Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக மாநிலம் தார்வார் தார்வார் மாவட்டம் நவல்குந்து அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(வயது 40). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதைதொடர்ந்து ருத்ரகவுடா என்பவருக்கும் நிர்மலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நிர்மலாவின் மகன் ஆனந்த்(22)க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ருத்ரகவுடாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளும்படி கூறினார். ஆனால் மகனின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாய் நிர்மலா தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் (02/09/2011) நிர்மலாவும், ருத்ரகவுடாவும் உல்லாசமாக இருந்ததை ஆனந்த் பார்த்து விட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் கிடந்த கோடாரியை எடுத்து வந்தார். அதற்குள் ருத்ரகவுடா தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நிர்மலாவுக்கும், ஆனந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கோடாரியால் மரக்கிளையை வெட்டுவது போல நிர்மலாவின் தலையை வெட்டினார்.

இதில் நிர்மலாவின் தலை தனியாக துண்டித்து உடல் வேறு, தலை வேறாக கிடந்தது. பின்னர் நிர்மலாவின் தலையை வீட்டில் இருந்த பாலித்தீன் பையில் வைத்து எடுத்து கொண்டு வீட்டில் இருந்து ஆனந்த் வெளியேறினார்.

தாயின் தலையுடன் வெறி பிடித்தவர் போல நடந்து சென்ற ஆனந்த், அங்குள்ள ஒரு இடத்தில் தலை இருந்த பையை வைத்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் ஊருக்குள் காட்டுத்தீபோல பரவத் தொடங்கியது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஆனந்தை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நிர்மலாவின் தலை வைக்கப்பட்ட பாலித்தீன் பையை போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக ஆனந்த் மீது அண்ணிகேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி : நக்கீரன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடம் தனியே.... கணவனை பிரிந்து இருந்த நிர்மலாவுக்கு, ஆசைகள்... ஏக்கங்கள் இருக்கத் தான் செய்யும்.

அதற்காக வளர்ந்த 22 வயது மகன் இருக்கும் நிலையில் கள்ளத்தொடர்பு வைக்காமல், ருத்ர கவுடாவை மறுமணம் செய்திருக்கலாம்.

சிலவேளை... நிர்மலா மறுமணத்துக்கு கேட்டு , கவுடா சம்மதிக்காமல் விட்டாதால் தான்... கள்ளத் தொடர்பில் ஈடுபட்டாரோ... தெரியவில்லை.

கவுடா ஓடித்தப்பிட்டார், நிர்மலா மண்டையை போட்டுட்டார்... அவசரப் பட்ட ஆனந்த் தான்... ஆயுள்தண்டனை அனுபவிக்கப் போறார்.prison.gif

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நன்றி இணைப்பிற்கு, அந்த தாய் பெத்த மகனின் ஏதிர்காலத்தையே பாழக்கிவிட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.. சரியான போட்டி..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாதவர்கள்..அல்லது முடியாதவர்கள் சடப்பொருளுக்கு சமன்.ஒரு மனிதனுக்கு இருக்கும் சர்வசாரண உணர்ச்சிகளில் இதுவுமொன்று.உனக்கு அழுகை வந்தால் அழு...அழுது தீர்த்து உணர்வுகளை அழித்து விடு.அடக்கி வையாதே..அதுதான் பெரும் விளைவுகளை தரும்.இந்த கொலை குடும்ப சூழ்நிலையை பொறுத்தது.ஆனால் அந்த பெண்மணி தன் உணர்ச்சிகளை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டதில் தப்பேயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசியும் ஒரு உணர்வு தான். நித்திரையும் ஒரு உணர்வு தான்..! அதற்காக பசிக்கிற நேரம் எல்லாம் சாப்பிட்டு.. நித்திரை வருற நேரமெல்லாம்.. உறங்கிக்கிட்டு இருந்தால்.. மனித வாழ்வு என்னாவது. அதுபோலவே தான்.. திருமணமாகி.. 22 வயது வரை ஒரு இளைஞனுக்கு அம்மாவான ஒரு பெண்ணோ.. ஆணோ.. தனது பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த முடியல்லைன்னா.. அதற்கு சமூக ஒழுக்கத்தை மீறிய கள்ளத் தொடர்பா தீர்வு...?????! அந்தப் பையனின் சம்மதத்தோடு.. இன்னொரு ஆணை மணந்து கொண்டு வாழ்ந்திருக்க வேண்டியது தானே. அந்தப் பையனால.. 22 வயதைக் கடந்து தாய்க்காக நேர்மையா மானத்தோட வாழ முடியுதுன்னா.. இந்த 40 வயசுப் பொம்பிளைக்கு வாழ என்ன வயிற்று வலியா..????!

ஒரு தாயின் அல்லது தந்தையின் தவறான நடத்தை என்பது பிள்ளைகளின் மனதை எந்தளவுக்கு பாதிக்க செய்கிறது என்பதை உணராமல்.. மிருகங்களை விட கீழான உணர்ச்சிகளுக்கு முக்கியமளித்து களவு செய்வதை அங்கீகரிக்கும்.. மனிதர்கள்.. எங்கும் உளர் என்பது.. வருத்தமளிக்கும் ஒரு விடயமும் கூட..! :(:huh::unsure:

Edited by nedukkalapoovan

உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாதவர்கள்..அல்லது முடியாதவர்கள் சடப்பொருளுக்கு சமன்.ஒரு மனிதனுக்கு இருக்கும் சர்வசாரண உணர்ச்சிகளில் இதுவுமொன்று.உனக்கு அழுகை வந்தால் அழு...அழுது தீர்த்து உணர்வுகளை அழித்து விடு.அடக்கி வையாதே..அதுதான் பெரும் விளைவுகளை தரும்.இந்த கொலை குடும்ப சூழ்நிலையை பொறுத்தது.ஆனால் அந்த பெண்மணி தன் உணர்ச்சிகளை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டதில் தப்பேயில்லை.

ஒரு அகதியாய் இருந்திகிட்டு ...அறிஞர்மாதிரி எல்லாம் பேசப்படாது! <_<

என்னதான் காமடி பண்ணிகிட்டு திரிஞ்சாலும்...சீரியஸா ஏதும் பேசவந்தா...

காதில அறைஞ்சமாதிரி சொல்லுவீங்க!

இதாலதானே குமாரசுவாமியண்ணா.........எப்பவும் ...உசந்து நிக்கிறார்! :)

ஒரு தாயின் அல்லது தந்தையின் தவறான நடத்தை என்பது பிள்ளைகளின் மனதை எந்தளவுக்கு பாதிக்க செய்கிறது என்பதை உணராமல்.. மிருகங்களை விட கீழான உணர்ச்சிகளுக்கு முக்கியமளித்து களவு செய்வதை அங்கீகரிக்கும்.. மனிதர்கள்.. எங்கும் உளர் என்பது.. வருத்தமளிக்கும் ஒரு விடயமும் கூட..! :(:huh::unsure:

ஏன் நெடுக்கு..........

அப்போ தாய் தந்தையின் உணர்வுகளை மதித்து , பிள்ளைகளும் காதலிக்காமல், பெண்/ஆண் துணை தேடாமல் ...மிருகங்கள்போல் வாழாமல் நல்லவர்கள்போல் நடந்தா... சரி எங்கிறீங்களா?

உணர்வுகள் எங்கிறது... வயசு சம்பந்தமானதல்ல...

உடல் உறுதி சம்பந்தப்பட்டது!

18 வயசில் கிழம்போல வாழ்றவனும் இருக்கான்...81 வயசில் இளைஞன் போல ...வாழுறவரும் இருக்கார்!

தன்னுணர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு(/த்தி)வன்... வாழந்தே ஆகணும் எங்கிறது ..

ஒண்ணும் சட்டக்கட்டுப்பாடு இல்லியே!

கட்டுப்பாடு பத்தி கிளாஸ் எடுக்கிற சமூகம் மட்டும் என்ன ரொம்ப ஜோக்கியமாவா இருக்கு?

உள்ளுக்குள்ளே ஆயிரம் அசிங்கம்!

தறிகெட்ட பாலியல் நடத்தைகள் கூட பல இனங்களின் அழிவுக்கு வித்திட்டுள்ளன. விலங்குகளில் கூட பாலியல் என்பது 24 மணி நேர சமாச்சாரம் கிடையாது. நாய்க்குக் கூட ஒரு காலம் இருக்குது. அது சதா பாலியல் செய்வது கிடையாது. அதுபோலவே தான் பாலியல் வேட்கை என்பது மனிதனில் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாத ஒன்று அல்ல. எந்த மனிதனும் பாலியல் செய்யாவிட்டால் இறந்துவிடுவான் என்ற நிலை இந்தப் பூமிப்பந்தில் இல்லை. பாலியல் என்பது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய ஒன்று என்பதை மனித சமூகம் உணர்ந்துள்ளது. அதன்படியே சமூக ஒழுக்கங்களும் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. அதை தாண்டும் போது.. அது பல தீய விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தச் செய்கின்றன. அதன் ஒரு விளைவே இந்தப் பெண்ணின் கொலை.

இந்தப் பெண் திருமணமாகி.. குழந்தை பெற்று வாழ்ந்த ஒருவர். அந்தக் குழந்தை பருவ வயதைக் கடந்து வாலிப வயதில் இருக்கும் தருணத்தில்.. அவன் கண்ணெதிரேயே தவறான பாலியல் நடத்தையை காண்பிப்பதை நீங்கள் வரவேற்கிறீர்களா..??! அப்படியென்றால்.. அந்தப் பெண்ணிற்கும்.. வெறி பிடித்த விலங்கிற்கும் உள்ள வேறுபாடு தான் என்ன..??!

நாங்கள் மனிதர்கள் இயற்கையின் உயிரிகளாக இருக்கின்ற போதும்.. எமக்கென்றான சமூக வாழ்வியலை.. நாகரிகத்தை நிறுவி அதன் கீழ் வாழ்ந்து வருவதால் தான் ஒரு வெற்றிகர இனமாக இந்தப் பூமிப்பந்தில் வாழ முடிகிறது. தறிகெட்ட பாலியல் நடத்தைகள்.. குடும்பங்களில் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த மனித இனத்தின் அழிவுக்குக் கூட வழிவகுக்கலாம். அதனால் தான் பிற உயிரினங்களில் கூட கட்டுப்பாடுகள் உள்ளன. பெண் சிலந்தி புணர்ந்துவிட்ட ஆண் சிலந்தியை கொன்று விடுமாம். அது கூட தர்மம் இல்லையே. இருந்தாலும்.. ஏன் இயற்கையாகவே அப்படி ஒரு விதிப்பு.. அங்கு. இப்படி ஒவ்வொரு உயிரினமும் பாலியல் சார்ந்து இயற்கையின் விதிக்கமைய ஒழுகுவது இயல்பு. அதிலும் பகுத்தறிவாகிய ஆறாம் அறிவு படைத்த மனிதன்.. பாலுணர்ச்சியின் வழி உடலைக் கொண்டு செல்வதா... சிந்தனையின் வழி அதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்வதா சிறந்தது. தீர்மானிக்க வேண்டியதும்.. மனித இனமே அன்றி வேறு எவரும் அல்ல..!

என்னைப் பொறுத்தவரை தறிகெட்ட பாலியல் நடத்தை என்பது மனித இனத்துக்கு ஆபத்தான ஒன்று..! அதன் சமூக வாழ்வை சீர்குலைத்து பேரழிவுகளை தரவல்லது. அதனால் தான் நாகரிகம்.. கலாசாரம்.. பண்பாடு.. சமூக ஒழுக்கம் என்று.. பாலியல் உணர்வு வெளிப்படுத்தலை ஒரு சீரான நிலையில் வைத்திருக்கச் செய்கின்றனர். அதை மீறுபவர்கள்.. சமூகப் பிறழ்வுக்கான.. ஆபத்தான வழிகளில் பயணிப்பதை அனுமதிப்பது.. அவசியமா..???!

  • கருத்துக்கள உறவுகள்

"காலையில் ஆறு மணிக்கு நித்திரையில் இருந்து எழுதல்

எட்டு மணிக்கு காலை சாப்பாடு

ஒன்பது மணிக்கு அலுவலகம்

பன்னிரென்டு மணிக்கு மதிய சாப்பாடு

மூன்று மணிக்கு தேநீர்

ஜந்து மணிக்கு அலுவலகம் முடியும்

ஏழு மணிக்கு இரவு சாப்பாடு

ஒன்பது மணிக்கு நித்திரைக்குப் போதல்"

இப்படி நேர‌ அட்டவணை போட்டு வாழ்க்கையை கொண்டு நட‌த்தவும் :lol: :lol: :lol:

இரவு ஒன்பது மணிக்கு எவருடன் நித்திரைக்கு போவது என்பது தானே மேலே பிரச்சனையே.

  • கருத்துக்கள உறவுகள்

நேரத்திற்கு நேரம் பசிக்கிற மாதிரி செக்ஸ்சும் ஒரு பசி அதை பல பேர் அடக்கத் தெரிந்தவர்கள் சில பேர் அடக்க முடியாதவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரத்திற்கு நேரம் பசிக்கிற மாதிரி செக்ஸ்சும் ஒரு பசி அதை பல பேர் அடக்கத் தெரிந்தவர்கள் சில பேர் அடக்க முடியாதவர்கள்.

எல்லாம் பழகிக் கொண்டால் ஆகும். எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. பிறக்கும் போது இல்லாத உணர்வு.. இடையில் உருவாகி.. கிழப்பருவத்தில் மீண்டும் அகன்றுவிடக் கூடிய ஒன்றை.... பசியோடு ஒப்பிடுவதே தவறு.

பசி.. உணவின்றி.. குழந்தைக்கும் வாழ்வில்லை கிழவனுக்கும் வாழ்வில்லை. ஆனால் பாலுணர்வுத் தூண்டல் இன்றி.. குழந்தை.. கூட வாழ்கிறது..! வயதானவர்களும் வாழ்கின்றனர். இடையில்.. பாலுணர்வுத் தூண்டலின் விளைவாக.. கட்டற்றுப் போவதற்கு.. பெயர்.. பசித்தலும்.. புசித்தலும் அல்ல..! அது சீரான பாலுணர்வு பற்றிய அறிவின்மையும் கட்டுப்படுத்தல் பற்றிய பயிற்சி இன்மையுமே ஆகும். அதை சமூகம் கற்றுத் தர வேண்டும். பள்ளியில் இருந்து அது தொடர வேண்டும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட வயது வரைக்கும் பால் உணர்வு தூண்டலின்றி இருப்பதால் தான் அவர்களை குழந்தைகள் என்கிறோம்...இப்ப எல்லாம் வாலிப வயதில் உள்ளவர்களை விட வயதானவர்கள் தான் ரொம்ப ஆட்டம் ஆடுவார்கள் :D

ரதி உங்கள் ஊகங்களிற்கு ஆதாரங்கள் உள்ளனவா? பலர் அடக்குபவர்கள், சிலரே அடக்காதவர்கள், மற்றும் வயதானவர்களிற்கு இளையவர்களை விட குறிப்பிட்ட உணர்வுகள் அதிகம் என்பவை? நவீன, தொழில்நுட்ப, விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாக மனிதனது ஆரோக்கியம், பலம் பல்கோணத்தில் அதிகரித்துள்ளது. வசதி, வாய்ப்புக்களை நுகர்ந்துகொள்வதில் தவறேதும் இல்லையே? ஓர் மனநல மருத்துவர் கூறினார் அசிங்கங்கள் வெளியில் இல்லை எம்முள்ளேதான் உள்ளன என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிபோட்ட பூனை தன்ரை குட்டியளை வளர்த்தெடுக்கும் வரை....தனக்கு மாப்பிளைவேலை பாத்த பூனையாரிலை தான் எப்பவும் ஒரு கண்வைச்சிருக்குமாம்.ஏனெண்டால் தனக்கு பிறந்த குட்டிகளையே கடிச்சு குதறிவிடுமாம்.எனவே ஒவ்வொரு பிறப்புக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்.உதாரணங்களுக்கு எல்லா இடத்திலேயும் எல்லா மிருகங்களையும் விபரிப்பது என்பது??????ஐந்தறிவு பாலியலுக்கும் ஆறறிவு பாலியலுக்கும் பாலம் கட்டுவது ஏழாம் அறிவா?

Edited by குமாரசாமி

என்னைப் பொறுத்தவரை தறிகெட்ட பாலியல் நடத்தை என்பது மனித இனத்துக்கு ஆபத்தான ஒன்று..! அதன் சமூக வாழ்வை சீர்குலைத்து பேரழிவுகளை தரவல்லது. அதனால் தான் நாகரிகம்.. கலாசாரம்.. பண்பாடு.. சமூக ஒழுக்கம் என்று.. பாலியல் உணர்வு வெளிப்படுத்தலை ஒரு சீரான நிலையில் வைத்திருக்கச் செய்கின்றனர். அதை மீறுபவர்கள்.. சமூகப் பிறழ்வுக்கான.. ஆபத்தான வழிகளில் பயணிப்பதை அனுமதிப்பது.. அவசியமா..???!

அப்டிபார்த்தால் இப்டியான தறிகெட்ட ..பாலியல் நடத்தை நீங்க வாழ்ற யூகேல... மிக மிக மோசமே..!

அடபாவமே இப்டி மனித இனத்துக்கு ஆபத்தான ஒரு நாட்டில எப்டித்தான் இவ்ளோ பொறுமையா இருக்கீங்களோ?

நினைச்சாலே அழுகாச்சியா வருது நேக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் உணவைத் தட்டிப்பறிச்சு சாப்பிடுறது தப்பு..! :(

ஆனால் யாராவது அடப்பாவமே.. எண்டு குடுத்தால் வாங்கிச் சாப்பிடுறது தப்பா? :icon_mrgreen:

வீட்டுக்காரி சமைச்சுக் குடுக்கலை.. :(

தங்கச்சிக்காரி சமைச்சிருக்கிறா.. தப்பா? :wub:

பொண்டாட்டிக்காரிக்கு முதல்ல பிடிக்கலை.. :(

பின்னால ஹொலிடேன்னதும் ஓகே சொல்லிட்டா.. தப்பா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேண்னு எங்கட குமராசாமி தாத்ஸ்...அந்த காலத்தில சும்மாவா சொன்னார்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை அப்பனே ஈஸ்வரா என்ரை கடவுளே வல்லிபுரத்தானே சரசுவதியே இஞ்சை எங்கடை ஒண்டுக்கு தமிழிலை எழுதுற புத்தியை குடுத்ததுக்கு நன்றி........தெய்வமே

  • கருத்துக்கள உறவுகள்

கும்ஸ் தாத்ஸ் நீங்க வேற நானே நெட் கபேக்கு ஒரு முக்கியமான விடயமா வந்த இடத்தில எழுதுறன்.........முழுமையான தமிழ் வீட்ட நெட்ட வீட்டுக்காறங்கள் போட்டால் தான்...இல்லாட்டி தொல்லைகள் தொடரும்.............

அடுத்தவன் உணவைத் தட்டிப்பறிச்சு சாப்பிடுறது தப்பு..! :(

ஆனால் யாராவது அடப்பாவமே.. எண்டு குடுத்தால் வாங்கிச் சாப்பிடுறது தப்பா? :icon_mrgreen:

வீட்டுக்காரி சமைச்சுக் குடுக்கலை.. :(

தங்கச்சிக்காரி சமைச்சிருக்கிறா.. தப்பா? :wub:

பொண்டாட்டிக்காரிக்கு முதல்ல பிடிக்கலை.. :(

பின்னால ஹொலிடேன்னதும் ஓகே சொல்லிட்டா.. தப்பா? :rolleyes:

எதுவுமே தப்பில்ல மிஸ்டர்:மியூசிக்....

நானு எங்கயோ எழுதின கருத்துக்கு இங்க வந்து பதில் சொல்றீங்களே ...

இதுதான்... நேக்கு தெரிஞ்சவரை.... ரொம்ப ரொம்ப தப்பு! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்டி பார்த்தால் இப்டியான தறிகெட்ட ..பாலியல் நடத்தை நீங்க வாழ்ற யூகேல... மிக மிக மோசமே..!

அட பாவமே இப்டி மனித இனத்துக்கு ஆபத்தான ஒரு நாட்டில எப்டித்தான் இவ்ளோ பொறுமையா இருக்கீங்களோ?

நினைச்சாலே அழுகாச்சியா வருது நேக்கு!

பிரிட்டனிலோ.. எங்கையுமோ.. எவளுமோ.. எவனுமோ.. சும்மா வந்து உங்க கையைப் பிடிச்சு இழுக்கப் போறதில்ல. நீங்களா தப்புச் செய்தா ஒழிய அல்லது தப்புச் செய்ய தூண்டினால் தவிர..! ஓமோன்கள் ஒன்றும்.. தப்புச் செய்தால் தான் அடங்கும் என்றில்லை. அது தப்புச் செய்யாவிட்டாலும்.. தன்பாட்டில்.. அடங்கிப் போகும்.. அப்படியாத் தான் மனித உடலில் ஓமோன்கள் செயற்படுகின்றன.

பிரிட்டன்.. நாட்டில் நடக்கும் தவறான பாலியல் நடவடிக்கைகளால்.. ஏற்படும் சமூக விளைவுகளைக் கட்டுப்படுத்த.. சீரமைக்க என்று மட்டும் பல மில்லியன் பவுன்கள் மக்கள் வரிப்பணத்தை.. சுகாதார சேவைகளுக்கும்.. இதர சமூக தேவைகளுக்கும் கொட்டுகிறது. உண்மையில் மக்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருந்தால்.. அந்தப் பணம் கூட அபிவிருத்தி நோக்கிப் போகும். வறிய.. நடுத்தர மக்களின் நிலை உயரும். அதைப் பற்றி யாரும்... சிந்திக்கிறீனமோ.. சும்மா.. குரங்குச் சேட்டை செய்வதில்.. திருப்தி என்று நிற்கினம்... ??????! :):icon_idea:

Edited by nedukkalapoovan

பிரிட்டனிலோ.. எங்கையுமோ.. எவளுமோ.. எவனுமோ.. சும்மா வந்து உங்க கையைப் பிடிச்சு இழுக்கப் போறதில்ல. நீங்களா தப்புச் செய்தா ஒழிய அல்லது தப்புச் செய்ய தூண்டினால் தவிர..! ஓமோன்கள் ஒன்றும்.. தப்புச் செய்தால் தான் அடங்கும் என்றில்லை. அது தப்புச் செய்யாவிட்டாலும்.. தன்பாட்டில்.. அடங்கிப் போகும்.. அப்படியாத் தான் மனித உடலில் ஓமோன்கள் செயற்படுகின்றன.

ஆக... நெடுக்கு ரொம்ப டென்ஷனா இருக்கார்னு மட்டும் புரிது...

இதுக்குமேல பேசினா... பொத்திகிட்டு போங்கடான்னு திட்டிடுவார்ர் எங்கிறதும் ..தெரியுது!

ஒருவேளை வாய்ப்புக்கள் ...சரியா அமையாததால ஓவரா குழம்புறாரா தெரியலியே!

வாஸ்து சரியில்லைனு நெனைக்கிறேன்!!...

எதுக்கும் ஒருவாட்டி ..நெடுக்கு ...வீட்டை மாத்தி பாருங்க! <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக... நெடுக்கு ரொம்ப டென்ஷனா இருக்கார்னு மட்டும் புரிது...

இதுக்குமேல பேசினா... பொத்திகிட்டு போங்கடான்னு திட்டிடுவார்ர் எங்கிறதும் ..தெரியுது!

ஒருவேளை வாய்ப்புக்கள் ...சரியா அமையாததால ஓவரா குழம்புறாரா தெரியலியே!

வாஸ்து சரியில்லைனு நெனைக்கிறேன்!!...

எதுக்கும் ஒருவாட்டி ..நெடுக்கு ...வீட்டை மாத்தி பாருங்க! <_<

நமக்கு குழம்ப.. ரென்சனாக எல்லாம் ரைம் கிடைக்காது. புறெஜெக்ட் எழுதிக் கொண்டிருக்கிறம். அடிக்கடி.. மூளைக்கு ஓய்வு கொடுக்க.. இங்காலும்.. அங்காலும் எட்டிப்பார்க்கிறது தான். அதுக்காக வாஸ்து என்று சொல்லி இப்ப வீட்டை மாற்றச் சொல்லுவீங்க.. நாளைக்கு வீட்டுகாரியையும்.. மாத்துங்கடா எண்டு அட்வைஸ் கொடுப்பீங்க போல இருக்கே..! :lol::D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.