Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையும் கதையும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது அருமை நண்பன் அவரது ரீன் ஏஜில் தமிழீழ விடுதலைக்காகப் போராடப் போய் அடுத்த ஆண்டே தமிழீழத்தின் இதய பூமியில் தன்னுயிரை உடலை தேசத்துக்கு அர்ப்பணித்திருந்தார். அவரோடு இணைந்து பள்ளி நாட்களில் இந்தியப் படைகளுக்கு தண்ணி காட்டி தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான சில பணிகளை சிறுவர்களாக இருந்து செய்தவை இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இன்று அவரையும் அவரோடு கூடித் திரிந்த நாட்களையும்.. இணைந்து ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து.. அவனுக்குள் ஒரு போராளி என்ற வடிவத்திற்கு அப்பால் நண்பனாக.. முளைத்திருந்த ஆசைகளை.. அந்த ரீன் ஏஜ் காதலை அறிந்தவன் என்ற வகையில்.. ஒரு இசையும் கதையும் தரப் போகிறேன். இது இந்த வடிவத்திலான எனது ஆக்கத்தில் ஒரு காளை முயற்சி. (மன்னிக்கனும்.. கன்னிக்கு மட்டுமல்ல.. கன்னி தன்மை.. காளைக்கும் காளைத் தன்மை இருக்குமல்லவா.... அதனால் என் முதல் முயற்சியை காளை முயற்சி என்கிறேன்.)

(இது ஒரு தொடர்.. இடையில் நிற்காது என்று நம்பி தொடர்கிறேன்.)

-------------------------

யாழ் நகரில்.. கே கே எஸ் வீதி வழியாக.. பொன்னுச்சாமி.. பொன்னரிடம்.. தமிழ் கற்க ஓடுகிறோம். நான் சைக்கிளை மிதிக்க.. அவன் என் சைக்கிளின் கரியரில் இருந்த படி.. பகிடி விட்டுக் கொண்டு.. வர.. பிழைச்சுப் போடா.. நண்பேண்டா என்று நினைச்சுக் கொண்டு அந்தக் "குண்டனை" (உருவத்தில் அப்படி என்பதால் அவனை அப்படித்தான் நான் அழைப்பேன். அவன் அதற்காக எல்லாம் கோவிக்கமாட்டான்.) மூச்சிறைக்க சைக்கிளில் வைத்து மிதித்துக் கொண்டு போகிறேன்.

போகும் வழியில்.. முதுகைச் சுரண்டினான். என்னடா குண்டா.. எதுக்கு முதுகைச் சொறிரா... சரியா அந்த இடத்தில தான் கடிச்சுது.. தெரிஞ்சா சொறியிறா.. என்று கேட்க.. அங்க பாராடா.. யார் போறது என்று சொல்லி முடிந்தான். அது வேறு யாருமில்ல.. எங்கள் அயலில் வாழ்ந்து வந்த நம்ம வயசுப் பையங்களின் அழகு தேவதை.. (தேவதை என்றது.. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு என்றாலும்.. அஜெஸ்ட் பண்ணிக்கோங்க).. அனுஷியா போய்க் கொண்டிருந்தாள். அவள் மீது நம்ம குண்டருக்கும் ஒரு கண்...

அவளுக்காகவே பொன்னரிடம்.. கெஞ்சி மன்றாடி.. அந்த நேர வகுப்புக்கு அனுமதி எடுக்கிற நம்ம பசங்க சில பேர் போல நாங்க இருக்கேல்ல. பொன்னரா பார்த்து எங்களை அந்த வகுப்பில போட நாங்க இணைஞ்சு கொண்டம். நாங்க.. கொஞ்சம்.. ஜென்ரில் மேன் ரைப். இருந்தாலும்.. ரீன் ஏஜ்.. பசங்க. அழகான பள்ளித் தேவதைகளைக் கண்டால் துரத்திக் கொண்டு போய் அவர்களை அவர்களின் வீட்டில் பத்திரமாக கொண்டு போய் விட்டுவிட்டு வரும் பேர்வழிகளாய் இன்றி நாங்க கொஞ்சம் டீசன்ரா.. இருந்தம். அதுதாங்க.. அவள் முன்னாடி ரீயுசனுக்கு போக.. நாங்க பின்னாடி ரீயூசனுக்கு போறது. அவ்வளவும் தான். வீடு வரைக்கும் எல்லாம் போறதில்ல. ஏன்னா.. அந்தப் பொண்ணு வீட்டு பக்கம் தெரு நாய்கள் அதிகம். அது தெரியாமல் போய்.. தெரு நாய் விரட்ட.. விழுந்தடிக்கிறவை பற்றி எங்களுக்கு எல்லோ தெரியும். :lol:

அப்படியாப்பட்ட சூழ்நிலையில்... அனுஷியாவை கண்ட மாத்திரத்தில்.. நம்ம குண்டர்.. கனவில் மிதக்கிறார்... அண்ணாமலை ஸ்ரைலில்..

http://www.youtube.com/watch?v=fgbCR3t-6P8

(தொடருவம்..) :):icon_idea:

(படிச்சுப் போட்டு உங்க அபிப்பிராயங்கள்.. திருத்தங்கள்.. இருந்தா சொல்லுங்க.! - இதில் வரும்.. ஆசிரியரின் பெயர்.. வீதிகள்... பெயர் எல்லாம் உண்மை. கதையும் பெரும்பாலும் உண்மையை பிரதிபலிப்பது. ஆட்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.) :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply

கதை நன்றாகப் போகிறது. தொடருங்கள்.

உங்கள் நண்பனுக்குப் பிடித்த. அல்லது அவரின் காதலில் பாவிக்கப்பட்ட அந்தக் காலப் பாடல்களையும் இடைக்கிடை சேர்த்துக் கொண்டால், ஒரு 'பீரியட் எபாக்ட்' கொடுத்த மாதிரி இருக்கும். :)

பி.கு.

இது இந்த வடிவத்திலான எனது ஆக்கத்தில் ஒரு காளை முயற்சி. (மன்னிக்கனும்.. கன்னிக்கு மட்டுமல்ல.. கன்னி தன்மை.. காளைக்கும் காளைத் தன்மை இருக்குமல்லவா.... அதனால் என் முதல் முயற்சியை காளை முயற்சி என்கிறேன்.)

இங்கதான் நீங்க நிற்கிறீங்கள். :icon_mrgreen:

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகப் போகிறது. தொடருங்கள்.

உங்கள் நண்பனுக்குப் பிடித்த. அல்லது அவரின் காதலில் பாவிக்கப்பட்ட அந்தக் காலப் பாடல்களையும் இடைக்கிடை சேர்த்துக் கொண்டால், ஒரு 'பீரியட் எபாக்ட்' கொடுத்த மாதிரி இருக்கும். :)

இசைஞானி.. கொஞ்சம் தொய்ய.. ARR கொடி கட்டிப் பறந்த காலம். கதைக்கேற்ப பாடல் கிடைச்சால் நிச்சயம் இணைக்கிறேன். தங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு ஆரம்பமே அசத்தல், தொடருங்கள், பாட்டு நல்ல பொருத்தமா இருக்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

"Quote - 1995 இடம்பெயர்வு வரை. அதன் பின் சில ஆண்டுகள் கொழும்பில் படித்தேன்"

நெடுக்கு எனக்கு ஒரு உண்மை தெரிச்சாகனும், இந்தியன் ஆமி வரும்போது உங்களுக்கு என்ன வயசு குத்துமதிப்பா, பச்சை குத்தியதால் சொல்லனும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடரட்டும். காளை முயற்சிக்கு :D பாராட்டுக்கள். ...........

கன்னியரை வம்புக்கு இழுக் கா விட்டால் உங்களுக்கு ச்மிபாடு அடையாதே ...........

...கன்னியால தான் "ச்சா "தண்ணி யால உங்களுக்கு கண்டம்

.....

நல்ல பாடல்களை இணையுங்கள் கதையின் சந்தர்ப்பத்திற்க்கு ஏற்றமாதிரி அப்பதான் கதை போர் அடித்தாலும் பாடலையாவது கேட்கலாம் பிறதர்... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"Quote - 1995 இடம்பெயர்வு வரை. அதன் பின் சில ஆண்டுகள் கொழும்பில் படித்தேன்"

நெடுக்கு எனக்கு ஒரு உண்மை தெரிச்சாகனும், இந்தியன் ஆமி வரும்போது உங்களுக்கு என்ன வயசு குத்துமதிப்பா, பச்சை குத்தியதால் சொல்லனும்

1990 இல் பதின்ம வயதின் ஆரம்பத்தில் இருந்தோம். இவர் 1993/4 இல் இயக்கத்துக்குப் போயிருந்தார். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையின் ஆரம்பம் நல்லாயிருக்கு.

ஒரே ஒரு சந்தேகம்.

இந்தக் கதைக்கு பெயர் இறுதியில் தான் வைப்பியளா அல்லது இந்தக் கதைக்கு பெயரே இசையும் கதையுமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையின் ஆரம்பம் நல்லாயிருக்கு.

ஒரே ஒரு சந்தேகம்.

இந்தக் கதைக்கு பெயர் இறுதியில் தான் வைப்பியளா அல்லது இந்தக் கதைக்கு பெயரே இசையும் கதையுமா

உண்மையில் இக்கதைக்கு.. போராளி என்று தலைப்பிட்டு தான் இசையும் கதையும் என்று போட்டேன். ஆனாலும்.. கதையின் நாயகன் போராளி அவதற்கு முதலே நண்பன் என்பதால்.. அதனை தவிர்த்து விட்டேன். கதையின் இறுதியில் வாசகர்களே தமக்குப் பிடித்தமான ஒரு தலைப்பை கொடுத்துப் பார்க்கட்டும். :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுஷியாவோடு அண்ணாமலை ஸ்ரைலில் கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்த குண்டன்.. சிங்கள விமானப் படையின் சுப்பர் சொனிக் விமானங்களின் சத்தம் காதைக் கிழிக்க.. சொல்லாமல் கொள்ளாமலே.. கரியரில் இருந்து விழுந்து வீதி ஓரம் பதுங்கிக் கொண்டான். நானும் திடீர் என்று சைக்கிள் லேசாக ஓடுதே என்று நினைக்க.. விமானங்கள் குத்திப் பதியும் பேரிரைச்சல் எழுந்தன.. உடனே... சைக்கிளை றோட்டில் போட்டு விட்டு வீதி ஓரம் பதுங்க.. விமானம் ஒன்று வீசிய குண்டுகள்.. பெரும் வெடிச்சத்தத்தோடு வெடித்து கரும்புகையைக் கக்கின.

டேய் ஓடுவம் வாடா.. திரும்பி வட்டம் அடிக்கிறாங்களடா.. குத்தப் போறாண்டா.. என்று அவன் என்னைப் பார்த்துக் கத்த.. இப்ப வேண்டாம்.. அடிக்கிற வரைக்கும் அடிக்கட்டும்.. அடிச்சு விட்ட பிறகு போவண்டா என்று நான் பதிலுக்கு... கத்த.. அவன் அடங்கிக் கொண்டான்.

சிறிது நேரத்திலேயே இரண்டு குண்டுகளை மட்டும் வீசிவிட்டு விமானங்கள் இரண்டும் அப்பால் பறந்து போய்விட்டன. வரிப்புலி அண்ணாக்களின் வாகனங்கள் மட்டும் குண்டுகள் வீசிய பக்கம் உதவிக்கு ஓட.. சனம்.. விமானங்கள் மீண்டும் வருமோ என்ற பயத்தில் வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தன.

டேய் கெங்காதரன் ஆஸ்பத்திரிப் பக்கமாத் தான் குண்டு போட்டவங்களடா. பொன்னுச்சாமியர் இண்டைக்கு வகுப்பு வைப்பாரோ தெரியாது. நாங்க வீட்ட போவமே.. என்று அவன் கேட்க..

இல்ல.. வா எதுக்கும்.. கிட்ட வந்திட்டம் ஒருக்கா போய் பார்த்திட்டு வருவம் என்று சொல்ல அவனும் ஓம் என்றான்.

நாங்கள் பொன்னர் வீட்டை அடைந்த போது.. மக்கள் கூட்டம் கூட்டமாக வீதி ஓரங்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு குண்டு போட்டவங்களாம். நல்ல காலம் வீடுகளுக்கு மேல விழவில்லையாம். வெறும் காணிகளுக்க விழுந்ததால இழப்பில்லை என்று பேசிக் கொண்டார்கள்.

இவன் குண்டனோ.... எந்தப் பதட்டமும் இன்றி.. அனுஷியாவின் சைக்கிள் பொன்னரின் வீட்டு வாசலில் நிற்கோ என்று,.. லுக்கு விட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்ட எனக்கு உள்ளூர ஒரே ஆத்திரம் பொங்க.. டேய் இந்த நேரத்தில உனக்கு இது தேவையா.. என்று கத்த.. பொன்னரின் வீட்டு வளவில் இருந்து வெளியே வந்தாள் அனுஷியா. வந்தவள் தன் சைக்கிளின் பூட்டைத் திறந்து அதை வீதியில் இறக்கி வீட்டை நோக்கி புறப்பட்டாள். உடனே குண்டனோ.... டேய்.. இன்றைக்கு வகுப்பு இல்லப் போல. வாடா நாங்களும் போவம் என்று சொல்ல.. பொன்னரும்.. இன்றைக்கு வகுப்பு இல்லைப் பிள்ளையள் என்று வீட்டுக்குள் இருந்து கத்தியது அவனுக்கு குசியேற்றியது.

உடனேயே அவன் புறப்படத் தயாரானான். வரும் போது நான் தான் சைக்கிள் ஓடினன்.. இப்ப நீ ஓடு என்று சொல்லி சைக்கிளை அவன் கையில் கொடுக்க.. அவனும் பதில் எதுவும் பேசாது சைக்கிளை வாங்கி ஓட நானும் கரியரில் உட்கார.. இவன் அனுஷியாவை பின் தொடர்ந்தான். அவளோ ஏன் என்றும் திரும்பிக் கூடப் பார்க்கப் போறதில்லை என்ற நினைப்பில் நானிருக்க... விமானங்கள் குண்டு வீசிய பதட்டத்தையும் தாண்டி.. அவளும் இவனை திரும்பிப் பார்த்தாள்....

அந்தப் பார்வையின் அர்த்தங்கள்.. குண்டனுக்கு.. இப்படி அமைந்தன போலும்...

http://www.youtube.com/watch?v=Mm9OciEbRIs

அதனால் தான் என்னவோ.. அமைதியாக அவளை பின் தொடர்வதைச் செய்தான். அவளும் ஓரிரு தடவைகள் இவனை திரும்பிப் பார்க்கவே செய்தாள். அதனால் மனதில் மேலதிக துணிச்சலை வரவழைத்தபடி.. மன்மதக் குஞ்சு என்ற நினைப்பில்.... அவளைப் பின் தொடர்ந்தான்.. நான் கரியரில்.. பரிதாபமாக... இரண்டு பேரின் பார்வை மொழிகளுக்கும் அப்பால்.... றோட்டில் விமானங்கள் வீசிய குண்டுகளால் மக்கள் படும் அவஸ்தையை கண்களால் படம் பிடித்த படி....கூடப் போய்க் கொண்டிருந்தேன்.

(இன்னும் தொடருவம்..)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அப்பவே விளங்கிவிட்டது ஏன் நந்தி மாதிரி முன்னுக்கு இருப்பன் என்று, நல்ல உதவி செய்தீர்கள் உங்கள் நண்பனுக்கு. நீங்கள் இந்தியன் ஆமிக்கு தண்ணி காட்டினீங்கள் என்பதை பற்றி எழதப் பேகிறீர்கள் என்று நினைத்தேன், உங்கள் மிகுதிவரை காத்திருப்போம் வாசிக்க,

தொடருங்கள் இலவம் பஞ்சா பறக்கும் காளை:

kalai1.png

Uploaded with ImageShack.us

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சைக்கிள் யாழ் இந்துக்கல்லூரியை தாண்டி கல்லூரி வீதியில் ஏறியதும்... இந்துவின் விளையாட்டு மைதானத்தின் அரச மர நிழலில் சைக்கிள்களோடு காத்திருந்தது ஒரு கூட்டம். அவர்களைக் கண்டதும் நம்ம குண்டனின் கால்களில் நடுக்கமோ என்னவோ.. சைக்கிளின் வேகம் குறையத் தொடங்கியது. எனக்கு உள்ளூர சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது... இருந்தாலும் அடக்கிக் கொண்டு கரியரில் பாதுகாப்பாக இருந்து கொண்டு.. விடுப்புப் பார்க்கத் தொடங்கினேன்.

பொன்னர் வீட்டில் இருந்து தனது முழுப் பாதுகாப்பில் அனுஷியாவை.. அதுவும் கனவில் டூயட் எல்லாம் பாடிக் கொண்டு வந்து.. அரச மரத்தடியில் வைத்து.. தன் கனவுத் தோழியை.. அந்தக் குழுவினரிடம் கையளித்தது தான் மிச்சம். அப்போது தான் உணர்ந்தான் போலும்.. கரியரில் நண்பன் என்று ஒருத்தன் இருக்கிறான் என்று.

எந்த வழியால போக.. என்று நித்திரையால் விழித்தவன் போல கேட்டான்.. என்னைப் பார்க்காமலே. நேர் வழியில போடா என்றேன்.. இரட்டை அர்த்தம் பொதிய...!

அப்போது அவன் பேசத் தொடங்கினான்.. டேய்.. அனுஷியா நமக்கு உறவு முறைடா. அவளை நான் என் அன்புச் சகோதரியாகத் தான் பார்க்கிறேன். அவளுக்குப் பின்னால ஒரு கூட்டம் திரியுது என்று அவங்க அம்மா எங்கட அம்மாட்ட ஒரு முறை சொன்னதும்.. அம்மா அதை என்னட்டச் சொன்னா. தம்பி இப்படி சங்கதியாம் என்று. கொஞ்சம் கவனிச்சு வைடா என்று. அது தான் இந்தக் கருசணையே தவிர.. நீ இந்தக் காட்சிகளை வைச்சு.. தப்புக் கணக்குப் போடாதே என்றான்..!

அட கடவுளே.. எப்படி இவனைப் பற்றி.. என் மனசில ஓடியதை இவன் அறிஞ்சான்.. என்று வியந்தபடி.. அவன் காதல் கனவில் மிதந்தானோ இல்லையோ.. நான் அவனுக்கு ஒரு காதலி தேடி வைச்சு டூயட்டும் பாட வைச்சு.. பாவத்தைச் செய்தனே.. என்று.. என் கற்பனையின் அபரிமிதத்தை நொந்து கொண்டு.. அமைதியானேன்... எண்ணங்களில் சற்று முன்னர் வரை ஓடியவற்றை மீள நினைவூட்ட விரும்பாமலே..! இருந்தாலும் வானலையில் சில நாட்களுக்கு முன் கேட்டிருந்த.. இசைஞானியின் பாடல் ஒன்றின்.. சில வரிகள் எனக்கு அப்படியே பொருந்தி இருந்த ஞாபகம் வந்து தொலைஞ்சுது...!

http://www.youtube.com/watch?v=jqczX_Aa8bc

நான் இசைஞானியின் பாடல் எந்தளவுக்கு எனக்கு பொருந்தி இருக்கு என்ற மீட்டலில்.. மீண்டும் அமைதியாக... அவன் பேசினான்.. அனுஷியா பின்னால.. ஒருத்தன் சுத்துராண்டா... அவன் கம்பஸுக்கு தெரிவான ஆளாம். நம்மட ஸ்கூலாம் என்றான்..! மீண்டும்.. அசடு வழியாக் குறையில்.. அப்படியா.. ஆள் யாரடா என்று கேட்டேன்...?!

அதற்குப் பதில் சொல்லாமலே...

இறங்கிடா.. வீடு வந்திட்டுது என்றான்.. அவன். நானோ.. கொஞ்சம் குற்ற உணர்வு மேலிட.. கரியரில் இருந்து குதித்து.. அவனின் முகத்தைப் பார்க்க முடியாமலே.. சைக்கிளை வாங்கிக் கொண்டு.. நன்றிடா.நாளைக்கு பார்ப்பம் என்று கூறி... அவசர அவசரமாக விடை பெற்றுக் கொண்டேன்..!

அவனும்.. நாளைக்கு இந்த நேரம் வாறன்.. இப்ப இன்னொரு அலுவல் செய்ய வேண்டி இருக்கு என்று சொல்லி விடைபெற்றான்.. அப்பழுக்கற்றவனாய்.

(செய்ய வேண்டிய.. அலுவலை முடிச்சிட்டு அவன் வர.. நாங்கள்.. இன்னும் தொடருவம்...)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான்.... மேலோட்டமாக பார்த்தேன். சுப்பர்.

இதுவரை யாருமே... கருத்துக் களத்தில் செய்து பார்க்காத.... புது முயற்சி என நினைக்கின்றேன்.

மீண்டும்... பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான்.... மேலோட்டமாக பார்த்தேன். சுப்பர்.

இதுவரை யாருமே... கருத்துக் களத்தில் செய்து பார்க்காத.... புது முயற்சி என நினைக்கின்றேன்.

மீண்டும்... பாராட்டுக்கள்.

நன்றி நன்றி. இன்னும் வளரும்.. தொடர்ந்து படியுங்க.. கருத்தைச் சொல்லுங்க. :):icon_idea:

நாங்களும் சுத்தியடிச்ச இடங்கள் வாசிக்க சந்தோசமாக இருக்கு,அதுசரி தமிழுக்கும் ரியுசனா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, அட உங்கட மனம் தப்பா நினைச்சிட்டுதே, சும்மா,

பாட்டு கதைக்கேற்ற மாதிரி இணைக்கிறிங்க, தெடருங்க கதையை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சுத்தியடிச்ச இடங்கள் வாசிக்க சந்தோசமாக இருக்கு,அதுசரி தமிழுக்கும் ரியுசனா?

நீங்க இராமாயனமும்.. நாட்டார் பாடலும் படிச்ச ஆக்கள். எங்களுக்கு இராமாயனம்.. நளவெண்பா.. பெரிய புராணம்.. சீராப்புராணம் என்று இலக்கியப் பக்கங்கள் நீண்டவை. அதை படிக்க ஒரு முழு இலக்கிய அறிவு பெற்ற ஆசிரியரின் உதவி தேவைப்பட்டது. பொன்னுச்சாமி ஆசிரியர் இலக்கியத்தைப் படிப்பிக்கும் விதமே அழகு. அதிலும் பொம்பிளப் பிள்ளையளை தடவி தடவி படிப்பிப்பார் பாருங்க.. அவையும் தடவக் குடுத்திட்டு படிப்பினம்.. பாருங்க.. (தப்பா நினைக்கக் கூடாது.. அவருக்கு அவருடைய மாணவிகள் எல்லாம் பேரப்பிள்ளைகள் கணக்கு..) நம்ம பயபுள்ளைங்க.. வைச்ச கண் வாங்காம.. பாடத்தில.. சா.. தடவலில... ஒரு கண் வைச்சுக்கிட்டே படிப்பாங்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

முன்பொரு காலத்தில் sun rise வானொலியில் இசையும் கதையும் என்ற தலைப்பில் நடாமோகன் அண்ணாவின் சில கதைகள் ஒளிபரப்பாகும் போது தொழில் நுட்பத்தடங்கல்கள் வந்து ஒரு சில கதைகளை பாதியோட 'கட்' ஆக்கிவிடுவார்கள் ^_^ :rolleyes:நீங்கள் தொடர்வது சந்தோசம்...

உங்கள் நண்பனின் அன்றைய நினைவுகளும், இடையிடையே இன்றைய பாடல்களின் தெரிவுகளும் நன்றாக உள்ளது, உங்கள் ஆக்கங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! :)

பிறதர் இந்தப்பாடல் நான் நேற்றே உங்களுக்கு இணைக்கலாம் என்று வந்தேன்... ஒருதங்கள் சொன்னார்கள் உங்களட்ட நான் வாங்கிகட்டப்போகிறேன் என்று... சரி ரொம்ப நக்கல் அடிக்கிறோம் என்று விட்டுவிட்டேன்... அண்ணனுக்கு மரியாதை கொடுப்போமே என்று... பொருத்தமான பாடல்தான் இணைத்திருக்கிறீர்கள்... தொடருங்கோ... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு காலத்தில் sun rise வானொலியில் இசையும் கதையும் என்ற தலைப்பில் நடாமோகன் அண்ணாவின் சில கதைகள் ஒளிபரப்பாகும் போது தொழில் நுட்பத்தடங்கல்கள் வந்து ஒரு சில கதைகளை பாதியோட 'கட்' ஆக்கிவிடுவார்கள் ^_^ :rolleyes:நீங்கள் தொடர்வது சந்தோசம்...

உங்கள் நண்பனின் அன்றைய நினைவுகளும், இடையிடையே இன்றைய பாடல்களின் தெரிவுகளும் நன்றாக உள்ளது, உங்கள் ஆக்கங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! :)

என்னுடைய சுய ஆக்கங்களை படித்து மனதார உற்சாகம் அளிக்கும் கள உறவுகளில் ஒருவராக தாங்களும் எப்போதும் இருந்து வருகிறீர்கள். நன்றி. :)

பிறதர் இந்தப்பாடல் நான் நேற்றே உங்களுக்கு இணைக்கலாம் என்று வந்தேன்... ஒருதங்கள் சொன்னார்கள் உங்களட்ட நான் வாங்கிகட்டப்போகிறேன் என்று... சரி ரொம்ப நக்கல் அடிக்கிறோம் என்று விட்டுவிட்டேன்... அண்ணனுக்கு மரியாதை கொடுப்போமே என்று... பொருத்தமான பாடல்தான் இணைத்திருக்கிறீர்கள்... தொடருங்கோ... :icon_mrgreen:

அது.. அந்தப் பயம்..சா.. மரியாதை.. மனசில ஒரு ஓரமா உட்காந்திருக்கனும்..! தேவை இல்லாம வாயக் கொடுத்து.. நம்மட்ட வாங்கிக் கட்டக் கூடாது. நல்ல பொண்ணுக்கு அழகு அது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

அது.. அந்தப் பயம்..சா.. மரியாதை.. மனசில ஒரு ஓரமா உட்காந்திருக்கனும்..! தேவை இல்லாம வாயக் கொடுத்து.. நம்மட்ட வாங்கிக் கட்டக் கூடாது. நல்ல பொண்ணுக்கு அழகு அது. :):icon_idea:

பிறதர் பயம் என்று தப்பு கணக்கு போடக்கூடாது... என்னைவிட 10வயதாவது கூட இருக்கும் உங்களுக்கும்... அதனாலதான் மரியாதை கொடுக்கிறோம் ... பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்துதான் பழக்கம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறதர் பயம் என்று தப்பு கணக்கு போடக்கூடாது... என்னை விட 10வயதாவது கூட இருக்கும் உங்களுக்கும்... அதனாலதான் மரியாதை கொடுக்கிறோம் ... பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்துதான் பழக்கம்...

இப்படி மொட்டையா கணக்குச் சொன்னா எப்படி..??! இப்படித் தான் ஊர் உலகத்தில கனபேர் சொல்லிக்கிட்டு திரியுறாங்க. குழந்தைப் பிள்ளைங்கன்னு. அதிலும் சொல்லாமல் இருப்பதே மேல்.

மரியாதை என்பது.. வயசுக்கோ.. பாலுக்கோ.. ஆளுக்கோ அல்ல. சொல்லுற மாற்றருக்குத் தான் இருக்கனும்..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்.. அடுத்த நாள்.. நல்ல ஒரு பொன் மாலைப் பொழுதில்.. வீட்டுப் பூந்தோட்டத்தில்.. கடதாசிப் பூமரத்தில் பூக்களிடையே இருந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.. குருவிகளை ரசித்துக் கொண்டு.. வானலையில் போய்க்கொண்டிருந்த...

http://www.youtube.com/watch?v=hymujdC0mlw

பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கின்ற போது...

கேற்றில் உள்ள கொழுவியைப் போட்டு..தட்டும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தேன்.. குண்டன்.. வெள்ளை வேட்டியும் சேட்டுமாக நின்று கொண்டிருந்தான். அவனை அணுகி.. என்ன விசயம்.. நண்பா என்றேன்..

எங்கட அன்னசத்திர லேன்.. பிள்ளையார் கோவில்.. திருவிழா இன்றைக்கு தொடங்குது எல்லோ.. தெரியாதோ என்றான்... பதிலுக்கு.

அப்படியா சங்கதி.. அது தான் தாங்களே பிள்ளையார் உருவத்தில் இருந்து கொண்டு.. பிள்ளையார் திருத்தொண்டை ஆரம்பித்து விட்டீர்களோ.. என்றேன்.. நக்கலாக...

பதிலுக்கு அவன்.. சிரிப்பொலியை பரிசாக்கி.. வாறியா கோயிலுக்கு என்றான்.

ஓம்.. என்று சொல்லி... வீட்டுக்குள் சென்று என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு.. கோயிலுக்கு போட்டு வாறன் என்று அம்மாவுக்காக ஒரு சவுண்டு கொடுத்துக் கொண்டே.. அவனைப் பின் தொடர்ந்தேன்.

உள்ளூரில அயலவர்கள் கூடிக் கட்டி எழுப்பிய சிறிய பிள்ளையார் கோவில் அது. யாழ் நகரில் அன்னசத்திர லேனை தெரிந்தவர்களுக்கு.. ரயில் பாதையை அண்டி... குஞ்சண்ண கடைக்கு அருகில்.. அந்த வேப்பமரத்தடியில் இருக்கும்.. குட்டிப் பிள்ளையார் கோயில் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அங்க தான்.. எங்கள் உள்ளூர் தேவதைகள் பட்டு வண்ண காவ் சாறி கட்டி ஊர்வலம் போறது. அப்படி போறவங்கள.. சைட் அடிக்க.. யாழ்ப்பாண கம்பஸில படிக்க என்று வந்து.. அங்கின றூம் எடுத்து தங்கி இருக்கிற அண்ணாமார்... சைக்கிளும் கையுமா ஜொள்ளுவிட்டுக் கொண்டு.. அலையுறதை நாங்க பல தடவை கண்டிருக்கிறம். அதில ஒரு சிலர் திருவிழாக்களோட செற்றிலாகிறதும்.. நடக்கிற சங்கதி தான்.

அப்படியா செற்றிலாக முயற்சித்தவர்களில் ஒருவர் தான் நம்மட.. சிங்கராயர். அவர் அதில பெயிலாகிட்டதாகவும் ஒரு கேள்வி. அவர் வேறு யாருமல்ல.. கந்தர்மடம்.. யூனிவேர்சல் ரியுசன் சென்ரர்..பொ. ஐங்கரநேசன் சேரின் தோஸ்து. இப்ப ஐங்கரநேசன் சேர் பெரிய அரசியல் புள்ளி. தற்செயலா இதை வாசிச்சார் என்றால்.. மீண்டும் பிரம்பும் கையுமா என்னை தேடிக் கொண்டு வரப்போறார். சேர் சேர்.. அதற்கு முதலே ஐ ஆம் சரண்டர். :lol:

சிங்கராயரட்ட.. அவர் வீட்டில.. நம்ம குண்டன் கணிதம் படிக்கப் போறவன். அதனால அவரோட நமக்கும் நெருக்கம். அவர் நமக்கு வாத்தியாருக்கும் மேல. தன் சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சொல்லுவார். பச்சிளர்ஸ் என்றால் அப்படித் தானே இருப்பினம். நாங்களும் கதை கேட்டு.. அதை அப்படியே வந்து வீட்டில ஒப்புவிக்கிறது தான்.

அப்படியாப்பட்ட சிங்கராயர கோவிலுக்கு போற வழியில பார்த்தம். பார்த்ததும்.. குண்டன்... சேர் என்று கத்த.. அவரும் சைக்கிளை வெட்டிக் கொண்டு வந்து எங்களுக்கு அருகில் நிறுத்தினார். என்டாப்பா.. வகுப்புக்கு வராம.. இங்க என்ன செய்யுறீங்க என்றார். ஆமால்ல சேர்.. நாங்க வகுப்புக்கு வராட்டி.. உங்களுக்கு உண்டி சுருங்கிடும் எல்ல... கவலையா தான் இருக்கும் சேர்.. என்று நக்கலடிக்க.. பிடிடா அவனை என்று.. சொல்லி.. என்னை சிறிது தூரம் விட்டுத் துரத்தினார். அப்புறம்.. வா வா.. நான் ஒன்றும் செய்யமாட்டன்.. என்று சொல்ல.. தயங்கித் தயங்கி.. சாறி சேர்.. சும்மா பகிடிக்கு என்ற.. அதை விடுங்கடா.. எப்ப வகுப்புக்கு வரப் போறீங்க என்றார். நாளைக்கு சனிக்கிழமை சேர். காலைல வாறமே சேர் என்றம் இருவரும் ஒருமிக்க..!

நாங்க இப்படியா பேசிக்கொண்டிருக்கும் போது.. அன்னசத்திர லேன் அழகு அக்கா (அவா தான் நல்ல வெள்ளையா.. அழகா இருப்பா.. அந்த ஏரியாவுக்க).. வண்ணச் சேலை கட்டி.. குஞ்சண்ண கடை நோக்கி.. நடந்து வந்து கொண்டிருந்தா. அவா மேல.. சிங்கராயரரின் பார்வை விழ.. குண்டன் கடைக்கண்ணால்.. எனக்கு சைகை காட்டினான். உடனே நான்.. சேர் நடக்கட்டும் நடக்கட்டும் என்ற.. அவர் இதுக்கு மேல இங்க நின்றால்.. தப்பு என்று நினைச்சாரோ.. என்னவோ.. சரிடா.. நான் வாறன் என்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். நாங்களும்.. பிள்ளையார் திருவடிகளை நோக்கி நடக்க ஆரம்பிச்சம்..!

(எங்க லூட்டி.. இன்னும் வளரும்...) :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.