Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரும்பி வந்தவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வந்தவன்

யோ.கர்ணன்

stop+kiling+prostitutes.jpg

வெட்கத்தை விட்டிட்டு உண்மையை சொன்னாலென்ன. அம்மா இதைச் சொல்லேக்க எனக்கு பெரிய சந்தோசமாயிருந்தது. ஏதோ இவ்வளவு நாளும் இந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்து, அது இப்பதான் அம்மாவின்ர வாய்க்குள்ளயிருந்து வெளியில வருது என்ற மாதிரியான ஒரு சந்தோசம்.

எனக்கு ஒரு நிமிசம் என்ன செய்யிறதென்டே தெரியேலை. இது மட்டும் பாக்கியராஜ்சின்ர பட சிற்றிவேசனாக இருக்க வேணும், இந்த கணத்தில இளையராஜாவின்ர மியூசிக்கில இரண்டு வரிசையில இருபது பொம்பிளையள் கையில பூத் தட்டோட ஒரு பரத நாட்டிய ஸ்ரெப் எடுக்க, பின்னணியில ஒரு கிராபிக்ஸ் தாமரை வரும். அதுக்குள்ளயிருந்து நானும், கச்சை கட்டிக் கொண்டு என்னை கலியாணம் கட்டப் போற பொம்பிளையும் வந்திருப்பம்.

என்னயிருந்தாலும் இந்த விசயத்தில ஆம்பிளையள் பிடி குடுக்கக் கூடாது என்றது என்ர நிலைப்பாடு. அம்மா கேட்ட உடனேயே ஓமென்றால், ஏதோ இவ்வளவு நாளும் இதுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தது மாதிரியாகிவிடும். அது என்ர இமேஜையும் பாதிக்கும். கொஞ்ச நாள் இழுத்து அம்மாவை நாலு இடத்துக்கு ரெலிபோன் கதைக்க வைக்க வேணும். சுவிசில இருக்கிற மூத்த அண்ணரும், கனடாவில இருக்கிற சின்னண்ணரும் நடுச் சாமத்தில ரெலிபோன் அடிச்சு, ''ஏன் இப்பிடி விசரன் மாதிரியிருக்கிறாய். பாத்திருக்கிற இடம் நல்ல இடம். குழப்பாமல் செய்'' என்று சொல்ல வைக்க வேணும். 'இதுகளில எல்லாம் எனக்கு இஸ்டமில்லை. ஏதோ வற்புறுத்திறியள். உங்கட ஆசைக்கு குறுக்க நான் நிற்கயில்லை' என்ற மாதிரியான சிற்றிவேசனை ஏற்படுத்திப் போட்டு கலியாணத்தை கட்ட வேண்டியதுதான்.

இந்தக் கலியாண பேச்சையெடுத்தது சுவிசிலயிருக்கிற மூத்த அண்ணர்தான். ஒரு நாள் கதைக்கேக்க அம்மாவுக்கு சொல்லியிருக்கிறார் -'அவனும் திரும்பி வந்து நிற்கிறான். முதலொரு கலியாணத்தை செய்து வையுங்கோ. ஆறுதலாயிருக்கும்' என்று. இந்த காலத்தில 'தமிழீழத்திலயே' திரும்பி வந்து நிற்கிறான் என்றால் இரண்டு அர்த்தம். ஒன்று, வெளிநாட்டிலயிருந்து லீவிலயோ விசா முடிஞ்சோ வந்து நிற்க வேணும். அல்லது ஆமியிட்ட சரணடைஞ்சு புனர்வாழ்வு முகாமிலயிருந்து வந்திருக்க வேணும். நான் இரண்டாவது ரைப்.

அண்ணர் என்னோட இதொன்றும் கதைக்கயில்லை. எப்பிடியிருக்கிறாய் என்று நாலைஞ்சு சுக விசாரிப்புக்கள் விசாரிச்சிட்டு, முள்ளிவாய்க்கால் கதைகளைத்தான் விடுத்து விடுத்து கேட்டார். இருவருக்குமிடையிலான முக்கிய உரையாடல் கீழ்வருமாறு இருந்தது.

''என்ன.. கடைசிக் கட்டத்தில ஒரு லச்சம் சனம் செத்திருக்குமே?..''

''நான் சரியாக எண்ணயில்லை..''

''ம்..அது சரி..பாகிஸ்தான் ஆமியும் வந்து சண்டை பிடிச்சதாமே..''

''ஆ..அப்பிடியே..''

''ஏன் உனக்கு தெரியாதே..''

''இல்லை..''

''எல்லாச் சனமும் சொல்லுதுகள்..சிலது கண்டுமிருக்குதுகளாம்..''

''நான் காணயில்லை..''

''அது சரி....அதைவிடு..இவர்..உங்கிட கெட் மாஸ்ரர் எங்க.... இருக்கிறாரோ.. இல்லையோ..''

நான் சிரிச்சன். அண்ணர் என்ன நினைச்சார் தெரியாது. ''சரி..அம்மாவிட்ட ஒரு விசயம் சொல்லியிருக்கிறன். அம்மா கதைப்பா'' என்று முடித்தார். எல்லா அண்ணன்மாரும் இப்பிடித்தான். இதுகளுக்கு மட்டும் அண்ணிமாரை கூப்பிடுவினம்.

பிறகு அண்ணி கதைச்சா. அவ மிகமிக முக்கியமான கேள்வியொன்றை கேட்டா.

''அது சரி..நீர் அங்கயிருக்கேக்க ஆரையேனும் லவ்கிவ் பண்ணின மாதிரி?''

வலு அவசரமாக மறுத்து விட்டேன். இதென்ன கண்றாவி. நான் அங்க லவ் பண்ணவே போனனான். நான் போனது தமிழீழம் பிடிக்க. இதுக்குள்ள நானிருந்த பிரிவும் அப்பிடி. றோட்டில ஒரு பொம்பிளையோட கதைச்சாலே ரட்ணம் மாஸ்ரரின்ர ஆக்கள் வந்து நிற்பாங்கள். இந்த நாளில இத்தனை மணிக்கு இந்தக்கடைக்கு முன்னால இன்ன ஆளோட இவ்வளவு மணித்தியாலமும் இவ்வளவு நிமிசமும் கதைச்சனீர் என்றொரு அறிக்கையை வாசித்துக் காட்டி வாகனத்தில் கொண்டு போயிடுவினம். கடாபியண்ணை எங்களை அவ்வளவ கட்டுப்பாடாகத்தான் வைச்சிருந்தவர். பிறகு கடாபியண்ணை லவ் பண்ணிக் கலியாணம் செய்ததுக்குப் பிறகு தான் கொஞ்சம் கட்டுப்பாடு தளர்ந்தது. இந்த ரைம் கன பொடியள் லவ் பண்ண வெளிக்கிட்டினம். எனக்கும் ஒரு றூட் ஓடினது உண்மை.

எனக்கு ஆரம்பத்தில பயமாகத்தானிருந்தது. என்னயிருந்தாலும் குடும்ப உறவுகள், ஆசாபாசங்களால எங்கட இலட்சியப் பாதைக்கு தடங்கள் வரக்

கூடாது என்றொரு விசயத்தை வடிவாக விளங்கப் படுத்தியிருக்கினம். பிறகும் ஒரு சஞ்சலம். ஏன்எங்கட தலைவர் லவ் பண்ணித்தானே செய்தவர். அவர் லவ் பண்ணி கலியாணம் செய்ததால தன்ர இலட்சியப் பாதையில தளம்பினவரே. இல்லைத்தானே. பிறகு, கிட்டுமாமா, பொட்டம்மான், தீபண்ணை என்று பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் லவ் பண்ணித்தானே செய்தவையள். அதைவிட கனபேர் ஒரு பொம்பிளையில விருப்பம் வந்தால் போய் தலைவரிட்ட சொல்லியிருக்கினம். தலைவர் அவையளை கூப்பிட்டு விசயத்தைக் கேட்க, தலைவர் கேட்டிட்டாரே என்று அவையளும் ஓம்பட்டுச் செய்திருக்கினம். ஆக எப்பிடியோ எல்லாம் ஒரு லவ்தானே.

யெயசிக்குறு சண்டை நேரம் எங்கட லைனுக்குப் பக்கத்தில சிறுத்தைப் படையணி பெட்டையளின்ர லைன். அதில ரோமியோ ஐம்பத்தியொன்பதாவது

பொசிசனில நட்சத்திரா நட்சத்திரா என்றொரு பெட்டை நின்றா. அவவுக்கு என்னட்டயிருந்த புது டபிள் குப்பியில ஒரு குப்பி, ஒரு ஒரிஐினல் வரி சேட், தலைவரின்ர படம் போட்ட நோட்புக், அப்பப்ப நாங்கள் செய்யிற சாப்பாடெல்லாம் குடுத்தன். அவவும் நான் குடுத்த நோட்புக் ஒற்றையில கடிதம் எழுதி குடுத்து விடுவா.

எனக்கும் சிறுத்தைப் படையணிப் பெட்டைக்கும் லிங் இருக்கிறதைப்பார்த்து விட்டு கன பொடியள் எனக்கு அடவைஸ் பண்ணத் தொடங்கி விட்டினம். எல்லாத்துக்கும் காரணமிருந்தது. அந்த நேரம் பரவலாக ஒரு கதையடிபட்டது. இப்பிடித் தான் சிறுத்தைப் பிரிவில இருந்து விலத்தின ஒரு பெட்டையை ஒருத்தர் கலியாணம் செய்திருக்கிறார். பெட்டையைச் சரியான கொடுமைப்படுத்தியிருக்கிறார். பொறுத்துப்பொறுத்துப் பார்த்த பெட்டை ஒரு நாள் புருசனை வீட்டுக்குள்ள கூட்டிக் கொண்டு போச்சுதாம். அது ஒரு ஓலை வீடாம். கொஞ்ச நேரத்தில செத்தையை பிரிச்சுக் கொண்டு புருசன் வெளியில வந்து விழுந்தானாம்.

சிறுத்தைப்படையணியில எல்லாருக்கும் கராட்டி பழக்குவினம். அனேகமாக எல்லாரும் பிறவுன் பெல்ட்டோ, பிளக் பெல்ட்டோ வாங்கியிருப்பினம். 'ஆழம் தெரியாமல் காலை விட்டு கடைசியில செத்தையை பிரிச்சக் கொண்டு வந்து விழ வேண்டாம்' என்று எல்லாச் சினேகிதப் பொடியளும் சொல்லிச்சினம்.

என்னயிருந்தாலும் நட்சத்திராவில் ஒரு நளினத்தைக் கண்டன்.

அடுத்த கிழமை லீவில போனவள்தான். திரும்பி வரயில்லை. பிறகு ஆரோ சொல்லிச்சினம், ஊரில யாரையோ கலியாணம் செய்து கொண்டு

இருந்திட்டாள் என. எனக்கும் அது பெரிசாகப் படயில்லை. அதோட தலைவர், கிட்டுமாமா, பொட்டம்மான் விசயத்தை விட்டிட்டன். கலியாணம்

செய்யிறதென்றால் அது தமிழீழம் கிடைச்ச பிறகுதான் என்ற முடிவோட இருந்திட்டன்.

அப்ப தான் எனக்கும் இன்னும் ஆறு பேருக்கும் பிரிவு மாற்றம் வருது. அதுவும் காவல்துறைக்கு. எனக்கென்றால் துப்பரவாக விருப்பமில்லை. இப்பிடியொரு முக்கியமான பிரிவில இருந்திட்டு காவல்துறைக்கு மாறுறதென்றால் ஆருக்குத்தான் மனசு வரும்.

நாங்கள் நடேசண்ணையோட நிற்க வேணுமாம். நான் அரை மனசோட போனன். நடேசண்ணை நல்லாக் கதைச்சார். நான் படிச்ச பள்ளிக் கூடத்தில தான் அவரும் படிச்சிருக்கிறார். இது மட்டும் காணும். மற்ற எல்லாரையும் விட அவருக்கு என்னில விருப்பம் வந்திட்டுது. எனக்கு ஒரு முக்கிய பொறுப்பு தந்தார். காவல்துறையிட்ட வாற குற்றக் கேசுகளை விசாரிச்சு முடிய தண்டனை குடுக்கிற இடத்துக்கு நான்தான் பொறுப்பு. சிலருக்கு ஆறு மாதம் ஜெயில் வரும். சிலருக்கு ஒரு வருசம் இரண்டு வருசம் வரும். ஏன் ஐஞ்சாறு வருசம் இருக்கக்கூடியளவு குவாலிக்கேசனோடயும் சிலர் வருவினம். சிலதுகள் மண்டைக் கேசுகள்.

விஜயகாந்தின்ர அகராதியில மன்னிப்பென்ற சொல்லுக்கே இடமில்லாதது மாதிரி இதுக்குப்பிறகு என்ர அகராதியில லவ் என்ற சொல்லுக்கு இடமில்லாமல் போயிற்றுது. என்ர வேலை அப்பிடி. நான் ஒரு லவ் பண்ண வெளிக்கிட்டால் அது என்ர இமேஜை பாதிக்கும். இப்ப நான் வலு கண்டிப்பான அதிகாரி. கடமைக்கு முன்னால ஆசாபாசங்களிற்கு இடமில்லை. இப்ப நான் போய் இறங்க, முகாமில இருக்கிற எல்லாரும் நடுங்குவினம். சினிமாவில இருக்கிற ஹீரோக்கள் தங்களுக்கென்று சில ஸ்ரைலுகளை வைச்சிருப்பினம். அது எல்லாப்படத்திலயும் வரும். அது மாதிரி என்னட்டயும் சிலது இருந்தது.

அதிலயும் எல்லாரும் சொல்லிக் கொள்ளுறது, என்ர விசாரணை முறையை. சில கேசுகளை நானும் விசாரிச்சிருக்கிறன். எல்லாமே பெரிய கேசுகள் தான். இனி ஆள் தப்ப ஏலாது, மண்டை தான் என்று சம்பந்தப்பட்டவர் உணரக் கூடிய மாதிரியான ஒரு சிற்றிவேசனை உருவாக்கிப் போடுவன்.

ஆள் வெருண்டு போய் இருப்பார். இப்ப ஆளை விசாரணைக்கு எடுப்பன். மேசையில வலு முக்கியமான அலுவல் செய்யிறது மாதிரி பாவனை பண்ணிக்கொண்டு இருப்பன். விசாரணைக்கு வந்தவன் படபடத்துக் கொண்டிருப்பான். அஞ்சு நிமிசம், பத்து நிமிசம், பதினைஞ்சு நிமிசம், இருபது நிமிசமாகும். வந்தவனுக்கு பொறுக்க ஏலாமல் போயிடும். அவ்வளவு பதற்றம். இப்ப நான் என்ர பிஸ்டலை எடுத்து மகசீனை கழற்றி ஒரு ரவுண்சை அவனிட்டக் குடுப்பன்.

''நாளைக்கு திருப்பியும் கூப்பிடுவன்.உண்மையைச் சொல்லுறதென்டால் இந்த ரவுண்சைக் கொண்டு வர வேண்டாம். இல்லையென்டால் இந்த ரவுண்சைக் கொண்டு வா. நாளைக்குத்தான் உன்ர கடைசி நாளாக இருக்கும்'' என்று முடிக்க அனேகமாக ஆள் எல்லாத்தையும் சொல்லி விடுவான்.

இப்பிடியிருந்த என்ர இமேஜை ஒரு லவ் பண்ணி உடைக்க விரும்பயில்லை. எனக்கு வயசு வந்தால் இயக்கம் கட்டி வைக்கும்தானே என்று யோசிச்சன்.

இப்ப அண்ணியிட்ட இதுகளை சொல்லிக் கொண்டிருக்க ஏலாது. சிரிச்சுப் போட்டு, அப்பிடியொன்றும் இல்லை என சிம்பிளாக முடிச்சன். அண்ணியும், ''அதுதானே..அங்கயிருந்தால் கட்டுப்பாடாகத்தானே இருப்பியள்.. எதுக்கும் கேக்க வேண்டியது எங்கட கடைமை தானே'' என்றா.

அம்மாவும் பத்து நாள் அமுசடக்கமாக இருந்து நாலைஞ்சு புறோக்கர்மாரைப் பிடிச்சு ஒரு பெட்டையை கண்டுபிடிச்சிட்டா. கரவெட்டிப் பெட்டை. நல்ல நிறம் குணமான பெட்டையாம். தகப்பன்காரன் மில் வைச்சிருக்கிறானாம். இதுக்குப் பிறகு தான் எனக்கு விசயத்தைச் சொன்னா. உடனே ஓமென்டக் கூடாது தானே. கஸ்ரப்பட்டு முகத்தை ஒரு மாதிரியாக்கி சொன்னன்- ''இப்ப மனுசன் இருக்கிற நிலமையில இதுதான் குறைச்சல்..''

எனக்கு தெரியும்,இந்த ஒரு வசனம் அம்மாவின்ரயும்,அண்ணரிண்டயும் வேகத்தைக் குறைக்காது. தேவையென்றால் அம்மா இரவு அண்ணரிற்கு ரெலிபோன் அடிச்சு ''அவன் அவ்வளவு இஸ்ரப்படுறான் இல்லைப் போல.. நீ ஒருக்கால் கதைச்சு விடு..'' என்று சொல்லுவா. அண்ணரும் நடுச்சாமத்தில ரெலிபோன் அடிச்சு, ''நித்திரையோ..'' என்று கேட்டு விட்டு விளக்கம் தருவார். அதுக்குப் பிறகு ஓம் படலாம்.

அன்றிரவு நல்ல நல்ல கனவு வந்திது. கனவில இன்ரஸ்டிங்கான சில சீனுகள் ஓடிச்சுது. இதில கன்றாவி என்னவென்றால், பிறகு யோசிச்சுப் பார்க்க, சில சீனுகளில வந்தது நயன்தாரா மாதிரியுமிருக்குது. நட்சத்திரா மாதிரியுமிருக்குது. முன் வீட்டுப் பெட்டை மாதிரியுமிருக்குது. ஆர் என்று மட்டுக் கட்டேலாமல் இருக்குது. எவ்வளவோ யோசிச்சுப் பார்த்தும் சரி வரேலை. மூன்று முகமும் மாறிமாறி வருது. கடைசிவரை கரவெட்டிப் பெட்டையின்ர முகமும் வரயில்லை. ஆரென்று உறுதியாகத் தெரியவுமில்லை.

இந்தப் பிசகில மண்டையை உடைச்சுக் கொண்டிருக்கத் தான் இன்னொரு பிரச்சனையையும் யோசிச்சன். எல்லாம் சரி, கலியாணம் கட்டிப் போட்டு போகேக்க ஒரு சின்ன எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது நல்லதுதானே. எனக்கு கனகாலமாக பேப்பர் வாசிக்கிற பழக்கமிருக்குது. நான் வாசிக்கிற வாராந்தப் பேப்பருகள் எல்லாத்திலயும் மருத்துவரைக் கேளுங்கள் என்பது மாதிரியான ஒரு பகுதி தவறாமல் வரும். அதில கனபேர் இந்தப் பிரச்சனையைத் தான் கேட்டெழுதுவினம்.

எனக்கு பதற்றமாயிருக்குது. என்ன செய்யலாமென்று. கலியாணம் செய்ததுக்குப் பிறகு நானும் மருத்துவரைக் கேளுங்கோ பகுதிக்கு எழுதிக் கொண்டிருக்க ஏலாது. முதலே சின்ன எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால் பதற்றம் வராது என்று யோசிச்சன். ஊரில இருக்கிற சினேகிதப் பொடியளும் என்ர நிலைப்பாட்டை ஆதரிச்சதுடன் ஊக்கப்படுத்தி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தினம்.

இப்படியான சிற்றிவேசனில தான் நான் கொழும்பு போனன். இப்பிடி பதற்றம் தணிக்கிற ஐடியாவோட கொழும்பு போய் அடிபட்ட ஆக்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும் நீர்கொழும்பு சமாதி, கொச்சிக்கடை கலா, வத்தளை சாந்தி என்ற பெயருகளையும் ஆட்களையும். நானும் பதற்றத்தை தணிக்கிற ஐடியாவோட எல்லா இடமும் போய் வந்தன். உண்மையைச் சொன்னால், இதில சில இடங்களுக்குப் போனால்தான் பதற்றமே கூடும்.

இந்த கண்றாவிகளை கரவெட்டிப் பொம்பிளை தரப்பிற்கோ வேற ஆக்களுக்கோ சொல்ல மாட்டியள் என்ற நம்பிக்ககையிலதான் சொல்லுறன்.

இந்த வத்தளை சாந்தி என்டவவுல எனக்கு அவ்வளவு இன்ரஸ்ற் இல்லாமல் போயிற்றுது. அவவுன்ர ஏஜ் ஒரு காரணமாகயிருக்கலாம். அவையள் தொழிலில நல்ல எக்ஸ்பீரியன்ஸ்சான ஆக்கள் தானே. என்ர மனசில ஓடிய லைனை பிடிச்சிட்டா.

ஒரு நாள் அவதான் கேட்டா, தான் இல்லையென்டாலும் பரவாயில்லை. தனக்குரிய கொமிசனை தந்தால் வயசு குறைந்த ஒரு பெட்டையை அரேஞ் பண்ணித் தாறன் என்று. பணம் பாதாளம் மட்டும் பாயும்தானே. அவ ஆயிரத்து அய்நூறு ரூபா கேட்டா. நான் இரண்டாயிரம் குடுத்து வடிவான பெட்டையை கொண்டு வரச் சொன்னன். இப்பிடி வந்தவள் ஆள் வயசில மட்டும்தான் சின்ன ஆள். மற்ற ஒன்றிலயும் சின்ன ஆள் இல்லை.

இப்பிடியான வேலையளுக்கென்று பொலீஸ் பிசகில்லாத லொட்சுகள் இருக்குது. கன விசயத்துக்கு பெற்றா பேமஸ் மாதிரி இதிலயும் அதுவும் மருதானையும் பேமஸ். மூன்றாம் குறுக்குத் தெருவில வலு சீப்பான லொட்ஜ் ஒன்று இருக்குது. அதின்ர ஓனர் ஒரு தமிழனாம். மனேச்சர் கிழவனும் தமிழன் தான்.ஒரு முறை அங்க போய்வர முன்னூறு ரூபா. ஒரு முறை என்றது பதினைந்தோ இருபது நிமிசம். இதுக்கு மேல அங்க வாற பொம்பிளையள் தங்க மாட்டினம். ஏனென்றால், இப்படியான இடத்துக்கு வாறவை தொழிலில நல்லா அடிபட்டவையள் தான். நிறைய ஆம்பிளையள் இந்த லொட்ச்சின்ர வாசலில காத்துக் கொண்டு நிற்பினம். ஆரும் ஒருத்தனோட போயிற்று வாற பொம்பிளையை கூட்டிக் கொண்டு திரும்பி உள்ளுக்கு போவினம். அவளும் அவனை வெட்டிப் பொட்டு இவனோட போயிடுவாள்.

இப்பிடித்தான் இந்த லொட்ச்சுக்கு சினேகிதன் ஒருத்தனோட ஒரு முறை வந்தன். ஒரு வடிவான பெட்டையைக் கொண்டு ஒருத்தன் வந்தான். இந்தப் பிள்ளையெல்லாம் ஏன் இந்தத் தொழிலுக்க வந்திது என்று நான் கவலைப் பட்டுக் கொண்டு நிற்க, 'இருபது நிமிசத்தில வந்திடுவாள் தானே நாங்கள் அரேஞ் பண்ணுவம்' என்று சினேகிதன் சொன்னான். ஒரு பதினைஞ்சு நிமிசத்தில வெளியில வந்த பெட்டையின்ர கையை எங்களுக்கு முன்னுக்கு நின்ற ஒருத்தன் எட்டிப் பிடித்தான். அவள் அவனோட போயிற்றாள். அது முடிய அவனின்ர சினேகிதன், சினேகிதன்ர சினேகிதன் என்று மாறிமாறிப் போய்க் கொண்டிருந்தாள். நான் அந்த இடத்தில நின்று எண்ணிக் கொண்டிருந்தன். அஞ்சாவது ஆள் போக காறித் துப்பிப் போட்டு

வந்திட்டன்.

வத்தளை சாந்தி அனுப்பின பெட்டையோட அந்த லொட்ச்சுக்கு போனன். கவுண்டரில இருந்த கிழவனோட கண்ணடிச்சுக் கதைச்சாள். பிறகு எட்டாம்

இலக்க அறைக்குள்ள உள்ளட்டாள். நான் கவுண்டரில காசைக் குடுத்திட்டு அறைக்குள்ள போக அவள் அங்க ரெடியாக நிற்கிறாள். பத்து நிமிசத்தில வெளியில வர, கவுண்டரில வைச்சே ஒருத்தன் அவளின்ர கையைப் பிடிச்சான். பத்து நிமிசம் என்னோட இருந்தவள். கையை நீட்டி ஆயிரம் ரூபா வாங்கினவள். எனக்கு ஒரு சொல்லுச் சொல்லாமல் திரும்பியும் எட்டாம் இலக்க அறைக்குள்ள போனாள்.

இந்தச்சம்பவத்திற்குப் பிறகுதான் யோசிச்சன். என்னயிருந்தாலும் எங்கட தமிழ்ப் பெட்டையளின்ர நளினத்துக்கும் பவ்வியத்துக்கும் முன்னால இதுகள் எல்லாம் கால்த் தூசி. அவையளும் காசுக்கு வாற ஆக்கள் தான். ஆனால் அதிலயும் ஒரு டீசன்ட் ரைப் இருக்குதுதானே. அதுவும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, வவுனியா என்று தமிழீழ மைப்புக்குள்ள உள்ள பெட்டையள் என்றால் வலு எழுப்பமாகத்தானிருக்கும். என்னயிருந்தாலும் இவையள் அன்னியர்தானே. அதுதான் இப்பிடி கேவலம் கெட்டதனமாக நடக்கினம். எப்பிடியாவது ஒரு அசல் தமிழச்சியை பிடிக்க வேணும் என்ற வேகத்துடன் நாலு சினேகிதப் பொடியளுக்கு ரெலிபொன் அடிச்சன். இப்பிடி அடிச்சதிலதான் ஒருவன் சுடலையை அறிமுகப்படுத்தி வைச்சான். சுடலை வவுனியாவில இந்த வேலையளுக்கென்று லொட்ஜ் வைச்சிருக்கிறான்.

ஒரு மத்தியானம் சுடலையை சந்திச்சன். சந்திச்ச உடனே சுடலை கேட்ட முதல் கேள்வி ''தம்பி உனக்கு கிளிநொச்சிப் பெட்டை வேணுமா.. முல்லைத்தீவுப் பெட்டை வேணுமா.''

எனக்கென்றால் உச்சந் தலையில ஆரோ அடிச்சது மாதிரியிருந்தது. இதென்னடா,கொழும்பு மாதிரித் தான் இஞ்சயும் வந்திட்டுதோ. இப்ப இஞ்ச

வலு மோசம் என்று சனம் கதைக்குது தான். ஆனால் கொழும்பு அளவுக்கு மோசமாக இருக்குமோ? நாங்கள் இருக்கேக்க எவ்வளவு கொன்றோலாக வைச்சிருந்தம். மெனுக்கார்ட்டைப் பார்க்காமலேயே கிளிநொச்சி என்று ஓடர் பண்ணினேன்.

சுடலை என்னை ஒரு அறைக்குள்ள இருத்திப் போட்டு என்னட்டயே ஒரு ஐநூறு ரூபா வாங்கிக் கொண்டு போனான். 'அரை மணித்தியாலம் வெயிற் பண்ணுங்கோ ஆளை கொண்டு வாறன்' என்று போனவன் முக்கால் மணித்தியாலத்தால தனியாக வந்தான். எனக்கு பத்திக் கொண்டு வந்தது. என்ர முகம் ஓடிக் கறுத்ததையெல்லாம் கவனிக்கிற நிலைமையில அவனில்லை. அவ்வளவு வெறி. எனக்குப் பக்கத்தில வந்திருந்து ஒரு குழந்தைப் பிள்ளையைப் போல கேவிக் கேவி அழத் தொடங்கினான். இதென்னடா புதுச் சோலியென்று நினைச்சுக் கொண்டு- ''என்னண்ணை.. என்ன பிரச்சனை'' என்று விசாரிச்சன்.

இன்னும் பெரிய சத்தமாக அழத் தொடங்கினான். சரி. வெறிகாரனோட கதைச்சு பிரியோசனமில்லை. நடக்கிறது நடக்கட்டுமென்று பேசாமல் இருந்தன். அழுதபடியே கேட்டான்- ''தம்பி..உனக்குத் தெரியும் தானே..முந்தி எங்கட பெட்டையள் இப்படியே...''

நான் பேசாமல் இருந்தன்.

''பிரபாகரன் இல்லையென்டு தானே இவளுகள் ஆடுறாளுகள்..''

எனக்கென்றால் தலை விறைக்கத் தொடங்கிச்சுது. நான் என்னத்துக்கோ வந்து நிற்க, இந்தக் குறுக்கால போவான் பொலிரிக்ஸ் கதைக்கிறான். சரி. அவனின்ர றூட்டிலயே ஓடி வெட்டுவம் என்று ''ஓம்'' போட்டன்.

''இவையள் யோசிக்கினம்.. பிரபாகரன் இல்லையென்று. நீ என்ன நினைக்கிறாய்.. இருக்கிறாரோ..இல்லையோ..''

சுடலையின்ர றூட் எனக்கு பிடிபடயில்லை. இவன் ஆரின்ர ஆள் என்றதும் முந்திப்பிந்தி எனக்கு தெரியாது. இப்ப கதைச்சதை வைச்சுப்பார்க்க எங்கட ஆள் மாதிரித்தான் தெரியுது. எங்கட ஆள் என்றதும் சும்மா வாயளக்க ஏலாது. இதுக்குள்ளயும் கனக்க பிசகிருக்குது. இப்ப பார்க்கயில்லையோ தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்றொரு கேள்வி போட்டிருக்கிறான். இருக்கிறாரென்டுற பார்ட்டியோட இல்லையென்று கதைக்க ஏலாது. இல்லையென்டுற பார்ட்டியோட இருக்கிறாரென்று கதைக்க ஏலாது. தெரியாதென்றும் சொல்ல ஏலாது. அப்பிடியொரு தமிழன் இருக்கேலாது. தமிழனென்றால் ஏதாவது ஒரு பக்கம் தான் இருக்கலாம்.

நான் சிரிச்சன். அது ஓமென்றும் இல்லாமல், இல்லையென்றும் இல்லாமல், தெரியாதென்றும் இல்லாமல் மூன்றுக்கும் நடுவால போகக் கூடிய மாதிரி இருந்தது. சுடலைக்கு அது திருப்தி.

''அண்ணை என்னத்துக்கு இப்ப இந்தக் கதையள்..எழும்புங்கோ..நேரம்; போகுது..ஆளைக் கொண்டு வாங்கோ..'' என்றேன்.

சுடலை என்னையும் தன்னுடன் வரச் சொன்னான். நான் மறுத்திட்டன். கன பெட்டையள் நிக்கினம். நீர் வந்து செலக்ட் பண்ணும் என்றான்.

''நான் வரயில்லை ஒரு கிளிநொச்சிப் பெட்டையை கொண்டு வா'' என்று அனுப்பினேன். இதொரு சின்னப் பிரச்சனையென்றும்,முதலாம் குறுக்குத் தெருவில இரவு போனால் என்னைப் பிடி என்னைப் பிடி என்று பெட்டையள் மொய்ப்பாளுகள் என்றான்.

தமிழ் நளினங்களுடனும் தமிழ்ப் பவ்வியங்களுடனும் தமிழ் வெட்கத்துடனும் வரப் போறவள் எப்படியிருப்பாள் என்று கற்பனை பண்ணிக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தேன். இனியென்ன நடந்தாலும் இப்பிடியான வேலைகளை கேவலம் கெட்ட கொழும்புப் பக்கம் வைக்கக் கூடாது. எங்கட தமிழீழ மைப்புக்குள்ள இருக்கிற ஏரியாக்களில வைச்சிருந்தால் மனசுக்கும் ஒரு நிம்மதியாக இருக்கும் என யோசிச்சுக் கொண்டிருக்க, கதவு தட்டிக் கேட்டுது. கதவைத் திறந்தன். சுடலை சிரிச்சுக் கொண்டு நிக்கிறான். பின்னால இருட்டுக்குள்ள ஒரு உருவம் நிக்குது. ''வாங்கம்மா..ஆள் நல்ல பொடியன்..'' என்னை இன்ரடியூஸ் பண்ணிப் போட்டு பெட்டையை உள்ளுக்கு அனுப்பினான். சின்னப் பெட்டை. பொதுநிறம். அப்பிடியே தமிழீழ முகம். பெரிய சந்தோசமாகயிருந்தது. இத்தனை நாளாக காத்திருந்த தேவதை என்னைக் கடந்து போனாள். சுடலை என்ர காதுக்குள்ள மெதுவாக ''கன காசு குடுத்துப் பழக்கிப் போடதை..அகதிப் பெட்டையள்தானே..ஆயிரம் மட்டமாக இருக்கட்டும்.'' என்றான்.

சுடலையை அனுப்பிப் போட்டு கதவைப் பூட்டினன். பெட்டை திடுக்கிட்டு என்னைப் பார்த்தாள். இதைத்தான் சினிமாப் பாட்டுக்களில மானின் மருட்சி மானின் மருட்சி என்று எழுதிறவை. சுடலை லேசுப்பட்ட ஆளில்லை. புதுப் பெட்டையைத்தான் கொண்டு வந்திருக்கிறான்.

பெட்டைக்கு முன்னால கொஞ்ச நேரம் பேசாமல் நின்றன். அவள் குனிந்த தலை நிமிராமல் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறாள். சினிமாவில முதலிரவு சீனுகளில வாற நாயகியளின்ர அக்சன் மாதிரிக் கிடக்குது. அவளுக்குப் பக்கத்தில இருந்தன். அவள் ஒரு ஸ்ரெப் தள்ளியிருந்தாள். ஆகா..கவிதை..கவிதை. இதைத்தானே இவ்வளவு நாளும் எதிர்பார்த்திருந்தேன். காசுக்கு வந்தவள்தானென்றாலும் எவ்வளவு நளினம் காட்டுகிறாள். பெற்றா மூன்றாம் குறுக்குத் தெரு லொட்சுக்கு வந்தவளுக்கும் இதே வயசுதானே வரும். அவள் என்ன செய்தவள். நான் கவுண்டரில காசு குடுத்திட்டு றூமுக்குப் போக அங்க உடுப்பைக் கழற்றிப் போட்டு நிக்கிறாள். கேவலங் கெட்ட சாதியள். இதுக்குத்தான் என்ன நடந்தாலும் எங்கட ஆக்களோடயே முடிச்சிடவேணும் என்டுறது.

நான் அவளின்ர கையைப் பிடிச்சன்.கையை இழுத்து எடுத்திட்டாள். மெல்ல அவளின்ர கன்னங்களில உரசியபடி கேட்டன். ''பேர் என்ன..''

அவள் ஒன்றும் கதைக்கிறாள் இல்லை. வாயைத் திறந்தால் தலை வெடிச்சுச் செத்திடுவாள் என்பது போல, கீழ்ச் சொண்டை பல்லால இறுக்கிக் கொண்டு குனிஞ்சிருக்கிறாள். நாடியைப் பிடித்து முகத்தை எனது பக்கம் திருப்பினன். வலு மூர்க்கமாக தலையை உதறி விடுவித்து மறு பக்கம் திரும்பி விட்டாள்.

எனக்கு அவளின்ர வெட்கமும் மருட்சியும் நளினமும் பிடிச்சிருந்தது. என்னயிருந்தாலும் இப்ப அச்சம்,மடம், நாணம், பயிர்ப்போட பார்க்கிறதென்றால் அது எங்கட கொன்றோல் ஏரியாவில இருந்த பெட்டையளாகத்தானிருக்குமென்று நினைச்சுக் கொண்டு, ஆளை அமத்திப் படுக்க வைச்சன். தமிழ் நளினத்தை தமிழ் மூர்க்கத்துடன் கொஞ்சினன். அவள் திமிறிக் கொண்டு எழும்பினாள். அவளுக்குள்ள இவ்வளவு பலமிருக்குமென்று நான் நினைக்கயில்லை. எழும்பின வேகத்துக்கு கட்டிலில இருந்து குதிச்சு இறங்கிவிட்டாள்.

அவளின்ர முகத்தில கலவரமிருக்கிற மாதிரியிருக்குது. இந்த விசயங்களில புதுப் பொம்பிளையளுக்கு கலவரமும் பதற்றமும் இருக்கிறது இயல்புதானே என நான் யோசித்த கணத்தில், அவள் முதல்முதலாக அந்த அறைக்குள் வாய் திறந்தாள்.

''பிளீஸ்;..அசோக் அண்ணா..என்னை விட்டிடுங்கோ..''

எனக்கு தூக்கிப் போட்டுது. இவளுக்கு எப்பிடி என்ர இயக்கப் பெயர் தெரிந்தது? இப்ப அந்தப் பெயரையே பாவிக்கிறதில்லை. இதென்னடா புதுச்சோலி என நினைத்தபடி கேட்டன்-

''என்னைத் தெரியுமா உமக்கு''

''ஓம்..''

''எப்பிடி.. கிளிநொச்சி ரவுனுக்க கண்டிருப்பீர் என்டு நினைக்கிறன்..''

''இல்லை..''

''அப்ப..''

அவள் கண்களிலிருந்தது கலவரமென்பதை அப்போது கண்டேன். இரண்டு அடி பின்னால் போய் சுவரோடு சாய்ந்து நின்றாள். கதவைப் பார்த்தாள். பூட்டியிருந்தது. திறந்திருந்தால் வெளியே ஓடியிருப்பாள் மாதிரியிருந்தது. அவளுக்க மூச்சு வாங்கியது. பிறகு, மெல்லச் சொன்னாள்:

''இப்பிடி இந்த வேலை செய்யிறாவென்டு எங்கட அம்மாவை நீங்கள் தான் சுட்டனீங்கள்...''

http://yokarnan.blog.../blog-post.html

கிருபன் எங்கிற மனுஷாள் ,, இணைக்குற கதைகள் எனக்கு பிடிக்காதுன்னாலும்,,, கிருபன் எங்கிற யாழ்கள கள கொள்கைவாதிய ரொம்ப பிடிக்கும் ..எனக்கு!! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எங்கிற மனுஷாள் ,, இணைக்குற கதைகள் எனக்கு பிடிக்காதுன்னாலும்,,, கிருபன் எங்கிற யாழ்கள கள கொள்கைவாதிய ரொம்ப பிடிக்கும் ..எனக்கு!! :)

வடிகட்டின கள்ளு இறக்கித்தான் குடிப்பீர்கள் போலுள்ளது!

கதை தானே அறிவிலி. எழுதிவிட்டுப் போகட்டும். ஒழுங்கானவர்கள் இயக்கமென்றால் என்ன, இயக்கம் இல்லாவிட்டலென்ன ஒழுங்காக தான் இருப்பார்கள். அதேவேளை - சிலர் - வேறு விதம் தான்.

ஒருசிலர் - சினிமா கெட்டது என்று சொல்லி, சினிமாவைப்பற்றி எழுதியே வாழ்க்கை ஓட்டுவார்கள். அதே போல் தான் இதுவும். யோ.கர்ணனும் அதே ரகம் தான் போலும். அவரது சில கதைகளை யாழில் கண்ட போது, ஏன் இப்படியான கேவலமான தலைப்பை வைத்துள்ளார் என்று நினைத்ததுண்டு. (உதாரணம் - தேவதைகளின் ...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்மையை செய், பலனை(எமவுன்ட்) எதிர்பார், பதிலை எதிர்பாராதே :lol: :lol: :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எங்கிற மனுஷாள் ,, இணைக்குற கதைகள் எனக்கு பிடிக்காதுன்னாலும்,,, கிருபன் எங்கிற யாழ்கள கள கொள்கைவாதிய ரொம்ப பிடிக்கும் ..எனக்கு!! :)

நீங்கள் கூறுவதற்கு எதிராகவே நான் இருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவதற்கு எதிராகவே நான் இருக்கிறேன்.

போச்சு. கறுப்பிக்கு நம்ம கொள்கை (?) பிடிக்காதா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக சொல்லபட்டு இருக்கிறது .பகிர்வுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

போச்சு. கறுப்பிக்கு நம்ம கொள்கை (?) பிடிக்காதா? :icon_mrgreen:

போச்சு இனி பேச்சுமில்லை மூச்சுமில்லாமல்......... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போச்சு. கறுப்பிக்கு நம்ம கொள்கை (?) பிடிக்காதா? :icon_mrgreen:

அச்சோ தப்பா புரிஞ்சிட்டிங்களே!

snapback.pngஅறிவிலி, on 23 September 2011 - 11:57 AM, said:

கிருபன் எங்கிற மனுஷாள் ,, இணைக்குற கதைகள் எனக்கு பிடிக்காதுன்னாலும்,,, கிருபன் எங்கிற யாழ்கள கள கொள்கைவாதிய ரொம்ப பிடிக்கும் ..எனக்கு!! :)

நீங்கள் கூறுவதற்கு எதிராகவே நான் இருக்கிறேன்.

எனக்கு பிடிக்கும் என்பதே :)

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணனுக்கு காலில் வெடிபட்டது என்று வேறோரு பகுதியில் படித்தேன்...உண்மையில் காலில் வெடி பட்டதா அல்லது மண்டையில் வெடி பட்டதா தெரியவில்லை...கொடிய முள்ளி வாய்க்கால் யுத்தம் மக்களை இந்த அளவிற்கு அழித்து விட்டது...பரிதாபத்துக்குரியவர் இவர் :mellow:

இந்தக் கதையின் தளம் மற்றும் பாத்திரங்கள் காரணமாக மிகப்பெரும்பான்மையோரிற்கு இக்கதை பற்றிப் பேசுவது அசௌகரியமானதாக இருக்கப்போவது தவிர்க்கமுடியாதது. ஒருவேளை இதே கதையினை அமெரிக்காவிற்கோ, சோமாலியாவிற்கோ அல்லது பிறிதொரு தளத்திற்கோ மாற்றினால், அதன் பிறகு கதையின் பொருள் பற்றிக் கதைப்பதற்குப் பலர் சம்மதிக்கக் கூடும். ஆனால் அத்தகைய ஒரு தளத்தில் இக்கதை சொல்லப்படின், தமிழ் வாசகரில் கதாசிரியர் ஏற்படுத்த விளைகின்ற தாக்கத்தினை இக்கதையால் ஏற்படுத்தமுடியாதே இருக்கும். அதாவது தான் பரீட்சையில் Failலாவதற்கும் ஏதோ ஒரு ஊரில் ஆரோ ஒருவர் ஏதோ ஒரு பரிட்சையில் Failலான செய்தி படிப்பதற்கும் இடையேயான வித்தியாசம் அது. அந்தவகையில், கதாசரியர் நினைக்கின்ற தாக்கத்தை வாசகரிற்குள் ஏற்படுத்துவதற்கு இந்தத் தளமே அவரிறகு அவசியமானது. இருப்பினும், இக்கதை சொல்லப்பட்ட விதமானது அவர் விரும்பிய தாக்கத்தினை வாசகருள் ஏற்படுத்தினும் அத்தாக்கம் கதாசிரியர் எதிர்பார்த்த இறுதி விளைவை நிராகரிப்பதாகவே அமைவது தவிர்கக முடியாதது.

கதையினை வாசித்து முடித்த தருணத்தில் கதையின் முடிவு சப்பென்று இருப்பதாகவே எனக்குப் பட்டது. எனினும் அடுத்தகணமே இந்தக்கதைக்கு அந்த முடிவு தான் சரியானது என்று எண்ணம் மாறியது. அதாவது முன்னர் சோபா சக்தி எழுதிய இதை ஒத்த ஒரு கதையில் விலைமாதுவின் கொலை என்பது புலிகள் மீதானதும் மற்றும் அனைத்துக் கலாச்சாரக்காவர்கள் மீதானதுமான விமர்சனமாக வெளிவந்திருந்தது. கர்ணனின் இந்தக் கதை எடுத்தமாத்திரத்தில் சோபாசக்தியின் விமர்சனத்தை ஒத்ததாகத் தெரியினும், கர்ணனின் இந்தக் கதையின் குறித்த முடிவிற்கான காரணம் முற்றுமுளுதாக வேறானது என்றே படுகிறது. இங்கு புலிகள் மீதோ அல்லது கலாச்சாரக் காவலர்கள் மீதோ எந்த விமர்சனத்தையும் முன்வைப்பதற்காக இந்த முடிவு எழுதப்படவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

அதாவது, நான் புரிந்து கொண்டவரை, அசோக்கின் மனதை நிறைத்திருந்த ஒரே சிந்தனை தமிழ் பெண்ணின் நளினம், மருட்சி,அச்சம், மடம், நாணம் என்பனவாக அசோக்கால் நம்பப்படும் கற்பிதங்களை அல்லது எதிர்பார்ப்புக்களை கட்டிலில் கண்டுவிடவேண்டும் என்ற ஓரே சிந்தனை மட்டுமே. அர்ச்சுனன் கதையில் அர்ச்சுனனிற்குக் கிளி மட்டும் தெரிந்த கதைபோல, அசோக்கிற்கிற்கு அவனது மனதில் பதிந்திருந்த தமிழ் பெண் என்பவள் கட்டிலில் எவ்வாறு நடந்து கொள்வாள் என்ற எதிர்பார்ப்பைப் பார்த்துவிடும் இச்சை மட்டுமே வியாபித்திருந்தது. இந்நிலையில் அறைக்கு வந்த பெண்ணில் தெரிந்த கலவரம், மருட்சி முதலான உணர்வுகளைக் கண்டதும் தான் போட்டிருந்த கண்ணாடிக்குள்ளால் தான் எதிர்பார்த்த வெளிப்பாடுகளாக அவற்றைக் கண்டு அசோக் மகிழ்கிறான். ஆனால் அப்பெண்ணைப் பொறுத்தவரை அசோக் கண்ட வெளிப்பாடுகளிற்கான காரணம் அறையில் இருப்பவன் தன் தாயினைக் கொன்றவன் என்பதாக இருக்கிறது. ஆக, காட்சி ஒன்று தான் எனினும், அக்காட்சியினை உருவாக்கிய பெண்ணின் அக்காட்சிக்கான காரணமும் அக்காட்சியினைக் கிரகித்த அசோக்கின் காரணமும் முற்றுமுழுதாக வேறுபட்டு நிற்கின்றன.

எந்த ஒரு காட்டிசியியையும், எமது அனுபவங்கள் சார்ந்து மூளை எவ்வாறு எமக்கு உணர்த்துகிறதோ அவ்வாறு மட்டுமே எம்மால் கண்டுகொள்ள முடியும். எமது மூளையின் அனுவங்கள் சார்ந்த உணர்த்தல்களைக் கடந்து ஒரு காட்சியினை எம்மால் காணமுடியாது. இந்தத் தத்துவவியல் அடிப்படையினi ஓரளவிற்குச் சிறப்பாககக் கர்ணன் வெளிப்படித்தியுள்ளமை ரசிக்க முடிகிறது. மேலும் எமது மக்களை நோக்கியும் பார்வைகளை மீளாய்வு செய்யக்கோருவதான ஒரு விண்ணப்பமும் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

எனினும் என்னைப் பொறுத்தவரை, கர்ணன் மீதுஇரு விமர்சனங்கள் இருக்கின்றன:

1) ஒரு விடயம் சார்ந்தும் (அது என்ன விடயமாகவேனும் இருக்கட்டும்) மற்றையவர்களிற்கில்லாத நேரடி அனுபவம் தரவுகள் எம்மிடம் இருக்கின்றது என்றால், எமது தரவுகள் பற்றி நாம் பேச விழைகிறோம் என்றால், அத்தரவுகளிற்குக் குறைந்த பட்சம் ஒரு context கொடுக்கப்படவேண்டும். பேசப்படுகின்ற விடயத்திற்கு இருந்த மாற்றீடுகள் பற்றிப் பேசப்படவேண்டும். இறந்தகாலத்தோடு மட்டும் நிற்காது நிகழ்காலமும் எதிர்காலமும் சேர்ந்து பேசப்படவேண்டும். எந்த எதிர்பார்ப்புமின்றி இலக்கியமாக மட்டுமே பேசப்படுகின்றது என்றால் கூட, பேச்சு இலக்கியமாவதற்கான மனித நிலைப்பாட்டின் கோணங்கள் (Human Condition) இயன்றவரை நிறைவாகப் பேசப்படவேண்டும். கர்ணனின் எழுத்துக்களில் என்னால் இவற்றைக் திருப்த்தியான அளவில் காணமுடியவில்லை. நக்கலும் நளினமும் வெறும் கரவோசைக்காக வெளிப்படுவது போன்ற ஒரு முதிர்ச்சியின்மையுமே எனக்குத் தெரிகிறது.இது அலுப்பேற்றுகிறது.

2) மெத்தச் சிரமப்பட்டு கர்ணன் சோபா சக்தி போல் எழுத வெளிக்கிடுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இது ஒரு கதையில் மட்டுமன்றி கதைதோறும் வெளிப்படுவது அருவருப்பேற்படுத்துகிறது. ஒருவர் வேறொருவரைப் போல் எழுத முயல்வது கொப்பி பண்ணப்படுபவரிற்கு வேண்டுமானால் ஒருவேளை பெருமையாக இருக்கலாம் ஆனால் கொப்பியடிப்பவர் கொப்பியடிப்பவராகவே இருந்துவிடுகிறார்.

Edited by Innumoruvan

களம் வேறாக இருந்தால் ரசித்திருக்கலாம் போலுள்ளது.

ஆனால் எனக்கும் கதாநாயகன் அசோக் போலவே உந்தவிடயங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் இறுதியில் வைத்த இரு விமர்சனங்களுடனும் ஒத்துப் போகமுடிகின்றது. தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுதியையும், கர்ணனின் வலைத்தளத்திலுள்ள கதைகளையும் பார்த்தால் நடந்த சம்பவங்களை, போரினால் ஏற்பட்ட பிறழ்வுகளை, முரண்களை எள்ளல் தொனியில் ஒரு சாட்சியாக மட்டுமே தந்ததாகத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் இறுதியில் வைத்த இரு விமர்சனங்களுடனும் ஒத்துப் போகமுடிகின்றது. தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுதியையும், கர்ணனின் வலைத்தளத்திலுள்ள கதைகளையும் பார்த்தால் நடந்த சம்பவங்களை, போரினால் ஏற்பட்ட பிறழ்வுகளை, முரண்களை எள்ளல் தொனியில் ஒரு சாட்சியாக மட்டுமே தந்ததாகத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரில் கடுமையான யுத்தத்தின் பின் போரில் புலிகள் ஜெயித்திருத்தால் கர்ணணிடம் இருந்து இப்படியான கதைகள் வருமா?...சோபா சக்தியாவாது அப்பப்போ தேவைக் கேற்ப ஊறுகாய் மாதிரித் தான் புலிகளை விமர்சித்திருந்தார் ஆனால் இவர்?...ஏன் புலிகள் இருந்த காலத்தில் இவர் ஒரு கதையேனும் எழுதவில்லை?..."தேவதைகளின் தீட்டுத்துணி"யில் இருந்து கிருபன் கொண்டு வந்து இணைத்த இவரது எல்லாக் கதைகளும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது...தேவையில்லாத நக்கல்,நையாண்டிகளை தவிர‌ கதையில் வேறோன்றும் இல்லை

//நக்கலும் நளினமும் வெறும் கரவோசைக்காக வெளிப்படுவது போன்ற ஒரு முதிர்ச்சியின்மையுமே எனக்குத் தெரிகிறது.இது அலுப்பேற்றுகிறது.

2) மெத்தச் சிரமப்பட்டு கர்ணன் சோபா சக்தி போல் எழுத வெளிக்கிடுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இது ஒரு கதையில் மட்டுமன்றி கதைதோறும் வெளிப்படுவது அருவருப்பேற்படுத்துகிறது. ஒருவர் வேறொருவரைப் போல் எழுத முயல்வது கொப்பி பண்ணப்படுபவரிற்கு வேண்டுமானால் ஒருவேளை பெருமையாக இருக்கலாம் ஆனால் கொப்பியடிப்பவர் கொப்பியடிப்பவராகவே இருந்துவிடுகிறார்//

இன்னுமொருவன் கர்ணனின் கதைகள் பற்றிய உங்கள் பார்வையே எனக்கும் இருக்கிறது.வெறும் நக்கல் கதைகள் ஒரு பரிமாணமுடைய பகிடிக் கதைகள் மட்டுமே.கர்ணனிடம் சமூகம் அரசியல் அதன் ஓட்டம் பற்றிய ஆளமான அறிவு இல்லை போராட்டம் பற்றிய அவரது அறிவு என்பது அவர் தூக்கிய துப்பாக்கிகள் வரயே இருக்கிறது.அவர் மீது விமரிசனங்கள் முக நூலில் வைக்கப்பட்ட போது அவர் வைத்த பதில் துப்பாக்கி தூக்கியவன் நான் நீங்கள் தூக்காதவர்கள் அதனால் நான் சொல்வது தான் சரி என்பது.அரசியல், இலக்கிய முதிர்ச்சி இன்மை தெளிவாகத் தெரிகிறது.

சோபாவின் அரசியலையே தற்போது அகிலனும், கர்ணனும் செய்கிறார்கள்.

//நக்கலும் நளினமும் வெறும் கரவோசைக்காக வெளிப்படுவது போன்ற ஒரு முதிர்ச்சியின்மையுமே எனக்குத் தெரிகிறது.இது அலுப்பேற்றுகிறது.

2) மெத்தச் சிரமப்பட்டு கர்ணன் சோபா சக்தி போல் எழுத வெளிக்கிடுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இது ஒரு கதையில் மட்டுமன்றி கதைதோறும் வெளிப்படுவது அருவருப்பேற்படுத்துகிறது. ஒருவர் வேறொருவரைப் போல் எழுத முயல்வது கொப்பி பண்ணப்படுபவரிற்கு வேண்டுமானால் ஒருவேளை பெருமையாக இருக்கலாம் ஆனால் கொப்பியடிப்பவர் கொப்பியடிப்பவராகவே இருந்துவிடுகிறார்//

இன்னுமொருவன் கர்ணனின் கதைகள் பற்றிய உங்கள் பார்வையே எனக்கும் இருக்கிறது.வெறும் நக்கல் கதைகள் ஒரு பரிமாணமுடைய பகிடிக் கதைகள் மட்டுமே.கர்ணனிடம் சமூகம் அரசியல் அதன் ஓட்டம் பற்றிய ஆளமான அறிவு இல்லை போராட்டம் பற்றிய அவரது அறிவு என்பது அவர் தூக்கிய துப்பாக்கிகள் வரயே இருக்கிறது.அவர் மீது விமரிசனங்கள் முக நூலில் வைக்கப்பட்ட போது அவர் வைத்த பதில் துப்பாக்கி தூக்கியவன் நான் நீங்கள் தூக்காதவர்கள் அதனால் நான் சொல்வது தான் சரி என்பது.அரசியல், இலக்கிய முதிர்ச்சி இன்மை தெளிவாகத் தெரிகிறது.

சோபாவின் அரசியலையே தற்போது அகிலனும், கர்ணனும் செய்கிறார்கள்.

வெளியில் இருந்தவர்களுக்கும் உள்ளே இருந்தவர்களுக்குமான வித்தியாசம் தான் அது.வலி பட்டவனுக்குத்தான் தெரியும் பார்த்தவனுக்கல்ல.

ஒரு ஊர்வலத்திற்கு போய்விட்டு டிம் கோட்டனுடன் வீடு திரும்பி தாங்களும் போராட்டம் நடாதினாங்கள் தானே என்றுதான் பலர் அங்கலாய்கினம்.

வலி பட்டவன் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.சோத்துப் பார்சல் வீரர்களுக்கு இவ்வளவு நடந்த பின்னும் இன்னும் வெறி அடங்கவில்லை.உக்களை எல்லாம் எவனும் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.இலக்கியம் படைப்பவன் ஆயுதம் ஏந்தி இருக்க வேண்டும், ஆயுதம் ஏந்தியவன் உண்மை எழுதுவான் எண்டால் கருணா டக்கிளசு முதல் வன் புணர்வு செய்து படு கொலை செய்தவங்கள் மட்டும் தான் கதை எழுத முடியும்.அவர்களைப் போன்றவர்கள் தானே நீங்களும்.கப்பியில் ஏற்றி மாலைதீவில் முடித்தீர்களே , அதெல்லாம் வேறு யாரோ செய்தான் என்பீர்கள், ஆனால் நாங்கள் மட்டும் எவன் எவனோ செய்ததற்க்கு உரிமை கோர வேண்டும்.உக்கள் சிறுமையினத்துக்கு ஒரு அளவே கிடையாதா? நீங்கள் உங்கள் வாழ் நாளில் திருந்தப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

நாட்டைவிட்டு ஓடிய வீராதிவீரர்களுக்கு இடைக்கிடை நாட்டுநினைப்பு வருவது நல்லவிடயம் தான்.டக்கிலசோ,கருணாவோ,மாத்தையாவோ,மாணிக்கமோ உங்களைவிட எவ்வளவோ மேல்,எந்த நிமிடமும் உயிர் போகலாம் எனும் சுழலில் தான் இருந்தார்கள்,அந்த ஒன்றுக்கு பயந்துதான் நீங்கள் நாட்டைவிட்டு ஓடினீர்கள்.

அர்யுன்,

இரு முன்னாள் போராளிகளை ஏடுத்துக்கொள்ளுவோம். இருவரும் தாம் முந்நாள் போராளிகள் என்பதை மற்றையவர்களைக்காட்டிலும் தமக்கிருக்கும் அனுகூலமாகக் கருதகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் எமக்குச் சாதமான கருத்துக்களைத் தான் முன்னாள் போராளி என்ற யோக்கியதையில் பேசுகிறார். மற்றறையவர் எமக்குப் பாதகமான கருத்துக்களை அதே முன்னாள் போராளி என்ற யோக்கியதையில் பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, இந்தக் கருத்துக்களைக் கேட்கும் நாங்கள் எமக்கு ஆதரவான கருத்துக்களைப் பேசுபவரிற்கு மட்டும் முன்னாள் போராளி என்ற யோக்கியதையினை அங்கீகரித்து, மற்றயைவரை விமர்சிப்பது மட்டுமன்றி அவர் இருந்ததால் அவர் இருந்த இயக்கமும் முட்டாள் என்று முத்திரை குத்துவோமேயானால் அந்த விவாதம் நியாமானதாக இருக்க முடியுமா? நாங்கள் முன்னாள் போராளிக்குக் கொடுக்கும் அங்கீகாரம் எப்பிடியானதாக இருக்கின்றது? முன்னாள் போராளி என்பதை உண்மையாக இதய சுத்தியான அங்கீகாரமாக எப்போதும் எல்லோரிற்கும் கொடுக்கிறோம் என்பீர்களா?

முந்நாள் போராளி என்பது எந்த அடிப்படையில் ஒரு அந்தஸ்த்தாகப் பார்க்கப்படுகின்றது என்றால், தம்மை ஓறுத்து தனது மக்களின் நலன்களிற்காகத் தனது வாழ்வினை அர்ப்பணித்த ஒருவரே போராளி என்ற அடிப்படையில் தான் மேற்படி அந்தஸ்த்து வளங்கப்படுகின்றது. அதாவது எம்மைக் காட்டிலும் நாம் வக்காலத்து வாங்குகின்ற மக்களின் நலனிற்காக அதிகம் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டவர்கள் என்பது அந்த அங்கீகாரத்தின் அடிப்படை. ஆயுதம் ஏந்தியவன் என்று கூறும் போது, மக்களின் நலன்களிற்காகத் தனது உயிரை விடத் தயாராக இருந்தவன் என்பது அங்கு சொல்லாமல் புரிந்து கொள்ளப்படுகின்றது. அதற்காக, முன்னாள் போராளி ஒருவர் பின்னாளில் தான் போராடிய அதே மக்களையே எழ்ழி நகையாடி அனைத்தையும் நக்கல் பண்ணிக் கொண்டிருப்பாரேயானால், அவரது நக்கலின் அடிப்படை என்ன என்பதைப் பார்ப்பது பொதுசனம் எங்களின் உரிமை. ஏனெனில் இது மத்தியகுழு கூட்டத்தில் நடைபெறும் ஒரு கருத்துப் பரிமாற்றம் அல்ல. பொது மேடையில் பொதுசனம் எங்களிற்காக கதை எழுதிவிட்டு எங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் ஒரு எழுத்தாழன் பற்றியது. மேற்படி எழுத்தாழனின் முடிவற்ற நக்கல்கள் என்ன அடிப்படையில் நிகழ்கிறது என்று பார்ப்பதற்கு பொதுசனமான எங்களிற்கு எந்த அந்தஸ்த்தும் அவிசயமில்லை. ஏன் காசு கூட குடுகுக்காது நீங்கள் சொல்வது போல கூட்டத்திற்குப் போட்டுக் கோப்பியோடு வராதவர் கூட இதைப் பற்றிப் பேசலாம். ஏனெனில் இது பொது வெளியில் நாங்கள் நேசிக்கின்ற எங்கள் மக்கள் மீது நிகழுகின்ற எழ்ழல்கள் பற்றி நாங்கள் பேசுவது. இன்னமும் சொல்வதானால் இத நாங்கள் நேசிக்கின்ற மக்களைப் பற்றியது என்பது மட்டுமன்றி எங்களையும் பற்றியது.

அதற்காக ஒரு போராளிகாக இருந்தவன் தான் சில கொள்கைகளை சத்தியப்பிரமாணம் எடுத்து ஆயுதம் ஏந்தினான் என்பதற்காக, வாழ்நாளில் எப்போதுமே மேற்படி கொள்கைகளை விமர்சிக்கக்கூடாது என்று கூறவரவில்லை. நிச்சயமாக ஒரு போராளியிடம் பொதுசனத்திடம் இல்லாத நேரரடி அனுபவங்கள் நிறைந்து கிடக்கும். தரவுகள் அதிகம் இருக்கும். நாம் பார்க்கத் தவறுகின்ற கோணங்களைச் சுட்டிக்காட்டக் கூடிய பட்டறிவு இருக்கும். இவை சார்ந்து ஆளமான நேர்த்தியான விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டியனவே.

ஆனால் நான் ஆயுதம் ஏந்தினேன் என்பதனை மட்டும் எனது ஆயுட்கால அந்தஸ்த்தாகத் கருதி, நான் என்ன நக்கலும் பண்ணுவேன், என்னவும் எழுதிவேன் எனது மக்களின் பல்லைப் பிடித்துப்பார்த்து மாட்டை ஒப்ப அவர்களின் வயது கூறிக் கெக்கட்டம்போட்டுச் சிரிப்பன் ஆனானல் நான் முன்னாள் போரரி என்பதனால் பொதுசனம் கைகட்டி வாய்பொத்தி கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

மேலும், ஆயுதம் ஏந்திய போராளி என்பது மக்களால் எவ்வளவிற்கெவ்வளவு உயர்வான அந்தஸ்த்தாகப் பார்க்கப்படுகிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு போராளி அந்த அந்தஸ்த்தை ஒரு பொறுப்பாகக் கருதவேண்டும். அவ்வாறு கருதிய போராளிகள் எப்போதும் மக்கள் மனங்களில் நிற்கிறார்க்ள. இது போராளிக்கு மட்டுமல்ல வைத்தியர், ஆசிரியயர், எழுத்தாளர் என எந்தத் துறைக்கும் பொருந்தும். ஒரு துறைசார் வல்லுனிரின் மீது மக்கள் எவ்வளவிற்கு எவ்வளவு நம்பிக்கை கொள்கிறார்களோ அவ்வளவிற்கு அவ்வளவு அவ்வலுனரின் பொறுப்பு அதிகமாகும். ஆனால் துரதிஸ்ரவசமாக கர்ணன் போராளி என்ற பொறுப்பையோ எழுத்தாளன் என்ற பொறுப்பையோ மண்டைக்கு எடுப்பதாககத் தெரியவில்லை.

இறுதியாக, கர்ணனின் நிலையில் அவர் எத்தகைய வெறுமையினை உணர்வார் எத்தனை மன அங்கலாப்ப்புக்களிற்கும் உழைச்சல்களிற்கும் உட்படுவார் எத்தகைய ஆத்திரங்கள் அவரிற்குள் எழும் என்பதை நன்றாகப் புரிந்து கொள்முடிகிறது. அந்நிலை சார்ந்து எமது கையாலாகாத் தனமும் இரக்கமும் இன்னும் பல உணர்வுகளும் எங்கள் உள்ளும் உணரப்படுகிறது. அதற்காக, அந்த வெறுமையினை ஒரு பிறழ்வாக எம்மக்களையும் எங்களையும் சதா சர்வகாலமும் எழ்ழிநகையாடித் தான் எதிர்கொள்வேன் என்றால்,அப்போது எதிர்வினைகளும் எதிர்பார்க்கப்படவேண்டியனவே.

நாராதர், முதற் கேள்வி , "நீங்கள் கதையை முழுமையாக வாசித்தீர்களா?"

இரண்டாவது, வாசித்தால் "தேவதைகளின் தீட்டுத்துணி" வாசித்தீர்களா?"

நான் கிட்டத்தட்ட 30௦ வருடங்களாக வாசிக்கிறேன். வாசிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் வகையறாக்களை ஒதுக்கத் தொடங்கிவிட்டேன். என்னால் நல்ல கதைகளை வடிகட்ட முடியும்.

கர்ணனின் படைப்புக்கள் வெறும் கைத்தட்டலுக்காக எழுதப்பட்ட துணுக்குத் தோரணங்கள் அல்ல. உண்மை: அவர் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ஷோ.சக்தியின் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டும். அனால், கர்ணன் ஈழத் தமிழருக்குக் கிடைத்த அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கியமானவர்.

கதை தானே அறிவிலி. எழுதிவிட்டுப் போகட்டும். ஒழுங்கானவர்கள் இயக்கமென்றால் என்ன, இயக்கம் இல்லாவிட்டலென்ன ஒழுங்காக தான் இருப்பார்கள். அதேவேளை - சிலர் - வேறு விதம் தான்.

ஒருசிலர் - சினிமா கெட்டது என்று சொல்லி, சினிமாவைப்பற்றி எழுதியே வாழ்க்கை ஓட்டுவார்கள். அதே போல் தான் இதுவும். யோ.கர்ணனும் அதே ரகம் தான் போலும். அவரது சில கதைகளை யாழில் கண்ட போது, ஏன் இப்படியான கேவலமான தலைப்பை வைத்துள்ளார் என்று நினைத்ததுண்டு. (உதாரணம் - தேவதைகளின் ...)

சரி Eas..அண்ணா .... நீங்க சொல்றதுக்காக ... அமைதியா இருக்கேன்... இல்லைன்னா......... நடக்குறது என்னன்னு ... தெரிஞ்சா ஊரே சிரிக்கும்...!

(நடக்குறது வேற என்ன ..திரும்பி பார்க்காம நானு ஓடுறதுதான்)

நாராதர், முதற் கேள்வி , "நீங்கள் கதையை முழுமையாக வாசித்தீர்களா?"

இரண்டாவது, வாசித்தால் "தேவதைகளின் தீட்டுத்துணி" வாசித்தீர்களா?"

நான் கிட்டத்தட்ட 30௦ வருடங்களாக வாசிக்கிறேன். வாசிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் வகையறாக்களை ஒதுக்கத் தொடங்கிவிட்டேன். என்னால் நல்ல கதைகளை வடிகட்ட முடியும்.

கர்ணனின் படைப்புக்கள் வெறும் கைத்தட்டலுக்காக எழுதப்பட்ட துணுக்குத் தோரணங்கள் அல்ல. உண்மை: அவர் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ஷோ.சக்தியின் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டும். அனால், கர்ணன் ஈழத் தமிழருக்குக் கிடைத்த அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கியமானவர்.

கதையை நான் முழுமையாகப் படித்தேன்.தேவதைகளின் தீட்டுத் துணி நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்காக முழுமையாக வாசித்தேன், விமரிசனம் எழுதக் கேட்டார் நண்பர் பேசாமல் விட்டு விட்டேன்.இன்னுமொருவனின் கருத்தே எனது கருத்தாகவும் இருக்கிறது.கர்ணன் சமரச அரசியல் சுய நலத்திற்காகவும் சோபாசக்தியின் பின் புலத்தில் நின்று இத் தகைய அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தரும் சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக உண்மைச் சம்பவங்களை புனைவுகளினூடாக , திருபு படுத்தித் தருகிறார்.அவரிடம் நல்ல மக்கள் இலக்கியத்தைப் படைப்பதற்கான ஆளுமையோ முதிர்ச்சியோ இல்லை.புலி எதிர்ப்பு சக்திகளின் இன்னுமொரு பிரச்சாரச் செயலாளராக வருவதற்கான தகுதியே அவருக்கு இருக்கிறது.மற்றைய வர்களின் குரல்கள் மெல்ல மெல்ல இப்போது தான் வெளிவரத் தொடங்கி உள்ளது.உண்மையான போராளிகள் இன்னும் சிறையினுள்.உண்மை மெல்ல மெல்ல வெளியால் வரும்.

இந்தக் கதை சம்பந்தமாக யோகர்ணனுடன் ஆதி ஆதித்தன் முகப்புப் புத்தகத்தில் நிகழ்த்திய உரையாடல்.

// கடைசி நீங்கள் இப்படிப்பட்ட கட்டுரைகளாவது எழுதலாம். புனைவுகளை கலந்து கதைகள் என்ற பெயரில் வலிகளில் வேலைப் பாய்ச்சி கொண்டிருக்கிறீர்கள் கர்ணன். சமுதாயத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதை கொஞ்சமாவது எழுதுங்கள். விசுவமடுவில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட ராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டும் அவர்களை அரசியல் விடுவித்தது குறித்து பல இடங்களில் பதிவு நான் செய்திருக்கிறேன். இப்படியான சம்பவங்களை தொடர்ந்து எல்லோருமாய் சேர்ந்து கத்தி குரல் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லோருமாய் சேர்ந்து குரல்கொடுத்தால் தான் அதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல முடியும். கிறீஸ் மனிதர்கள் என்ற பின்னணியில் ராணுவம் இல்லை என்று நீங்கள் சொன்னீர்கள், நாங்கள் எல்லோரும் ராணுவத்தின் அடக்குமுறைவடிவம் தான் கிறிஸ் மனிதர்கள் என்றோம். மக்களின் ஒட்டு மொத்த குரல் தான் கிறிஸ் மனிதர்கள் குறித்த செய்தியை சர்வதேசம் வரை கொண்டு சென்றது. ..

5 hours ago · LikeUnlike· 1 personLoading...


  • 275037_100001893904045_1270422835_q.jpg


    ஆதி ஆதித்யன் வேறுவழியில்லாமல் வன்னிப் பெண்கள் விபச்சாரத்திற்கு தூண்டப்படுகிறார்கள் என்ற உங்கள் நிலைப்பாடு வக்கிரத்தன்மையானது. வன்னியில் இருக்கும் பெண்கள் சிலர் ஏமாற்றப்பட்டனர்.... வற்புறுத்தப்பட்டனர்... அச்சுறுத்தப்பட்டனர்... தாமாக விபச்சாரத்தை தெரிவு செய்த பெண்கள் இல்லை கர்ணன். உங்கள் கதைகளை நியாயப்படுத்துவதற்கு உங்களபாட்டிற்கு காரணங்கள் சொல்லாதீர்கள் தயவுசெய்து//

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.