Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த மருதங்கேணி,

மண்ணும் மக்களும் பற்றிய ஆய்வறிவு பரந்த தேடல் அறிவு இல்லாமல் மாறிவரும் சர்வதேச நிலமைகளில் போதிய ஆய்வில்லாமல் ஸ்டாலின்ஸ்ட் வாய்பாடுகள்போல கோட்ப்பாட்டு விவாதம் நிகழ்த்தப் படமுடியாது என்கிற கருத்தில்தான் சொன்னேன்.

அது தப்பா?

இயன்ற வரை என்னுடைய கருத்துக்கள் இத்தகைய பின்னணியில் பரிசீலிக்கப் பட்டே வெளியிடப் படுகிறது.

கோபாட்டாளர்களுக்கு வாய்பாடுகளல்ல மண்ணும் மக்களும் அவர்களைப் பாதிக்கும் தேசிய சர்வதேசிய நிலமைகளும் பற்றிய நேரடி அறிவும் ஆய்வுகளும் முக்கியம் ஈழத்து அரசியல் ஆய்வுகள் கோட்பாட்டு விவாதங்களின் தோல்விக்குக் காரனம் பல விவாதங்கள் யாழ் குடாநாடு மட்டும் தொடர்பான அறிதலில் இருந்து உருவாகுவதே. வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் பற்றிய அறிவும் நமது பலம் பலஹீனம்பற்றிய தெளிவும் மாறிக்கொண்டிருக்கும் சர்வதேச பிரக்ஞையும் இல்லாத ஆய்வுகளும் கோட்ப்பாட்டு விவாதங்களும் எதிர் விழைவுகலையே உருவாக்கும்

Edited by poet

  • Replies 85
  • Views 6.5k
  • Created
  • Last Reply

உலகம் என்ன சொல்கின்றது ,உண்மை என்ன ,இனி தமிழனின் விடிவிற்கு பாதை தான் என்ன ? இவைகள் பற்றி கதைக்க எவருக்கும் உரிமையில்லை .

திரும்ப திரும்ப புலிகள் செய்தது சரி ,செய்கின்றது சரி,செய்யப்போகின்றதும் சரி என்று எழுதினால் மாத்திரம் தான் ஏற்கும் பக்குவத்தில் பலர் இன்னமும் கனவுலகில்.

யாழில் கோட்பாட்டு விவாதத்தை முன் வைத்தால் நாரதர் அதை புரிந்துகொள்ளாமல் அங்கு க்றிப்பிடப்படும் விபரம் detail எதையாவது பிடித்துக்கொண்டு விவாதத்தை திசை திருப்பிவிட்டு தனிப்பட்ட வசை பாடுகிறார். வடகிழக்கு மாகாண மக்களின் அரசியல் சமூக வரலாறு புவியியல் இராணுவ புவியியல் பற்றிய ஆய்வறிவும் நமதும் எதிரியதும் தேசிய சர்வதேசிய பலம் பல்கீனம் பற்றிய பற்றிய தெளிவ்ம் இல்லாமல் கோட்பாடுகளை எங்கிருந்தும் விவாதிக்கலாம் என்று நம்புகிறவர்களோடு பேசுவதில் அர்த்தமில்லை.

ஏற்கனவே மருதங்கேணி கேட்ட கேள்வி தான் தாங்கள் என்ன கோட்பாட்டு விவாதத்தை முன் வைத்தீர்கள் பதில் எழுத? நான் இங்கு எதனையும் திசை திருப்பவோ வசை பாட வோ இல்லை, அப்படி இருந்தால் எங்கே என்று சுட்டிக் காட்டவும்.சும்ம சிறுபிள்ளைத் தனமாகப் புலம்ப வேண்டாம். உங்கள் ஆய்விவு என்ன எழுதினால் அதற்க்கு மறு ஆய்வு எழுதலாம்.சும்ம சொற்களை வைத்து சொற் சிலம்பம் செய்வது கவிதைக்கு அழகாக இருக்கலாம் ஆனால் கருத்தாடலுக்கு அல்ல. என்னைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. எனது வாழ்க்கையில் நான் துறை சார் ஆய்வுகளைச் செய்தவன் ஆகவே எனக்கு ஆய்வென்றால் என்ன தரவுகள் என்ரால் என்ன கோட்பாடு என்றால் என்ன என்று தெளிவாகத் தெரியும்.

இன்று களத்தில் உள்ள மக்கள் நலன்கள் கோருவது எதை? அவர்களது அரசியல் வெளியை political space அகட்டும் மார்க்கம் எது என்கிற சிந்தனை முக்கியம். ஏனேனில் களத்தில் உள்ள மக்களின் அரசியல் செயல்பாடுகளில் இருந்தே நமது ஆட்ச்சி அதிகாரம் உருவாக முடியும்..

நிச்சயமாக அதனைத் தான் நாங்கள் செய்கிறோம் சொல்கிறோம். நீங்கள் தான் வேறு கற்பனைகளில் இருகிறீர்கள்.

இன்றைய நிலையில் சர்வதேசத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? அல்லது மகிந்த குழுவினரை சர்வதேசஉதவியுடன் போர்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? எது முக்கியம் என்கிறதில் தெளிவு பெறவேணும். அல்லது உள்ளதையும் கெடுத்த கதையாகிவிடும்.

போர்குற்றச் சாட்டுத் தொடர்பாக சர்வதேச ஆதரவை வென்றெடுப்பது சிறு வெற்றிகளைப் பெற்றாலே களத்தில் நம் உறவுகளின் அசியல் வெளியை விரிவுபடுத்த உதவும். திரு உருத்திரகுமாரன் அந்தப்பணியின் அவசரத் தன்மையையும் முன்னுரிமைதனையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மட்டுமே என் கவலையாகும். யாழ்க் களத்தில் வடக்கு கிழக்கு மாகாண மண்ணையும் மக்களையும் பற்றிய ஆய்வறிவும் பிரக்ஞையும் இல்லாமல் பேசும் ஒரு சிலர் மத்தியில் என்னுடைய நேரத்தை வீணாகுகிறேனோ என்று அஞ்சுகிறேன்.

சரவ்தேசத்தையோ மகிந்த்வையோ எங்களால் குற்றவாழிக் கூண்டில் ஏற்ற முடியாது.எம்மால் முடிந்தது எது அதற்கான தந்திரோபாயம் என்ன? அதனை எங்கனம் நடைமுறைப் படுத்துவது. இவை எல்லாம் நடைமுறை செயற்பாட்டின் மூலமே அறிந்து கொள்ள முடியும். இணையத்தில் இருந்து எழுதுவதாலோ கதை கட்டுரை எழுதுவதாலோ கற்றுக் கொள்ள முடியாது. சும்மா இருந்து கொண்டு இணையத்தில் மொழி விளயாட்டு விளையாடும் அரசியலை நீங்களும் உங்கள் நண்பர் சோபாசக்தியும் செய்கிறீர்கள்.

நடைமுறையில் இயங்கிப் பாருங்கள் மக்களிடம் இருந்தும் சக தோழர்களிடம் இருந்தும் பல வற்றைக் கற்றுக் கொள்வீர்கள். எனக்கு என்ன அறிவு இருக்கிறது உங்களுக்கு என்ன அறிவு இருக்கிறது என்பதை கருதுக்களை வாசிப்பவர்கள் தீர்மனித்துக் கொள்ளட்டும்.என்னைப் பற்ரி நீங்களும் உங்களைப் பற்றி நானும் , அவர் அவர் அறிவு பற்றிப் பேசுவது சிறுபிள்ளைத் தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

”சிறுபிள்ளைத் தனமாகப் புலம்ப வேண்டாம். உங்கள் ஆய்விவு என்ன எழுதினால் அதற்க்கு மறு ஆய்வு எழுதலாம்.சும்ம சொற்களை வைத்து சொற் சிலம்பம் செய்வது கவிதைக்கு அழகாக இருக்கலாம் ஆனால் கருத்தாடலுக்கு அல்ல. என்னைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. எனது வாழ்க்கையில் நான் துறை சார் ஆய்வுகளைச் செய்தவன் ஆகவே எனக்கு ஆய்வென்றால் என்ன தரவுகள் என்ரால் என்ன கோட்பாடு என்றால் என்ன என்று தெளிவாகத் தெரியும்” .- துறைசார் ஆய்வாளர் நாரதரின் ஆய்வின் முடிவு.

நீங்கள் வசைபாடுவது ஆச்சரியம் தரவில்லை நாரதரே. ஏனெனில் பதில் இல்லாவிட்டால் வசைபாடுவது வெறும் சேட்டிபிக்கேற்றோடு தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த சில துறைசார் ஆய்வாளர்களது வளைமை. உங்களோடு தொடர்ந்து விவாதிப்பதில் நாட்டமில்லை. ஆய்வு ரீதியாக ஈழத்தின் வடகிழக்கு முழுமையும் பயணம் செய்து மக்களோடு வாழ்ந்து ஆய்வு ரீதியாக வட கிழக்கை வடகிழக்கு மக்களை நன்கு அறிந்தவர் என்கிறீர்கள் அல்லவா? அப்படியென்றால் நிச்சயம் நீங்கள் சரியான இடத்துக்கு வந்து சேர்வீங்க. அப்போ சந்திக்கலாம். இல்லை யென்றால் சந்திக்க மாட்டோம். உங்கலளுக்கு என் வாழ்த்துக்கள்.

2

அர்ஜுன்- “உலகம் என்ன சொல்கின்றது ,உண்மை என்ன ,இனி தமிழனின் விடிவிற்கு பாதை தான் என்ன ? இவைகள் பற்றி கதைக்க எவருக்கும் உரிமையில்லை .

திரும்ப திரும்ப புலிகள் செய்தது சரி ,செய்கின்றது சரி,செய்யப்போகின்றதும் சரி என்று எழுதினால் மாத்திரம் தான் ஏற்கும் பக்குவத்தில் பலர் இன்னமும் கனவுலகில்”- என்கிற உங்கள் வேதனையை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

  • add.png
  • 0

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் புலிகள் சர்வதேச பேச்சு வார்த்தைகளின் பின்னால் நீங்களும் பலருடன் தொடர்பில் இருந்தவர். பேச்சு வார்த்தைகளிலும் கலந்து nhக்ணடிருந்திருந்தீர்கள். அதே பேலவே நானும் அதன் பின்னணியில் இருந்திருக்கிறேன். உங்கள் முப்பது பக்க அறிக்:கையை போலவே நானும் எனது நண்பர்பர்களும் 45 பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தோம். எங்கள் அறிக்கை தமிழ்செல்வனின் குப்பைக்கூடைக்குள் போய்விட்டது அதை அவர் எறிந்த சில நாட்களில் அவரும் பலியாகிப்போனது சோகமானதுதான்.. இறுதி யுத்தத்தில் அவற்றை பயன்படுத்தியிருந்தால் இன்றுவரை போராட்டம் தாக்கு பிடித்திருக்கும் என்கிற ஆதங்கம் எனக்குண்டு உங்கள் புத்தகத்தில் நீங்கள் எழுதிய மற்றும் நாங்கள் எழுதிய அறிக்கைகளையும் இணையுங்கள். வருங்காலத்தில் எங்கள் புவியியல் அமைப்பை தெரிந்துகொண்டு அடுத்த சந்ததியாவது உருப்படியாய் எதையாவது செய்யட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் பேச்சுவார்ததைகளுக்கு பின்னால் இத்தனை ஆட்களின் மந்திராலோசனை இருந்திருக்கிறதா?????

அம்மாடியோவ்.

நானும் என்னுடைய கூட்டாளிகளும் சேர்ந்து இப்போதான் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி தீர்க்கிறது என்று பாலஸ்தீன அதிபர் அபாஸ்க்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் ஒரு கூட்டறிக்கை (ஐடியாக்கள்) குடுத்தோம்.

ம்ம் எல்லாம் காலம்தான்ய்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் பேச்சுவார்ததைகளுக்கு பின்னால் இத்தனை ஆட்களின் மந்திராலோசனை இருந்திருக்கிறதா?????

அம்மாடியோவ்.

நானும் என்னுடைய கூட்டாளிகளும் சேர்ந்து இப்போதான் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி தீர்க்கிறது என்று பாலஸ்தீன அதிபர் அபாஸ்க்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் ஒரு கூட்டறிக்கை (ஐடியாக்கள்) குடுத்தோம்.

ம்ம் எல்லாம் காலம்தான்ய்

ஏனுங்க தேன்மொழி இங்கை நிண்டு புலம்பாமல் என்னுடன் நேரடியாக தொர்பு கொள்ளுங்கோ அதற்கான ஆதரங்களை தாறன். 45 பக்க அறிக்கை அப்படியே எழுத்திலை இருக்கு . என்னோடை தொடர்பு கொள்ள கனக்க கஸ்டப்பட தேவையில்லை எல்லாருக்குமே என்ரை . தொ.பே இலக்கம் ஸ்கைப் மின்னஞ்சல் எண்டு பகிரங்கமாய் தெரியும். ஏதாவது ஒண்டிலை வாங்கோ இல்லாட்டி மௌனமாகிறது நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ சாத்திரிஅண்ணா மௌனமாப் பிறகுதானே நீங்க இதை சொல்லுறீங்க.

பேச்சுவாhத்தைக்கு பின்னாலை நின்டேன்.புலிகளை காப்டபாத்த அறிக்கை எழுதினேன் என்டு.

ஏனுங்கோ இதை எல்லாம் மே19 2009 முதல் சொல்லேல்லை.

உங்க டயறிலை எழுதி வைச்சீங்களோண்ணா

வர வர யாழ் களத்தலை வாற சில கருத்துகளுக்கு சழறந்தபொழுதுபோக்கு படத்துக்கு குடுக்கிறமாதிரி

கேளிக்கை வரி விலக்கு குடுக்கவேணும் :icon_idea:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ சாத்திரிஅண்ணா மௌனமாப் பிறகுதானே நீங்க இதை சொல்லுறீங்க.

பேச்சுவாhத்தைக்கு பின்னாலை நின்டேன்.புலிகளை காப்டபாத்த அறிக்கை எழுதினேன் என்டு.

ஏனுங்கோ இதை எல்லாம் மே19 2009 முதல் சொல்லேல்லை.

உங்க டயறிலை எழுதி வைச்சீங்களோண்ணா

வர வர யாழ் களத்தலை வாற சில கருத்துகளுக்கு சழறந்தபொழுதுபோக்கு படத்துக்கு குடுக்கிறமாதிரி

கேளிக்கை வரி விலக்கு குடுக்கவேணும் :icon_idea:

:lol:

நீங்கள் நான் சொன்னது எல்லாத்தையும் சரியாய் படிக்காமல் விட்டதற்கு ஒண்டும் செய்ய ஏலாது மே 19 முதலேயே எழுதியிருக்கிறன் அதை பதிவாய் என்னுடைய வலைபக்கதிலையும் பாக்கலாம். மற்றது என்னை தேடி இங்கை சவுண்டு விட்டு மினக்கெடாமல் 0033611149470 இலகத்திலை இல்லாட்டி உந்த ஸகைப்பு gowripal sri அதிலை வந்தால் மிச்சம் தாறன் இல்லை இங்கைதான் சவுண்டு விடுவன் எண்டு அடம் பிடிச்சால் ஒண்டும் செய்யமுடியாது :lol: :lol: :lol: :lol:இல்லை முஞ்சி புத்தகத்திலையும் வரலாம். :wub: :wub: :wub:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. போனும் அடிக்கேல்லை ஸ்கைப்பும் facebook அடிக்கேல்லை தனி மடலும் போட்டிட்டன் எனவே எனவே தேன்மொழியை நாளைக்கு வந்து நக்கிறன் நன்றி வணக்கம். :lol: :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்லை கருத்து எழுதிறது .எழுதிற கருத்துக்கு மறுகருத்து யாரும் எழுதினா ஸ்கைப்புக்கு வாங்கோ வந்து

சவுண்டு விடுங்கோ என்றது.கொஞ்சம் ஓவரா சவுண்டு விட்டால் ஐயோ நான் எல்லைகள் கடந்த பத்திரிகையாளன் ஐடி வைச்சிருக்கிறன்.எனக்கு மிரட்டல் விட்டுவிட்டான்.இந்தா கேஸ் பேர்றன் என்றது.

அதுவரி,உங்க இணையத்திலை எந்த இடத்திலை எழுதி இருக்கிறீங்க.2009க்கு மதல் பேச்சுவார்ததைக்கு பின்னாலை நின்டீங்கள் என்டு. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம ஓக்கே சாத்திரி நானும் நாளைக்கு வந்து உங்ககிட்டே சாத்திரம் கேட்கிறன்.

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 பக்க அறிக்கையை விட 45பக்க அறிக்கை கனம் அதிகம்.

30 பக்க அறிக்கை எழுதின ஆட்களை விட 45 பக்க அறிக்கை எழுதின ஆட்கள் மகா புத்திசாலிகள்.Super Diplomatic கள்

இந்த இனத்தை மாதிரி கேணைத்தனமான இனம் வேறு எங்கையும் கிடையாது.

ஒருவன் செத்துப்போய் மூனு வருசம் ஆனபிறகுதான் ஐயோ நான் அவனுக்கு அறிக்கை குடுத்தேன்.வடிவா படிச்சிருந்தா

இப்ப உயிரோடை இருந்திருப்பானே என்று சுய (தம்பட்ட) ஒப்பாரி வைக்கிற மேதாவிகள் நிறைஞ்ச இனம்.

Next mission IRAN -ISREAL prob????/

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த மருதங்கேணி,

மண்ணும் மக்களும் பற்றிய ஆய்வறிவு பரந்த தேடல் அறிவு இல்லாமல் மாறிவரும் சர்வதேச நிலமைகளில் போதிய ஆய்வில்லாமல் ஸ்டாலின்ஸ்ட் வாய்பாடுகள்போல கோட்ப்பாட்டு விவாதம் நிகழ்த்தப் படமுடியாது என்கிற கருத்தில்தான் சொன்னேன்.

அது தப்பா?

இயன்ற வரை என்னுடைய கருத்துக்கள் இத்தகைய பின்னணியில் பரிசீலிக்கப் பட்டே வெளியிடப் படுகிறது.

கோபாட்டாளர்களுக்கு வாய்பாடுகளல்ல மண்ணும் மக்களும் அவர்களைப் பாதிக்கும் தேசிய சர்வதேசிய நிலமைகளும் பற்றிய நேரடி அறிவும் ஆய்வுகளும் முக்கியம் ஈழத்து அரசியல் ஆய்வுகள் கோட்பாட்டு விவாதங்களின் தோல்விக்குக் காரனம் பல விவாதங்கள் யாழ் குடாநாடு மட்டும் தொடர்பான அறிதலில் இருந்து உருவாகுவதே. வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் பற்றிய அறிவும் நமது பலம் பலஹீனம்பற்றிய தெளிவும் மாறிக்கொண்டிருக்கும் சர்வதேச பிரக்ஞையும் இல்லாத ஆய்வுகளும் கோட்ப்பாட்டு விவாதங்களும் எதிர் விழைவுகலையே உருவாக்கும்

நீங்கள் உங்களுடைய கோட்பாட்டு விவாதத்தை முன்வைத்திருக்கலாம்...........

ஏன் அவசரபட்டு உருதிராவைபற்றி கருத்து வைத்தீர்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை.

கத்தரிக்காய் கறி சமைப்பது எப்படி என்று எழுதுவதென்றாலும் இனி கோட்பாட்டு விவதாதத்தை முன்வைக்கவேண்டுமா?

சர்வதேச அரசியல் நகர்வு.............

உள்ளூர் இராணுவ நகர்வு...........

எல்லாவற்றையும் அறிந்து ஆய்வு செய்து................... என்று நீங்கள் எழுத நானும் வாசிக்க நல்லாய்தான் இருக்கின்றது.

ஒன்றாக ஒரே வீடில் குடியிருக்கும் மனைவி எமது கண்ணை கடந்து சென்றால் அடுத்த அறையில் நட்டக்ககூடியது என்று நானும் நீங்களும் நினைக்க கூடியது வெறும் ஊகம்தான். அதுவே இப்படி இருக்கும்போது ................................ பலபேரை உள்ளடக்கி ஒரு விடுதலை போரை முன்னகர்த்துவது எப்படி என்று நானும் நீங்களும் விரிவாக புத்தகம் வேண்டுமானால் எழுதலாம்.

நடைமுறைக்கு அப்பாற்பட்டதே நடந்து முடிந்தது என்பது உங்களுக்கும் எனக்கும் தெளிவாக தெரியும். தமிழனாக பிறந்த சில தெய்வங்களின் உன்னத தியாகத்தால் அது எட்டியது என்பதுதான் உண்மை.

தற்போதைய அரபு நாடுகளில் மாறிவரும் மாற்றங்களை யாரால் ஆவது ஊகிக்க முடிந்தததா?

அரசியல் சர்வதேசம் என்று கட்டு கட்டாக கதை எழுதுகிறோம் ஏன் சென்றவருடம் இதைப்பற்றி எழுதவில்லை.

ஒசாமாபின்லாடேன் அமெரிக்க தாக்குதலை செய்யாது போயிருந்தால் தற்போதைய உலக நிலவரம் எப்படி இருக்கும்? அது வெறும் உகம்தான். ஒசாமாபின்லாடேன் அமெரிக்க மீது தாக்குதல் செய்தான் என்பதற்கே ஆதாரம் இல்லை.

பயங்கரவாதம் என்பது ஜெனநாயக பயங்கரவாதிகள் தமது வயிற்ரை நிரப்ப தோற்றுவித்த ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அண்பு தோழா சாஸ்திரி, தேன்மொழி போன்ற எதுவும் தெரியாமல் முக்கியஸ்தர்களாக உலவுகிறவர்கள் பற்றி அலட்டிக் கொள்ளவேண்டாம். இவர்களைப்போன்றவர்கள்தான் நந்தவனத்தின் மூலம் எங்களை முடக்கி இயக்கத்தை அழித்தவர்கள். இத்தகைய பிழையான வழிநடத்தல்களை எதிர்த்து நான் வன்னியில் நந்தவனம் தரப்புடன் மோதியது ஒன்றும் பரமரகசியமல்ல.

காலம் காலமாய் என்னோடு தொடர்பில் இருந்த என் ஆலோசனைகளை ஆவனப்படுத்திய ’அழகானவர்’ தான் உயிருடன் இருப்பதாக சிலநாட்க்களின் முன்னம்தான் தெரிவித்திருந்தார். கவிஞர் கருணாகரன் தான் பார்த்த என் அறிக்கைகளை மேற்கோள்காட்டி ஒரு புத்தகம் எழுதுவதாக அறிந்தேன்.

1890பதுகளின் நடுப்பகுதியில் PLOT பொட்டம்மானை பட்டுக்கோட்டையில் வைத்து கடத்தி கொலை செய்ய இருந்தபோது நான் உமாமகேஸ்வரன் இருந்த அறைக்குள் மெய்காவலரை தள்ளிவிட்டு நுழைந்து உயிரைப் பணயம் வைத்து உமாமகேஸ்வரனோடு விவாதித்து டம்பிங் கந்தசாமி போன்றவர்களோடு சண்டைபோட்டு அவரது விடுதலையை சாத்தியமாக்கினேன். பொட்டு அதனை கடைசிவரைக்கும் மறக்கவில்லை. அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் சிவா சின்னப்பொடி இப்ப பிரான்சில் நாடுகடந்த அரசின் ஆதரவாளராக இருக்கிறார். அந்த வீட்டின் சொந்தக்காரரும் இப்ப பிரான்சில் இருக்கிறார். பலதடவை புலிகளின் தலைவர்கள் சிலருக்கும் எனக்கும் ஏற்பட்ட மோதல்களில் அவர் என்னை காப்பாற்றி இருக்கிறார்.முஸ்லிம் மக்களின் நியாயங்களுக்காக குரல்கொடுத்து கிழக்கில் கைதாகி கொலைக்களத்துக்குக் காத்திருந்த சமயம் கருணாவிடம் வடக்கிற்க்கு தெரியாமல் முடிவு எடுக்க வேண்டாம் என உறுதி மொழி வாங்கி இருந்தேன். பின் வடக்கில் இருந்து என்னை மீட்டார்கள். பலதடவை நந்தவனம் உட்பட புலிகளின் தலைவர்கள் சிலருக்கும் எனக்கும் ஏற்பட்ட மோதல்களில் நான் பாதுகாக்கப் பட்டிருக்கிறேன்.

அநத நாட்களில் இருந்து விடுதலைக்காக போராளிகளுக்கு உதவவும் போராளிகளை இடித்து உரைக்கவும் என் உயிரை பலதடவை பணயம் வைத்திருக்கிறேன். இயக்க அழிப்பு போக்கையும் முஸ்லிம் வெளியேற்றத்தையும் நேருக்கு நேர் எதிர்திருக்கிறேன். கொல்ல வைத்திருந்த தருணம் உட்பட எந்த ஒரு தருணத்திலும் போராளிகள் என்னை கவுரவமாகவே நடத்தினார்கள். அவர்கள் ஒருபோதும் என்னைக் கொச்சைப் படுதியதில்லை.

தேன்மொழி போன்றவர்களது அரை வேட்க்காட்டு அரசியலால் ஒருமுறை சூடுபட்ட மக்கள் இப்போ விழிப்போடு இருக்கிறார்கள்.

1996ல் என்னை அடுவான்கரைய்ல் சந்தித்த யாழ்வேந்தன் ஐயா நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்று தலைவர் சொல்கிறார் நீங்கள் எங்களுக்கு இராணுவபுவியியல் உதவ வேண்டும். இந்தியா மற்றும் மேற்குலக இராசதந்தரிகள் மட்டத்தில் இயக்கத்துக்கு வெளியில் இருந்து எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்டார்கள் (இராணுவ புவியியல் தொடர்பாக வேலை செயும்படி இன்று கனடாவில் இருக்கும் வலன்ரைன் மற்றும் மாவீரர் ரவிசேகரன் ஊடாக 1984லும் என்னொடு தொடர்பு கொள்ளப் பட்டது) அதன்பிறகு அதிக risk எடுத்திருக்கிறேன்.

இந்திய உறவு தொடர்பாக நான் அதிக அக்கறை எடுத்தேன். கொலை வளக்கு தொடர்பான சவாலை நிரவ முன்வைக்கப் பட்ட compromise தொடர்பாக முடிவு எடுக்க முடியவில்லை.

வன்னியில் எனக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தனர். நான் ஒரு செப்பு சல்லிக்குக்கூட கை நீட்டியதில்லை. கைமாறாக நான் தொடர்ந்து அவர்களிடம் கேட்ட ஒரே உதவி முஸ்லிம் மக்கள் மீழ்வரவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் கிழக்கு மாகானத்தில் பள்ளிவாசல் கமிட்டிகளின் அனுசரணையுடன் செயல் படுங்கள் மாற்று இயக்கத்தவரை கொல்வதை நிறுத்துங்கள் எல்லைப்புற சிங்கள மக்கள் தொடர்பாக மென்மையான போக்கை கடைப்பிடியுங்கள் என்றதுதான்.

ஜெயசுக்குரு வெற்றியில்பின் எனக்கு நன்றி சொல்லபட்டது. எதிரி இறுதி யுத்தம் உத்தியை ஜெயசுக்குருவில் நாங்கள் உருவாக்கிய புவியியல் உத்தியின் எதிர் வடிவமாகவே உருவாக்கி இருந்தான். அதனை எம்மால் முறியடித்திருக்கக்கூடும்.நிச்சயமாக நாங்கள் அழிவில் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால் நந்தவனம் காட்டை மறைத்து கடற்கரையைக் காட்டியதால் நாங்கள் அழிந்தோம்.

ஜெயசுக்குரு உத்தி உருவாக்கப் பட்டபோது எதிரி A9 பாதையின் மேற்காக செம்மண் மேட்டுக்கையால் வவுனியா மன்னார் பாதையைக்கடந்து முன்னேறும் முஸ்தீபில் இருந்தான். அதனை திசைதிருப்ப A9 பாதையின் கிழக்காக கருமண் பள்ளத்தாக்கால் மாங்குளம் முல்லைத்தீவு பாதையை நோக்கி பின்வாங்கி எதிரியை அந்த வழியால் துரத்தி முன்னேற வைக்கப்பட்டது. நெடுங்கேணி முல்லை மாங்குளம் முல்லைத்தீவு முக்கோண பள்ளத்தாக்கை மாரிகாலத்தில் மழை வெள்லம் மூடியதும் எதிரியை முறியடிக்க திட்டமிடப்பட்டது. இராணுவரீதியாக அதுவரை பெரும் சேதத்துக்கு வழி வகுத்த இராணுவத்தை குத்தி மறித்து கொலைசெய்யப் போராடுவதை கைவிட்டு எதிரியை முறிந்து ஓட அனுமதித்து அடித்தல் உத்தி கைக்கொள்ளப்பட்டது. அன்று தலைமைக்கு பால்ராஜ்போன்ற சிறந்த தேடலுள்ள கட்டளைத் தளபதிகளின் பக்கபலமும் இருந்தது.

எதிரி இறுதி யுத்தத்தில் ஜெயசுக்குறுவில் தாங்கள் விட்ட புவியியல் தவறுகளை செம்மைப் படுத்தினான். A9 மேற்க்குப் பக்கமாக செம்மண் மேட்டு நிலத்தால் அவன் முன்னேறினான். இதுபற்றி விரிவாக என் புத்தகத்தில் எழுதலாம்.

தேன்மொழி நீங்கள் முகம்கொடுத்திருக்கக்கூடிய ஆபத்துக்களைவிட அதிகம் ஆபத்துக்களையும் வடக்கு கிழக்கில் நாரதர் செய்திருக்கக்கூட வெளிக்கள ஆய்வுகளைவிட அதிக வெளிக்கள ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறோம். சாஸ்திரி தொடர்ந்தும் புனர்வாழ்வுப்பணிகலில் புலம் பெயர்ந்த நம் மக்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

தயவு செய்து யோசித்து கொச்சைப் படுத்துங்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்யட் அவர்களுக்கு, என்னை அரைவேக்காடு என்று விளித்ததுக்கு நன்றி.ஆனால் நீங்கள் அதுவுமில்லாமல்

1ஃ4வேக்காடு தனமான புளுகுகளை சொல்லி இங்கு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.

கடைசியிலை ஜெயசுக்குரு வெற்றிக்கும் நீங்கள் குடுத்த ஐடியாதான் காரணம் என்றுவேஐற சொல்லிபோட்டீங்கள்.

அப்பே நீங்கள் ராணு-அரசியல-சமூக-பெண்ணியல-கவிதை-இலக்கிய-இலத்திரனியல்-மேதை என்று சொல்லுறீங்கள்.

ஆணையிறவு அடிச்சதுக்கும் நீங்கள்தான் ipளான்போட்டு குடுத்ததாக அறிந்தேன்.உண்மையா?

பொட்டர் ஒரத்தநாட்டிலை பிடிபடும்போது நீங்கள் எங்கு நின்றீர்கள்.

பொட்டரை புளட் சும்மா விடவில்லை.புளட்டின் படைக்கல (????) பொறுப்பாளர் கண்ணனை கடத்திய பின்னர்தான்

பொட்டர் விடப்பட்டார்.இந்த விடயத்'தலை அண்ணாநகர் welcome colony ல் இருந்த ஆனந்தசங்கரி வீட்டுக்கு வாசுதேசாவை தேடிப்போய் அவர் இல்லாததால் ஆனந்தசங்கரிக்கும் விடுதலைப்புலிகளின் அணி ஒன்று அடித்தது நினைவிருக்கா???

உங்களின் வீரப்பிரதாபங்களுக்கு சின்னப்பொடி சாட்சியா???? :lol:

சிரித்து சிரித்து வயிறு நோவுது.பிளீஸ்.வேணாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி பொயட்,,,, ஜெசுக்குரு சண்டை வெல்லுறதுக்கே பிளான் குடுத்த அதற்கு காரணமான நீங்கள் கடைசிவரை

காஸ்ரோக்குள்ளாகவா தலைமையுடன் தொடர்பில் இருந்தீர்கள்.

காஸ்ரோ ஒரு வெளிநாட்டு கிளைகளுக்கும் தலைமைக்குமான தொடர்பாளர் மட்டுதான்.

அது அரசியல்பிரிவின் ஒரு நீட்சி மட்டுமே.

உங்களை போன்ற மிலிட்டரி ஜீனியஸ்களுக்கு தலைவர் ஒருத்தருக்கும் தெரியாத ஒரு தொடர்பாடல் வழியை தந்திருப்பார்.அல்லது நீங்கள் சொல்லுற பொடட்டர் தந்திருப்பார்.

கடைசிவரைக்கும் நீங்கள் தொடர்பான ஆட்கள் புதுவையும்,காஸ்ரோவும்தான்.

முடியலை பொயட்.முடியலை.

எப்பிடித்தான் முடிகிறதோ உங்களாலை.40,50 வருசமாக ஒரே மாதிரி எழுதி எழுதியே திட்டங்களை குவிக்க.

களவியல்,புவியியல,ஆய்வியல் = பெரிய அவியல்

  • கருத்துக்கள உறவுகள்

தேன்மொழி உங்கள் அவதூறுகளை நான் பொருட்படுத்டவில்லை. அரை வேக்காடு என்றதற்க்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

உங்களின் வீரப்பிரதாபங்களுக்கு சின்னப்பொடி சாட்சியா???? :lol:

சிரித்து சிரித்து வயிறு நோவுது.பிளீஸ்.வேணாம். என்று நீங்கள் இப்படிச் சொல்வது சாதி வெறியர்களின் குரல்போல தொனிக்குது.

அவர் சாட்ச்சி என்று சொல்லவில்லை அவரும் மாதவன் என்ற இயக்கபெய்ரில் இருந்து தற்போது பரிசில் வாழும் ஒருவரும் இருந்தார்கள் என்பதையே சொல்ல வந்தேன். மாதவனை பரிசில் தொழிலாளர்பதை பதிரிகையோடு ஒரு தடவை சந்திதிருக்கிறேன். அவரது ஒஇயற்பெயர் தெரியாது. யாருக்காவது தெரியுமா?

எனனைக் கைது செய்ய கஸ்ரோ காவல்துறையை முடுக்கி நான் காவல்துறையோடு மோதிய காலத்தில் கஸ்ரோவை சந்தித்து சமரசமாகும்படி என்னிடம் கேட்க்கப் பட்டது. நான் நந்தவனம் சென்றேன் ஐந்து நிமிடம் பொறுங்கள் என்றார்கள். நான் யாரையும் காத்திருந்து பார்ப்பதில்லையென்றுவிட்டு வெளியேறிவிட்டேன். நீங்கள் சொல்லுவதுபோல கஸ்ரோவுடன் நான் தொடர்பில் இருக்கவில்லை. நந்தவனம் வெளிநாட்டுக் கிழைகள் வேலை பார்த்தது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் இயக்கம் காடுகளுக்கு பின்வாங்காமல் கடற்கரை வெளிக்கு சென்றதன் பின்னணியில் அவரரும் இருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து என்னை கொல்லும்படி அவருக்கு சிடிக்கள் அனுப்பபபட்டது என அறிந்தேன். ஒருவேளை அது நீங்கள் அனுப்பியதாகவும் இருக்கலாம். அதுபற்றியெல்லாம் எனக்கு யார்மீதும் கோபமில்லை.

பொட்டம்மான் விடுதலைக்குப் பின்னரே கண்னன் கடத்துப்பட்டார்.

தேன்மொழி வீண் விவாதங்களை உருவாக்குவதை விடுத்து பரந்துபட்ட ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது இந்தியாவுடனும் மேற்க்குநாடுகளுடனும் உறவுகளைச் செம்மைப் படுத்துவது களத்தில் உள்ள மக்களது பாதுகாப்புக்கு குந்தகம் விழைவிக்காமல் பொறுப்புடன் முன்செல்வது தொடர்பாக எதாவது செய்யுங்கள் நானும் உங்களுக்கு உதசவுகிறேன்.

இதற்க்குமேல் உண்மையான விடயங்களை நீங்கள் முன்வைத்தால் மட்டுமே பதில் எழுதுவேன். ஆழை விடுங்கள் சாமி

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த காவல்துறையோடு மோதினீங்கள்

தமிழீழ காவல்துறையோடா????

என்னவிதமான மோதல்??அவர்கள் பிடிக்க வரும்போது திருப்பி தாக்கினீர்களா???அல்லது ஓடிப்போய் புதுவையின்

வீட்டுக்குள் இருந்துகொண்டு .........

யாரையும் நீங்கள் காத்திருந்து பார்ப்பதில்லையா???? ம்ம்ம தவமாய் தவமிருந்து..(புரிந்துகொண்டால் சரி)

பொட்டர் கண்ணனை பிடித்தபிறகுதான் விடுவிக்கப்பட்டார்.அதுமட்டுமில்லை சென்னை கே.கே நகர் அம்மன்கோவிலடியில் இருக்கும் புளட்டின் இருப்பிடம் ஒன்று முழுதாக சுற்றிவளைக்கப்பட்டிருந்'தது.

அங்கு இருந்தவர்கள் ஒரு 15,20 பேர்.அவர்கள் வெளியில்போகமுடியாமல் யாரும் உள்ளுக்குள் போக முடியாமல் இப்பிடி பலவிதமான நெருக்கடிகள் குடுக்கப்பட்டது.

கடைசியிலை அந்தநேரம் அமைச்சராகவும் புளட் ஆதரவாளராகவும் இருந்த எஸ்டி.எஸ் சோமசுந்தரம் (oraththanadu MLA)போன்றவர்கள்

புலவர் புலமைப்பித்தனுக்கு ஊடாக கதைத்த பிறகுதான் இரண்டுபக்கமும் ஆட்களை விட்டது.

புலமைப்பித்தன் இப்பவும் இருக்கிறார்.

பொய்யட் உண்மையை பற்றி நீங்கள் வகுப்பெடுக்கிறீங்கள்.

:D:lol: :lol: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்யட் நானும் அதைத்தான் முதல்பிடித்தே சொல்லிக்கொண்டு வாறன்.

செத்துப்போனவனையும் திரும்பவந்து மறுவிளக்கம் தரமுடியாதவனையும் தாக்கி ஆய்வுகளை(?) எழுதிக்கொணடடிருக்காமல்

உங்களுக்கு பிடித்ததுதம் உங்களால் இயன்றதுமான எழுதுவதை எழுதுங்கள்.

எப்போதுமே இயங்கிய ஒரு பொருளின்மீது ஆயிரம் விமர்சனங்கள் யாரும் வைக்கலாம்.

இயக்கத்தில் 27வருசங்களுக்கு மேராக போராளியாக பொறுப்பாளனாக இருந்த காஸ்ரோக்குவுக்கு மேலை என்னால் உங்களை விட ஆயிரம் மடங்கு விமர்சனங்களை வைக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன.ஆனால் உங்கள மீது???

நீங்கள் எழுதிக்கொண்டே இருந்தீர்கள். அவர்கள் யதார்த்தமாக போராடிக்கொண்டே இருந்தார்கள்.

மற்றது,ஐக்கியமுண்ணணி யாருடன் உருவாக்குவது??

தமிழர்களின் சுயநிர்ணயஉரிமையை ஏற்றுக்கொள்ளும் சக்திகளுடனா அல்லது எல்லாருடனுமா?

இந்தியாவுடன் உறவுகளை செம்மைப்படுத்துங்கோ என்று அசாமில் போராடிக்கொண்டிருக்கும் மக்களிடமோ,

மணிப்பூரில் இப்டபவும் போரடிக்கொண்டிருக்கிற,காஸ்மீரில் இந்தநேரமும் வெடித்துக்கொண்டிருக்கிற மக்களிடம்போய் உங்களால் சொல்ல முடியுமா???

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தேன்மொழி,

நாங்கள் அதல பாதாலத்தில் வீழ்ந்து கிடக்கிறோம். பல்வேறு மட்ட பணிகள் உள்ளன. எமது மக்களின் புனர்வாழ்வு புனர் நிமாணம் போன்ற அடிமட்டப் பணிகளில் தற்காலிகமாக எல்லாரோடும் ஏன் பேயுடன்கூட வேலைசெய்ய நாம் தயாராக இருக்க வேணும். அப்படி வேலை செய்கிறவர்கள்தான் எங்கள் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரக்கற்கள். தோழர் சாத்திரி போன்றவர்கள் அந்த மட்ட பணிகளைச் செய்கிறார்கள். களத்து வாழும் நமது மக்களின் ஒற்றுமையாலும் அதற்க்கு அனுசரையான புலம் பெயர்ந்த அமைப்புகளதும் வெளிநாடுகளதும் அழுத்தத்தால் உருவாகும் அரசியல் வெளிக்களுக்குள் அடிப்படை உரிமைகள் பறிப்பு நிலப்பறிப்பு என்பவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்தக்காலக் கட்டத்தில் இலங்கை அரசியல் சட்டத்தின் உள்லும் வெளியுமாக – சுயநிர்ணய உரிமைக்கு உள்ளும் வெளியுமாக - பரந்து பட்ட ஐக்கிய முன்னணியாக செயல்பட வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா மேற்குநாடுகள் மையப்பட்ட சர்வதேச சமூகத்தை வென்றெடுக்கும் நிலைபாட்டுடன் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போர்குற்ற விசாரனைக்கான அழுத்ததை ஆரம்ப புள்ளியாக்கி தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த மூன்று தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறியடிக்காமல் புரிந்துணர்வுடன் செயல்படுவது மிகவும் முக்கியம்.

இந்தியாவுடன் சேர்ந்து வேலை செய்வது தொடர்பாக காஸ்மீர் மக்களிடம் போய்ச் சொல்வீர்களா என க்கேட்டீங்க. அமரிக்காவுடனும் மேற்க்கு நாடுகலுடனும் வேலை செய்யும்படி ஆபுகானிஸ்தான் கிராம மக்களிடம் போய் சொல்ல முடியுமா என்றும் கேழ்விகள் உள்ளது. இப்படி கேழ்வி கேட்பவர்களின் பின்னே போயிருந்தால் இன்று கொசோவோ, தெற்க்கு சூடான் மற்றும் மற்றும் எரித்திரியா தேசங்கள் உருவாகி இருக்க முடியுமா? அவுஸ்திரேலியாவுடன் வேலை செய்வதுபற்றி அபொறிஜின் ஆதிவாசிகலிடம் போய் சொல்லமுடியுமா என்று கேட்பவர்கள் பின் போயிருந்தால் கிழக்கு தீமோர் நாடு உருவாகி இருக்க முடியுமா?

நீங்கள் கொசோவோ, சூடான், எரித்ரியா கிழக்குதீமோர் போன்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தேன்மொழி நமக்கு பொதுவான வரலாற்றுப் பணிகள் இருக்கு நாம் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக தர்க்கம் வலர்க்க வேண்டியதில்லை. தோழமையுடனேயே உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் எழுதுகிறேன்.

பொட்டம்மான் விடுதலை தொடர்பாக நான்மட்டும் இயங்க மறுதரப்புக்கள் செயல்படாமல் இருந்தது என்று சொல்லவரவில்லை. நானும் இயங்கினேன் என்பதை மட்டுமே சொல்கிறேன்.

நான் காதலில் மட்டுமே பொய் சொல்லி இருக்கிறேன். விடுதலை நோக்கிய இராஜதந்திர மொழிவேறு. சொந்த லாபத்தௌக்கு பொய்சொல்லியிருந்தால் பணிந்திருந்தால் இலங்கை அரசிலோ போராளிகளிடத்திலோ அல்லது ஒரு ஐரோப்பிய நாடு ஒன்றிலோ மிக உச்சத்தை அடைந்திருப்பேன்.

என் தனிப்பட்ட முன்னேற்ரத்தை பூஜ்ஜிஜம் ஆக்கிய கோபம் என் சத்தியத்தின் மறுபக்கம்தான். முதலில் என் அம்மா சகோதரர்கள் இப்ப என் மனைவி என்னை புரிந்துகொண்டு ஆதரித்ததால் தலைபணியாமல் உயிர்வாழ்தல் சாத்தியமானது.

புதுவை வீட்டுக்கு ஒருமுறைமட்டும் கருணாகரனோடும் சிறியோடு போயிருக்கிறேன். அப்ப புதுவை அங்கில்லை. புதுவை ஒருமுறை மட்டும் எனக்கு உதவி செய்திருக்கிறார் அது 1991 ஆரம்பத்தில் ஏப்பிரலாக இருக்கலாம் யாழ் முற்றவெளியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடந்த வேழையில் நிகழ்ந்தது. அதற்க்கு சில நாட்கலுக்கு முன் என்னுடன் தொடர்புகொண்ட புதுவை - நான் வடகிழக்கில் சுதந்திரமாக ஆய்வுகளை மேற்கொள்ளல்லாம் என்றும் தங்க்களுக்கும் ஆய்வறிக்கை பிரதி வேண்டுமென்றும் தலைவர் சொல்வதாக சொன்னார். நான் இசை நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது என்னை விசாரிக்கவரும்படி ஒற்றைக்கண் சிவராசா அழைத்து நான் மறுத்து தகராறானது. நான் புதுவையை கேட்டு முடிவெடுக்குமாறு சொன்னேன். பிறகு கொஞ்ச நேரத்தின் பின்னர் ஒற்றைகண் சிவராசா தவற்றுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்று என்னை விட்டுவிட்டார். அதௌ தவிர நான் புதுவையிடம் உதவி கேட்க்கவில்லை.

நான் இலங்கைக்கு வந்தாலே விடுதலைப் புலிகளின் புலனாய்வுதுறையினர் என் பாதுகாப்பில் கரிசனையாக இருப்பார்கள். கொழும்பில் முஸ்லிம் தலைவர்கள் எனக்குத் தெரியாமலே முஸ்லிம் அதிகாரிகலூடாக ஏன்னை பாதுகாத்திருக்கிறார்கள். கொழும்பில் ஆபத்து சூழ்ந்த காலங்களில் என் முஸ்லிம் நண்பர்களும் சிங்கள தோழனுமே எனக்கு பாதுகாப்பான தங்குமிடம் ஒழுங்கு செய்தனர். நான் உயிரோடு இருப்பதற்க்கு எனக்கு தெரிந்த தெரியாத பலரது பங்களிப்பே காரனம்.

புலிகளின் காவல்துறையை 3 தடவை நான் வீட்டுக்கு வரவேண்டாம் என்று தள்ளி விரட்டியிருக்கிறேன். முதல்தடவை என்வீட்டுக்கு வந்த காவலருக்கு அமரர் நடேசன் அவர்களின் உதவியாலர் மாதவன் அடித்து நான் விலக்குபிடிக்க நேர்ந்தது. பின் ASP அந்தஸ்துக்கு குறைவான யாரும் என் வீட்டுக்கு போகக்கூடாது என உதரவிடப்பட்டது. அதன்பின்னர் கனடாவில் இருந்தும் நந்தவனத்தில் இருந்தும் வந்த அழுத்தத்தல் 2 தடவை வந்து நான் விரட்டினேன். கிழிநொச்சிக் காவல் நிலையத்தில் வைத்து என்னை கைது செய்யும் முயற்சியை அனோமதேய தொலைபேசி தடுத்துவிட்டது. இந்த தருணங்களில் ஈழநாதம் ஆசிரிய தோழன் என் ஆதரவாக இருந்தான்.

தலைவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் அமரர்கள் பால்ராஜையும் சூசையையும் சந்திக்க விரும்பினேன். சூசையின் அழைப்பின்பேரில் ஒரு திலீபன் நினைவு நாளில் நோவீஜிய பேராசிரியர் ஓய்வின் புக்ளரூட்டுடன் சென்றேன். ஒய்வினுடன் 30 நிமிடங்களும் என்னோடு 4 மணி நேரமும் அமரர் சூசை அவர்கள் பேசினார்கள். ஒய்வின் காத்திருந்து நொந்து நூலாகிவிட்டது.

பால்ராஜை சந்திக்க முடியவில்லை என்பதுதான் என் துயரம். அவர் முன்னம் தமிழகத்தில் சந்திதக ஒரு நினைவிருக்கு உறுதிப்படுத்த முடியவில்லை. புதுவை நான் தலைவரை சந்திக்க வேண்டும் என விரும்பினார். என்னிடம் கடிதம் எழுதிதரக் கோரினார். நான் வடபகுதி முஸ்லிம் மக்களின் மீழ்வரவுக்கு நடவடிக்கை எடுக்கும்படி கோரியே கடிதம் எழுனேன். திரும்ப எழுதச் சொன்னார் இரண்டாம்தடவையும் அதனையே எழுதினேன்.

இது தொடர்பாக சந்திப்பில் முஸ்லிம் மக்கல் உரிமைகள் தொடர்பாக முரண்பாடுகள் வரலாம் என்கிற உள்ளுனர்வின் எச்சரிக்கை இருந்தது. உறவிகள் நிலைக்க வேண்டும் என்கிற அச்சம் இருந்தது. அரசியல் துறையில் தயமாஸ்ட்டர் கேடதற்க்கு நான் அமைப்புக்குதான் உதவுகிறேன் ஆனபடியால் அமைப்பின் சார்பில் என்னை சந்திக்கிறவர்கள் தொடர்பே போதும் என தெரிவித்தேன். நீங்கள் சொன்னதுபோல நான் தவமிருக்கவில்லை தேன்மொழி. அதுசரி இப்பதான் தோழர்கள் ஆகிவிட்டோமே இந்த விவாதம் எல்லாம் எதற்க்கு?

என் கலைஞன் பதவி தவிர நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை தோழர் அமரர் அஸ்ரப் எனக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தார். என்னைபற்றி தெரிந்தவர்கள் என்னை பொய்யன் என்று சொல்ல மாட்டார்கள்

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எப்படி தோழர் பொய்யட்;, சிவா சின்னப்பொடியின் பெயரை நான் எழுதியதுமே அதிலை சாதி திமிர்க்குணம்

இருக்கிறதாக தெரிந்துகொண்டீர்????

அதையே நானும் சொல்லலமா???

இனி ஏதும் எழுதும் போது சாதி சேர்டிபிக்கட்டும் இலவச இணைப்பாக சேர்த்து ஆனப்புங்கோ.

அதை பாhத்துவிட்டு அவரை விமர்சிப்பதா வேண்டாமா என்று யோசிக்கலாம்.

இவ்வளவு தாழ்வுமனப்பான்மையை மனம்முழுக்க சுமந்துகொண்டு ஆய்வுகள் செய்தேன் புலிகளுக்கே ஐடியா குடுத்தேன் என்று

எழுதிறது ஏற்ககூடியதாக இல்லை.

மற்றும்படி சூசையுடன் 4 மணித்தியாலம்கதைத்தேன் அது இது எல்லாம் புனைவு என்றுதான் எடுக்கமுடியும்.

நீங்கள் இலங்கைவந்தாலே விடுதலைப்புலிகளின் புலநாய்வுபிரிவுதான் உங்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டது என்கிறீங்கள்.பொய்யட்ட உங்களின் கதை எழுதும் சிறுஆற்றல் இதில் என்ன உங்களின் கருத்து முழுதும் தெரிகிறது.

அவர்கள் எல்லாம் மௌனமாய் போன பிறகு இதை இப்போது சொல்வது எதற்காக???

நீங்கள் புலனாய்வாலும் காப்பாற்டீர்கள் என்று பில்டப் தருவதற்கா????

உங்களுக்கு கொழும்பில் ஏன் உயிர்அச்சுறுத்தல் வருது?நீங்கள்தான் புலிகளை பகிரங்கமாக விமர்சிக்கிறவர் ஆச்சே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்,களம்,வெளி, என்று வகுப்பு எடுப்பீங்கள்.

அதுக்கு ஏதும் எழுதினால் அடிமட்டவேலைகள் குனர்வாழ்வுப்பணி எல்லாம் மூக்குக்கு மேலை கிடக்கு என்பீங்க.

விடுதலைப்போராட்ட்ம தொடங்ககாலத்திலிருந்தே அதுக்கும் முதல் இருந்தே அங்கை என்ன பாலும் தேனுமா ஓடியது.

பொய்யட்,பொருளாதாரதடையை சிறீலங்காஅரசு வன்னிக்கு விதித்த பிறகு எத்தனை கற்பிணித்தாய்கள் சத்தில்லாத

குறையுடனான பிள்ளைகளை பெற்றார்கள் எத்தனை குழந்தைகள் ஊட்டசதட்தில்லாமல் இறந்தார்கள்.

அப்போது எப்போதாவது எமது மக்கள்சாகிறார்கள் என்று குரல்கொடுத்திருக்கிறீர்களா???

இப்போது எம்மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் வறுமைக்கும்,அத்தியாவசிய தேவைகளுக்கு கையேந்தும் நிலையையும்

ஓரளவுக்கு தன்னும் தங்களது சக்தியை மீறி கொண்டிருக்கும் நம்பிக்கைஒளி,நேசக்கரங்கள்,தேசத்தின்பாலம்,லிற்றில்எய்ட மற்றும் ஊர்அமைப்புகள் பாடசாலை சங்கங்கள் எல்லாவற்றினதும் பணிகளை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.

நானும் அதில் ஏதோ ஒரு உதவிஅமைப்பின் அணிலாக உதவி செய்துகொண்டிருக்கிறேன்.அந்தவகையில் சாத்திரி போன்றவர்களை மதிக்கிறேன்.

ஆனால் நீங்கள் அப்படியில்லை.

நாங்கள் அதல பாதாலத்தில் வீழ்ந்து கிடக்கிறோம். பல்வேறு மட்ட பணிகள் உள்ளன. எமது மக்களின் புனர்வாழ்வு புனர் நிமாணம் போன்ற அடிமட்டப் பணிகளில் தற்காலிகமாக எல்லாரோடும் ஏன் பேயுடன்கூட வேலைசெய்ய நாம் தயாராக இருக்க வேணும். அப்படி வேலை செய்கிறவர்கள்தான் எங்கள் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரக்கற்கள். தோழர் சாத்திரி போன்றவர்கள் அந்த மட்ட பணிகளைச் செய்கிறார்கள். களத்து வாழும் நமது மக்களின் ஒற்றுமையாலும் அதற்க்கு அனுசரையான புலம் பெயர்ந்த அமைப்புகளதும் வெளிநாடுகளதும் அழுத்தத்தால் உருவாகும் அரசியல் வெளிக்களுக்குள் அடிப்படை உரிமைகள் பறிப்பு நிலப்பறிப்பு என்பவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்தக்காலக் கட்டத்தில் இலங்கை அரசியல் சட்டத்தின் உள்லும் வெளியுமாக – சுயநிர்ணய உரிமைக்கு உள்ளும் வெளியுமாக - பரந்து பட்ட ஐக்கிய முன்னணியாக செயல்பட வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா மேற்குநாடுகள் மையப்பட்ட சர்வதேச சமூகத்தை வென்றெடுக்கும் நிலைபாட்டுடன் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போர்குற்ற விசாரனைக்கான அழுத்ததை ஆரம்ப புள்ளியாக்கி தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த மூன்று தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறியடிக்காமல் புரிந்துணர்வுடன் செயல்படுவது மிகவும் முக்கியம்.

மிகவும் தெளிவான கருத்து பொயட். தொடர்ந்து எழுதுங்கள்

..அத்துடன் உங்கள் போர் பற்றி அனுபவங்களை, புலிகளுடனான அனுபவங்களை புத்தகமாக வெளியிடுங்கள். வெறும் யாழின் சுவருக்குள் நின்று கதைப்பதும் விவாதிப்பதும் பரந்த வெளிகளைச் சென்றடையாது. பரந்த விவாதத்துக்குரிய வெளியை உங்கள் புத்தகம் உருவாக்கலாம் என்பது என் நம்பிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.