Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு

Featured Replies

அடுத்து மக்களும் புலிகளும் ஒன்றே என ஒரு கூப்பாடு.

மக்களை காப்பாற்றுங்கள் என முதல் நாள் கூட்டம் .

இரண்டாவது நாள் புலிகளுக்கு ஆதரவு என ஒரு கூட்டம் .

மூணாவது நாள் மீண்டும் மக்களும் புலிகளும் ஒன்றே என ஒரு கூட்டம் .

நான்காவது நாள் புலிகள் எதோ ஒரு இடத்தை பிடித்ததாக சொல்லி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஐந்தாவது நாள் இந்திய அரசை மிரட்டி ஒரு பொதுக்கூட்டம்

ஆறாவது நாள் மறுபடியும் முதல் நாளில் இருந்து ஆரம்பம்

மேற்கூறிய நிகழ்வுகளில் மாபெரும் இமாலய தவறு இருக்கிறது . அந்த தவறை போர் நடந்த போது செய்தவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்த புரட்சிகர தமிழ் தேசியன் போன்றவர்களே. ஈழ மக்களின் உயிரை பகடை காயாக்கி இவர்கள் போட்ட வேற்று வேட்டுதான் அத்தனை உயிர் போன காரணங்களில் ஒன்று

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து மக்களும் புலிகளும் ஒன்றே என ஒரு கூப்பாடு.

மக்களை காப்பாற்றுங்கள் என முதல் நாள் கூட்டம் .

இரண்டாவது நாள் புலிகளுக்கு ஆதரவு என ஒரு கூட்டம் .

மூணாவது நாள் மீண்டும் மக்களும் புலிகளும் ஒன்றே என ஒரு கூட்டம் .

நான்காவது நாள் புலிகள் எதோ ஒரு இடத்தை பிடித்ததாக சொல்லி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஐந்தாவது நாள் இந்திய அரசை மிரட்டி ஒரு பொதுக்கூட்டம்

ஆறாவது நாள் மறுபடியும் முதல் நாளில் இருந்து ஆரம்பம்

மேற்கூறிய நிகழ்வுகளில் மாபெரும் இமாலய தவறு இருக்கிறது . அந்த தவறை போர் நடந்த போது செய்தவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்த புரட்சிகர தமிழ் தேசியன் போன்றவர்களே. ஈழ மக்களின் உயிரை பகடை காயாக்கி இவர்கள் போட்ட வேற்று வேட்டுதான் அத்தனை உயிர் போன காரணங்களில் ஒன்று

LaughingSmiley.gif

அடுத்து மக்களும் புலிகளும் ஒன்றே என ஒரு கூப்பாடு.

மக்களை காப்பாற்றுங்கள் என முதல் நாள் கூட்டம் .

இரண்டாவது நாள் புலிகளுக்கு ஆதரவு என ஒரு கூட்டம் .

மூணாவது நாள் மீண்டும் மக்களும் புலிகளும் ஒன்றே என ஒரு கூட்டம் .

நான்காவது நாள் புலிகள் எதோ ஒரு இடத்தை பிடித்ததாக சொல்லி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஐந்தாவது நாள் இந்திய அரசை மிரட்டி ஒரு பொதுக்கூட்டம்

ஆறாவது நாள் மறுபடியும் முதல் நாளில் இருந்து ஆரம்பம்

மேற்கூறிய நிகழ்வுகளில் மாபெரும் இமாலய தவறு இருக்கிறது . அந்த தவறை போர் நடந்த போது செய்தவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்த புரட்சிகர தமிழ் தேசியன் போன்றவர்களே. ஈழ மக்களின் உயிரை பகடை காயாக்கி இவர்கள் போட்ட வேற்று வேட்டுதான் அத்தனை உயிர் போன காரணங்களில் ஒன்று

LaughingSmiley.gif

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லா வல்லரசு நாடுகளிலும் உள்ளதுதானே :rolleyes:

எல்லா நாடுகளிலும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை அப்படி இருந்தாலும் தங்கட நாட்டில் இவ்வளவு பிரச்சனையை வைத்துக் கொண்டு மற்ற நாடுகளின் பிரச்சனைகளில் தலையிடாது

நீங்கள் கூறும் இந்தியாவில் தமிழகம் அடங்காது.

ஏன் தமிழகம் அடங்காது?...கீழ் உள்ள பதிவில் தமிழ் எழுதி உள்ளதை வாசிக்கவும்.

இந்த கருத்துக்கு மாற்று கருத்து எழுத எனக்கு மனதில் வலிமை இல்லை . ஏனெனில் கருத்தை எழுதியவர் ஒரு ஈழ மகள் . அவரது மன வலி அவருக்கு தான் தெரியும் . ஈழம் எப்படி பெறுவது மற்றும் பெற்றபடி என்ன செய்வது என்பது பற்றி சிந்திப்பது அவர்கள் உரிமை / கடமை .

அதில் இந்தியன் / தமிழ் நாட்டு காரன் தலையிடுவது பெரும்பாலும் தேவையற்றதே.

மேலும் உண்மையிலேயே நீதி நியாயம் என்பது அனைத்து இடங்களிலும் வேண்டும் .அப்போதுதான் எதுவுமே கிடைக்கும் ஆனால் உடனே இல்லை பொறுத்திருந்து

டக்லஸ் , கருணா , ஆனந்த சங்கரி போன்றவர்களை நீங்கள் ஒதுக்கி வைத்ததற்கு காரணம் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் என்பது தானே . அதே போல இன்னொரு நாட்டிற்கு எதிரானவர்களையும் நீங்கள் ஒதுக்கி வைத்தால் தான் ஈழம் கிடைக்கும் . அவர்கள் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு ஈழ ஆதரவு என கூறி இந்தியாவிற்கு எதிராக பேசுபவர்கள். அவர்களால் ஈழ விடுதலை என்றால் இந்தியாவிற்கு எதிரானது என்ற மாயை / தோற்றம் உருவாகி வெகு நாளாகி விட்டது . ஈழத்திற்கு ஆதரவு என்றால் அதை பற்றி மட்டும் பேச வேண்டும் . இவர்கள் பேசுவது பெரும்பாலும் இந்திய எதிர்ப்பே தவிர ஈழ விடுதலை இல்லை

மேற்கூறியபடி சகோதரி சொல்வது போல இந்தியா சும்மா இருந்தால் போதும் என்ற கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன் . அதே நேரம் ஈழம் உண்மையில் வேண்டுமானால் ஈழம் அடையும் வரை இந்தியாவை சீண்டாமல் இருப்பதும் அவசியம் என நினைக்கிறன் . அதனால் தான் எழுதுகிறேன் . ஈழம் கிடைத்தபின் உங்களால் இந்தியாவை என்ன முடியுமோ அதை அப்போதுள்ள சூழ்நிலை படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாமே .

சகோதரிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் . தமிழ்நாட்டு தமிழனுக்கு தமிழ் ஈழம் என்பது தனது பிரச்சினைகளை விட மிக முக்கியம் . அதனால் தான் ஆதரவும் கண்ணீரும் ஆவேசமும் . அதே நேரம் இந்தியாவை எதிர்த்து எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போது முதலில் கொதிப்பவன் தமிழனே . கார்கில் போரில் அதிகம் நன்கொடை கொடுத்தவன் யாரென்று பாருங்கள் . அப்போது தெளிவாக தெரியும் . ஈழம் வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைபவன் தமிழ்நாட்டு தமிழனாகவே இருக்க முடியும் . ஆனால் இந்தியாவிற்கு ஆபத்து என்றாலும் முதலில் கொதிப்பவனும் தமிழனே . இந்த மாபெரும் முரண்பாட்டு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை விடிவு கிடையாது.

உங்களின் சொல்படியே ஐரோப்பா அமெரிக்கா என எதுவும் வந்து ஒன்றும் இந்தியாவை மீறி செய்ய முடியாது . அது முள்ளிவாய்க்கால் சம்பவத்திலேயே எளிதாக புரிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன் .

ஏனெனில் உங்கள் அனைவரின் கோபம் கண்களை மட்டுமல்ல நியாயத்தையும் மறைத்து விட்டது. உங்கள் உடன் பிறப்புகளை கற்பழித்தவனை, உங்கள் உறவுகளின் உறுப்புகள் எடுத்தவனை, உங்கள் இனத்தை பிஞ்சிலேயே நசுக்கியவனை, உங்கள் உறவுகளை வருடக்கணக்கில் முகாம் எனும் சிறையில் அடைத்தவனை, பட்டினி போட்டு கொன்றவனை கூட மன்னிக்கலாம் ஆனால் இந்தியாவை மன்னிக்க முடியாது என கூறுவதன் உங்களின் வார்த்தைகளின் அர்த்தமே எனக்கு புரியவில்லை .

(தொடரும் .........)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துக்கு மாற்று கருத்து எழுத எனக்கு மனதில் வலிமை இல்லை . ஏனெனில் கருத்தை எழுதியவர் ஒரு ஈழ மகள் . அவரது மன வலி அவருக்கு தான் தெரியும் . ஈழம் எப்படி பெறுவது மற்றும் பெற்றபடி என்ன செய்வது என்பது பற்றி சிந்திப்பது அவர்கள் உரிமை / கடமை .

அதில் இந்தியன் / தமிழ் நாட்டு காரன் தலையிடுவது பெரும்பாலும் தேவையற்றதே.

மேலும் உண்மையிலேயே நீதி நியாயம் என்பது அனைத்து இடங்களிலும் வேண்டும் .அப்போதுதான் எதுவுமே கிடைக்கும் ஆனால் உடனே இல்லை பொறுத்திருந்து

டக்லஸ் , கருணா , ஆனந்த சங்கரி போன்றவர்களை நீங்கள் ஒதுக்கி வைத்ததற்கு காரணம் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் என்பது தானே . அதே போல இன்னொரு நாட்டிற்கு எதிரானவர்களையும் நீங்கள் ஒதுக்கி வைத்தால் தான் ஈழம் கிடைக்கும் . அவர்கள் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு ஈழ ஆதரவு என கூறி இந்தியாவிற்கு எதிராக பேசுபவர்கள். அவர்களால் ஈழ விடுதலை என்றால் இந்தியாவிற்கு எதிரானது என்ற மாயை / தோற்றம் உருவாகி வெகு நாளாகி விட்டது . ஈழத்திற்கு ஆதரவு என்றால் அதை பற்றி மட்டும் பேச வேண்டும் . இவர்கள் பேசுவது பெரும்பாலும் இந்திய எதிர்ப்பே தவிர ஈழ விடுதலை இல்லை

மேற்கூறியபடி சகோதரி சொல்வது போல இந்தியா சும்மா இருந்தால் போதும் என்ற கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன் . அதே நேரம் ஈழம் உண்மையில் வேண்டுமானால் ஈழம் அடையும் வரை இந்தியாவை சீண்டாமல் இருப்பதும் அவசியம் என நினைக்கிறன் . அதனால் தான் எழுதுகிறேன் . ஈழம் கிடைத்தபின் உங்களால் இந்தியாவை என்ன முடியுமோ அதை அப்போதுள்ள சூழ்நிலை படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாமே .

சகோதரிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் . தமிழ்நாட்டு தமிழனுக்கு தமிழ் ஈழம் என்பது தனது பிரச்சினைகளை விட மிக முக்கியம் . அதனால் தான் ஆதரவும் கண்ணீரும் ஆவேசமும் . அதே நேரம் இந்தியாவை எதிர்த்து எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போது முதலில் கொதிப்பவன் தமிழனே . கார்கில் போரில் அதிகம் நன்கொடை கொடுத்தவன் யாரென்று பாருங்கள் . அப்போது தெளிவாக தெரியும் . ஈழம் வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைபவன் தமிழ்நாட்டு தமிழனாகவே இருக்க முடியும் . ஆனால் இந்தியாவிற்கு ஆபத்து என்றாலும் முதலில் கொதிப்பவனும் தமிழனே . இந்த மாபெரும் முரண்பாட்டு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை விடிவு கிடையாது.

உங்களின் சொல்படியே ஐரோப்பா அமெரிக்கா என எதுவும் வந்து ஒன்றும் இந்தியாவை மீறி செய்ய முடியாது . அது முள்ளிவாய்க்கால் சம்பவத்திலேயே எளிதாக புரிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன் .

ஏனெனில் உங்கள் அனைவரின் கோபம் கண்களை மட்டுமல்ல நியாயத்தையும் மறைத்து விட்டது. உங்கள் உடன் பிறப்புகளை கற்பழித்தவனை, உங்கள் உறவுகளின் உறுப்புகள் எடுத்தவனை, உங்கள் இனத்தை பிஞ்சிலேயே நசுக்கியவனை, உங்கள் உறவுகளை வருடக்கணக்கில் முகாம் எனும் சிறையில் அடைத்தவனை, பட்டினி போட்டு கொன்றவனை கூட மன்னிக்கலாம் ஆனால் இந்தியாவை மன்னிக்க முடியாது என கூறுவதன் உங்களின் வார்த்தைகளின் அர்த்தமே எனக்கு புரியவில்லை .

(தொடரும் .........)

இந்தியாவிற்கும் எமக்கும் நேரடி பிரச்சனை எதுவும் இல்லை...பிரச்சனை எமக்கும்,இலங்கைக்கும் தான்...எங்களுக்கு எங்கள் நாட்டை பிரித்து தரச் சொல்லி நாங்கள் கேட்கிறோம் இலங்கை அரசு தர முடியாது என்கிறது நாங்கள் அதற்காகப் போராடுகிறோம்...எங்களை அட‌க்க வேண்டிய தேவை இலங்கைக்கு உண்டு அதற்காக அவர்கள் எல்லா வழிகளையும் பாவித்தார்கள்,பாவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்தியாவிற்கு ஏன் தேவையில்லாத வேலை?...பலத்தகார‌த்தை ஆர‌ம்பித்து அதை இலங்கைப் படையினருக்கு ஒரு ஆயுதமாக பாவிக்க சொல்லி கொடுத்ததே இந்தியா தான்...இந்தியா அமைதி காக்கும் படையினர் ஆர‌ம்பித்த பலத்தகார‌ம் இன்று வரைத் தொட‌ர‌ யார் கார‌ணம்?[அதற்கு முதல் இப்படியான சம்பவங்கள் நிகழவில்லை என சொல்லவில்லை ஆங்காங்கே அங்கொன்றும்,இங்கொன்றுமாக நட‌ந்தது]...என்னென்ன அட்டூழியம் வன்னியில் நட‌ந்ததோ அத்தனையும் இலங்கை படையினருக்கு சொல்லிக் கொடுத்ததே இந்தியா தான் என்பது என் கருத்து...எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்கவே கூடாது

என்னென்ன அட்டூழியம் வன்னியில் நட‌ந்ததோ அத்தனையும் இலங்கை படையினருக்கு சொல்லிக் கொடுத்ததே இந்தியா தான் என்பது என் கருத்து...எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்கவே கூடாது

உலகத்தமிழர்கள் ஒரு தலைமையற்று உள்ள நிலையில், நண்பர்களை அருகில் வைத்திரு, எதிரிகளை (துரோகிகளை) பக்கத்திலேயே வைத்திரு என்பதுதான் சமயோசிதமானது.

ஏன் தமிழகம் அடங்காது?...கீழ் உள்ள பதிவில் தமிழ் எழுதி உள்ளதை வாசிக்கவும்.

இந்தியா வேறு தமிழ்நாடு வேறு

இந்தியா என்பது தமிழக மக்களின் உணர்வுகளை அடக்காதது. எமக்காக பல உயிர்களை தந்தவர்கள் தமிழக உறவுகள். தரவும் தயாராக உள்ளனர்.

அதேவேளை எத்தனையோ தமிழக மீனவர்களின் உயிர்களை இந்தியா எந்த உருப்படியான முடிவுகளையும் எடுக்கவில்லை. அதேவேளை அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் கொல்லப்படும்பொழுது அதிரடி நடவடிக்கைகளை எடுக்கின்றது.

இப்படி பல நூறு காரணங்கள் உள்ளன 'இந்தியா வேறு தமிழ்நாடு வேறு' என உறுதிப்படுத்த.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என்

தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான

பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை

என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக

தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை

அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும்

தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான

காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு

அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக

இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ,

இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி

வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக்

காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.

இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை

விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும்,....

http://groups.google.com/group/keetru/browse_thread/thread/9e0b0c779b7071fe

இங்கே எமது மக்களின் விடிவுக்கு தேவை புதிய சிந்தனைகள்.

இந்தியா தான் இன்றும் எமக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு பெரும்தடையாக உள்ளது. இதை பலரும், உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் உட்பட உறுதிப்படுத்தினர். இதற்காகத்தான் கூட்டமைப்பும் கூட டெல்லியை வைத்தே காய்களை நகர்த்துகின்றது.

ஆனால், எம்மிடம் உள்ள பலம் பலவீனங்களை வைத்தே டெல்லியை எமக்கு ஆதரவாக நாம் மாற்றமுடியும்.

அந்தவகையில் சீனாவின் சிங்களம் மீதான ஆதிக்கம் எமக்கான ஆதரவை இன்னும் பெற்றுத்தரவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் சிறியளவில் மாற்றங்களை தந்துள்ளது. இங்கே நாம் கூடுதல் வேலை செய்யவேண்டிய தேவை உள்ளது. கூட்டமைப்பை வாசிங்க்டன் அழைத்தமை சில வேளைகளில் இந்தியா மீதான மாற்றத்தை கொண்டுவரலாம்.

இங்கே எமது மக்களின் விடிவுக்கு தேவை புதிய சிந்தனைகள்

இதில் என்ன பகிடி என்றால் சீனாவும் இந்தியாவும் சண்டை பிடிக்கினமோ இல்லையோ யாழ் களத்தில் பெரிய சண்டை நடக்குது போல் இருக்கிறது :icon_mrgreen:

இதில் என்ன பகிடி என்றால் சீனாவும் இந்தியாவும் சண்டை பிடிக்கினமோ இல்லையோ யாழ் களத்தில் பெரிய சண்டை நடக்குது போல் இருக்கிறது :icon_mrgreen:

இது ஒரு ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் :D

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை

அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும்

தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது.

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கூட தமிழகத்தில் முதலீடு செய்தல் வேண்டும், தமிழக அரசும் இதற்கு உதவவேண்டும். இதனால், தமிழகம் பொருளாதார அரசியல் ரீதியில் பலம்பெறும், சக்தியாக மாறும். தமிழகம் பிரியவும் வழி சமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் இந்தியாவை எதிர்த்து எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போது முதலில் கொதிப்பவன் தமிழனே . கார்கில் போரில் அதிகம் நன்கொடை கொடுத்தவன் யாரென்று பாருங்கள் . அப்போது தெளிவாக தெரியும் . ஈழம் வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைபவன் தமிழ்நாட்டு தமிழனாகவே இருக்க முடியும் . ஆனால் இந்தியாவிற்கு ஆபத்து என்றாலும் முதலில் கொதிப்பவனும் தமிழனே . இந்த மாபெரும் முரண்பாட்டு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை விடிவு கிடையாது.

அண்ணா தன்னை என்றைக்காவது ஓர் இந்தியராகக் கருதிக் கொண்டது உண்டா? இந்தியாவைத் தனது தேசம் அல்லது தாய்நாடு என்று ஏற்றுக் கொண்டது உண்டா? இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வரிக்கு வரி, மூச்சுக்கு மூச்சு கூறுவது போல ‘இந்தியத் திருநாடு’ என்றோ அல்லது ‘இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க’ என்றோ எப்போதாவது மறந்து போயாவது அண்ணா கூறியிருக் கிறாரா? 1963இல் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுக் கூடுதல் அதிகாரங்களைப் பெறுவது என்று தம் குறிக்கோளை மாற்றிக் கொண்ட பிறகாவது, இந்தியாவைப் பற்றிய தம் பார்வையை மாற்றிக் கொண் டாரா?

சமரசங்களும் குறைபாடுகளும் நிறைந்த அரசியல் வாழ்வு நடத்திய அண்ணா, கொள்கைத் தளத்தில் சரிவையும் தேர்தல் களத்தில் வெற்றி யையும் கண்டு 1967இல் ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்த பிறகாவது ‘இந்தியா ஒரு தேசம்’ என்றோ, இந்திய ஒருமைப் பாட்டைக் காக்க வேண்டும் என்றோ பேசியதுண்டா? தம் அரசியல் வாழ்வு முழுக்க எதிர்க் கட்சியாக இருந்த போதும், முதல்வராகப் பதவி வகித்த போதும் – அவர் பதவியேற்ற நாளான 06.03.1967 முதல் 02.02.1969 நள்ளிரவு 12.22 மணிக்கு அவர் உயிர் பிரியும் வரையிலும் கூட – ‘இந்தியத் திருநாடு’ என்றோ இந்தியா தம் தாய்நாடு என்றோ அண்ணா ஒருபோதும் பேசியதில்லை. தில்லி வல்லாதிக்க அரசும் இந்திய ஆளும் வர்க்கமும் மனம் குளிரும்படி ‘ஏக இந்தியப் பஜனை’யை தி.மு.க. அண்ணாவின் இறப் புக்குப் பிறகே தொடங்கியது.

இந்தியமும் ஆரியமும்

இந்தியத் தேசியத்தின் ஆரிய உள்ளீடு குறித்தும் அதன் அரசியல் பரிமாணம் குறித்தும் அண்ணா முன்வைத்த கருத்துக்கள் 1945 முதல் 1962 வரை படிப்படியான வளர்ச்சியும் விரிவாக்கமும் பெற்று வந்திருக் கின்றன. ஆரிய ஆதிக்கத்தின் அரசியல் வடிவம்தான் இந்திய தேசியம் என்ற புரிதலை தந்தை பெரியாரும், ஆரியத்தின் பாதுகாவல் அரண்தான் இந்தியத் தேசியம் என்றபுரிதலை அறிஞர் அண்ணாவும் தமிழ் மக்களிடையே கொண்டு சென்றனர். இந்தியத்தை வீழ்த்தாமல் ஆரியத்தை வீழ்த்த முடியாது என்ற புரிதலைத் தந்தவர்கள் இவர்கள் தாம்.

தேர்தல் அரசியலிலும் இந்தியத் தேசிய மறுப்பு

1957ஆம் ஆண்டுத் தேர்தலில் முதன்முதலாகக் களமிறங்கிய தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையை முன் வைக்காமல், தேர்தல் அறிக்கையில் மாநிலங் களுக்கு சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமை கோரியிருந்தது. காங்கிரசு எதிர்ப்பு முழக்கமாக இல்லாமல், வேறு பல கோரிக்கை களுடன் சுயநிர்ணய உரிமையையும் தமிழகத்திற்கு அண்ணா கோரியிருந் தார். 205 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அண்ணா உள்ளிட்ட 15 தி.மு.க. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சட்டமன்ற உறுப்பினர் களாக நுழைந்தனர்.

தேர்தல் அரசியலில் ஈடுபட்ட பிறகும் அண்ணாவின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந் தது. தி.மு.க.வின் வளர்ச்சியுட னேயே இந்திய எதிர்ப்புணர்வும் சேர்ந்து வளர்ந்தது. தேர்தல் அரசியலில் ஈடுபட்டுச் சட்டமன்றத்துக்குள் நுழைந்த பிறகு அண்ணா கூறிய கருத்துக்கள் கவனத்தில் கொள் ளப்பட வேண்டியவை. 1959இல் அண்ணா இப்படிக் கூறினார் :

“இந்திய அரசியலமைப்பு என்ற ஒரு பொன்விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது, மாநிலங்களின் கரங்களில்… எஜமானாக இருந்து அவர்களை ஆட்டிப் படைப்பார்கள். எடுபிடிகளாக இருந்து தொண்டு புரிந்தாக வேண்டும்.” (அண்ணா, ‘எழுகிறது ஆந்திரம்!’ (8.3.1959) சரிந்த சாம் ராஜ்யம், மணிவாசகர் வெளியீடு, சென்னை, 2007, பக்.163)

ஆட்டிப் படைக்கும் மத்திய அரசிடமிருந்து தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வழி பிரிந்து போகும் உரிமையுடன் கூடி வாழ்வது என்ற கருத்தையும் 1959இல் அண்ணா முன் வைத்தார். மாநில அரசுகள் வெறும் பொம்மைகள்தாம் என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சென்றார்:

“மத்திய அரசு மாநிலங்களை ஆட்டிப் படைக்கிறது. சூத்திர தாரி டில்லியில்; சொகுசாக உலா வருகின்ற கொலுப் பொம்மைகள் இங்கே…”

“இந்த அவல நிலையினை, ஆகாத முறையினை அகற்றிட நாடு நமதாக வேண்டும். நமது நாடாம் திராவிடத்தின் ஆட்சி நம் கரத்திலே ஒப்படைக்கப் படல் வேண்டும்…”

மாநிலங்களுக்கு இப்போது இருக்கின்ற அதிகார வரம்பினை ஓரளவு விரிவுபடுத்துவதாலேயே பிரச்சினை தீர்ந்து விடாதே!… விரும்பினால் பிரிந்து போகின்ற உரிமை மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டாலொழிய மத்திய அரசாங்கத்தினைக் கட்டுப் படுத்தக்கூடிய பயனுள்ள ஆயுதம் வேறென்ன?”

(அண்ணா, ‘பாதிவழியில்’ (15.2.1959) சரிந்த சாம்ராஜ்யம், சென்னை, 2007, பக்.151-152)

இந்தியா என்ற நாடு என்றென் றைக்கும் இருந்து வந்த ஒன்றல்ல. அதைப் படைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம், அதிலிருந்து வெளியேறுவது நியாயப்பாடு டையதுதான் என்ற பார்வையை அண்ணா வைத்தார்: இந்தியா என்ற பெயர் – சொல், என்றாவது இந்த நாட்டில் இருந்ததா? வழங்கப்பட்டதா? இல்லையே! நூற்றுஐம்பது ஆண்டு காலம் ஆங்கிலேயன் ஆண்டபோதுதானே இந்தியா என்று பெயர் வைத்து ஒரே நாடு என்று ஆண்டான்? அதற்கு முன் எதிலும் இந்தியா என்ற சொல் கிடையாதே! ஒரு நாடாகவும் இருந்ததில்லையே!

“வடநாட்டுடன் இருப்பதால் என்ன லாபம்? பிரிந்துவிட்டால் என்ன நஷ்டம்? எடுத்துக் கூறட்டும். வகையும் வாய்ப்பும் வல்லமையும் இருந்தால்!”

(அண்ணா, இன்பத் திராவிடம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1989, பக்.38)

இந்தியா என்பது செயற்கை யாகத் தங்கள் சுரண்டலுக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டதுதானேயொழிய, அது ஓர்மையுள்ள ஒரு தேசம் ஆகாது என்ற பார்வையை அண்ணா கொண்டிருந்தார்.

“அந்நியன் – வெள்ளையனும், பிரெஞ்சுக்காரனும் ஆண்ட காலத்தில் தன் நிர்வாக வசதிக் காகத் துப்பாக்கி முனையில், சர்க் கஸ் கம்பெனியில் ஆட்டையும் சிங்கத்தையும் ஒரு சேர வைப்பது போல – இந்தியாவை ‘ஏக இந்தியாவாக’ வைத்திருந்தான். அதனாலேயே நாம், எப்படி வடவரோடு ஒன்றாக முடியும்?” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் : 144, 18.6.1961)

இந்தியா முழுமையும் இந்து மதம் இருக்கிறது; ஆகவே இந்தியா ஒரு தேசம்; இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்றவாதத்தையும் அண்ணா நிராகரித்தார்.

“இந்து மதத்தைத் தழுவியவர்கள் இந்தியா முழுமையும் உள்ளாவர்கள். ஆகவே இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், இஸ்லாம் மதத்தைத் தழுவியர்கள் எல்லோரையும் ஓர் அரசின் கீழ் கொண்டுவர இயலுமா? கிருத்துவ மதத்தைத் தழுவியிருக்கிற காரணத்தி னாலேயே அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரான்சும் ஜெர்மனியும் ஓர் ஆட்சியின் கீழ் இருப்பது சாத்தியமாகுமா? அதைப் போலத்தான் திரா விடமும் இந்தியாவோடு ஒன் றாக இருக்க இயலாது” (மேலது).

இந்தியா ஒரே நாடு என்பதை மாநிலங்களவையிலேயே மறுத்துப் பேசினார் அண்ணா. மாநிலங்களவைக்குத் தலைமை வகித்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனிடம், அண்ணா இவ்வாறு சுட்டிக் காட்டினார் : “தாங்களே இந்தியா ஒரு நாடு என்பதற்கு ஒரு காரணம் காட்டி யிருக்கிறீர்கள் – கன்னியாகுமரியி லிருந்து இமாலயம் வரையிலும் இராமனையும், கிருஷ்ணனையும் தொழுகிறார்கள் என்று கூறினீர் கள். ஆனால் ஏசுநாதரை ஐரோப்பா முழுவதும் தொழு கிறார்கள். ஆனால், அங்கே பல தேசிய நாடுகள் இருக்கின் றனவே.” (நம் நாடு, 4.5.1962)

இந்திய வல்லாதிக்க மைய அரசுடன் இணக்கமாகக் கூடிக் குழைந்து இருப்பதால் தமிழ் நாட்டுக்குப் பல திட்டங்கள் கிடைக்கும்; அவ்வாறு நாங்கள் சில திட்டங்களைத் தமிழகத்துக் கும் பெற்று வந்திருக்கிறோம் என்று இன்று பெருமை பேசும் தமிழகத் தலைவர்களின் நிலை அண்ணாவின் பார்வையில் எள்ளி நகையாடத் தக்கது. “மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்துக்கு அதிக திட்டங்களை மைய அரசு ஒதுக்கித் தந்தால் திராவிட நாடு கோரிக்கையைக் கை விடு வீர்களா?” என்ற கேள்வியை சிலர் அண்ணாவிடம் கேட்ட போது, அண்ணா தெளிவாகப் பதிலுரைத்தார்:

“ஒரு நாடு விடுதலை பெற்ற நாடாக இருப்பதும், ஒரு மனிதன் சுதந்திர மனிதனாக வாழ்வதும், அதனால் ஏற்படும் இலாப நட்டக் கணக்கல்ல – நாம் பார்க்க வேண்டியது. எல்லா வசதி களையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் சிறைக் கைதியாக இருப்பாயா? என்று ஒருவனைக் கேட்டால், கூலிக்காரனாக இருந்தாலும் சுதந்திர மனிதனாக இருக்க விரும்புவான் என்பது மறுக்க முடியாததாகும். அதைப் போலத்தான் ஒரு நாடும் அடிமை யாக இருந்தால் இலாபமா? சுதந்திர நாடாக இருப்பதால் இலாபமா – என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது. ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தால் இலாபமா? என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ அதுபோல ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் விலையில்லை.” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண் 144, 18.06.1961)

தமிழகம் நீண்ட வரலாறும் விடுதலையுடைய இருப்பையும் கொண்டிருந்தது. இதை வலுவந்தமாக இந்தியத் துணைக் கண்டத்துடன் ஆங்கிலேயர்களே இணைத்தனர். இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, ஆங்கி லேயர்கள் தமிழகத்தைத் தனியே பிரித்து விடுதலை பெற்ற நாடாக ஆக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை அண்ணா முன்வைத் தார்:

“இரண்டு கைதிகளை, வசதிக் காகப் போலிசுக்காரன் ஒரு கைதி யின் வலது கையுடன் மற்றவனின் இடது கையைச் சேர்த்து விலங்கிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் பூட்டி வைப்பதாக வைத்துக் கொள் வோம். விடுதலை அடைந்ததும், அந்தக் கைதிகள் வீடு திரும்புகை யில், அவரவர்கள் வீட்டுக்கு அவரவர்கள் போவார்கள். இதுவரை ஒன்றாகவே சிறையில் வைக்கப்பட்டிருந்தோம். ஆத லால் இனியும் ஒன்றாகவே வெளி யிலும் வாழ்க்கை நடத்துவோம், அப்படித்தான் இருக்க வேண்டும் – என்பது எப்படி நீதியல்லவோ, அதைப் போலத்தான் வெள்ளைக் காரனால் அடிமையாக்கப்பட்ட நாம் வெள்ளையர்கள் வெளி யேறியவுடன் தனித்தனியே வாழ்வது – அரசோச்சுவது தான் நீதி என்கிறோம்…” (மேலது)

‘இந்தியா’ என்பது என்ன என்பதை மிக நுட்பமாக அண்ணா புரிந்து வைத்திருந்தார்; அதை மிக எளிமையாகத் தமிழர் களுக்குப் புரியவும் வைத்தார்.

“இந்தியப் பேரரசு என்பது அரசியல் ஆதிக்கத்தால் இறு மாந்து கிடக்கும் ஒரு புதிய ஏகாதிபத்தியம்; வடநாட்டு முதலாளிகளுக்கு அமைந்துள்ள கோட்டை; தென்னாட்டைத் தேய வைக்கும் சுரண்டல் யந்திரம்…” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.144, 18.6.61) அண்ணாவின் இந்தக் கூற்றுக்குச் சான்றாகவும், தெளிவு படுத்தும் வகையிலும் பல்வேறு கட்டுரைகளிலும் சொற்பொழிவு களிலும் விளக்கங்களையும், புள்ளி விவரங்களையும் அண்ணா அள்ளி வழங்கியிருக்கிறார்.

“எல்லா அதிகாரங்களும் டில்லியில்தான் குவிந்துள்ளது… இந்த நாட்டின் வெள்ளையன் எந்தெந்த விதங்களிலே வாணிபம் செய்து, செல்வத்தைச் சுரண்டி சீமைக்குச் சென்றானோ அதே முறையில், வடநாட்டார் இன்று தென்னாட்டின் செல்வத்தை, எல்லாத் துறைகளிலும் ஆதிக்கஞ் செலுத்திச் சுரண்டி வருகின்ற னர்.”

…இன்று எல்லா வாணிபத் துறைகளும் வடநாட்டாரின் பிடியில்தானே இருக்கின்றன? ஏற்றுமதி இறக்குமதியிலிருந்து எண்ணெய் வியாபாரம் வரையில், இரும்பு, பொன், சிமெண்டு, துணி, மருந்து முதலிய எல்லா வாணிபங்களும் இவர்கள் ஆதிக்கத்திற்குட்பட்டுத் தானே இருந்து வருகின்றன.”

(அண்ணா, இன்பத் திரா விடம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1989, பக். 42 – 43)

தமிழக ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தைத் தங்கள் மேலாதிக் கத்தில் வைத்துக் கட்டுப்படுத்தும் 87 மார்வாடி – பனியாக்களின் பெயர்களை அண்ணா பட்டிய லிட்டார். “திராவிட நாட்டின் செல்வத்தைச் சுரண்டும் வணிக வேந்தர்களின் பணபலம், தொழில்பலம், இவற்றிற்கு அரணாக அவர்களுக்கு அமைந் துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாகப் புதியதோர் ‘பொருளாதார ஏகாதிபத்தியம்’ உருவாகிக் கொண்டு வருகிற தென்பதைக் காணலாம்.” (மேலது, பக்.43)

இந்தியம் பற்றிய அண்ணா வின் பார்வை துல்லியமானது. தமிழர்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் இந்தியாதான் என்பதை யும், அதற்கான தீர்வு இந்தியாவி லிருந்து வெளியேறுவதுதான் என்பதையும் உணர்ந்திருந்தார்; அதையே தமிழினத்துக்கும் உணர்த்தினார்.

“இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம். இதுவே என் கருத்து. தமிழர், தனி இனம் – தாழ்ந்த நிலையினில் இன்றுளர் – அதற்குக் காரணம் வடவர். வடவர் வாழ்ந்திட வழிவகுத்ததுதான் இந்திய அரசியல் சட்டமென்னும் பொறி. இதில் சிக்கி இருக்கு மட்டும் தலை நிமிர்ந்து வாழ்ந் திடான் தமிழன் எனும் இனத் தான். அவன் மானம் அழிக்கின் றார்; மொழியைப் பழிக்கின் றார்; வாழ்க்கை வழியை அடைக் கின்றார்! வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்பு மட்டும் தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதுமில்லை.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.140, 21.5.61)

இதைவிடவும் தெளிவாக ஓர் இனத்தின் தலைவர் அடிமைப் பட்டுக் கிடக்கும் தன் மக்களுக்கு அறிவுறுத்த முடியாது. இந்தியத்துக்கு மாநில அரசு கள் நிலை பற்றியும் அண்ணா தெளிவுபடுத்தினார். மாநில அரசு என்பது உண்மையில் ஓர் அரசு அல்ல. முதலாளியாக மைய அரசும் அதன் கங்காணி யாக இருந்து மக்களை ஒடுக்கும் வேலையை மாநில அரசும் செய்யும் என்று அண்ணா உணர்த்தினார்:

“முதலாளி தோட்ட வேலைக் காரர்களுக்கு என்ன குறை என்று கேட்கவே மாட்டார் – அவர் நகரிலே விருந்துண்டு மகிழ்வார். கங்காணி, தோட்ட வேலைக் காரருடன்தான் இருப்பார் – கையில் சவுக்குடன்.”

(அண்ணா, இன்பத் திராவிடம், பக்.7)

“…முன்னாளில் தனியாட்சி யுடன் இருந்த நாடு. இதை அடிமைக்காடு ஆக்கிவிட்டார்கள் அவர்கள்… இன்று திராவிடத்தின் ‘தலைவிதி’ டில்லியில் எழுதப்படு கிறது. திராவிடம் திக்கெட்டும் முன்பு தீரர்களை அனுப்பி வந்தது. இன்று திராவிடம் வாழ மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கு. திராவிடம் தேய் கிறது. தன்மானம் அழிகிறது. அவர்களோ ‘ஒரே நாடு இந்தியா’ என்று ஒய்யாரம் பாடுகிறார்கள்.” (மேலது, பக்.13)

தமிழ்நாடு – திராவிடநாடு : பகை இலக்கு ஒன்றே

அண்ணா திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை முன் வைத்தார். ஆனால் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இந்தக் கோரிக்கை கேள்விக்கு உள் ளானது. 1959லிருந்தே ஈ.வெ.கி. சம்பத் தி.மு.க.வுக்குள் பிரச்சினையை எழுப்பத் தொடங்கினார். 1961இல் ‘திராவிட நாடு பகற்கனவு’ என்று கூறிய சம்பத் திமுக.வை விட்டு வெளியேறி ஏப்ரல் 1961இல் தமிழ்த் தேசியக் கட்சியை நிறுவி னார். பிரிந்து போகும் உரிமை யுடன் கூடிய தமிழ்த் தேசிய சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி னார். 1938இல் முதலில் எழுப்பிய தமிழ்நாடு தமிழருக்கே கோரிக்கையை ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என மாற்றி யிருந்த பெரியார் 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு விடுதலை கோரிக்கைக்குத் திரும்பினார். 1945 முதல் ம.பொ. சிவஞானம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வந்தார். ‘தினத்தந்தி’ இதழ் நிறுவனரும் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கியவருமான சி.பா. ஆதித்தனார் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் இணைத்து ‘தமிழ்ப் பேரரசு’ அமைக்கும் முழக்கத்தை முன்வைத்தார். அவர் எழுப்பிய தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா 1962இல் கடுமையாக விமர்சித் தார். இவ்வாறு இயல்பாக எழுந்த தமிழக விடுதலைக் கோரிக்கைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற திராவிட நாடு கோரிக்கைக்கும் இடையே கருத்தியல் முரண்பாடு நிலவியது. 1961இல் தி.மு.க உடைவதற்கும் ‘வெளிப்படை’க் காரணமாக அதுவே இருந்தது.

தவறான கோரிக்கையைத் தூக்கிச் சுமந்த அண்ணா, இலக்கு எதுவாயினும் எதிரி ஒன்றுதான் என்று கூறிய கருத்து மிக முக்கிய மானது. 1961இல் அண்ணா இவ்வாறு கருத்தறிவித்தார் : “திராவிட நாடு கேட்பவர்கள் தமிழ்நாட்டுக்குத் துரோகிகள் என்றோ, தமிழ்நாடு கேட்பவர் கள் திராவிட நாட்டுக்குப் பகைவர்கள் என்றோ பேசும்படி தூண்டிவிடுவது அடிப்படைப் பிரச்சினையை மாய்க்க முனை யும் மாபெரும் குற்றமாகும்…

“ அடிப்படைப் பிரச்சினை தமிழ்நாடா? திராவிட நாடா? என்ற அளவு, முறை, வகை என்பதுதானா? அல்ல. அடிப் படைப் பிரச்சினை இந்தியப் பேரரசு என்ற ஒன்றின் கீழ் அடிமையாக இருக்கத்தான் வேண்டுமா? அல்லது விடு பட்டுத் தனிஅரசு ஆகவேண்டுமா என்பதுதான்…”

“ அடிப்படை பிரச்சினை ‘ஏக இந்தியா’ எனும் பொறி உடைக்கப்பட்டாக வேண்டும். இந்தியப் பேரரசு எனும் திட்டம் தகர்க்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் என்பதை மறத்தல் ஆகாது.”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.144, 18.6.1961)

அண்ணாவின் அரசியலின் சாரம் ‘ஏக இந்தியா’ என்பது மறுக்கப்பட வேண்டும்; தகர்க்கப்பட வேண்டும் என்பது தான். அதை நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகவே திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தார். திராவிட நாடு விடுதலைக்கு மாற்றாக ‘விரும்பி னால் பிரிந்து போகின்ற உரிமை’ மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார். இந்த இரண்டு தீர்வுகளின் சாரமும் ஏக இந்திய மறுப்பாக இருப்பதைத் தமிழ்த் தேசியர்களும் ஆய்வாளர் களும் உற்றுநோக்க வேண்டும். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்ட போதும், தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுக் கொண்ட நிலையிலும், அண்ணா ஏக இந்திய ஆதரவாக ஓர் ஒற்றைச் சொல்லைக்கூட பதிவு செய்யவில்லை.

‘ஏக இந்தியா’ என்பதன் நடை முறைச் செயல் திட்டமே ‘ஒருமைப்பாட்டைக் காத்தல்’ என்பது ஆகும். அண்ணாவின் காலத்திய தி.மு.க.வும், இன்றைய தி.மு.க.வும் தம்முடைய அரசியல் நோக்கு, நடைமுறை, செயல் பாடு ஆகியவற்றில் வேறுபடும் இரு வேறு கட்சிகளாகும். முன்னமே நடந்து வரும் உயிர் காக்கும் மருந்துகள் நிறைந்த மருந்துக் கடையை ஒருவன் வாங்கி போதை தரும் மதுகாசவக் கடையாக மாற்றி இலாபத்தைக் குவிப்பது போல, தி.மு.க.வின் உள்ளீடு இன்று மாறிப் போனது.

தி.மு.க.வின் இன்றையத் தலைமையான கலைஞர் கருணாநிதி தனது ஒவ்வொரு செயல்பாட்டின் போதும் ‘இந்திய ஒருமைப்பாட்டை’க் காக்க என்று கூறியும், எழுதியும், தன்னை ஏக ‘இந்தியப் பாதுகாவலராக நிலைநிறுத்திக் கொள்வது அண்ணாவின் ஒவ்வொரு கூற்றையும் அடியோடு மறுப்பதாகும். இன்றைய தி.மு.க.வின் அரசியல் ‘அண்ணா – எதிர் அரசியல்’ ஆகும்.

அண்ணாவின் அரசியலை மறுக்கும் திராவிடக் கட்சிகள் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுவது அண்ணாவை இழிவுபடுத்துவதாகும். சிறப்பு மிக்கத் தலைவர்களை இழிவு படுத்த எளிய வழிகள் உள்ளன. புத்தர் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு கசாப்புக் கடை நடத்துவது புத்தரை இழிவுபடுத்தும் வேலை. காந்தி படத்தை படத்தை மாட்டி வைத்துக் கொண்டு கள், சாராயம் விற்பது காந்தியை இழிவு படுத்தும் எளிய முறை. அது போலவே, அறிஞர் அண்ணா வின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு ‘இந்தியத் திருநாடு’ என்றும், ‘இந்திய ஒருமைப்பாடு’ என்றும் நீட்டி முழக்குவது அண்ணாவை இழிவுபடுத்துவ தாகும்.

அண்ணாவும் திராவிடத் தேசியமும்

எதிரியை சரியாக அடை யாளம் கண்ட அண்ணா தன் தேசிய இனத்தை அடையாளம் கண்டாரா? ஓர் இன விடுதலை அரசியலை முன்னெடுக்கக் கோட்பாட்டு வரையறுப்பும், அதில் தெளிவும் அடிப்படைத் தேவைகளாகும். உலக வரலாற்றையும் அரசியலையும் நன்கறிந்த அண்ணாவுக்கு மொழியினத் தேசியம் பற்றித் தெரியாதா? தெரிந்தும் திராவிடத் தேசியம் பேசினார். சென்னை மாகாணம் அவருடைய அரசியல் களமாக இருந்தபோதும் திராவிடம் பேசினார்; சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டுத் தனித்தனி மொழியினத் தாயகங்களை மொழிவழி மாநிலங்களாக்கிய பிறகும் திராவிடத் தேசியம் பேசி னார். அண்ணா தன் அரசியல் தேவைக்கேற்பக் கோட்பாட்டை வரையறுக்க முனைந்தார். அண்ணாவின் கோட்பாட்டுக் குளறுபடி தமிழினத்தின் இலக்குத் தப்பிய பயணத்தை அரை நூற்றாண்டுக் காலம் வழி நடத்தியது. அண்ணாவின் எழுத் தும் பேச்சும் தமிழின உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன; ஆனால் தமிழின விடுதலைத் திசையில் ஓர் அங்குலம்கூட நகர்த்தவில்லை. சில இரசாயன மருந்துகள் அடித்தபின் செடி பச்சைப் பசேல் என்று தழை மண்டும், ஒரு காய் கூடக் காய்க்காது. அது மாடு களுக்கு உணவாகும், மனித னுக்குப் பயன்படாமற் போகும். அண்ணாவின் பங்களிப்பும் அப்படித்தான். தமிழினத்துக்கு உணர்வூட்டியது; உசுப்பி எழுப்பியது; ஆனால் விடுதலை அரசியலுக்குப் பயன்படாமற் போனது. எழுத்தாலும் பேச்சா லும் உணர்வூட்டப்பட்ட தமி ழினத்தின் எழுச்சி தேர்தல்களில் வாக்குகளாக அறுவடை செய்யப் பட்டது.

இது திராவிடம் பேசிய தேர்தல் அரசியல் வணிகர்களுக்கு வாழ் வளித்தது; வளம் கூட்டி யது. இன்று அண்ணாவின் பெயரில் அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் வணிகம் செய்ய வழிகாட்டியது.

திராவிடத் தேசியம் – திகைப்பூட்டும் வரையறை

சென்னை கொத்தவால்சாவடி யில் 4.6.1961இல் அறிஞர் அண்ணா பேசும்போது திராவிடத் தேசியத்தை வரையறுத்தார். ஈ.வெ.கி. சம்பத் தி.மு.க.வை விட்டு வெளியேறி 19.4.1961இல் தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். திராவிடநாடு கோரிக்கை மீதான சம்பத்தின் கடுமையான தாக்குதல்களை அண்ணா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஈ.வெ.கி சம்பத் கட்சி ஆரம்பித்த இரண்டு நாட்களில் தூத்துக்குடி யில் தி.மு.க.வின் பொதுக்குழு வும், மதுரையில் 13.6.1961இல் பொது மாநாடு கூட்டப்பட்டன. முன்னெப்போதையும் விட அப்போது அண்ணா திராவிட நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய சூழல் எழுந்து விட்டது. ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்ற முழக்கம்… திராவிட நாடு இனி சாத்தியமே இல்லை என்ற காலத்தில் எழுப்பப்பட்டது. இந்தக் காலக் கட்டத்தில்தான் அண்ணா திராவிடத் தேசியத்தை வரையறுக்க முற்பட்டார்.

‘அழகு, அழகு’ என்கிறோமே, எது உண்மையான அழகு? ‘இது தான் அழகு’ என்று இதுவரை இலக்கணம் வரையறுக்கப்பட வில்லை. ‘தேசீயம்’ என்று காங்கிரஸ் காரர்கள் சொல்கிறார்கள். ‘திராவிடத் தேசியம்’ என் கிறோம் நாம். இல்லை, இல்லை, தமிழ்த் தேசீயம்தான் இருக்கிறது என்கிறார்கள் ஒரு சாரார்.

‘இந்தியத் தேசீயம்’ என்று வடநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ‘ஆசிய தேசீயம்’ என்றும்; ஆசியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ‘தேசீயம்’ என்பதே இல்லை! எல்லாம் ‘சர்வதேசீயம்தான்’ என்றும் சொல்கிறார்கள். இன்னும் வானவெளிக்குச் சென்று வந்தால், ‘அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரே தேசியம்’ என்பார்கள். இப்படி எது தேசீயம் என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.

“இந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்து பாட்டுப் பாடத் தெரிந்தவர்களெல்லாம் ஒரு பக்கம் வாருங்கள்; பாடத் தெரியாதவர்களெல்லாம் மற் றொரு பக்கம் இருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டு, அதன் படி நீங்கள் வந்தால்… அந்த இரு பிரிவினரையும் பாட்டுப் பாடத் தெரிந்த தேசீயம், பாடத் தெரி யாத தேசீயம் என்று சொல்ல லாம். இன்னொருவர் வந்து இந்தக் கூட்டத்திலுள்ள உயரமானவர்களெல்லாம் ஒரு பக்கமும், குட்டையானவர்கள் மற்றொரு பக்கமும் வாருங்கள்” என்று சொன்னால் பாடத் தெரிந்த பிரிவினரும் பாடத் தெரி யாத பிரிவினரும் கலைவார் கள்… உயரத்தின் அளவிலேதான் பிரிக்கப்படுவர்.”

“ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்தபின் ஆங்கிலேயன் ஆளுபவ னாகவும், இந்தியர்கள் ஆளப் படுபவர்களாகவும் பிரிக்கப் பட்டனர். “உயரமாக இருப்பவர்களை அழைத்ததும், பாடத் தெரிந்த அணியிலிருந்த உயரமானவர்கள் பிரிந்து இன்னொரு பக்கம் வந்தது போல், வெள்ளையன் வெளியேறிய பின் கொடுமைப் படுத்தப்படும் மக்கள் ஒரு பக்க மும், கொடுமைப்படுத்துபவர் மற்றொரு பக்கமும் இருந்தார் கள்… “ வட நாட்டினர் சுரண்டுபவ ராகவும், தென்னாட்டினர் சுரண்டப்படுபவராகவும் இருந்த னர்…”

“…வடநாட்டால் நாம் சீரழிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் இருக் கிறார்கள்; அவர்களைத் திரா விடர் என்கிறோம். அதனால் இந்நாட்டைத் திராவிடம் என் கிறோம். இப்படிச் சொல்லிச் சொல்லி உள்ளத்தில் பதிந்து விட்டால் இது ஒரு தேசீய மாகிறது.” (சி.என். அண்ணாதுரை, திரா விடத் தேசீயம், பாரதி பதிப்ப கம், சென்னை 1999, பக்.7-9)

அண்ணாவின் தேசீயம் பற்றிய வரையறை திகைப்பூட்டக் கூடி யது. அவருடைய வரையறை அரசியல் அறிவியலுக்குப் பொருந்தாது; ஆனால் அவர் அதுவரை மேற்கொண்டு வந்த அரசியல் நிலைப்பாட்டுக்குப் பொருந்துமாறு தேசீயத்தை வரையறுக்க முற்பட்டார். தேசீயம் பற்றிய தம்முடைய கருத்து குறைபாடுடையது என்பது அண்ணாவுக்கும் தெரியும். 1961இல் இது குறித்து கம்யூனிஸ்ட்டு தலைவர் இராம மூர்த்தி கேள்வி எழுப்பியதாகப் பதிவு செய்திருக்கிறார் அண்ணா:

“இந்தச் சென்னை இராஜ்யத் திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா? என்று கம்யூ னிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் – ஒன்பது ஆண்டு களுக்கு முன்னால்”

(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், எண்.139, 14.5.1961)

“திராவிட தேசியம் ஏற்பட வில்லை – ஏற்பட முடியாது. தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள்… “ தமிழ்த் தேசியத்தை ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடகத் தேசியத்திலிருந்து, கேரளத் தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது… “ ஒரு தேசீய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டி லும் கலாச்சார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.”

(மேலது, 14.5.1961)

மொழிவழித் தேசியம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வலுப்பெற்று விட்ட நிலையிலும், மொழிவாரி மாநிலங்களாகத் தென்னிந்தியா பிரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், இனி திராவிட நாடு என்ற ஒன்று சாத்தியமில்லை என்று தெளி வாகி விட்ட நிலையிலும், மொழி வழித் தேசியம் பற்றிப் பலர் எடுத்துக் கூறினாலும் அதை ஏற்க அண்ணா மறுத்தார். ஏனெனில் அது அவருடைய அரசியலுக்குப் பொருந்திவரக் கூடியதல்ல.

இன விடுதலை என்றஇலக்கை அடைய தேர்தல் வெற்றிகளே வழி என்று கூறிய அண்ணா, தமிழின உணர்வூட்டப்பட்ட இளைஞர்களைப் பெருவாரி யாகத் திரட்டி தேர்தல் அரசிய லில் ஈடுபடுத்தினார். 1963இல் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா கைவிட்டார். அதன் பிறகு, தேர்தல் வெற்றியே இலக்கு, இன உணர்வூட்டலே அதை ஈட்டும் வழி என இலக்கும் வழிமுறையும் இடம் மாறின. தமிழினத்தின் இன்றைய தடுமாற்றத்திற்கும் இன விடுதலைப் பயணத்தின் திசை மாற்றத்திற்கும் காரண மானோர் பட்டியலில் முதற் பெயர் அறிஞர் அண்ணா.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11729&Itemid=139

  • கருத்துக்கள உறவுகள்

1945 முதல் ம.பொ. சிவஞானம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வந்தார். ‘தினத்தந்தி’ இதழ் நிறுவனரும் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கியவருமான சி.பா. ஆதித்தனார் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் இணைத்து ‘தமிழ்ப் பேரரசு’ அமைக்கும் முழக்கத்தை முன்வைத்தார்.

டிஸ்கி:

ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. இல்லையா தமிழ்பைத்தியம் அண்ணா?

  • தொடங்கியவர்

கள உறவுகளுக்கு,

இந்தப் பதிவை இணைத்தவன் என்ற வகையில் செய்தியின் உள்ளடக்கத்திற்கு ஏற்ரவாறு கருத்தாடல்களை செய்யுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன் :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்
Che-Guevara+%284%29.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர்கள் ஒரு தலைமையற்று உள்ள நிலையில், நண்பர்களை அருகில் வைத்திரு, எதிரிகளை (துரோகிகளை) பக்கத்திலேயே வைத்திரு என்பதுதான் சமயோசிதமானது.

நான் உங்கட வழிக்கே வாறன் எதிரிகளை பக்கத்தில் வைத்திருக்கலாம் என்டால் டக்லஸ் தொடக்கம் கேபி வரை எல்லோரையும் நம்பி பக்கத்தில் சேர்க்கலாமா?

நான் உங்கட வழிக்கே வாறன் எதிரிகளை பக்கத்தில் வைத்திருக்கலாம் என்டால் டக்லஸ் தொடக்கம் கேபி வரை எல்லோரையும் நம்பி பக்கத்தில் சேர்க்கலாமா?

ஏன் அவர்களை, செல்லாக்காசுகளை, இழுப்பான். நாம் விவாதிப்பது இந்திய - சீன உறவுகளும் தமிழர்களின் அரசியல் தலைவிதியும் பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கும் எமக்கும் நேரடி பிரச்சனை எதுவும் இல்லை...பிரச்சனை எமக்கும்,இலங்கைக்கும் தான்...எங்களுக்கு எங்கள் நாட்டை பிரித்து தரச் சொல்லி நாங்கள் கேட்கிறோம் இலங்கை அரசு தர முடியாது என்கிறது நாங்கள் அதற்காகப் போராடுகிறோம்...எங்களை அட‌க்க வேண்டிய தேவை இலங்கைக்கு உண்டு அதற்காக அவர்கள் எல்லா வழிகளையும் பாவித்தார்கள்,பாவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்தியாவிற்கு ஏன் தேவையில்லாத வேலை?...பலத்தகார‌த்தை ஆர‌ம்பித்து அதை இலங்கைப் படையினருக்கு ஒரு ஆயுதமாக பாவிக்க சொல்லி கொடுத்ததே இந்தியா தான்...இந்தியா அமைதி காக்கும் படையினர் ஆர‌ம்பித்த பலத்தகார‌ம் இன்று வரைத் தொட‌ர‌ யார் கார‌ணம்?[அதற்கு முதல் இப்படியான சம்பவங்கள் நிகழவில்லை என சொல்லவில்லை ஆங்காங்கே அங்கொன்றும்,இங்கொன்றுமாக நட‌ந்தது]...என்னென்ன அட்டூழியம் வன்னியில் நட‌ந்ததோ அத்தனையும் இலங்கை படையினருக்கு சொல்லிக் கொடுத்ததே இந்தியா தான் என்பது என் கருத்து...எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்கவே கூடாது

ரதி, உங்களுக்கு ஒரு பச்சை!

இதற்கில்லாத பச்சை, வேறு எதற்கு?

ஈழ பெற வழி என்னன்னு கதைக்க சொன்னா இந்தியாவை எதிர்க்க என்ன வழி ??? தமிழ் நாட்டை பிரிக்க என்ன வழின்னு வேல மெனக்கெட்டு பய புள்ளைக ஆராயுதுக . ஐயோ சாமி நான் வரல இந்த அழுகுணி ஆட்டத்திற்கு .

வட்டு கோட்டை தீர்மானம் பற்றி பேசுங்கய்யான்னா வட்ட செயலாளர் வண்டு முருகனை பற்றி பேசுதுங்க . என்னத்த சொல்லி என்னத்த பண்ணி ??!?!?!?!?! எல்லாம் நம் தலை விதி.

தேவையின்றி நேரத்தை வீணடித்து நான் கத்தி எந்த பலனும் ஏற்பட போகுது என்ற நப்பாசை முற்றாக அத்து இத்து போனதால் நான் கவுரவமாக இந்த திரியிலிருந்து விலகி கொள்கிறேன் .

வேணும்னா ஒன்னொரு திரியில் பியரில் எப்படி கலப்படத்தை கண்டுபிடிப்பதுன்னு ஒரு உறவு ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கு . அங்க போயி ஒரு ஓரமா நின்னுகிறேன் . தற்போது என்னால் முடிந்தது இது மட்டும் தான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92918

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "வியட்நாம் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இந்தியா மற்றும் வெளிநாடுகள், எண்ணெய் வளத்தைக் கண்டறிய வர வேண்டும். இது வியட்நாமின் இறையாண்மைக்கு உட்பட்டது. மேலும், 1982ம் ஆண்டு ஐ.நா., கடல் சட்டத்தின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Indo-China War in the Offing?

China has for long been building maritime and other linkages with eastern Africa, Seychelles, Mauritius, Maldives, Sri Lanka, Bangladesh, Myanmar and Cambodia, among others t

Apart from regular tensions between India and China, along Himalayan Mountain borders, the strain at sea regained momentum recently when China decided to leave its footprints in Maldives, a strategic location in Indian Ocean. India was among the first countries to recognize Maldives after its independence in 1965 and to establish diplomatic relations with this country. China has now sought to undertake various development projects in Maldives islands to challenge Indian Supremacy in the island nation. There are also reports of Chinese planning a secret naval submarine base in Marao (one of islands), as it is close to India. Moreover, China is building a fully fledged embassy in Male.

India has also been taking a step by step approach to counter Chinese measures. It has intensified its defense engagements with countries like Maldives, Mauritius and Seychelles. Indian warships now help Maldives in maritime patrol and surveillance. New Delhi is also helping Male set up ground radar networks in all its 26 atolls, linking them to Indian military surveillance systems. In 2006, India had also provided Maldives with Tillanchang, a 260-tonne fast-attack craft designed for fast and covert operations against smugglers and terrorists.

Apart from assisting many small nations in Indian Ocean, India has now begun to make its presence felt in Chinese frontiers. India seems to say, 'If you do it in Indian Ocean, we will do it in South China Sea'. This is where an agreement has been signed between India and Vietnam for oil exploration in China Sea.

India has also been sending naval warships to China Sea. An Indian naval warship sailing in South China Sea was last month stopped by China, which accused India of intruding into its Waters, and was asked to return. India was not intimidated. Foreign Minister S M Krishna asserted that India will continue to send more and more war ships to Vietnam ports in China Sea, angering China. In what may rattle China more, Defense Minister A K Anthony yesterday went on to acknowledge the benefits of holding joint exercises with regional and global powers like U.S., Japan and Vietnam in South China Sea and West Pacific.

As in 1962, these provocations targeted against each other might turn into a huge scale war between the two Asian giants.

The oil rich South China Sea has suddenly become the global focal point where interests of major global players like the United States and Japan meet, leave alone rising Asian giants like China and India. It has the second busiest sea lane in the world. There are also unsolved territorial disputes between China, Vietnam, Philippines, Taiwan, Malaysia and Brunei, with China claiming most of the South China Sea as well as the twin oil paradises, Paracel and Spratly islands. With China and Southeast Asian states disputing claims to the energy rich South China Sea, there is a potential for huge conflict in future involving countries like Japan, U.S, China and India, and the other smaller countries, leading to world war. Whether an Indo China war will begin such a conflict is another question. For now, the probability is bleak, but the possibility remains.

http://www.siliconindia.com/shownews/IndoChina_War_in_the_Offing-nid-94677-cid-1.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பைத்தியம் சொல்லுறதும் சரிதான்..! :huh: இந்தியாவை அனுசரிக்க வேணும்..! :unsure:

அதுக்கு ஒரே வழி..! சீனனை ஈழத்தில் முதலீடு செய்யும்படி கூட்டமைப்பு வலியுறுத்த வேணும்..! :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யார் இங்கு ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவையும்,தமிழ்நாட்டையும் பிரிப்பது மாதிரி கருத்து எழுதினது :lol: ...ஒரணியில் இந்தியா இருப்பது பிடிக்கவில்லையா என்ன :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் தமிழ் பைத்தியம் நீங்கள் ஒரு இந்திய உறவாக இருந்தால்.......இந்த களத்தில் நீடித்து நிலத்திருக்க வாழத்துக்கள்...ஏன்னா பல இந்திய உறவுகள இனைந்து இங்குள்ள கள உறவுகளின் கருத்துக்கள் காரணமான மனம் புண்பட்டு வருவதே இல்லை............

பல்லாக்கு தூக்குவது, பந்தம் பிடிப்பது, ஏன் விளக்கு பிடிக்க வேண்டுமாயிருந்தாலும், ஈழத்தமிழர் செய்துதான் இருக்கிறார்கள். அன்று பிருத்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, அங்கேயே தனக்கு நிகரிலா அறிஞன் என்று பிருத்தானியர்கள் வருணித்த பொன் இராமநாதன் தொடக்கம், இன்று பள்ளிக்கு போகாத பிள்ளையான் வரைக்கும் எல்லா தமிழ் அரசியல் வாதிகளும் சிங்களத்திற்கு எதையோ தூக்கியோ பிடித்துத்துதான் அரசியல் செய்துகொண்டு வந்திருக்கிறார்கள். சிங்களித்திடம் இது எதுவும் செயல்ப்படாது. எதுவுமே சிங்களத்திடம் செயல்ப்படாது என்றால் எதற்கு இந்தியாவிற்கு பல்லக்கு தூக்க வேணும்.

கூரையேறி கோழிபிடிக்கமாட்டாத குருக்கள் கூட்ட நாராயணனும், சிவசங்கர் மேனனும், சோனியா முசோனினிக்கு பல்லாக்கு தூக்கி ராசபக்சாவிடம் கூலி வாங்குகிறார்கள். சீனாக்காறன் வீட்டுக்குள் வந்தால் இவர்களுக்கு களத்தில் இறங்கி உயிரை கொடுத்து போராடி நாட்டை காப்பது பற்றி என்ன தெரியும். இவர்கள் போடும் பாதுகாப்பு திட்டங்களிளா வியட்நாம் என்ற வானமேறி வைகுண்டம் போக காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள். இந்தியாவின் கோடிக்குள் உளவு பார்க்க என்று வந்து ஒருமாத காலமாக வேண்டியவற்றை எல்லாம் சேகரித்துகொண்டு தன்பாதையில் போய்விட்டது சீனாவின் உளவு கப்பல். அணில் ஏறவிட்ட நாய் மாதிரி கொழும்பு துறைமுகத்திற்கு ஓடிவந்தது கிந்திய நேவி. ஓடி வந்து, சீனா கப்பலை கண்டிருந்தால் என்னதான் செய்திருப்பார்கள்?.

கச்ச தீவுக்கு அந்தோனியர் திருவிழாவுக்கு சென்றார்கள். அங்கே சீனா நேவி கூடாரமடித்திருந்தார்கள். அதைப்பற்றி என்னதான் கிழித்துவிட்டார்கள். எத்தனை முறை இவர்கள் பாக்கு நீரிணையில் சிங்கள கப்பல்களில் சீன நேவியை கண்டிருக்கிறார்கள். என்ன செய்தவர்கள். சென்றவருடம் சீனர்கள் என்ன செய்தவர்கள் தெரியுமா? நூற்றாண்டுகாலமாக தென் சீனக்கடலில் அமெரிக்க கப்பல்கள் ரோந்து சுற்றி வருகின்றன. இதை சீனர்கள் விரும்பவில்லை. சிறிய வள்ளங்களில் போய் அமெரிக்க போர்கப்பலை முறுகையிட்டிருக்கிறாகள் அந்தாளவுக்கு இருக்கு துணிச்சல் அவர்களிடம். கடந்தமாதம் யாழில் பதியபட்ட செய்தி -எல்லைதாண்டிவந்து அருணாசலப்பிரதேசத்தில், இந்திய பதுங்கு குழிகளை நொறுக்கி விட்டு போயிருக்கிறர்கள் சீனர்கள் என்பது. எத்தனை முறைதான் எல்லை மீறியிருக்கிறார்கள். தனது எல்லையில் நிண்டுபிடிக்காத இந்த நாராயணன் கூட்டத்தை வியட்நாமில் கணடவுடன் வெலவெலத்து போக போகிறது என்றா கதையெழுதுகிறார்கள்.

சீனா உண்மையில் பலமான நாடு. அதை போகவிட்டு விடலாம். ஆனால் ஒருமாதம் கூட இன்னும் ஆகவில்லை, 15 மணித்தியாலமாக தடுத்து வைக்கபட்டிருந்த தமிழக மீனவர்களை மீட்க ஓடிவந்த கிந்திய நேவி அதே வேகத்திலே சிங்கள நேவிகளை கண்டவுடன் திரும்பி ஓட்டம் பிடித்த கதை நடந்து. அகில உலகத்திலுமே நடக்காத மாதிரி, இந்திய தலைவர் இலங்கைக்கு வந்த போது சாதரண மாலுமி ஒருவர் துவக்கு சோங்கால் அடித்திருக்கிறார். அந்த அப்பட்டமான குற்றத்தை செய்ததிற்கு அவர் இன்று மக்களால் தெரிவுசெய்யபட்ட அரசியல் வாதி. ராகுல் இலங்கை வந்தால், கைகுலுக்கி இவருடன் சரிக்கு சமனாக இருந்து பேச வேண்டிய நிலை வரலாம். இவர்களால் என்ன செய்யமுடியும். சிங்களவர்களால் பிரிவினைக் கட்சிகாறன் என்று வெறுக்கப்பட்ட SJV வாதாடி பெற்ற ஒப்பந்தகளும் கொப்பைதொட்டிக்குள் தான் சென்றன். ரஜீவ் காந்தி சிங்களவர்களிடம் அடிவாங்கி, பல்லக்குதூக்கி பெற்ற ஒப்பந்தமும் குப்பை தொட்டிக்குள் தானே போனது. இவர்களால் இலங்கை பிரச்சனைக்கு என்ன செய்ய முடியும். இனாமக 50,000 வீடுகள் இலங்கைக்கு கட்டி கொடுக்க, ஒரு ரவில்வே ரோட்டு போட்டு கொடுக்க, மின்னாலை தொடக்க, இனாமாக காபர் கட்டி கொடுக்க எவ்வளவு கெஞ்சு கெஞ்சுகிறார்கள் இலங்கையை. முடிகிறதா இவர்களுக்கு. இவர்களுக்கு பல்லக்கு தூக்கி மினக்கெட இந்த நொண்டி குதிரைகளுக்கு முடியுமானது தான் என்ன? முருக்கு பெருத்து தூணுக்கு உடவுமா? இந்தியா பெருத்து யாருக்கென்ன? இதோ ஒருபாடல் இந்திய இலங்கை வலிமைகளை ஒப்பிட.

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும்

Edited by மல்லையூரான்

மல்லையூரான்,

பல சமகால நிகழ்வுகளை இணைத்து மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றிகள், தொடர்ந்தும் நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள்.

முன்பு ஒருமுறை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்றாவது யுத்தம் வருவதை அமெரிக்கா தடுத்து, காரணம் 40-60B மேற்பட்ட அமெரிக்க முதலீடு, அதன் அன்றாட வாழ்க்கையில் கூட இந்திய நிறுவனங்கள் பின்னிப்பிணைந்துள்ளன. அதுபோன்று சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வந்தால் அது ஒரு விதத்தில் மூன்றாம் உலக யுத்தமாக அமையலாம். அப்படி ஒரு யுத்தம் வருமா என்பது மேற்குலகத்தின் கைகளில் அதிகம் தங்கியுள்ளது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.