Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேம்பட - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து

தம்பி பு க த தே. உங்கள் எழுத்துகளை பார்த்தால் தமிழின வரலாறு படித்த / தெரிஞ்ச ஆளு போல தெரியலையே . ஏதோ கூட்டதில கோவிந்தா போடற ஆளு மாதிரியில்ல தெரியுது ??? கொஞ்சம் கூர்மையா குறைந்த பட்சம் கடைசி ஐநூறு வருட வரலாறு மட்டுமாவது படிங்க சார் .

சங்ககாலம்.. சங்கமருவிய காலம் அதெல்லாம் நேக்கு தெரியுதுங்கண்ணா...

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply

சரி நாம் நமது விஷயத்திற்கு வருவோம்

இந்திய சுதந்திரதிற்காக முதலில் முழங்கியவன் தமிழன் என்ற பெயர் பெற்று தந்த வீர பாண்டிய கட்டபொம்மன் ஒரு தெலுங்கன்

ஈழத்திற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை ஆதரவு தந்த எம்ஜியார் ஒரு மலையாளி

தனது கணீர் குரலால் தமிழ் பாடல்களை எட்டு திக்கும் பரவ விட்ட இரண்டு திரையுலக ஜாம்பவான்கள் மேல் நிலை அடைய உதவிய பாடகர் டி எம் சௌந்திர ராஜன் ஒரு குஜராத்தி ( குஜராத்தின் வட பாகம் சௌராஷ்டிரா என அழைக்க படும் )

தமிழ் நாட்டு சட்ட சபையில் முதன் முதலில் தமிழில் உரையாற்றி தமிழக சட்ட சபையில் தமிழை கொண்டு வந்தவன் ஒரு தெலுங்கன்

மூட நம்பிக்கையில் மூழ்கிய தமிழகத்தை மீட்டெடுத்து சுய மரியாதை கற்று தந்தவன் ஒரு கன்னடன் ( பெரியார் )

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளில் நாகரீகம் வேண்டும் மற்றும் ஆபாசம் கூடாது எனவும் கள விதி முறைகள் கூறுகிறது . ( இளைப்பாறும் களம் தவிர்த்து )

ஆனால் மேற்கூறிய கருத்துகளை கூர்ந்து கவனியுங்கள் . எப்பேர்பட்ட கீழ்த்தரமான ஆபாசம் உள்ளது என்று ???? இந்த களம் தனியார் நடத்தும் களம் என்பது தெரிந்ததே .கள விதிகள் என்பது சிலருக்கு மட்டுமே வகுக்கப்பட்டு இருக்கிறதா ???????????????????????

நான் ஆட்சியாளர்களை திட்டுகிறேன் சார் ...தனிப்பட்ட தாக்குதல் கிடையாது.. சார் இதெப்படி இருக்கு?

சங்ககாலம்.. சங்கமருவிய காலம் அதெல்லாம் நேக்கு தெரியுதுங்கண்ணா...

ஏதோ எல்லாரும் சேர்ந்து அவாள் பட்டம் கட்டணும்னு முடிவே பண்ணிட்டியளா?????? :( :( :(

சரி நாம் நமது விஷயத்திற்கு வருவோம் - தொடர்ச்சி

முக்கியமா ஒன்னை மறந்தே போயிட்டேன் . ஈழ மக்களுக்காகவே தன அரசியல் வாழ்வை அர்ப்பணித்து இன்று அரசியல் வாழ்வே கேள்விக்குறியாகி ஈழ தமிழர்களுக்காக இன்றும் போராடும் வைகோ ஒரு தெலுங்கன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஒமந்தூர் ராமாசாமி ரெட்டியார்.. ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தவர் எல்லாம் இல்லியா?

தனிமரம் (குறிப்பிட்ட சிலர் அத்தி பூத்தாற்போல) தோப்பாகாது...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இன்னும் நிறைய இருக்கிறார்கள் . நான் கூறுவது உதாரணம் மட்டுமே .

தனி மரம் தோப்பாகாது என்பது சரியே . ஆயிரம் கருவேல மரங்களை விட ஒரு ஆல மரம் மேல் என்பது பெரியோர் வாக்கு

இவ்வளவு பேசுகிறீர்களே . தமிழ் நாட்டில் ஒரு எம்பி சீட்டாவது பிற மாநில மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்களா ??? ஆனால் வட இந்தியாவில் இப்போது ஒரு தமிழ் எம்பி அதுவும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் இருக்கிறார் உங்களுக்கு தெரியுமா ???

இன்னும் பல தமிழர்கள் பிற மாநிலங்களில் முன்னேறி உள்ளனர் . உதாரணமாக சி வி ராமன் . அவருக்கு அங்குள்ள பிற மொழி மக்கள் உதவ வில்லையென்றால் அவரின் முன்னேற்றம் சாத்தியமா ??? அப்துல் கலாம் கூட பிற மாநிலங்களில் இருந்தவர் தான் . பிற மாநில மக்களின் உதவியின்றி அவர்களால் சாதித்து இருக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறைய இருக்கிறார்கள் . நான் கூறுவது உதாரணம் மட்டுமே .

தனி மரம் தோப்பாகாது என்பது சரியே . ஆயிரம் கருவேல மரங்களை விட ஒரு ஆல மரம் மேல் என்பது பெரியோர் வாக்கு

இவ்வளவு பேசுகிறீர்களே . தமிழ் நாட்டில் ஒரு எம்பி சீட்டாவது பிற மாநில மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்களா ??? ஆனால் வட இந்தியாவில் இப்போது ஒரு தமிழ் எம்பி அதுவும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் இருக்கிறார் உங்களுக்கு தெரியுமா ???

இன்னும் பல தமிழர்கள் பிற மாநிலங்களில் முன்னேறி உள்ளனர் . உதாரணமாக சி வி ராமன் . அவருக்கு அங்குள்ள பிற மொழி மக்கள் உதவ வில்லையென்றால் அவரின் முன்னேற்றம் சாத்தியமா ??? அப்துல் கலாம் கூட பிற மாநிலங்களில் இருந்தவர் தான் . பிற மாநில மக்களின் உதவியின்றி அவர்களால் சாதித்து இருக்க முடியாது

ஒக்கலிகா நாயர் கவுடா நாயக்கர் முத்துராஜா எல்லாம் ஏரியா ஏரியாவா இங்க வளைத்து போட்டு டேரா போட்டால் தேர்தலில் நின்றால் . ஜெயிக்கிறான் எல்லாம் அவனுங்க ஓட்டு வாங்கியே... 5 சீட்டு காங்கிரஸ் தேறியதே இந்த கைதடிகளால் தான் உங்களின் இந்த வாதம் அர்த்தமற்றது.

குஜராத்திலும் மராட்டியத்திலும் ஈழ ஆதரவு மனப்பான்மை பல வருடங்களாகவே இருக்கிறது . அதை சரியாக பயன் படுத்தி கொள்ளாதது நம் முட்டாள் தனம் . இவ்வளவு கொஞ்ச நாள் முன்பு மனவாடுகள் கூட போராட்டம் நடத்தினார்கள் . கன்னடர் கூட நடத்தினார்கள் . போர் நடக்கும் போது மும்பையில் நடந்த மனித சங்கிலியில் பாதிக்கும் மேற்பட்டோர் பிற தென் மாநிலத்தோர் இருந்தனர் . அதை நாம் பயன் படித்தி கொள்ள தெரியவில்லை . புலிகள் மீதுள்ள தடை தேவையற்றது அவர்களை நாம் அனுசரிக்க வேண்டும் என எட்டு வருடங்கள் முன்பே ஒரு மராட்டியன் முழங்கினார் . அதை பயன் படுத்திக்க தெரியலை . பேச வந்துட்டார் இங்க . உண்மையான தமிழ் இன பற்று இருந்தால் பிற மொழிகள் கற்று உன் கருத்தை இந்தியா முழுவதும் பரப்ப முயற்சி செய். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும் . அதை விட்டு விட்டு தமிழில் மட்டும் வீரா வசனம் பேசி குண்டு சட்டியில மட்டும் குதிரை ஒட்டுனா எதுவுமே நடக்காது

ஒக்கலிகா நாயர் கவுடா நாயக்கர் முத்துராஜா எல்லாம் ஏரியா ஏரியாவா இங்க வளைத்து போட்டு டேரா போட்டால் தேர்தலில் நின்றால் . ஜெயிக்கிறான் எல்லாம் அவனுங்க ஓட்டு வாங்கியே... 5 சீட்டு காங்கிரஸ் தேறியதே இந்த கைதடிகளால் தான் உங்களின் இந்த வாதம் அர்த்தமற்றது.

திருப்பியும் தப்பு தப்பா பேச வேண்டாம் . அந்த ஐந்து தேறியதற்கு காரணம் மோசடி மற்றும் உள்குத்தே தவிர கைத்தடிகள் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வழி காட்ட வந்துட்டாருப்பா .. பால்தாக்கரே சொன்னாரு.. பரம்கீர் சிங்கு சொன்னாரு. எவனும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கூட அவனுங்க ஸ்டெட்டில் கொண்டுவரல..

இந்தியா ஜனநாயக நாடு .

சினிமா பார்க்கவும் அரிசி வாங்கவும் லைன்ல நிக்கற நீங்கள் நியாயம் மட்டும் உடனே வரணும்னு எப்படி எதிர்பார்க்கலாம் ????? ( நன்றி சாமி திரைப்படம் )

உங்கள் பாஷையில சொன்னா திருமணம் முடிந்ததும் குழந்தை பிறக்காது . கொஞ்ச நாள் வெயிட் பண்ணனும் . அதுபோல தான் இந்தியாவில நியாயம் வேணும்னா வெய்ட் பண்ணி தான் ஆகணும் . நாங்க இருநூறு வருடம் வெய்ட் பண்ணி தான் விடுதலையே வாங்குனோம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பியும் தப்பு தப்பா பேச வேண்டாம் . அந்த ஐந்து தேறியதற்கு காரணம் மோசடி மற்றும் உள்குத்தே தவிர கைத்தடிகள் அல்ல

உள்குத்தா ? இது ரொம்ப பெரிய குத்து.. பேராயகட்சியில் இல்லாத உள்குத்து வேற எந்த கட்சியிலும் இல்லை அவர்கள் ஜெயிக்கிறார்கள் என்றால் கேரள கைத்தடிகளே முக்கிய காரணம்

இந்தியா ஜனநாயக நாடு .

சினிமா பார்க்கவும் அரிசி வாங்கவும் லைன்ல நிக்கற நீங்கள் நியாயம் மட்டும் உடனே வரணும்னு எப்படி எதிர்பார்க்கலாம் ????? ( நன்றி சாமி திரைப்படம் )

உங்கள் பாஷையில சொன்னா திருமணம் முடிந்ததும் குழந்தை பிறக்காது . கொஞ்ச நாள் வெயிட் பண்ணனும் . அதுபோல தான் இந்தியாவில நியாயம் வேணும்னா வெய்ட் பண்ணி தான் ஆகணும் . நாங்க இருநூறு வருடம் வெய்ட் பண்ணி தான் விடுதலையே வாங்குனோம்.

நேரு vs எட்வினா மவுண்ட் பேட்டன்

<h3 class="r"></h3>

இங்க உங்க தமிழின தலைவரே ஒன்னும் செய்யல . அடுத்தவன் செய்யலைன்னு ஆதங்க படுவது ரொம்ப ஓவர்

  • கருத்துக்கள உறவுகள்

இங்க உங்க தமிழின தலைவரே ஒன்னும் செய்யல . அடுத்தவன் செய்யலைன்னு ஆதங்க படுவது ரொம்ப ஓவர்

அலோ சார் சின்ன பிழைத்திருத்தம் தமிழ் ஈன தலைவர்.. அவன் அவனுக்கே பட்டம் கொடுத்துகிட்டா மக்கள் கொடுத்ததா அர்தமாகாது.

சரி திருப்பியும் ரூம் போட்டு யோசிச்சிட்டு வர்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரைட்டு..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு தனது நாட்டில் உள்ள பிரச்சனையே தீர்க்க முடியல்ல,வறுமையை போக்க முடியல்ல,சினிமா சீரழிவில் இருந்து தனது நாடு அழிவதை தடுக்க முடியல்ல,கலாச்சார சீரழில் இருந்து தடுக்க முடியல்ல...மொத்தத்தில் உலகத்தில் எய்ஸ்ட் தொகை கூடின இரண்டாவது நாடு இந்தியா இந்த லட்சணத்தில் ஒருவர் வந்து எழுதுகிறார் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தியா உலக வல்லரசாம்.

இந்தியா எங்களுக்கு உதவத் தேவையில்லை பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தாலே எங்கட பிரச்சனை தீர்ந்து விடும்...இலங்கை எங்கட நேரடி எதிரி ஆனால் இந்தியா துரோகி...உள்ளுக்குள் அகிம்சை வேடம் பூண்டு கொண்டு மறைமுகமாய் யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த கொடிய நாடு...இந்தியா என்டொரு நாடு இல்லா விட்டால் ஈழம் எப்போதே கிடைத்திருக்கும்.

முள்ளி வாய்க்க்காலில் அவ்வளவு சனமும் அழியும் போது வராத பற்று இனி மேல் தான் இந்தியர்களுக்கு வர‌ப் போகுதாக்கும்...அப்பவே தமிழ் நாட்டில் இருப்பவர்களாவது ஒன்றாக இணைந்து வீதியில் இறங்கி இருந்தால் இவ்வளவு சனம் செத்திருக்காது...அப்போது வராதா ஒற்றுமை இனி மேல் வரும் என்பது வெறும் வெற்றுக் கோச‌ம்...தமிழ் நாட்டு மக்களில் பலர் இன உணர்வு கொண்ட‌வர்களாக இருந்தாலும் தமிழ் நாட்டு அர‌சியல்வாதிகள் அவர்களை தூங்க வைத்து விடுவார்கள் நான் தனிய கருணாநிதி,ஜெயலலிதாவை மட்டும் சொல்லவில்லை.

எங்களுக்கு ஈழம் கிடைக்க வேண்டுமானால் 1) இலங்கையே இந்தா பிடி என தூக்கி கொடுக்க வேண்டும்[அதற்கு பல கார‌ணம் இருக்கலாம்]...2)உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து சுதந்திர‌ பிர‌கட‌னம் செய்து ஈழம் பெற்றுத் தர‌ வேண்டும்...3)இந்தியா துண்டு,துண்டாக உடைய வேண்டும்[இது தான் எனக்கு சந்தோச‌ம் கொடுக்கும்...4)இந்தியா தனக்கு எதாவது ஆபத்து இலங்கையினால் வர‌ப் போகுது என்டவுட‌ன் ஈழத்தைப் பற்றி கதைக்கத் தொட‌ங்கும்[போராட்ட ஆர‌ம்ப காலத்தில் அதைத் தான் செய்தது]ஆனால் இலங்கை கெட்டிகார‌ நாடு கடைசி வரைக்கும் இதற்கு இட‌ம் கொடுக்காது.

ஒரு காலத்தில எங்களுக்கு ஈழம் கிடைத்தப் பிறகு இலங்கை செய்த கொடூர‌ங்களை மன்னித்தாலும்,மன்னிக்கலாம் ஆனால் இந்தியாவை மன்னிக்கவே முடியாது

இந்தியாவுக்கு தனது நாட்டில் உள்ள பிரச்சனையே தீர்க்க முடியல்ல,வறுமையை போக்க முடியல்ல,சினிமா சீரழிவில் இருந்து தனது நாடு அழிவதை தடுக்க முடியல்ல,கலாச்சார சீரழில் இருந்து தடுக்க முடியல்ல...மொத்தத்தில் உலகத்தில் எய்ஸ்ட் தொகை கூடின இரண்டாவது நாடு இந்தியா இந்த லட்சணத்தில் ஒருவர் வந்து எழுதுகிறார் இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தியா உலக வல்லரசாம்.

இது எல்லா வல்லரசு நாடுகளிலும் உள்ளதுதானே :rolleyes:

ஒரு காலத்தில எங்களுக்கு ஈழம் கிடைத்தப் பிறகு இலங்கை செய்த கொடூர‌ங்களை மன்னித்தாலும்,மன்னிக்கலாம் ஆனால் இந்தியாவை மன்னிக்கவே முடியாது

நீங்கள் கூறும் இந்தியாவில் தமிழகம் அடங்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ்பைத்தியம்.

வணக்கம் குமாரசாமி அய்யா ரொம்ப நாளைக்கப்புறம் வந்த என் நிலமைய இங்க பார்க்குறீங்கன்னு நினைக்கிறேன்

இந்த கருத்துக்கு மாற்று கருத்து எழுத எனக்கு மனதில் வலிமை இல்லை . ஏனெனில் கருத்தை எழுதியவர் ஒரு ஈழ மகள் . அவரது மன வலி அவருக்கு தான் தெரியும் . ஈழம் எப்படி பெறுவது மற்றும் பெற்றபடி என்ன செய்வது என்பது பற்றி சிந்திப்பது அவர்கள் உரிமை / கடமை .

அதில் இந்தியன் / தமிழ் நாட்டு காரன் தலையிடுவது பெரும்பாலும் தேவையற்றதே.

மேலும் உண்மையிலேயே நீதி நியாயம் என்பது அனைத்து இடங்களிலும் வேண்டும் .அப்போதுதான் எதுவுமே கிடைக்கும் ஆனால் உடனே இல்லை பொறுத்திருந்து

டக்லஸ் , கருணா , ஆனந்த சங்கரி போன்றவர்களை நீங்கள் ஒதுக்கி வைத்ததற்கு காரணம் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் என்பது தானே . அதே போல இன்னொரு நாட்டிற்கு எதிரானவர்களையும் நீங்கள் ஒதுக்கி வைத்தால் தான் ஈழம் கிடைக்கும் . அவர்கள் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு ஈழ ஆதரவு என கூறி இந்தியாவிற்கு எதிராக பேசுபவர்கள். அவர்களால் ஈழ விடுதலை என்றால் இந்தியாவிற்கு எதிரானது என்ற மாயை / தோற்றம் உருவாகி வெகு நாளாகி விட்டது . ஈழத்திற்கு ஆதரவு என்றால் அதை பற்றி மட்டும் பேச வேண்டும் . இவர்கள் பேசுவது பெரும்பாலும் இந்திய எதிர்ப்பே தவிர ஈழ விடுதலை இல்லை

மேற்கூறியபடி சகோதரி சொல்வது போல இந்தியா சும்மா இருந்தால் போதும் என்ற கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன் . அதே நேரம் ஈழம் உண்மையில் வேண்டுமானால் ஈழம் அடையும் வரை இந்தியாவை சீண்டாமல் இருப்பதும் அவசியம் என நினைக்கிறன் . அதனால் தான் எழுதுகிறேன் . ஈழம் கிடைத்தபின் உங்களால் இந்தியாவை என்ன முடியுமோ அதை அப்போதுள்ள சூழ்நிலை படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாமே .

சகோதரிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் . தமிழ்நாட்டு தமிழனுக்கு தமிழ் ஈழம் என்பது தனது பிரச்சினைகளை விட மிக முக்கியம் . அதனால் தான் ஆதரவும் கண்ணீரும் ஆவேசமும் . அதே நேரம் இந்தியாவை எதிர்த்து எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போது முதலில் கொதிப்பவன் தமிழனே . கார்கில் போரில் அதிகம் நன்கொடை கொடுத்தவன் யாரென்று பாருங்கள் . அப்போது தெளிவாக தெரியும் . ஈழம் வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைபவன் தமிழ்நாட்டு தமிழனாகவே இருக்க முடியும் . ஆனால் இந்தியாவிற்கு ஆபத்து என்றாலும் முதலில் கொதிப்பவனும் தமிழனே . இந்த மாபெரும் முரண்பாட்டு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை விடிவு கிடையாது.

உங்களின் சொல்படியே ஐரோப்பா அமெரிக்கா என எதுவும் வந்து ஒன்றும் இந்தியாவை மீறி செய்ய முடியாது . அது முள்ளிவாய்க்கால் சம்பவத்திலேயே எளிதாக புரிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன் .

ஏனெனில் உங்கள் அனைவரின் கோபம் கண்களை மட்டுமல்ல நியாயத்தையும் மறைத்து விட்டது. உங்கள் உடன் பிறப்புகளை கற்பழித்தவனை, உங்கள் உறவுகளின் உறுப்புகள் எடுத்தவனை, உங்கள் இனத்தை பிஞ்சிலேயே நசுக்கியவனை, உங்கள் உறவுகளை வருடக்கணக்கில் முகாம் எனும் சிறையில் அடைத்தவனை, பட்டினி போட்டு கொன்றவனை கூட மன்னிக்கலாம் ஆனால் இந்தியாவை மன்னிக்க முடியாது என கூறுவதன் உங்களின் வார்த்தைகளின் அர்த்தமே எனக்கு புரியவில்லை .

(தொடரும் .........)

வணக்கம் தமிழ் பைத்தியம்.

இந்தியாவிற்கு காவடி தூக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையை வரவேற்கிறேன். யாருக்காவது காவடி தூக்கியாவது காரியத்தை முடிப்பது நல்லது. ஆனால் இன்று கூட மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபடும் உலக தமிழர் பேரவைத் தலைவர் அடிகளார் இம்மானுவேலை திருப்பி அனுப்பியுள்ளார்களே? இவர் இந்தியாவிற்கு எதிராக என்ன குற்றம் செய்தார்?

நாம் இன்னும் காவடி தூக்க ஆரம்பிக்கவில்லையே . தூக்க ஆரம்பித்தபின் ஒருவேளை உள்ளே விடலாம்.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஈழ விடுதலை ஆர்வலர்கள் அனைவருமே சகட்டு மேனிக்கு இந்தியாவை பற்றி திட்டியது தான் அதிகம் . இந்திய உளவுத்துறை எதை எதை எல்லாமோ கோட்டை விடும் . ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஈழ விடுதலை ஆர்வலர்கள் ஒன்னுக்கு போனால் கூட எத்தனை மில்லி போனார்கள் என கரெக்டாக வேலை மெனக்கெட்டு செய்ய வேண்டிய வேலையெல்லாம் விட்டு விட்டு ரிப்போர்ட் கொடுக்கும் . அதுகூட காரணம் ஆக இருக்கலாம் நண்பரே

வயதான ஒரு பெண்மணி . நோய் சிகிச்சைக்காக இந்தியா வந்தார் . அவர் தேசிய தலைவரின் அம்மா என்பதையெல்லாம் தூரத்தில் வையுங்கள் . நோய் வாய்ப்பட்ட மதிக்கக்கூடிய வயதில் உள்ளவர் . அவரை வைத்து தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் ஒன்று கூடி விளையாட நினைத்து திட்டம் போட்டது மத்திய அரசுக்கு தெரிந்தது . அதனால் மறுத்து விட்டார்கள் . இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம்ம ஆளுங்களுக்கு எங்க கேப்பு கிடைக்குதோ அங்கே எல்லாம் அரசியல் செய்ய முற்படுவது சரியில்லை . அடுத்து சிகிச்சை பெற எத்தனை கட்டுப்பாடு போட்டு அனுமதி கொடுத்தார்கள் என உங்களுக்கே தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.