Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள் (Video & Photo in)

  • Wednesday, October 5, 2011, 8:46

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1987ம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு இலங்கை – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது.

1987ம் ஆண்டு யூலை 29 ம் நாள் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே இலங்கை அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு அக்டோபர் 3 ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

இலங்கை இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு அக்டோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி இலங்கை பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிரு வேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.

தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.

அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு அக்டோபர் 5 ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண் மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.

அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.

இன்று அங்கு அந்தப் பன்னிரு வேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட இலங்கை அரசின் சதி நடந்தேறி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.

kumarappa-pulenthi.jpgLt-Col-Pulenthiran.jpgLt-Col-Kumarappa.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

வரலாற்றின் கட்டளைக்கு இணங்கி தம்மை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

வீர வணக்கங்கள்...!

இந்த மாவீரர்களுக்கு எனது வணக்கங்கள்.

இவர்களின் துணிகரமான செயல் பற்றி அறிந்தது இன்றும் மனதில் நீங்காத நினைவாக பதிந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

-

அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை.அங்கும் தமிழ்மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையை சொல்லியபடியே இருந்தார்.எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத்தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது.

1983யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்களஅரசு கட்டவிழத்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்;டம் பற்றியும் சிங்களஅரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக்கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார்.அதன்பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார்.

- இன்றைக்கும் யப்பானிய சாமுராய் வீரர்களை பற்றிய படமோ புத்தகமோ எது படித்தாலும் புலேந்திரனின் முகம் மனதுக்குள்வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அப்படியான ஒரு உண்மைவீரன் அவர்.அவரின் கண்களின் ஒளி என்பது விடுதலை வேள்வியை முழுக்க உள்வாங்கியதாக இருக்கும்.

http://www.alaikal.com/news/?p=84379

இதில் தவக்குமார் ரெஜினோல்ட் இருவரும் நான் இடம் பெயர்ந்து இருந்த வெற்றிலைக்கேணி பகுதியைச்சேர்ந்தவர்கள் இருவரையும் எனக்கு நன்கு தெரியும்.

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

Edited by அலைஅரசி

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காகத் தன்னுயிர் ஈந்த இம் மாவீரர்களுக்கு, எனது வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது நரிக் குணத்தை காட்ட வெளிக்கிட்ட ஆரம்ப நிகழ்வில் தமது உயிரை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கு, வீர வணக்கம்.

இந்த மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.