Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய கடிதம்

Featured Replies

சுடரொளி ஞாயிறு, 17 ஜூலை 2011 11:32

பயனாளர் தரப்படுத்தல்: / 1

குறைந்தஅதி சிறந்த

காவி உடுத்திய சாமியார் வேடத்தில் உலாவிக் கொண்டு ஆஸ்ரமத்திற்குள் காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட நித்தியானந்தாவுக்கும், எழுத்தாளன் என்னும் போர்வையில் பெண்களை தனது காம வலையில் வீழ்த்த நினைக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என்ன வித்தியாசம்? நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்துவது போல் பாசாங்கு செய்யும் சாருவின் அந்தரங்கத்தில் கசங்கிப் போன பெண்களின் வாழ்வை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது. நித்தியானந்தாவுக்கு தன் மனைவி அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தது சாருதான். அந்த சாருவின் மனைவியே இக்கடிதத்தை தனக்கு எழுதியதாக பத்திரிகையாளார் சந்திப்பில் வெளியிட்டார் நித்தியானந்தா. இக்கடிதம் சாருவின் வீட்டுப் பிரச்சினை என்பதைவிட, அசிங்கமான அவரது அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியை வெளிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

சாருவின் மனைவி எழுதியதாக நித்யானந்தா கொடுத்த கடிதம், அப்படிக்கு அப்படியே இங்கே...

“Beloved Swamy,

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி. எனக்கென்று இருக்கும் ஒரே ஆதாரம் இப்பொழுது நீங்கள்தான் சுவாமி. NSP இரண்டாம் நாளிலிருந்து இன்றுவரை காய்ச்சல் எனக்கு விட்டபாடில்லை சுவாமி. என்னைவிட என் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான் சுவாமி. இறைவனின் அருளால் எல்லா சூழ்நிலைகளிலும் மிகவும் ஆனந்தமாக மட்டும்தான் இருக்கிறேன் சுவாமி. அதனால்தான் தங்களை திரும்பவும் காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

நான் தங்களை முதலில் கண்டது முதல் இன்றுவரை மிகப்பெரிய அவதார புருஷனாகவோ அல்லது தவ ஞானியாகவோ என்னால் உணர முடியவில்லை. பல ஜென்மங்களாக பழகிய மிகவும் நெருக்கமான என் ஜீவனின் ஜீவனாக மட்டும்தான் உங்களை என்னால் உனர முடிகிறது. இதுநாள்வரை எவரிடமும் இல்லாத, என் மகனிடம்கூட இல்லாத நெருக்கம், என் ஜீவனின் அடி ஆழத்திலிருந்து தங்களிடம் மட்டும்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. உங்களைக் கண்டால் மட்டும்தான் நான் இவ்வளவு உருகிவிடுகிறேன். அதனால்தான் “there is something wrong” என்று தாங்கள் அன்று கூறினீர்கள். ஆனால், அன்றே முடிவு செய்துவிட்டேன் சுவாமி. இனி தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிமொழியே எடுத்துக்கொண்டேன்.

என்னைப் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். நான் சாருவை இரண்டாவதாக மணம் முடித்தவள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சாரு எனக்கு இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்தார். அதனால்தான், இன்றுவரை அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சாருவை மணந்த உடன் என் துன்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால், பலவித கோணங்களில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. உங்களை சந்திக்கும்வரை சுவாமி, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வீடு விட்டால் office என்று நான் வெளி உலகமே தெரியாத ஒரு அடிமைபோல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

சாரு என்னை மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது மாதம், என் உயிர்த்தோழியை சாருவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் வீட்டில், என் கண் முன்னால் அவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம்... அந்தக் காட்சிகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை சுவாமி. நான் பட்ட துன்பங்கள், அவமானங்கள்... சுவாமி உங்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. ஆனால், நான் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப்போல் பொறுத்துக்கொண்டேன் சுவாமி.

தினமும் குடி, கும்மாளம். வீட்டிற்கு வந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது, கண்ட வார்த்தைகளால் என்னைத் திட்டுவது, உதைப்பது, ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்தில் விழுந்துவிட்டது, சுவாமி அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதுப்பெண், கல்லூரி மாணவி மாறி விடுவாள். அதனால், கல்யாணமான இரண்டாவது மாதத்தில் இருந்து முடிவு செய்தேன் சுவாமி. இனி சாருவிற்கு தாயாக வாழ்ந்துவிடுவது என்று. இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நான் இதைப்பற்றி சாருவிடம் பலமுறை பேசிப் பார்த்தேன். “நீ ஏன் ஒரு எழுத்தாளனை கல்யாணம் செய்துகொண்டாய்? இப்படி அடிமையாகத்தான் நீ வாழ்ந்தாகவேண்டும். உண்மையான அன்பு மனதளவில் இருந்தால் போதும். உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. என்னை விட்டுச் சென்றுவிடாதே” என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்பான். உண்மையான அன்பு என்பது உடல், மனம், ஜீவன் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து ஒரே ஒரு ஜீவன்மேல் வைக்கப்படும் காதல் அது என்று நான் சொன்னாலும் அதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்.

அவன் என்னுடன் பேசிய வார்த்தைகளைவிட, அவன் காதலிகளிடம் அவன் கொஞ்சிய நேரங்களே அதிகம். நான் எப்பொழுதாவது பேசுவதற்கு அருகில் சென்றால், எனக்கு எழுத நிறைய இருக்கிறது என்பான். ஆனால், அடுத்த நிமிடமே காதலியிடம் பேச ஆரம்பித்தால், இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பான். திடீரென்று இரண்டு அல்லது மூன்றுநாட்கள்கூட காணாமல் போய்விடுவான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு புதுக் காதலிகள் அமையும்போது எனக்குக் கிடைக்கும் அர்ச்சனைகள், மிகப் பிரமாதமாக இருக்கும்.

நாளாக, நாளாக அவனது ஆட்டம் தாங்க முடியவில்லை. ஒரு கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். என் மகன் கார்த்திக் இருந்ததால், என்னிடம் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது.

இதற்கு நடுவில் அவன் வேறு ஒரு பெண்ணை, கந்தர்வ விவாகம் புரிந்துகொண்டான். அவன் செய்துகொண்ட திருமணம் முழுவதும் என் கனவில் அப்படியே ஒரு சினிமாபோல் தோன்றியது. அந்தப் பெண்ணின் பெயர், அந்தப் பெண்ணுடன் இருந்தவரின் பெயர், சாரு மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை, கலர், எங்கு திருமணம் நடந்தது எல்லா விபரங்களையும் என் கனவுக் குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். ஏதோ ஒரு நாள் அதைப் பார்த்த சாரு, மிரண்டுபோய், நான் சொல்லும் எல்லா விஷயங்களுமே உண்மை என்பதை அப்பொழுதுதான் புரிந்துகொண்டான்.

அது மட்டும் அல்லாது என்னுடைய மைத்துனருடைய மகள் கல்லூரி மாணவி (சாருவின் தம்பி மகள்) எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாள். சாருவுடன் எல்லா இடங்களுக்கும் சென்று வருவாள். சாருவிற்கு உள்ள புகழையும், பெயரையும் கண்டு மயங்கி சாருவை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்த உடனேயே, சாரு எனக்குக் கட்டிய தாலி, தரையில் அவிழ்ந்து கிடந்ததை இறைவன் எனக்குக் காண்பித்தார். அதற்கான காரணம் என்னவென்று நான் ஷீரடி சாயிராமனிடம் கேட்டபொழுது, என் மைத்துனரின் மகளைக் காண்பித்து இவள்தான் காரணம் என்றார்.

உடனே, கடவுளே என் புத்தி இவ்வளவு கீழ்த்தரமாக வேலை செய்கிறதே என்று எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், இரண்டே நாட்களில் நான் கண்ட அந்தக் காட்சி... அதுவும் என் வீட்டில்.... உடைந்து போனேன், மருகினேன், துடித்தேன். அன்று எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால், இன்றுவரை இறைவன்தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் அன்று என் தாலியைக் கழற்றி இறைவன் பாதத்தில் வைத்தேன். நான் யாருக்கும் மனைவி கிடையாது, தாய் கிடையாது. இறைவனுக்குத்தான் என் ஊன், உயிர் எல்லாம் சொந்தமென்று அர்ப்பணம் செய்தேன். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

காமம் என்று வந்தால், தாய் மகள், அப்பா மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்த அன்று வியந்துபோனேன் சுவாமி. என் மகன் கார்த்திக், இதைப் பற்றி கேட்டபொழுது, உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிடு என்றான் இதே சாரு.

அப்பொழுது நீ எங்கிருந்தாய் நித்யா? என்னைக் கூட்டிக்கொண்டு அப்பொழுது சென்றிருக்கலாமே. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி விழுந்து அவனுடன் வாழ ஆரம்பித்தேன். இன்றுவரை அவன் என் மகன் கார்த்திக்கை பேசாத வசைச் சொற்கள் எதுவுமே இல்லை.

நான் உங்களைப் பார்க்கும்வரை அவனைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என்று(சாரு) அவன் நினைத்திருந்தான். ஏனென்றால், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு அடிமைபோல் வாழ்ந்தேன் நான். சாருவைவிட்டு உங்களிடம் வந்து சேர்ந்துவிடுவேன் என்று பயப்படுகிறான். “என் கவுரவம் என்ன ஆவது? சமுதாயத்தில் எனக்கென்று உள்ள பெயர் நீ spritual life மேற்கொண்டுவிட்டால், கெட்டுப்போகும். நீ ஏன் ஒரு எழுத்தாளனை மணம் செய்துகொண்டாய்? அதனால், இந்த ஜென்மம் முழுவதும் என்னுடன்தான் வாழவேண்டும். நான்தான் உன் சுவாமியை உனக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். என்னைவிட்டு எங்காவது செல்ல நினைத்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன். நான் தனியாக வாழ ஆரம்பித்தால், பத்திரிகைத் துறை என்னைக் கேள்வி கேட்டே துளைத்துவிடும். நான் இப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அதனால், நீ என்னுடன்தான் இருக்கவேண்டும். உன்னால், உன் சுவாமிக்குத்தான் கெட்ட பெயர். நீ spritual activity செய்ய எங்கும் செல்லக்கூடாது” என்று பல வழியாக என்னை பிளாக்மெயில் செய்கிறான் சுவாமி.

இதற்கு நடுவில்தான் சுவாமி, எனக்கு பல உண்மைகள் உரைக்கப்பட்டன. நான், எல்லாவற்றையும் அறிந்து எவரிடமும் உண்மைகளைக் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடல், மனம், ஜீவன் எல்லாவற்றையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வெறும் ஜடமாக இந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் சுவாமி. என்னை அன்று கடிந்துகொண்ட உடன், நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதனால்தான், சுவாமி இவ்வளவு கோபமாக சொல்கிறார். நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு, மிகவும் தூய்மையானது சுவாமி. எல்லோருக்கும் அவதார புருஷனாக, கடவுளாக தெரியும் தாங்கள், எனக்கு பல ஜென்மங்களாக பழகி மிக நெருங்கிய தோழனாக, என் தாயாக, என் மகனாக, என் ஜீவனாக இருக்கிறீர்கள் சுவாமி.

சில உணர்வுகளை நான் இங்கு எழுதவில்லை சுவாமி. நான் ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் கள்ளம் கபடம் இல்லாதவள் சுவாமி. இந்த உலகில் யார் என்னை எப்படி நடத்தினாலும் பரவாயில்லை சுவாமி. ஆனால், உங்களது முகம் அன்று மாறியதைக் கண்டு இன்றுவரை நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று சொல்வதற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிவரை, தங்களை நினைத்து என் ஜீவன் உருக, உங்களை எண்ணி நான் மேற்கொள்ளப் போகும் என் தவக் கோலத்தை அந்த இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனாலும், நான் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.

தங்கள் திருமேனியை வாழ்நாளில் தரிசித்து, தங்களுடன் பேசி, தங்கள் ஆசிகளை நான் பெற எனக்கு உதவிய இறைவனுக்கு நன்றி. நான் உங்கள் மேல் செலுத்தும் பக்தி, எதற்கு ஈடாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் உங்களைக் காதலித்தது உண்டா? அந்த இறைவனைக் காதலித்தது உண்டா? நீங்கள் எப்பொழுதும் கூறும் மீரா, ராதை, ரமணர் இவர்களின் காதலைக் கண்டவள் இல்லை நான். ஆனால், இந்த எல்லாக் காதலையும்விட நான் உங்கள்மேல் கொண்டுள்ள பக்தி மிகவும் உயர்ந்தது. இதை தங்களிடம் வெளிப்படுத்த என்னைத் தூண்டியதே தாங்கள்தான்.

உங்களின் பக்தையாக நான் இருக்கிறேன் என்றாலே, நான் உங்கள் மேல் கொண்டுள்ள பரிபூரண அன்பு எவ்வளவு தூய்மையானது, ஆழமானது என்பதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். நான் கரைந்து உருகி காணாமல்போய் பல ஜென்மங்கள் ஆகிவிட்டது இறைவனே. உங்களுக்காகவே பல பல ஜென்மங்களாய் பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் இந்த பக்தையை ஏற்றுக்கொள்ள ஏன் இவ்வளவு தாமதம்?

நீங்கள் பலப்பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்தித்துக் கொள்கிறேன். சிறு குழந்தையாக இருந்தால்கூட அவர் ஏதாவது நினைக்கக்கூடும், அவர்கள் கடிந்துகொள்ளக்கூடும் என்று நினைப்பவள் நான். ஆனால், தங்களிடன் எனக்கு ஒரு சிறு தயக்கம்கூட ஏற்படவில்லை.

என்னிலிருந்து வேறுபட்டவர் தாங்கள் என்றுகூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி, தாங்கள் என்ன செய்ய சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன்.

உங்களை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று நான் நினைப்பதுண்டு. உடனே, உங்களுக்குக்காகவே பல ஜென்மங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் என்னால், எப்படி உங்களைக் காணாமல் இருக்க முடியும் என்று என் ஆன்மா பதில் சொல்லும். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? இறைவா! தங்களின் சேவையை செய்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் என்னை ஏற்றுக்கொள்ள ஏன் இந்தத் தாமதம்? என் தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளக் கூடாதா?

with lots of divine love

ma.anadavalli.

*ஆனந்த வல்லி என்பது ஆனந்தத்தை போதிக்கும் சுவாமிஜி அவர்கள், சாருவின் மனைவி அவந்திகாவுக்கு வைத்த பெயர்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619%3A2011-07-17-06-08-51&catid=1%3Aarticles&Itemid=264

  • கருத்துக்கள உறவுகள்

பாதிதான் வாசித்தேன்..! வாந்தி வராத குறை..! :(

இதை வாசிக்கும் போது சாருவின் மனைவியை முதலில் மனநிலை மருத்துவரிடம் உடனடியாக காட்ட வேண்டும் என்றே தோன்றுகின்றது.

இதென்ன கொடுமை சாமி. :o

  • தொடங்கியவர்

முற்போக்கு பின் நவீனத்துவம் எனப் பினாத்தியவர் எவ்வாறு ஒரு பெண்ணை நடாத்தி உள்ளார் என்பதற்காகவே இணைத்தேன்.இவ்வாறு தான் பல எழுத்தாளர்கள், தமது ஒளிவட்டத்தை தமது எழுத்தால் கட்டமைப்பார்கள், உலகில் தம்மை விட்டால் நல்லவன் வல்லவன் கிடையாது என.அதனால் தான் ஒரு நேர்மையான எழுத்துக்கு அறம் என்பது மிக அவசியம் ஆகிறது, முக்கியமாக அவனது சொந்த வாழ்க்கையில்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே சாரு நிவேதிதாவுக்கு நிறைய வாசகர்கள் இருக்கின்றார்களா?

கீற்றுவில் வந்த ஒரு பின்னோட்டம்:

சாரு நிவேதிதா என்ற தனிமனிதரின் யோக்கியதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், இந்த சமூகத்தில் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும். எழுத்தாளன் என்றாலே, என்னவோ ஒரு மகா மனிதரைப் போலவும், மனித வாழ்வின் ரகசியங்களையும், பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவர்கள் போலவும் ஒரு பந்தா இருக்கிறது. உண்மையில், அப்படிப்பட்ட மனோபாவம் அருவருக்கத்தக்க ஒன்று. உலகில் இருக்கும் கோடிக்கணக்கான திறன் வகைகளில் எழுதுவதும் ஒரு திறன். திறமை என்பது பச்சையான அயோக்கியர்களுக்கும் உண்டு. நல்ல மனிதர்களுக்கும் உண்டு. ஒருவர், ஒரு விஷயத்தை தனது எழுத்து திறன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்றால், அது சாதாரண நிலையில் பாராட்டப்படக் கூடிய விஷயமே ஒழிய, எந்த வகையிலுமே முக்கியத்துவம் பெற்றதல்ல. இக்கடிதத்தில், சாரு நிவேதிதா, தான் ஒரு எழுத்தாளன் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்வேன், எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சாரு நிவேதிதாவுக்கு மட்டுமல்ல. ஜெயகாந்தன், ஜெயமோகன் உள்ளிட்ட பலருக்கும் இருக்கிறது. ஒரு எழுத்தாளர் என்பவர் எதோ ஒரு மகா ரகசியத்தை அறிந்தவராக பார்க்கப்படுவது கொடுமையான விஷயம். அவர்களும் பிறரைப் போல அற்பமான மனிதர்களே. திறமை என்பது மிருகங்களுக்குக் கூட உண்டு. திறமை உள்ளவன் எல்லாம் மகா புருஷன் ஆகிவிட்டால், இந்த உலகத்தில், நன்மை, நியாயம் என்பதற்கெல்லாம் மரியாதையும், அர்த்தமும் இல்லாமலே போய்விடும். தனது சிறிய அறிவுக்கு எட்டிய விஷயங்களை ஒரு எழுத்தாளன் தனது படைப்பின் மூலமாக கூறுகிறான். ஒரு எழுத்தாளனின் சிந்தனையானது, மனித குலத்திற்கே விரோதமானதாகக்கூட இருக்கலாம். அப்படி எவ்வளவோ எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் மற்றும் இருக்கிறார்கள் மற்றும் இருப்பார்கள். (உதாரணம் - பார்ப்பனிய சிந்தனை). எழுதுவதெல்லாம் உண்மையல்ல, எழுத்தாளனெல்லாம் மேதை அல்ல, உண்மையை அறிந்தவனல்ல. இதை சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619%3A2011-07-17-06-08-51&catid=1%3Aarticles&Itemid=264

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

பாதிதான் வாசித்தேன்..! வாந்தி வராத குறை..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய கடிதம் :wub:

ஆண்மீக அவாவில் எழுதிய கடிதமென நம்பி...இங்கு வந்து ஏமாற்றப்பட்டுவிட்டேன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காகத் தான், நமது முன்னோர் (?) சொல்லி வைத்தார்கள்!

நதி மூலமும், ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்று!

இரண்டுமே அசிங்கம்!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி வெளியே வந்திட்டாரா? :rolleyes: அடுத்த முறை இந்தியா போனால் வலப்பக்க கிரவுடுக்குள்ள நிண்டு நானும் துள்ளப்போறன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி வெளியே வந்திட்டாரா? :rolleyes: அடுத்த முறை இந்தியா போனால் வலப்பக்க கிரவுடுக்குள்ள நிண்டு நானும் துள்ளப்போறன்..! :lol:

http://www.tubetamil.com/view_video.php?viewkey=2d6e6256e9ee006555ce&page=3&viewtype=&category=

இந்த ஒளிப்பதிவை பார்த்த பின்பும்.... இசைக்கு, பெண்கள் பகுதிக்குள் போக ஆசையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துலகில் இருக்கும் அநேகரின் முற்போக்கு என்பது.. அடிப்படை மனித நாகரிகத்தை அவர்கள் மீறிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே சொல்கிறது. முற்போக்கு என்பது எழுத்தில் மட்டும் இருந்தால் போதாது.. ஒருவர் வாழ்ந்து காட்டும் விதத்திலும் அது இருக்கிறது. ஆனால் பலர் மிருகத்தை விடக் கீழான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு எழுத்தில் அதற்கு முற்போக்கு என்று பெயரிட்டும் கொள்கின்றனர்.

அண்மைய நாட்களாக இணைய உலகில்.. தமிழ் எழுத்துலகில் முற்போக்கு என்று பிதட்டிக் கொண்டிருந்தவர்களின் மகா பிற்போக்குத்தனமான செயற்பாடுகள்.. வெளி வந்த வண்ணமுள்ளன.

அது.. தமிழச்சி.. தொடங்கி.. சோபா சக்தி ஈறாக.. சாரு நிவேதிதா வரை தொடர்கிறது. இன்னும் இந்தப் போலி முற்போக்கு முகத்திரைகள் கிழியத்தான் இருக்கின்றன..! அதையும் நாம் யாழிலும்... காணவே செய்வோம்..!

இவர்களின் முற்போக்கு பற்றி இவர்களின் இணைய வரவுகளின் ஆரம்பகாலத்திலேயே சுட்டிக்காட்டி இருக்கிறோம். அப்போதெல்லாம்... அவற்றை கடுமையாக எதிர்த்தவர்களே இன்று முற்போக்குகளின் பொய் முகத்தை கிழிக்கும் செயலை செய்கிறார்கள் என்பது காலம் எவ்வளவு விரைவாக உண்மைகளை வெளிக்கொணர்கிறது என்பதை உணரச் செய்கிறது. :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.