேகம்

  • Replies 88
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்கள் பலவகைப்படும் அதில் பச்சோந்தி என்று ஒரு வகை ஓணாண் உள்ளது அது வெய்யில்,மழை,குளிர்,கோடை,மாரி என்று பருவகாலங்களுக்கும் புல்,பூண்டு,செடி,கொடி என்று தாவரங்களுக்கும் ஏற்ப தன் கலரை மாத்துமாம்....சயன்ஸு வாத்தி சொன்னது.. உண்மையா...??? நேரில் நான் பார்க்கவில்லை...

சயன்ஸ்வாத்தியை வைத்தே அதை பரீட்சித்துப்பாத்தீங்களெண்டா பெறுபேறு கிடைக்கும்.

புவியியல் படிப்பித்த வாத்தியும் ஒண்டு சொன்னவர் அதைப்பரீட்சித்துப் பார்த்ததற்கான பெறுபேறாக நெருப்புநீலமேகமெண்டு வந்தது. :lol:

இலக்கியம் படிப்பித்த வாத்தி சொன்னதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது.....அதைக்கேட்டு நீங்கள் அனுமராய் எரிச்சுப்போடுவீங்கள் :lol: வேண்டாம் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் :lol: :lol: :lol: :lol:

சாந்தி அக்காவின் புண்ணியத்தால் நான் இன்று முதல் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் என்று அழைக்கக்கடவதாக...(தேசியம் என்றால் என்னவென்று என்னிடம் கேட்கவேண்டாம்,சத்தியமாய் எனக்கு அது என்னவென்று தெரியாது..புவியியல் மற்றும் இலக்கிய மேதை சாந்தி அக்காவிடமே கேடுக்கொள்ளவும்.. :lol: நான் வெறும் தேசிய மேதை மட்டுமே.. :D :D :D)

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவின் புண்ணியத்தால் நான் இன்று முதல் தேசியத்தின் இமயம் நெருப்பு நீலமேகம் என்று அழைக்கக்கடவதாக...(தேசியம் என்றால் என்னவென்று என்னிடம் கேட்கவேண்டாம்,சத்தியமாய் எனக்கு அது என்னவென்று தெரியாது..புவியியல் மற்றும் இலக்கிய மேதை சாந்தி அக்காவிடமே கேடுக்கொள்ளவும்.. :lol: நான் வெறும் தேசிய மேதை மட்டுமே.. :D :D :D)

சயன்ஸ் படிச்ச கலாநிதி நீங்கள் நான் தமிழ் மட்டும் படிச்ச கல்லாநிதி. :lol: இப்பிடியெல்லாம் புகழப்படாது நீலமேகம் பிறகு மழைகொட்டி சுனாமி வந்து உங்கடை தேசியப்பற்றில பூசியிருக்கிற நீலம் கரைஞ்சு ஏன் சோதனை.... :lol: :lol:

பட்டம் தந்தாச்சு அப்ப நாங்க இனி நன்றிவணக்கம் சொல்லுவம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையை வழமைபோலப் படிக்கவேண்டாம். <_<

காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ் – இன்று (26.06.11) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்… : புதிய திசைகள்

சாட்சியின்றிச் சிதைக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் விளை பலன்களாக வன்முறைக் கலாச்சாரமும், மனோ வக்கிரமும் மட்டுமன்றி, பிழைப்பு வாதிகளும், அரசியல் வியாபாரிகளும் கூடத்தான் மனிதத்தை மிரட்டுகின்றனர். அறுபது நீண்ட வருடங்களின் ஒடுக்கு முறையும் முப்பது வருடம் தவறான வழிகளூடாக முடிவுற்ற போராட்டமும் சமூகத்தின் ஒரு பெரும் பகுதியை வக்கிரத்தனமான அறிவுசார் சிந்தனையற்றதாக மாற்றியிருக்கின்றது.

வெறும் உணர்ச்சி அரசியல் ஒரு புறத்திலும், அதனை மூலதனமாக்கும் தேசிய வியாபாரிகள் மறுபுறத்திலும் இவற்றையெல்லாம் தனது ஒடுக்குமுறைக்குச் சார்பாக மாற்றியமைக்கும் இலங்கை அரச பாசிசமும் ஒன்றை மற்றொன்று வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

இது வரைக்கும் புலிகள் முன்வைத்த அரசியல், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதமானது என்ற சிந்தனை நச்சு வேராகப் படர்ந்து சமூகத்தின் ஒரு பகுதியை இருளுக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

ஆணவத்தோடு நடத்தப்பட்ட போராட்டம் மனித அவலமாக முள்ளிவாய்க்கால் மூலையில் முடிவடைந்த பின்பும் கூட தவறுகளுக்கான காரணத்தைத் தேட வேண்டாம் என்று வன்முறைக் கலாச்சாரத்தின் அழிவு சக்திகள் தெரு முனையில் வைத்து ஒரு தேசியவாதியைத் தாக்கியிருக்கிறார்கள். புலிக் கொடி குறித்த விவாதம் ஒன்றி தீபம் தொலைக் காட்சியில் கருத்துக் கூறியதற்காக சஞ்சீவராஜ் என்ற தேசிய வாதி தாக்கப்பட்டதன் பின்னர் அதனை நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாகப் பெருமிதம் அடைந்தார்களோ இல்லையோ இலங்கை அரச பாசிசமும் அதன் கூறுகளும் உற்சாகமடைந்துவிட்டன.

இலங்கை அரசோடு அதாவது அப்பவி மக்களின் பிணங்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவிக்கொண்ட கொலைகாரர்களோடு, மக்களின் அழுகுரல்களை அரசியலாக்கிக் கொள்ளும் சமூக விரோதிகளோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்சக் குற்ற உணர்வுமின்றித் தம்மை இனம்காட்டிக்கொள்ளும் பலர் சஞ்சீவராஜின் மீதான இத் தாக்குதலைப் பயன்படுத்தி தமது அரசியல் வியாபாரத்தை நடத்த முயல்கின்றனர்.

தேசம் நெட் என்ற இணைய வலைத் தளத்தில் கொன்ஸ்டன்டைன் என்ற இலங்கை அரச ஆதரவாளர் இப்படி எழுதுகிறார்: “விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், வி சிவலிங்கம், என் கங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர்…”

இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் பாதிப்பிற்கு உள்ளான சஞ்ஜீவராஜ் தனக்கு இந்தக் கருத்தோடு கிஞ்சித்தும் உடன்பாடு கிடையாது என்றும், இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது எமது விடுதலைக்கான முன்நிபனதனை என்றும். இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாட்டிற்குச் செல்வது என்பது மக்கள் விரோத அரசியல் என்றும் எமக்குத் தெரிவித்தார்.

இங்கே சஞ்சீவ்ராஜின் மீது தாக்குதல் நடத்திய புலி அமைப்புக்களில் செயற்படும், அவற்றின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட ராம் சஞ்சீவராஜ் என்பவரை தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பிளவுபடுத்த அந்தப் பிரிவினையை இலங்கை அரச ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆக, இரு பகுதியினரும் தேசிய விடுதலைக்கு எதிராகவும் மகிந்த ராஜபச்க அரசிற்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர்.

இதன் உச்சபட்ச நிலையாக இன்று 26.06.2011 அன்று இலங்கை அரச ஆதரவுப் போக்குடையோர் சஞ்சீவராஜை ஆதரித்து வன்னியன் பூட் என்ற பலசரக்குக் கடையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதாகவும் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்துப் சஞ்சீவராஜிடம் கேட்ட போது, அந்தப் போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார். ஆக, நாளைய போராட்டத்தின் உள்நோக்கு சஞ்சீவராஜிற்கு நீதி கிடைப்பதோ அன்றி வன்முறைக் கலாச்சாரத்தை எதிர்பதோ என்பதற்கு அப்பால் இலங்கை அரசின் புலம் பெயர் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே கருதமுடியும்.

புலிகள் இதுவரை முன்வைத்த ஜனநாயக மறுப்புச் சிந்தனை முறைமையும் அரச பாசிசமும் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் பயன்படுத்தப் படுகின்றன என்பது மட்டுமன்றி, அவை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வை தடை செய்கின்றன. இவை குறித்து தேசிய இன ஒடுக்குமுறையால் தொலைந்து போய் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களும் ஈழத்தின் பேரின வாத அவலங்கள் மத்தியில் வாழ்வோரும் விழிப்பாயிருக்க வேண்டுகிறோம்.

புலிகள் முன்வைத்த இன வாதமும், இலங்கை அரசின் பேரினவாதமும் ஒன்றை ஒன்று ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்து அழிவுகளை அறுவடை செய்து கொள்கின்றன என்ற இலகுவான உண்மையை புலம்பெயர் அமைப்புக்கள் புரிந்துகொள்வதும், வன்முறைக் கலாச்சரத்தை நிறுத்தும் அனைத்து நடவடிக்கைகளில் ஆரம்பித்து புதிய அரசியல் வழிமுறைகள் குறித்து ஆராய்வதும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியிலுள்ள உடனடிக் கடமையாகும்.

ஊடகங்களுக்கான அறிக்கை – புதிய திசைகள் – 26.06.11

  • கருத்துக்கள உறவுகள்

சமிப காலங்களில் தீபம் தொலைக்காட்சிகளில் தோன்றி மறையும் நாவலன் தலைமை தாங்கும் புதிய திசைகள் மே

முன்பு என்ன செய்தார்கள் இப்போது எங்கிருந்து வந்தார் இவரின் திட்டம்தான் என்ன இவர்களால் இன்று காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ் – இன்று (26.06.11) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்… : புதிய திசைகள்

இதில் இருந்து உங்களுக்கு புரியும் இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து உங்களுக்கு புரியும் இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றார்கள்.

இனியொரு, புதிய திசைகள் அமைப்பு தேசிய விடுதலைக்காக வேலை செய்வதாகச் சொல்லுகின்றார்கள்.

தாக்குதல் நடாத்தியவர் யாருக்காக வேலை செய்கின்றார் என்று தெரிந்ததுதானே.

தாக்குதலுக்கு எதிராக ஊர்வலம் போவோர் (போனோர்) இலங்கையரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியொரு, புதிய திசைகள் அமைப்பு தேசிய விடுதலைக்காக வேலை

செய்வதாகச் சொல்லுகின்றார்கள்.

தாக்குதல் நடாத்தியவர் யாருக்காக வேலை செய்கின்றார் என்று தெரிந்ததுதானே.

தாக்குதலுக்கு எதிராக ஊர்வலம் போவோர் (போனோர்) இலங்கையரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள்.

ஒட்டு குழுக்களின் வேலை இது இல்லையே, இதில் கருத்துப் பிறள்வு ஏற்பட்டு இருக்கிறது. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலம் என்று தீபம் ரிவியில் வேலை செய்கின்ற மூன்று நாழு பேர் சிங்கள உளவாளி ஒரு வனின் தலைமையில் வந்து நின்றார்கள் சில நிமிடங்களில் தமிழ் இளைஞர்கள் தேசியக்கொடியுடன் வர இவர்கழை கானவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தத் தாக்குதல் பற்றி பலரிடம் விசாரித்துப் பார்த்தேன் ஒருத்தருமே தாங்கள் கேள்விப் பட வில்லை என்றார்கள்.மக்கள் அக்கறை காட்டாத ஒரு விடயத்திற்கு இவ்வளவு நீளமான திரியா? ஊர்வலம் எண்டுறீங்க கலைஞரின் உண்ணாவிரதம் போல இருக்கப் போகுது.ஆமா ஊர்வலம் எங்க நடந்தது.கொழும்பிலயா?

புலவர் உங்களுக்கு ஒரு பச்சை .

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இக் கருத்துகளத்தின் திரியை வாசித்து ஏலாத ஒரு நிலையில் எழுதுகின்றேன்........தங்களின் வார்த்தை பிரயோகங்களை கருத்துகளத்தில் பதியும்போது கவனத்தில் எடுங்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளின் குரோதங்களை இங்கே கொட்டாதீர்கள் இது கழிவறையல்ல!!! இது தேசியம்சார்ந்ததளம் தேசியம் சார்ந்ததளத்தினையோ அல்லது அது சார்ந்த நடவடிக்கைகளை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.. அதனை அனுமதிக்கவும் முடியாது நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தேசியத்திற்க்கு அர்பணிப்புடன் ஈடுபட்டவர்களே இதனை யாருமே மறுதலிக்க முடியாது!!! ஆகவே ஆரோக்கியமான கருத்தாடலில் மட்டும் ஈடுபடுங்கள்!!!

எங்களுக்கு எழுதின புத்திமதிகள் என்றால் எண்ணில் அடங்கா..........................

இப்போ தமக்கு தாமே சேறடிக்கினம்.

அந்த பட்டம் தாறியா? இந்த பட்டம் தாறியா? என்றுதான் எங்களை ஒரு தூசாக தூக்கிவிட்டு தேசியத்தை குத்தகை எடுததனீங்களோ என்ற கேள்வியையும் எம்மைதான் கேட்டார்கள். யார் யார் வாடகைக்கு எடுக்க முயற்சித்தார்கள் என்பது இப்பதானே தெரியுது.

கொடிகாத்த குமரன் போல் கொடிக்காக அடிபோட்ட ராம் தேசியக் காவலனாக எம்மினத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றார். தேசியவாதத்தை கட்டியெழுப்புவது என்பது சாதராண விடயமில்லை இவ்வாறுதான் அது ஆரம்பிக்கும். பச்சை மட்டை அடிமுதல் கரண்டுக் கம்பத்தில் கட்டி மண்டையில் போடுதல் பங்கருக்குள் அடைத்தல் என்று பல்வேறு விதமான வெருட்டலுடன் தான் தேசியவாதத்தை பிரகடனப்படுத்த முடியும். ஒப்பீட்டளவில் தமிழர்கள் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை விட தமிழர்கள் தமக்குள் பல்வேறு தரப்பாக இயக்கங்களாக குழக்களாக எடுத்த நடவடிக்கையே அதிகம். தேசீயவாதியானவன் எப்போதும் சிங்களவன் தமிழன் இரண்டுபேருக்கும் அடிபோடத்தெரிந்தவனாக இருக்கவேண்டிய அவசியம் தொன்றுதொட்டு இருந்துவருகி்ன்றது. மக்கள் தேசீயவாதிகளிடம் இருந்தும் சிங்களபேரினவாதிகளிடம் இருந்தும் தந்திரமாக தப்பித்து வாழுதலிலேயே இனத்தின் இருப்பு தொடரமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.