Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தர் நியுயோர்க் நகரை விட்டு வெளியேறத் தடை

Featured Replies

நியூயோர்க் நகரை விட்டு மஹிந்த இராஜபக்‌ஷவும் அவரது கூட்டாளிகளும் வெளியில் போக கூடாது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அவ்வாறு சென்று அவர்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு தாம் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளது.

.

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொது அமர்வில் பேசுவதற்காக போர்குற்றவாளி மஹிந்தரும் அவரது பரிவாரங்களும் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் விருந்தினர் என்ற வகையில் நியூயோர்க் நகர எல்லைக்குள் மட்டுமே அவருக்கு பாதுகாப்பு எல்லை உண்டு அதற்கு அப்பால் எதுவும் நடந்தால் அதற்கு தாம் பொறுப்பு இல்லை என ஐக்கிய நாடுகளும் நியூயோர்க் நகர பொலிசாரும் கூறியுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

நியூயோர்க் நகரை விட்டு மஹிந்த இராஜபக்‌ஷவும் அவரது கூட்டாளிகளும் வெளியில் போக கூடாது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அவ்வாறு சென்று அவர்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு தாம் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் தலமையகம் நியூயார்க்கில.....அதுக்கு போறதுக்கு டிப்ளோமட்டிக் கடவுசீட்டு வேணும்...

அங்க போனவனுகளுக்கு , உலகின் முதல்தர பாதுகாப்பு ..அமெரிக்க பொலிஸால்.. வழங்கப்படும்...!!

அப்டி வெளில போனாலும்...எந்தநாட்டு போலீசுபா அவுங்கள கைது செய்யும்?

இராஜதந்திர பாதுகாப்பு நியுயோர்க் நகரத்திற்கோ இல்லை மாநிலத்திற்கோ தான் செல்லும் என்று இந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.

இது உண்மையாக இருந்தால், மகிந்தாவுக்கு ஒடுங்கி வரும் சர்வதேச பிரயாணத்தையே இது மறைமுகமாக கூறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யிறதுக்கு முதலே போட்டுத்தள்ளனும்

mahinda_rajapaksa_press.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை, இதைப்பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கு, நன்றி இணைப்பிற்கு, இது நிஐமாகும் நாள் தூரமில்லை,

Edited by உடையார்

இவர் சொல்வது என்ன கொடுமை சரவணா!(ஜெயசிங்கா அல்ல)

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

President Mahinda Rajapaksa and members of his delegation, who are currently in New York to attend the UN General Assembly, have been advised officials of the diplomatic community not to visit any other state in the US apart from new York.

They have advised that it would be unwise to travel out of New York when war crimes charges have been leveled against the country.

The participants at the UN General Assembly have been provided with diplomatic immunity only in New York.

Although the President was planning to travel to several states in the US to visit some of his relatives and for medical check ups, he has had to cancel the plans.

The President and his delegation left for New York at 3 a.m. on the 19th on EK 349 to Dubai.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வது என்ன கொடுமை சரவணா!(ஜெயசிங்கா அல்ல)

நீலப்பறவை, இது எப்ப எடுத்த படம்? எனக்கு விளங்கவில்லை, ஏன் இணைத்தீர்கள் என்று

அப்டி வெளில போனாலும்...எந்தநாட்டு போலீசுபா அவுங்கள கைது செய்யும்?

அது மட்டுமல்லாது இந்தத் தகவலை நியூயோர்க் போலீஸ் தமிழ் நிருபர்களுக்கு மட்டுமே கூறியுள்ளது போலுள்ளது.

அது மட்டுமல்லாது இந்தத் தகவலை நியூயோர்க் போலீஸ் தமிழ் நிருபர்களுக்கு மட்டுமே கூறியுள்ளது போலுள்ளது.

மட்டு நிறுத்தினராக இருந்து கொண்டு தமிழ் ஊடகவியாளர்களை நக்கல் நயாண்டி செய்வது சரியா?

  • தொடங்கியவர்

மஹிந்தவை நியூயோர்க்கிற்கு வெளியே செல்லவேண்டாம் என இராஜ தந்திரிகளும் நியூயோர்க் அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளமை உண்மை. அதிகாரிகள் என்றால் பொலிசாராகத்தான் இருப்பார்கள். இலண்டனிலும் பொலிசார் மஹிந்தவிற்கு ஆலோசனை கூறியுள்ளார்கள் அதாவது தம்மால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று.. திருமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கொன்று தொடர்பாக நீதிமன்றில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. மகிந்தர் தெனாவெட்டாக அப்போது.. அதற்கு தான் பதில் அளிக்கப் போவதில்லை என்று கூறி இருந்தார். இப்போ.. அவர் அமெரிக்க மண்ணில் இருப்பதால்.. அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்த முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால்... ஐநா விருந்தினராக அழைப்பட்டு நியூயோர்க்கில் உள்ள இவர்.. ஐநாவே போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிட்ட தேசத்தின் தலைவரும் ஆவார். இப்போ.. அதுவே இவரை பாதுகாப்பாக வைந்திருந்து.. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கவும் வகை செய்கிறது.

இதற்காகத் தான் ஜெயலலிதா சட்டமன்றில் தீர்மானம் இயற்றினார்.. ஐநா இவர்களை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று. அப்படி அறிவிக்காதவரை.. ஐநாவே இவர்களுக்கு கூப்பிட்டு வைச்சு விருந்தளிக்கும்..! அதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

ஐநா மீண்டும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தவறிழைக்க முற்படுவதாகவே தெரிகிறது. நாளை மன்மோகனும் அமெரிக்கா போகிறார். இந்தியாவின் அழுத்தத்தின் பெயரில் ஐநா ஆடும் ஆட்டமாகக் கூட இது இருக்கலாம்.

Edited by nedukkalapoovan

Rajapakse has no immunity against war crimes prosecution, says Attorney

Attorney for the three Tamil plaintiffs, who filed a civil case in the District Court of District of Columbia against Sri Lanka's President Mahinda Rajapakse as responsible for extra-judicial killings of plaintiffs' relatives, said Monday that he will be filing a motion in the Court that will

(a) seek authority from the court to serve complaint by publication,
(b) argue that sitting head of state has no immunity against war-crimes, and
© the court has personal jurisdiction over Rajapakse.

The case (Civil Action No. 11-235(CKK)) where the plaintiffs seek civil damages of $30m, was filed in January of this year. Rajapakse, Sri Lanka's diplomatic mission in the U.S., and Sri Lanka Department of Justice refused to accept the service.

http://tamilnet.com/art.html?catid=13&artid=34437

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாட்டின் தூதரகங்கள் இருக்கும் நிலம் அல்லது கட்டடம் கொள்கையளவில் அந்தந்த நாடுகளுக்கே சொந்தமாக இருப்பது போல ஐநாவின் வளாகமும் அமெரிக்கச் சட்டம் செல்லுபடியற்ற ஒரு இடமாக இருக்கலாம். அதற்குள் இருக்கும்வரையில் மகிந்தருக்குப் பாதுகாப்புத்தான்..! :unsure:

வெளியில் சென்றால் பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணை இன்னும் பிடி ஆணையாக மாற்றமடையவில்லை என நினைக்கிறேன். அப்படி மாறும் பட்சத்தில், மகிந்தர் அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாடுவது பிரச்சினைக்கு உள்ளாகலாம்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்லாது இந்தத் தகவலை நியூயோர்க் போலீஸ் தமிழ் நிருபர்களுக்கு மட்டுமே கூறியுள்ளது போலுள்ளது.

http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=209:president-trapped-in-new-york&catid=1:general&Itemid=29

1. Although the President was planning to travel to several states in the US to visit some of his relatives and for medical check ups, he has had to cancel the plans.

- பல திட்டங்களுடன் வந்தார் எனவும், ஆனால் அவற்றை நிறுத்திவிட்டதாகவும் செய்தி கூறுகின்றது

2. The President and his delegation left for New York at 3 a.m. on the 19th on EK 349 to Dubai.

- முன்பு போல 'மகின் எயர்லைன்சில்' வராமல் எமிரேட்சில் சென்றுள்ளார்.

லங்கா நியூஸ்சைப்பார்க்கும் போது இதில் ஏதாவது சதிகள் இருக்குமா என்று எண்ண தோன்றுகிறது.

இவருக்கு நியுயோக்கில் வைத்து அறிவுரை கொடுபட்டால், அது பெறும்பாலும் நகரசபை பொலிஸ்சாகத்தான் இருக்க முடியும். அவர்கள் (CIA, FBI போன்று)இலங்கைக்கு முன் அறிவித்தல் கொடுத்திருக்க மாட்டார்கள். லங்கா நியூஸ்சின் படி இவர் இலங்கையில் வைத்தே பயண அடுக்குகளை மாற்றி விட்டார்போலுள்ளது. இவரை இலங்கையிலேயே இவரின் நண்பர்கள் பிளேக் போன்றவர்கள் காப்பாத்தி விட்டனரோ தெரியாது. எதற்கும் கைக்கெட்டியது வாயிற்கு எட்டமல் தப்பி போகுது இந்தமுறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!

புதன்கிழமை, செப்டம்பர் 21, 2011, 10:46 [iST]

ஐ.நா.: ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது அதில் அமெரிக்க அதிகாரிகள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/09/21/us-officials-orders-rajapakse-not-leave-new-york-aid0091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.