Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதைகளின் தீட்டுத்துணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ கிருபன் !

ஒருவரது நிலைப்பாடு என்னவென்று அவர் பகிரங்கமாகத் தெளிவாக்காதபோது, அவரது நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று தங்கள் மனப்பிரமையைக் கொண்டு நிறுவுவதுதான்.

  • Replies 150
  • Views 17.8k
  • Created
  • Last Reply

யோ கர்னணோ கருனாகரனோ புலிகள் இருந்த போது கொடியும் மணியும் தரித்து இருந்தபடியாலேதான் புத்தகங்களுக்கு முகவுரை எழுதினார்கள்.எனக்கு அது அவசியம் இல்லை.புலிகள் தமது தியாகத்தால் கட்டி எழுப்பிய அங்கீகாரத்தின் நிழலில் நின்று அவர்களின் செயற்பாடுகளை அங்கீகரிது ஓர் அங்கமாகச் செயற் பட்டுக் கொண்டிருந்தவர்கள் தோல்வியி பின்னால் , நாடும் மசிரும் என்று எழுதுவது எத்தகைய அரசியல்? அவ்வாறு எழுதுபவர்கள் இறந்த நாற்பதுனாயிரம் உயிர்களையும் மசிருக்காகச் செத்தவர்கள் எங்கிறார்களா? வெற்றி பெற்ற நாட்டின் மசிரில் நிண்டு கொண்டு அனுபவித்தபோது ,அது மசிராகத் தெரியவில்லை இவர்களுக்கு? தோல்வி அடைந்ததால், போராட்டம் நிகழ்ந்ததற்கான காரணம் இல்லாது போய்விடுகிறதா? போராடி வீழ்ந்தவர்களின் உயிர்களுக்கோ அவர்களின் போராட்டத்துக்கோ எதுவித அர்த்தமும் கிடையாதா?

எனது அரசியல் நிலைப்பாடு மிக எழிதானது, மக்களின் விடுதலையை எவர் எவர் வேண்டி நிற்கிறார்களோ அவர்களை நான் ஆதரிப்பேன்.அவர்கள் புலிகளாகவோ அல்லது முன்னால் புலிகளாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அதே போல் மக்களின் விடுதலைக்கு எதிராக நிற்பவர்களை நான் மக்களின் விரோதிகளாகவே பார்க்கிறேன்.அவர்கள் புலிகளாகவோ அல்லது முன்னால் புலிகளாகவோ இருக்கலாம்.

உங்களது பிரச்சினை நீங்கள் அரசியல் நிலைப்பாடுகளினூடு இதனை அணுகாமல் உங்கள் முன்னால் இன்னால் நட்பின் அடிப்படையில் இதனை அணுகுகிறீர்கள்.மக்களின் விடுதலைக்கு எதிரான அரசியலைச் செய்பவர்களை நட்புடன் எவ்வாறு அணுக முடியும்?

//கர்ணனிற்கு நான் வக்கலாத்து வாங்கினேனா?? எங்கே ஒரு வரியையாவது காட்டுங்கள் நாரதர்//

//Yo Karnan

யோ(வ்) கர்ணணன் உம்மடை நாசமாய் போன தீட்டுத்துணியை யாழ் இணையத்திலை இணைத்து மீண்டும் என்னை துரோகியாக்கிட்டாங்கள் நாசமாய் போக

http://www.yarl.com/forum3/ind​ex.php?showtopic=88506//

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோ(வ்) கர்ணணன் உம்மடை நாசமாய் போன தீட்டுத்துணியை யாழ் இணையத்திலை இணைத்து மீண்டும் என்னை துரோகியாக்கிட்டாங்கள் நாசமாய் போக

இதற்கு பெயர் தான் வக்காலத்து வாங்குவதா நான் முக புத்தகத்தில் ; நான் திட்டியிருந்தேன். திட்டுவதற்கு பெயர்தான் வக்கலத்தா

சாத்திரி அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சி, இப்போது எவரையும் நம்பமுடியாமல் இருக்கிறது.யோ கர்னனின் அரசியல் நிலைப்பாடுகளோடு உங்களுக்கு எதுவித உடன்பாடும் கிடையாதா?

கீழே யோ.கர்ணனின் இன்னொரு கதையை இணக்கிறேன். இதில் ஒரு சாதாரண சற்றுப் பயந்த சுபாவமுள்ள பெண் எப்படி ஒரு தியாகியாகிறாள் என்று காட்டுகிறார். (தியாகம் வீணாகிவிட்டாலும் தியாகம் தியாகம்தான்.)

சுட்டி: http://yokarnan.blogspot.com/2011/05/blog-post_27.html

----------------------

ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது

மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ?

இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது.

இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப் பார்க்கலாம்தான். ஆனால், வலு கண்டிப்பான வீட்டில இருந்த பெட்டை படிக்கிற காலத்தில உங்கெல்லாம் ஏன் திரியுது?

முள்ளியவளைத் தெரியாதவைக்கும் வித்தியானந்தா கொலிச் எண்டதொரு பேர் காதில அடிபட்ட நினைவிருக்கலாம். அந்த ஏரியாவில் ஃபேமஸ் ஆனபள்ளிக் கூடம் அதுதான். இவளும் அதில் தான் படிச்சாள். இந்த சம்ப வத்தை விதி என்பதா... சதி என்பதா என்று தெரியாமல்தான் பெட்டையின்ற ஃபேமிலி இன்று வரை இருக்குது. அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

சுந்தரலிங்கமோ, வைத்தியலிங்கமோ என்பது மாதிரியான ஒரு பெயருடன் நல்ல பெரிய ஸ்ரேஜ் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்தது. அந்த ஏரியாவில் பட்டிமன்றம் நடந்தாலும் சரி, இயக்கத்தின்ர பிரசாரம் நடந்தாலும் சரி, அங்குதான் நடக்கும்.

ஒருநாள் இயக்கம் அங்கு தெருக்கூத்துப் போட்டது. அந்தக் காலத்தில நாலைந்து தெருக் கூத்து கோஷ்டிகள் இருந்தன. எல்லோரும் பஞ்சவர்ண கலர் களில உடுப்புப் போட்டு வருவினம். கொஞ்சப் பேர் சிவப்பு, மஞ்சள் கரை உடுப்போட வருவினம். பெட்டை முன் வரிசையில் இருந்து பார்க்குது.

அது ஜெயசிக்குறுக் காலம். வவுனியாவில இருந்து வெளிக்கிட்டு கண்டி வீதியைப் பிளக்கிறதுதான் ரத்வத்தையின்ர திட்டம். இயக்கம் விடேலை. வந்த ஆமி மாங்குளம் கடக்க மாட்டாமல் நிக்குது. தெருக்கூத்தில இதனை அருமையாகச் சித்தரிச்சினம். நிறையப் பேர் பச்சை உடுப்புக்களுடன் (சிங்களவர்) பாய்ந்து வருகினம். சிவப்பு, மஞ்சள் தரப்பு (இயக்கம்) பின்னுக்குப் பின்னுக்கு வந்து மேடையின் விளிம்பில நிக்கினம். இன்னும் கொஞ்சப் பேர் இதொண்டிலும் சம்பந்தம் இல்லாமல் சமைச்சுச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம் (வன்னிச் சனமாம்).

அந்த நேரம் மேடையில ஓராள் வந்து, அந்தக் கால ரி.ஆர்.மகாலிங்கத்தின்ர குரலில பாடத் தொடங்கும். 'பார்வையா ளரா இருக்காமல் பங்காளராகு வோம். எல்லோரும் சேர்ந்து இறுதி யுத்தத்தை வெல்வோம்' எனப் பாட்டின் சாரம் இருந்தது. பாட் டைக் கேட்டு சமைச்சுக் கொண்டு இருந்த ஆம்பிளையள், பொம்பிளையள் எல்லாம் சேர்ந்து பச்சை உடுப்புக்காரரை ஒரு தள்ளுத் தள்ளுவினம். பச்சை உடுப்புக்காரர் பிடரி அடிபட விழுகினம். ஒருவன் புலிக் கொடியுடன் அணி நடையில் வந்தான். இதுதான் அன்றைய தெருக்கூத்து.

முன் வரிசையில இருந்த பெட்டை தள்ளுறவையோட சேர்ந்து தானும் ஒரு கையினால் சின்ன புஸ் பண்ணி பச்சை உடுப்புக்காரரை விழுத்திப்போட்டு, சுதந்திர மண்ணில் படிப்பை கொன்ரினியு பண்ணுவம் என யோசித்தாள்.

அடுத்த நாள் ரியூசனுக்குப் போனவள் வீட்டுக்குத் திரும் பேல. முள்ளியவளை அரசியல் துறை பொறுப்பாளரின் ஸ்கோ ரில் ஒன்று கூடியது. அந்த நேரம் அரசியல் துறையில் ஒரு நடைமுறை இருந்தது. 10 பேரை இயக்கத்துக்குச் சேர்த்துக் குடுத்தால், சேர்க்கிறவருக்கு புது சைக்கிள் குடுப்பினம். இவளையும் சேர்த்து பத்தாக்கி யார் சைக்கிள் வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இவள் நாலு மாதம் றெயினிங் எடுத்து தகடு, குப்பி, ஒரு துவக்கு, 120 ரவுண்ஸ், இரண்டு ஜே.ஆர். குண்டு வாங்கினாள்.

இவளுக்குக் கிடைத்தது ரி. 56 துவக்கு. துவக்கு வகைகளுக்குள்ளயே பழைய கிழவியள் மாதிரி கொஞ்சமும் ஸ்ரைல் இல்லாத துவக்கெண்டால், இந்தியனின் எஸ்.எல்.ஆரும் சைனாக்காரனின்ட ரி 56-ம்தான். ஆனாலும் என்ன தண்ணி, சேறு, புழுதி எதுக்கை போட்டெடுத்து அடிச்சாலும் இது குழப்படிவிடாமல் சொல் பேச்சுக் கேக்கும் என்று கிடைத்ததை வைத்துத் திருப்திப்பட்டுக்கொண்டாள்.

றெயினிங் முடிய இவளின் ரீம் போனது அம்பகாமம் காட்டுக்கு. ஜெயசிக்குறு ஒப்பரேசன் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அந்த நேரம் அறிவிக்குது. அறிவித்த கையோட றிவிபல ஒப்பரேசன் தொடங்குது. மாங்குளத்தில இருந்து கிழக்குப் பக்கம் போகும் வீதியில, ஒட்டிசுட்டான் மட்டும் ஆமி. காட்டுக்குள்ளால முத்தையன்கட்டுப் பக்கம் ஆமியை வர விடாமல் தடுக்கும் பொறுப்பு இவளின் ரீமுக்கு.

இவளின்ர ரீம் காட்டுக்குள்ள 500 மீற்றருக்கு ஒரு பொசிசன் போட்டினம். ஆட்கள் தொகை காணாதது காரணம். ஒரு பொசி சன்ல நாலு பேர். காட்டுக்குள்ள 500 மீற்றர் இடைவெளி என்பது கொஞ்சம் ஓவர்தான். ஆமிக் காரன் புகுந்து விளையாடுவான்.

இப்படியான சிற்றிவேசனில 18 நாட்களைக் கடத்திவிட்டாள். இப்பதான் மெயின் ஸ்ரேசனில இருந்து மெசேஜ் வருது. ஆமி மூவ் பண்ணப் போறானாம். எல்லாப் பொசிசனிலயும் சண்டைக்கு ரெடியாகட்டாம். இவளும் கண்ணுக்குள் காப்போத்தில் நல்லெண்ணெய் ஊற்றின கணக்காக வலு கவனமாக வோச் பண்ணிக்கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்தில தூரத்தில் ரவுண்ஸ் சத்தம் கேக்கத் தொடங்குது. சரி, ஆமிக்காரன் ஸ்ராட் பண்ணிட்டான். நாமும் ஆரம்பிக்க வேண்டியதுதான் என இவள் துவக்கின் சேப்ரி பின்னைத் தட்டினாள். லீடர் பெட்டை சீறி விழுந்தாள். "ஆமிக்காரன் கண் காணாத இடத்தில நிக்கிறான். நீ என்ன சத்த வெடியா வைக்கப்போறாய்?" என. "சரி கிட்ட வரட்டும். நல்லா எய்ம் பண்ணி அடிப்பம்" என இருந்தாள்.

சத்தம் மெள்ள மெள்ள கிட்டவாக வருது. வோக்கியில மாறி மாறி நாலைந்து பேர் கொமாண்ட் பண்ணிக்கொண்டு இருக்கினம். எல்லோரும் ஒரு விஷயத்தைத்தான் சொல்லுகினம். "ஒருத்தரும் பயப்பிடாதயுங்கோ... ஆமிக்காரன் கிட்ட வரட்டும். நல்லாக் குடுங்கோ... ஒருத்தரும் தப்பக் கூடாது."

இப்போது இவளின் தலைக்கு மேலாக ரவுண்ஸ் சீறிக்கொண்டு போகுது. லீடர் பெட்டை, "வந்திட்டான் அடி... அடி" எனக் கத்துறாள். இவள் மெள்ளத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆமியின் அசுமாத் தம் தெரியுது. சேப்ரியைத் தட்டி ரிகரில கைவைக்க மட்டும்தான் பெட்டைக்கு விரல் ரைப்படிச்சதும் ரென்சனும்.

பிறகு, பெட்டை வலு திறமான சண்டைக்காரி யாகினாள். சண்டை கனநேரமாக நடக்குது. இவ ளுக்கு வலது பக்கத்தில இருந்த இரண்டு பொசிசனும் ஆமியிடம் விழுந்துவிட்டதாக வோக்கியில மெயி னுக்கு அறிவிக்கினம். என்ன நடந்தாலும் பொசி சனில இருந்து பின்னுக்குப் போவது இல்லை என பெட்டையள் முடிவெடுக்கினம். இவையின் பொசி சனை அரை வட்டமாக ஆமி சுற்றிவளைத்துவிட் டான். ஆர்.பி.ஜி., பீ.கே. என சகல அஸ்திரங்களையும் ஆமிக்காரர் பயன்படுத்துகினம். பெட்டையளும் விடுகிறதா இல்லை.

போகப் போக நிலைமை இறுகத் தொடங்குது. இன்னும் இரண்டு மூண்டு பொசிசன் ஆமியிடம் போகுது. ஆபத்தான வேலைதான். இந்த ஏரியாவில இந்த நாலு பெட்டையளும்தான் நிக்கினம். மெயி னில இருந்து இவைக்கு கொமாண்ட் வந்தது. 'உந்தப் பொசிசனைவிட்டு உடனே பின்னுக்கு வாங்கோ' என. லீடர் பெட்டை இவளைப் பார்த்தாள். இவள் வோக்கியைப் பறித்தாள். "மெயின் மெயின்... என்ன நடந்தாலும் நாங்கள் பின்னுக்கு வர மாட்டம். விட்ட பொசிசன்களைப் பிடிக்க றை பண்ணுங்கோ, நன்றி."

இயலுமான வரை தாக்குப் பிடிப்பம் என நாலு பெட்டையளும் நிக்கினம். நாலு பெட்டையள முடிக்க 40 ஆம்பிளையள் சுத்தி நிக்கினம். ஆனாலும், பெட்டையள் உசும்பினமில்லை. திடீரெனப் பின்னுக்கு இருந்தும் அடி வருது. அநேகமாக அதொரு பீ.கே. ஆக இருக்க வேணும். பெட்டையளின் தலைக்குள் மின்னல் அடித்தது. நாலு பக்கமும் வளைத்து பொக்ஸ் அடித்துவிட்டானா?

இவள்தான் பின் பக்கம் கவனித் தாள். பின்னால் இருந்த பாலை மரத்துடன் இருந்து ஒருவன் பீ.கே. அடிக்கிறான். கொஞ்ச நேரம் சமாளிக்கலாம். ஆனால், தொடர்ந்து சண்டை பிடிக்க முடியாத நிலை வருது. நாலு பேரிடமும் இருந்த ரவுண்ஸை எண்ணினால் 50தான் வரும். 50 ரவுண்ஸ் என்பதுஏ.கே-யை ஓட்டோவில விட்டு, ரிகரில் விரலை வைத்து கண்ணை ஒரு முறை மூடித் திறக்க காலியாகிவிடும். இவளிடம் ஒன்று இன்னொருத்தி யிடம் ஒன்று என மொத்தம் இரண்டு குண்டுகள்தான் இருந் தன.

"சரி, நடக்கிறது நடக்கட்டும்... இயலுமான வரை முயலுவோம். கண்டபடி ரவுண்ஸை வீணாக்காமல் ஆமி பங்கருக்க உள் நுளைய முயன்றால் மட்டும் சுடுவம்" என முடிவெடுத்தனர். எதிர்ப் பக்கம் இருந்து சூடு வருவது குறைந்ததும் ஆமிக்காரரும் உற்சாகமாயிற்றினம். பெட்டையள் எண்டாலே ஆமிக்காரர் வலு எழுப்பமாகத்தான் நிற்பினம். இதுக்குள்ள சுடுறதுக்கு ரவுண்ஸும் இல்லை என்றால் கேட்கவும் வேணுமா?

மிக அண்மையில் நிலையெ டுத்திருந்த ஒருவனை நோக்கி ஒருத்தி குண்டு ஒன்றை எறிந் தாள். இப்பொது ஒரே ஒரு குண்டு மட்டும் எஞ்சியிருந்தது.

எல்லாப் பெட்டையளின் முகமும் இருண்டுவிட்டது. இனி செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இனியும் தாமதித்தால், தலை மயிரிலை பிடிச்சுத்தான் இழுத்துக்கொண்டு போவான். இறுகிய குரலில் லீடர் கேட்டாள், "என்ன செய்வம்?" எல்லோரும் அமைதியாக இருந்தனர். லீடர் சொன்னாள், "நான் உயிரோடு பிடிபட மாட்டன். குண்டை என்னட்ட தா. நான் குண்டடிக்கப்போறன்."

"நானும் உயிரோடு பிடிபடமாட் டன்" இவள் சொன்னாள். மற்ற இருவரும் இதே முடிவை எடுத்தனர்.

ஒரு குண்டைவைத்து நால்வரும் இறந்துபோவது எனத் தீர்மானித்தனர். இவளிடம்தான் குண்டு இருந்தது. இவள் கிளிப்பைக் கழட்டி நாலு பேருக்கும் நடுவில் போடுவாள். அது ஆறு செக்கனோ எட்டு செக்கனோ இதுகளின்ர தலையில என்ன எழுதியிருக்கோ, அந்த நேரம் வெடிக் கும். இந்த நேரம் புதிதாக வெடிச் சத்தங்கள் கேட்டன. "எங்கட ஆக்கள் வந்திட்டினம்போல" ஒருத்தி சொன்னாள். "ம்... இறங்கீட்டினம் போலத்தான் இருக்குது. ஆனால், அவயள் வாறதுக்கிடயில எங்களைப் பிடிச்சுக்கொண்டு போயிடுவான். இனியும் லேற் பண்ணக் கூடாது."

தங்களை மீட்க ஒரு அணி வருகிறது என்பது நால்வருக்கும் புரிந்தது. ஆனால், அதற்காகத் தாமதிப்பதால் பலன் கிடைக்குமா என்பதை நிச்சயம் செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தனர். "நீ கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போடு" - லீடர் இவளுக்குக் கட்டளையிட்டாள். இவள் கண்ணை மூடிக்கொண்டு குண்டை எடுக்கவும் லீடர் வோக்கியில் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" சொன்னாள்.

இவள் கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போட்ட கணத்தில், வோக்கியில் பொறுப்பாளரின் குரல் ஒலித்தது. "பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ. நாங்கள் வந்திட்டம். உங்களுக்குப் பின்னால இருந்த பீ.கே-காரனையும் போட்டிட்டம். நாங்கள் வந்திட்டம்."

மிகுதி என்ன சொல்லப்பட்டது என்பது இவளுக்கு விளங்கவில்லை. உதவி அணிகள் பக்கத்தில் வந்தும் அவசரப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் லீட ரைப் பார்க்க, அவள் பேயறைந்து போய் நின்றாள். கணம்தான். இவளது மூளைக்குள் மின்னல் வெட்டியது. பாய்ந்து குண்டின் மேல் படுத்தாள். ஆறு செக்கனோ, எட்டு செக்கனோ தெரிய வில்லை. குண்டு வெடித்தோய, இவளது உடல் சிதறல்கள் படர்ந்திருக்க... மற்ற மூவரும் விறைத்து நின்றனர்!

◄ நன்றி

Posted by yo.karnan at 1:02 PM

Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz

Labels: கதை, தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிலிருந்து

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home

Subscribe to: Post Comments (Atom)

Recent Comments

About Me

yo.karnan

வெளிவந்த சிறுகதைத் தொகுதி: ►"தேவதைகளின் தீட்டுத்துணி" (வடலி வெளியீடு, 2010) ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Published Works: ►Thevathaikali Theettuthuni" [August 2010, Vadaly PUblishers] ▬▬▬▬▬▬▬▬▬ yo.karnan@yahoo.com | https://www.facebook.com/yo.karnan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சி, இப்போது எவரையும் நம்பமுடியாமல் இருக்கிறது.யோ கர்னனின் அரசியல் நிலைப்பாடுகளோடு உங்களுக்கு எதுவித உடன்பாடும் கிடையாதா?

கர்ணனாக இருக்கட்டும் கருணாகரனாக இருக்கட்டும் எவரது அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு உடன்பாடு தேவையில்லை காரணம் அதனால் எனக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை :lol:மேலை கறுவலும் ஒரு கதை இணைத்திருக்கிறார். இப்பதான் படிச்சன். அதே தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிலிருந்து இதுக்கு என்ன செய்யலாம். :blink:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே ஒவ்வொரு கதையா இங்க கொண்டு வந்து போட்டா அவரின்ட சிறுகதை தொகுப்ப யார் காசு குடுத்து வாங்கிவினமாம்?

அவர் மட்டும் இத பாத்தா எப்பிடிலாம் கவலை படுவார்? பாவிங்கள் ஒவ்வொரு கதையா போட்டு ஒரு சனத்தையும் வாங்க விடாம பன்னிட்டாங்களே எண்டு....

இப்பிடியே ஒவ்வொரு கதையா இங்க கொண்டு வந்து போட்டா அவரின்ட சிறுகதை தொகுப்ப யார் காசு குடுத்து வாங்கிவினமாம்?

அவர் மட்டும் இத பாத்தா எப்பிடிலாம் கவலை படுவார்? பாவிங்கள் ஒவ்வொரு கதையா போட்டு ஒரு சனத்தையும் வாங்க விடாம பன்னிட்டாங்களே எண்டு....

மேலையுள்ள 2 கதைகளும் அவரது (யோ.கர்ணனது) blog இல் உள்ளன. எனவே இங்கு போடுவதால் புத்தக விற்பனைக்கு மேலதிகமாக எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. புத்தகத்தை வடலி பதிப்பகத்தில் ஓடர் பண்ணியுள்ளேன். 9 US$ உம் சில சதங்களும். இங்கு (அவுஸ்திரேலியாவில்) கிட்டத்தட்ட 3 சிறிய கோப்பிகள் வாங்கச் செலவழிக்கும் காசு. எனவே நீங்களும் வாங்கலாம் :-).

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

மேலையுள்ள 2 கதைகளும் அவரது (யோ.கர்ணனது) blog இல் உள்ளது. எனவே இங்கு போடுவதால் புத்தக விற்பனைக்கு மேலதிகமாக எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. புத்தகத்தை வடலி பதிப்பகத்தில் ஓடர் பண்ணியுள்ளேன். 9 US$ உம் சில சதங்களும். இங்கு (அவுஸ்திரேலியாவில்) கிட்டத்தட்ட 3 சிறிய கோப்பிகள் வாங்கச் செலவழிக்கும் காசு. எனவே நீங்களும் வாங்கலாம் :-).

காப்பியா இருந்தால் வாங்கலாம்..! :unsure: வாந்தியா இருந்தால்?? :lol: நான் உந்தக் கதைகளை ஒண்டும் படிக்கேல்ல.. :unsure: சும்மா சொல்லுறன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவரே போட்டவர் என்டா அப்ப சரி.....

வாங்கிட்டா போச்சு.............

காப்பியா இருந்தால் வாங்கலாம்..! :unsure: வாந்தியா இருந்தால்?? :lol: நான் உந்தக் கதைகளை ஒண்டும் படிக்கேல்ல.. :unsure: சும்மா சொல்லுறன்..! :D

கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவரின் எழுத்துக்கள் வாந்தியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காப்பியா இருந்தால் வாங்கலாம்..! :unsure: வாந்தியா இருந்தால்?? :lol: நான் உந்தக் கதைகளை ஒண்டும் படிக்கேல்ல.. :unsure: சும்மா சொல்லுறன்..! :D

:lol: :lol: :lol:

"துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்", "தேவதைகளின் தீட்டுத்துணி" என்று தலைப்பிலேயே வியாபாரம் செய்யும் யுக்தி தெரிந்துள்ள எழுத்தாளர் யோ.கர்ணன். அவ்வளவு தான். சுயலாபத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கும் நபர் போல தெரிகிறது.

Edited by Eas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

this is that story...

துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்

1

இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா TV காரரும் தங்களின்ர தலைப்புச் செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சாள்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் TV-யில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப் பேருக்கு சந்தோசமாகவும் இருந்திருக்கும். இதில இது இல்ல முக்கியம். முக்கியமான சங்கதி வேறொன்று. இவ்வளவு சங்கதிகளையும் எல்லா சனத்தையும் போலவே பிரபாகரனும் துவாரகாவும் tv யில பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் சங்கதி.

நீங்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்க வேண்டியதில்லை. முக்கியமாக, துவாரகா குறித்து ஏற்கனவே உலாவும் நான்கு விதமான கதைகளிற்கு அடுத்ததாக ஐந்தாவது கதையை அவிட்டு விடுவதாக நினைக்கக் கூடாது. ஏற்கனவே நீங்கள் நான்கு கதைகளை அறிந்து வைத்திருக்கின்றீர்கள். இறுதி யுத்தத்தில் தப்பிய துவாரகா கனடாவில் இருக்கிறார், இலண்டனில் இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போரிற்காக காட்டிற்குள் தயாராகும் பிரபாகரனுடன் இருக்கிறார், யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசு காட்டிய வீடியோ என்ற கதைகள் போன்றதல்ல இது.

செட்டிக்குளம் ஆனந்தகுமாரசாமி முகாமின் D பிரிவில் உள்ள 28வது இலக்க வீட்டிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த இருபத்தொரு இஞ்சி பனசொனிக் TVயில இவ்வளவு விசயங்களையும் ஆட்களுடன் ஆட்களாக குந்தியிருந்து பிரபாகரன் பார்த்துக் கொண்டிருக்கின்றார். தலையில ஒரு துவாய் போட்டு முகத்தை மறைச்சுக் கொண்டு பக்கத்தில் துவாரகா. தகப்பன்காரனோட சாய்ந்து இருக்கிறா.

இந்த கன்றாவிகளைப் பார்த்த அன்று இரவு தான் ஆனந்தகுமாரசாமி முகாமிலிருந்து பிரபாகரன் தப்பித்தார். இதற்காக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயை செலவிட்டார். காசை வாங்கிக்கொண்டு ஆளை வெளியில் கொண்டு வந்தது ஒரு இராணுவப் புலனாய்வாளன். அவன் தனது மோட்டார் சைக்கிளிலேயே அவரை ஏற்றி வந்து, வவுனியா – மன்னார் வீதியிலுள்ள தனக்கு தெரிந்த ஒரு முஸ்லீம் வீட்டில் அன்றிரவு தங்க வைத்தான். அடுத்த நாள் விடியப் புறம் ஆறரைக்குப் போன மன்னார் பஸ்சை மறிச்சு, நூறு ரூபா ரிக்கற் எடுத்து மன்னார் போய் இறங்கினார்.

இயக்கத்தின்ர சப்போட்டரான சம்மாட்டி ஒராள் இந்தியாவிலிருந்து ஐயிற்றம் கடத்திக் கொண்டு வாறவர். அவருக்கு ஐம்பதாயிரம் காசடிச்சார். அடுத்த நாள் விடிய ஆள் இராமேஸ்வரத்தில. இந்த இடத்தில உங்களுக்கு இயல்பாகவே ஒரு டவுட் வரும். உந்த நெடுமாறன் ஐயா, தம்பி இருக்கிறார் தம்பி இருக்கிறார், இப்பதான் ரெலிபோன் கதைச்சவர் என்று இடைக்கிடை கதை விடுறவர். இது ரீல் என்றுதான் இவ்வளவு நாளும் நினைச்சம். உண்மை போல என. உண்மை என்னவென்றால், சீமான், வைகோ, ஐயா ஒருத்தருக்குமே பிரபாகரன் அங்க வந்தது தெரியாது. நம்பிக்கையான சொந்தக்காரப் பொடியன் ஒருவன்தான் சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போனான்.

அடுத்த நாள் இரவு பிரபாகரனின் மிக நெருங்கிய ஒருவர் கிருஸ்ணா ஸ்வீட்டில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கிக் கொண்டு போய் பிரபாகரனைச் சந்திச்சார். அப்போது இரவு ஏழு மணியாக இருக்க வேண்டும். TV யில செய்தி பார்த்துக் கொண்டு இருவரும் ஸ்வீட் சாப்பிட்டனர். அதில் தமிழ்நாட்டு காவல்துறை ஆணையாளர் சொல்லிக் கொண்டிருந்தார்- இறுதி யுத்தத்தில் தப்பிய புலிகளோ, பிரபாகரனோ தமிழகத்திற்கு வர முடியாதளவுக்கு பாதுகாப்பு இறுக்கமாக்கப் பட்டுள்ளதாக.

மூன்றாம் நாள் ஆள் தாய்லாந்தில் நின்றார். எப்பிடி எதால போனவர் என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. பணம் பாதாளம் மட்டும் பாயும். அவர் தாய்லாந்தில் நிற்கும் போதுதான் மகள் துவாரகாவை முகாமில் வைத்து ஆமி பிடித்த தகவல் வந்தது, அன்று முழுவதும் அப்செற்றாக இருந்தார். அடுத்த நாள் வெள்ளைக்காரன் இலங்கையில் செய்துவிட்டுப் போன குழப்பங்களில தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை விபரமாக எழுதி பிரித்தானியா எம்பசிக்கு ஒரு விசா விண்ணப்பம் அனுப்பினார்.

2

இராணுவ புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் பேரில் செட்டிக்குளம் ஆனந்தகுமாரசாமி முகாமிற்குப் போனார்கள். D வலயத்தில் பழைய இலக்கம் 72/1. புது இலக்கம் 42. இதுதான் ஸ்பொட்.

கதவைத் தட்ட ஒரு பெண்மணி வந்தார். ஆள் பார்க்கிறதுக்கு ஊரில இருக்கிற ஐயர்ப் பொம்பிளையள் மாதிரி நல்ல நிறம். ஆளை விசாரணை செய்து ஆரம்பக் கட்ட தகவல்களைப் பெற்றனர். அதாவது, அந்தக் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்திருக்கிறார்கள். மூத்த மகன் செல்லடியில் இறந்து விட்டானாம். கணவன் பற்றி கேட்டபோது, சற்று தடுமாறி அவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லியிருக்கிறார். மகளது பெயர் துவாரகாவாம்.

அனைத்தையும் உறுதி செய்த பின், துவாரகாவை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். துவாரகாவினது தம்பி மிகச் சிறுவனாக இருந்தமையினால் அவனை விட்டு விட்டனர். வாகனம் முகாம் வாசலுக்கு வர முகாம் பொறுப்பதிகாரி ஓடிவந்து வாகனத்தை மறித்தான். இவ்வளவு நாளும் தனக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த துவாரகாவை பார்க்கும் ஆவலுடன் வாகனத்தினுள் எட்டிப் பார்த்தான். முகத்தைக் கைகளால் மூடியபடி ஒரு பெண் பிள்ளை அழுதுகொண்டிருந்தா.

வாகனம் நின்றது ஜோசப் காம்பின் நடுச் சென்ரரில். அதுதான் புலனாய்வுக்காரரின்ர இடம். அங்கயிருந்த 10க்கு10 அடி இரும்புக் கூண்டினுள் ஆளை அடைத்தார்கள். இரவு வரையும் பிள்ளை அழுதபடியேயிருந்தது. இரவு ஒன்பதரைக்கு மேல்த்தான் விசாரணையை ஆரம்பித்தனர்.

உண்மையைச் சொன்னால் இந்தக் கேஸ் இராணுவ புலனாய்வுத் துறையின் விசாரணையாளர்களிற்கு மிகுந்த சோதனையான ஒரு விடயமாகவேயிருந்தது, வெவ்வேறு விசாரணைக் குழுக்கள் வெவ்வேறு கோணங்களில் விசாரணையை நடத்திக்கொண்டிருந்தனர். எவரது விசாரணையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமில்லை. எந்தக் குறுக்கு வழியினால் நுழைந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே இடத்திற்கே வரவேண்டியிருந்தது; மூன்று நான்கு கோணங்களில் விசாரணையை மேற்கொண்ட எல்லா விசாரணையாளர்களும் குறிப்பிட்ட இடத்தைக் கடக்க முடியவில்லை.

“பெயர்…”

“துவாரகா…”

“வயது…”

“இருபத்தியிரண்டு…”

“ம்… உமது அப்பா எங்கே…? “

“அவர் .இஞ்சயிருந்து தப்பி வெளிநாடு போயிற்றார்…”

“உண்மையாகவா….?”

“ஓம்”

“ஸ்ஸ்… ஆண்டவரே… அப்படியெனில் நமது ஆட்கள் கைப்பற்றியது பிழையான சடலமா…? சரி உமது அப்பாவை ஒத்த சாயலுடைய வேறு யாராவது அங்கிருந்தனரா..? “

“தெரியாது…”

“ம்.. நல்லது. உமது அப்பாவின் கீழிருந்தவர்கள் எத்தனை பேர்? எங்கேயவர்கள்?..”

“இருவர் இறந்துவிட்டனர். மூவர் முகாமிலுள்ளனர்…”

“ஆக ஐந்து பேரா…? “

“ஓம்…”

“ஐந்து பேரை வைத்தா உமது அப்பா இவ்வளவும் செய்தார்? யார் அவர்கள்? என்னென்ன வேலை செய்தனர்?”

“சிவமண்ணையும் மனோன்மணியக்காவும் பிழியிற, வறுக்கிற, பொரிக்கிற வேலையள் செய்வினம். வசந்தியக்கா எல்லா செக்சனையும் ஒன்றாக்கிற வேலை செய்வா. குமார் அண்ணை வழமையாக வசந்தியக்காவுக்கு கடலை போட்டுக் கொண்டிருப்பார். கடாபி அண்ணைதான் பைக்கற் பண்ணி ஸ்பொட்டுக்கு அனுப்புறது….”

3

பிரித்தானியா எம்பசியிலயிருந்து பிரபாகரனுக்கு அவசரமாக ஒரு கடிதம் வந்தது. சில குழப்பங்களைத் தீர்க்குமாறு அதில் கேட்கப்பட்டிருந்தது. முக்கியமாக பெயர்க் குழப்பம். V. பிரபாகரன் என சுருக்கமாக குறிக்கப்பட்டிருந்த பெயரை வாசிக்கும்போது வீரப்பிள்ளை பிரபாகரன் என வருகிறது. அவரது சரியான பெயர் வீரப்பிள்ளை பிரபாகரனா அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனா என்றும் நோர்வே அல்லது எரித்திரியா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோராமல் பிரித்தானியாவை தேர்வு செய்தமைக்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்கின்றனவா எனக் கேட்டிருந்தனர்.

அவர்கள் கேட்டிருந்த அத்தனை சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் மீண்டுமொரு விபரமான விண்ணப்பம் தயார் செய்து அனுப்பினார். வெள்ளைக்காரன் செய்துவிட்டுப்போன குழப்பங்களிலிருந்து ஆரம்பித்தது பிடிக்காமல் போயிருக்குமோ என நினைத்து விட்டு ஐம்பத்தாறாம் ஆண்டு கலவரத்திலிருந்து ஆரம்பித்தார்.

4

தெடுத்தனையில முந்தி மீசை வீரப்பிள்ளை மீசை வீரப்பிள்ளை என்று ஒரு ஆள் இருந்தவர். ஆளின்ர பெயர் தெடுத்தனை கடந்து முழு வடமராட்சியிலும் பேமஸ். இதுக்கு இரண்டு காரணம். முதலாவது, அனேக தெடுத்தனையாரைப் போலவே ஆளும் பெரிய சண்டியன். இரண்டு, ஆள் வைத்திருந்த மொரிஸ் மைனர் கார்.

மீசையரோட கொழுவிப் போட்டு யாராவது இரத்தக் காயம் படாமல் போக முடியாது. அனேகமாக எதிராளியின்ர மூக்கைத்தான் உடைப்பார். பல்லுக் கழன்ற ஆட்களும் இருக்கினம். ஆள் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆரின்ர புதுப் படம் வந்தால் அவரின்ர மொரிஸ் மைனர் கொள்ளாத ஆட்களோட வின்சருக்கோ, சிறிதருக்கோ போவார். அந்த நேரத்து அனேக இளம் பொம்பிளையளும் வாத்தியார் ரசிகைகளாகவே இருந்தார்கள். பஞ்சவர்ணக் கலர் உடுப்போட ஒரு அரைக் கிலோ மீற்றர் தூரம் ஓடி வந்து மரத்தைச் சுத்தி வந்து பாடுறதில அப்பிடி என்னத்தைக் கண்டுதுகளோ தெரியாது. இப்பிடி எம்.ஜி.ஆர் ரசிகையான ஒருத்தியையே லவ் பண்ணி, எம்.ஜி.ஆர் பாணியிலேயே கூரை பிரிச்சு இறங்கி பெட்டையைக் கடத்திக் கொண்டுபோய், எல்லாரும் செய்யிறது மாதிரியே சன்னதி கோயிலில வைச்சு தாலி கட்டினார்.

அது சிங்களம் மட்டும் சட்டம் வந்த நேரம். ஆரம்பத்தில் மீசையருக்கு இதிலயெல்லாம் இன்ரஸ்ற் இருக்கயில்லை. ஆளுக்கு தமிழ் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். சிங்களம் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். தூசணம் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். ஆனால், அவரது கூட்டாளியள் சிலருக்கு தமிழரசுக் கட்சியில நல்ல ஈடுபாடு. அவையளோட திரிஞ்சு திரிஞ்சு ஆளுக்கும் அரசியல் மெல்லப் பிடிபடுது. அந்த நேரம் பருத்தித்துறை முற்றவெளியில் நடந்த தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில, ஆர் என்ன என்று இல்லாமல், மேடையில் நின்ற அனைவருக்கும் இரத்தத் திலகமிட்டார். இப்படியாக மற்றையவர்களின் இரத்தத்தை சிந்த வைத்துக்கொண்டிருந்தவரின் இரத்தம் சிந்த ஆரம்பித்தது.

தலை போனாலும் பரவாயில்லை, சிங்களச் சிறீயுள்ள இலக்கத் தகட்டை காருக்குப் போடுவதில்லை என முடிவெடுத்தார். அப்ப பருத்தித்துறையிலதான் பொலீஸ் ஸ்ரேசன். இலக்கத் தகட்டில் தார் பூசியபடி மீசையரின் மொரிஸ் மைனர் கார் நெல்லியடிச் சந்தியில சுத்திக் கொண்டிருக்கும். ஒரு நாள் இன்னும் கொஞ்சப் பேரைக் கூட்டிக் கொண்டு போய் நெல்லியடிச் சந்தியில நின்று போற வாற அரசாங்கப் பேருந்துகளின் இலக்கத் தகட்டிற்கு தார் பூசினார். இந்த அமளி துமளிகள் நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் மீசையருக்கு நல்ல வெறி. அன்று கள்ளுத் தவறணையில் சின்னப் பிரச்சினை. பிரச்சனைப்பட்டவரின்ர பெயரும் சிறீ. மீசையருக்குச் சிங்கள சிறீதான் ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அடுத்து வந்த சில நாட்களை சிறீ மந்திகை ஆஸ்பத்திரிகையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. கடைசி மட்டும், சிறீயின் முறிந்த கை எலும்பு வெளியில் தள்ளிக் கொண்டேயிருந்தது.

ஆரோ ஒருத்தன் மீசையருக்கு நல்லா ஏற்றி விட்டிட்டான். இப்பிடி சிங்களச் சிறீக்கு மேலே தார் பூசிக் கொண்டு தமிழ் ஏரியாவில ஓடித் திரிஞ்சு என்ன பிரியோசனம் என. அடுத்த கிழமை இன்னும் நாலு பேரைக் கூட்டிக் கொண்டு அனுராதபுரம் போனார். கார் மதவாச்சி தாண்டயில்லை. போனதில ஒரேயொருத்தனைத் தான் குற்றுயிரும் குறையுயிருமாக எடுத்தினம். மிச்ச ஆட்களும் இல்லை. காரும் இல்லை.

இந்தக் காலத்தில கனபேர் இந்தச் சட்டத்தை எதிர்த்து தங்களின்ர அரசாங்க உத்தியோகத்தையும் கைவிட்டினம். தமிழ்ப் பகுதி கொந்தளிப்பாக இருந்தது. இதையெல்லாம் சின்ன ஆளாக இருந்த பிரபாகரன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளுக்கு தார் பூசப்பட்ட சிங்களச் சிறீதான் மனசுக்குள்ள நிற்குது. ஆளின்ர மாமனொருவர் வல்வெட்டித்துறையில இருந்து இந்தியாவுக்கு கடத்தல் வேலைகள் செய்யிறவர். பொடியன் ஏன் இஞ்சயிருந்து இந்தக் கன்றாவிகளைப் பார்ப்பான் என பிரபாகரனை இந்தியா கொண்டுபோய் தெரிந்த வீடொன்றில் விட்டார். தகப்பனைப் போலவே பிரபாகரனுக்கும் வாத்தியார் படமென்றால் உயிர். வாத்தியார் நடிக்கிற படங்களும் அப்பிடித் தானே. அனேகமான படங்களின்ர கதையை ஒரு வரியில் சொல்வதென்றால் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இருந்து ஆதிக்க சக்திகளை வீழ்த்தினார் என்றுதான் வரும். அவர் அனேக படங்களில் அணியும் சிவப்புச் சட்டைக்கும் ஒரு அர்த்தமிருப்பது மாதிரி பிரபாகரனுக்குப் பட்டது.

இந்தியாவில இருக்கும் போது ஆளுக்கு ஒரு லவ் வந்தது. பெட்டையின்ர பெயர் துவாரகா. நல்ல தமிழ்ப் பெயர். சொன்னால் வாய் மணக்கும். ஆளுக்கு லவ் வந்ததுக்கு முக்கிய காரணமே பெயர்தான். பெட்டைக்கும் பிரபாகரனில நல்ல பிடிப்பு. இதுக்குப் பிறகு, இலங்கையில நடக்கிற சத்தியாக்கிரகம், மறியல் செய்திகளை ஒன்றுக்கு இரண்டு தரம் வாசிக்கத் தொடங்கினா. சிங்களம் மடடும் சட்டக் கொந்தளிப்பு கொஞ்சம் தணிய, பிரபாகரனை மீண்டும் இலங்கைக்கு கூட்டி வந்து விட்டுவிட்டனர். அந்த தமிழ்க் காதல் அற்ப ஆயுளுடன் முடிந்தது.

பிரபாகரன் யாழ்ப்பாணத்தில காலடி எடுத்து வைக்கும் போது, பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில வைச்சு துரையப்பாவின்ர தலையில வெடி விழுது. பிறகு கே.கே.எஸ் றோட்டில இரண்டு ஆமிக்காரர், முருங்கன் காட்டிற்குள் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை என மரணங்கள் தமிழர்களை மகிழ்விக்கத் தொடங்கியது. பிரபாகரனுக்கும் இயக்கங்களோட தொடுப்பிருந்தது, தலைமறைவாக இருந்த சிவகுமாரனின் பொடியளில தொடங்கி, தாஸ், கிட்டு மட்டும் ஆட்களைத் தெரியும். நெல்லியடியில் நாலு ஆமிக்காரரைச் சுட்ட சம்பவம் அப்ப பெரிதாகக் கதைக்கப்பட்டது, டெலிக்கா வாகனத்தில போய்த் தான் வெடி வைச்சவையள். அந்த வாகனம் அன்று முழுவதும் பிரபாகரனின் வீட்டில்தான் நின்றது. கலியாணம் செய்ததுக்குப் பிறகும் இயக்கங்களோட இருந்த தொடுப்பை விடவில்லை. எப்பவும் மேலதிகமாக ஐந்து பத்துப் பேருக்கு சமைப்பதே அவரின் மனைவியின் தொழிலானது. உமா மகேஸ்வரனில தொடங்கி, தாஸ், பேபி, கிட்டு, பண்டிதர் வரை எல்லாரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்துப் போயினர்.

பிறகு புலிகளின் கையில் முழுக் கொண்றோளும் வந்ததுக்குப் பிறகு, பிரபாகரனுக்கு ஒரு சிற்றூரவை தலைவர் போஸ்ற் கிடைச்சது. அந்த நேரம் கோயில், வாசிகசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் கண்டிப்பாக ஆளின் பேச்சிருக்கும். கண்ணில் தெரியும் தமிழீழம், கிழக்கு வானம் சிவக்கிறது, ஆண்ட பரம்பரை போன்ற வசனங்களை அடிக்கடி உச்சரித்தார். “போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்” என்ற ஜே.ஆரின் புகழ் பெற்ற வசனத்தை, ஜே.ஆருக்கு அடுத்ததாக தமிழர் தரப்பில் உச்சரித்ததென்றால் அது ஆளாகத் தானிருக்கும். களத்தில் காத்தான் முடிய, ஒரு நடுச் சாமத்தில் இந்த வசனத்தை உச்சரித்தார்.

பிள்ளையளுக்கு வைச்சதெல்லாம் நல்ல நல்ல பெயர்கள். குறிப்பாக மகளுக்கு வாய் மணக்க மணக்க துவாரகா எனப் பெயரிட்டார். பின்னாளில் ஒரு மிக்சர் கொம்பனியை ஆரம்பித்து, ஐந்து வேலையாட்களுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

5

மனிசியும், தானும் செல்லடியில் காயம்பட்டது, மகன் செத்தது, இதைவிட பல்லாயிரம் சனம் செத்தது என ஒரு பெரிய ஸ்ரோரியை எழுதிக் குடுத்தும் அவரது விசா விண்ணப்பத்தை பிரித்தானியா எம்பசிக்காரன் நிராகரித்தான். தனது பெயரை வீரப்பிள்ளை பிரபாகரன் எனக் குறிப்பிடாமல் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனக் குறிப்பிட்டிருந்தால் சிலவேளை விசா கிடைத்திருக்கலாமென எண்ணத் தலைப்பட்டார்.

தாய்லாந்தின் ஒதுக்குப்புற கிராமமொன்றில்தான் ஆள் தங்கியிருந்தவர். அன்று முழுப் போதையில் இருந்தார். இவரது அறையில் கூட இருந்த பொடியனுக்கு தெரிந்த யாரோ, ஒரு படகை ஏற்பாடு செய்திருந்தார்களாம். திடீரென கிடைத்த வாய்ப்பு. அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த அந்த படகிலிருந்த எழுபத்தியிரண்டு பேரில் ஒருவராக இருந்தார். இடையில் அவுஸ்ரேலிய கடற்படையினர் படகை வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு போனார்கள்.

அங்கு விசாரணை நடந்தது. எல்லோருடனும் சிடுசிடுத்துக் கொண்டிருந்த கிழட்டு வெள்ளையன் இவரது பெயரைக் கேட்டான். V.பிரபாகரன் என்றார். அவன் திடுக்கிட்டு விறைத்து நின்றான். பிறகு, ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு கைலாகுக்காக தனது கையை நீட்டினான்.

நயினாதீவுக்கு படகில போறது மாதிரி அந்த சீசனில அவுஸ்ரேலியாவுக்கு எங்கட ஆக்கள் சாரிசாரியாக போனார்கள். கடலில் மூழ்கிச் செத்தவையள் போக, எஞ்சியவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து பெருநிலப் பரப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் தொகுதியினரில் ஒருவராக பிரபாகரனுமிருந்தார்.

இந்த சந்தோசத்தை வீட்டுக்குச் சொல்ல ரெலிபோன் எடுத்தார். இதுக்கு முதல் நாள்த் தான் துவாரகாவை இராணுவம் விடுதலை செய்திருந்தது. தவறுதலாக கைது செய்து விட்டோம் என வருத்தம் வேறு தெரிவித்திருந்தார்களாம். பிள்ளை ரெலிபோனில ஒரு வசனம் கதைக்குதில்லை. அழுது கொண்டேயிருக்குது. பிரபாகரனுக்கும் மனமுடைஞ்சு போயிற்றுது. அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கதைச்சார்.

“பிள்ளை அழாதையம்மா.. எல்லாம் சரிவந்து கெதியில உங்களையும் கூப்பிடலாமென்று நினைக்கிறன்… கொஞ்சம் பொறுத்துக் கொள்ளம்மா..”

“இல்லையப்பா….. எனக்கு எங்கட நாட்டை விட்டிட்டு வர விருப்பமில்லை…”

அவர் ஒரு நிமிசம் மௌனமாக இருந்தார். பிறகு -

“நாடும் மசிரும்” என்றார்.

this is that story...

துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்

நல்லூர் திருவிழா தொடங்கும் காலம் அண்மிக்கும் போது 'காவடியை' மீண்டும் யாழில் கண்டது சந்தோசம் :D

வரலாற்றில் நாம் சுமந்து வந்த இந்த தீட்டுத் துணிகளை

எப்போது சலவை செய்வோம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவடியின் மனசுக்குள்ளை அடிக்கிற ஓ டண்ணடக்கா டணக்குடக்கா சத்தம் எனக்கு காதிலை கேக்கிது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி எதிர்பார்த்த மாதிரி ஆகவில்லை. படுதோல்வி - இதைத் தனித் தலைப்பில் போடுவதற்கு தலைமை யோசிக்குது

நல்லது. சுவரில் பெரிய எழுத்தில் எழுதியிருப்பதை வாசிக்க விரும்பாதவர்களை என்ன செய்வது??

நீங்கள் புத்தகத்தை வாசித்தீர்களா? அதில் எங்கு தவறு இருப்பதைக் கூறுகிறீர்கள்?

கட்டாய ஆட்சேர்ப்பு நடக்கவில்லை என்கிறீர்களா? ஊட்குத்து/வெட்டு நடக்கவில்லை என்கிறீர்களா?

அல்லது புலிகள் எல்லாரும் வானில் இருந்து இறங்கி வந்த தேவதூதர்களா? அவ்ர்களை உங்களால் சாதாரண மனிதர்களாகப் பார்க்க முடியாதா?

ஒரு மாபெரும் போராட்டம்/தியாகங்கள் ஏன் தோற்றுப் போனது?

---

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வடலிக்காரர் அனுப்பிய புத்தகம் கிடைத்தது. இன்னமும் வாசிக்கவில்லை (சில கதைகள் இங்கேயே ஒட்டுப்பட்டதால் நாலைந்துதான் மிச்சம் என்று நினைக்கின்றேன்).

மற்ற இயக்க போராளிகள் ரோட்டில போகும்போது பிடித்து கொண்டுவந்தார்கள்.

புலிகளை ஓர்டர் பண்ணி செய்வித்தார்கள்.

கருணா,பிள்ளயான்,கே.பீ எல்லோருக்கும் சீ.பீ.யூ பழுதாகிபோய்விட்டது. சரணடைந்தவர்களை கொல்லாவிட்டால் அவர்களின் யோக்கியதையும் தெரிந்திருக்கும்.

சொந்த உறவுகளுக்கிடையிலேயே பிரிவினையை உண்டாக்கி நாம் இன்னமும் இப்படி பிளவுபட்டிருப்பதற்கு மூல காரணமானவர்கள் அவர்களே.

வடலிக்காரர் அனுப்பிய புத்தகம் கிடைத்தது. இன்னமும் வாசிக்கவில்லை (சில கதைகள் இங்கேயே ஒட்டுப்பட்டதால் நாலைந்துதான் மிச்சம் என்று நினைக்கின்றேன்).

அந்தக் "கடவுள்" கதை நன்றாக இருந்தது. "தஸ்யூ" கதை புரிபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற இயக்க போராளிகள் ரோட்டில போகும்போது பிடித்து கொண்டுவந்தார்கள்.

புலிகளை ஓர்டர் பண்ணி செய்வித்தார்கள்.

கருணா,பிள்ளயான்,கே.பீ எல்லோருக்கும் சீ.பீ.யூ பழுதாகிபோய்விட்டது. சரணடைந்தவர்களை கொல்லாவிட்டால் அவர்களின் யோக்கியதையும் தெரிந்திருக்கும்.

சொந்த உறவுகளுக்கிடையிலேயே பிரிவினையை உண்டாக்கி நாம் இன்னமும் இப்படி பிளவுபட்டிருப்பதற்கு மூல காரணமானவர்கள் அவர்களே.

நீங்கள் சொல்லவாறது புரியுது.................

இன்னும் ஒரு 20 வருடம் போராட்டம் தொடர்ந்திருந்தால் பிரபாகரனும் அரசுடன் இணைந்து மக்களை கொன்றுஇருப்பார் இதைதானே விக்கி விழுங்கிறீங்கள்???

(உட்காந்திருந்து யோசிப்பாங்களோ???)

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி

yo-karnan.jpg

முள்ளிவாய்க்கால் துயரம் நடந்து இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களும் ஆயிற்று. முள்போல் குத்திய வலியையும் தூக்கமில்லாத இரவுகளையும் புலம் பெயர் தமிழர் அநேகர் அனுபவித்திருப்பர். என்றாலும் இந்த இரண்டு வருடங்களில், "ஏன் தோத்தாங்கள்?" என்ற கேள்வி barbecue party களுக்குள் சுருங்கிவிட்டது. கேள்விப்படவே தாங்கமுடியாத வலியை அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வன்னி வாழ் மக்கள், மற்றும் முன்னால் போராளிகள் படும் துன்பங்கள் இந்த "ஏன் தோத்தாங்கள்?" வியாக்கியானங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அதைவிட முக்கியமாக எழுதப்படவில்லை என்ற ஆதங்கங்களுடன் இருந்த என் கையில் அகப்பட்ட சிறுகதைத் தொகுப்பு யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத்துணி".

யோ.கர்ணன் யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் என்று புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்புக் கூறுகின்றது. அவரின் சிறுகதைகள் முள்ளிவாய்க்கால் துயரங்களைப் பேசுகின்றன. முக்கியமாக நாம் அதிகம் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிராத பேசாப்பொருட்கள் சிலவற்றையும் பேசுகின்றன. என்பதால், தூய்மைவாதிகளிற்குப் பிடிக்காமல் போகலாம். போகட்டுமே! பிடிக்காது என்பதற்காக நடந்ததை கண்ணை மூடிக்கொண்டு 'ஒண்டும் தெரியாத பூனை' மாதிரி இருக்கவேண்டும் என்பதில்லை.

ஒரு மாபெரும் துயரத்தைக் காவும் கர்ணனின் கதைகள் ஒப்பாரி நடையில் எழுதப்படவில்லை. மிக மெலிதான அங்கத நடையில் கதைகளை எழுதியுள்ளார். இன்னொன்றையும் சொல்லவேண்டும். முழுக்கதைகளையும் உயிர்ப்பான யாழ்ப்பாண/வன்னி பேச்சுத்தமிழில் எழுதியுள்ளார்.

ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பாக மிக அதிகமாக இரண்டுவிதமான பார்வைகளைக் காணலாம்.

(1) புலிகளைக் கிட்டத்தட்ட தேவர்கள் அல்லது உப கடவுளர் "range" இற்கு ஏற்றுவது.

(2) புலிகளை விமர்சிக்கின்றேன் என்ற பெயரில் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது - இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் "இலங்கை அரசாங்கம் அப்படியொன்றும் தமிழர்களுக்குக் கஷ்டம் கொடுக்கவில்லை. போராட்டம் என்பது சாப்பிட்டது செமிக்கக் கஷ்டமான கொஞ்சப்பேர் தொடங்கிய ஒன்று" என்கின்ற தொனி தெரியும்.

மேலேயுள்ள இரண்டுமில்லாமல் நடுநிலைப் பார்வைகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு. கர்ணன் மேலேயுள்ள (1) அல்லது (2) இனை எடுக்காமல் சொல்ல வேண்டியவற்றை எதுவித மறைத்தல்களுமின்றிச் சொல்கிறார். நடுநிலை என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும் என்பதால் நீங்களே புத்தகத்தை வாசித்து முடிவு எடுங்கள்.

*************

"தேவதைகளின் தீட்டுத்துணி" வடலி வெளியீடாக ஓகஸ்ட் 2010 இல் வந்தது. சில கதைகள் இணையத்தில் (கர்ணனது blog இல்) கிடைக்கின்றன.

1. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்......

2. மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி

3. பெயர்

4. தஸ்யுக்களின் பாடல்கள்

5. சுதந்திரம்

6. பாதுகாப்பு வலயம்

7. திருவிளையாடல்

8. றூட்

9. சடகோபனின் விசாரணைக் குறிப்பு

10. தேவதைகளின் தீட்டுத் துணி

முதல் கதை "எப்படி ஒரு பயந்த, கொஞ்சம் பட படப்புக் குணமுள்ள பெட்டை, ஒரு பெரிய தியாகத்தைச் செய்கிறாள்" என்று விபரிக்கிறது. தியாகந்தான் வீணாகப் போயிற்று.

"மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி" மறக்கமுடியாத ஒரு கதை. காலத்திற்குக் காலம் (80 களிலிருந்து) இதுமாதிரி நடந்து கொண்டிருக்கிறது. செய்பவர்களும் செய்யப்பட்டவர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். "போடுப்பட்டுக்" கொண்டிருப்பது எல்லாம் நம்மவர் என்பதுதான் ஒரு பொதுத்தன்மை. கர்ணனின் எழுத்துநடையில் ஒரு கொழும்பு லொட்ஜ், வெளிநாட்டுக்குப் பறந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க ஆயத்தமாகும் ஒரு "முன்னாள்", சில விடலைப் பையன்கள் என்று ஒருவித "சீன்" விரிகிறது.

வெதுப்பி, குளிர்களி முதலிய சொற்களை ஒரு காலத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் "பெயர்" சிறுகதை இன்னும் சுவாரசியம் ஆகும். இதை வாசிக்கும்போது 1991- 1994 வரை லீவுகளில் யாழ்ப்பாணம் வரும்போது வவுனியா ஆமிப் பெடிச்சிகளின்(!) செக் 'பொயின்ற்' தாண்டி, ஓமந்தை வந்து புலிகளின் சோதனை நிலையத்தில் எங்கள் தமிழ்ப் புலமையைக் காட்டியது ஞாபகம் வருகிறது. கதை, "மேனன்" தமிழ்ப்பெயரா என்ற ஆராய்ச்சியில் இருந்து , "சதுரங்கனி" சாப்பாட்டுக் கடையில் முடிவுக்கு வருகிறது.

"தஸ்யுக்களின் பாடல்கள்" ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியுமுள்ளது. மீண்டும் ஒருமுறை முயற்சிக்கின்றேன்.

"சுதந்திரம்", இப்படியும் வன்னிச் சனங்கள் கஷ்டப்பட்டனர் என்று சொல்கிறது. ஆறாவது கதையான " பாதுகாப்பு வலயம்" வன்னியில் "கோரங்கள்" நடந்தபோது நின்ற ஒருவரால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என்பது என் கருத்து. (மற்றவர்களும் முயற்சிக்கலாம்!) .

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது ஏழாவது கதையாக உள்ள "திருவிளையாடல்". முள்ளி வாய்க்காலில் இறங்கிய கடவுளை இந்தப் பக்கம்"பங்கர்" வெட்டக் கூப்பிடுது. தப்பிப் பிழைத்து அந்தப் பக்கம் போனால், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னால் மொபைல் போனால் ஒருவன் அவரைப் படம் பிடிக்கிறான். இப்படிச் சிம்பிளாகக் கதையைக் கூற முடியாது. முழுக் கதையையும் வாசியுங்கள்.

சில உண்மைகள் எப்பவும் தெரிய வரா. அதேபோல் "ரூட்" கதையில் கதையின் முடிவில் அவனின் மார்பைத் துளைத்த ரவை எங்கிருந்து வந்தது என்று தெரியவராது. தெரிய வந்துதான் என்ன ஆகப் போகிறது? "சடகோபனின் விசாரணைக் குறிப்பு" ஒரு விசாரணை இப்படியும் இருந்திருக்கலாம் என்று சொல்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் அநேகமாக இப்படித்தான் விசாரணை நடந்திருக்கும் என்று யோசிக்கவைக்கிறது. "தேவதைகளின் தீட்டுத்துணி" , இதுதான் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதை, அத்தோடு கடைசிக் கதை. கதையின் ஆன்மாவும் கதையின் கடைசி வரியிற்தான் இருக்கிறது.

மொத்தத்தில் ஈழத்தமிழர் எல்லாரும் கட்டாயம் படிக்கவேண்டிய சிறுகதைத்தொகுப்பிது. வடலி இணையப்புத்தகக் கடையிற் கிடைக்கிறது. விலை US$ 7.90 மட்டுமே, அனுப்பும் செலவும் சேர்த்து.

"தேவதைகளின் தீட்டுத்துணி" வடலி இணையப்புத்தகக் கடையில்

---------

குறிப்பு

"கதை" என்று நான் மேலே குறிப்பிடுவவை "சிறுகதை" என்றுதான் இருக்கவேண்டும். என்றாலும் "கதை" என்ற சொற்பதம் இங்கு பொருத்தமாக, இயல்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

http://www.ssakthive.../blog-post.html

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் யாழில கனபேருக்கு எங்கட புழுங்கல் அரிசிச் சோறு, ஊர் ஆட்டுக்கறிப் பாசலிலை படு பொறாமை. அந்த விறகடுப்புச் சாப்பாட்டை நினைச்சால் இப்பவும்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.