Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெலோ இயக்கத்தின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு! அரசியல் தலைவராக சிவாஜிலிங்கம் செயற்படுவார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, June 26, 2011, 17:42சிறீலங்கா

வவுனியாவில் நடைபெற்ற டெலோ இயக்கத்தின் எட்டாவது தேசிய மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று மீண்டும் இணைந்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் அரசியல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

துணை அரசியல் தலைவராக ஜனா – கருணாகரன், செயலாளர் நாயகமாக ஹென்றி மகேந்திரன், பொருளாளராக விந்தன் கனரகட்னம், நிர்வாகச் செயலாளராக ரீ.நித்தியானந்தன், சர்வதேச பொறுப்பாளராக ஆர்.இளங்கோ அத்துடன், என்.சிறிகாந்தா, வினோ நோகராதலிங்கம், ரூபராஜா உட்பட பதினொருபேர் கொண்ட தலைமைக்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=20277

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுவதுகளில் பிற்பகுதியில் இருந்த டெலோ போலிருக்குமா? அல்லது எண்பதுகளின் நடுப்பகுதிபோல் இருக்குமா ? எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மையாக செயற்ப்பட்டால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

டெலோவின் புதிய முயற்சியில் இந்திய அரசியல் சாக்கடையின் துர்நாற்றம் வீசுவதாக உணர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலியின் கதை தரையில் முடிந்ததும், காட்டுக்குள் நின்று நொட்டுவார்கள் எனத் திட்டமிட்டார்கள்..! ஒரேயடியாக மௌனித்ததும், என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைகிறார்கள்..! :unsure:

புதிய திட்டம்.. புலிக்குப் பதிலாக ரெலோ..! காலப்போக்கில் ரெலோவை மீண்டும் ஆயுதம் தூக்க வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

:( டெலோ இயக்கம் அண்மையில் கூட இந்தியா பற்றி நாம் மிகவும் விளிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்தியா நம்பக்கூடிய நாடுமல்ல என்றும் கூறியிருந்தது. பழைய காலத்தில் டெலோ இந்திய ரோவின் கைப்பாவையாக இயங்கியதும், அதனால் தேசியத்திற்கெதிரான கருவியாகப் பாவிக்கப்பட்டதும்,இதனாலேயே புலிகளால் தண்டிக்கப்பட்டதும் வரலாறு. ஆனால் கால ஓட்டத்தில் அது தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு இறுதிவரை உழைத்ததும் நாம் கண்டதுதான். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எனும் இந்திய நூல்ப் பொம்மைக்குள்ளிருந்தாலும் கூட தனது சொந்தக் கருத்தை அது கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். சிறீ காலத்து டெலோவுக்கும் செல்வம் அடைக்கலநாதன் காலத்து டெலோவுக்கும் வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதை காலம்தான் கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் சிலரின் தற்போதைய நிலமை வயதுபோன காலத்தில் ஆதரவு ஏதுமின்றி தனித்துவிடப்பட்ட மூதாட்டி போன்றது. தனது தேவைகளுக்காக மூக்கைச் சிந்தி, அழுது நைச்சியமாக உதவி கேட்பதும், உதவி கிடைக்காவிட்டால் உள்ள கெட்டவார்த்தைகள் எல்லாவற்றையும் பாவித்து மண்ணள்ளித் திட்டிச் சாபம் போடுவதும் என்றாகிவிட்டது.

ரெலோவுக்கும் மண்ணள்ளித் திட்டுவார்களா இல்லையா என்பது ரெலோ இவர்களின் விருப்பத்தின்படிபால் நடப்பதில்தான் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

டெலோ ஆதிக்க சக்திகள் விரிக்கும் வலையில் சிக்கிவிட்டிருந்தால் அவர்கள் பசுவைப் பிடித்து புலித்தோல் போர்க்கப் போகிறார்கள்

என்பது தான் எனது கணிப்பு. காரணம் சமகால அரசியல் சாணக்கியத்தால் ஆதிக்க சக்திகளோ அன்றி சிங்கள அரசோ பயனடையவேண்டுமெனின் விடுதலைப்புலிகளின் வெற்றிடத்தை இட்டு நிரப்ப ஆயுதமேந்தி போரிட்ட முன்னை நாள் இயக்கமொன்றின் பிரசன்னம் தமிழர் மத்தியில் இஸ்த்திரமாக இருப்பது அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் அரசியல் கொள்கை தான் என்ன..??! கடந்த கால தேச விரோத செயற்பாடுகளுக்காக இவர்கள் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்..! அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்க வேண்டும். மற்றும்படி இன்றைய காலக்கட்டத்திற்கு ஆளுக்கொரு கட்சி அவசியமா என்றும் சிந்திக்க வேண்டும்..??!

எமது பலம்.. நாம் ஒருமித்த கருத்தோடு சர்வதேசத்தின் தயவை நாடி நிற்பதே அன்றி.. ஆளுக்கொரு கட்சி அமைத்து ஆளுக்கொரு கொள்கையோடு சர்வதேசத்தின் முன் போய் நிற்பின்.. மாண்டவர் கனவுகள் என்றுமே பலிக்காமல் போகவே அதிக வாய்ப்புள்ளது.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நொட்டுவதன் மூலம் செய்ய முடியாது. மக்கள் இயக்கமாக விளங்கிய புலிகளால் முடியாததை எவராலும் செய்து முடிக்க முடியாது. அப்படி செய்து முடிக்க வேண்டின்.. ஒன்றில் உறுதியான சர்வதேச ஆதரவு வேண்டும் அல்லது இந்தியாவின் ஆதரவு வேண்டும்..! இதனை ரெலோ என்ன எந்த இயக்கத்தினராலும் எனிப் பெற முடியாது..! இதுதான் கள மற்றும் சர்வதேச அரசியல் உண்மை.. இன்றைய காலக்கட்டத்தில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராயினும் மீண்டுமொரு கால்சகாப்தத்திற்கு தமிழனின் கனவுகளை இழுத்து செல்லாதீர்கள்?

ஆயுத போராடங்களும்......அரசியல் போராட்டங்களும் ஈழத்தமிழனுக்கு நிறையவே அனுபவங்கள் உண்டு.

இவைகள் எல்லோருக்குமே ஒரு பாடமாக அமையட்டும்.

இவற்றை கருத்தில் கொண்டு.....

முன்னெடுப்பவர்கள் யாராயினும் சுற்றி வரைக்காமல் நேரடியாக...வெளிப்படையாக.......தமிழர்களின் தாகத்தை வழிசமைக்க வழிகோலுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.