Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கில்லி சூனியம்

Featured Replies

பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் தாயகம் குருசேவின் "கில்லி சூனியம்" நாடகம் நேற்று யோக்வூட் அரங்கத்தில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறியது.

யாழ்ப்பாண தமிழனின் சாதியத்தில் தொடங்கி இன்று நாலு பிரிவாக அடிபடுவதுவரை ஒரு வரலாற்றுத்தொகுப்பாக கிண்டல் நையாண்டியுடன் யாழ்பாணமேட்டுக்குடியின் உண்மை முகத்தை கிழித்ததே நாடகத்தின் சாராம்சம்.சிங்களவனை வெல்ல எப்படியெல்லாம் பேய் வேசம் போட்டு கடைசியில் சூனியம் வைத்து கில்லி என்ற ஆட்கொல்லி பேயிடம் போய் உள்ளவனை எல்லாம் பலி கொடுத்தகதை. ராமநாதன்,ஜீ.ஜீ,செல்வா,அமிர்,பிரபா ஒருவரும் விட்டுவைக்கபடவில்லை.

இடைவேளையற்ற 2 மணி நேர நாடகம்.வசனங்கள் தான் நாடகத்தின் கதாநாயகன்.நடிப்பும் எவரும் சோடை போகவில்லை.

ஆனால் நாடகம் என்றவுடன் ஒரே நாடகபாணியில் தான் (வழக்கபேச்சு இல்லாமல்) ஏன் எல்லோரும் நாடகம் போடுகின்றார்களோ தெரியவில்லை

இப்படி ஒரு கருத்தை துணிந்து மேடையேற்றிய குருசேவை பாராட்டியே ஆகவேண்டும்.

நன்றி தகவலுக்கு.

கடந்தகாலத்தை மட்டுமா இவர்கள் அரங்கேற்றினார்கள்? இன்று நடப்பதையும் கூறினார்களா?

கடந்த காலத்தில் இருந்து நிச்சயம் பாடங்கள் படிக்கவேண்டும் வேண்டும், அன்று இன்றை நிலை பற்றி அதிக அக்கறை இருக்க வேண்டும். இல்லை இதுபற்றி நாளை ஒரு நாடகம் போட இல்லை பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய மூடத்தனங்களை நிகழ்கால சந்ததிக்கும் பரப்பும் ஒரு வழிமுறை. சாதி தொடங்கி கில்லி சூனியம் (அப்படின்னா என்ன..??!) முதல்... இன்று வரை நாமளே நம்மள நளினம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியது தான். இதை விட வேற என்னத்தை வெட்டிக் கிழிச்சிருக்கிறம்.. எங்களின் கலை வடிவங்களூடு..!

புலிகளைத் தவிர வேறு எவரும்.. இன விமேசனத்துக்கு கலைப் படைப்புக்களை தருவதாக இன்றில்லை. ஒன்றில் சாதி.. இல்ல நளினம்.. இல்ல கடவுள்.. இதுதான் எம் கலை..??! இதை ரசிக்க ஒரு கூட்டம். கொடுமை..! :unsure::o

Edited by nedukkalapoovan

இப்படி ஒரு கருத்தை துணிந்து மேடையேற்றிய குருசேவை பாராட்டியே ஆகவேண்டும்.

இதற்கு என்ன துணிவு வேண்டும் ?

தாயகம் குருசேவ் அல்லது கியூறியஸ் ஜி ஆகியோர் சகல தரப்பினரினதும் உண்மை முகத்தை கிழித்து ஆக்கங்கள் படைப்பார்களாயின் பாராட்டலாம். வழமைபோல ஒரு சாராரின் முகத்திரையையே கிழித்துக் கொண்டிருந்தால், அவர்களே போற்றிப் பாட முனையும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானது.

கில்லி என்று ஒரு தமிழ் படம் வந்திருந்தது. கில்லி என்றால் என்ன? அதை சூனியத்துடன் சேர்த்தால் என்ன பொருள் பெறும்?

கில்லி என்று ஒரு தமிழ் படம் வந்திருந்தது. கில்லி என்றால் என்ன? அதை சூனியத்துடன் சேர்த்தால் என்ன பொருள் பெறும்?

பில்லி சூனியம் போல இது Killi சூனியம்.

கூகிளின் உதவியுடன் தேடி கில்லி என்றால் துல்லியம் என்றும் ஒரு பொருள் கண்டேன். இது சூனியத்துடன் சேர்த்தால் பொருள் ஒன்றும் வரவில்லை :o

  • தொடங்கியவர்

நாடகம் முடிந்தபின் குருசேவிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இப்படியே எல்லோரையும் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தால் யார்தான் சரியானவர்கள்? நீர் உமது தீர்வையாவது சொல்லலாம்தானே எனகேட்டேன்.

நடிகன் நடிப்பது சரியில்லை என்று எழுதினால் நீ வந்து நடியன் என்று அவர் கேட்க முடியாது,அது போல் தான் விளையாட்டுவீரர்களும்.

அந்த துறைக்கு என போனனீர்கள் அதை சரிவர செய்யாவிட்டால் அதைவிமர்சிப்பதும்,தட்டிக்கேட்பதும் மக்களின் பொறுப்பு.அதன் ஊடாகத்தானவர்கள் விடும் பிழையை அவர்களுக்கு சொல்லமுடியும் என்றார்.

அகூதா துணிவு பற்றி கேட்டிருந்தார்.டக்கிளஸ் ஊரில பிரச்சனை என்னவென்றாலும் கேளுங்கோ என்றமாதிரிதான் இருக்கு.அங்கு வாய் திறக்க எவ்வளவு துணிவு வேண்டுமோ அதைவிட துணிவு புலியை பற்றி விமர்சிக்க வேண்டும்.இப்ப அவர்கள் தங்களுக்க அடிபடுவதால் மற்றவர்கள் மீது கவனம் குறைந்துவிட்டது.

நெடுக்ஸ் நாம் எப் பேர்ப்பட்ட பிற்போக்கான நிலையில் இருக்கின்றோம் என்பதே நாடகத்தின் மூலக்கரு.எங்களை நாமே இன்னமும் அடக்கிக்கொண்டு மற்றவனில் இருந்து விடுதலைக்கு வழி தேடுகின்றோம்

டக்கிளஸ் ஊரில பிரச்சனை என்னவென்றாலும் கேளுங்கோ என்றமாதிரிதான் இருக்கு.அங்கு வாய் திறக்க எவ்வளவு துணிவு வேண்டுமோ அதைவிட துணிவு புலியை பற்றி விமர்சிக்க வேண்டும்.இப்ப அவர்கள் தங்களுக்க அடிபடுவதால் மற்றவர்கள் மீது கவனம் குறைந்துவிட்டது.

அங்கு ஊரில் உள்ள சுதந்திரத்தையும் இங்கு கனடாவில் உள்ள சுதந்திரத்தையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிட்டது சுத்த அயோக்கியத்தனம்.

நாடகம் முடிந்தபின் குருசேவிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இப்படியே எல்லோரையும் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தால் யார்தான் சரியானவர்கள்? நீர் உமது தீர்வையாவது சொல்லலாம்தானே எனகேட்டேன்.

நடிகன் நடிப்பது சரியில்லை என்று எழுதினால் நீ வந்து நடியன் என்று அவர் கேட்க முடியாது,அது போல் தான் விளையாட்டுவீரர்களும்.

அந்த துறைக்கு என போனனீர்கள் அதை சரிவர செய்யாவிட்டால் அதைவிமர்சிப்பதும்,தட்டிக்கேட்பதும் மக்களின் பொறுப்பு.அதன் ஊடாகத்தானவர்கள் விடும் பிழையை அவர்களுக்கு சொல்லமுடியும் என்றார்

இதைத்தான் தப்பிலியும் கேட்டிருந்தார். இந்த நாடகங்கள் மூலம் இன்றைய தாயக நிலைமை விழிப்புணர்வையையும் கொண்டுவரலாம் எனவும் அதுவே உண்மையான கலைழன்/ நாட்டுப்பற்றாலாளின் சேவையாகும்.

எப்பொழுதுமே கடந்தகாலத்தை விமர்சிப்பது இலகு. எதிர்காலத்தை கணக்கிடுவது - அதுவே இன்று தேவை. அதை ஆக்கபூர்வமாக விவாதிப்பதால் மட்டுமே அடையமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதுமே கடந்தகாலத்தை விமர்சிப்பது இலகு. எதிர்காலத்தை கணக்கிடுவது - அதுவே இன்று தேவை. அதை ஆக்கபூர்வமாக விவாதிப்பதால் மட்டுமே அடையமுடியும்.

ஆக்கபூர்வமாக எவருக்கும் விவாதிக்க விருப்பமில்லை. விருப்பமில்லாத கருத்துக்களையும் கேட்டு அதற்குப் பொறுமையாகப் பதில் அளிப்பதைவிட செயலில் இறங்கத்தான் பலருக்கு விருப்பம். செயற்பாடு சரியானால் சிக்கல் இல்லை. சரிவராவிட்டால் விளக்கம்கூட கொடுக்க முடியாமல் திணறுவதுதான் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சகல தரப்பினரினதும் உண்மை முகத்தை கிழித்து ஆக்கங்கள் படைப்பார்களாயின் பாராட்டலாம். வழமைபோல ஒரு சாராரின் முகத்திரையையே கிழித்துக் கொண்டிருந்தால், அவர்களே போற்றிப் பாட முனையும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானது.

உண்மைதப்பிலி..

ஏனோ ஈழத்தில் சமுகப்பிரச்சனைகளைப் பற்றிப் பேசுபவர்கள் புலி எதிர்ப்பாளர்களாக மட்டும் இருப்பது துரதிஸ்டம்...இவர்கள் உண்மையான சமூக அக்கறையுடன் பேசுவதில்லை தமது நிகழ்ச்சி நிரல் அல்லது சொந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்க்காக இவற்றைத் தூக்கிபிடிக்கிறார்கள் ..ஆனால் இவர்களை எதிர்க்கிறோம் என்று எமது சமுகத்திற்க்கிடையில் புரையோடிபோயிருக்கும் பிற்போக்கு விடயங்களை நன்றாகத்தெரிந்து கொண்டும் நாம் பேசாமல் இருக்கிறோம் அல்லது கண்டும் காணமல் இருக்கிறோம்..இது மிகவும் அபத்தமானது..சாதி என்ற ஒன்றே எமது சமூகத்தில் இல்லை என்று எங்களை நாங்களே எங்களுக்கிடையில் சொல்லிப் பெருமைப்படலாம் உண்மை அதுவல்ல என்று தெரிந்துகொண்டும்..

ஆக்கபூர்வமாக எவருக்கும் விவாதிக்க விருப்பமில்லை. விருப்பமில்லாத கருத்துக்களையும் கேட்டு அதற்குப்

பொறுமையாகப் பதில் அளிப்பதைவிட செயலில் இறங்கத்தான் பலருக்கு விருப்பம். செயற்பாடு சரியானால் சிக்கல் இல்லை. சரிவராவிட்டால் விளக்கம்கூட கொடுக்க முடியாமல் திணறுவதுதான் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள்!

கிருபனுக்கு ஒரு பச்சை..

நடிகன் நடிப்பது சரியில்லை என்று எழுதினால் நீ வந்து நடியன் என்று அவர் கேட்க முடியாது,அது போல் தான் விளையாட்டுவீரர்களும்.

அந்த துறைக்கு என போனனீர்கள் அதை சரிவர செய்யாவிட்டால் அதைவிமர்சிப்பதும்,தட்டிக்கேட்பதும் மக்களின் பொறுப்பு.அதன் ஊடாகத்தானவர்கள் விடும் பிழையை அவர்களுக்கு சொல்லமுடியும் என்றார்.

.எங்களை நாமே இன்னமும் அடக்கிக்கொண்டு மற்றவனில் இருந்து விடுதலைக்கு வழி தேடுகின்றோம்

அர்ஜுன்! உங்கள் இந்தக்கருத்துகள் சரியானவையே..

Edited by சுபேஸ்

ஆக்கபூர்வமாக எவருக்கும் விவாதிக்க விருப்பமில்லை. விருப்பமில்லாத கருத்துக்களையும் கேட்டு அதற்குப் பொறுமையாகப் பதில் அளிப்பதைவிட செயலில் இறங்கத்தான் பலருக்கு விருப்பம். செயற்பாடு சரியானால் சிக்கல் இல்லை. சரிவராவிட்டால் விளக்கம்கூட கொடுக்க முடியாமல் திணறுவதுதான் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள்!

இந்த திரியை வேறு ஒரு இடம் கொண்டு செல்லவிரும்பவில்லை, ஆனால் இது சம்பந்தமாக ஒரு குறிப்பு.

எல்லா 'நாடுகளிலும்' தமது அரசியல், பொருளாதார மற்றும் சமூக நலன்களை முன்னெடுக்க பலவித அரச சார்பற்ற கொள்கை முன்னெடுப்பு அமைப்புக்கள் உண்டு. உதாரணத்திற்கு கொழும்பில் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பங்கு வகிக்கும் இல்லை 'பருத்தித்துறை பொருளாதார முன்னெட்டுப்பு' என அமைப்புக்கள் உண்டு. மேற்குலகில் இவை மக்களுடன் பல கலந்துரையாடல்களையும் முன்னெடுப்பன. இவை கட்சிகள் சார்ந்தும் சாராமலும் இருக்கலாம்.

ஆனால் நாடே இல்லாத நாங்கள் எதையும் தாயகத்தில் அப்படி கொண்டிருக்க முடியவில்லை. அவ்வாறே இருந்த ஒருசில அமைப்புக்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் ( உதாரணத்திற்கு அறிவியல் மையங்கள் (think tank) ) அங்கு இருந்தன. அவைகள் சரியோ பிழையோ அவர்களுக்கு ஒரு பார்வை இருந்தது.

அப்படியானவற்றை இன்றும் எமது கட்சிகளோ இல்லை அமைப்புக்களோ, தாயகத்திலோ இல்லை புலத்திலேயோ. செய்தது இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நாம் எப் பேர்ப்பட்ட பிற்போக்கான நிலையில் இருக்கின்றோம் என்பதே நாடகத்தின் மூலக்கரு.எங்களை நாமே இன்னமும் அடக்கிக்கொண்டு மற்றவனில் இருந்து விடுதலைக்கு வழி தேடுகின்றோம்

உங்களின் இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எமது பழைய சந்ததிகள் எப்பேர்ப்பட்ட பிற்போக்குத் தனங்களை புதிய சந்ததியிடம் பரப்புகின்றன.. என்பதையே நான் இதனூடு காண்கிறேன். அறிவியலும்.. நாகரிகமும்.. மனிதத்துவமும் வளர்ந்துள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டு கில்லி சூனியமும்.. சாதியமும் பேசினம் என்றால் அவர்கள்.. அந்தச் சமூகத்தை அதற்குள் கட்டி வைக்கவும் மறைமுகமாக வழி செய்யினம்.

நான் பார்க்கிறேன்.. தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஜி ரி வி இல் இருந்து அனைத்து புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சிகளிலும்.. சாஸ்திரம்.. சூனியம்.. மந்திரம் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து இதற்கென ஒரு குழு படையெடுத்து வருகிறது. இதற்கான சூழலை நம்மவர்களே அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 1992ம் ஆண்டென்று நினைக்கிறேன்.. நல்லூரடியில் ஒருவர் சாமி ஆடப் போய்.. தமிழீழ விடுதலைப்புலிகளின் விளிப்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட வேறு தொழில் பார்க்க பிரேரிக்கப்பட்டு மக்களை ஏமாற்றும் செயலை அவர் கைவிட கேட்டுக் கொள்ளப்பட்டார். இப்படிப் பலர் அக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.

ஆனால் புலம்பெயர் சமூகத்தில் எம்மவர்களின் நிஜச் செயற்பாடுகளோ.. கில்லி சூனியத்தை நோக்கி சென்று கொண்டிருக்க.. கலைப்படைப்புக்களோ.. எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாத தன்மைக்கு நக்கல் நளினம் செய்வதோடு சிலர் தங்களை முற்போக்கானவர்கள்.. என்று இனங்காட்டி புகழ் தேட நடத்தப்படுகிறது. அங்கு உண்மையான சமூக அக்கறையோ மாற்றமே அல்ல அவர்களின் நோக்கம். சாதி.. சூனியம்.. இவற்றை உச்சரிக்காமலே படைப்புக்கள் மூலம் மக்களை விழிப்புணர்வு படுத்த முடியும். அப்படியான பல படைப்புக்களை தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம் தந்திருக்கிறது. அவற்றை நாமும் பார்த்திருக்கிறோம்.. பள்ளிகளிலும் அவர்களின் அறிவுரைகளுக்கு ஏற்ப படைப்புக்களை உருவாக்கி இருக்கிறோம். அதன் தாக்கம்.. சிங்களப் பல்கலைக்கழகங்களில் கூட தமிழ் மாணவர்களின் படைப்புக்களில் இருந்தது.

ஒரு தடவை.. யுனிக் கவிதைப் போட்டிக்கு.. கவிதை எழுதிய ஒரு தமிழ் மாணவன் இப்படி எழுதினான்...

pipette.jpg

பிப்பெட்டைக் (pipette) கண்டதில்லை

புக்காராவைக் (pucara) கண்டது வரை..!

"பல்கலை"யில் தேறிட..

முதல் அனுபவமாய்..

உதடு உரச

உறிஞ்சி இழுத்தேன்..

அமிலம்

நாவை அரித்த போது

உணர்ந்தேன்..

ஊரின் வலி..!

fma-ia58-pucara.jpg

இவ்வளவு தான் கவிதை.. இதற்குள் ஒரு போர்க்கால மாணவனின் அனுபவமே அடங்கி இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளை விமர்சிக்காத தரப்பினர் என்று யாரும் இல்லை. எந்த ஒரு அரசியல் கட்சி மீதும்.. ஆயுதக் குழு மீதும் இல்லாத அளவு சர்வதேச.. பிராந்திய.. உள்ளூர் விமர்சனங்களை சந்தித்தவர்கள் புலிகள். காரணம்.. அவர்கள் பற்றி உலகமே அறிந்திருந்ததால்.. விமர்சனத்தின் எல்லையும் விரிந்திருந்தது. புலிகள் துரோகிகளையும் ஆக்கபூர்வமுள்ள விமர்சன கர்த்தாக்களையும் ஒரு போதும் ஒருமித்துப் பார்த்ததில்லை. புலிகளை விமர்சித்த குமார் பொன்னம்பலம்.. புலிகளை பேசிய.. சிவசிதம்பரம்.. புலிகளை விமர்சித்த.. சம்பந்தன்.. என்று பலரினதும் ஆக்க பூர்வமான விமர்சனங்களைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேவேளை புலிகளை மக்கள் விரோதிகள்.. துரோகிகள் விமர்சிப்பதை அவர்கள் விரும்பி இருக்கவில்லை. அது நியாயமானதும் கூட..! துரோகிகளின் விமர்சனம் என்பது அவர்களின் துரோகத்தனத்தை மெய்ப்பிப்பதாக அமையுமே அன்றி.. இனத்தின் தேவையை கருத்தில் கொள்ளாது. அந்த இடத்தில் அந்த விமர்சனங்கள் அர்த்தமற்றவை. கண்டுகொள்ள தேவையில்லாதவை.

Edited by nedukkalapoovan

அன்று தொட்டு இன்றுவரை ஜோர்ஜின் பாணி கிண்டல் கிண்டல் கிண்டல் ...கிண்டல் மட்டுமே

கி;ண்டல்தவிர வேறு எதுவுமே தெரியாது

மற்ரவனை திருத்தத்தான் எழுத்து நாடகம் எல்லாம் என்றால் திருந்தும்விதமாகவல்லவா

எழுதவேண்டும் நாடகத்தை நடாத்தவேண்டும்

கிண்டல் கிண்டலோடு முடிந்துவிடும்

நாடகம் போட்டவருக்கு 4 பேர் முதுகில சொறிய

சொறிந்தவர்களுக்கு அவர் சொறிய

சொறியப்பட்டவர்களுக்கு இதமோ இதம்

சொறிந்த சுகத்தில நாடகம் போட்டவர்களுக்கே நாடகம் மறந்துவிடும்

அர்ஜுன்,

உங்களுக்கு இந்த நாடகத்தை ஒழுங்கு செய்தவர்களுடன் கொஞ்சம் கூடிய பழக்கம் உள்ளது போல உள்ளது. முடிந்தால் அவர்களை இன்றைய நிகழ்வுகள் பற்றி ஒரு நாடகம் போட கேட்கமுடியுமா?

உதாரணத்திற்கு போர் முடிந்தும் மறுக்கப்படும் நீதி - போர்க்குற்றம் பற்றி - இதை இரு கனேடிய கட்சிகள் கூட கேட்டுள்ளன.

சரி அதை விட்டால், அங்கு மக்களுக்கு மறுக்கப்படும் வாழிவியல் இல்லை இராணுவமயமாக்கல் பற்றி?

இப்படி நிறையே தலைப்புக்கள் உள்ளன.

தனிய புலிகளையே குற்றம் சுமத்துவதில் தனிப்பட்ட குரோத உணர்வுகளே மேலோங்கி நிற்கிறன சமூக நலன்கள் அல்ல. அத்துடன் எமக்குள் உள்ள குரோதங்ககளை மட்டுமே கதைக்கும் பொழுது மூன்றாம் தரப்பினர் கூட எம்மை பார்த்து சிரிக்கவும் இல்லை எமது பிரச்சனைகளை விட்டே தள்ளியும் போய்விடுவார்கள், அதில் எமது அடுத்த தலைமுறையும் அடங்கும்.

நன்றிகள்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தலவில், தற் போது நாம் சந்ததி எவ்வளவே முன்னேறிவிட்டு, அவர்களுக்கு இதைப்பற்றி அறிய வய்ப்பில்லை, இவர்கள் தங்கள் பிழைப்பிற்காக இப்படி நஞ்சு விதைகளை போகும் மிடமெல்லாம் காவுகின்றார்கள், இவர்கள் குட்டையில் உறிய மட்டைகள், இவர்களிடம் போய் தீர்வு பற்றி நாடக போடுங்கள் என்று கேட்டால், நாடகம் என்றால் என்ன என்று கேட்பார்கள்

அர்ஜுன்,

உங்களுக்கு இந்த நாடகத்தை ஒழுங்கு செய்தவர்களுடன் கொஞ்சம் கூடிய பழக்கம் உள்ளது போல உள்ளது. முடிந்தால் அவர்களை இன்றைய நிகழ்வுகள் பற்றி ஒரு நாடகம் போட கேட்கமுடியுமா?

அகூதா நீங்கள் வேற பகிடி விட்டிட்டு.

புலிகளின் மறைவிற்குப் பின் அவர்களின் இணையத்தில் வரும் ஆக்கங்கள் மிகக் குறைவு. ஒரு பக்கத்தின் தவறுகள்தான் அவர்கள் கண்ணுக்கு தெரியும்.

  • தொடங்கியவர்

அந்த அந்த தொழிலுக்கு போறவன் அதை சரியாக செய்யவேணும்.அதை சரிவர செய்யாவிட்டால் விமர்சனம் வரும் தானே?நாடகம் போடுகிறவனை நீ ஏன் அப்ப போராட்டத்திற்கு தலைமை தாங்கவில்லை என கேட்பது அறியாமை.

அப்ப சீ.என்.என் இல் வந்து விமர்சனம் வைப்பவன் எல்லாம் ஜனாதிபதிக்கு போட்டிபோட வேண்டும் போலகிடக்கு?

இனி சம்பந்தரில் விமர்சனம் வரும் அதற்கு பதில் கூறுவதும் இல்லை ஓடிமுழிப்பதும் அவர் விருப்பம்

அகூதா நான் நீர் விரும்புகின்றமாதிரி நாடகம் போடமுடியாது.இந்த நாடக அமைப்பாளர்கள் பல வித சமூகபிரச்சனைகளை முன்னிறுத்தி நாடகம் போட்டார்கள்,போட்டுக்கொண்டுஇருக்கின்றார்கள்.ஜயகரன் செப்டம்பரில் நாடகம் போடுகின்றார் முடிந்தால் வந்துபார்க்கவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் எல்லோரும் மனிதத்திற்காக குரல் கொடுப்பவர்கள்.பொதுமக்களை கொலை செய்தால் அரசென்றாலும் ,புலியென்றாலும் பிழைதான்.

தேசியம் என்றபெயரில் புத்தரின் சிலையை வைத்து இரத்தபூஜை செய்து நாட்டில் இருந்த சிறுவர்கள் மனதில் வக்கிரத்தை வளர்தது போதாதென்று புலம் பெயர்ந்த சிறுவர்கள் மனதையும் கெடுக்க சொல்லுகின்றீர்கள்.பனாட்டிக்காக எமது சமூதாயத்தை வளரவிடாமல் வைப்பததே மிக முக்கியாமானதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை இங்கு .................. பட்டிமன்றம் நடாத்த வந்திருந்தார்கள்.

4 பேர் ஒரு பக்கம் மறுபுறம் நாலுபேர். மாறிமாறி பேசிக்கொண்டேயிருந்தார்கள். நடுவரும் இடைக்கிடை கடிஜோக்குகள் சொல்லிக்கொண்டுவந்தார். சபை பல மணி நேரமாக அமைதியாகவே இருந்தது. பேச்சோடு ஒரு பேச்சாளர் தமிழனின் வீரம் கொடிகட்டிப்பறக்கிறது என்றார். கை தட்டல் வானைப்பிழந்தது. அதிலிருந்து அத்தனை பேச்சாளர்களும் ஏன் நடுவரும் தமிழரின் வீரத்தையும் ஈழத்தையும்பற்றி மட்டுமே பேசி கைதட்டலை வாங்கிக்கொண்டார்கள். இங்கு இதை நான் எழுதக்காரணம்

தற்போதைய சூழ்நிலையைப்பயன்படுத்தி அதில் பிழைப்பு நடாத்த ஒரு கூட்டம் முயல்கிறது.

டிஸ்கி :- திருவாளர் ARJUN அவர்கள் அந்த கூட்டங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறார்

  • தொடங்கியவர்

கை தட்டுக்கு போராட்டம் நடாத்தித்தான் இப்போ உலகெங்கும் கையேந்தி நிற்கின்றோம்.

இன்னமும் விளங்காவிட்டால் கஸ்டம் தான்.கலரியில் இருந்து விசிலடித்தவர்கள் நடாத்திய போராட்டம் இப்படித்தான் முடியும்.

தியேட்டருக்கு போகாமல் லைபிரரிக்கு இனியாவது பிள்ளைகளை அனுப்புங்கோ?

அந்த அந்த தொழிலுக்கு போறவன் அதை சரியாக செய்யவேணும்.அதை சரிவர செய்யாவிட்டால் விமர்சனம் வரும் தானே?நாடகம் போடுகிறவனை நீ ஏன் அப்ப போராட்டத்திற்கு தலைமை தாங்கவில்லை என கேட்பது அறியாமை.

அப்ப சீ.என்.என் இல் வந்து விமர்சனம் வைப்பவன் எல்லாம் ஜனாதிபதிக்கு போட்டிபோட வேண்டும் போலகிடக்கு?

இனி சம்பந்தரில் விமர்சனம் வரும் அதற்கு பதில் கூறுவதும் இல்லை ஓடிமுழிப்பதும் அவர் விருப்பம்

சரியாகச்சொன்னீர்கள் அர்ஜூன்.

அதைத்தான் நாமும் கேட்கிறோம். ஒரு நாடகத்தை போட்டு முள்ளிவாய்க்காலின் பின்னர், இரு வருடங்கள் ஆகியும் தாயக மக்களின் நிலைமையை மக்களுக்கு, இளையோர் உட்பட சொல்லுங்கள்.

அகூதா நான் நீர் விரும்புகின்றமாதிரி நாடகம் போடமுடியாது.இந்த நாடக அமைப்பாளர்கள் பல வித சமூகபிரச்சனைகளை முன்னிறுத்தி நாடகம் போட்டார்கள்,போட்டுக்கொண்டுஇருக்கின்றார்கள்.ஜயகரன் செப்டம்பரில் நாடகம் போடுகின்றார் முடிந்தால் வந்துபார்க்கவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் எல்லோரும் மனிதத்திற்காக குரல் கொடுப்பவர்கள்.பொதுமக்களை கொலை செய்தால் அரசென்றாலும் ,புலியென்றாலும் பிழைதான்.

தேசியம் என்றபெயரில் புத்தரின் சிலையை வைத்து இரத்தபூஜை செய்து நாட்டில் இருந்த சிறுவர்கள் மனதில் வக்கிரத்தை வளர்தது போதாதென்று புலம் பெயர்ந்த சிறுவர்கள் மனதையும் கெடுக்க சொல்லுகின்றீர்கள்.பனாட்டிக்காக எமது சமூதாயத்தை வளரவிடாமல் வைப்பததே மிக முக்கியாமானதாகும்.

ஜயகரன் போடும் நாடகத்தை அதன் விபரத்தை அறியத்தாருங்கள் முடிந்தால் வந்து பார்க்கிறேன்.

நீங்களே பலதடவைகள் சொன்னமாதிரி கனாட ஒரு பல்லின கலாச்சார நாடு. இதில் அநேகமாக எல்லா இனத்தவரும் தமது பாரம்பரியம், கலாச்சாரம் பற்றி அறியவே ஆவலாயுள்ளர்கள். இது எமது தலைமுறைக்கும் பொருந்தும்.

நிச்சயம் பொப் மார்லியின் ஒரு ரெகே பாட்டை, 'பப்வலாவ் சொல்டிஎர்ஸ்' (Buffalo Soldires) கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

If you know your history,

Then you would know where you coming from,

Then you wouldn't have to ask me,

Who the 'eck do I think I am.

http://www.lyrics007.com/Bob%20Marley%20Lyrics/Buffalo%20Soldier%20Lyrics.html

கருப்பு ஜூலை பற்றி ஒரு நாடகம் ஆங்கிலத்தில் பலமுறை போட்டார்கள். பல இளையோருக்கு தமது மக்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அவர்களில் ஒருவர் நாளை கனேடிய பிரதமராக கூட வரலாம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

akootha,

Go to---- www.trcto.org

All the details there.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.