Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரன் லெப்.சீலனின் 28 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் லெப்.சீலனின் 28 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும்.

Friday, July 15, 2011, 0:31

தமிழீழம், மாவீரர்கள்

சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.

லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன்

(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)

வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983

தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி ‘நாராயணசாமியும்’ எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை.

பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.

திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?எவ்வாறு தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்? என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.

இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)

தலைவர் பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார். சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.

புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)

அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘அதோ அந்தப்பறவை போல…’. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.

சீலனின் இறுதி நாள் பற்றி. சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.

புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் ‘இதயச்சந்திரன்’. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.

புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.

சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.

சீலனினதும் ஆனந்தினதும் நினைவாக மீசாலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடமும் சிறுவர் பூங்காவும் சிங்களப் படையினரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த இடத்தில் நினைவிடம் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நினைவிடமே இது.

ltseelanannv04.jpg

__________________________________________________________________________________

விடுதலைப்புலிகளும் தமிழ்மக்களும் தமது போராட்டம்பற்றி சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும்கூட எடுத்துக்கூறி அவர்கள் ஈழப்போராட்டத்தின் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டுவிட்டார்கள்.ஆனால் தமிழர்களில் ஒரு சிறுபகுதியினர் உலகம் தட்டையானது என்ற பிடிவாதத்துடன் பிரான்ஸிலிருக்கும் ஒரு தொகுதியினர்போல ஈழப்போராட்டத்தின் உண்மைநிலையை உணர மறுத்துநிற்பதுதான்.

சார்ள்ஸ் அன்ரனி என்பவர் ஈழப்போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரர்களில் ஒருவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால தாக்குதல் சம்பவங்களில் பங்கேற்ற அற்புதமான வீரன்.தாக்குதல்களை சிறப்பாக ஒழுங்கமைத்து ஒருங்கமைத்து அதன்மூலம் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவந்தவர்.

திருகோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலகட்டங்களில் – எழுபதுகளின் பிற்பகுதியில் – அப்போதிருந்தவர்களில் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் தலைவர் பிரபாகரனின் உயிர்நண்பனாக இருந்தார்.அக்காலப்குதியில் சிங்கள இராணுவ,பொலீஸாருக்கு எதிரான கெரில்லா தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார்.

1982 இல் உமாமகேஸ்வரன் தனது விசுவாசிகள் சிலருடன் விடுதலைப்புலிகள் அமைப்பலிருந்து விலகிச்சென்றதும் புலிகளின் ஆட்பலம் குறைந்துவிட்டது என்றும் அதனால் அவர்களின் இராணுவபலம் குறைந்துவிட்டது ஏனைய போராளி இயக்கங்கள் கதைகளைப்பரப்பின.

அந்தக்கதைகளுக்கு ஆப்பு வைத்து புலிகளின் பலத்தை நிரூபித்து தமக்கு மேலும் பலம் சேர்த்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தாக்குதலே அது.(உமாமகேஸ்வரனின் வெளியேற்றத்துக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதலுக்கு முன்னதாக நெல்லியடியில் பொலீஸ் ரோந்து அணி மீதும் பொன்னாலை கடற்கரையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வரவை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் எதிர்பார்த்தஅளவுக்கு புலிகளுக்கு வெற்றியைத்தரவில்லை)

1982 ஒக்டோபர் 27 ஆம் திகதி சார்ள்ஸ் அன்ரனி தலைமையில் அருணா,சங்கர்,சந்தோசம்,மாத்தையா,புலேந்திரன்,ரகு,பஷீர்காக்கா ஆகியோர் அடங்கிய எட்டுப்பேர் அடங்கிய புலிகள் குழு மினி வானொன்றில் சாவகச்சேரி பொலீஸ்நிலையத்துக்கு விரைந்தது.பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக வானை நிறுத்திவிட்டு இறங்கிய சார்ள்ஸ் அன்ரனி தலைமையிலான ஒரு தொகுதியினர் வாசலில் காவலுக்கு நின்ற பொலீஸை சுட்டுவிட்டு உள்ளே சென்று ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்து பார்த்து ‘க்ளியர’; பண்ணிக்கொண்டு சென்றனர்.இந்நேரத்தில் அருணாவும் பஷீர்காக்காவும் அங்கிருந்த பொலீஸின் ஆயுதங்களை அள்ளினர்.திடீர்தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாது தப்பிய ஒடிய பொலீஸார் ஒருவர் மாடியிலிருந்து குதித்து கால் முறிந்தது.ஆனால் அங்கு மேல்மாடியில் நின்று உஷாரான சில பொலீஸார் திருப்பிசுட்டதில் புலேந்திரனின் தோளில் காயம்.ரகுவின்; வலது கைஎலும்பு முறிந்தது.சார்ள்ஸ் அன்ரனிக்கு கணுக்காலில் காயம்.பொலீஸ் நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு எஸ்.எம்.ஜி,19 ரிப்பீட்டர்கள்,9 ரைபிள்ஸ்,ஒரு பிஸ்டல் ஆகியவற்றையும் காயமடைந்தவர்களையும் மற்றவர்களையும் அருணா வானில் தூக்கிப்போட அங்கிருந்து அனைவரும் தப்பினர்.

தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இல்லாத நேரங்களில் புலிகளின் பதில் தளபதியாக பொறுப்புவகிக்கும் சார்ள்ஸ் அன்ரனிக்கு காயம் ஏற்பட்டதால் தலைவர் விரைந்து செயற்பட்டார்.பாக்குநீரிணை வழியாக சார்ள்ஸ் அன்ரனியை தமிழ்நாட்டுக்கு படகு மூலம் கொண்டுசென்று சிகிச்சை அளித்த பிரபா தன் நண்பனுடன் கூடவிருந்து அவனுக்கு சுகமானதும் அவனுடன் தாயகம் திரும்பினார்.

1983 ஜீலை 15 ஆம் திகதி….

சார்ள்ஸ் அன்ரனி அருணா மற்றும் கணேசுடன் மீசாலையில் ஒரு வளவில் இருந்து இளநீர் குடித்துக்கொண்டிருந்தான்.எவனோ எட்டப்பன் சிங்களப்படைகளுக்கு இந்தத்தகவலை கொடுக்க கவசவாகனங்கள் ஜீப்களில் திடீரெனவந்த சிங்களப்படையினர் சார்ள் அன்ரனி இருந்த இடத்தை முற்றுகையிட்டனர்.இளைஞன் ஒருவன் ‘ஆமி வந்துவிட்டான்’ என்று ஒடி வந்து விஷயத்தை சொல்ல சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மீசாலை வயற்கரையால் சார்ள்ஸ் அன்ரனியும் ஏனைய இருவரும் பறந்தனர்.ஏற்கனவே சாவகச்சேரி தாக்குதலில் கணுக்காலில் விழுப்புண் அடைந்த சார்ள்ஸ் அன்ரனியால் வேகமாக ஓடமுடியவில்லை.அப்போது இராணுவம் கலைத்துச்சுட்டதில் இனி ஓடமுடியாது என்றெண்ணிய சார்ள்ஸ் அன்ரனி அருணாவையும் கணேசையும் ஓடித்தப்புமாறு கலைத்துவிட்டு எதிரியின் கைகளில் சிக்காமல் வயல்வெளிக்குள்ளேயே தன்னை மாய்த்துக்கொண்டான்.

நீர்வேலியில் கிட்டு,செல்லக்களி மற்றும் பண்டிதர் ஆகியோருடன் இயக்கத்தின் நிதிவிடயங்கள் சம்மந்தமாக பேசிக்கொண்டிருந்த பிரபாவுக்கு சார்ள்ஸ் அன்ரனி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.பிரபா அந்தக்கணம் அடைந்த உணர்வு பற்றி கிட்டு பின்னர் ஒரு முறை எழுதிய கட்டுரையில் “தலைவர் அப்போது அடைந்த அதிர்ச்சியை வார்த்தையில் வெளிப்படுத்துவது சாத்தியமற்றது.”-என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு ஒப்பற்ற தளபதி மட்டுமல்லாமல் நல்ல நண்பனையும் அன்று தலைவர் பிரபா இழந்தார்.மூன்று வருடங்களின் பின்னர் பிறந்த தனது முதலாவது பிள்ளைக்கு தலைவர் தனது நண்பனின் ஞாபகார்த்தமாக அவனது பெயரையே சூட்டினார்.விடுலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட முதல் படையணிக்கும் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு என்றே பெயரிட்டார்.

http://www.tamilthai.com/?p=21531

Edited by கறுப்பி

வீரவணக்கம் உங்களை வர்ணிக்க வார்த்தையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தாயாக கனவுடன் சாவினை தழுவிய

சந்தனப்பேளையான........

மாவீரன் சீலனுக்கு வீரவணக்கம்.

இந்த மாவீரனுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்தி;

இந்த வீரனின் கனவு நனவுபட;

எமது இனம் வாழ உழைத்திடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரனாகி, எமது நினைவில் என்றும் வாழும்,லெப்டினன்ட் சீலனுக்கு, வீர வணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் லெப்.சீலனுக்கு வீர வணக்கங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் லெப்.சீலனுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.