Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

றோ அமைப்பின் சதிகளை வெளியிட்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலைப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்திற்குள் இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடாத்தி விட்டது. அதன் பின்பு ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும்.

சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

அவ்வாறின்றி அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 17ம் திகதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், சரத் பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவு என்பவற்றுக்கு அருகில் நெருங்கவும் முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர். வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்றவாறு கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலையுடன் அசைபோட்டுள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதி இந்தளவுக்கு இறங்கி வரக் காரணம் அரசியல்வாதிகள் சிலர் சரத் பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் என்றவாறாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

http://www.pathivu.com/news/17195/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா மகிந்தருக்கு அவசரமாகத் தேவைப் படுகின்றார், இப்போது!!!

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா மகிந்தருக்கு அவசரமாகத் தேவைப் படுகின்றார், இப்போது!!!

போர்க்குற்ற விசாரணை என வரும் போது சரத் தன்னை எப்படியும் போட்டுக்கொடுப்பார் என மகிந்த அவதிப்படுவது புரிகிறது.

தமிழினப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதி மகிந்த பல மிலேச்ச பயங்கரவாதிகளின் தொடர்பையும், அந்த பயங்கரவாதிகளின் சொற்படி நடந்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

தமக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலின்போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று கூறியுள்ள ராஜபக்ச, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடாத்தி விட்டது. அதன் பின்பு அதிபர்தோ்தலில் போட்டியிடுவதற்காக பொன்சேகா கூட்டுப் படைகளின் தலைமை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய முன்வந்தபோது, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும்.

பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச எவ்வளவோ வற்புறுத்தியும், இந்தியாவின் அழுத்தத்தினால் அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

அவ்வாறு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால், காலப்போக்கில் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார்.

அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பாக கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவுக்கு அருகில் நெருங்க முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர்.

வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்று கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக ராஜபக்ச கவலையுடன் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா விடயத்தில் ராஜபக்ச இந்தளவுக்கு இறங்கி வருவதற்கு அரசியல்வாதிகள் சிலர், பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் காரணம் என்று ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

வெப்துனியா

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடியும் தறுவாயில் மகிந்தரும், பொன்னரும் நாட்டில் இல்லாமல் போனது எதேச்சையாக நடந்த செயலில்லை என நினைக்கிறேன்..! :unsure:

பயங்கரவாதிகளைப் பற்றி பயங்கரவாதியின் உளறல்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவும், நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் 'ரா' அமைப்புதான் காரணம்- சொல்கிறார் ராஜபக்சே

கொழும்பு: செய்வதை எல்லாம் செய்து விட்டு, இப்போது ஆப்பில் சிக்கிய குரங்கின் நிலையில் உள்ள இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே, தனக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையே பூசல் ஏற்பட, மோதல் ஏற்பட, எதிரிகளாக மாறியதற்கு இந்திய உளவு அமைப்பான ரா தான் காரணம். அது செய்த சதியால்தான் தானும், பொன்சேகாவும் எதிரும் புதிருமாக மாறி விட்டதாக பிதற்றியுள்ளார்.

இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக தண்டனை உறுதி என்ற நிலையை நோக்கி ராஜபக்சே கும்பல் போய்க் கொண்டிருக்கிறது. ஈழத்தில் அவர்கள் நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தைப் பார்த்து சர்வதேச சமுதாயம் படிப்படியாக கவலைக்குள் மூழ்க ஆரம்பித்துள்ளது. ஒட்டுமொத்த சர்வதேசமும் ராஜபக்சே கும்பலுக்கு எதிராக திரளும் நாள் அருகில் இல்லாவிட்டாலும், வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள்.

காமன்வெல்த் நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து என அடுத்தடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அடுக்கப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் வழக்கு தொடரப் போவதாக கூறப்படுகிறது.

இப்படி அடுக்கடுக்காக சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் குழம்பிப் புலம்பி வருகிறார் ராஜபக்சே.

இந்த நிலையில் சரத் பொன்சேகா மீது திடீர் பாசத்தைக் காட்டுவது போல பேசியுள்ளார் ராஜபக்சே. இருவருக்கும் இடையே பகையை மூட்டி எதிரிகளாக மாற்றியதே இந்தியாவின் உளவு அமைப்பான ரா தான் என்றும் பேசியுள்ளார் அவர்.

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இப்படிக் கூறினாராம் ராஜபக்சே.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே ராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு. இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம்.

சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடத்தி விட்டது. அதன் பின்பு தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதை விடப் பெரும் தவறாகும்.

சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்று அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

அவ்வாறு இல்லாமல் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் ராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

ராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளுடன் ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்று புலம்பினாராம் ராஜபக்சே.

உண்மையில் ஈழத் தமிழ் இனப் படுகொலையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவிலான பங்கு பொன்சேகாவுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராஜபக்சே புலம்புவதைப் பார்த்தால் பொன்சேகாவை தன் பக்கம் மீண்டும் சேர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக மாறி, சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் வழிகளைக் காண முயற்சிப்பாரோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/06/30/raw-divided-me-fonseka-says-rajapakse-aid0091.html

டிஸ்கி:

ஏண்டா இந்தியாகாரன் சதியத்தான் ஊர் உலகமே பேசிகிட்டு இருக்கு.. சைடில் நேக்காகவே கிந்தையாவுக்கு வக்கலத்து வாங்குறான் பெங்களூர் சில்க் போர்டு பிலை ஓவர் பக்கத்தில் ஜெனியிலியம் ஆபீஸில் தட்சு தமிழு நாடத்தும் நம்ம ஏ.கே கான்.. பல தடவை பதில் கமெண்ட் எழுதினாலும் கெமெண்டை ஆட் செய்ய மாட்டுறான்... இதில் தெரிகிறது என்றால் தோழர்கள் சொன்னது போல டொப்பி பிரட்டுவது என்பது ரொம்ப தெளிவாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பயங்கரவாதத்தைப் பரப்பாத நாடா?

பயங்கரவாதம் என்பது யாரோ சில தீவிரவாதிகள் பாலத்துக்கோ, பிரதமருக்கோ குண்டு வைப்பது மட்டுமல்ல. உண்மையில் அரசு ஏவிவிடும் பயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான் பிரதானமானது. கலவரங்கள் அதிகமில்லாத குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொல்வது, பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது – இவையெல்லாம் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சில பயங்கரவாதங்கள்.

நன்றி வினவு

இந்தியா பயங்கரவாதத்தைப் பரப்பாத நாடா?

பயங்கரவாதம் என்பது யாரோ சில தீவிரவாதிகள் பாலத்துக்கோ, பிரதமருக்கோ குண்டு வைப்பது மட்டுமல்ல. உண்மையில் அரசு ஏவிவிடும் பயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான் பிரதானமானது. கலவரங்கள் அதிகமில்லாத குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொல்வது, பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது – இவையெல்லாம் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சில பயங்கரவாதங்கள்.

இவைதான் இந்திய அஹிம்சையின், இந்திய ஜனநாயகத்தின் இலக்கணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.