Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி நீங்கள் “நீண்ட கட்டுரை எழுத அவகாசமில்லை.நெடும்காலமாக இந்தியா என்றால் காங்கிரஸ் என்கிற தவறான அணுகுமுறையே உள்ளது. எங்கள் அறிஞர்கள் பலரும் இந்த நிலைபாடு எடுத்ததுதான் துர் அதிஸ்ட்டம். தயவு செய்து சிந்திக்கவும்

உங்களது மேற் குறிப்பிட்ட கருத்தைப் பார்த்த பின்.... எமக்கு உங்களது நீண்ட கட்டுரை தேள்வையில்லை.” என்று எழுதினீங்க. எமக்கு என்றாய் யாழ்கலத்தில் வருகிற அனைவருக்கும் என்றுதானே அர்த்தம் நண்பரே? யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உங்கள் கருத்து சம்மதம் என்று நினைக்கிறீர்களா நண்பரே

  • Replies 87
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி நீங்கள் “நீண்ட கட்டுரை எழுத அவகாசமில்லை.நெடும்காலமாக இந்தியா என்றால் காங்கிரஸ் என்கிற தவறான அணுகுமுறையே உள்ளது. எங்கள் அறிஞர்கள் பலரும் இந்த நிலைபாடு எடுத்ததுதான் துர் அதிஸ்ட்டம். தயவு செய்து சிந்திக்கவும்

உங்களது மேற் குறிப்பிட்ட கருத்தைப் பார்த்த பின்.... எமக்கு உங்களது நீண்ட கட்டுரை தேள்வையில்லை.” என்று எழுதினீங்க. எமக்கு என்றாய் யாழ்கலத்தில் வருகிற அனைவருக்கும் என்றுதானே அர்த்தம் நண்பரே? யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உங்கள் கருத்து சம்மதம் என்று நினைக்கிறீர்களா நண்பரே

கவிஞரே...

யாழ் களம் என்பதே... ஒரு குடும்பம் தானே..

நாம், எமக்கு, என்று சொல்லும் போது நெருக்கம் அதிகரிக்கின்றது என்னும் அர்த்தத்தில் தான்.... அந்தச் சொல்லைப் உங்களுக்காக பயன் படுத்தினேன். அது உங்களுக்கு விளங்காதது... எனது தூரதிஷ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி, என் குறிப்பு இந்தியா மற்றும் போராளிகள் பற்றியதல்ல

இது எங்கள் ஒன்றில் கறுப்பு அல்லது வெள்ளை என்னும் ராஜதந்திர அணுகுமுறை பற்றியதாகும். இது “ஒன்றில் எங்களோடு அல்லது எதிரியோடு” என்று முன்னைநாள் அமரிக்க அதிபர்வ் புஸ் சொன்னதுபோன்ற அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை அமரிக்காவையே நெருக்கடிக்கு ள்ளாக்கிய அணுகுமுறையாகும்.

தயவு செய்து நான் கூறிய விடயங்களில் ஏதாவது ஒரு உண்மையிருந்தாலும் நான் சொல்லியதற்க்காக அதை நிராகரிக்காமல் அதுபற்றி சிந்திக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி, என் குறிப்பு இந்தியா மற்றும் போராளிகள் பற்றியதல்ல இது எங்கள் ஒன்றில் கறுப்பு அல்லது வெள்லை என்னும் ராஜதந்திர அணுகுமுறை பற்றியதாகும். ஆனாலும் தயவு செய்து நான் கூறிய விடயங்களில் ஏதாவது உண்மையிருந்தால் அதுபற்றி சிந்திக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

கவிஞரே, இன்னும் நான்..... ரோஒ அரசியலுக்கு முதிர்ச்சியடையவில்லை.

அந்த துப்புக்கெட்ட, அரசியலும் எனக்கு வேண்டாம்.

சர்வதேச அரசியலில் நலன்களே தாக்கம் செலுத்துகின்றன, தனி நபர்களோ ஒரு சில அதிகாரிகளோ அல்ல.இந்தியா என்றால் காங்கிரசோ அல்ல.இந்தியா என்றால் அதன் அதிகார வர்க்கம்.அது தான் தமது கொள்கைகளை காலத்துக்குக் காலம் எடுக்கிறது.அந்தக் கொள்கை என்றுமே தேசிய இனங்களின் சுய நிர்ணயப் போரடங்களுக்கும் இந்திய உபகண்ட்டத்தில் ஜன நாயகத்துக்கும் எதிரானாது.இதில் எமது போராட்டமும் விதிவிலக்கானது இல்லை. நாம் இந்திய அரச அதிகாரத்துடன் அல்லாமல் அதன் மக்களுடன் ,மக்கள் அமைப்புக்களுடன் எமது போராட்டத்தைக் கொண்டு சென்று இருக்க வேண்டும்.ஆனால் நாங்கள் கருணானிதி போன்ற சந்தர்ப்ப வாதிகளுடனும் சில கூஜா தூக்கிகளின் வார்த்தைகளை நம்பியும் ,இந்தியாவைப் பற்றியும் நீர்வேயயிப் பற்றியும் புரியாது இருக்கிறோம்.

நோர்வையின் பின்னால் மேற்குலகம் இருக்கிறது.இன்று தமிழத் தேசிய கூட்ட்மைப்பை கூப்பிட்டு அமெரிக்காவில் மேற்குலகம் கதைப்பதற்க்கும் நோர்வேயின் இந்த அறிக்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. மேற்குலகம் இந்திய ஆளும் வர்க்கத்தின் ` தமிழர் விரோதப் ` போக்கைப் புரிந்து கொண்டு , தனது நலங்களின் பாற்பட்டு தந்துவமான ஒரு அணுகுமுறையை எடுக்க இருப்பதயே இது காட்டுகிறது. அது போர்க்குற்றம் என்னும் கத்தியை இந்தியாவை நோக்கியும் திருப்ப முடியும், அதன் மூலம் சிறிலங்கா விடயத்தில் இந்தியா இனி மவுனமாக இருக்க வேண்டும் என்னும் செய்தியைச் சொல்கிறது.

கூடாங்குளம் எதிர்ப்பு போராட்டம் தமிழ்த்தேசிய சக்திகளால் இந்திய அதிகார மையத்துக்கு எதிராக நடாத்தப்படும் சதுரங்க்கத்தில் வைக்கப் பட்டிரிஉக்கும் ஒரு காய் நகர்த்தல்.இதனைத் தமிழர்கள் அனைவரும் புரிந்து கொண்டு தமது பலத்தைக் காட்ட வேண்டும்.கிலரி ஒரு மா னில முதல்வரைச் சந்திக்கிறார் என்றால் அதன் பின்னால் இருக்கும் சமிகைகளை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு காவடி எடுத்து ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.ஆனால் இருக்கின்ற முரண்பாடுகளை எமக்குச் சாதகமாகப் பாவித்து எமது நலங்களை அடைய வேண்டும்.அதற்க்கு முதல் தமிழர்களிடம் இருக்கும் இந்திய ஆளும் வர்க்க அடிவருடிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி இப்படி ஆய்வுகளுக்கும் மாற்றுச் சிந்தனைகளுக்கும் இப்படி அபத்தமாக முத்திரை ஒட்டும் குருட்டுத்த் தனம்தான் எங்களை அழித்த அரசியலாகும். இந்த anti intercultural approach சுக்கு எதிரான போராட்டத்தை நான் வன்னியிலேயே தொடற்ச்சியாக முன்னெடுத்திருக்கிறேன் நண்பரே. அதனால் உங்கள் முத்திரைகள் என்ன பயனும் இல.. எனவே முத்திரை ஒட்டுவதை விட்டுவிட்டு விடயம் தொடர்பாக உங்கள் கருத்தை எழுதுங்கள். இந்த விவாதத்தை இத்துடன் முடித்துகொள்கிறேன். எனினும் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் உங்கள் கருத்துக்களை வாசிப்பேன். .

அதுசரி நலாமா நண்பரே? கண்டு கனகாலம் ஆகுது அல்லவா?

Edited by poet

வ செ ஜயபாலன் அவர்களே நீங்கள் அடுத்த படத்தில் நன்றாக நடித்து இந்திய தேசிய விருதுக்கு முயற்சிப்பதே உங்களுக்கு நல்லது.

எம்மை இந்திய ஆளும் வர்க்கமே பகைத்துக் கொண்டது கொள்கிறது என்பதே வரலாறு. இதில் தனி நபர்கள் அல்ல, இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க நலங்களே அதன் செயற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றது.புலிகள் இந்தியாவை நம்பி மோசம் போனவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீது பெரும் படை படையாகப் படிந்துள்ள ஈழத்தமிழர் இரத்தக் கறை மீது.. தானும்.. துடைத்து.. தன் இரத்தக் கறை படித்த கைகளையும் நோர்வே இந்த அறிக்கை மூலம் சுத்தம் செய்து கொண்டுள்ளதாகவே எனக்குப் படுகிறது.

பிரிட்டன்.. அமெரிக்கா.. உட்பட்ட மேற்கு நாடுகள்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வகையில்.. வன்னிக் களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளோடு கூட நின்று நிலைமைகளை மதிப்பிட்டதை நாங்க மறக்கமாட்டம். குறிப்பாக.. கிளிநொச்சியை பிடிக்க முடியாமல்.. திணறிக் கொண்டிருந்த சிங்களப் படைகளுக்கு நேரடியாகச் சென்று.. இவர்கள் ஊக்கமும் ஆலோசனைகளும் வழங்கினர். இந்த அறிக்கையில் நோர்வே.. தனது மேற்குலக எஜமானர்களை காப்பாற்றவும் செய்திருக்கிறது.

எதுஎப்படி இருந்தாலும்.. இந்தியா காங்கிரஸ் அரசுகளின் ஈழத்தமிழர் மீதான இரத்த வெறியாட்டம் ஆரம்பமானது.. 1997 இல் அல்ல.. 1987 இல் ஆகும். அதையும் நோர்வே திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கை மேற்குலகம் சிறீலங்கா மீதான இந்திய ஆதிக்கத்தையும் சீன ஆதிக்கம் போன்றே கருதுகிறது என்பதை இனங்காட்டுகிறது. இதை தமிழர்கள் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அவர்களே, இது எனக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட சண்டையல்ல. இது நம் அரசியல் ஆர்வலர்கள் அறிஞர்கள் சிலரது தவறான கறுப்புச் வெள்ளை அணுகுமுறை தொடர்பான அரசியல் இராசதந்திர விவாதமாகும். பிரபல கருப்பு வெள்ளை அணுகுமுறை தொடர்பான பிரபல கோட்பாட்டாளரான நீங்கள் உங்கள் கருப்புவெள்ளை அணுகுமுறையே சரியானது எனக்கருதினால் அதுதொடர்பான விவாதத்தை முன்வையுங்கள்.

அழிவுப்பதையில் இருந்து நமது மக்களை மீட்க்க நமது விவாதம் உதவினால் எனக்கும் மகிட்ச்சியே. ஏன் எனக்கு தனிப்பட கல்வீசுகிறீர்கள். வன்னியில்கூட யார்ம் தனிபட என்மீது கல்வீசியதில்லை தோழரே. உங்களிடம் விவாதிக்க ஏதும் பொருள் இல்லையா? ஏன் தேய்பிறைபோல பேசுகிறீர்கள்?

நீங்கள் பின்வருமாறு சொன்னீங்க “வ செ ஜயபாலன் அவர்களே நீங்கள் அடுத்த படத்தில் நன்றாக நடித்து இந்திய தேசிய விருதுக்கு முயற்சிப்பதே உங்களுக்கு நல்லது.” இப்படி என சொல்ல என்னை அரசியல் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? இதுதான் உங்கள் ஆனித்தரம்மான விவாதப் பாணியா. இது வக்கிரம் அல்லவா நண்பரே.

தயவு செய்து திரும்பத் திரும்ப ஒரே கறுப்பு வெள்ளை வாதத்தை வைக்காமல் எதாவது புதிதாக எழுதுங்கள்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அவர்களே, சில இந்திய அதிகாரிகள் உடனான முரண்பாடே இந்தியாவுக்கெதிரான முரண்ஆடு என்று புலிகள் நினைத்ததாகக் கூறுகிறீர்கள், நல்லது. அப்படியானால் இந்திய கொள்கை வகுப்பாளர்களான அதிகாரிகளும் அந்தச் சிலருக்குள் அடங்குகிறார்களா?? டிக்சீத் போன்ற அதிகாரிகளால் ராஜீவ் அனுப்பிய பேய்ப்படை கூட "சில அதிகாரிகளின்" முடிவென்றுதான் நினைக்கிறீர்களா?? நீங்கள் எல்லோரும் புலிகள் பிழை விட்டார்களென்ற கோணத்திலிருந்து எல்லாவற்றையும் பார்க்கின்றீர்களே ஒழிய, இந்தியா செய்ததைப் பார்க்க மறுக்கிறீர்கள். 1987 ஆம்ஆண்டு உடன்படிக்கை நடந்த விதமும், இந்தியா அதன்பிறகு நடந்துகொண்ட விதமும் என்ன காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்??

ஒரு சில கேரள அதிகாரிகள் என்று மிக இலகுவாக புலிகள் மீது பழியைப் போடும் நீங்கள், அந்த அதிகாரிகள் மத்திய அரசின் அனுமதியின்றியே தாந்தோன்றித்தனமாக தமது விருப்பு வெறுப்புகளை புலிகள் மீது திணித்தார்கள் என்றும், ஆனால் அரசியல் சாணக்கியம் தெரியாத புலிகள், அந்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் என்று நினைத்து இந்தியாவைப் பகைத்து விட்டார்கள் என்கிறீர்கள்.

சென்னையில் தலைவர் கைதுசெய்யப்பட்டதிலிருந்து இந்தியா எப்படி நடந்துவருகிறது என்பது எங்களுக்குத் தெரியும், புலிகளுற்பட மற்றைய இயக்கங்களையும் ஏன் இந்தியா ஆரம்பத்தில் ஆதரிக்க நினைத்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு ஒட்டுமொத்த இனத்தினை இருப்பையே அடியோடு சாய்த்துக் கருவறுத்த கைங்கரியத்தை வெறும்"சில அதிகாரிகளின் முண்பாடு" என்று சொல்லி மறைக்க முயல வேண்டாம். குறைந்தது நீங்கள் தற்போது தங்கியிருக்கும் தமிழகத்துத் தமிழனின் உணர்வாவது உங்களிடமிருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலிகள்தான் கேரளத்து அதிகாரிகளின் சண்டித்தனத்தை இந்திய மத்திய அரசின் சண்டித்தனம் என்று நினைத்திருந்தாலும் கூட, இந்திய மத்திய அர்சும் ஏன் அவ்வாறு நடந்துகொண்டது என்பதையாவது விளக்குகிறீர்கள? அல்லது மீண்டும் மீண்டும் கேரளத்து நாய்கள் தமிழனின் பிரச்சனை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதையாவது சொல்வீர்களா?? ஏன் இதுவரை எந்தத் தமிழனும் இந்திய வெளியுறவுத்துறையில் தமிழர் பிரச்சினைத் தொடர்ஆன விடயங்களைக் கவனிக்கவென நியமிக்கப்படவில்லை என்பதையாவது சொல்வீர்களா?? இல்லை, எல்லாமே எதேச்சையாகத்தான் நடந்தது, இதில் காங்கிரஸ் எனும் நரபலி ஆடும் ஓநாய்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி ----. .

அதுசரி நலாமா நண்பரே? கண்டு கனகாலம் ஆகுது அல்லவா?

கவிஞர்,

எனக்கும், உங்களுக்கும் அரசியல் எட்டாப் பொருத்தம்.

சரி ... போகுது, உங்களின் சினிமா அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாமே...

தனித் தலைப்பு ஆரம்பியுங்கள், மிச்சத்தை நாங்கள் வெள்ளி விழா கொண்டாடி விடுவோம். :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈங்கே பலருக்கு பழியை யாரிடமாவது போட்டுவிட்டால் தமது கடமை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆகவே, இருக்கவே இருக்கிறார்கள் புலிகள், ஏன் என்று கேட்கக்கூட அட்களில்லை. ஆகவே பழியை எல்லாம் மூட்டையாகக் கட்டி அவர்களின் சமாதிமேல் போட்டுவிட்டால் அவர்களுடன் பழியும் போய்ச் சேரட்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் இருப்பவர்களின் மேல் பழிபோடுவதை விட அழிந்தவர்கள்மேல் போடுவது மிகவும் சுலஅம்.

இன்னும் சிலருக்கு இந்தியாவைக் குறை சொல்லக் கூடாது. ஏனென்றால் கூத்தமைப்பை இந்தியா ஆட்டூவிப்பதால், இந்தியாவைக் குறைகூறினால் அது கூத்தமைப்பைக் குறை கூறியதாக ஆகிவிடும். ஆகவே இந்தியாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சம்பந்தர் வடக்குக் கிழக்கு எமக்கு வேண்டாம் என்று கூறினாலென்ன, தனிநாடு தேவையென்று கூறினாலென்ன அதை தாமும் ஆதரிப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று, புலிகளின் மேல்த்தான் தவறென்று சம்பந்தன் கூறினால், இவர்களும் அதையே சரியென்று வாதிடும் காலம் வெகு தூரத்திலில்லை.

இவர்கள் எல்லாருக்கும் ஒன்று தெளிவாக விளங்கட்டும், நீங்கள் விரும்பினாலென்ன இலாவிட்டாலென்ன, இந்தியாதான் முள்ளிவாய்க்கால் நரபலியாட்டத்தின் சூத்திரதாரி, சிங்களம் நடத்தி முடித்தது இந்தியாவின் போரையே. போர்க்குற்றதிலிருந்து சிங்களமோ அல்லது நீங்கள் காப்பாற்றத் துடிக்கும் இந்தியாவோ தப்பிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம் இந்தியா புலிகள் உறவு பற்றியதல்ல. நம் தோல்விகளுக்கு கறுப்பு வெள்ளை வாய்பாடிகள் அடிப்படையிலான ஆய்வு அணுகுமுறையை நாம் கைவிட வேண்டும் என்கிற விவாதத்தையே நான் முன்வைத்தேன். இன்று மேற்குலககத்துக்கும் இந்தியாவுக்கும் இடைலான பொது வெளியில் common space தான் தோல்வியில் இருந்து எழும் நம் எதிர்கால அரசியலை செய்ய வேண்டியுள்ளது. இதை நிராகரிக்க முடியாது.

நிலமை அப்படி இருக்கையில் நம் நிலைபாடும் அதற்க்குத் தோதாகவே அமைதல் வேண்டும்.

எங்கள் உயிர் இருக்கும்போதே எங்கள் 1. மக்களும் 2. மண்ணும் விடுத்லை பெற வேண்டும் என்கிற கனவுடன்வாழும் சிலருள் நானும் ஒருவன். எங்கள் ஈடுபாடு உறுதியானது.. நாம் இனிச் செய்யவேண்டியது என்ன என்கிற தேடலில்தான் நானும் இருக்கிறேன்.

நாம் மிக மிக சிறிய இனம். நாம் சீனாவில் இருந்தோ ரூசியாவி இருந்தோ ஆட்க்களைக் கொண்டுவந்து போராட முடியாது எனவே முரண்பட்ட பல்வேறு சக்திகளைளையும் குழுக்களையும் முரண்பாடுகளோடு எதிரிக்கு எதிரான திட்டங்களிலாவது இணைத்தே நாம் போராட வேண்டி உள்ளது. அரசியலில் நிரந்தர பகை என்று யாரும் இல்லை. அடைய வேண்டிய இலக்கு மட்டுமே உள்ளது. புதிய நிலமைக்கு ஏற்ப்ப புதிய முன்னணிகளின் கீழ் நாம் செயல்பட தயாராக வேண்டி இருக்கும். அதற்காக விடுதலைப் புலிகளிள் அமைப்பின் முரண்பட்ட குழுக்களோடும் இன்று ஒத்துவரக்கூடிய ஏனையவர்களோடும் நாம் பணிபுரிய வேண்டிய வரலாற்றுக் கடமை உள்லது. இத்தகைய பன்முகப் பட்ட சக்திகளின் ஒரு ஐக்கிய முன்னணி ஒன்றுக்காக பணிபுரிய காத்திருக்கும் சிலருள் நானும் ஒருவன்/

உங்களைப்போன்றவர்களது விவாதங்கள் உருப்படியாக அமையும்போதுதான் நானும் கற்றுக் கொள்கிறேன்.

உருப்படியான ஒரு விவாதத்தையே உங்களிடம் நான் யாசிக்கிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்களும் மண்ணும் விடுதலை பெறவேண்டுமென்பது உங்களின் கனவு மட்டுமல்ல அந்த மண்னையும் மக்களையும் இன்றும் நேசிக்கும் அனைவரினதும் கனவும் அதுதான்.ஆனால் அந்தக் கனவு நனவாவதைத் தடுப்பது இந்தியாதான். இந்தியா என்கிற ஒரு நாடு இருக்கும்வரை எமது கனவுகளும் கற்பனைகளும் ஆசைகளும் நிகழப்போவதில்லை.

புலிகளிருக்கும்வரைதான் இந்தியா எம்மை அழித்தது, அதற்குப் பிறகு எல்லாமே சரியாகிவிடும் என்றெல்லாம் சொன்னார்களே?? ஏதாவது சரியானதா?? இன்றுவரைகூட அது சிங்களத்தைக் காப்பதிலல்லவா முன்னிற்கிறது ?? 2009 ஐ.நா மனிதவுரிமைக் கவுன்சிலின் கூட்டம் முதல் அண்மையில் அவுஸ்த்திரேலியா பேர்த்தில் நிகழ்ந்தேறிய பொதுநலவாய அமைப்பு மாநாடுவரை சிங்களத்திடம் முன்வைக்கப்பட்ட மனிதவுரிமை மீறல்கள்தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தது இந்திய வெளியுறவுச் செயலாளர்தான். வருகிற பொதுநலவாய கூட்டத்தொடரை இலங்கையில் வைப்பது சரிதானா என்று கனடாவும், இங்கிலாந்தும் முன்வைத்த கேள்வியை முன்னின்று தடுத்து நிறுத்தி, ஏற்கனவே முடிவுசெய்த விடயம் பற்றி நாம் இனிப்பேசத் தேவையில்லை, அது இலங்கையில் நடப்பதை எவராலும் தடுக்க முடியாது என்று எல்லாவற்ரையும் தடுத்து நிறுத்தியது இந்தியாதான். இப்போது சொல்லுங்கள், இதுகூட வெறு ஒரு சில கேரளத்து அதிகாரிகளின் செயல்தானா??

கவிஞரே, நான் உங்களைப்போல அரசிய விவேகம் படைத்தவன் கிடையாது. ஆனாலும் இந்தியா செய்துவரும் துரோகத்தைக் கணிப்பிட அரசியல் ஞானம் தேவையில்லை என்றுதான் நான் நினைக்கிறேன், என்ன சொல்லுகிறீர்கள்??

நாம் அதிகளவில் எமக்குள் உள்ள பிரிவுகளையும் பலவீனத்தையுமே அதிகளவில் அலசுவதன் மூலம் எமக்கு முன்னால் உள்ள சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவற விட்டுவிடுகிறோம்.

சிம்ப்ளி சூப்பர்!

இவ்ளோதான் விஷயம்...!

படிச்ச அகூதாக்கு ... உடனே , அத சொல்ல வருது!

என்னைய போல கேணைகள் ...

இத சொல்ல எவ்ளோ,,கஸ்டப்படவேண்டிருக்கு + அவமானம்! :(

நாரதர் அவர்களே, இது எனக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட சண்டையல்ல. இது நம் அரசியல் ஆர்வலர்கள் அறிஞர்கள் சிலரது தவறான கறுப்புச் வெள்ளை அணுகுமுறை தொடர்பான அரசியல் இராசதந்திர விவாதமாகும். பிரபல கருப்பு வெள்ளை அணுகுமுறை தொடர்பான பிரபல கோட்பாட்டாளரான நீங்கள் உங்கள் கருப்புவெள்ளை அணுகுமுறையே சரியானது எனக்கருதினால் அதுதொடர்பான விவாதத்தை முன்வையுங்கள்.

அழிவுப்பதையில் இருந்து நமது மக்களை மீட்க்க நமது விவாதம் உதவினால் எனக்கும் மகிட்ச்சியே. ஏன் எனக்கு தனிப்பட கல்வீசுகிறீர்கள். வன்னியில்கூட யார்ம் தனிபட என்மீது கல்வீசியதில்லை தோழரே. உங்களிடம் விவாதிக்க ஏதும் பொருள் இல்லையா? ஏன் தேய்பிறைபோல பேசுகிறீர்கள்?

நீங்கள் பின்வருமாறு சொன்னீங்க “வ செ ஜயபாலன் அவர்களே நீங்கள் அடுத்த படத்தில் நன்றாக நடித்து இந்திய தேசிய விருதுக்கு முயற்சிப்பதே உங்களுக்கு நல்லது.” இப்படி என சொல்ல என்னை அரசியல் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? இதுதான் உங்கள் ஆனித்தரம்மான விவாதப் பாணியா. இது வக்கிரம் அல்லவா நண்பரே.

தயவு செய்து திரும்பத் திரும்ப ஒரே கறுப்பு வெள்ளை வாதத்தை வைக்காமல் எதாவது புதிதாக எழுதுங்கள்

வ செ ஜெயபாலன் அவர்களே உமக்கும் எனக்கும் எந்த சொந்த்தப் பிரச்சினையும் இல்லை.பிரச்சினை உமது இந்திய அடிவருடி அரசியல் பற்றியது.கறுப்பு வெள்ளை அரசியல் என்று என்ன அரசியல் இருக்கிறது. நான் சொல்வது அத் தகைய அரசியல் என்று எதன் அடிப்படியில் சொல்கிறீர்கள்? நீங்கள் இங்கு இந்தியா பற்றி வரலாற்று அடிப்படையில் வைக்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லியது கிடையாது.அரசியளை மேம்பாக்கப் பார்க்கும் பார்வையும் உங்கள் சொந்த நலங்களினூடாக தமிழர் அரசியலை பிழைப்புவாத அர்சியலாக்குவதே உங்கள் அரசியல் வரலாறு.

இங்கே தீர்விர வாதிகள் கறுப்பு வெல்ளை அரசியல் என்னும் முத்திரை குத்தல்களுக்கு அப்பால் இந்தியாவின் குரோதம் பற்றி எழுதப்பட்ட எவற்றையாவது பற்றி உம்மால் மறுதலிக்க முடிந்ததா?

இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தினுடன் போரிடாமல் எம்மாம் எமது விடுதலையைப் பெற முடியாது என்பதே எமது வரலாறு , எமது எதிர் காலமும் அதில் தான் தங்கி உள்ளது.

வ செ ஜெயபாலன் அவர்களே உமக்கும் எனக்கும் எந்த சொந்த்தப் பிரச்சினையும் இல்லை.பிரச்சினை உமது இந்திய அடிவருடி அரசியல் பற்றியது.கறுப்பு வெள்ளை

இங்கே தீர்விர வாதிகள் கறுப்பு வெல்ளை அரசியல் என்னும் முத்திரை குத்தல்களுக்கு அப்பால் இந்தியாவின் குரோதம் பற்றி எழுதப்பட்ட எவற்றையாவது பற்றி உம்மால் மறுதலிக்க முடிந்ததா?

என்ன நாரதர் அண்ணா ... நீங்களூமா?

கிட்டத்தட்ட ஒருமைல போறமாதிரி இருக்கே! இதுவேணாமே...!

நீங்க ஒரு கருத்து சண்டை ஆரம்பிச்சா , கலக்கலாவே இருக்கும்,,

வாசிக்க நல்லாவே இருக்கும் & வாசிப்பேன்!! :)

தமிழ் சிறி, நாரதர், ரகுநாதன் நன்றி.

நான் இன்னும் அறிக்கையை வாசிக்கவில்லை.

தேவையில்லாத கைகால் துடிச்சு அறிக்கை இந்தியாவை குத்துது என்று புட்டு வைக்கிறார்கள்.

இப்ப கூட்டு சேரவேண்டியது அமெரிக்கனும் சீனாகாரனும் போலை கிடக்குது. இத்தாலி மாபியாக்காரரின் தலையில் ஒரு குண்டு போட்டார்களாயின் நமக்கு இந்தியன் என்றால் யார் என்று கறுப்பு வெள்ளையாக விளங்கும்.

இப்போது இந்தியர்கள் என்றால் அது இத்தாலியர்களா, மலையாளிகளா, கிந்தியர்களா, அழகிரி- கருணநிதி .......கூட்டமா யார் இந்த இந்தியர்கள்?

புலிகளை அழிப்பதல்லா​ல் இந்தியாவிடம் வேறு கொள்கை இருக்கவில்லை என்பது மட்டும் விவாதத்திற்கு அப்பால்பட்ட உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாரதர் உங்கள் குருட்டுத்தனமான யாந்திரிக வாத்தை தாராளமாக முன்வையுங்கள். விவாதிக்க வக்கில்லாவிட்டால் தனிப்பட்ட வசவுகளை முன் வையுங்கள் அதற்க்குத்தான் யாழில் நிறைய இடம் இருக்கிறதே.

கருப்பு அல்லது வெள்லை என யந்திரிகவாதம் பேசிய கோட்பாட்டாளர்கலால் - வாய்பாட்டாலர்கள் என்பதே சரி - ஒருமுறை நம் இனம் அழிந்தது போதும்.

நீங்களும் வடகிழக்குத் தானே? நீங்களும் தோல்விகளால் இனக்கொலையால் பாதிக்கப் பட்டவர்தானே. பாதிக்கப் படாமல் ஆகாசத்தில் இருந்து அரசியல் ஆலோசனை கூறுகிறவரைப்போல எப்படி மாறாநிலையில் உலகத்தை வைத்து நிரந்தர வாய்ப்பாடுகளால் தொடர்ந்தும் எம் மக்களை மூழைச் சலவை செய்ய முடிகிறது.

நல்லகாலமாக உங்கள்போன்ற யாந்திரீக வாய்ப்பாடாலர்களுக்குபின் நிக்காரக்குவா புரட்ச்சியாலர்கள் செல்லவில்லை. அமரிக்காவில் ஏற்பட்ட தற்காலிக மாற்றத்தை - ஜிம்மிக் காட்டர் பதவியில் இருந்த காலத்தைப் பயன்படுத்தி அவர்கள் நஅமரிக்க ஆதரவு கொடுங்கோலனிடமிருந்து தங்கள் நாட்டை விடுவித்தார்கள்.

என்னை அடிவருடி என்று சொல்லுங்கள். ஆனால் ஒன்று தெரியுமா? உஙளைப்போன்ற அதிதீவிரவாதிகளின் வேடத்தில்தான் எதிரிகளும் ஊடுருவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?

நாரதரே நீங்கள் தாராளமாக என்னைத் திட்டுங்கள், ஆனால் உங்கள் மாறாநிலை வாய்பாடுகளை கோட்பாடுகளக்கி மூளைச் சலவை செய்து எங்கள் இனத்தை மீண்டும் அழித்துவிடாதீர்கள் என யாசிக்கிறேன்.

நான் உங்கள்மீது கோபிக்கவில்லை. ஏனெனில் போராட்ட தக்க ஆழ்பலம் இல்லாத நிலையில் என்றாவது ஒருநாள் எதிரிக்கு எதிராக நாங்கள் சேர்ந்துதான் வேலைசெய்யவேண்டி இருக்கும். அப்படி வரலாற்று நிர்பந்தம் இருக்கு தோழரே.

Edited by poet

மீண்டும் மீண்டும் அர்த்தமற்று எழுதாமல், இந்தியா ஈழத் தமிழர்களின் அரசியற் கோரிக்கை சம்பந்தமாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது? அதற்காக எதைச் செய்தது என்பது பற்றியும், அண்மையைல் நடந்து முடிந்த பொது நலவாய மானாட்டில் கூட சிறிலங்கா அரசைப் பாதுகாத்தது.

இவற்றிற்க்கும் அப்பால் நீங்கள் முன்னர் வேலை செய்த்த நோர்வே அரசு கூட இந்தியா தான் பேச்சுவர்த்தைகளைக் குழப்பியது எனக் கூறி உள்ளது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

கறுப்பு வெள்ளை யாந்திரீகம் மந்த்ரீகம் பற்றி வேறு தருணத்தில் பார்த்துக் கொள்ளுவோம்.

எத்தனை கிந்திப்படம் ,தமிழ்படம் பார்த்துவிட்டோம் .

தனது கணவனை கொன்றவர்களை மகன் வளர அடையாளம் காட்டி பழி வாங்கியதுதானே கதை .ராஜிவ் கொலைக்கு பின் இவ்வளவுகாலமும் புலிகளை அவர்கள் விட்டு வைத்ததே ஆச்சரியம் .

இது என்றோ நடக்கும் என்று தெரியும் ,

புலியல்ல பிரச்சனை எமக்கு தமிழனின் விடிவுத்தான் எமது பிரச்சனை .

பயிற்சி கொடுத்ததும் ,பின் கப்பலில் சாப்படு அனுப்பி ஜே.ஆரை பணியவைக்க முயன்றதும், பின் பிளேன் அனுப்பி பணியவைத்ததும் அடங்கமாட்டாமல் நின்ற பிரேமதாச ,அத்துலத்முதலிபோன்றவர்களின் வாயை அடைத்து முரண்டு பிடித்த இலங்கை அரசை மேசைக்கு கொண்டுவந்தார்கள் .தீர்வில் வடக்கு ,கிழக்கு இணைப்பு வேறு இருக்கு .புலிகளின் கையில் அதிகாரத்தை கொடுக்கவும் ஒப்புக்குகொள்ள வைத்தார்கள் ,இதற்கு பிறகும் தமிழிழம் தான் தீர்வு என்று இந்தியாவை எதிர்க்க துணிந்ததன் விளைவு தான் எல்லா அழிவிற்கும் காரணமம் .

இந்த ராஜபக்கசவே நேற்று சொல்கின்றான் இந்தியாவிற்கு பிறகுதான் சீனா என்று .இந்தியா தொப்புள் கொடி உறவு,சீனா ஒரு நண்பன் மட்டுமே என்று . அவனுக்கு தெரியும் இந்து சமுத்திர பிராந் தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவமும் அதன் பலமும் .சம்பந்தருக்கும் அது வடிவாகத்தெரியும்.உது தெரியாதவர்கள்,விளங்க்காதவர்கள் அழிந்துதான் போவார்கள் அது யாராகினும் .

அதைவிட்டு ராஜபக்சாவாவை ஜனாதிபதியாக்கி அரசியல் செய்ய நினைத்தவர்களை என்ன சொல்வது ?

ஆசை தீர எமது ஊடகங்களில் இந்தியாவை திட்டித்தீர்க்கலாம்,அது மட்டும் தான் எம்மால் இப்போ முடியும் .

சூரியன் காலையில் உதிக்கும். - நோர்வே கண்டுபிடிப்பு.

இரத்தினச் சுருக்கமாய் நீங்கள் சொன்னதைப் போல சொல்ல எனக்கு முடியல அதனால உங்கடையை ஒட்டி ஆமோதிக்கிறேன் .

அர்ஜூன் புலிகள் பேச்சுவர்த்தையின் போது இடைக்கால தன்னாட்ச்சி அதிகார்சபை வரபை முன் வைத்தார்களே, அதனை ஏன் இந்தியா குலைத்தது என்பதற்க்கு பதில் எழுதி விட்டு மேற்கொண்டு எழுதவும்.

இப்போது கூட கூட்டமைப்பு முன் வைத்திருக்கும் வரபு என்ன? அதனை இந்தியா ஆதரிகிறதா? அப்படியாயின் இந்தியா ஏன் சிறிலங்காவிடம் அதனை நிறைவேற்றும் படி சொல்லாமல் இருக்கிறது. புலிகளுடன் தான் கோபம் என்றால் கூட்டமைப்புடனுமா?

அப்படி சிறிலங்கா தான் இந்தியாவின் சொல்லைக் கேட்க வில்லை என்றாலும், இந்தியா ஏன் தொடர்ந்த்தும் சிறிலங்கா அரசைப் பாதுகாக்கிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.