Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காத்தான்குடி மாணவிகள் குற்றம் செய்யவில்லை என ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-06-29 13:53:41]

காத்தான்குடியில் இரண்டு மாணவிகள் தாக்கப்படதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிகள் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் இந்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 20.6.2011 ஆம் திகதி இரண்டு மாணவிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஊடாக 28.6.2011 ஆம் திகதி அனுப்பிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

20.6.2011ஆம் திகதி தாக்கியமை சம்பந்தமாக குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் வைத்திய பரிசோதனையின் மூலம் எவ்விதமான குற்றமும் புரியவில்லையென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2.எதிராளிக்குரிய தண்டனை நீதிமன்றத்தினால் மாத்திரமே வழங்கப்படும்.

3.இந்தப்பிரச்சனையில் பொதுமக்கள் சமாதானத்துடன் இருக்குமாறும், கலகக்காரர்களுடன் சேராமல் இருக்குமாறும் கட்டளை வழங்கப்படுகின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=45650&category=TamilNews&language=tamil

[Wednesday, 2011-06-29 13:53:41]

20.6.2011ஆம் திகதி தாக்கியமை சம்பந்தமாக குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் வைத்திய பரிசோதனையின் மூலம் எவ்விதமான குற்றமும் புரியவில்லையென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகில் இலங்கையில் மட்டும் தான் இந்த வைத்திய பரிசோதனை முறை உள்ளது. அதன் மூலம் அவர்கள் ஆபாசப் படம் பார்த்தார்களா, இல்லையா எனக் கூறிவிடுவார்கள். அதே போல் கண்ணால் பார்த்து யாரது DNA, போலி வீடியோவா போன்ற பரிசோதனை செய்யும் நிபுணர்களும் இலங்கையில் மட்டும் தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் பாலியல் சம்பந்தமாகவும், பாதிரியார் பாலியல் சம்பந்தமாகவும் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகள் ஏராளம்.

ஆனால் இதுவரை.... முஸ்லீம் மௌலவி செக்ஸ் சம்பந்தமாக செய்தி வந்ததை.... கேள்விப் பட்டுள்ளோமா?

அவ்வளவு சுத்தமானவர்கள். யாருக்கு காதிலை பூ சுத்துறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாணவிகள் தாக்கப் பட்டதாகத்தானே செய்திகள் கூறுகிறது, இதில் எங்கு இருந்து பாலியல் வந்தது. :unsure: :unsure: :unsure:

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் பாலியல் சம்பந்தமாகவும், பாதிரியார் பாலியல் சம்பந்தமாகவும் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகள் ஏராளம்.

ஆனால் இதுவரை.... முஸ்லீம் மௌலவி செக்ஸ் சம்பந்தமாக செய்தி வந்ததை.... கேள்விப் பட்டுள்ளோமா?

அவ்வளவு சுத்தமானவர்கள். யாருக்கு காதிலை பூ சுத்துறாங்கள்.

அவர்களுக்கு அந்தப்பிரச்சனை இல்லை அவர்கள்விரும்பினால் எத்தனையை வேண்டுமானாலும் (வைச்சுக்கலாம்) திருமணமும் செய்யலாம் என அவர்களின் சமயத்தில் முறையுள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகள் தாக்கப் பட்டதாகத்தானே செய்திகள் கூறுகிறது, இதில் எங்கு இருந்து பாலியல் வந்தது. :unsure: :unsure: :unsure:

ஆபாசக் காட்சியைப் பார்த்தார்கள் என்றுதானே முதலில் பிரச்சினை வந்தது? :unsure:

அப்படிப் பார்க்கச் செல்லும்போது, அன்று வீட்டில் சமைப்பதற்குரிய காய்கறிகளைகளையும் வாங்கிச் சென்றிருக்கலாம். :rolleyes: வீட்டில் உரிய நேரத்தில் அவற்றைச் சேர்ப்பிக்காததால் பிரச்சினை வந்திருக்கலாமில்லையா? :wub:

இதைப் பரிசோதனைமூலம் நிருபிக்கலாம்தானே..!? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகள் தாக்கப் பட்டதாகத்தானே செய்திகள் கூறுகிறது, இதில் எங்கு இருந்து பாலியல் வந்தது. :unsure: :unsure: :unsure:

சில நாட்களுக்கு முன், வந்த செய்தி.

பிரதேசவாதிகளால் தாக்கப்பட்ட காத்தான்குடி மாணவிகள் இருவர் வைத்தியசாலையில்!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011 11:59

பார்க்கக்கூடாத படத்தை பார்த்தார்கள் என்று கூறி, ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட இரு மாணவிகளை காத்தான்குடி பொலிசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் பற்றிய தகவல்கள்: காத்தான்குடியில், பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு ஆபாசப்பட வீடியோ ஒன்றைப் பார்த்தார்கள் என்று குற்றம்சாட்டிய இரு இளைஞர்கள் அவர்களைக் கடத்திச் சென்று வீடு ஒன்றில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளார்கள்.

பின்னர், அங்குள்ள மக்களையும் தமது கருத்துக்கு ஆதரவாக இணைத்துக்கொண்டு பள்ளிவாசல் ஒன்றுக்கு இந்தப் பெண் பிள்ளைகளைக் கொண்டு சென்றுள்ளார்கள். அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலகக் கட்டிடம் ஒன்றில் அவர்களை நிறுத்தி, தவறுக்கு உரிய தண்டனை வழங்குமாறு பள்ளிவாசல் சம்மேளனத்திடம் கோரினர். அதேநேரம், ஊர் மக்களையும் தங்களுக்கு ஆதரவாக அழைத்துள்ளனர். பிரதேசவாசிகள் 350 பேருக்கு மேல் அங்கு கூடி குறிப்பிட்ட மாணவிகளைச் சுற்றிவளைத்துக் கொண்டு தண்டனை வழங்குமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், பொதுமக்களை அங்கிருந்து அகற்றுமாறு பள்ளிவாசல் சம்மேளனத்திடம் கோரியுள்ளனர். இருப்பினும் அதனை தங்களால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் இதில் தலையிட முடியாது அவர்களை அங்கிருந்து அகலுமாறு கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே தெரிவிக்கையில்,

பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் என்ற வகையில் உடன் நடவடிக்கை எடுத்த நான், பிரதேசத்தை அண்டிய அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் சுமார் 150 பொலிஸாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தேன்.

லத்திகளுடன் அவ்விடத்துக்கு பொலிஸார் குவிந்ததைப் பார்த்த பிரதேசவாசிகள் தங்களைத் தாக்கவே பொலிஸார் வந்துள்ளனர் என்று எண்ணி அவ்விடத்திலிருந்து ஓடியதுடன் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதலையும் நடத்தினர்.

இருப்பினும் இச்சம்பவத்தால் பொலிஸார் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரதேசத்தின் நிலைமையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து குறித்த பள்ளிவாசல் சம்மேளனத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவிகளின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாராயினும் அவர்கள் பெண் பிள்ளைகள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசக் காட்சியைப் பார்த்தார்கள் என்றுதானே முதலில் பிரச்சினை வந்தது? :unsure:

அப்படிப் பார்க்கச் செல்லும்போது, அன்று வீட்டில் சமைப்பதற்குரிய காய்கறிகளைகளையும் வாங்கிச் சென்றிருக்கலாம். :rolleyes: வீட்டில் உரிய நேரத்தில் அவற்றைச் சேர்ப்பிக்காததால் பிரச்சினை வந்திருக்கலாமில்லையா? :wub:

இதைப் பரிசோதனைமூலம் நிருபிக்கலாம்தானே..!? :rolleyes:

முடியல முடியல.. தோழர் இசைகலைஞ்சன் வந்தாலே ஒரே டமாஸ்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

முடியல முடியல.. தோழர் இசைகலைஞ்சன் வந்தாலே ஒரே டமாஸ்தான் :D

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. :D

புரட்சிக்காவது அதன் உள்ளடக்கம் புரிந்ததே..! :lol::rolleyes:

சரியா சட்டம் --> வகாபிசம் --> ஜிஹாடிசம் ?

Islamic fundamentalism grows in Kattankudy

Sharia Law

Islamic madrasas have mushroomed and many of them teach Wahabism, a strict brand of Islam which provides theological underpinnings to al Qaeda-led Islamic extremism.

“Extremist parents are forcing their children to wear the burka,” says Riyaz Zally, Muslim religious activist and the leader of Islamic Solidarity Front of North America. “We didn’t have a history of face veil in this country. These are all imported by Wahabists,” says Zally. He says Islamic extremists in Kattankudy are trying to impose the Sharia Law.

“This is not the place for the Sharia Law. There is no need for a separate law for Muslims in this country,” he says.

A Kattankudy resident who spoke under the condition of anonymity says it was only six-seven years back that Islamic fundamentalism made inroads to Kattankudy. “Earlier, they were active in Paragasdeniya (Kandy) and Kalmunai, but they did not have a significant presence in Kattankudy. These Wahabists grew in numbers because local politicians condoned their activities.”

“Politicians thought it was better to make use of Islamic radicals for their political advantage than countering their influence.” Wahabism, in addition to its literal interpretation of Islam is known for its antagonism towards moderate Islamic faiths such as Sufism. Sufi Movlavi Rizvi of Valachchenai was abducted by a group of extremists who decried his preaching of moderate Sufi Islam three years back. His abductors shaved his beard and forced him to pose with naked women and photographed him. They disseminated pictures among the people in the town. After repeated harassment by Wahabists, Moulavi Rizvi went underground. He now lives in Valachchenai.

“I was a free man earlier, but now I fear for my life,” he told Lakbimanew in a telephone conversation. He says Kattankudy is the hotbed of Islamic extremism and Wahabists are gradually replacing moderate Islam which was practiced in the area for centuries. “They are radicalizing the local youth through indoctrination of radical views,” he says. “Wahabists are preparing for the Jihad,” he cautions.

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=2012:islamic-fundamentalism-grows-in-kattankudy&catid=35:news-features&Itemid=37

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசக் காட்சியைப் பார்த்தார்கள் என்றுதானே முதலில் பிரச்சினை வந்தது? :unsure:

அப்படிப் பார்க்கச் செல்லும்போது, அன்று வீட்டில் சமைப்பதற்குரிய காய்கறிகளைகளையும் வாங்கிச் சென்றிருக்கலாம். :rolleyes: வீட்டில் உரிய நேரத்தில் அவற்றைச் சேர்ப்பிக்காததால் பிரச்சினை வந்திருக்கலாமில்லையா? :wub:

இதைப் பரிசோதனைமூலம் நிருபிக்கலாம்தானே..!? :rolleyes:

காய்கறிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒரே நாட்டில் அதிகளவில் பெண்கள் சமையலுக்கு பாவிக்கும் காய்கறிகளை இன்னொரு நாட்டு பெண்கள் பாவிப்பதில்லை காரணம் அந்த நாட்டு நில சூழலுக்கு அமையவே தோட்டம் செய்ய படுகின்றது.

நீங்கள் மொட்டையாக காய்கறி என்று எழுதினால் எப்படி? என்ன காய்கறி என்று எழுதினால்தானே வாழக்கின் உடைய உண்மை தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.