Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்

tna-cia.jpg

இரத்தக் கறைகளோடு அறுபது ஆண்டுகள் கடந்து போயின. தென்னாசியாவின் பேசப்படாத மூலையில் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பேரினவாத இரத்தப்பசிக்கு இரையான வரலாறு கடந்துபோன ஆறு தசாப்தங்களின் கறைபடிந்த வரலாறு. தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்ட இரணுவ ஒடுக்கு முறையை பேரினவாத்தோடும் அதன் எஜமானர்களோடும் பேசித் தீர்த்துகொள்ள முடியாது என்பதற்கு தமிழ்ப் பேசும் மக்களுக்கு நீண்ட அரசியல் பாடம் தேவைப்பட்டிருக்கவில்லை.

இன்றைக்கு வரைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும், பாசிசத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்கள் போராடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை.

தம்மை அழிப்பவர்களோடு “திருப்திகரமாகப்” பேச்சுவார்த்தை நடத்துகின்ற மேட்டுக்குடி, அதிகாரவர்க்கத் தமிழர்கள் தவிர, விடுதலை யாசித்துப் பெறுவதில்லை என்பதில் முன்னைவிட மக்கள் உறுதியாகவே உள்ளனர்.

வன்னிப் படுகொலைக்குத் தப்பியவர்கள், குண்டுத்துகள்களைச் சுமந்த குழந்தைகளோடு தெருக்களில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

எண்பதுகளில் மக்கள் போராடுவதற்குத் தயாரானார்கள். இலங்கை முழுவதும் ஜெயவர்தன அரசை மக்கள் வெறுக்க ஆரம்பித்திருந்த காலம். எங்கே மக்கள் தலமை உருவாகிவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசிற்கு ஏற்பட்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியாவிற்குப் பயணம் செய்தது. தான் அறிந்த மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் என்று அமிர்தலிங்கத்தை இந்திரா காந்தி அழைத்த போது யாழ்ப்பாண மேட்டுக்குடியின் தேசிய உணர்வு உச்சமடைந்தது.

இந்திரா காந்தி கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு எதிராகவும், சுய நிர்ணய உரிமைக்காகவும், வன்முறைக்கு எதிராகவும் போராடிய ஒவ்வோர் மனிதனையும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட தேசிய சிந்தனை எதிரியாக்கிக் கொண்டது. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிய இலங்கை ஆசிரியர் சங்கம் இந்திய ஒடுக்குமுறையாளர்களோடு கைகோர்த்துக் கொண்டவர்களைப் பார்த்துத் திகைத்துப் போனது.

இந்திய அரசு ஆயுதங்களை வேறு அள்ளிவழங்கியது. பயிற்சிக்காக தமிழ் இளையோரைக் கேட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அறியப்பட்ட அனைத்து இயக்கங்களுக்க்கும் பயிற்சியையும் ஆயுதங்களையும் பகிர்ந்தளிததனர். அப்ப்போதெல்லம் இந்தியாவிற்கு எதிராக மூச்சுவிடுவதற்குக் கூட இடம் தரப்படவில்லை. இந்தியாவைப் பிடித்து குறுக்கு வழியில் விடுதலை பெற்றுவிடலாம் என்றது யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனை. “எம்.ஜீ.ஆர் விடமாட்டர், இந்தியா ஓடிவரும், இலங்கை அரசு அழிக்கப்படப் போகிறது, நாங்கள் போராடுகிறோம் இந்தியா ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கை வார்த்தைகளை வழங்கியவர்கள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரைக்கும் நகர்த்திவந்து நந்திக்கடலை இரத்தம் தோய்ந்த செங்கடலாக்கினர்.

இடையிடையே ஒவ்வோர் விடுதலை இயக்கங்கள் தமது சொந்த நலன்களுக்காக யாழ்ப்பாண மேட்டுகுடி மையவாத அடிப்படையில் உருவாகின.

யாழ் மையவாதச் சிந்தனை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள எதிரிகளை நண்பர்கள் என்று அடையாளப்படுத்துவதிலிருந்தே ஆரம்பமாகும். சமூகத்தில் போர்க்குணம் மிக்க போராடும் சக்திகளான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையை நிராகரித்து “ஒரே குடையின் கீழ்” அனைவரயும் அழைத்து, தமது தலைமையை உறுதிசெய்து கொள்ளும்.

புலி இயக்கப் போராளிகள் தாடி வைத்துக் கொள்ளக் கூடாது என்றதும். யாழ்ப்பாணம் இதுவல்லவா ஒழுக்கம் என்றது. அவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்றதும் பக்தி தோய்ந்த தமிழ்க் கலாச்சரம் என்றார்கள். தூய்மை வாதம், ஒழுக்க முறைமைகள் என்று மேட்டுக் குடி வேள்ளாளர் சமூகத்திற்கே உரித்தான இயக்கமாக புலிகள் வளர்ச்சி பெறத் தொடங்கினர். புரட்சிக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பைவிட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிகளுக்கும் தொப்புள் கொடி உறவு நிலவியது. கூட்டணித் தலைவர்களைப் புலிகள் கொலை செய்தார்கள் என்பது வெறும் அதிகாரப் போட்டி மட்டும் தான்.

pirapa.jpg

இதெல்லாம் ஏதோ பிரபாகரன் செய்த தவறென்று திட்டித் தீர்ப்பதல்ல நமக்குத் தேவை. அதற்கும் மேலான எமது சமூகத்தின் அதிகார வர்க்கத்தை அப்படியே உள்வாங்கியதன் எதிர்விளைவு தான் இது.

புலிகளால் பிற்காலத்தில் அழிக்கப்பட்ட வேவ்வேறு இயக்கங்கள் கூட தத்தமது வசதிக்கு ஏற்ப மேட்டுக்குடி சிந்தனையை உள்வாங்கிக் கொண்டு அதன் எஜமானர்களின் ஏவல்கள் போலத் தான் தொழிற்பட ஆரம்பித்தனர். புளட் அமைப்பு மக்கள் அமைப்பு என்று வட கிழக்கு எங்கும் உருவாக்கிக் கொண்டது. அந்த இயக்கத்தை நியாயப்படுத்துவதற்காக உருவாக்காப்பட அந்த அமைப்புக்களை மேட்டுக்குடிச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் வழி நடத்தினர். அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப ஆரம்பித்தனர்.

புளட் அமைப்பிம் வறிய இளைஞர்கள் எல்லாம் முகாம்களில் உணவிற்காக வாடிக்கொண்டிருக்க, எதிர்காலத் தமிழீழத்தின் நிர்வாகிகளாகக் கனவு கண்ட மேட்டுக்குடி வேளாள இளைஞர்கள், நகரங்களதும் கிராமங்களதும் நிர்வாகிகளாகினர். மக்கள் அமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பிரச்சார அமைப்புக்களிலும் இதே நிலை தான். புலிகளிலிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதற்காக மட்டும் தம்மை இடது சாரிகளாக அடையாளப்படுத்திக் கொண்டது இந்த இளைஞர்கள் கூட்டம்.

புலிகளின் அதே மேட்டுக்குடி தூய்மைவாத சிந்தனையோடு ஈரோஸ், என்.எல்.எப்.ரி போன்ற பருமனில் சிறிதான ஆயுதக் குழுக்கள் உருவாகின. இவர்கள் கூட அதே சிந்தனையை வெவ்வேறு அளவுகளில் கொண்டிருந்தனர்.

இலங்கை அரசின் இன்றுவரை தொடரும் ஆயுத அடக்குமுறையோ இந்த எல்லா அழுக்குகளையும் அப்படியே விட்டுவைத்திவிட்டு மனித உயிர்களை மட்டுமே காவுகொண்டது.

இந்த நீண்ட சோக வரலாறு முப்பது ஆண்டுகாலக் கால எல்லையைக் கொண்டது. மாற்றங்கள் பலவற்றை உருமாற்றியிருக்கிறது. நமது சிந்தனை மட்டும் ஒரு சுற்றுவட்டம் போல மீண்டும் சுழன்றுகொண்டிருக்கிறது.

சில வியாபாரிகளையும், மேலதிகமான திருடர்களையும், மன நோய் கொண்டவர்களையும் உருவாக்கியிருப்பது தான் புதிய மாற்றங்களாகக் கருதிக்கொள்ளலாம்.

இப்போது ஒரு முழுச் சுற்று முடிந்து புதிய சுற்று ஆரம்பமாகியிருக்கிறது. ஒரு வேறுபாடு : சுழல்கிற வேகத்தைப் பார்த்தால் அழிக்கப்படுவதற்கு 30 ஆண்டுகள் தேவைப்படாது. சில குறுகிய வருடங்களே போதும்.

இந்தியாவை அமரிக்காவும் மேற்கு நாடுகளும் நிரப்பியுள்ளன. சீ.ஐ.ஏ என்ற பயங்கரவாத அமைப்பின் சிலந்தி வலைக்குள் தமிழ் மேட்டுக்குடித் தேசியம் சிக்க வைக்கப்பட்டுள்ளது, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சிந்தனையால் உள்வாங்கப்பட்ட சிந்தனை சிதைவடைந்த சமூகத்தின் ஒரு பகுதி சம்பந்தர் சாதனை செய்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது. வரலாறு மட்டும் தனது மறு பதிப்பை ஆரம்பித்துள்ளது.

எண்பதுகளில் அழிவுக்ககுக் காரணமான யாழ் மேட்டுக்குடி வேளாள மையவாததின் காவு கருவிகளாகத் தொழிற்பட்ட அத்தனை அழிவு சக்திகளும் இன்று களத்தில் வெவ்வேறு நிலைகளில் இயங்குகின்றன. அதே அழிவுக்கான சிந்தனையோடே அவர்கள் தமது அடையாளத்திற்காவும், அந்த அடையாளம் உருவாக்கும் வியாபார அரசியலுக்காகவும் பல்வேறு தளங்களில் இவர்களின் இயக்கம் காணப்படுகிறது. அரசியல் வியாபாரப் போட்டியில் மனிதப் பிணம் தின்பவர்கள் போல முட்டி மோதிக் கொள்கிறார்கள். அருவருக்கத் தக்க வன்முறைகள் கருத்துத் தளத்திலிருந்து நேரடி மோதல்வரை எல்லா தளங்களிலும் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் தேசியம், புனிதம், தூய்மை என்ற வார்த்தைகள் அடைக்கலம் கொடுக்கின்றன.

அமரிக்காவில் சம்பந்தன் குழு காலடி வைத்த அதே நாளில் அமரிக்க அரசிற்கு எதிராகப் போராடியவர்களை மிலேச்சத் தனமாக அடக்கியுள்ளது அமரிக்க அரசு. அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் லிபியாவை ஆக்கிரமித்துள்ளது. பாஹ்ரெயினிலும், யெமெனிலும் அமரிக்க விசுவாச ஆட்சியாளர்கள் மக்கள் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்னதாக அமரிக்காவில் 1945 இற்குப் பின்னர் இவ்வளவு வறுமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கைகள் வந்தன. உலகத்தின் பெரும்பகுதி நாடுகளை ஏதோ ஒருவகையில் ஆக்கிரமித்து சீரழித்த அமரிக்கா, தன்னைத் தக்கவைத்துக்க்கொள்ள முடியாத நிலைக்கு வந்திருக்கிறது.

உலகத்தில் உரிமைக்காகப் போராடுகின்ற அத்தனை 95 வீதமானவர்கள் அமரிக்காவை கோரமான எதிரியாகத்தான் கணிக்கின்றனர். இவர்களுக்கு எல்லம் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய சார்புப் போராட்டமாக அறிவித்திருக்கிறது சம்பந்தன் குழுவின் வேளாள மேட்டுக்குடி அரசியல்.

கடாபியை சர்வாதிகரியாகவும், நில உடமை மனோபாவம் கொண்ட பிற்போக்கு வாதியாகவும் கணித்த உலக மக்களின் சிந்திக்கத் தெரிந்த நேர்மையான ஜனநாயகவாதிகள் கூட அமரிக்க ஆக்கிரமிப்பை அவர்களின் எண்ணைப் பசியை எதிர்த்து உலகம் முழுவதும் பிரச்சரங்களிம் போராட்டங்களும் மேற்கொண்டனர்.

உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஏகாதிபத்தியங்கள் தமது கொள்ளைக்காக நாசம் செய்துகொண்டிருக்கும் போதே மனிதாபிமானிகளும், ஜனநாயாகவாதிகளும், முற்போக்கு சக்திகளும் அழிக்கப்படும் மக்கள் சார்பில் குரல் கொடுக்கின்றனர். பலஸ்தீனியப் போராட்டம்; அத்தனை வல்லரசுகளும் இணைந்து கூட இன்றும் அழிக்கப்பட முடியவில்லை. ஏன நமது கொல்லைப்புறத்தி நடைபெறும் நாகாலாந்துப் போராட்டத்தையோ, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு இராணுவம் வீதம் குவிக்கப்ப்பட்டிருக்கும் கஷ்மீர் போராட்டத்தையோ, லத்தீன் அமரிக்க எழுச்சிகளையோ, ஐரோப்பிய நாடுகளின் போராட்டங்களையோ இன்றுவரை ஈழப் போராட்டத்தைப் போன்று துடைத்தெறிய முடியவில்லை.

இவர்கள் எல்லோருக்குமே நாங்கள் எதிரிகள் என்று முப்பது வருடமாகத் திருமபத் திரும்பச் சொல்லியிருக்கின்றோம். அவர்களை எதிரிகள் ஆக்கியிருக்கிறோம். வன்னிப் படுகொலைகளை அமரிக்கா செய்மதியில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த போது எமக்காகக் குரல் கொடுப்பதற்கு நண்பர்கள் இருக்கவில்லை. இன்று அமரிக்கக் கொலைகாரர்களின் அடுப்படி வரை சென்றிருக்கிறோம். நாளை ஈழத்தின் இன்னொரு மூலையில் இன அழிப்பு நடக்கும் போது சீனாவும் இந்தியாவும் ஆயுதம் வழங்க அமரிக்கா பார்த்து ரசிக்க இனவாத வியாபாரிகள் தேசியம் பேசிக் கொண்டிருப்பார்கள்.எமக்காகக் குரல்கொடுக்க யாரும் வரமாட்டார்கள். அப்படிக் குரல்கொடுக்க வல்லவர்களைத் தானே எதிரிகள் ஆக்கிக் கொள்கிறோம். அவர்களுக்குத் தானே நம் அமரிக்காவின் கைக்கூலிகள் என்று சொல்கின்றோம்.

vellalar-300x181.jpg

யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடியின் தேசிய வியாபாரம் அத்தனை மக்களது கண்களையும் கட்டிவைத்துவிட்டு உலகம் முழுவதும் வீறு நடை போடுகிறது. ஊடகங்களுக்குச் “சூடான செய்திகள்” தேவைப்படுகிறது.

“தமிழீழம் விழிம்பில் இருக்கிறது, ராஜபக்ச கைதாகப் போகிறார், பிரபாகரன் உயிரோடிருந்து போராடத் தயாராகிறார், கிலாரி ஈழப் போராட்டத்திற்கு உதவி செய்கிறார்.. ” ; எத்தனை நம்பிக்கைகள்? எல்லாம் போலிகள். இவை எல்லாம் தமது வியாபாரத்தை நடத்த ஊடகங்களுக்குத் தேவை. தாங்கள் காய்களை நகர்த்துகிறோம் என்று கூறிக்கொள்ள தேசிய வியாபாரிகளுக்கு ஊடகங்கள் தேவை. ஏகாதிபத்தியங்களுக்கு இந்த வியாபாரிகள் தேவை. இவை எல்லாவற்றினதும் இறுக்கமான கூட்டு மட்டும் தான் இன்று ஈழப் பிரச்சனையை முன்வைத்து இயக்கம் பெற்றுள்ளது.

இவ்வாறான இணைவைத் தான் “ஒற்றுமை” என்று அழைக்கிறார்கள். இதன் மறுபக்கம் எமது நண்பர்களை எதிரிகளாக்குகின்றது. பள்ளிப்படிப்பையே அறிந்திராத பழங்குடி மக்களின் இந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச மயப்பட்ட அளவிற்கு, உலகு எங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் மத்தியில் பேசப்பட அளவிற்கு நமது போராட்டம் பேசப்படவில்லை.

யாழ்ப்பாண மேட்டுக்குடி அரசியல் எமக்குச் சொல்லிததந்த “சர்வதேசம்” அமரிக்காவும், ஐரோப்பாவும், இந்தியாவும் மிஞ்சிப் போனால் சீனாவும் மட்டும் தான். முள்ளிவாய்க்கால் மனிதப்பிணக்காடாய் காட்சி தந்த போது அவர்களின் “சர்வதேசியத்திற்கு” அழுத்தம் கொடுக்கவல்ல ஜனநாயக சக்திகளை எல்லாவற்றையும் அன்னியப்படுத்தியிருந்தோம். அமரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பி அழிந்து போயினோம்.

இதே அழிவிற்கான அத்திவாரம் இன்னொரு முறை மிகப்பலமாக சம்பந்தன் குழுவினால் அமரிக்காவில் இடப்படுக்கொண்டிருகிறது. இது எமது போராட்டத்தில் இன்னொரு இரத்தக்கறை. போராடும் மக்களின் அவமானம்ச் சின்னம்.எதிரிகளை அதிகரித்து அழிவிற்கான புதைகுழிகளை ஆழப்படுத்தும் செயற்பாடு.

சட்டலைட்டில் கொலைகளை சுவைத்துக்கொண்டிருப்பவர்கள் இனித் தேவையில்லை. எங்களின் வலியை அறிந்து கொள்ளும் சட்டலைட் உரிமையாளர்களுகு எதிராகப் போராடுவோரே எமக்காகப் போராடுவார்கள். அவர்கள் எங்களின் நண்பர்கள் என்பதால் மட்டுமல்ல உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடுபவர்கள் என்பதா; நாங்களும் அவர்களோடு இணைவோம்.

டக்ளசும் கருணாவும் இன்னோரன்ன அரச துணைக்குழுக்களும் செய்கின்ற அதே வேலைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செய்கின்றது.

நாம் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டவர்களானால் இந்த அழிவிற்கான சுவர்களை உடைத்துக்கொண்டு புதிய அரசியல் உருவாகும். யாழ் மேட்டுக்குடி அரசியல் அழிக்கப்படும். புதிய மக்கள் அரசியல் போராட்டத்தைத் தனது கைப்பற்றும். அவர்கள் நண்பர்களையும் எதிரிகளையும் இனம் கண்டுகொள்வர்.

http://inioru.com/?p=24086

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆளாளுக்கு மையவாதம்.. சைட்டுவாதம்.. என்று எழுதிச் சிலாகித்துக் கொண்டு இருக்கலாம். பிரபாகரன் தப்பு.. புலி தப்பு.. யாழ்ப்பாணத்தான் தப்பு.. மட்டக்களப்பான் தப்பு.. சம்பந்தன் தப்பு.. கூட்டமைப்பு தப்பு.. அப்ப என்னதான் சரி. எப்படி போராடுறது சரி.. எப்படி போராடினா வெற்றி வரும்.. எவர் சரி....????! இதை எந்த வெட்டிப் பயலும் சொல்லுறானில்லையே...???!

இது தமிழ் தேசிய கருத்தோட்டத்தின் குழப்பத்தின் மையத்தில் இருந்து பிறக்கும் மைய நீக்க விசையின் நீட்டம்.. சிங்களத்தின் மைய நாட்ட விசையை கவர்ந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பின் ஆரம்பம்..! :(:lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

நீண்ட நேரம் பேசக்கூடிய பிடல் காஸ்ரோ மாதிரி அஜித்துக்கு நீளமாக எழுதத்தெரிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரம் பேசக்கூடிய பிடல் காஸ்ரோ மாதிரி அஜித்துக்கு நீளமாக எழுதத்தெரிகின்றது.

உண்மைதான்.

இன்னொரு திரியில் கவிஞர் யதார்த்தமாக எழுதியதையும் பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93718&view=findpost&p=701795

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்

நம்ம அஜீத் வந்து ஊருக்கு புதுசு. இவரு சோடணை எழுத்து உலகத்திற்கு சும்மா ஒரு ரூக்கிதானுங்க. யாழிலை என்னா மதிரியெல்லாம் பெனிரேட் பண்ணி எழுதுறாங்க. அந்த அட்வான்ஸ்ட் ரயிட்டிங்குகளுக்கு முன்னால் இது எம்மாத்திரம். இந்த மாதிரி சோடை போகவிட்டிட்டு கோத்தாவிட்டை காசு என்று போக காலாலைதான் எட்டி உதைக்க போறான்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Wow!, what a bunch of bull crap? What is this self defeating writer trying to achieve with this article? Are you batting for the wrong team or what?

This level of Stupidity makes me ANGRY!!!!!

அஜித் இன் நோக்கம் பிழையாக தெரிகிறது, மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜித் கொத்தாவிண்ட புத்தகத்தில ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார் போலும்.

மேட்டுக்குடிக்கும் வேளாளருக்கும் இடையிலே கூட வித்தியாசம் தெரியாமல்...பாவம்... தெரிந்த மாதிரி நீட்டி முழக்கிவிட்டார்.

மேட்டுக்குடி என்பது தமிழ் நாட்டில் உள்ள பிராமண சாதியை குறிக்கும் வார்த்தை. வேளாளர் வேளாண்மை செய்யும் சமூகத்தை குறிக்கும் சாதி பெயர்.

அஜித் இரண்டையும் சேர்த்து ஒரு புது சாதியை உருவாக்கி விட்டார்.

என்னவோ, இதை படித்த பாண் கி மூன் உச்சுக்கொட்டி இப்பவே அஜித்தை அட்வைஸ் பண்ண அழைக்க ஹெலிஹோப்ட்டர் அனுப்பிட்டாராம்.

நீண்ட நேரம் பேசக்கூடிய பிடல் காஸ்ரோ மாதிரி அஜித்துக்கு நீளமாக எழுதத்தெரிகின்றது.

என்ன செய்யிறது? தலையில துவக்கெண்டால் நாங்களும் இப்படிதானே இழுத்தடிப்பம். பாவம் அஜித்!

///“தமிழீழம் விழிம்பில் இருக்கிறது, ராஜபக்ச கைதாகப் போகிறார், பிரபாகரன் உயிரோடிருந்து போராடத் தயாராகிறார், கிலாரி ஈழப் போராட்டத்திற்கு உதவி செய்கிறார்.. ” ; எத்தனை நம்பிக்கைகள்? எல்லாம் போலிகள். இவை எல்லாம் தமது வியாபாரத்தை நடத்த ஊடகங்களுக்குத் தேவை. தாங்கள் காய்களை நகர்த்துகிறோம் என்று கூறிக்கொள்ள தேசிய வியாபாரிகளுக்கு ஊடகங்கள் தேவை. ஏகாதிபத்தியங்களுக்கு இந்த வியாபாரிகள் தேவை. இவை எல்லாவற்றினதும் இறுக்கமான கூட்டு மட்டும் தான் இன்று ஈழப் பிரச்சனையை முன்வைத்து இயக்கம் பெற்றுள்ளது.

இவ்வாறான இணைவைத் தான் “ஒற்றுமை” என்று அழைக்கிறார்கள். இதன் மறுபக்கம் எமது நண்பர்களை எதிரிகளாக்குகின்றது. பள்ளிப்படிப்பையே அறிந்திராத பழங்குடி மக்களின் இந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச மயப்பட்ட அளவிற்கு, உலகு எங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் மத்தியில் பேசப்பட அளவிற்கு நமது போராட்டம் பேசப்படவில்லை.

யாழ்ப்பாண மேட்டுக்குடி அரசியல் எமக்குச் சொல்லிததந்த “சர்வதேசம்” அமரிக்காவும், ஐரோப்பாவும், இந்தியாவும் மிஞ்சிப் போனால் சீனாவும் மட்டும் தான். முள்ளிவாய்க்கால் மனிதப்பிணக்காடாய் காட்சி தந்த போது அவர்களின் “சர்வதேசியத்திற்கு” அழுத்தம் கொடுக்கவல்ல ஜனநாயக சக்திகளை எல்லாவற்றையும் அன்னியப்படுத்தியிருந்தோம். அமரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பி அழிந்து போயினோம்.

------------------------------------------------------------------

எண்பதுகளில் மக்கள் போராடுவதற்குத் தயாரானார்கள். இலங்கை முழுவதும் ஜெயவர்தன அரசை மக்கள் வெறுக்க ஆரம்பித்திருந்த காலம். எங்கே மக்கள் தலமை உருவாகிவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசிற்கு ஏற்பட்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியாவிற்குப் பயணம் செய்தது. தான் அறிந்த மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் என்று அமிர்தலிங்கத்தை இந்திரா காந்தி அழைத்த போது யாழ்ப்பாண மேட்டுக்குடியின் தேசிய உணர்வு உச்சமடைந்தது.

இந்திரா காந்தி கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு எதிராகவும், சுய நிர்ணய உரிமைக்காகவும், வன்முறைக்கு எதிராகவும் போராடிய ஒவ்வோர் மனிதனையும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட தேசிய சிந்தனை எதிரியாக்கிக் கொண்டது. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிய இலங்கை ஆசிரியர் சங்கம் இந்திய ஒடுக்குமுறையாளர்களோடு கைகோர்த்துக் கொண்டவர்களைப் பார்த்துத் திகைத்துப் போனது.

இந்திய அரசு ஆயுதங்களை வேறு அள்ளிவழங்கியது. பயிற்சிக்காக தமிழ் இளையோரைக் கேட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அறியப்பட்ட அனைத்து இயக்கங்களுக்க்கும் பயிற்சியையும் ஆயுதங்களையும் பகிர்ந்தளிததனர். அப்ப்போதெல்லம் இந்தியாவிற்கு எதிராக மூச்சுவிடுவதற்குக் கூட இடம் தரப்படவில்லை. இந்தியாவைப் பிடித்து குறுக்கு வழியில் விடுதலை பெற்றுவிடலாம் என்றது யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனை. “எம்.ஜீ.ஆர் விடமாட்டர், இந்தியா ஓடிவரும், இலங்கை அரசு அழிக்கப்படப் போகிறது, நாங்கள் போராடுகிறோம் இந்தியா ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கை வார்த்தைகளை வழங்கியவர்கள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரைக்கும் நகர்த்திவந்து நந்திக்கடலை இரத்தம் தோய்ந்த செங்கடலாக்கினர்.///

சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை இந்திய ஆழும் வர்க்கம் எவ்வாறு சீரளித்தது, எவ்வாறு தமது சுயநலன்களுக்கு ஏற்ப தமிழர்களது விடுதலையின் தேவையை பயன்படுத்திக்கொண்டது.

அன்று தொடக்கம் இன்றுவரை சிங்களத்தின் அத்துணை செயற்பாட்டிலும் கூடவே இருக்கும் மேற்குலகம். தமிழர்களின் உயிர்குடித்த ஆயுதங்களின் தயாரிப்பாளர்கள் வினயோகிஸ்தர்கள் பொருளுதவியாளர்கள். சமாதான காலத்தில் போராட்த்தரப்பை பயங்கரவாதியாக்கி தடைகளை ஏற்படுத்தி விடுதலைப்போரை பயங்கரவாதமாக்கி முடித்துவைத்த காரணகர்த்தாக்களான மேற்குலகு.

இவ்வாறு தமிழர்களின் அழிவுக்கு எவர்களெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களிடம் திரும்ப திரும்ப மண்டியிடவைக்கும் தமிழர் தரப்பின் அடிப்படை அரசியல் இயக்கச் சக்தி குறித்து இக்கட்டுரை கருத்துக்களை முன்வைக்கின்றது.

தமிழர்களின் விமோசனத்துக்கான முதற்படியாக தமிழர்களது அடிப்படை அரசியல் இயங்கு தளம் மேட்டுக்குடிகளிடம் இருந்து சமூகத்தின் அடித்தட்டு மக்களின் கைகளுக்கு வந்துசேரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. தாயகத்தில் இது நடந்தே தீரும் ஏனெனில் என்னுமொரு முள்ளவாய்க்காலுக்கு மக்கள் தயாராக நிச்சயம் இல்லை.

அதே வேளை புலத்தில் தமிழ்த்தேசியத்தை மையமாக வைத்து அடயாளப்போட்டியின் நிமிர்த்தம் மேட்டுக்குடிகள் குத்துப்பட்டு தாங்களாகவே சிதைந்துகொள்வார்கள். பெரும்பான்மை மக்கள் இந்தக் குத்துப்பாடுகளால் புலத்து நடவடிக்கைகளிலும் தலமைகளிலும் நம்பிக்கை இழந்து தாயக மக்களின் முயற்ச்சிக்குப் பின்னால் செல்வார்கள். அதைத் தவிர வேறு வழிகள் இருக்கவாய்ப்பில்லை. தற்போதைய சூழல் எப்படி இருப்பினும் விடுதலையின் தேவை எவனுக்கு அதிகப்படியான அவசியமோ அவனிடமே அதற்கான பொறுப்பும் இறுதியில் வந்து சேரும் என்பதே விதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜித் எழுதியதில் சில உண்மைகள்இருந்தாலும் சாதிப்பிரிவினை வாதம் முன் வைத்து எழுதியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் முன் தமிழன் ஒன்றுபடவேண்டும். இந்தியாவிற்காக அழிந்த தமிழன் இனி அமெரிக்காவிற்காகப் பலிகடா ஆக்கப்படுகின்றான் என்பது யதார்த்தம். இனியொரு போர் என்றால் இலங்கையில் தமிழினம் இருக்காது. நம்பி நம்பி ஏமாந்த தமிழினம் இன்னும் நம்பி நம்பி ஏமாறப்போகின்றது. கிடைத்த தலைமை நல்லதோ கெட்டதோ அதை வைத்து சாதிக்கமுடியாத தமிழர்கள் இனிமேல் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பது நிதர்சனம். இப்போது எல்லாம் வயிற்றுப்பாட்டுக்குத்தான். 1957களில் போய் நிற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு இராணுவம் வீதம் குவிக்கப்ப்பட்டிருக்கும் கஷ்மீர் போராட்டத்தையோ, லத்தீன் அமரிக்க எழுச்சிகளையோ, ஐரோப்பிய நாடுகளின் போராட்டங்களையோ இன்றுவரை ஈழப் போராட்டத்தைப் போன்று துடைத்தெறிய முடியவில்லை.

எல்லா போராட்டமும் இன்னும் துடைத்தெறியவில்லையாம் ஆனால் ஈழப்போராட்டம் துடைத்தெறியப்பட்டுவிட்டதாம் சும்மா கிறுக்குவதற்காக கிறுக்ககூடாது.....

பலஸ்தீனம் ..இஸ்ரேல் இருக்கும் வரை நடக்காது

காஷ்மீரம்.....இந்தியா இருக்கும் வரை நடக்காது

நாகலாந்து.....இந்தியா இருகும் வரை நட்க்காது

லத்தீன் அமேரிகா நாடுகளின் அபிலாசை....அமேரிக்கா இருக்கும் வரை நடக்காது

தீபத்து ....சீனா இருக்கும்வரை நடக்காது

ஈழம் ...சிங்களவனும் இந்தியாவும் இருக்கும் வரை நடக்காது ......ஆனால் எல்லா இனத்தினதும் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும்...

காஷ்மீர்காரனின் போராட்டம் துடைத்து எறியப்படவில்லை என்றால்

எமது போராட்டமும் துடைத்து எறியப்படவில்லை என்பது நிதர்சனம்...

இப்படியான கட்டுரைகளை வாசிக்கும்போது சில விடயங்கள் வெளிச்சமாகின்றன.

அதாவது எப்படியெல்லாம் தமிழரைக்குழப்பமுடியுமோ,எப்படி தமிழர்களுடைய அரசியல் காய் நகர்த்தல்களை தடுக்கமுடியுமோ என்னும் ஓர் முயற்சியில் இறங்கிய நபராகவே இந்தக்கட்டுரை ஆசிரியர் காட்சியளிக்கிறார். ஏனனில் இவர் யாரை நல்லவர் என்கிறார் யாரை கெட்டவர் என்கிறார் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்று கூறுகிறார் ஒன்றுமே புரியவில்லை. இறுதியாக இவரின் கருத்துப்படி தமிழர்கள் தான் பிரச்சனைக்கு காரணம் சிங்களவர்களல்ல ஆகவே சிங்களவர்களின் அரசின்கீழ் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்ந்தால் மாத்திரம் தான் தமிழர்களுக்கு அடிமை வாழ்க்கையாவது மிஞ்சும் ,இல்லையேல் உலகமும் சிங்களவனும் எம்மை அழித்துவிடுவார்கள் என்பதாகும்.

அஜித் அண்ணே நீங்க நல்லவரா அல்லது கெட்டவரா, சொல்லாட்டி அழுதிடுவேன்.... :icon_mrgreen::D:mellow::lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்காவிடமும் மேற்குலகிடமும் என்று சொல்வர் சிலர் ஆனால் சிலர் அவனின்றி அணுவும் அசையாது யாரும் இந்தியாவை தாண்டி வரமுடியாது என்பர் இன்னும் சிலரோ புதிய உலக வலுசமனிலை சீனாவிற்கே சாதகமாக செல்கிறது எனவே சீனாவை நாடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்

பொதுவாக மேற்குலகு கவனம் செலுத்தும் உலக அரசு என்னும் புதிய காலனித்துவத்திற்கு அடி நாதமாகவுள்ள பொருளாதர நலனிற்கு ஏற்ற வகையில் அதனை நடை முறைபடுத்துவதற்கு கூட அவர்களது பொருளாதாரம் கொடுக்காத நிலையில் அவர்களுக்கு சில இடைத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள் இப்போது பரவலாக புரட்சி படை என்னும் பெயரில் இந்த இடைத்தரகர்களே இயங்குகிறார்கள்

இதற்கு சோமனின் சோத்தி மாடான இந்தியாவும் விதி விலக்கில்லை.

ஆனால் பிரச்சனைக்கு தீர்வு எம்மிடமே உள்ளது

உ+ம் இந்திய மீனவர் பிரச்சனைக்கு காரணம் அவர்களின் அறியாமையால் இளுவை படகுகளை பாவித்து தமது வளத்தை அழித்துவிட்டு இப்பொழுது எல்லைதாண்டி குறுகிய கால சிந்தனையுடன் அங்கும் வழ்ங்களை அழிக்கவேணும் என்று நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் விமோசனத்துக்கான முதற்படியாக தமிழர்களது அடிப்படை அரசியல் இயங்கு தளம் மேட்டுக்குடிகளிடம் இருந்து சமூகத்தின் அடித்தட்டு மக்களின் கைகளுக்கு வந்துசேரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. தாயகத்தில் இது நடந்தே தீரும் ஏனெனில் என்னுமொரு முள்ளவாய்க்காலுக்கு மக்கள் தயாராக நிச்சயம் இல்லை.

அதே வேளை புலத்தில் தமிழ்த்தேசியத்தை மையமாக வைத்து அடயாளப்போட்டியின் நிமிர்த்தம் மேட்டுக்குடிகள் குத்துப்பட்டு தாங்களாகவே சிதைந்துகொள்வார்கள். பெரும்பான்மை மக்கள் இந்தக் குத்துப்பாடுகளால் புலத்து நடவடிக்கைகளிலும் தலமைகளிலும் நம்பிக்கை இழந்து தாயக மக்களின் முயற்ச்சிக்குப் பின்னால் செல்வார்கள். அதைத் தவிர வேறு வழிகள் இருக்கவாய்ப்பில்லை. தற்போதைய சூழல் எப்படி இருப்பினும் விடுதலையின் தேவை எவனுக்கு அதிகப்படியான அவசியமோ அவனிடமே அதற்கான பொறுப்பும் இறுதியில் வந்து சேரும் என்பதே விதி.

அப்படி ஒரு தலைமை தாயகத்தில் இன்னும் உருவாகவில்லை.அப்படி ஒரு தலைமை உருவாக அரை நூற்றாண்டாவது செல்லும்.

புலத்தில் வெட்டுக்கொத்து ஏற்படுவது தவிர்க்க முடியாது.புலிகளின் தோல்விக்கு பொறுப்பான புலத்து வியாபாரிகள் தமது முகத்திரையை மறைக்க பூசல்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.சிறிலங்கா அரசும் இப்படி குழப்புபவர்களை ஊக்குவித்தபடியே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.