Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள் ( ஓடியோ இணைப்பு)

அண்மையில் வடமராட்சியில் விபச்சார விடுதியில் பிடிக்கப்பட்ட எம் இனத் தங்கைகள் எவ்வாறு விபச்சாரியாக மாறினார்கள் என்பதுபற்றிய அவர்கள் கூறும் செய்தி தங்களுக்காக

போரினால் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்க்கைக்கான ஆதாரங்களையும் இழந்து நிற்கும் எம் இன பெண்கள் ஒருவேளை உணவிற்காக என்ன செய்வார்கள்,

1முள்ளிவாய்காலில் கணவர்களையும் குழந்தைகளையும் இழந்து அநாதரவான நிலையில் நிற்கும் எம் குலப் பெண்களும், கன்னிகளும் தற்போது தங்களின் வழிமாறிய பயணத்திற்குக் காரணம் என்ன?

2 போரினால் பாதிக்கப்பட்டு உதவிகள் ஏதும் அற்ற நிலையில் அநாதரவாக இருந்தவர்களை இவ்வாறு ஆக்கியவர்கள் யார்?

3 புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இவ்வாறாவர்களின் நடவடிக்கைகள் கூறும் செய்தி என்ன?

4 யாழ்ப்பாணத்தில் உள்ள பொறுப்பு மிக்க, தமிழ்பற்று மிக்க , புத்திஜீவிகள் எனக் கூறிக் கொள்வோர் இவ்வாறன செயற்பாட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்

கோயில்களின் கும்பாபிசேகத்திற்கு குவியல் குவியலாக பணம் அனுப்பும் புலம்பெயர் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்

மேலும் படிக்க..................

http://newjaffna.com/fullview.php?id=NDMxNA==

நன்றி - புதிய யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரேவழி அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதலே.

அந்த மக்களும் உழைத்துவாழ முயலவேண்டும். அன்றையநிலையுடன்ஒப்பிடும்போது இன்று யாழ்ப்பாணத்தில் வியாபாரமும் சிறு கைத்தொழில்களும் பல்கிப்பெருகியுள்ளன. அவற்றை புலம் பெயர் தமிழர்கள் பெருக்கவேண்டும். அங்குள்ளவர்கள் அதை பேணவேண்டும். இதை சிலர் பொறுப்பெடுத்து ஒரு கூட்டுறவு அடிப்படையிலேனும் செய்ய முன்வரவேண்டும். என் பங்கை நான் செய்ய என்றுமே தயாராக உள்ளேன்.

அந்தப் புண்ணியம் புலம் பெயர்ந்த -------------களையே சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரேவழி அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதலே.

அந்த மக்களும் உழைத்துவாழ முயலவேண்டும். அன்றையநிலையுடன்ஒப்பிடும்போது இன்று யாழ்ப்பாணத்தில் வியாபாரமும் சிறு கைத்தொழில்களும் பல்கிப்பெருகியுள்ளன. அவற்றை புலம் பெயர் தமிழர்கள் பெருக்கவேண்டும். அங்குள்ளவர்கள் அதை பேணவேண்டும். இதை சிலர் பொறுப்பெடுத்து ஒரு கூட்டுறவு அடிப்படையிலேனும் செய்ய முன்வரவேண்டும். என் பங்கை நான் செய்ய என்றுமே தயாராக உள்ளேன்.

விசுகு அண்ணவைப் போன்று என்னுடைய ஆதரவையும் நான் தருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தை பொறுத்தவரையில் தவறுகளுக்கு காரணங்கள் சொல்முன் திருத்த திருந்த முயற்சிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களின் கும்பாபிசேகத்திற்கு குவியல் குவியலாக பணம் அனுப்பும் புலம்பெயர் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்

ஒரு விதத்தில் பார்க்கப் போனால் திராவிடர் மீது இந்து மதம் திணிக்கப் பட்டது என்பதே உண்மை!

புனித 'பைபிளை' ஆபிரிக்கர்கள் காவிக் கொண்டு திரிவதைப் போல, யாரோ ஒருவருடைய மதத்தை நாங்கள் தான் காவிக் கொண்டு திரிகின்றோம்!!!

தேவைக்கு அதிகமாகவே அதோடு மினக்கெடுகின்றோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இனி எங்கட ஜீட் அண்ணா வந்து இந்து மதத்த பத்தி பாட போறார்...................

தூயவன் அண்ணாவ counter attack குடுக்க எங்கிருந்தாலும் தயாராகு மாறு கேட்டு கொள்கிறேன்....

மொபைல் போன், தொலைக்காட்சி, வெளிநாட்டு மோகம் போன்ற பேராசையும், இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இரையாவதட்கு ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். அடுத்தது ராணுவத்துடன் பல்லிளித்துப் பேசி பின்னர் தப்பும் வழி தெரியாமல் இறையாவதாகவும் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள்

பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படும் எங்கள் தங்கைகள்

நாம் புதிய முயற்சியில் ஆர்வமுள்ள ஒரு சிலரை (3, 4 ஆதரவற்ற மகளிரை) ஒவ்வொரு குழுக்களாக ஒன்றிணைத்து சிறுசிறு கடைகள் (பழக்கடை, தேநீர்கடை, நகலகம், மரக்கறிக் கடை ...) ஆரம்பித்து வியாபாரம் செய்ய வழிசெய்துள்ளோம்.

எம்மிடம் போதிய பணவசதி இல்லையென்ற படியால் வங்கியில் 4 % வட்டியுடன் கிடைக்கும் 200,000 ரூபா வரையிலுமான சிறுதொழில் கடனைப் பெற்று வட தமிழீழத்தில் இவற்றைச் செய்துள்ளோம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், ஒருசில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இலவசமாக கொடுத்துதவிய வீதியோர சிறு காணிகளில் கடையமைத்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னொரு சில வசதியான உறவினர் சிறு காணியை வழங்கி அதற்கு வாடகையும் வசூலித்து தமது "குடும்பப் பெருந் தன்மையை" காட்டிவருகிறார்கள். என்ன செய்ய முடியும்?

இவர்களில் ஒருசிலருக்கு புலம் பெயர்ந்த நண்பர்களின் மாதாந்த உதவியும் கிடைக்கிறது.

இன்னும் பலர் இவ்வாறு செய்ய முன்வந்தால் ....

இவர்களுக்கு உதவிகள் வழங்குவதோடு நின்று விடாமல், சிறிது காலம் நேரடி வழிகாட்டலும் தேவைப்படுகிறதென்பது எமது அனுபவம்.

உதவி செய்யத் தெரியாமல், எதிலும் குறைகண்டுபிடித்து, மாசு கற்பித்து வாழும் குணமுடைய வட பகுதியினர் மத்தியில், இந்த வழிகாட்டலை வழங்குவதற்கு நேர்மையானவர்களின், ஒழுக்கமானவர்களின் பங்களிப்பு அவசியம். இவ்வாறானவர்கள் கிடைப்பது மிகவும் அரிது. மிக மிக அரிது.

நாம் புதிய முயற்சியில் ஆர்வமுள்ள ஒரு சிலரை (3, 4 ஆதரவற்ற மகளிரை) ஒவ்வொரு குழுக்களாக ஒன்றிணைத்து சிறுசிறு கடைகள் (பழக்கடை, தேநீர்கடை, நகலகம், மரக்கறிக் கடை ...) ஆரம்பித்து வியாபாரம் செய்ய வழிசெய்துள்ளோம்.

இன்னும் பலர் இவ்வாறு செய்ய முன்வந்தால் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.