Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

Featured Replies

:D

மேற்கு நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பல சட்டங்களை இயற்றியுள்ளன. பயங்கரவாதம் என்னவென்று வரைவிலக்கணம் இல்லாமல் சட்டங்களை இயற்றமுடியாது. எனினும் இத்தகைய வரைவிலக்கணங்கள் மிகவும் சர்ச்சைக்குரியதே. அப்படியிருந்தும் ஒவ்வொரு நாடுகளும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப பயங்கரவாதத்திற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். எனவே தமிழர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துப்படும்போது அது குத்தியவர்களைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தப்படும். ஆகவே அர்த்தங்களைப் பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு தொடர்ந்தும் முத்திரை குத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கவேண்டும்.

குற்றம் என்ன என தெரிந்தால் தான் அதை எதிர்த்து வாதிட முடியும். இல்லாவிடில் அது ஒரு முடியாத விடயம். மேலை நாடுகளில் 'பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்' அரசதரப்பால் நீதிபதிக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படுகின்றது. குற்றம்சாட்டப்பட்டவர், அவரின் சட்டத்தரணிகளுக்கு கூட சொல்லப்படுவதில்லை.

கனடாவில் முத்திரை குத்தப்பட்டபொழுது (சித்திரை 2006) விடுதலைப்புலிகள் கேட்டது, 'இதற்குள் என்ன உள்ளது?, எதற்காக இல்லடி முத்திரை குத்தப்பட்டுள்ளது? இதை எவ்வாறு சட்டரீதியாக எதிர்கொள்ளலாம்? எவ்வளவு செலவு ஆகும்?

இறுதியில் புலம்பெயர் கனடா வாழ் தமிழர்களால் எந்த பதிலும் அமைப்பிற்கு கொடுக்கமுடியவில்லை, குற்றத்தை பலம் வாய்ந்த சடத்தரணிகளை அமர்த்தியும் எதிர்கொள்ள முடியவில்லை. பல ஆயிரம் மக்கள் பணம் செலவழிந்தும் தடை/முத்திரை இன்றுவரை உள்ளது.

மேலும், பலமுறைகள் மேலைத்தேய நாடுகளுக்கு கூறப்பட்ட விடயம்: ' நாம் உங்கள் நாட்டு பாதுகாப்பு விடயங்களுக்கு (Natioal Security) எதிரானவர்கள் அல்ல', 'நாங்கள் எமது மண்ணில் சுதந்திரமாக வாழ விரும்பும் ஒரு மக்கள் விடுதலை அமைப்பு'.

Edited by akootha

  • Replies 142
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உணர்வு எனும் நெய்யினை கொண்டு உருவாக்கிய திரி அவ்வளவு விரைவாக அணைந்து விடாது போல இருக்கின்றது !

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

உங்கள் கருத்தையே பலரும் முன்னர் சொல்லியிருந்தார்கள். சிலவேளை ராஜீவின் கொலையைக் காட்டிலும் புலிகளின் தாக்குதல் செயற்பாடுகளின் விஸ்த்தீரணம் இந்தியவைக் கவலைப்படுத்தியிருக்கலாம். அதன்விளைவு, தமிழரைத் தனது ஜென்ம விரோதியாகவே பர்க்கத் தொடங்கிவிட்ட இந்தியா புலிகளை அழிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

நான் போராட்டத்திலிருந்து எப்போதுமே விலகியது கிடையாது. எமது ஒரே நம்பிக்கையாகவும் கனவாகவும் இருந்த எமது விடுதலைப் போராட்டம் இப்படியானதொரு முடிவிற்கு வருமென்பதை இன்றை வரையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் தேடித்தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். அந்த சிந்தனைகளில் எழுந்த சில கேள்விகளைத்தான் நான் உங்கள் யாவருடனும் பகிர்ந்துகொண்டேன்.

எமக்குள் கருத்தாடுவதாலும், விமர்சிப்பதாலும் நாம் மேலும் மேலும் தெளிவுபெறுகிறோம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. விமர்சனங்கள் எப்போதுமே எமக்கு எதிராகத்தான் அமைகின்றன என்ற புரிதல் தவறானது.

நான் இதுவரை யோசித்து வந்த தளத்திலிருந்து சற்று வெளியே வந்து சிந்திக்கலாம் என்று எண்ணியதன் விளவுதான் எனது கருத்துக்கள்.

இங்கு கருத்துப்பகிர்ந்த நெடுக்கர், மருதங்கேணி, நீங்கள், நிழலி, கிருபன், இசை ...இப்படி எல்லாரினதும் கோணங்களிலிருந்தும் கருத்துக்களைப் பார்க்கக் கிடைத்ததில் சந்தோஷம்.

எனது கருத்துக்கள் முழுமையானவையா என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனல் மற்றவர்களின் கருத்துக்களைப் பார்க்கும்போதுதான் அட, இப்படியும் நடந்திருக்கலாம்தானே என்று எண்ணத் தோன்றுகிறது.வேறு காரணங்களும் இருக்கிறது என்கிற உண்மை தெரிகிறது.

இந்தத் திரி இவ்வளவு தூரம் வருவதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சியே!

இன்னுமொருதடவை, உங்கள் எல்லோருக்கும் நன்றியும், வணக்கமும் !!!!

நான் இதுவரை யோசித்து வந்த தளத்திலிருந்து சற்று வெளியே வந்து சிந்திக்கலாம் என்று எண்ணியதன் விளவுதான் எனது கருத்துக்கள்.

இங்கு கருத்துப்பகிர்ந்த நெடுக்கர், மருதங்கேணி, நீங்கள், நிழலி, கிருபன், இசை ...இப்படி எல்லாரினதும் கோணங்களிலிருந்தும் கருத்துக்களைப் பார்க்கக் கிடைத்ததில் சந்தோஷம்.

எனது கருத்துக்கள் முழுமையானவையா என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனல் மற்றவர்களின் கருத்துக்களைப் பார்க்கும்போதுதான் அட, இப்படியும் நடந்திருக்கலாம்தானே என்று எண்ணத் தோன்றுகிறது.வேறு காரணங்களும் இருக்கிறது என்கிற உண்மை தெரிகிறது.

இந்தத் திரி இவ்வளவு தூரம் வருவதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சியே!

மனிதத்தின் மிகவும் இழிவான கொடூரங்களை சிங்கள அரசு செய்திருக்கிறது - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

Tamils for Obama (TfO) handed complementary copies of Channel 4 Documentary DVDs to those attended. "We plan to have copies of this DVD hand-delivered to the offices of every representative and senator. We will also give DVDs to think tanks, influential citizens, church groups, libraries, colleges and universities, and any other person or institution we think should be aware of these matters," a spokesperson for TfO told TamilNet.

இவ்வாறு புலம்பெயர் நாடுகளிலுள்ள ஒவ்வொருவருக்கும் இனப்படுகொலைக் காட்சிகளைத் தொகுத்து வழங்குங்கள் ரகுநாதன்.

உங்கள் மாற்றுச் சிந்தனைகள் காலத்தை வீணே போக்க உதவாமல் இந்த மாதிரி பயனுள்ளதாக இருக்கும்படி அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:) இனி எழுத எதுவுமேயில்லை. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் !!!

எழுதுவம் என வரும்பொதே விடைபெற்றுவிட்டீர்களே??

விவாதங்கள் தேவையானவை அதுவும் இப்படி நாகரீகமான முறையில் செல்லும் விவாதங்களால் பலவற்றை நாம் அறிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

நான் சரியென நினைப்பது எப்போதும் சரியாகிவிடாது ......................... இன்னொருவரால் அது பிழையென நிருபிக்கபடலாம்.

எனது கருத்தை உங்களுக்குள் திணிப்பதால் எந்த பயனும் இல்லை நானும் நீங்களும் ஒர விடயத்தை பற்றி பேசி விசயங்களை பகிர்வதால் நானும் நீங்களும் பிரச்சனைகளின் இன்னொரு பக்கங்களையும் பார்க்கிறோம்.

அரசியல் என்பது சாக்கடை என்றாகிபோய்விட்டது................ அதில் விழாதுபோனாதுதான் புலிகளுக்கு பெருமை. அதை ஏன் நீங்கள் சிறுமைபடுத்தி பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. புலிகள் தங்களுடைய இருப்பை கட்டமைப்புகளை பாதுக்க போர் நடாத்தினார்கள் என்ற எனது கருத்து தற்பாதுகாப்பபு போர் என்ற சொற்பதத்தினுள் புதைந்திருந்தது உங்களால் மேலோட்டமாக காணபட்டிருக்கிறது.

இன்றைய இஸ்ரேலின் கொடுமைகளை எண்ணிபாருங்கள்................. என்ன விடைகளை தரபோகிறீர்கள்?

சர்வதேச விதிகளுக்கு அமைய ஐநா வின் ஆய்வளர்கள் எல்லோரும் ஈராக்கில் குடியமாந்து 9 வருடங்கள் சாதாம் உசைனின் வீட்டுக்குள்ளும் படுக்கை அறைக்குள்ளும் தேடியும் எந்த ஆயுதமும் இல்லை என்று சொன்ன பின்பும் அமெரிக்கா ஆயுதம் உள்ளது என்று போர்தொடுக்கிறது............... எதற்கான விடைகள் எங்கே உள்ளன?

கியுபா என்ன குற்றம் செய்கிறது அமெரிக்கா மீது குண்டுபோடுகிறதா ஐரோப்பியர்களை கொல்கிறதா?

வடகொரியாவிற்கு அணுஆயுத படிவங்களை வழங்கிய பாகிஸ்தானை யார் தண்டிக்கிறார்?

பாலஸ்தீன விடுதலை பற்றி பேசும் இந்தியாவல் ஏன் காஸ்மீரை விடுவிக்க முடியவில்லை?

இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளுக்கு நடுவே சிக்குண்டு நசிபட்டே புலிகள் 30 வருடங்கள் போரை நடாத்தினார்கள் ஆயுதபோரால் சாதிப்பதற்கு மேலாக சாதித்தும் இருந்தார்கள் அரசிலமைபை;பும் மக்கள் எழுச்சியும்தான் இனி தேவை தேவை என்று சொன்னார்கள் உண்மையும் அதுதான். அதை புரிய கூடியவர்களாக நாம் இல்லை என்ற உண்மையே கசப்பானது. புலிகள் தனித்த மட்டடில் நகர முடியாது எதிரியின் நகர்வுகளுக்கு எற்ப தம்மை வடிவமைக்க வேண்டிய தாருணங்கள் இருந்தன அதனுடதான் ஒரு விடுதலை போரை நாடாத்த முடியும். இல்லையேல் ஜேசுவின் தத்துவத்துக்கு அமைய ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டியதுதான்............... அப்படி காட்டியிருந்தால் முள்ளிவாய்க்கால் என்பது 1983 லேயே நடந்திருக்கும். ஆயதபோராட்டத்தை புலிகள் தொடக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் எடுகக்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி,

நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் புலிகளுக்கோ அல்லது அவர்களின் தேசிய விடுதலைக்கான போருக்கோ எதிரானவன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர்களை இதுவரையில் கண்மூடித்தனமாக ஆதரித்துத்தான் வருகிறேன். நீங்கள் என்னைப் புலிகாய்ச்சல் பிடித்தவன் என்கிற அடிப்படையில் நினைத்து கருத்து எழுதினால் நான் பேசுவதில் பயனில்லை.

இன்றைக்குவரை, புலிகளால் தெற்கிலும், இந்தியாவிலும் நடத்தப்பட்ட சிவிலியன் அல்லது அரசியல் இலக்குகள் மீதான தாக்குதல்களை நான் முடிந்தலவிற்கு நியாயப்படுத்தியே வந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அவ்வாறான தாக்குதல்கள் நடக்கவேன்டும் என்றும் கருதினேன். வன்னியிலும் மற்றும் அனைத்துத் தமிழர் தாயகத்திலும் தினம் தினம் எம்மக்கள் நரவேட்டையாடப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி அவர்கள்மீது திருப்பித் தாக்குவதுதான் என்று மிகவும் திடமாக நம்பினேன். அதற்காகவே சாணக்கியன் போன்ற பல மனிதவுரிமைவாதிகளுடன் இதே களத்தில் நீண்ட நேரம் விவாதித்து இருக்கிறேன்.

ராஜீவின் கொலைகூட காலத்தின் தேவை, அவர் மறுபடியும் வந்தால் எமது நிலமை மோசமாக மாறிவிடும், ஆகவே தூக்கப்பட்டது சரிதான் என்று நானே எனக்குள் சொல்லி வந்ததோடு மற்றையவர்களுடனும் விவாதித்து இருக்கிறேன். இதேபோல கதிர்காமர், நீலன், அமீர், யோகேஸ்வரன் போன்றவர்களின் கொலைக்காக நான் சிறிதும் வருத்தப்பட்டது கிடையாது.

அமீர் இந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியும், அம்பாறை மாவட்டத்தைத் தாரை வார்க்க (எனது நண்பர் ஒருவரால் ரெண்டு நாட்களுக்கு முன்னர் நான் அறிந்துகொண்டது) சம்மதித்ததும் அவர் கொல்லப்படக் காரனங்களாக அமைந்தன என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். எனது கவலை அதுவல்ல.

ரெட்டை வேடம் போட்டு உலகை ஆளும் பலமான சக்திகள் இந்த களையெடுப்புக்களைக் காரணமாக வைத்து எம்மை அழித்துவிட்டார்களே என்கிற ஆதங்கம்தான். நாம் அழிக்கப்பட்டதற்கு இந்தக் கொலைகள் எந்தவிதத்திலும் காரணமாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சிறியளவு காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படி இருந்திருக்கக் கூடாதே என்று கவலைப்படுகிறேன்.

சிங்களத்தின் பிரச்சாரங்களுக்கு இவை பயன்பட்டதை எண்ணித்தான் நான் கவலைப்படுகின்றேன். ஏனென்றால் ஒரு அரசுக்கு சர்வதேசத்திலிருக்கும் அங்கீகாரம் எனும் அஸ்த்திரத்தை வைத்து சிங்களம் தான் செய்த பாரிய இனக்கொலையை மறைத்து, இந்தக் களையெடுப்புக்களை பிரமாண்டமாகக் காட்டியது. அதை அப்படியே இந்தப் போலி ஜனநாயக மேற்குலகு உள்வாங்கிக் கொண்டது. அதனோடு சிங்களத்துக்கு முழு ஆதரவையும் வழங்கி எம்மைக் கொன்று குவித்தது. அதுதான் எனது கவலை.

நீங்கள் சொல்வதுபோல இந்த உலகு ரெட்டை தரப்படுத்தலைக் கடைப்பிடிக்கிறது.

இஸ்ரேல் இன்றைக்கும் பாலஸ்த்தீனர்களைக் கொன்றுதான் வருகிறது. அவர்களின் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்திருக்கிறது. உணவு, மருந்து, நிலப்பிரிப்பு சுவர் என்று பாலஸ்த்தினரை கொடுமைப்படுத்துகிறது. ஏறத்தாள வன்னிப் படுகொலைக்காலத்தில் தென்லெபனான் மீது போர் தொடுத்து குறைந்தது ஆயிரம் பாலஸ்த்தீனியரைக் கொன்று குவித்தது. ஆனால் யாரும் கேட்கவில்லை.

ருவாண்டாவில் மில்லியன் கணக்கான மக்கள் பலியிடப்பட்டபோதும் கூட இந்த மேற்குலகு பார்த்துக்கொன்டுதானிருந்தது.

பொஸ்னியாவில் மட்டும் தலையிட்டது. அதற்கு பொஸ்னியா ஐரோப்பாவில் அமைந்திருந்தது, ரஷ்ஷியாவின் தம்பியான சேர்பியா யுத்தத்தில் ஈடுப்பட்டதும் மேற்குலகை அங்கு தலையிடத் தூன்டியது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் இன்னும் அமெரிக்கா தலமையிலான ஆக்கிரமிப்பு ராணுவம் நிலைகொண்டுதானிருக்கிறது. நாள்தோறும் ஆளில்லா வானூர்திகளிலிருந்து ஏவப்படும் ஏவுகனைகள் மற்றும் வான் தாக்குதல்களில் பல அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் யுத்தத்தில் கொல்லப்படும் அமெரிக்க வீரனைத்தவிர வேறு எந்தச் செய்தியும் வெளியே வராது அது பார்த்துக்கொள்கிறது.

ஆனால், லிபியாவிலும், சிரியாவிலும், யெமெனிலும் நடக்கும் மக்கள் எழுச்சி பற்றி மிகவும் கcவலை கொள்கிறது மேற்குலகு. 146,000 வன்னித்தமிழர் சிங்கள நரபலி நாய்களால் குதறப்பட்டபோது வேடிக்கை பார்த்தன் இதே மேற்குலகு இன்றைக்கு வெறும் 1,000 அப்பவிகள் கொல்லப்பட்டதற்காக லிபியாவைத் தண்டிக்கிறது. விமானப் பறப்புத் தடை, வாந்தாகுதல் உதவி, போராளிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரித்தல் என்று தேவைக்கதிகமான உதவிகளை வழங்கிவருகிறது.

இன்றைய உலக ஒழுங்கில் யார் பயங்கரவாதி, யார் நல்லவன் என்பதை தீர்மானிக்கும் சக்திகள், தமதும் தமது நண்பர்களினதும் வசத்திக்கேற்றவாறும் மட்டுமே தீர்மானிக்கின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட திபேத்தாக இருக்கட்டும், அல்லது ஜம்மு கஷ்மீராக இருக்கட்டும் இவை எதுவுமே சர்வதேச பொருளாதார நலன்கள், பிராந்திய நலன் என்று வரும்போது காற்றிலே பறந்துவிடுகின்றன.

சிலவேளை நீங்கள் சொல்வதுபோல, புலிகள் ஒரு சிவிலியனைக் கூடக் கொல்லாது போராடியிருந்தாலும் கூட, இந்தச் சர்வதேசத்துக்கு அவர்கள் தேவையில்லை என்றாகிப்போனால் இதே முடிவுதான் வந்திருக்குமோ என்னவோ??

எங்கே தவறியிருக்கிறோம் என்று சிந்தித்துக்கொண்டிருப்பதால் சில கேள்விகள் உருவாகின, ஆனால் சிலவற்றிற்குத் தெளிவான பதிலும் கிடைத்திருக்கின்றன. சிலவற்றிற்குப் பதிலில்லை. ஆனால் நான் அவற்றிற்கான பதிலை இனித் தேடப்போவதுமில்லை. எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களினூடாக நடைபெறும் நிகழ்வுகளில் நாம் வெறும் பொம்மைகள் மட்டும்தான் என்று எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கள்தான் எனதும் கூட..............

எதையும் கண்மூடிதனமாக ஆதரிக்க கூடாது...............

ஏன் எப்படி என்ற கேள்விகள் எப்போதும் எம்மோடு எழவேண்டும். அதில் எந்த தப்பும் இல்லை...............

புலிகள் விடயத்தில் நேரான பாதையில்போனார்கள் என்பதுதான் தோல்வியின் ஒரு காரணமாக கூட இருக்கலாம். அதை இல்லை என்று மறுக்க முடியாது............. ஆனால் சாக்கடை அரசியலுக்குள் புகுந்தும் மக்களை சேற்றினுள்தானே தள்ளமுடியும்?

சமரசம்பேசி மனைவியை மாற்றுனுடன் விலைபேசுவதுதான் சர்வதேச அரசியல் என்றால்..............? புலிகள் தற்கொலையை தெரிவு செய்தனர் என்பதுதான் உண்மையானது.

இது சரியா தவறா என்று மனிதர்களால் வாதாடமுடியாது. ஆனால் மனித வடிவங்களால் முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நெருடலாக உள்ள விடயம்.. :unsure:

போர்க்குற்ற ஆதாரங்கள், சனல் 4 காணொளி என்று வெளிவந்தும் சாதாரண சிங்களவர்கள் (எனக்கு அறிந்தவர்கள்) அக்காணொளிகள் போலியானவை எனச் சொல்லித் திரிகிறார்கள்..! இலங்கையின் எதிர்க்கட்சிகளும் அவ்வாறே..! இவர்கள் ஏன் தங்கள் அரசு மக்களைக் கொன்றது பாவச் செயல் என மீளாய்வு செய்ய மறுக்கிறார்கள்? :unsure::rolleyes:

எனக்குத் தெரிந்த காரணம் அவர்கள் நல்லதோ கெட்டதோ தமது சிங்கள இனவாத அரசுக்குத் துணையாக நிற்கிறார்கள்..! அதாவது சிங்கள அரசு சொல்லும் மட்டும் இவர்கள் வாயிலிருந்து போர்க்குற்றம் குறித்து எதையும் பிடுங்க முடியாது. :rolleyes:

எமது பிரச்சினையில், புலிகள் தெற்கில் நடந்த கொலைகளை என்றும் ஒத்துக்கொண்டதில்லை..! நாம் ஏன் முண்டியடித்துக்கொண்டு அவர்கள் தலையில் இக்கொலைகளைக் கட்டவேண்டும்? :rolleyes:

பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று எமது பரப்புரையின் ( அதற்கு பணம் செலவழிக்க, உதவ நாம் விரும்புவதில்லை) பலவீனமே. குறைந்தது கடிதங்கள் கூட எழுதுவது அரிது.

250,0000 + தமிழ் பொதுமக்களை அழித்தும், தொடர்ந்தும் ஒரு இனப்படுகொலையை வெற்றிகரமாக கொண்டுசெல்லுகிறான் சிங்களம். மில்லியன்களில் பணத்தை இறைத்து, தனக்குள் உள்ள இராஜதந்திர உறவுகளை பேணி, மனச்சாட்சியை விற்று தனக்கு சார்பான பிரச்சாரத்தை முன்னேடுக்கின்றான்.

அதில் உண்மை தோற்றுவிடுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலை என்னும் புத்தகத்தில் இருந்து தமிழ் ஈழ மக்களால் கிழித்து வீசப்பட்ட இருபக்கங்கள்தான் இந்த அமிர்தலிங்கம் வரதராஜபெருமாள் இந்தக்குப்பைகளை ஏன் மீண்டும் எடுத்துவந்து இணைக்க பார்க்கின்றார்கள் ......?

எனக்கு நெருடலாக உள்ள விடயம்.. :unsure:

போர்க்குற்ற ஆதாரங்கள், சனல் 4 காணொளி என்று வெளிவந்தும் சாதாரண சிங்களவர்கள் (எனக்கு அறிந்தவர்கள்) அக்காணொளிகள் போலியானவை எனச் சொல்லித் திரிகிறார்கள்..! இலங்கையின் எதிர்க்கட்சிகளும் அவ்வாறே..! இவர்கள் ஏன் தங்கள் அரசு மக்களைக் கொன்றது பாவச் செயல் என மீளாய்வு செய்ய மறுக்கிறார்கள்? :unsure::rolleyes:

...ஏனெனில் இராணுவ ரீதியில் பெரும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.. வெற்றி பெற்றவர்களுக்கு தம் செயல்களின் மீதான மீள் பார்வைக்கு அவசியம் இல்லாமல் போகின்றது; ஆனால் தோற்றவர்கள் மீண்டும் வெல்ல வேண்டுமெனில் ஏன் தோற்றோம் என்று மீள் பார்வை கண்டிப்பாக செய்தல் வேண்டும், இன்னுமொரு முறை தோற்காமல் இருப்பதற்கு :)

..அது சரி...இந்த திரியை இங்கு கொண்டுவந்து இணைத்த புண்ணியவான் யாருங்கோ தமிழரசு?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நெருடலாக உள்ள விடயம்.. :unsure:

போர்க்குற்ற ஆதாரங்கள், சனல் 4 காணொளி என்று வெளிவந்தும் சாதாரண சிங்களவர்கள் (எனக்கு அறிந்தவர்கள்) அக்காணொளிகள் போலியானவை எனச் சொல்லித் திரிகிறார்கள்..! இலங்கையின் எதிர்க்கட்சிகளும் அவ்வாறே..! இவர்கள் ஏன் தங்கள் அரசு மக்களைக் கொன்றது பாவச் செயல் என மீளாய்வு செய்ய மறுக்கிறார்கள்? :unsure::rolleyes:

எனக்குத் தெரிந்த காரணம் அவர்கள் நல்லதோ கெட்டதோ தமது சிங்கள இனவாத அரசுக்குத் துணையாக நிற்கிறார்கள்..! அதாவது சிங்கள அரசு சொல்லும் மட்டும் இவர்கள் வாயிலிருந்து போர்க்குற்றம் குறித்து எதையும் பிடுங்க முடியாது. :rolleyes:

எமது பிரச்சினையில், புலிகள் தெற்கில் நடந்த கொலைகளை என்றும் ஒத்துக்கொண்டதில்லை..! நாம் ஏன் முண்டியடித்துக்கொண்டு அவர்கள் தலையில் இக்கொலைகளைக் கட்டவேண்டும்? :rolleyes:

இலங்கைத் தீவு சிங்களவர்களுக்கே உரியது என்ற தம்பதீபக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்கத் தடையாக இருந்த புலிகளை மகிந்தவின் சிங்கள அரசு இல்லாமல் பண்ணியதை சிங்களவர் என்று பெருமைப்படுபவர்கள் என்றும் ஆதரிப்பர். இதனால்தான் அவர்கள் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்களைச் செய்த படையினரையும் அவர்களை வழி நடாத்திய சிங்கள அரசையும் பாதுகாப்பது தமது கடமை என்று செயற்படுகின்றனர்.

புலிகள் தோற்றதுக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். சொன்னால் வந்து மறுப்பறிக்கை கொடுக்கவா போகின்றார்கள் என்ற தைரியத்தில்தான் எல்லோரும் "பேச" ஆரம்பித்திருக்கின்றார்கள். <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...ஏனெனில் இராணுவ ரீதியில் பெரும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.. வெற்றி பெற்றவர்களுக்கு தம் செயல்களின் மீதான மீள் பார்வைக்கு அவசியம் இல்லாமல் போகின்றது; ஆனால் தோற்றவர்கள் மீண்டும் வெல்ல வேண்டுமெனில் ஏன் தோற்றோம் என்று மீள் பார்வை கண்டிப்பாக செய்தல் வேண்டும், இன்னுமொரு முறை தோற்காமல் இருப்பதற்கு :)

..அது சரி...இந்த திரியை இங்கு கொண்டுவந்து இணைத்த புண்ணியவான் யாருங்கோ தமிழரசு?

போதும் .....போதும் ....தாங்க முடியல .....STOP.

நிழலி உங்களுக்கு கடந்த கால வரலாறு தெரியாதா ?

நீங்கள் அப்போது புலிகளுக்கு உங்கள் கருத்துகளை ஏன் சுட்டிக்காட்டவில்லை !

முதலில் ஈழத்தை எடுப்போம்... பிறகு தவறுகளை சரிசெய்வோம் எண்டு இருந்தோம்..

ஆனால் எங்கட சனங்களோ தங்களுக்கு சனநாயகம்தான் வேண்டும் எண்டு நிண்டுட்டு இன்டைக்கு கத்தரிக்காய் விதைக்கும் பொலித்தீன் கூடாரத்துக்கும் மல்லுக்கட்டிக்கொண்டு திரியுதுகள்..

எப்படி எண்டு அக்கறையில்லை ஆனால் சமாதானம் வரவேண்டும்....

நல்ல அனுபவியுங்கோ....

.

புலிகள் தோற்றதுக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். சொன்னால் வந்து மறுப்பறிக்கை கொடுக்கவா போகின்றார்கள் என்ற தைரியத்தில்தான் எல்லோரும் "பேச" ஆரம்பித்திருக்கின்றார்கள். <_<

அவர்கள் சொல்லமாட்டார்கள் செய்வார்கள்... ஆவெண்டு பாத்துகொண்டிருங்கோ.....

.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

ரோக்காரன் மேற்பார்வையில்லாமல் இவரெல்லாம் களத்தில் இறங்கி இருக்க மாட்டார் உசார் உசார்.. இவரை சிங்களவன் போட்டு தள்ளிட்டு ப்ழைபடி ஏதாவது புலி கதையை எடுத்து விடலாம் இல்லையென்றால் ரோக்காரனே பலியாட்டை போட்டு தள்ளிட்டு பழியை சிங்களவன் அல்லது புலி மீது போடலாம்..

டிஸ்கி:

ஆனா மீண்டும் சேர்ந்து இருப்பவர்கள் பலி ஆடுகள் என்பது தெளிவாக பிரியுது.. ^_^ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

புலி வரும்.......................................................................................................................................................................................................................

அமிர்தலிங்கமோ வரதராஜனோ.............இருவருமே நடப்பு அரசியலில் மறந்துபோனவர்கள்! இவர்களை இந்த இளைய சிங்கங்கள்(?) தூக்கிபிடிப்பது எதனாலுங்க சித்தப்பு?...........துரோகிகள் எங்கிறதாலயா? அவங்க துரோகிகள்னா............ நாங்கமட்டும் என்னவாம்? தினமும் யாழ்ல யார் பெரிய துரோகி என்பதை கண்டு பிடிக்கத்தானே ரொம்பபேர் sign in ஆவுறாங்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.