Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

60 ஆயிரம் ஏக்கர் காணிகள் அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு மஹிந்தா வழங்கினார்

Featured Replies

சிறிலங்கா அற்பதாயிரம் ஏக்கர் கா|ணிகளை அமெரிக்காவிற்கு நீண்டகால குத்தகைக்கு வாழைப்பழ செய்கைக்காக கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினை எதுவித வெளிப்படைத்தன்மை இன்றி அமெரிக்கா செய்துள்லதாக இலங்கையின் சூழலியல் காப்பாளர் பியால் பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

.

இந்த காணிகள் அனைத்தும் இலங்கையின் இயற்கைச்சூழலை பாதுகாக்கும் காடுகள் ஆகும். இதுவரை 60 ஆயிரம் ஏக்கர் காடுகள் வாழைப்பழச்செய்கைக்காக அமெரிக்க கம்பனி ஒன்றினால் அழிக்கபப்ட்டு பயிர்ச்செய்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

.

இந்த காணித்துண்டங்களில் 15 ஆயிரம் ஏக்கர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் நிலங்களாகும்.

.

இனி அமெரிக்கா எப்படி தமிழர்கள் உரிமை பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் சிங்களத்துடன் இறுக்கம் காட்டும்??

http://www.eelanatha...%AE%95%E0%AF%81

Edited by உமை

திருகோணமலை துறைமுகமே கண்வைக்கப்படுவதாய் தெரிகின்றது.

வாழைப்பழம் என்ற போர்வையில் வேறு ஏதாவது நடக்கும். அங்கு தாயகத்தில் வாழப்பழம் செய்து அமெரிக்காவுக்கு கொண்டுவருதல் என்பது 'சுண்டங்காய் காற்பணம் சுமைக்கூலி முக்கால் பணம்' !

திருகோணமலை துறைமுகமே கண்வைக்கப்படுவதாய் தெரிகின்றது.

வாழைப்பழம் என்ற போர்வையில் வேறு ஏதாவது நடக்கும். அங்கு தாயகத்தில் வாழப்பழம் செய்து அமெரிக்காவுக்கு கொண்டுவருதல் என்பது 'சுண்டங்காய் காற்பணம் சுமைக்கூலி முக்கால் பணம்' !

இலங்கை அமெரிக்காவிற்கு நேரே எதிராக உலகத்தின் அடுத்த பகுதியில் இருக்கிறது. கிட்டத்தட்ட அரை உலக தூரம். (15,000km)

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விவசாயத்தில ஈடுபடுது எண்டு இப்பத்தான் முதல்முதலா கேள்விப்படுறன். :wub: அமெரிக்காவைச் சேர்ந்த ஏதாவது ஒரு தனியார் நிறுவனமா இருக்கலாம். அந்த நிறுவனத்துக்குச் சொந்தக்காரன் ஒரு சிங்களவனாவும் இருக்கலாம்.. :wub:

சும்மா ஆக்களைக் குழப்புற செய்திபோலத் தெரியுது.. அதுக்காக அமெரிக்கா எல்லாத்தையும் கிழிக்கப்போகுது எண்டும் இல்லை..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா வாழைத்தோட்டம் போட அவ்வளவுதூரத்திலையிருந்து அமெரிக்கன் சிறிலங்காவுக்கு போறானோ? :D

images-4.jpgimages2-3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனுக்கு சிறிலங்கன் வாழைப்பழம் தேவைப்படுது போலை..எங்கையோ ருசி கண்டிட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கனுக்கு சிறிலங்கன் வாழைப்பழம் தேவைப்படுது போலை..எங்கையோ ருசி கண்டிட்டாங்கள்

அவர்கள் பக்கத்தில் மேற்கு இந்தியா நாடு இருக்கே பின்பு ஏன் சிறிலங்காவை தெரிவு செய்கின்றார்கள்............? :lol:

உணவு உற்பத்தி என்பது சாதராணவிடயம் கிடையாது. சீனா ஆபிரிக்க நாடுகளில் மிகப்பெரும் உணவு உற்பத்தியை செய்கின்றது. இது தனியே குறுகிய நோக்க வர்த்தகம் லாபம் என்பதற்கு அப்பால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் வறுமை என்பதை பயன்படுத்தமுனையும் தூரநோக்காகவும் கொள்ளுதல் அவசியமானது.

காமராஜர் காலத்தில் அமரிக்க உணவு உதவித்திட்டம் என்ற அடிப்படையில் மெச்சிக்கோவில் இருந்து தருவிக்கப்பட்டு தமிழகத்தில் தூவப்பட்ட கருவேலமரங்கள் தமிழகவளத்தை அழித்து வறுமைக்கு வித்திடுகின்றது. தமது நாட்டை ஆழ்வதற்கு எப்போதும் முட்டாள்களையே தேர்ந்தெடுக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் விவசாய வளங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆயிரக்கணக்கில் விவசாயிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்கின்றனர். நாடு கான்கிரீட் காடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்தியப் புத்திசாலிகள் கம்பியூட்டருக்கால் சாதமும் சாம்பாரும் வரும் என்று நம்புகின்றனர். வறுமை தாண்டவமாடும்போதும் அமரிக்கா வாழைப்பழம் கொடுத்து உலக ரட்சகனாய் இருப்பான். அன்று கருவேலமரமும் சரி இன்று இலங்கையில் வாழைத்தோட்டமும் சரி எல்லாம் நீண்டகாலத் திட்டமிடலே.

இலங்கையில் இன்று சீனர்களுக்கு சொந்தமான பிறிமா மா ஆலை கனடாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்து மாவாக்கி பல்வேறு நாடுகளுக்கு அனுப்புகின்றது. இலங்கை முழுவதும் மாவை வினயோகம் செய்கின்றது அத்தோடு அல்லாமல் அனைத்து இடங்களுக்கும் வெதுப்பகத்துக்கான உபகரணங்களையும் வழங்கி பாணை இலகுவாக உற்பத்தி செய்ய வழிசெய்கின்றது. தாம் உற்பத்தி செய்த சத்தான தானிய உணவுகளில் இருந்து மக்கள் விலகி இலகுவான பாணை உணவாக உட்கொள்கின்றனர். உடல்பருமன் சலரோகம் என மக்கள் அழிவுநோக்கி செல்கின்றனர். றப்பரை இலங்கையிடம் வாங்கி அதில் விழையாட்டுப்பொருட்களைச் செய்து திரும்ப அதை இலங்கையிலேயே விற்பனை செய்கின்றது சீனா தாய்வான் போன்ற நாடுகள். உலகில் அதிகளவு கொண்டக்கடலையை உற்பத்தி செய்த இந்தியா இன்று இறக்குமதி செய்யும் நிலைக்கு வருகின்றது. இப்படி எத்தனையோ. முட்டாள்கள் இருக்கும் வரை எண்ணையும் வாகனங்களும் கம்யூட்டரும் கடசியில் வாழைப்பழமும் புத்திசாலிகளுக்கு லாபம் தருபவையே.

ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு: கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

ஆமோதித்தது அறிவியல்: கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு , அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.

கொடூரமும், கோரமும்: பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை "சுவாகா' செய்வதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் இங்கு தான் அதிகம் அரங்கேறி வருகிறது.

காற்றையும் விட்டுவைக்கவில்லை! நிலத்தடி நீரை பால்படுத்தும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் பிரபல டோல் உணவு உற்பத்தி கம்பனிதான் இந்த வாழைப்பழ செய்கைக்கு காடுகளை அழிக்குது. ஆனால் இந்த காடுகளை அள்வீடு செய்து மாப்பிங் செய்வது அமெரிக்க பாதுகாப்பு துறை சார் நிறுவனம். அது மட்டுமல்ல இந்த டீலை செய்ததும் அதற்கு அமெரிக்கா சார்பாக கையெழுத்துப்போட்டதும் ரொபேர்ட் பிளேக்.

இப்போ சொல்லுங்கள் இது சாதாரண வாழைப்பழ செய்கையாக இருக்குமா?

நல்லதொரு தூரநோக்குப் பார்வையான கருத்து சுகன் .

இதே போல 60 களில் இந்தியாவில் பெரிதாக வரவேற்கப்பட்ட பசுமைப் புரட்சியும் மண்ணை மலடாக்கியது.

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.