Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்...! ;)

Featured Replies

  • தொடங்கியவர்

நெடுக்குத் தம்பி கவிஞனின் அபரிதமான கற்பனையில் மனிதகுலம் நெகிழ்வைத்தானே அடைகிறது. நெகிழ்வு என்பது வேண்டாத உணர்வா? நீங்கள் நேசிக்கும் பாரதியார் புரட்சிக் கவிஞனாக இருக்கலாம் ஆனால் அவரிடமும் அபரிதமான கற்பனைகள் அடங்கிக் கிடக்கின்றன. தம்பி கொஞ்சமாய் மனம் நெகிழ்ந்து ஒரு பெண்ணுடன் கூடி மகிழ்ந்து அவளின் அணைப்பில் கட்டுண்டு இருந்து பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் சடத்தனம் படிதாண்டி ஓடும்.

கவிதைகளில் உவமானங்களும் உவமேயங்களும் சேர்ந்து கற்பனை கலந்து வருவது அழகு. அதை பாரதியாரின் கவிதைகளிலும் காணலாம். கவிஞர்களிடத்தில் கற்பனை இருப்பதில் தவறில்லை ... அது நன்றே! எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிஞர் மகாகவி பாரதியார்!

பாரதியின் "கவிதைக் காதலி" எனும் கவிதையில் கூட பல உவமான உவமேயங்களைப் பார்க்கலாம்!

வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!

பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,

நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே

அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்

மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து

எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;

கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்

பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற

தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;

மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப

நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்

சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய

நீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்

நீயே உயிரெனத் தெய்வமும் நீயென

நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.

வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து

மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்

வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.

நின்னொடு களித்து நினைவிழந் திருந்த

எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்..........

..................................................

.......................................................

தொடர்வதற்கு:- http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-III24.asp

  • கருத்துக்கள உறவுகள்

"சொர்க்கத்தில் உள்ளது போன்ற நிலை" என குறிப்பது அளவுக்கு மீறிய கற்பனை என்று பொருளாகுமா???????

பொதுவாக பெரும்பாலான எல்லா உயிரினங்களும் இஷ்டப்பட்டே சேருகின்றன.

மிருகங்களுக்கும் மனிதரைப் போன்று பேசவும் எழுதவும் முடியுமாக இருந்திருந்தால் அவையும் "சொர்க்கம்" என்ற சொல்லை பாவிக்குமோ என்னவோ???????

தங்களது நடுநிலையான விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்!

நன்றி நெடுக்ஸ்! :)

சாதாரண.. உடற் புணர்தலை.. சொர்க்கம்.. பேரின்பம்.. என்று வரையறுக்கும் கற்பனைகளேயே நான் வெறுக்கிறேன். சாதாரணமானதை சாதாரணமானதாக இனங்காட்டுதல்.. கற்பனைகள் கடந்த நிஜங்களை தரிசிக்க மனிதர்களை அதிகம் தயார் செய்யும் என்று நினைக்கிறேன்.

அநாவசிய கற்பனைகள்.. கவிதைக்கு அழகு சேர்க்கலாம்.. ஆனால்.. அதுவே விசப் பரீட்சைகளை நோக்கியும் மனிதர்களை இட்டுச் செல்லலாம்.

ஆண் - பெண் கூடுதலை.. சொர்க்கம் என்றீனம்.. பேரின்பம் என்றீனம்.. வெறும்.. உடற்புணர்ச்சியை தவிர.. தசைகளின்.. சுரப்பிகளின் செயற்பாடுகளைத் தவிர.. அங்கு சில உணர்ச்சித் தூண்டல் மூளையில்.. அவ்வளவு தான் இருக்க முடியும் என்கிறது அறிவியல். இதில் சொர்க்கம் என்ற அளவீடும்.. பேரின்பம் என்ற அளவீடும்.. வர இரண்டையும் கண்டவர்.. உணர்ந்தவர்.. உண்டோ இவ்வையகத்துள்..???!

இருந்தும்.. நாங்களோ.. பேரின்பம்.. சொர்க்கம் என்று மனிதர்களைத் தூண்டிவிட.. அவர்கள்.. சொர்க்கத்தைப் பேரின்பத்தை தேடி.. வன்முறைகளில்.. ஏன் வன்புணர்வுகளில் கூட ஈடுபடுகின்றனர்.

விலங்குகள்.. சொர்க்கத்தை அடைகின்றன என்றால்... பாவம்.. சேவல் விட்டுக் கலைக்க.. ஓடிப் பறக்கிற.. அப்புறமா.. களைச்சுப் போய் பதுங்கிற.. பேட்டுக் கோழியை ஏறி மிதிக்கிற... கொடுமையும்.. சொர்க்கமா..????!

வீதி ஓரத்தில் நின்று இழுபடும் நாய்க்கும்... பார்க் பெஞ்சில் குந்தி இருந்து உறிஞ்சுப்படும் மனித ஆண் - பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்.. அது நான்கறிவு ஜீவன்.. இது ஆறறிவு ஜீவன்.. அவ்வளவே..! இதில் நாய்க்கு யார் கவிதை வடித்துக் கொடுக்கிறார்.. சொர்க்கமே வீதியில் இழுபடுவது என்று...???! யாரும் இல்லை.. இயற்கை சொல்ல அது நடக்கிறது. மனிதனும் விலங்கு.. இயற்கை சொல்ல கற்பனைக்கு அப்பால்.. நிச்சயம்.. கவிதைகள் வராத காலத்திலும் இதைச் செய்தே இருப்பான்...! ஆனால்... இன்றைய கவிதைகள்.. மனிதனை இன்னும் இன்னும் மாயை உலகிற்குள் கட்டி வைத்து.. வெறித்தனத்தை ஊட்டுவனவாக உள்ளனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது..!

முட்டி முட்டி பழகும் கடா நன்கு முட்டிக் கொள்ளும்.. அந்த வகையில்... உசுப்பேத்தி உசுப்பேத்தி மனிதனை.. உக்கிரமாக்கி விடுகின்றனவே கவிதைகள்...???! இவற்றின் நன்மை தீமைகளை எடை போடும்.. நேரமாகக் கூட இதனைக் கொள்ளலாம். அதுவும் இன்றைய நவீன அறிவியல் உலகில்.. புணர்ச்சி இன்றி.. பரிசோதனைக் குழாயில் அமைகிறது சந்ததி...! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி கவிஞனின் அபரிதமான கற்பனையில் மனிதகுலம் நெகிழ்வைத்தானே அடைகிறது. நெகிழ்வு என்பது வேண்டாத உணர்வா? நீங்கள் நேசிக்கும் பாரதியார் புரட்சிக் கவிஞனாக இருக்கலாம் ஆனால் அவரிடமும் அபரிதமான கற்பனைகள் அடங்கிக் கிடக்கின்றன. தம்பி கொஞ்சமாய் மனம் நெகிழ்ந்து ஒரு பெண்ணுடன் கூடி மகிழ்ந்து அவளின் அணைப்பில் கட்டுண்டு இருந்து பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் சடத்தனம் படிதாண்டி ஓடும்.

நான் கவிஞனை.. கற்பனையை வேண்டாம் என்று சொல்லவில்லை. மனிதர்களை மாயை உலகிற்குள் கட்டி வைக்கும்.. அபரிமித பொய்களும்.. இல்லாத ஒன்றை இனங்காட்டி.. அதனைப் போல்.. இது அமையும் என்ற உண்மைக்குப் புறம்பான.. உவமைகளை.. சாதாரண.. மனித வாழ்வியலுக்குள் நுழைப்பதன் ஆபத்தை உணரத்தவறுகின்றமையையே உணர்த்த விளைகிறேன்.

ஞானிகளும்.. யோகிகளும்.. முனிவர்களும்.. இறை பேரின்பத்தைக் காண.. பல்லாண்டுகள் தவம் இருந்ததாகச் சொல்கிறோம்.. கடும்.. மன ஒருநிலைப்பாடு.. துறவு.. என்று இலகுவில் அடைய முடியாத வழிகளை எல்லாம் மொழிகின்றனர். ஆனால்.. அதே பேரின்பத்தை.. ஜஸ்டு.. ஆண் பெண் அணைப்பில் பெற முடியும் என்றால்.. ஏன்.. அந்த ஞானிகளும்.. யோகிகளும்.. முனிவர்களும்.. எல்லா சம்சாரிகளும்.. ஏன்.. புணர்ச்சி செய்யும் எல்லாமே.. ஞானிகளாய் எல்லோ.. உவமிக்கப்பட்டாகனும்..!

ஒரு பெண்ணைக் கூடி மகிழ்வதால்.. ஒரு ஆணின்.. உள்ளக் கிடக்கைக்கள் தீர்ந்து விடா.. அந்தளவுக்கு ஆண்கள் எல்லோரும் பலவீனமானவர்களோ.. அல்லது புணர்ச்சி வெறியர்களோ கிடையாது. வெறும் சதையும்.. தோலும்.. எலும்பும்.. சுரப்பிகளும்.. சொர்க்கத்தை.. காட்டும் என்றால்.. ஏன் ஒரு ஆணை அடக்கும் என்றால்.. அதுபோல் பலவீனமான ஆண் இந்த உலகில்... சுயமாய் ஜீவிக்க தகுதியற்றவன் என்பதே யதார்த்தம்..! :lol::icon_idea:

  • தொடங்கியவர்

சாதாரண.. உடற் புணர்தலை.. சொர்க்கம்.. பேரின்பம்.. என்று வரையறுக்கும் கற்பனைகளேயே நான் வெறுக்கிறேன். சாதாரணமானதை சாதாரணமானதாக இனங்காட்டுதல்.. கற்பனைகள் கடந்த நிஜங்களை தரிசிக்க மனிதர்களை அதிகம் தயார் செய்யும் என்று நினைக்கிறேன்.

அநாவசிய கற்பனைகள்.. கவிதைக்கு அழகு சேர்க்கலாம்.. ஆனால்.. அதுவே விசப் பரீட்சைகளை நோக்கியும் மனிதர்களை இட்டுச் செல்லலாம்.

ஆண் - பெண் கூடுதலை.. சொர்க்கம் என்றீனம்.. பேரின்பம் என்றீனம்.. வெறும்.. உடற்புணர்ச்சியை தவிர.. தசைகளின்.. சுரப்பிகளின் செயற்பாடுகளைத் தவிர.. அங்கு சில உணர்ச்சித் தூண்டல் மூளையில்.. அவ்வளவு தான் இருக்க முடியும் என்கிறது அறிவியல். இதில் சொர்க்கம் என்ற அளவீடும்.. பேரின்பம் என்ற அளவீடும்.. வர இரண்டையும் கண்டவர்.. உணர்ந்தவர்.. உண்டோ இவ்வையகத்துள்..???!

இருந்தும்.. நாங்களோ.. பேரின்பம்.. சொர்க்கம் என்று மனிதர்களைத் தூண்டிவிட.. அவர்கள்.. சொர்க்கத்தைப் பேரின்பத்தை தேடி.. வன்முறைகளில்.. ஏன் வன்புணர்வுகளில் கூட ஈடுபடுகின்றனர்.

விலங்குகள்.. சொர்க்கத்தை அடைகின்றன என்றால்... பாவம்.. சேவல் விட்டுக் கலைக்க.. ஓடிப் பறக்கிற.. அப்புறமா.. களைச்சுப் போய் பதுங்கிற.. பேட்டுக் கோழியை ஏறி மிதிக்கிற... கொடுமையும்.. சொர்க்கமா..????!

வீதி ஓரத்தில் நின்று இழுபடும் நாய்க்கும்... பார்க் பெஞ்சில் குந்தி இருந்து உறிஞ்சுப்படும் மனித ஆண் - பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்.. அது நான்கறிவு ஜீவன்.. இது ஆறறிவு ஜீவன்.. அவ்வளவே..! இதில் நாய்க்கு யார் கவிதை வடித்துக் கொடுக்கிறார்.. சொர்க்கமே வீதியில் இழுபடுவது என்று...???! யாரும் இல்லை.. இயற்கை சொல்ல அது நடக்கிறது. மனிதனும் விலங்கு.. இயற்கை சொல்ல கற்பனைக்கு அப்பால்.. நிச்சயம்.. கவிதைகள் வராத காலத்திலும் இதைச் செய்தே இருப்பான்...! ஆனால்... இன்றைய கவிதைகள்.. மனிதனை இன்னும் இன்னும் மாயை உலகிற்குள் கட்டி வைத்து.. வெறித்தனத்தை ஊட்டுவனவாக உள்ளனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது..!

முட்டி முட்டி பழகும் கடா நன்கு முட்டிக் கொள்ளும்.. அந்த வகையில்... உசுப்பேத்தி உசுப்பேத்தி மனிதனை.. உக்கிரமாக்கி விடுகின்றனவே கவிதைகள்...???! இவற்றின் நன்மை தீமைகளை எடை போடும்.. நேரமாகக் கூட இதனைக் கொள்ளலாம். அதுவும் இன்றைய நவீன அறிவியல் உலகில்.. புணர்ச்சி இன்றி.. பரிசோதனைக் குழாயில் அமைகிறது சந்ததி...! :):icon_idea:

காதல்,காமம் என்ற சொற்பதங்கள் தரும் அர்த்தம்,

முழுமையாய்ப் புரிந்தது அன்றல்ல!!!!!

தொடர்ந்த புணர்வுகள்... தந்த உணர்வுகளை விட,

எம் இறுக்கங்கள்... தந்த கிறக்கங்களை விட...

நான் அப்பாவும் அவள் அம்மாவுமாய் ஆகியதாய் உணர்ந்த...

அந்தக் கணப்பொழுதில்... முழுமையாய்ப் புரிந்து,

முழுமையடையும் ஒன்றுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம்!

சிற்றின்பம் தாண்டிய பேரின்பம்.... காதலோடு காத்திருக்கின்றது!

"உறவுகள்" தொடரும்..................!

நெடுக்ஸ்....!!! எனது கவிதைகளில் இறுதி இரண்டு பந்திகளை நீங்கள் பார்க்கவில்லையா அல்லது சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? என எண்ணத் தோன்றுகின்றது தங்களின் கருத்து!

அதை இன்னொருமுறை வாசித்துப் பாருங்கள்.... நான் என்ன சொல்லவந்திருந்தேன் என்பது புரியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரத்துபோனவர்களுக்கு பரிசோதனைக்குழாய்கள் தான் தஞ்சம்.

பார்த்தேன்.. சேலை தலைப்பில்.. தொடங்கி.. பம்பஸ் தலைப்பில்.. கிறங்கிக் கிடக்கிறது.. மனிதம் என்ற வேதனையும் கூடவே முளைத்தது. எவ்வளவு ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஆறறிவு ஜீவனும்.. என்று என்னும் போது.. பட்டியில் கன்றை ஈன்றுவிட்டு.. அதைக் கதறக் கதற கட்டி வைத்துவிட்டு.. கறந்து குடிக்கும் மனித மூளைக்குள்.. இப்படி ஒரு ஈரமா என்றும் எண்ணத் தோன்றியது..???! :lol::icon_idea:

மரத்துபோனவர்களுக்கு பரிசோதனைக்குழாய்கள் தான் தஞ்சம்.

மரத்துக்கும் பொருந்தும்.. பரிசோதனைக் குழாய்..! மனிதனுக்கும் பொருந்தும்.. ஐயா. நீங்கள் பெட்டியை .. புட்டியை விட்டு வெளியே வந்தால் அன்றி.. உலகத்தை சரியாக கணிக்க முடியாது. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில ஆக்களுக்கு உள்ளதை சொன்னால் உள்ளுக்கை இருக்கிறதெல்லாம் பத்திக்கொண்டு வரும் உது நோமல்......உலகத்தை கணிக்க இவரொருத்தர் புது வாய்ப்பாடோடை வந்திட்டாரு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு அழகே பொய்,

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண.. உடற் புணர்தலை.. சொர்க்கம்.. பேரின்பம்.. என்று வரையறுக்கும் கற்பனைகளேயே நான் வெறுக்கிறேன். சாதாரணமானதை சாதாரணமானதாக இனங்காட்டுதல்.. கற்பனைகள் கடந்த நிஜங்களை தரிசிக்க மனிதர்களை அதிகம் தயார் செய்யும் என்று நினைக்கிறேன்.

நெடுக்ஸ், ஐம்புலன்களையும் ஒடுக்கி கடவுளைத் தரிசிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏன்தான் வேண்டுமென்றே தவறவிடுகின்றீர்களோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மரத்துபோனவர்களுக்கு பரிசோதனைக்குழாய்கள் தான் தஞ்சம்.

உண்மையில் பாவம் அண்ணா நெடுக்ஸ் எத்தனை நாளைக்குத் தான் அவர் இந்த வேச‌ம் போடுறது...நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு ஒரு இமேஜை கிரியேட் பண்ணி விட்டீர்கள் அதை உடைக்க முடியாமல் தம்பி தடுமாறுகிறார் :lol::icon_idea::D

நோ நோ தடுமாறுவது அவர் இல்லையே

என்ன ரதி எங்கடை கொள்கைவீரன் நெடுக்ஸ்சின் வீரத்தினை இப்படியா சீண்டுவது ?

நெடுக்ஸ் புலி = புலிபசிச்சாலும் புல்லைத் தின்னாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நோ நோ தடுமாறுவது அவர் இல்லையே

பின்ன யார் நீங்களா :lol:

என்ன ரதி எங்கடை கொள்கைவீரன் நெடுக்ஸ்சின் வீரத்தினை இப்படியா சீண்டுவது ?

நெடுக்ஸ் புலி = புலிபசிச்சாலும் புல்லைத் தின்னாது. :lol:

இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தியே சிங்கத்தை ஒரு வழி பண்ணுங்கோ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் சண்டையைப் பார்த்துப் பயந்துபோய் கவிதை கவிதை எழுதுவதையே விட்டுவிடப்போகிறார்...

  • தொடங்கியவர்

நடக்கும் சண்டையைப் பார்த்துப் பயந்துபோய் கவிதை கவிதை எழுதுவதையே விட்டுவிடப்போகிறார்...

பயமா....???????? அப்பிடீன்னானானானா என்ன??????????????? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குழப்பங்களைத் தவிர்ப்பதற் காகத்தான் 8 ஆம் வகுப்பிலேயே ஆர்ட்ஸ் , சயன்ஸ் என்று பிரித்து படிப்பித்தார்கள்.

தாமரை இலையில் இருந்து தவளை தண்ணீரில் பாய்வதை ரசிப்பது கலை!

பாய்ந்த தவளையை கலைத்துப் பிடித்து மேசையில் அறைந்து மார்பை பிளந்து துடிக்கும் இதயத்தை ரசிப்பது சயன்ஸ்!

இரண்டும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பது அபூர்வம்!

Edited by suvy

  • தொடங்கியவர்

தாமரை இலையில் இருந்து தவளை தண்ணீரில் பாய்வதை ரசிப்பது கலை!

பாய்ந்த தவளையை கலைத்துப் பிடித்து மேசையில் அறைந்து மார்பை பிளந்து துடிக்கும் இதயத்தை ரசிப்பது சயன்ஸ்!

ம்ம்ம்ம்...... இது நல்லா இருக்கே! :lol: :lol: :lol:

இரசிக்கத் தயாரான மனதிருந்தால் போதுமே!

எல்லாமே எங்கள் மனதிலுள்ள எண்ணங்களில்தான் தங்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.