Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையிலை லண்டன் முத்துமாரியம்மன் கோயிலை இடிக்கத் துடிக்கும் தூதர் அம்சா எண்டொரு செய்தி ஊடகம் ஒன்றிலை வெளியாகி யாழிலும் இணைச்சிருந்தார்கள். ஆனால் அந்தக் கோயில் பற்றிய உண்மை விபரங்கள் கடந்த ஒரு பேப்பரில் வெளியாகியிருந்தது அதனை இங்கு இணைக்கிறேன்.

kovil.png

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய சந்திப்பு இடங்களாக இருப்பதில் கோவில்களும் அடங்குகிறது. உண்மையான அருள் வேண்டிக் கும்பிட, உணவு உண்ண, சனங்களைச் சந்தித்துக் கதைக்க, தேர் தீர்த்தக் கடைகளில் சாமான் வாங்க என பல வசதிகள் கோயில்களில் கிடைக்கிறது. கோயில்களுக்கும் பக்தர்களால் நிதி பெருமளவு வசூலாகிறது.

இலண்டன் கோயில்களில் பல அவற்றின் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படும் நிர்வாகத்தால் பரிபாலனம செய்யப்படுகின்றன. இந்தக் கோவில்களுக்கு தேர்தல்கள் என்று வரும்போது போட்டியிருப்பது வழமை தான். ஆனாலும் இவை பொதுச் சொத்தாக இருப்பது ஒரு ஆறுதல் விடயம்.

சில இலண்டன் கோயில்கள் சொந்தக் கோயில்களாகவும் நடக்கின்றது. தெற்கு இலண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயில் தனியார் நிர்வாகம் தான். இங்கு அருச்சனைச் சீட்டு விற்கப்படுவதில்லை. நல்ல பரிபாலனம். கட்டட நிதி அது இது என்று சீட்டு எழுதி கைநீட்டி காசு வாங்காத கோவில் என்று இதற்கு நல்ல பெயர். ஆனால் டூட்டிங்கில் இருக்கும் அம்மன் கோவில் பற்றிய விமர்சனங்கள் அடிக்கடி வருகிறது.

இது ஒரு தனியார் கோவிலாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்தக் கோயில் Barrowfen Properties என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில், பதினைந்து வருடக் குத்தகைக்குப் பெற்று நடாத்தப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இக்கட்டடத்தை சொந்தமாக வாங்க வாய்ப்பு உள்ளது என்று நிதி வசூலிக்கப்பட்டது. கட்டிடம் வாங்கப்படவும் இல்லை வசூலிக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்ற விளக்கமும் இல்லை. பதினைந்து வருடக் குத்தகை இந்த ஆண்டு முற்பகுதியில் முடியப் போகிறது என்று தெரிந்தும். அடாத்தாக இருக்க முடிவு செய்யப்பட்டது. உரிமையாளரான Barrowfen Properties குத்தகைக் கால முடிவில், இக்கட்டிடத்தை இடித்துவிட்;டு, பல்கலைக்கழக மாணவருக்கான விடுதியும், குறைந்த விலை தங்கு விடுதியும் கட்டுவதற்கு Wandsworth கவுன்சிலுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தார். ஆட்களைத் திரட்டிய கோயில் நிர்வாகத்தினர் இது புராதனக் கட்டம் என்றும், அத்தகைய கட்டிடத்தை இடிக்கக்கூடாது என்ற நியதியைக் காட்டி காணி உரிமையாளரின் விண்ணப்பத்தைக் கவுன்சிலால் நிராகரிக்கச் செய்தனர். குத்தகைக்காலம் முடிந்தும் அடுத்த திட்டம் எதுவுமில்லாமல் அடாத்தாக கட்டடத்தில் இருந்து கொண்டு எழும்ப முடியாது என்று கூறி வழக்காடியது. வழக்கை நிராகரித்த நீதிமன்றம் உடன் எழும்புமாறு தீர்ப்பளித்துள்ளது.

தேசியம் விடுதலை என்ற சொல்லை வரைபடங்களை, தேசியத் தலைவர் படத்தை மாவீரர் நினைவுத் தூபியை வைப்பதும் பிறகு எடுப்பதும் புனிதமான விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயற்பாடு அல்லவா? ஈழவிடுதலை என்ற சொல்லை வியாபாரமாக்கி பயன்படுத்தலாமா?

இந்நிலையில், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதனால், சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சா முயற்சி எடுத்து கட்டிடத்தை இடிக்க முயல்வதாக, கோவில் நிர்வாகம் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள சில பரபரப்பு ஊடகங்கள் மூலம் பரப்பி தமிழ மக்களை உசுப்பேத்தும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“பிரித்தானியாவில் சைவத்திருத்தலம் அழிக்கப்படும் அபாயம் விரைந்து உதவுங்கள்” என்ற கோரிக்கையுடனான மின்னஞ்சல்கள் மேற்படி ஆலய நிர்வாகி நிமலன் சீவரத்தினம் என்பவரால் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னொருபுறத்தில் 2.2 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான காணி ஒன்றினை வாங்குவதற்கான முயற்சிகளும், அதற்கான நிதி சேகரிப்பும் நடைபெறுவதாக அறியக் கிடைக்கிறது.

இந்நிலையில், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதனால், சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சா முயற்சி எடுத்து கட்டிடத்தை இடிக்க முயல்வதாக, கோவில் நிர்வாகம் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள சில பரபரப்பு ஊடகங்கள் மூலம் பரப்பி தமிழ மக்களை உசுப்பேத்தும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கோவில் நிர்வாகம் என்பது ஐந்து பேர் கொண்ட அறக்கட்டளையாக உள்ளது. இதில் இக்கோவிலை ஆரம்பித்த சீவரத்தினம் அவர்கள் தான் எல்லாமாக இருக்கிறார். பக்தர்கள் வரலாம் கும்பிடலாம், தாராளமாக நிதி கொடுக்கலாம், சீட்டுப் பெற்று அருச்சனை அபிஷேகம் செய்யலாம,; கேள்வி மட்டும் கேட்கக்கூடாது. கேட்டால் கோவிலுக்கு வர தடையுத்தரவு பிறப்பிக்கப்படும். இக்கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுப்பதில் கட்டப்படும் முற்பணம்; திருப்பிக்கொடுக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் பல முன்பும் சொல்லப்பட்டது. ஆலய நிரந்தரத் தலைவர் சீவரத்தினம் ஐயா, அவரது மூத்த மகன் நிமலன் இப்போது நிரந்தரத் தலைவராகி உள்ளார். செயலாளராக அவரது இரண்டாம் மனைவியின் மகன் இருக்கிறார். நிர்வாகசபையில் இவரால் விசா எடுத்துக் கொடுக்கப்பட்ட ஒரு இளம் அர்ச்சகர், தேர் செய்துகொடுத்த சிற்பாசிரியர் என்று ஆக நாலு பேர் உள்ளனர். இந்த நால்வரும் ஐயா சொல்லுகின்ற இடங்களில் கையெழுத்துப் போடுகின்ற பொம்மைகளாகச் செயற்படுகிறார்கள்.

நிரந்தரத் தலைவராக இருந்த நாகேந்திரம் சீவரத்தினம் அவர்களை பிரித்தானிய அறக்கட்டளை ஆணைக்குழு, பதவியிலிருந்து விலக்கச் செய்தமையால் மேற்படி நால்வரைப் போட்டு நிர்வாகத்தை இயக்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பக்தர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்து, நிர்வாகமாக்கி நடத்தும்படி அறிவுரை சொன்ன அறங்காவலர்கள் விலத்தப்பட்டார்கள். அல்லது தாமாகவே விலகிக்கொண்டார்கள். திரு. கமல் சிங்கம், திரு. குமார் என்பவர்கள் விலத்தப்பட்டவர். கனவான் சிவாஜி மருத்துவர் நடேசலிங்கம் என்போர் ஒதுங்கி விலகிக்கொண்டார்கள்.

இப்போது பொதுமக்கள் பல கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளில் என்னவென்றால்,

  1. 15 வருடங்களாக ஸ்ரோன்லி அம்மன் கோவில் போன்ற பிற கோவில்கள் போல் நல்ல வருமானம் இருந்தும் ஏன் சொந்தமாக காணி வாங்கி கட்டடம் எழும்ப முடியாமல் போனது?
  2. தன் மைத்துனனின் ஈழபதீஸ்வரர் கோவிலை பொறுப்பெடுத்ததை நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, எதிர்த்து வழக்காடி கோவில்ப் பணத்தை ஏன் செலவழிப்பான்? அந்த வழக்கிலும தோற்றுஎஏன் மொக்கையீனப்படுவான்?
  3. ஒட்டியுள்ள உறவுகளை கோயில் உதவி நிதி என்று வழங்கி ஏன் செலவு செய்வான்? யார் யாருக்கு வீடு வாங்கப்பட்டது? சேமிப்பு நிதியில் காசு போடப்பட்டமை தொடர்பாக கணக்கு வெளிப்படுத்தப்பட்டதா? கோயில் பொறுப்பிலிருந்து திரு.சீவரத்தினம் விலக வேண்டும் என்று சொல்லப்பட்ட தீர்ப்புக்கு எதிராக வழக்காட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோவில்ப் பணம் செலவழிக்கும்படி அம்மன்தான் பணித்தாரா?
  4. கோவில் வாங்குவதற்கென முன்பு சேகரிக்கப்பட்ட பணம் எங்கே? குத்தகை முடிவில் அடாத்தாக இருந்து வழக்காடும்படி தெய்வம் பணித்ததா? கீழே உணவு விடுதிக் கடை அமைக்கப்பட்ட போது அதனைத் தடுக்க வழக்காடி ஏன் கோயில்ப்பணத்தை ஆயிரக்கணக்கில் செலவு செய்வான்? இந்த வழக்கும் தோல்வி கண்டது தானே?
  5. தேசியம் விடுதலை என்ற சொல்லை வரைபடங்களை, தேசியத் தலைவர் படத்தை மாவீரர் நினைவுத் தூபியை வைப்பதும் பிறகு எடுப்பதும் புனிதமான விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயற்பாடு அல்லவா? ஈழவிடுதலை என்ற சொல்லை வியாபாரமாக்கி பயன்படுத்தலாமா?

ஆலயத்தை பொது நிர்வாகமாக ஆக்காமல் இன்றும் குடும்பச் சொத்தாக வைத்துக் கொண்டு மக்களிடம் ஏன் நிதி சேகரிக்கிறீர்கள்? இவை பொது மக்களிடமிருந்து வரும் கேள்விகள்.

கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடதென்ற பராசக்தி திரைப்பட வசனம் அறுபதாண்டுகளுக்குப் பிறகும் பொருத்தமாகத்தான் தெரிகிறது.

இப்படியான விடயங்களில் உண்மையை விட ஊகங்களும், வதந்திகளும் நீண்ட தூரம் பறக்கும்.

கோயில் என்பது பொதுவானதாகவும் மக்களுக்கானதாகவும் இருக்கவேண்டும், எங்கும். இந்த விடயத்தில் பக்தர்கள் தான் விழிப்பாக இருக்கவேண்டும்.

மக்களை இவ்வாறு ஏமாற்றி பணம் எடுத்தி காணியை வேண்டி கோயில் கட்டும்பொழுது அந்தந்த நாட்டின் வரித்திணைக்களம் கணக்கை கேட்கும் என எண்ணுகிறேன். அப்பொழுது எங்கிருந்து வந்தது? என்பதை பற்றுச்சீட்டுக்கள் இல்லாமல் காட்டமுடியுமா? என்ற கேள்வி உள்ளது. தனிப்பட்ட வருமானவரிகளையும் அவர்கள் 'ஓடிட்' செய்யும் சந்தர்ப்பம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள் வைத்து லண்டனில் பலர் தங்களின் வயிற்றை வழக்கின்றனர் இதற்கு சாமரம் வீச பல அல்லக்கைகள் தமிழா எங்கு செல்கின்றாய் .........................?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோயில் உரிமையாளரால்தான் சும்மாயிருந்:த ஜெயதேவன் துரோகியாகி புலிகளை அழிப்பேன் எண்டு சபமெடுத்து வேலை செய்யத் தொடங்கியவன். ஜெயதேவனை துரோகியாக்க தமிழ் இணையத்தளங்கள் பெரும் பக்கவாத்தியம் வாசித்தார்கள். அதன் பெரும் பொறுப்பு அன்றை புலிகளின் ஊடக பேச்சாளரும் இன்றைய அரசாங்க பேச்சாளருமான தயா வாத்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரில் ஒருதொகையினர் மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தாலும்

இன்னும் 15 ம் நூற்றாண்டிலேயே வாழ்கின்றார்கள்.

அனேகமான கோவில்கள் இப்போது வியாபார நிலையங்கள்

சாத்திரியார், நீங்க உண்மையில் தைரியமான எழுத்தாளன் தான். (எனக்கு முன்பு உங்கள் மேல் சின்ன கறள் இருந்தது தான் இப்போ இல்லை...! :D:lol: :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியண்ணா பகிர்வுக்கு,

லண்டன் முருகன் கோவில் நிர்வாகம் எப்படி?

முள்ளிவாய்க்காலின் பின் கடவுள்???????

கோவிலில் போடுவதை ஏழையின் வயிறு நிரம்ப போட்டால் கோடி புண்ணியம்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், நீங்க உண்மையில் தைரியமான எழுத்தாளன் தான். (எனக்கு முன்பு உங்கள் மேல் சின்ன கறள் இருந்தது தான் இப்போ இல்லை...! :D:lol: :lol: )

அவலம் நாடகத்தாலை எண்டு நினைக்கிறன் :( .கறள் முழுவதுமாய் சுரண்டியாச்சா?? சுரண்டினால் அந்த இடத்தில் கொஞ்சம் எண்ணெய் பூசிவிடுங்கோ அப்பதான் திரும்பவும் கறள் பிடிக்காது.(பகிடிக்குத்தான் திரும்ப கறள் பிடிக்கக்கூடாது) :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரில் ஒருதொகையினர் மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தாலும்

இன்னும் 15 ம் நூற்றாண்டிலேயே வாழ்கின்றார்கள்.

அனேகமான கோவில்கள் இப்போது வியாபார நிலையங்கள்

அனேகமானதில்லை எல்லா கோயிலுமே

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள சில பரபரப்பு ஊடகங்கள் மூலம் பரப்பி தமிழ மக்களை உசுப்பேத்தும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

11.jpg 25.09.11 மற்றவை

லங்கையில் தமிழர்களின் வாழ்க்கையை தரைமட்டமாக்கிவிட்ட இலங்கை அரசு, லண்டனில் அவர்களுக்கு உள்ள முத்துமாரியம்மன் கோயிலையும்கூட விட்டுவைக்கவி ல்லை. இங்கு தமிழர்கள் ஒன்று கூடுவதால் அந்தக் கோயிலையும் தரைமட்டமாக்க முயற்சி செய்வதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.

கடந்த 1980-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் பலர் வெளியேறி பல நாடுகளில் குடியேறினார்கள். அப்போது சீவரத்தினம் என்பவர் தனது குடும்ப த்தோடு லண்டனில் குடியேறினார். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்.

ஆன்மிகத்திலும் இவருக்கு ஈடுபாடு அதிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் லண்டன் அப்பர் டூட்டிங் சாலையில் தமிழர்களுக்காக முத்துமாரியம்மன் கோயிலைக் கட் டினார். இந்தக் கோயிலைக் கட்ட அங்குள்ள தமிழர்களும் ஒத்துழைப்புத் கொடுத்தனர். சில ஆண்டுகளில் முத்துமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகத் திகழ்ந்தது.

இந்தக் கோயில் மூலம் வரும் வருவாயை சமூகப் பணிகளுக்காக செலவிட்டார் சீவரத்தினம். நாளடைவில் இந்தக் கோயில் உலகத் தமிழர்கள் அனைவரும் சந்திக்கும் பகுதியாக மாறியது. இலங்கைத் தமிழர்கள் பிரச்னையின்போது உலகத்தில் உள்ள தமிழர்கள் இந்த இடத்தில் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.

தமிழீழம் தொடர்பான விஷயங்களுக்கு, இந்தக் கோயிலிலிருந்து வரும் நிதி பயன்படுத்தப்பட்டது. இலங்கைப் போர் தீவிரம் அடைந்தபோது இங்கு பல தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி முக்கிய முடிவுகள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இங்கே நடக்கும் நிகழ்வுகளை மோப்பம் பிடித்த இலங்கை அரசு அங்கே இருக்கும் முத்துமாரியம்மன் கோயிலை அழிக்கத் திட்டம்11a.jpg தீட்டியது. அதன்படி தமிழகத்தின் து ணைத் தூதரக அதிகாரியாக இருந்த அம்சாவிற்கு பதவி உயர்வு கொடுத்து லண்டன் தூதராக அனுப்பி வைத்திருக்கிறது.

லண்டனில் இருக்கும் முத்துமாரியம்மன் கோயிலை அகற்றுவதே அம்சாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பணி. இந்தப் பணியை விரைந்து முடிக்குமாறு அவரை இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது. லண்டன் சென்று பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே அம்சாவும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

அங்குள்ள பத்திரிகையாளர்களைக் கையில் போட்டுக்கொண்டு, அந்தக் கோயிலில் சட்டவிரோதச் செயல் நடப்பதாக செய்தியைப் பரப்பினார். சில பத்திரிகையாளர்கள், ‘ முத்துமாரியம்மன் கோயிலால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, நெரிசல் ஏற்படுகிறது’ என்று தொடர்ந்து எழுதி வந்தனர்.

இந்தக் கோயிலை அகற்றவேண்டும் என்று பல பத்திரிகைகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து பத்திரிகைகள் மூலம் தரப்பட்ட ‘பிரஷர்’ காரணமாக ல ண்டன் முத்துமாரியம்மன் கோயிலை அங்கிருந்து அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டனர்.

இந்நிலையில், முத்துமாரியம்மன் கோயில் அகற்றப்படுவதைத் தடுக்க உலகத் தமிழர்களின் ஆதரவை லண்டன் வாழ் தமிழர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்தப் பிரச்னையை தமிழகத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி கையில் எடுத்துப் போராட தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் பேசினோம்.

‘‘வவுனியா, திரிகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் தமிழர்கள் வசிக்கும் பிற

மாவட்டங்களில்போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு முத்து மாரியம்மன் கோயிலிலிருந்து வரக்கூடிய நிதி அவர்களின் மருத்துவ செலவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்காகவும் இந்தக் கோயில் நிர்வாகம் பெரும் தொகையைச் செலவிடுகிறது.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

அதுமட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் இந்தக் கோயில் நிர்வாகம் மிகப்பெரிய கண் மருத்துவமனையைக் கட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது உயிர்நீ த்த மாவீரர்களின் நினைவாக ஆலயத்தினுள் நினைவுத்தூண் அமைத்து வீரர்களுக்குப் பெருமை சேர்த்த ஆலயமாக இந்த திருத்தலம் விளங்குகிறது. இந்த முத்துமாரி யம்மன் கோயில் லண்டன் வாழ் மக்களிடம் மட்டுமில்லாமல் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் மனதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த திருத்தலத்தை அகற்ற சமீபத்தில் பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இந்தக் கோயில் இலங்கைத் தமிழர்களையும், மற்றும் உலகத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும் கலாசாரப் பாலமாக இருக்கிறது. இங்கு தமிழர்கள் ஒன்று கூடுவதை இலங்கை அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இங்கிருந்த அம்சாவை லண்டன் தூதரகத்திற்கு அனுப்பி எப்படியாவது அங்கிருக்கும் முத்துமாரியம்மன் கோயிலை அகற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அவருடைய தூண்டுதலின்படி பிரிட்டிஷ் அரசும் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கியுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்தக் கோயிலை அகற்ற தீவிரம் காட்டி வருகிறார்கள்.

உலக இந்துக்கள் புண்படும் வகையில் லண்டன் முத்துமாரி யம்மன் கோயில் இடிக்கப்பட்டால் தமிழகத்திலுள்ள இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து அந்தக் கோயிலுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கும். லண்டன் முத்துமாரியம்மன் கோயிலைக் காக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார் கண்ணன்.

படங்கள்: ஞானமணி

ப.ரஜினிகாந்த்

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் சந்து, பொந்துகளில் எல்லாம் கோயில் முளைத்துள்ளன. இதெல்லாம் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்" என்ற முதுமொழியை நினைவில்கொண்டு உருவாக்கப்பட்டவையா?

இல்லை. கோயில் சமயத்தை வளர்த்து, மக்களை நல்வழிப்படுத்த உருவானவை என்று நம்புபவர்கள் உள்ளவரை கோயில்களை உருவாக்கி உழைப்பவர்களும் இருப்பார்கள்.

அவலம் நாடகத்தாலை எண்டு நினைக்கிறன் :( .கறள் முழுவதுமாய் சுரண்டியாச்சா?? சுரண்டினால் அந்த இடத்தில் கொஞ்சம் எண்ணெய் பூசிவிடுங்கோ அப்பதான் திரும்பவும் கறள் பிடிக்காது.(பகிடிக்குத்தான் திரும்ப கறள் பிடிக்கக்கூடாது) :lol: :lol:

இல்லை இல்லை இனி மீண்டும் வராது கறள், எல்லாம் வயதுக்கோளாறு..! :D:lol: :lol:

[நல்ல நகைச்சுவை உணர்வுள்ள ஆள்]

இலண்டனில் சந்து, பொந்துகளில் எல்லாம் கோயில் முளைத்துள்ளன. இதெல்லாம் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்" என்ற முதுமொழியை நினைவில்கொண்டு உருவாக்கப்பட்டவையா?

இல்லை. கோயில் சமயத்தை வளர்த்து, மக்களை நல்வழிப்படுத்த உருவானவை என்று நம்புபவர்கள் உள்ளவரை கோயில்களை உருவாக்கி உழைப்பவர்களும் இருப்பார்கள்.

முதலாவதாக வீதிக்கு வீதி கோயில்கள் வீதிக்கு வீதி போதைப்பொருட்கள் விற்கப்படும் நாடுகளில் தேவையே. ஆனால் அதில் வரும் இலாபத்தை சமுதாயத்திற்கு நல்ல விதத்தில் பயன்படுத்தவைக்கவேண்டியது நிர்வாக சபையின் (அடியாளர்களின்) கடமை.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ கோயிலும் ஒரு வியாபார பொருளே. எல்லா மதத்திற்கும்

இது பொருந்தும். உலகிலேயே மிகவும் பணக்கார அமைப்பாக முதலிடத்தில் உள்ளது -வத்திகான் தலைமையில் உள்ள மத அமைப்பு.

பலரும் ஆத்மீகம் என்பதற்கு இல்லை வேறு ஏதாவது ஒன்றிற்கு தமது 'பணத்தை' இழக்கின்றார்கள். பலரும் தமது பிள்ளைகள் 'போதைப்பொருட்கள்';'சூதாட்டம்'; எனத்தவறான வழிகளில் சென்று பணத்தை இழந்து அழிந்துபோவதை விட கோயில்கள் பரவாயில்லை என எண்ணுகிறார்கள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துத்தான் எனதும் அகோதா

இதுவரை நான் தனியார் சம்பந்தப்பட்ட கோயில்கள் எதற்கும் பணம் போட்டதில்லை. மக்களே அதை நிர்ணயிக்கவேண்டும். நீங்கள் பணத்தைக்கொண்டுபோய்க்கொட்டிவிட்டு அவர்கள் வசதியாக இருக்கிறார்கள் வாழ்கிறார்கள் என்பது......???

Edited by விசுகு

தனியார் கோயிலோ இல்லையோ அந்த கோயில் போர்க்காலத்தில் தாயக மக்களுக்கு செய்த உதவி அளப்பரியது.. எத்தனையோ ஈழமக்களின் பசிவாழ்வை காப்பாற்றியது.

அதன் தர்மகத்தாவை இப்படியாக உறவுகளுக்கு செய்த உதவியால் தான் புலிக்கு பணம் போகிறது என்டு குற்றம் சாட்டி கோயில் தலைமையில் இருந்து இலன்டன் அரச கண்காணிப்பால் இடை நிறுத்தி வைத்தார்கள்.

இலன்டனில் எத்தனையோ கோயில்கள் உள்ளன ,சொத்துக்கள் கூட உள்ளன. விம்பிள்டென் பிள்ளையார் கோவில் நிறைய சொத்துக்களுடன் இருகின்றார் தாயக மக்களுக்கு உதவி செய்ததாக அறிந்ததே இல்லை.

எல்லா நிறுவனனங்களும் தாயக போரை வியாபார நோக்கில் பயன் படுத்தினார்கள் ஏன் இந்த கட்டுரை பிரசுரித்த ஒரு பேப்பர் கூட விடுதலையை சொல்லிதான் வளர்ந்தார்கள்.

இப்போ சிறிலங்கன் மதுபானத்திற்கு விளம்பரம் போட்டு பேப்பர் நடாத்துகிறார்கள்.

எல்லாரும் அப்படிதான்.

ஆனால் இந்த கோவிலால் பசியாற்றிய மக்களின் நன்றியை மறக்க கூடாது.

அண்மையில் கூட கோயில் போன போது மன்னாரில் கட்டப்படும் முதியோர் இல்ல விபரன விளக்கம் முன் வாசலில் அழகாக விபரமாக எழுதி வைத்துள்ளார்கள்.

சம்ஸ்கிருதம் வளர்க்க போட்டி போடும் கோவில்கள் இருக்கும் போது. தமிழுக்காக விழா எடுக்கும் ஒரு கோவில் இதுவாக தான் இருக்கும், ஆண்டு தோறும் தமிழ் பேச்சு போட்டி, தமிழ் பாரம்பரிய கலை நிகழ்வுகள், கவுரவிப்புகள் எல்லாம் தமிழுக்காக சிறப்பாக செய்தார்கள்

நல்லூர் முருகனும் தனியார் கோவில் தான் அதற்க்காக போர்க்காலத்திலோ அல்லது போரை நடாத்தியவர்களோ ,இப்பவோ என்ன இடித்தா தள்ளி விட்டார்கள்.

கோவில் மதிப்பு, அது செய்யும் தொண்டு நடாத்த படும் விதம் அவை சிறப்பாக இருந்தால் அனைவரும் வர வேற்பார்கள்.

செய்த உதவிகளை மறந்து தூற்றுவது அதை தடுப்பதற்கு வசை பாடுவது , இல்லாமல் செய்வதில் தமிழர்களாகிய நாம் வல்லவர்கள் அதையே இக்கோவிலுக்கும் செய்கிறோம்.

ஈலிங் துர்க்கை அம்மன் ,ரூங்கிங் அம்மன் இந்த கோவில்கள் இரண்டுக்கும் சென்று வழிபடும் போது போடப்படும் பணத்தில் சிறுதுளியாவது கஸ்த்தில் வாடிய எம்மக்களுக்கு உதவியாக கிடைத்ததே என்று நான் மன நிறைவடைகிறேன்

அவர்கள் செய்த உதவிகளின் இதுவரையான மொத்த தொகை அளப்பரியது. விபரங்கள் கோயில் மண்டபங்களில் தொங்கிகின்றன

வாழ்க,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.