Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையும் கதையும்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்.

நிச்சயமா.. தொடருவம். நன்றி தப்பிலி. :)

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply

படிப்பிற்கு மத்தியிலும் உங்கள் நண்பனை இடையில் கைவிடாது நகர்த்திச் செல்வது சந்தோசம். இந்தப் பகுதி இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ், நன்றாக உள்ளது!

எது எதுக்கோ வெயிட் பண்ணுறம்... உங்களுக்கும் உங்க நண்பனுக்கும் இடையே உள்ள நட்பை அறிய வெயிட் பண்ண மாட்டமா என்ன? ^_^ அதில ஒன்றும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை, படிப்பு நேரம் போக மீதி நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணாவுக்கு 24 மணித்தியாலம் போதவில்லையாம் படிப்பு,பார்ம்விலி விளையாடுவதற்கு மிச்ச நேரம் தான் இங்காலை தலை காட்டுவது..அப்படி இல்லையா நெ.கா.அ......:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிப்பிற்கு மத்தியிலும் உங்கள் நண்பனை இடையில் கைவிடாது நகர்த்திச் செல்வது சந்தோசம். இந்தப் பகுதி இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ், நன்றாக உள்ளது!

எது எதுக்கோ வெயிட் பண்ணுறம்... உங்களுக்கும் உங்க நண்பனுக்கும் இடையே உள்ள நட்பை அறிய வெயிட் பண்ண மாட்டமா என்ன? ^_^ அதில ஒன்றும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை, படிப்பு நேரம் போக மீதி நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள் :)

நண்பனுக்காக மட்டுமல்ல.. உங்களைப் போன்ற.. யாழ் களம் தந்த உறவுகளுக்காகவும் எழுதியே ஆக வேண்டி உள்ளது. :)

நெடுக் அண்ணாவுக்கு 24 மணித்தியாலம் போதவில்லையாம் படிப்பு,பார்ம்விலி விளையாடுவதற்கு மிச்ச நேரம் தான் இங்காலை தலை காட்டுவது..அப்படி இல்லையா நெ.கா.அ...... :)

வேலை.. சமையல்.. சாப்பாடு.. நித்திரை... இதுகளை எல்லாம் விட்டிட்டீங்க...! :lol: மூளைக்கு வேலை கூடினா.. கதை எழுத முடியாது.. ஆனால் கேம் விளையாடலாம்..! கதை... கவிதை எழுத ஒரு மூட் வரனும். இல்ல அது போறடிக்கும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இந்தச் செய்தியையும் படிங்க.. எங்க சங்கத்தின் தேவை நாட்டுக்கு எவ்வளவு அவசியம் என்றது புரியும்.

உங்கள் சேவை எங்கள் இளம் சமுதாயத்திற்கு கட்டாயம் தேவை,

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, நேற்றுதான் பார்த்தன் நீங்க MBA செய்வதாக, வாழ்த்துகள்.

படிக்கனும், அதுதான் நம் முதலீடு

நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எல்லோருக்கும் வரணும், அதை எங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டனும், ஊரில் மட்டம் தட்டியே ஆச்சி முதல் ஆசான் வரை எமக்கு பல தாழ்வு மனப்பான்மைகள் இருக்கு,

இதை உடைத்தொறிந்தால் எமது சமூகம் நன்றாக முன்னோறும் எல்லா துறைகளிலும், என் பிள்ளைகளை ஊக்கப்படுத்திதான் வளர்க்கின்றேன், என்றாலும் இரத்தில் ஊறிய சில குணங்கள் எட்டிப்பார்க்குது அது பெற்றோருக்கே உள்ள பாதுகாக்கும் குணம்.

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு ஜொலிஸ்ரார் (யாழ் இந்து பழைய மாணவர் கிரிக்கெட் கிளப்) ஜொனியன்ஸ் (யாழ் சென் ஜோன்ஸ் பழைய மாணவர் கிரிக்கெட் கிளப்) மச் யாழ் இந்து மைதானத்தில நடந்தது. அதில ஜொலிஸ்ரார்.. கடைசி ஓவரில சிக்ஸர் அடிச்சு வென்ற மகிழ்ச்சியோட நான் என் சைக்கிளில வீடு நோக்கி வந்து கொண்டிருந்தன்... அப்ப..

வாற வழியில.. அந்த பெலத்தா ஊர் கேட்க பாட்டுப் போடுற அண்ணாமார் வீட்ட நெருங்கிறன்.. பஜிரோ ஒன்று வந்து அவை வீட்டு வாசலில நிற்கிறதைக் கண்டன். ஆகா.. குண்டன் போட்டுக் கொடுத்திட்டான் போல.. அண்ணாமார் வந்து வோர்ன் பண்ணினம் போல என்று நினைச்சுக் கொண்டு.. பஜிரோவுக்கு அருகில வாறன்..

http://www.youtube.com/watch?v=K_LuuIhKKIM

இந்தப் பாடல் ஒலிச்சுக் கொண்டிருந்திச்சு.

உடன சைக்கிளை குண்டன் வீட்ட நோக்கி விட்டன். அவனைப் பிடிச்சுக் கேட்டால் எல்லாம் தெரியும் தானே எண்டு. நான் குண்டன் வீட்ட நோக்கி போற வழியில.. குஞ்சண்ண கடைக்கு அருகில வாறன்.. குண்டன் எதிர்க்க வந்து கொண்டிருந்தான். உடன..சைக்கிள பிரேக் போட்டு அவன் அருகில் நிறுத்த.. அவன் கேட்டான்..

என்ன பதட்டமா இருக்கிறா.. என்ன விசயம் என்று. இல்ல.. நீ அண்ணாமாரட்ட சொன்னனியே.. அந்த பெலத்தாப் பாட்டுப் போடுற வீட்டு அண்ணாமார் விசயம். அவை வீட்டுக்கு முன்னால பஜிரோ ஒன்று வந்து நிற்குது எண்டன்.

இல்லையே நான்.. அண்ணாமார் காம்ப் பக்கம் போகல்லையே.. என்றான் அவன்.

அப்ப யார் சொல்லி இருப்பினம்.. என்று நினைச்சுக் கொண்டு.. அந்த பொம்பிளப் பிள்ளைகளின் அம்மா சொல்லி இருப்பாவோ.. எது எப்படியோ அவைட கொட்டம் அடங்கினால் சரி என்றன் நான் பதிலுக்கு.

அவனும்.. ம்..ம்.. என்று இழுத்துக் கொண்டான்.

அப்ப சரி.. இப்ப நீ அவசரமா கடைக்குப் போறா போல.. பிறகு சந்திப்பம் என்று நான் குண்டனிடமிருந்து விடைபெற்று வீட்ட வாறன்.. அந்த பஜிரோ எங்கட வீட்டு கேற்றடியிலையும் நின்று.... அப்பாவோட ஏதோ கதைச்சிட்டு போறதைக் கண்டன். உடனே.. அவசர அவசரமாக வீட்ட போன நான்.. செய்தி அறியுற அவசரசத்தில.. சைக்கிள வீட்டு முற்றத்தில போட்டிட்டு.. ஓடிப் போய் அப்பாட்ட கேட்டன்.. என்ன விசயம் பஜிரோ வந்திட்டு போகுது எண்டன்.

அது இவன்.. எங்கட பக்கத்து வீட்டு.. சங்கர். இப்ப இயக்கத்தில தானே இருக்கிறான். என்னை கேற்றடியில கண்டாப் போல.. நின்று கதைச்சான். கிளாலிக் கடலில.. நேற்றிரவு.. நேவிக்காரங்கள்.. சனம் போன படகுகளை மறிச்சு சனத்தை சுட்டும் வெட்டியும் கொண்டவங்களாம். அப்புறம் கடற்புலிகள் வந்து நேவியை அடிச்சுக் கலைச்சதா சொன்னான். நேவிக்காரன் வெட்டியும் சுட்டும் கொன்றதில.. யாரோ சாவகச்சேரியை சேர்ந்த ஆக்களும் இறந்திட்டினமாம். அவைட பிள்ளைகள் இங்கு தங்கி இருந்து படிக்கிறதாயும்.. அவைக்கு தகவல் சொல்ல வந்ததாகவும் சொன்னான்... என்றார் அப்பா.

அட பாவமே.. இதுக்காகவா பஜிரோ வந்து நின்றது..... நான் தப்பா நினைச்சிட்டேனே.. என்ற குற்ற உணர்வு எழ.. அமைதியான நான்.. சிங்கள நேவியின் அடவாடித்தன தமிழ் இனப்படுகொலை பற்றிய எண்ண ஓட்டத்தில் மூழ்க ஆரம்பித்தேன்.

உந்த சிங்கள.. நேவிக்காரங்கட தொல்லைக்கு முடிவே இல்லையா.. ஆனையிறவையும் பூட்டி வைச்சிருக்கிறாங்கள்.. கிளாலிக்காலும் போக விடுறாங்கள் இல்ல.. ஊரியாணையும் வெற்றிலைக்கேணி ஆக்கிரமிப்போட அடைச்சுப் போட்டாங்கள்... அப்ப என்ன தான் செய்யச் சொல்லுறான் சிங்களவன்.. என்று மனதுக்குள்.. எழுந்த விசனத்தை வெளியில் சொல்ல யாரும் இன்றி..மெளனமாக்கி அடக்கிக் கொண்டேன். தேசத்தின் அந்த நிலை இதயத்தை கனமாக்கி.. கண்களில் நீரை கசிய வைத்தது.

அப்போது எழுந்திருந்த.. அந்த அமைதியைக் குலைத்து.. யாரோ கேற்றில் தட்டும் சத்தம் கேட்டது.....

(சிறீலங்கா சிங்களக் கடற்படை மேற்கொண்ட கிளாலி பொதுமக்கள் படுகொலை நினைவுகளில் இருந்து.. மீண்டு.. வந்து மிகுதிக் கதை தரும் வரை பொறுமை காக்க கேட்டுக் கொள்கிறேன்..)

Edited by nedukkalapoovan

...

உந்த சிங்கள.. நேவிக்காரங்கட தொல்லைக்கு முடிவே இல்லையா.. ஆனையிறவையும் பூட்டி வைச்சிருக்கிறாங்கள்.. கிளாலிக்காலும் போக விடுறாங்கள் இல்ல.. ஊரியாணையும் வெற்றிலைக்கேணி ஆக்கிரமிப்போட அடைச்சுப் போட்டாங்கள்... அப்ப என்ன தான் செய்யச் சொல்லுறான் சிங்களவன்.. என்று மனதுக்குள்.. எழுந்த விசனத்தை வெளியில் சொல்ல யாரும் இன்றி..மெளனமாக்கி அடக்கிக் கொண்டேன். தேசத்தின் அந்த நிலை இதயத்தை கனமாக்கி.. கண்களில் நீரை கசிய வைத்தது.

அப்போது எழுந்திருந்த.. அந்த அமைதியைக் குலைத்து.. யாரோ கேற்றில் தட்டும் சத்தம் கேட்டது.....

(சிறீலங்கா சிங்களக் கடற்படை மேற்கொண்ட கிளாலி பொதுமக்கள் படுகொலை நினைவுகளில் இருந்து.. மீண்டு.. வந்து மிகுதிக் கதை தரும் வரை பொறுமை காக்க கேட்டுக் கொள்கிறேன்..)

இந்த நாளில் எனது தந்தையாரும் பிரயாணம் பண்ண இருந்ததாகவும், ஆனால் அன்று ஏதோ ஒரு தடங்கல் வந்து தான் வீடு திரும்பியதாகவும் ஒரு தடவை கூறி இருந்தார்...

உங்கள் நேரத்திற்கும், பதிவிற்கு நன்றி நெடுக்ஸ்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளில் எனது தந்தையாரும் பிரயாணம் பண்ண இருந்ததாகவும், ஆனால் அன்று ஏதோ ஒரு தடங்கல் வந்து தான் வீடு திரும்பியதாகவும் ஒரு தடவை கூறி இருந்தார்...

உங்கள் நேரத்திற்கும், பதிவிற்கு நன்றி நெடுக்ஸ்!

நான் நினைக்கிறேன் டிக்கிறி பண்டா (பிரேமதாச கவுண்டு போக.. வந்த டி பி விஜேதுங்க) தமிழ் மக்களுக்கு செய்த நற்காரியம் இதுதான். கிளாலியால போற வாற சனத்தை பிடிச்சு கொல்லுறது. பல தடவைகள் அப்படிச் செய்திருக்கிறார்கள். அப்புறம் கடற் கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றை அடுத்து நேவி அதுக்க தலைவைச்சும் படுக்கிறதில்ல...!

ஆகாய கடல் வெளி சமரோடு.. வந்த வெற்றிலைக்கேணி தரையிறக்கம் போல.. வெற்றி வரும் என்று நினைச்சு நடத்தின.. யாழ் தேவி இராணுவ நடவடிக்கை படுதோல்வி கண்டபின் சிங்களம் பெரிதும்.. பயந்து கொண்ட இடம் கிளாலி..! அது 2009 வரை நீடித்தது.

அப்புறம் கடற்புலிகள் பாதுகாப்பு வழங்க மக்கள் அச்சமின்றி பயணம் செய்தனர். நானும் கூட கிளாலிப் பயணம் மேற்கொண்டே வன்னிக்கு வந்திருந்தன்..! அப்போது கடற்புலிகளே முழுப் பாதுகாப்பு வழங்கி இருந்தனர். அந்தப் புலி வீரர்களுக்கு எம் சகோதர்களுக்கு.. எம் உயிர்களைக் காத்து தம் உயிர் தந்ததற்காக வாழ் நாள் பூராவும் கடமைப்பட்டுள்ள ஒரு உணர்வு.. இப்போ.. அதுவே குற்ற உணர்வாகவும்..!

Edited by nedukkalapoovan

...

அப்புறம் கடற்புலிகள் பாதுகாப்பு வழங்க மக்கள் அச்சமின்றி பயணம் செய்தனர். நானும் கூட கிளாலிப் பயணம் மேற்கொண்டே வன்னிக்கு வந்திருந்தன்..! அப்போது கடற்புலிகளே முழுப் பாதுகாப்பு வழங்கி இருந்தனர். அந்தப் புலி வீரர்களுக்கு எம் சகோதர்களுக்கு.. எம் உயிர்களைக் காத்து தம் உயிர் தந்ததற்காக வாழ் நாள் பூராவும் கடமைப்பட்டுள்ள ஒரு உணர்வு.. இப்போ.. அதுவே குற்ற உணர்வாகவும்..!

உண்மை தான் நெடுக்ஸ், ஒரு வருடத்தில் பல தடவைகள் கிளாலியை கடக்க வேண்டிய சூழ் நிலையில் தான் தந்தையார் இருந்தார், ஒவ்வொரு முறையும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவார். பல தடவைகள் 'என்ர பிள்ளைகள் இருப்பாங்கள் பயமில்லை' என்று சொல்லித் துணித்து போய் வந்துள்ளார்...

எனது தந்தையைப் போல் பலர் வாழ எத்தனையோ இளையவர்கள் தம் இன்னுயிரை ஈர்ந்த்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்க பழைய நினைவுகள கிளறி விடுகின்றீர்கள், தொடக்கத்தில் காதல் கதை, அட நெடுக்கு எழுதப்போறார் கொஞ்சம் கன பேர் கத்த கூத்து பார்க்கலாம் என்ட, நீங்க மனதில் பழைய நிகழ்ச்சிகளை எங்களை திரும்பி பார்க்க வைக்கிறீர்கள், எங்கள் பக்கது ஊரில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை அவர்களின் மூத்த அண்ணாதான் கொழும்பில் வேலை செய்து காப்பாற்றினவர், பிறகு புது லோறி எடுத்து நல்ல சந்தோஷமாக இருந்தவர்கள், அக்கா, இரண்டு அண்ணா, தம்பி & தங்கை எல்லோரும் என்னுடன் அன்பா பழுகுவார்கள், ஆண்டவனுக்கு பொறுக்கவில்லை அவர்களின் சந்தோஷம், கிளாலி கடலில் உழைத்த பணத்துடன் அண்ணா வரும் போது அவரின் உடலை கூட எடுக்கமுடியவில்லை,

நானும் கிளாலி கடந்துதான் கொழும்பிற்கு படிக்க வந்தனான், இரவுதான் அப்ப கடலை கடக்கிறவர்கள் மறுபக்கத்தில் இருக்கும் கலங்கரை விளக்கை வைத்து (1 மணித்தியலத்தைவிட குறைவு), கன நண்பர்கள் அன்று கொழும்புக்கு போனங்கள் (கிட்டத்தட்ட 75 பேர்), அன்று இரவு நாங்க போன் படகு திசை மாறி விட்டது, படகு ஓட்டி சொன்னான் ஆணையிறவு காம் பக்கம் வந்துவிட்டோம் என்று, இருந்த சனம் கூப்பிடாத கடவுள் இல்லை, மெல்ல மெல்லதான் அங்கிருந்து திரும்பி நடுச் சாமம் மறு கரையை அடைந்தோம், என்ன வாழ்கை.........தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

முதல் பக்கத்தைப் படிச்ச பிறகு இப்பத்தான் கனநாள் கழிச்சு இந்தத் தொடரை வாசிச்சு முடிச்சன்..! ஒவ்வொருமுறையும் இசையும் கதையும் என்கிற தலைப்பைப் பார்க்கிறபோது ஏதோ பாட்டோட கலந்த மொக்கைத் திரியாக்கும் எண்டு நினைப்பன்..! :(

உங்கள் உணர்வலைகள் எங்கள் மனதிலும் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டிருக்கிறது..! :(

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "பாட்டோட கலந்த மொக்கைத் திரியாக்கும் " இசைக்கு ஆப்பு, இளையராஜாவின் ரசிகனா இப்படி சொல்வது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் படிச்சு கருத்தும் ஊக்குவிப்பும் நல்கும் உறவுகளுக்கு மிக்க நன்றி.

எனக்கு தாயகத்தில் இருந்த பொழுதை விட.. கொழும்புக்கும் அப்புறம்.. மேற்கு நாட்டுக்கும் வந்த பின்னர் தாயகம் மீதான பற்றுதல்.. அதிகரித்திருக்கிறதே அன்றி குறையக் காணவில்லை. இப்ப எல்லாம் தினமும் தாயகம் பற்றிய சிறு வயது நிகழ்வுகள் பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து போகுது.

தாயகத்தை நிறைய மிஸ் பண்ணிறதா இருக்குது..! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் படிச்சு கருத்தும் ஊக்குவிப்பும் நல்கும் உறவுகளுக்கு மிக்க நன்றி.

எனக்கு தாயகத்தில் இருந்த பொழுதை விட.. கொழும்புக்கும் அப்புறம்.. மேற்கு நாட்டுக்கும் வந்த பின்னர் தாயகம் மீதான பற்றுதல்.. அதிகரித்திருக்கிறதே அன்றி குறையக் காணவில்லை. இப்ப எல்லாம் தினமும் தாயகம் பற்றிய சிறு வயது நிகழ்வுகள் பற்திய நினைவுகள் அடிக்கடி வந்து போகுது.

தாயகத்தை நிறைய மிஸ் பண்ணிறதா இருக்குது..! :(:icon_idea:

மிகவும் உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "பாட்டோட கலந்த மொக்கைத் திரியாக்கும் " இசைக்கு ஆப்பு, இளையராஜாவின் ரசிகனா இப்படி சொல்வது

அப்படியல்ல உடையார்..! :rolleyes:

பல இசைத்திரிகள் இங்கே உள்ளன..! மளமளவென ஒரு விவரமும் எழுதாமல் பாட்டுக்களை மட்டும் இணைத்தால் ஒவ்வொன்றையும் சொடுக்கி என்ன பாட்டு என அறிய முடியாமல் போகின்றது.. அதுமட்டுமில்லாமல் புதிய பாடல்கள் என்றால் நான் கேட்பதே இல்லை..! அவை பிரபலமாகி என் காதில் ரீங்காரம் செய்தால் மட்டும் கேட்பேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்...

இன்றுதான் பார்த்தேன். முழுமையாக இன்னும் வாசிக்கவில்லை. ஆனாலும் அருமையாக வடிவமைத்துள்ளீர்கள்.

தொடருங்கள். நன்றி தங்களது நேரத்திற்கும் இந்த முயற்சிக்கும்.

குறிப்பு: இசையும் கதையும் என்று இனியபொழுதுக்குள் கிடைந்ததை முன்பே கவனித்தேன். ஆனால் நான் அதற்குள் போவது குறைவு. ஏதோ தம்பி பாட்டுக்கேட்குதாக்கும் என்று இருந்துவிட்டேன்.

Edited by விசுகு

உங்கள் ஆக்கம் அருமை நெடுக்கண்ணா....தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேற்றில யாரோ விடாமல் தட்டின சத்தம் கேட்டு.. மீண்டும் நினைவு கலைத்து நிஜ உலகிற்கு திரும்பிய நான் கேற்றடியை எட்டிப் பார்த்தன்..

என்ன ஆச்சரியம்.. கண்ணன் சாவகச்சேரியில இருந்து வந்திருந்தான்.

நானும் கண்ணனும் சின்ன வயது முதல் நண்பர்கள். கண்ணன் யாழ்ப்பாணத்தில கல்வி கற்ற போது எங்கள் வீட்டில் தங்கி இருந்து படிச்சதால வந்த சிநேகிதம்.

நீண்ட நாட்களின் பின் கண்ணனைக் கண்டதும் ஓடிச் சென்று.. வாடா கண்ணா.. இப்பதான் இஞ்சால வர வழி தெரிஞ்சிச்சுதோ என்று கேட்டன்...

இல்ல.. நான் ஒரு முக்கிய விசயமா இஞ்சால வந்ததால உங்களை எல்லாம் பார்த்திட்டு போவம் என்று வந்தனான்.. என்றான்.. அவன் பதிலுக்கு.

அதற்கு நான்.. இப்பவாவது எங்களை எல்லாம் பார்க்கனும் என்று நினைச்சியே.. என்று சொல்ல..

உங்களை எல்லாம் மறப்பனே.. என்று சமாளிச்சவன்.. அது சரி அம்மா அப்பா எல்லாரும் எங்க என்று கேட்க..

இஞ்ச பார் உன்னை கேற்றடியில நிறுத்தி வைச்சே கதை கேட்கிறன் என்றிட்டு.. அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன்.

அவனும்.. வீட்டுக்குள் வந்தவன்.. அம்மா அப்பாவை கண்டிட்டு.. நலம் விசாரித்தான்..... அதன் பிறகு சிறிய அமைதியின் பின்.. எங்கட தர்மராஜா மாஸ்டரை எல்லோ நேவிக்காரங்கள் வெட்டிப் போட்டாங்கள்.. கிளாலில வைச்சு... என்று ஒரு சோகக் கதையை சொல்லி முடித்தான்.

நாங்கள் சாவகச்சேரியில் வாழ்ந்தப்போ.. எங்களின் வீட்டுக்கு அருகில் தன் குடும்பத்தோடு வாழ்ந்தவர் தான் தர்மராஜா மாஸ்டர். மிகவும் பண்பானவர். நல்லவர். ஒரு அப்பாவியும் கூட. அவரையா வெட்டினவங்கள் என்று நான் ஆச்சரியத்தோட கேட்க..

ஓம்.. அவரைத் தான் என்று சொல்லி முடித்தான் கண்ணன்.

இப்படி எத்தினையோ நல்லவையை வெட்டி கடலுக்க போட்டிட்டாங்களோ.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று என் ஏக்கத்தை கேள்வியாக்கிக் கொட்டினேன்....

எல்லாத்திற்கும் தலைவர் ஒரு முடிவு கட்டாமலா விடுவார்.. என்று நம்பிக்கை தெறிக்க என் ஏக்கம் கலந்த கேள்விக்கு.. ஆற்றிக் கொள்ள பதில் சொன்னான் கண்ணன்.

தலைவரால மட்டும் எப்படி.. நாங்கள் எல்லாம் சேர்ந்து போராடாட்டி.. அவர் மட்டும் எப்படி உதுகளை எல்லாம் தடுக்க முடியும்.. சொல்லு பார்ப்பம். அவனவன்.. எப்படா பாஸ் கிடைக்கும்.. பாதை திறக்கும் என்று காத்துக் கிடாக்கிறாங்கள்.. கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும் ஓட.. இதில தலைவர் எப்படி.. இதனை எல்லாம் சாத்தியமாக்கப் போறார்..??! என்று மீண்டும் என் ஆதங்கத்தை கொட்டினேன்..!

என்ன இப்படி நம்பிக்கை இழந்த கணக்கா கதைக்கிறீங்கள்.. இந்தியன் ஆமியோட அடிபடேக்கையும் இப்படித் தானே சொன்னவை. எல்லாரும் வெளிக்கிட்டு ஓடினவை. எல்லாம் முடிஞ்சுது.. புலிகளின் கதையே சரி என்று. அப்புறம் என்ன நடந்தது என்று தெரியும் தானே.. இந்தியாவால சாகடிக்கப்பட்ட தலைவர்.. சாவகச்சேரி மாவீரர் தினக் கூட்டத்திற்கு வந்த போதுதான் அவரின் உண்மையான ஆற்றலையே உலகம் பார்த்திச்சுது..! உதையெல்லாம் தெரிஞ்சு கொண்டும்.. நீங்கள் இப்படி கதைக்கிறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்குது என்று தலைவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தவனாய் பேசி முடித்தான் கண்ணன்.

எனக்கும் தலைவரில.. நம்பிக்கை இருக்குது. ஆனால் எங்கட சனத்தின்ர ஒத்துழைப்பு எந்தளவு அவருக்கு கிடைக்கும்.. என்று சொல்லி முடிக்கல்ல... கண்ணன் சில சொக்கிலேட்டுகளை எடுத்து கையில தந்தான்...

என்ன விசயம்.. சொக்கிலேட் தாறா எண்ட.. இன்னும் சில நாளில தலைவரின்ர பிறந்த நாள் எல்லோ.. அதுதான் இன்றைக்கே நினைவு கூறுறன் என்றான்.. கண்ணன்..!

அப்போது என் நினைவுகளில்.. நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள்.. காதில் ஒலித்தது.. பிரபாகரன் சாதாரண மனிதன் அல்ல.. அவன் ஒரு அவதாரம்...! சின்னன் பெரிசு என்று இல்லாமல் எல்லோர் மனங்களிலும் அவன் வாழ்கிறான்..! அதுவே அவனுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அது எந்தளவு உண்மை என்றதை அன்று கண்ணனின் செயலில் கண்ட நான்... இப்பவும் அதை இந்தப் பாடலில் கேட்கிறேன்..!.

(மீண்டும் மிச்சக் கதையோடு மீண்டு வரும் வரை....)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "அப்போது என் நினைவுகளில்.. நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள்.. காதில் ஒலித்தது.. பிரபாகரன் சாதாரண மனிதன் அல்ல.. அவன் ஒரு அவதாரம்...! சின்னன் பெரிசு என்று இல்லாமல் எல்லோர் மனங்களிலும் அவன் வாழ்கிறான்..! "

தலைவரின் எங்கள் மனதில் அல்ல உலகில் அனைத்து மக்களின் உள்ளத்திலும் இருக்கிறார், என்னுடன் வேலை செய்த ஓமானி அவரை பற்றி புகழாத நாள் இல்லை

நெடுக்கு, நீண்ட இடைவெளிக்குப்பின் அடுத்த பதிவை இட்டுள்ளீர்கள், நன்றி பகிர்வுக்கு, நீங்க மனதில் நிற்க கூடிய மாதிரி தொடரை நகர்த்துவதால் தொடர்ந்து வாசிக்க கூடியதாக இருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

துரியோதனனின் சூழ்ச்சியால் பாண்டவர்கள் ஈரேழு ஆண்டுகள்

வனவாசம் செய்து தங்கள் நாட்டை மீட்டார்கள்.

தக்கன பிழைக்கும்.

எங்களுக்கும் ஒரு காலம் வரும்.

அதுவரை...

எழுத்துக்களால் உணர்வுகளைத் தக்க வைக்கும் உங்களுக்கு

நன்றிகள் கோடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துப் பகிர்விற்கும்.. இடையிடையே விழும்.. நீண்ட இடைவெளிகள் மத்தியிலும் இத்தொடரை கிரமமாக வாசிக்கும் ஒரு சிலரில்.. உடையார்.. வாத்தியார்.. குட்டி போன்றவர்களுக்கு மிக்க நன்றி. :)

பதிவிற்கு நன்றி, தொடருங்கள் நெடுக்ஸ்...

Edited by குட்டி

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கு எங்களோட சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த கண்ணன்.. ஏதோ நினைவுக்கு வந்தவனாய் கடிகாரத்தை பார்த்திட்டு..... உங்க ஹிண்டு கொலிஜ்ஜுக்கு அருகில ஒரு ஆக்களட்ட.. மண்ணெண்ணைக்கு மாற்றின மொரிஸ் மைனர் நிற்குதாம்.. அதனிர கெண்டிசன் பார்க்கப் போக வேணும்.. எங்கட மாமா வாங்கப் போறன் எண்டவர்... அதுதான் நான் ஒருக்கா.. போய் பார்த்திட்டு வரப்போறன் என்றவன்.. விடைபெறும் தருணத்தை எதிர்பார்த்து.. அவனை சூழ நின்றிருந்த.. எங்கள் எல்லோரினதும்.. கண்களைப் பார்த்தான்.

என்ன கண்ணா.. கன நாளைக்குப் பிறகு வந்திருக்கிரா.. சாப்பிட்டுப் போவன். ஹிண்டு கொலிஜ் என்ன தூரமே உதுல தானே இருக்குது.. என்று அம்மா அவனுக்குப் பதில் தர....

இல்லையம்மா.. நான் இப்ப போய் பார்த்தன் என்றால்.. கெண்டிசன் நல்லதா இருந்தா.. திரும்பி சாவச்சேரிக்குப் போய் மாமாவை கூட்டிக் கொண்டு வந்து பேசி முடிச்சிடலாம். அவர் கிளாலிக்கு போற சனங்களை ஏத்திக் கொண்டு.. "ரிப்" ஓட கார் வேணும் என்று நிற்கிறார். இப்ப பெற்றோல் டீசலுக்கு சிறீலங்கா அரசாங்கம் தடை போட்டிருக்கிற படியால்.... மண்ணெண்ணைக்கு மாற்றின கார் தான் பார்த்துக் கொண்டு திரியுறார். நான் இப்ப போயிட்டு அப்புறம்.. கார் எடுத்திட்டம் எண்டால் யாழ்ப்பாணம் அடிக்கடி வருவன் தானே மாமாவோட.. அப்ப இங்கால வாறனே..!

சரி.. ஏதோ அவசரப்படுறா... அப்ப போயிட்டு ஆறுதலா இருக்கேக்க அடிக்கடி வந்திட்டுப் போடாப்பா. எங்களை மறந்திடாத... என்று அவனுடைய அவசரத்தைப் புரிந்து கொண்டவராய்.. அவனுக்கு விடை தந்தார் அப்பா.

நீங்கள் என்னை அனுப்ப சங்கடப்படுறீங்கள் அப்பா. நான் இப்ப போயிட்டு காரைப் பார்த்திட்டு.. நேரம் கிடைச்சா திரும்பி வருவன். கிடைக்கல்ல என்றாலும் அடுத்த கிழமை கட்டாயம் இங்கால வருவன்.. அப்ப கட்டாயம் வாறனே. கவலைப்படாதேங்கோ.. என்றவன் என் கண்களை நோக்கி.. நீங்கள் ஹிண்டு கொலிஜ் மட்டும் என்னோட வாறீங்களே என்றான்.

அவன் கூப்பிடிறான்.. உந்த சைக்கிள எடுத்துக் கொண்டு அவனோட கூடப் போயிட்டுத்தான் வாவன் என்று அம்மா என்னைப் பார்த்து அனுமதி தர..

சரி அம்மா.. என்று விட்டு கண்ணனோடு புறப்பட்டு கல்லூரி வீதிவழியாக.. கஸ்தூரியார் வீதி போய்.. ஹிண்டு கொலிஜ் பக்கம் போனம்.

அப்ப தான் குண்டனை அந்தக் கோலத்தில கண்டன். சிவலிங்கப் புளியடியில.. யாழ் இந்துக்கு கொஞ்சம் தள்ளி.. வீதியோரம் நிற்கும் அந்தப் பெரிய மரத்துக்கு கீழ.. மதில் ஓரமா..குண்டன் ஒரு கேர்ளோட கதைக் கொண்டு நின்றான். நடக்கட்டும் நடக்கட்டும் என்று உள்ளூர நினைச்சுக் கொண்டு.. மவனே வீட்ட வருவாய் தானே.. அப்ப கேட்கிறண்டா கேள்வி.. என்று மனதோடு சொல்லிக் கொண்டு.. அவன் என்னைக் காணாதிருக்க.. சைக்கிளை வேகமாக மிதிச்சு.. விரைவாக அவனை தாண்டிச் சென்று கொண்டிருந்தேன்.

அந்த நிலையில்.. என் எண்ணங்களில் குண்டனின் தோற்றமும்.. நிலையும்.. அந்த கால வேளையில் பிரபல்யமாக இருந்த..இந்தப் பாடலோடு.. மனதில் தோன்ற.. எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு.. சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்தன். கண்ணன் முன்னால சைக்கிள் பாரில அமர்ந்திருந்தான்.. பார்க்கப் போற.. மொரிஸ் மைனரின் நினைப்போட..!

(மீண்டும்.. தூசி தட்டி.. வருகிறது இசையும் கதையின் தொடர்ச்சி. விரைவில் இன்னொரு கட்டத்தோடு.. சந்திக்கும் வரை.. இத்தொடரின்.. அபிமான வாசகர்களின் நீண்ட.. காத்திருப்புக்கு நன்றி.) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆபீஸில் வேலை செய்ய முடியாத அளவுக்கு தும்ம வைச்சிட்டீர். இடையில் விடாமல், தொடரவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.